| Welcome, Guest |
You have to register before you can post on our site.
|
| Forum Statistics |
» Members: 8,982
» Latest member: lucilegr4
» Forum threads: 9,058
» Forum posts: 83,244
Full Statistics
|
| Online Users |
There are currently 155 online users. » 0 Member(s) | 153 Guest(s) Bing, Google
|
| Latest Threads |
±ôÀÊ ÀÈ¢ì¸Ä¡õ
Forum: நகைச்சுவை
Last Post: UsArgum
01-10-2026, 09:07 AM
» Replies: 28
» Views: 10,267
|
Mrs.Sirimao Bandaranayake
Forum: நகைச்சுவை
Last Post: GeraTep
11-14-2025, 10:46 AM
» Replies: 14
» Views: 3,225
|
Farty time
Forum: நகைச்சுவை
Last Post: ㄹㅈㄷㄹㅈ
08-26-2025, 03:48 PM
» Replies: 11
» Views: 5,602
|
கனவே கலைகிறதே
Forum: பொழுதுபோக்கு
Last Post: KULAKADDAN
04-30-2006, 06:37 PM
» Replies: 0
» Views: 6,287
|
Karuna Cadres were captur...
Forum: பிறமொழி ஆக்கங்கள்
Last Post: ஜெயதேவன்
04-30-2006, 06:17 PM
» Replies: 4
» Views: 8,617
|
என்ன நடந்தது யாழிற்கு?
Forum: உங்கள் கருத்துக்கள்
Last Post: ஜெயதேவன்
04-30-2006, 06:03 PM
» Replies: 42
» Views: 31,043
|
முடியுமானால் முயற்ச்சியுங...
Forum: போட்டிகள்
Last Post: Subiththiran
04-30-2006, 05:00 PM
» Replies: 15
» Views: 14,454
|
**சுடேக்கு** புதிர் விளைய...
Forum: போட்டிகள்
Last Post: kavithaa
04-30-2006, 04:30 PM
» Replies: 63
» Views: 38,462
|
புல்மோட்டையில் தாக்குதல்
Forum: செய்திகள் : தமிழீழம்
Last Post: Sriramanan
04-30-2006, 04:10 PM
» Replies: 2
» Views: 8,021
|
போதனை வேண்டாம்! பு...
Forum: செய்திகள் : தமிழீழம்
Last Post: alika
04-30-2006, 03:13 PM
» Replies: 4
» Views: 6,237
|
|
|
| சதாம் கைது |
|
Posted by: sethu - 12-14-2003, 02:33 PM - Forum: செய்திகள் : தமிழீழம்
- No Replies
|
 |
சதாம் கைது செய்யப்படார்.28 April 1937 Saddam Hussein was born in Tikrit, Iraq. He was sent to live with his maternal uncle soon after he was born. During his early years, reports have linked Saddam to the murders of a school teacher and/or a cousin.
1955 Saddam moved to Baghdad.
1956 Hussein joined the Arab Baath Socialist Party.
1957 Hussein was denied the admission to the Baghdad Military Academy.
1958 Hussein married Sajida.
1959 Hussein attempted to assassinate the Prime Minister of Iraq. He was arrested for six months. Hussein was shot in the leg by the prime minister's bodyguard.
25 February 1960 After being convicted for his assassination attempt, Hussein was sentenced to death, although he later escaped to Syria and then to Egypt.
1962 Hussein completed his secondary studies.
1962-1963 Hussein studied law in Cairo, but he did not complete it.
8 February 1963 Hussein returned to Iraq after the Ramadan Revolution and was elected to the Baath Party.
14 October 1964 Hussein was arrested for charges accusing him of rebelling against the regime.
September 1966 While in prison, Hussein was elected the Deputy Secretary General of the Baath Party Leadership.
1967 Hussein escaped from prison.
July 1968 Hussein participated in a coup to overthrow Iraq's president and the regime.
