Yarl Forum
விழுதுமாகி வேருமாகி நூலுக்கு தலைவர் பிரபா செய்தி - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: தமிழ்க் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=4)
+--- Forum: நூற்றோட்டம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=23)
+--- Thread: விழுதுமாகி வேருமாகி நூலுக்கு தலைவர் பிரபா செய்தி (/showthread.php?tid=7693)



விழுதுமாகி வேருமாகி ந - Chandravathanaa - 12-08-2003

<b>எதிரி மட்டும் அறிந்ததை எல்லோரும் அறியட்டும்.
விழுதுமாகி வேருமாகி நூலுக்கு தலைவர் பிரபா செய்தி

எமது பெண் போராளிகளின் அபாரமான போராற்றலையும் அவர்களின் வீரத்தையும்
எதிரியே நன்கறிவான். அவர்கள் அறிந்ததை உலகமும் எமது மக்களும் அறியுமுகமாக
வரலாற்றுப்பதிவாக ஒரு நூல் எழுதப்பட வேண்டும்.
இதற்கு எமது போராட்டம் பற்றிய தெளிவான பார்வையும் போருக்குள் நின்ற
வாழ்வனுபவமும் போர்க்கலை பற்றிய அறிவும் எமது போராளிகளது நுண்மையான
மன உணர்வுகளை புரிந்துகொள்கின்ற தன்மையும் அவசியம். இல்லாது போனால் எமது
போராட்டத்தின் வரலாற்றை அதன் ஆழத்திலும் அகலத்திலும்
அதன் யதார்த்தக் கோலத்திலும் தரிசித்துக்கொள்வது கடினம்.

போர் பற்றிய அறிவு ஞானம் இல்லாத பழமையில் புதைந்து போன
வரலாற்றாசிரியர்களால் எமது பெண் போராளிகளது வரலாற்றை துல்லியமாகக்
கிரகித்தறிவது சிரமம். எனவே போர்க்களத்தில் அளப் பெரும்
தியாகங்களையும். சாதனை களையும் படைத்த பெண்போராளிகளே இப்பணியையும்
மேற்கொள்ள வேண்டும் என்பது நீண்டநாளாக என்னிடம் இருந்த பேரவா.

எனது பேரவாவுக்கு விருந்தளிக்கும் மாலதி படையணியின் வெளியீடாக நெஞ்சையுறைய
வைக்கும் பல்வேறு சமர்களின் தொகுப்பாக பெண் போராளிகளது வீரத்தையும் விவேகத்தையும்
பறைசாற்றும் வரலாற்றுப் பதிவேடாக இந்நூல்
வெளிவருவது பெரும் மகிழ்வைத்தருகிறது.

[b]உலகிலே சரிபாதியினர் பெண்கள். எமது சமூகத்திலே சரிபாதியினர்
பெண்கள். இந்தச் சரிபாதித் தொகையினரான பெண்கள் எமது
போராட்டத்தில் பங்குபெறாது எமது தேசத்தின் விடுதலை சாத்தியப்
படாது. சரிபாதியினரான பெண்களுக்கு விடுதலையின்றி எமது தேச விடுதலையும்
முழுமைபெறாது. ஆனால அன்று எமது சமூகத்தில் பெண்களுக்கெதிரான சமூக
அநீதிகள் அதிகரித்திருந்தன. பெண் அடக்குமுறைக் கருத்துக்கள் பலமாக
நிலவின. எமது சமூகமே சாதிசமய வேறுபாடுகளால் ஆழமாகப் பிளவுபட்டு
நின்றது. எல்லாவற்றுக்கும் மேலாக நிலச்சுவாந்தர் முறைமையும் சாதியக்
கட்டமைப்புக்களும் இறுக்கமாகப் பின்னிப் பிணைந்து அமைந்த பொருளாதார
உற்பத்தி முறையில் எமது சமூகக் கட்டமைப்பு எழுப்பப்பட்டிருந்தது. அது
சுயசிந்தனைக்கு வரம்புகளை விதித்தது. பெண்கள் தாம் அடக்கு
முறைக்குள் வாழ்கின்றோம் என்பதை உணரவிடாது தடுத்தது. அத்தோடு
எதிரியின் இன அழிப்புப் போர் எம்மண்ணில் என்றுமில்லாதவாறு
தீவிரமடைந்திருந்தது. அந்நிலையில் அடிப்படையான சமூக மாற்றத்தை
ஏற்படுத்திப் பெண் விடுதலைக்கு வழிசமைப்பது பற்றி நாம் சிந்திக்க
முடியாதிருந்தது.</b>

