![]() |
|
துளிதுளியாய் - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: படைப்புக் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=11) +--- Forum: கவிதை/பாடல் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=52) +--- Thread: துளிதுளியாய் (/showthread.php?tid=7698) |
துளிதுளியாய் - Paranee - 12-07-2003 விரைவில் வெளியாகவுள்ள துளிதுளியாய் கவிதை தொகுப்பிலிருந்து சில கவித்துளிகள் யாழ் இணைய முகப்பிலும் மற்றும் பல இணையத்தளங்களிலும் சிதறிய இத்துளிகள் இங்கு மீண்டும் புதிய துளிகளுடன் <img src='http://www.angelfire.com/nb2/sajan/thuli_thuli.GIF' border='0' alt='user posted image'> - Paranee - 12-07-2003 1) மதம் மனிதர்களின் கற்பனை ஓவியம் மனிதனே தன்னைத்தான் அழிக்கும் ஆயுதம் அணுகுண்டு தோற்றுவிடும் மதம் போடும் சண்டையிலே எத்தனை துளிகள் வீழ்ந்தபோதும் எத்தனை நதிகள் பாய்ந்தபோதும் எல்லாம் கலப்பது கடலிலே என மானிடர் இங்கு புரியமறுப்பதுமேனோ 2) பெயரிற்கு நீ இன்ன மதத்தவனாய் இரு மதத்திற்காக உன்னை மாற்றாதே மதத்திற்காக உன்னை அழிக்காதே மதத்திற்காக உலகை சிதைக்காதே மதத்திற்காக வானைக்கிழிக்காதே நீயும் கிழிந்துபோவாய் 3) புூக்கள் நிறப்பிரிகை பார்த்து மகி;ழ்ந்திடும் மானிடர்கூட்டம் கலப்பு புூக்களை கைகளில் ஏந்திடும் கூட்டம் மனிதக்கலப்பினை கொன்றுபோடுவதுமேனோ அவை புதிதாய் பிறப்பதை புரியமறுப்பதுமேனோ மதம் மனிதனை ஏற்றி மிதிக்கும் அடங்காத கற்பனை 4) மதம் என்ற பெயரினால் மனிதா நீ ஏன் மதம்பிடித்து அலைகின்றாய் அல்லர் என்பவனும் இயேசவே என்பவனும் சிவனே என்பவனும் ஓன்றாய் மடிவது ஒருங்கே அழிவது எல்லாம் கண்முன்னே காட்சிகளாய் கண்டபின்னும் மதம் என்னும் அரக்கனை நீ அணுகவே முயல்கி;ன்றாய் 5) என்றுமே புரிய மறுப்பது மனித மனம் மாறிக்கொண்டேயிருப்பதும் அதுதூன் மாற்றிக்கொண்டேயிருப்பதும் அதுதான் 6) தென்றல் தொட்டுப்போனதாய் திங்கள் சுட்டுச்சென்றதாய் மகரந்த தீண்டல் மனதை வருடியதாய் வீழ்ந்த துளி பாதம் குளிர்ந்ததாய் சொல்லிக்கொள்கின்றாய் என்காதல் என்ன செய்கின்றுதென எப்போது சொல்லிக்கொள்வாய் ? 7) அலட்டல் இல்லாத உன் அமைதிப்பேச்சு சிந்திவிடாத உன் புன்னகை ஓளிர்ந்துகொண்டிருக்கும் உன் விழிகள் காற்றில் அசைந்து கவிதைகள் பலசொல்லும் கருங்கூந்தல் எல்லாவற்றையும் விட அவசரமில்லாத உன் காதல் எனக்கு ரொம்பவே பிடிச்சிருக்கு 8) அழுதுகொண்டுவரும் பிஞ்சிடம் ஆறுதல் சொல்ல என்னிடம் தெம்பில்லை முகவரி தொலைத்தவன் என அவனை ஏசியவர் என்னையும் ஏசியுள்ளார் தமிழனாய் பிறந்தமையால் முகவரிமட்டுமல்ல முகமும் தொலைத்து நிற்கின்றோம் ஈழத்தின் அவலத்திலே 9) எனக்கான உன் பரிவுப்பார்வை குரலோசை குயில்கீதம் மௌனம் காத்து சம்மதமாக்கும் அந்த நிமிடம் எனக்கு உன்னை ரொம்பவே பிடிச்சிருக்கு 10) எழுதிக்கொண்டேயிருப்பேன் வானமும் புூமியும் முட்டி மோதினாலும் புூக்கள் வண்டினை நிராகரித்தாலும் சூரியன் நொருங்கி தேசம் இருண்டாலும் நீ என்னருகில் உள்ளவரை என் கரங்கள் ஓயாது - AJeevan - 12-07-2003 அபாரம் பரணி. - shanthy - 12-07-2003 துளிகள் அருமை பரணி. வாழ்த்துக்கள். வார்த்தைச் சாரல் உங்கள் வசமாகியிருக்கிறது. சந்தம் தப்பாமல் சரமாரி பொழிகிறது. மீண்டும் வாழ்த்துக்கள். <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