1968 Hussein graduated from the College of Law.
9 November 1969 Hussein was elected the Vice-chairman of the Revolution Command Council.
1 June 1972 Hussein nationalized all of the oil companies in Iraq.
1 July 1973 Hussein was dubbed the rank of Lieutenant general and the Rafadain Order, First Class.
11 March 1974 Hussein helped to implement the Autonomy Law for Iraqi Kurdish Citizens. The Kurds were forced to go to Iran.
1 February 1976 Hussein was awarded M.A. Honors Degree in Military Sciences
8 October 1977 Hussein was elected the Assistant Secretary General of the National Pan-Arab Leadership of the Baath Party.
16 July 1979 Hussein was elected as the President of Iraq and as the Chairman of Revolution Command Council.
17 July 1979 Hussein was promoted to the rank of Field Marshall.
8 October 1979 Hussein was elected Deputy Secretary General of the Pan-Arab Leadership of the Baath party.
4 September 1980 Hussein initiated a war with Iran as he attacked the oil-reserves in Iran.
1982 Former President Bakr died mysteriously. It was widely suspected that Hussein was involved.
30 July 1983 Hussein was dubbed the Revolution Order, First Class.
1984 Hussein was awarded an Honorary Doctorate in Law from the University of Baghdad.
1987-1988 Hussein launched the Anfal Campaign against the Kurds. 180,000 Kurds disappeared and 4,000 villages were destroyed.
28 April 1988 Hussein was dubbed the Order of the People.
March 1988 The Kurdish town, Halabaja, was gassed. 5,000 people were killed and 10,000 were injured.
8 August 1988 Hussein agreed to a cease-fire with Iran. Iraq won the conflict.
August 1988 Many Kurdish villages on the Turkish border were gassed. Thousands of people died.
2 August 1990 Hussein seized Kuwait.
16 January 1991 The United States began bombing Baghdad in response to Hussein not turning over Kuwait.
February 1991 The Persian Gulf War ended. President George Bush of the United States declared a cease-fire.
1993 Hussein broke the peace terms from the end of the Persian Gulf War. The United States bombed Iraq as a result.
29 September 1998 The United States passed the Iraq Liberation Act. The Act stated that they wanted to remove Saddam Hussein from office and replace the government with a democratic institution.
October 1998 Hussein failed to comply with the united Nations weapons inspectors. This action led to a four-day bombing raid by the United States.
16-19 December 1998 The United Nations pulled their workers out of Iraq. The United States and the United Kingdom began air raids on Iraq called Operation Desert Fox.
1999 Throughout the year continual air strikes hit Iraq.
2000 It is reported that Hussein has used humanitarian funds to build presidential palaces and for other personal enrichment items.
2002 The United States began to initiate a plan to overthrow Hussein.
2002 Hussein allows the United Nations weapons inspectors to return to Iraq.
January 2003 Other Arab leaders in the middle east request that Saddam Hussein go into exile to avoid war with the United States.
February 2003 Saddam Hussein interviewed with news reporter, Dan Rather. Hussein said that he would not go into exile and that he would not surrender in a possible war. He claimed that Iraq does not have any weapons that go against UN resolutions.
17 March 2003 United States President George W. Bush gave Hussein an ultimatum. Either he leave Iraq within 48 hours with his sons or the United States would pursue military action.
19 March 2003 The United States and other coalition forces started Operation Iraqi Freedom in an effort to remove Saddam Hussein and his regime from power.
24 March 2003 Hussein delivered a defiant speech on Iraqi television trying to rally his troops and unite his people in the war against the United States.
End of March 2003 Saddam Hussein made various television speeches that had been pre-recorded. Many analysts believed that they had been recorded before the war even started, because he did not reference any of the specific war activities.
4 April 2003 Hussein made a televised appearance and finally referenced specific details of the war. He called on the Iraqis to hit the coaltion forces hard.
7 May 2003 A tape thought to be Saddam Hussein was made public. It called on the Iraqi citizens to reject the visitors and to overhtorw the Americans.
|
|
|
| சதாம். |
|
Posted by: nalayiny - 12-14-2003, 12:57 PM - Forum: செய்திகள் : தமிழீழம்
- Replies (31)
|
 |
<img src='http://newsimg.bbc.co.uk/media/images/39633000/jpg/_39633977_saddamcaptured203.jpg' border='0' alt='user posted image'>
சதாம் 8 அடி ஆழமுள்ள சுரங்கத்துள் வைத்து கைது செய்யப் பட்டார்.