எனவே எமது விடுதலைப் போராட்டத்திற் பெண்களையும் அணி
சேர்ப்பதனூடாக படிப்படியாக சமூக மாற்றத்தை ஏற்படுத்தி பெண் விடு
தலையையும் தேசவிடுதலையையும் சாத்தியமாக்கலாம் என நான் உறுதியாக
நம்பினேன். இவ்வாறு தான் எமது போராட்டத்திற் பெண்புலிகள் தோற்றம்
பெற்று இன்று எதிரியின் படைபலத்தைச் சிதைத்து யுத்தத்தின்
போக்கையே நிர்ணயிக்கின்ற பெரும் படையணிகளாக எழுந்து
நிற்கின்றார்கள்.

ஒருநூற்றாண்டுக்கு மேலாக மேற்குலகப் பெண்கள் பெரும் போராட்டங்களை
நிகழ்த்தி புரட்சிகளை நடத்தி விவாதங்கள் புரிந்து கருத்தமர்வுகளை
மேற்கொண்டு பெற்றெடுத்தவற்றையும் விட எமது பெண்புலிகள் மிகவும் குறுகிய
காலத்துக்குள் எமது பெண்களுக்கு பெற்றுக் கொடுத்த உரிமைகளும்
சுதந்திரங்களும் அளப்பரியவை. அத்தோடு சமூகத்திலே பெரும் புரட்சியை
நிகழ்த்தியிருக்கின்றார்கள். சமூக கருத்துலகின் புதிய பார்வையை
வளர்த்து வருகிறார்கள். எல்லாவற்றுக்கும் மேலாக ஆணும் பெண்ணும் சமமான
ஆற்றலுடனேயே படைக்கப்பட்டிருக்கிறார்கள் என்ற உடற்கூற்றியல்
நிபுணர்களின் கூற்றுக்கு பெண்புலிகளே உலகுக்கு உதாரணமாக
வாழ்கின்றார்கள

புரட்சிப் புலிகளாகக் களமிறங்கியுள்ள எமது பெண்புலிகள் எத்தகைய
துன்பங்களையும் சுமந்து எத்தகைய நெருக்கடிகளைம்; சமாளித்து எத்தகைய
ஆபத்துக்களையும் எதிர்கொண்டு போராடுகிறார்கள். அசைக்கமுடியாத
மனவுறுதியும் அதனால் பிறக்கும் துணிவும் அவர்களிடம் உள்ளன. அபாரமான
சகிப்புத்தன்மையும் தளராத உறுதியும் கடும் உழைப்பும் கொண்டவர்கள்
அவர்கள்.

அவர்கள் தரையில் மட்டுமல்லாது கடலிலும் சண்டை செய்கிறார்கள்.
கடற்போர்க்கலை மிகவும் நுட்பமானது. அதற்கு நிறையப்பயிற்சியும் அனுபவமும் தேவை.
கடல் சதா அசைந்து கொண்டிருக்கும். அதன்
முதுகில் சவாரிசெய்து கொண்டு சண்டை யிடுவது மிகவும் கடினமானது. எமது
பெண்புலிகள் மீன்குஞ்சுகள் போலக் கடலோடு வாழப் பழகி விட்டார்கள்.

இந்தப் பெண் போராளிகளை அவர்களது போராட்ட வாழ்க்கையை
அவர்களிடையே நிலவும் ஆழமான புரிந்துணர்வை அளவிட முடியாத
அன்புறவை இந்நூல் அழகு தமிழில் எளிய நடையில் மிக நுட்பமாக
வெளிப்படுத்தப்படுகிறது. பல்வேறு இடங்களில் நடந்த பல்வேறு
சம்பவங்களுக்கூடாக மாலதி படையணியின் வரலாறு சொல்லப்படும் பாங்கு
சிறப்பாக அமைகிறது. மேலும் பெண்புலிகளது போரனுபவத்தை மாலதி
படையணியின் சண்டையனுபவத்துடன் பின்னிப் பிணைத்து பெண்புலிகளது
வரலாறு இந்நூலில் அழகாகப்படைக்கப்பட்டிருக்கிறது. இந்நூலின்
ஆக்கத்துக்கு அயராது உழைத்த மாலதிபடையணிப் போராளிகளுக்கும்
தளபதிகளுக்கும் எனது பாராட்டுக்களையும் நன்றியையும்
தெரிவித்துக்கொள்கிறேன். அத்தோடு இந்நூல் சிறப்புடன் வெளிவர எனது
நல்லாசிகளையும் தெரிவித்துக்கொள்கிறேன.