- kuruvikal - 12-07-2003 சிந்தனைத்துளி மைத்துளியால் கவித்துளியாகி தேன் துளியாய் தெளிகிறதே....! படைப்புக்களுக்கு பாராட்டுக்களும் நன்றிகளும்...! :twisted: <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- manimaran - 12-07-2003 மதம் என்ற பெயரினால் மனிதா நீ ஏன் மதம்பிடித்து அலைகின்றாய் மத வெறியர்களை துளைத்தெடுக்கின்றனவே உங்கள் 'துளிகள்'. நெடும் பார்வை நேர்த்தியான சொற்கோர்வை. நன்றாயிருக்கின்றது பரணி. பாராட்டுக்கள். தொடர்ந்தும் இந்தப்பொருளில் நிறையவே எழுதுங்கள். - Paranee - 12-07-2003 நன்றி நண்பர்களே ! உங்கள் கரங்கள் துணையாக என்றென்றும் இருக்கும்வரை நான் எழுதிக்கொண்டேயிருப்பேன். நன்றி நன்றி - vasisutha - 12-07-2003 பாராட்டுக்கள் பரணி. உண்மையில் அருமை. - shanmuhi - 12-07-2003 <b>அழுதுகொண்டுவரும் பிஞ்சிடம் ஆறுதல் சொல்ல என்னிடம் தெம்பில்லை முகவரி தொலைத்தவன் என அவனை ஏசியவர் என்னையும் ஏசியுள்ளார் தமிழனாய் பிறந்தமையால் முகவரிமட்டுமல்ல முகமும் தொலைத்து நிற்கின்றோம் ஈழத்தின் அவலத்திலே </b> துளியாய் துளியாய் துளிர்த்த கவிதை அருமையிலும் அருமை....... - இளைஞன் - 12-08-2003 வணக்கம் பரணீ அண்ணா, நீங்கள் புதிய கவிஞர் அல்ல என்பதால் என்னுடைய இந்தக் கருத்து. இது என்னுடைய பார்வையில் மட்டுமே. துளி 1: மதத்தை கற்பனை ஓவியமெனக் குறித்துள்ளீர்கள். ஓவியம் இரசிக்கப்படுகின்ற ஒன்று. அந்தவகையில் மதம் இல்லை. எனவே உங்கள் அந்த வரிகளில் ஒரு வன்மையான கருத்து இல்லை. மிகவும் மென்மையாக இருக்கிறது. (காதல் கவிதைகள் எழுதி எழுதிப் பழக்கப்பட்டுவிட்டது போலும் <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->)"எத்தனை துளிகள் வீழ்ந்தபோதும் எத்தனை நதிகள் பாய்ந்தபோதும்" என்கின்ற வரிகள் ஏற்கனவே கேட்டுவிட்டோம் என்கின்ற அலுப்பைத் தருகின்றன. துளி 2: பெயரிற்காய் எதுக்கு மதம்? அப்படியெனில் அது தேவையில்லைத்தானே? பெயரிற்காய் நீ தமிழனாக இரு என்று நாம் சொல்ல முடியுமா? "மதத்திற்காக உன்னை மாற்றாதே" என்கின்ற வரியில் ஒரு நல்ல கருத்தைச் சொல்லியிருக்கிறீர்கள். அதாவது உனக்கானதுதான் மதமே ஒழிய... மதத்திற்காக நீ இல்லை. நன்று. துளி 3 & துளி 4: நல்ல கருத்து. ஆனால் புதிதாய் ஒன்றும் சொல்லப்படவில்லை என்று நினைக்கின்றேன். ஏற்கனவே கேட்டுவிட்ட உணர்வு. துளி 5: மனிதமனம் பற்றி சுருக்கமாய்ச் சொன்னாலும் சூப்பரா இருக்க. மாறுவதும் அதுதான். மாற்றுவதும் அதுதான். அருமை! துளி 6: காதல் கவிதைக்கு தானே கரவை பரணீ. <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->. உங்களுடைய தனித்துவம் கவிதையில் தெரிகிறது. அற்புதம்.துளி 7: ம்... பரணீ அண்ணாவின் காதலி கொடுத்து வைத்தவள். காதல் கவிதை எழுதக் கரவை பரணியிடம் கற்றுக் கொள்ளுங்கள் காதலர்களே. <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> அருமையான வரிகள்.துளி 8: அழுகை வருகிறது. ஈழத்தவரின் அவலம் சொல்கின்ற சிற்ப வரிகள். துளி 9: கண்ணீர்த்துளியை அடுத்து விழுந்த பனித்துளி இந்தக் கவிதை. இதமாக இருக்கிறது. துளி 10: "நீ என்னருகில் உள்ளவரை என் கரங்கள் ஓயாது" என்ற வரிகள் நன்று. ம்..காதலி அருகில் உள்ளவரை எழுதுவதை கரங்கள் நிறுத்தாது? அல்லது கற்பனை அருகில் உள்ளவரை கரங்கள் ஓயாதா? <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->மொத்தம்: காதல் கவிதைகள் = நன்று! அருமை! ஈழத்து அவலம் = அற்புதம்! சமூகம் சார்ந்து = புதிதாய் கொஞ்சம் சிந்திக்கலாம். திருத்தலாம். பராட்டுகள். நன்றி - pepsi - 12-08-2003 கவிதைகள் எல்லாமே நல்லா இருக்கு பரணி அண்ணே. மேன்மேலும் வளர பாரட்டுக்கள். - kaattu - 12-08-2003 பரணி துளித்துளியாய் நீங்கள் சிந்தும் கவிதைகள் அருமை. வாழ்த்துக்கள். - Chandravathanaa - 12-08-2003 [b]வாழ்த்துக்கள் பரணீ! தொடருங்கள். - Paranee - 12-08-2003 அனைதது நண்பர்களிற்கும் நன்றிகள் இளைஞன் கூறியதுபோல காதல் கவிதைகளில் வீழ்ந்து கிடந்து எனக்கு தேசத்தை பற்றியும் சமூகத்தை பற்றியும் எழுதும்போது கொஞ்சம் கடினம் உணரமுடிகின்றது. விரைவில் பல பல ஆக்கங்களுடன் |