நன்றி பிபிசி தொலைக்காட்சி செய்திப் பிரிவு.
|
|
|
| வாழ்த்துக்கள் சாPஸ் |
|
Posted by: Paranee - 12-13-2003, 08:53 AM - Forum: கவிதை/பாடல்
- No Replies
|
 |
தொடர்ச்சியாக எழுதிக்கொண்டதால் தொகுப்பாக வாழ்த்துக்கள
கண்மணிக்குள் ஒரு காதல் மூலம் எம் கண்விழிக்குள் நுழைந்த கவிஞனிற்கு வாழ்த்துக்கள்
வசியக்காரியை எம் வசமாக்கியதற்கு நன்றிகள்
காதல் அதை கனியச்செய்யவா நீ பிறந்தாய்
காதல் அதை காவியமாக்கவா நீ ஜெனித்தாய்
காதல் அதன் கரைதேடவா நீ எழுந்தாய்
காதல் அதன் ஆழம் அறியவா நீ வீழ்ந்தாய்
அருமையான வார்த்தைப்பிரயோகம்
அருமையான கற்பனை
அருமையான சங்கிலிக்கேர்வையாய் கவிதைகள்
வாழ்த்துக்கள் சாPஸ்
யாழ் களத்தின் கனத்தை ஏற்றி களத்தில் காதல் வாசம் சேர்த்து எம் மனமெங்கும் மையல்கொண்டுவிட்டீர்கள். தொடருங்கள்
நில்லாமல் வா நிலாவை நான் இரவெங்கும் தேடுகின்றேன். இன்றுவரை ஏமாற்றம்தான்
எங்கு சென்றாள் அந்த கருப்பு நிலா !
எங்கு சென்றாள் அந்த மௌனதேவதை
எங்கு சென்றாள் அந்த கவி தந்த காரிகை
தேடித்தாருங்கள்
இன்னமும் எழுதிக்கொள்ள வாழ்த்துக்களுடன்
நட்புடன்
ந.பரணீதரன்
|
|
|
| oh our INDIA ??!! |
|
Posted by: anpagam - 12-13-2003, 12:27 AM - Forum: அரசியல் / பொருளாதாரம்
- Replies (81)
|
 |
சுதந்திரன் பார்வையில்...
இந்தியா மனமாற்றம் பெறுமா?!
மகாத்மா காந்தியைச் சுட்டவர்களுக்கும், இந்திரா காந்தியைச் சுட்டவர்களுக்கும், ராஜீவ் காந்தியைப் பகிரங்கமாகக் கொல்ல முயன்ற சிங்களச் சிப்பாய்க்கும் மன்னிப்பு வழங்கிய இந்திய அரசு, இதுவரை ஊர்ஜிதம் செய்யப்படாத ராஜீவ் காந்தி கொலையில் மட்டும், விடுதலைப் புலிகளை மன்னிக்க மறுப்பது எதற்காக? என்ற ஒரு தெளிவான நேரடிக் கேள்வியை முன்வைத்து, பதிலை ஆராய்ந்தால், இந்தியாவின் புறக்கணிப்புக்கு ராஜீவ் காந்தியின் கொலை நிச்சயமாக அடிப்படைக் காரணமல்ல என்பது உள்ளங்கை நெல்லிக்கனியாகப் புரிந்து விடுகிறது.
ஈழப்பிரச்சனை தீர்வதனால் இந்தியா நன்மையடையுமா?
ஈழத்தமிழ் அகதிகளுக்கு இந்திய அரசு வருடாவருடம் பெருந்தொகைப் பணத்தை பல தேவைகளுக்காகவும் செலவிடுவதனால், ஈழப்பிரச்சனை தீர்வதனால், இந்தியாவின் அநாவசியச் செலவு மீதப்படுத்தப்படுகிறது.