[b]நன்றி - ஈழநாடு


- Paranee - 12-08-2003

தகவலிற்கு நன்றி சந்திரவதனா அக்கா

இதோ உதயனில் வெளியான கவிஞரின் வாழ்த்து

போராளிகளே சிறந்த எழுத்தாளர்களாகவும் மாறிவிட்டார்கள்
வரலாற்று ஆசிரியர்கள் எழுதும் வரை
ஈழத்தின் வீர வரலாறு இனி காத்திருக்காது!
விழுதாகி வேருமாகி நு}ல் வெளியீட்டு விழாவில் புதுவை உரை
எமது விடுதலைப் போராட் டத்தின் வீர வரலாறு இனி மேல் வரலாற்று ஆசிரியர் களுக்காக காத்திருக்காது. ஏனென்றால், போராளிகளே எழுத்தாளர்களாகி அதனை எழுதத் தொடங்கிவிட்டார் கள்.
- இவ்வாறு தெரிவித் திருக்கிறார் விடுதலைப் புலிகள் கலை பண்பாட்டுக் கழக பொறுப் பாளர் கவிஞர் புதுவை இரத்தினதுரை.
நேற்றுமுன்தினம் மாலை நல்லு}ர் நாவலர் கலாசார மண்டபத்தில் நடைபெற்ற ஷவிழுதாகி வேருமாகி| என்ற நு}லின் அறி முக விழாவுக்கு தலைமை வகித்து உரைநிகழ்த்திய போதே அவர் இதனைத்தெரிவித்தார்.
அவர் தமதுரையில் மேலும் தெரிவித்ததாவது:-
வீரம் செறிந்த எமது விடுதலைப் போராட்டத்தின் வரலாற்றை மக்களின் துன்பச் சுமைகளை - போராட்டத்தின் கடினமான பாதை களை - சாதனைகளைப் பற்றியெல்லாம் எமது அடுத்த சந் ததி அறிந்து கொள்வதற்காக எழுதுங்கள் என்று எழுத்தாளர் கள் சமூகத்தைப் பார்த்து பல தடவைகள் கேட்டுக்கொண்டோம்.
ஆனால், ஒருசிலரைத் தவிர அந்தப் பணியை பெரிதாக எவ ரும் மேற்கொள்ளவில்லை என்பதே உண்மை. இப்போது அந் தப் பணியை போராளி எழுத்தாளர்களே செய்யத்தொடங்கி விட்டார்கள்.
எமது தேசியத் தலைவர், போராளி எழுத்தாளர்களை ஊக்கு வித்து அவர்களைப் பாராட்டி, பரிசு வழங்கி வளர்த்தெடுத்து வருகின்றார்.
போர்க்களத்திலே நேரடியாக நின்று அதன் வலியை அனுபவித்து அதனை இலக்கியமாக படைக்கின்ற ஆற்றலை எமது போராளிகள் பலரும் பெற்றிருக்கின்றார்கள். அந்த வரிசையில் தான் இப்பொழுது மாலதி படையணியின் விழுதாகி வேரு மாகி|| நு}ல் வெளிவந்திருக்கின்றது.
எமது மண்ணின் வீரவரலாறுகளை காண்பியக் காட்சிகளாக கண்முன்னே நிறுத்துகின்றவகையில் இது அமைந்திருக்கின் றது. இதிலே உள்ள கதைகள் முடிந்த கதைகள் அல்ல. அவை இப்பொழுதும் தொடர்ந்து கொண்டிருக்கின்ற கதை.
பலகளங்களிலே நின்று போராடிய மூன்று பெண் போராளி கள் இணைந்து இந்த நு}லைப் படைத்திருக்கின்றார்கள். தாம் நேரடியாக அனுபவிக்காத சம்பவங்களையும் கூட உணர்வோட் டத்துடன் இதில் படைத்திருக்கின்றார்கள் அவர்கள்.