இலங்கையில் போர் நடைபெறும் காலத்தில், இந்தியக் கடல் எல்லையில் இரட்டிப்புப் பாதுகாப்பு தேவைப்படுகிறது என்று இந்திய பாதுகாப்பு அதிகாரி சொன்னதை வைத்துப் பார்த்தால், இலங்கையில் அமைதி நிலவுவது கடல் எல்லைப் பாதுகாப்பை இலகுவாக்குகிறது.
ஆசிய பிராந்திய நாடுகளின் உள்நாட்டுப் பிரச்சனைகள் மோசமாக இல்லாதவிடத்து, இந்தியா தனது உள்நாட்டு வெளிநாட்டுப் பிரச்சனைகளில் அதிக கவனத்தைச் செலுத்த வாய்ப்பிருப்பதால், மத்திய அமைச்சரவையிலும் ஒரு சாதக நிலையே தெரிகிறது.
ஈழத்தமிழரின் பிரச்சனையைத் தீர்த்து வைப்பதற்கு இந்தியத் தமிழர்கள் ஆதரவு தர மறுக்கிறார்களா என்று பார்த்தால், அதற்கு முற்றிலும் மாறாக, ஈழத்தவர் இழுபறிகள் தீர்வதற்காக தமிழ்நாட்டு மக்கள் வலுவாகக் குரல் கொடுப்பதுடன், பல முக்கியத் தலைவர்களும் சிறையில் அடைபட்டும் அஞ்சாது ஆதரவு தருகிறார்கள்.
இலங்கையில் வாழும் இந்தியத் தமிழர்கள் (மலையகத் தமிழர்கள்) ஈழத் தமிழர் பிரச்சனை தீருவதை வெறுக்கிறார்களா என்று பார்த்தால், அங்கிருந்து ஏகோபித்த ஆதரவு கிடைப்பதுடன், தமிழர் பிரதிநிதிகளுடன் இணைந்து செயற்படவே அவர்கள் பகிரங்கமாக ஆர்வம் காட்டுகிறார்கள்.
உள்நாட்டுப் பிரச்சனைகள் பேசித் தீர்த்துக் கொள்ளப்படுவதற்கு இந்தியா என்றுமே ஆதரவு தந்ததில்லை என்று வாதாடவும் வாய்ப்பில்லை. பங்களாதேஷ், காஷ்மீர், பஞ்சாப், பாக்கிஸ்தான் என்று அத்தனை புூதாகாரப் பிரச்சனைகளும் பேச்சுவார்த்தை மூலம் தீர்க்கப்படுவதை இந்திய அரசு ஆதரித்தே வந்திருக்கிறது, வருகிறது.
கடந்த காலத்தில், விடுதலைப் புலிகள் தனிநாட்டுக் கோரிக்கையை முன்வைத்ததனால், ஒரு தனிநாட்டுப் பிரிவினையை இந்தியா ஆதரிக்கவில்லை என்று வைத்துக் கொண்டாலும், தற்போது ஒரு நாட்டிற்குள் சமஷ்டித் தீர்வை ஆராயும் வேளையில் இந்தியாவின் இந்த வாதம் ஒவ்வாமற் போகிறது.
இலங்கைப் பிரச்சனை உக்கிரமடைவதால் இந்திய எல்லைப் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் நேரும் என்ற வாதத்தை ஏற்கலாம், ஆனால் இலங்கைப் பிரச்சனை தீர்வதால் இந்தியப் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் நேரும் என்பதை நியாயப்படுத்த எந்த வாதமும் இடம்கொடுக்கப் போவதில்லை.
ஈழத்தமிழர்கள் இந்திய அரசிடமிருந்தோ, மாநிலங்களிலிருந்தோ ஒரு சிறு நிலப்பரப்பையோ, கடற்பரப்பையோ, பணத்தொகையையோ, படைப்பலத்தையோ, பாதுகாப்பையோ, மக்களையோ, உரிமைகளையோ, ஒப்பந்தங்களையோ, கண்காணிப்பையோ, காவலையோ எதையுமே முன்நிபந்தனையாகக் கேட்கவில்லை, பின்நிபந்தனையாக வைத்திருக்கவும் இல்லை, அத்தகைய தேவைகளும் இருப்பதாகத் தெரியவில்லை.
இலங்கை அரசையோ விடுதலைப் புலிகளையோ இந்தியா நம்பவில்லை என்ற ஒரு காரணத்தை முன்வைத்தாலும், இம்முறை மூன்றாந்தரப்பின் வலுவான பின்புலம் இருப்பதுடன், அமெரிக்கா, ஜப்பான், பிரித்தானியா, கனடா போன்ற வலுவான பல மேற்குலக நாடுகள் வெளிப்படையாக ஆதரவு தருவதனால், இந்தியா அவ்வளவு சுலபமாக ஏமாற்றப்படும் நாடாக மாறிவிட வாய்ப்பில்லை.
பங்களாதேஷ் என்ற ஒரு சிறிய நாட்டிற்கு விடுதலை கொடுத்ததால், இந்தியா என்ற ஒரு வல்லசுக்கு ஆபத்தோ அச்சுறுத்தலோ வந்ததா என்று ஆராய்ந்தால், அதற்கும் இல்லை என்றே விடை கிடைக்கிறது.
ஏன் இந்தக் காழ்ப்புணர்வு?
பால் பொங்கி வரும்போது தாளி உடையப்போகிறதே, காப்பாற்ற மாட்டீர்களா என்று ஈழத் தமிழர்கள், புலம்பெயர் ஈழத்தமிழர்கள், இந்தியாவில் அகதிகளாக வாழும் ஈழத்தமிழர்கள், மலையகத் தமிழர்கள் இப்படி அனைவருடனும், விடுதலைப் புலிகளின் தலைமையும் இந்தியாவின் தலையீட்டையும் ஒத்துழைப்பையும் தொடர்ச்சியாக வலியுறுத்திவர, இந்தியா மட்டும் பாராமுகம் காட்டுவதன் மர்மம் என்னவென்று யாருக்கும் புரியவில்லை.
இதைவிட ஒருபடி மேலே சென்று, இலங்கை இராணுவத்திற்குப் பயிற்சி, இராணுவ முகாம்களும் தளபாடங்களும் புதிப்பிக்க உதவிகள், இருநாட்டுத் தளபதிகளின் சிறப்புச் சந்திப்புக்கள், இராணுவ ஆலோசனைப் பரிமாற்றங்கள், முப்படைத் தளபதி பலகல்லவின் தலைமையில் உயர்மட்ட இராணுவக் குழுவின் இந்தியப் பயணம், இக்குழுவில் துப்பறியும் இராணுவப் பிரிவின் தலைமை பிரிகேடியர் கபில கெந்தவதான உள்ளடக்கப்பட்டிருப்பது என்று இந்தியாவின் ஒவ்வொரு அசைவும் ஈழத் தமிழர்களுக்கு எதிராகவே எடுத்து வைக்கப்படுகிறது.
ஒன்றுபட்டு இயங்கி வந்த தமிழர் தேசிய கூட்டமைப்பையும் பலமான அரசியல் ராஜதந்திரத்தின் மூலம் பிரித்து உடைத்து, இந்தியாவுக்கே உரித்தான உட்கட்சிப் புூசலைக் கிழப்பும் பண்பிலும் இந்தியா வெற்றி கண்டிருக்கிறது.
விடுதலைப் புலிகளின் நடமாட்டத்தை இந்தியாவின் அத்தனை மாநிலங்களிலும் கறாராகத் தடைசெய்து ஒதுக்கிவரும் இந்தியா, ஈழத்தமிழரைக் காக்க மறந்து ஓடித்தப்பிய ஏனைய தலையாட்டிக் குழுக்களுக்கெல்லாம் பாதுகாப்பும் தங்குமிட வசதிகளும் வழங்குவதுடன், நாடு முழுவதும் சுதந்திரமாகப் பயணிப்பதை அனுமதிக்கிறது. அண்மையில் ஈபிடிபி உறுப்பினர் ஒருவர் தமிழ்நாட்டின் அகதிமுகாமிலிருந்து சிலரை அழைத்துவந்து, ஊர்காவற்றுறையில் அவர்கள் அமைத்துள்ள பயிற்சி முகாமில் பயிற்சிக்குச் சேர்த்து வந்துள்ளதை சர்வதேச ஊடகங்கள் சுட்டிக் காட்டியுள்ளன. இந்தியா இதுகுறித்து ஆராயவோ கருத்துக் கூறவோ மறுத்து விட்டது.