எமது இத்தகைய வீர வரலாற்று நு}ல்களை திரைப்படங் களாகத் தயாரிப்பதற்கு ஆங்கிலத் திரைப்பட நிறுவனங்கள் பல எம்மை அணுகியிருக்கின்றன.
அந்தளவுக்கு அவர்கள் எமது வரலாற்றின் ஆழத்தை உணர்ந் திருக்கின்றார்கள். தற்போது வெளிவந்திருக்கும் இந்த நு}லைப் போல இன்னும் பல படைப்புகள் இனி தொடர்ச்சியாக எமது மண்ணில் வெளிவரவிருக்கின்றன என்று தெரிவித்தார்.
நு}லுக்கான அறிமுக உரையை நிகழ்த்திய புரட்சிகா தனது உரையில் தெரிவித்ததாவது:-
இந்த நு}ல் ஒரு குருதிசிந்திய கதை. இதிலுள்ள கதாநாயகிகள் இன்று கல்லறைகளில் உறங்கிக் கொண்டிருக்கிறார்கள். இப்பொழுதும் எல்லையில் காவல்காத்துக் கொண்டி ருக்கின் றார்கள்.
எமது படையணியின் முதற்சமர் இந்த யாழ்.மண்ணிலே தான் நடந்தது. அதுபோலவே, இறுதிச் சமரும் இங்குதான் நடந்தது. எமது போராளிகள் போரிலே அனுபவிக்கின்ற துன்பங்கள், செய்கின்ற தியாகங்கள் அர்ப்பணிப்புகள் யாவும் மக்களுக்கு தெரியவேண்டும். ஒவ்வொரு போராளிகளினதும் வீர வரலாறுகளை இனிவரும் சந்ததிகள் உணர்ந்துகொள்ளவேண்டும் என்பதற்காகவே இந்த நு}லை படைத்திருக ;கின்றோம்.
இதனை மக்களுக்கு சொல்லவேண்டிய தேவை எங்களுக்கு உண்டு. இதன் அத்தியாயம் இத்துடன் முடிந்து விடவில்லை. இந்த நு}லின் அடுத்த அத்தியாயத்துக ;கான நாயகிகள் இப்பொழுது களத்திலே காவலில் ஈடுபட்டிருக்கின்றார்கள். அவர்க ளின் வரலாற்றை அடுத்த அத்தியாயமாக இனிவரும் சந்ததி எழுதும் - என்றார்.
விடுதலைப் புலிகள் கலை பண்பாட்டுக்கழக பொறுப்பாளர் புதுவை இரத்தினதுரை தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ் வில் தமிழீழ தேசியகொடியினை மாலதி படையணியின் தளபதி களில் ஒருவரான தமிழ்ச்செல்வி எற்றிவைத்தார்.
நூலின் ஆசிரியர்களில் ஒருவரான புரட்சிகா அறிமுக உரையை நிகழ்த்தினார். மதிப்பீட்டுரைகளை செல்வி சிறி அருளானந்தம், கே.ரி.கணேசலிங்கம் ஆகியோர் நிகழ்த்தினர்.
நு}லின் முதற்பிரதியை யாழ். மாவட்ட மகளிர் அரசியல் துறை பொறுப்பாளர் கலைவிழியிடம் இருந்து மாவீரர் மேஜர் பாரதியின் தாயார் பெற்றுக்கொண்டார். தொடர்ந்து சிறப்புப் பிரதி களை யாழ். நல்லு}ர் கோட்ட அரசியல்துறை மகளிர் பொறுப் பாளர் புூமகள் வழங்கினார்.
மாலதி படையணிப் போராளிகளான புரட்சிகா, காந்தா, மலை மகள் ஆகிய மூவரும் இணைந்து எழுதிய மேற்படி நு}லை வானதி வெளியீட்டகம் வெளியிட்டுள்ளது. இதன் வெளியீட்டு விழா அண்மையில் வன்னியில் இடம்பெற்றிருந்தமை தெரிந்ததே