ஜெயலலிதா துஷ்பிரயோகம் செய்யும் பொடாச் சட்டம்
ராஜீவ் காந்தியின் கொலைக்கு முன்னர், இந்திய அரசும் தமிழ்நாடு அரசும் இந்திய மக்களும் விடுதலைப் புலிகளுக்கு ஆதரவு தந்தபோது, அதே ஆதரவை வழங்கியவர்களில், தனக்கு எதிரானவர்களைப் பழிவாங்க ஜெயலலிதா பொடா சட்டத்தை துஷ்பிரயோகம் செய்தும், புதுடில்லி கண்மூடியே காட்சி தருகிறது. ஒரு வைகோவோ நெடுமாறனோ சுபவீரபாண்டியனோ மட்டுமல்ல, இன்னும் எத்தனையோ ஆயிரம் பிரபலங்கள் விடுதலைப் புலிகளை ஆதரித்து எத்தனையோ மேடைகளில் குரல்கொடுத்திருந்தும், ஜெயலலிதா தனது எதிரிகளை மட்டுமே பழிவாங்கியிருப்பது, இந்திய அரசுக்கு மிகக் கேவலமான ஒரு பெயரையே பெற்றுக் கொடுத்திருக்கிறது.
அந்தக் காலகட்டங்களில், எதிர்க்கட்சித் தலைவியாக இருந்த ஜெயலலிதாகூட, விடுதலைப் புலிகளை ஆதரித்துத்தான் மேடைகளில் முழங்கி வந்தார் என்பதை அவரது உரையின் ஒலிநாடாக்களைக் கேட்டு அறிந்து கொள்ள, பொடா வழக்கை ஆராயும் நீதிபதிகளுக்கு எத்தனை மணித்துளிகள் தேவைப்படப் போகிறது?!
இந்தியா மனம் வைக்குமா?
ஆக, ஈழத்தமிழர்கள் விடுதலைபெற்று வாழ்வதற்கான பரிநாண் கயிற்றைத் தன்கையில் வைத்திருக்கும் இந்தியா, மனம் வைத்தால் நிட்சயம் இலங்கைப் பிரச்சனையில் தனது கொள்கையை சற்றே இறக்கிக் கொள்ளலாம்.
இலங்கைத் தலைமையில் பெரும் அரசியற் குழப்பம் ஏற்பட்டிருப்பதுடன், நிரந்தர சமாதானம் உருவாகக்கூடிய இறுதி வாய்ப்புக்கும் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ள நிலையில், விடுதலைப் புலிகளின் மதியுரைஞரும் ஆலோசகருமான கலாநிதி அன்ரன் பாலசிங்கத்தின் நேரடியான அழைப்பை ஒரு கௌரவ வரவேற்பாகக் கருதி, வீசப்பட்டுள்ள துருப்பைக் கெட்டியாகப் பிடித்து இந்தியா நேரடியாகத் தலையிட வேண்டுமென்பதே அனைவரதும் எதிர்பார்ப்பாக விரிந்து கிடக்கிறது.
ரணில்-சந்திரிகா-விடுதலைப் புலிகள்-இந்தியா என்ற நாற்கோணச் சந்திப்பொன்றை, நோர்வே-ஜப்பான் மத்தியஸ்தத்தில் அமைத்துக்கொடுத்து, இலங்கை என்ற நாட்டிற்கு ஓர் நிரந்தரத் தீர்வை வழங்க இந்தியா முன்வருமா?
இந்த உலக வரலாறு படைக்கக்கூடிய சந்திப்பை, ஈழத்தமிழர்கள் என்றுமே மறக்கமுடியாத திம்பு நகரில் அமைத்துக் கொடுத்து இந்தியா தன் நீண்டகாலக் கறைகளைக் கழுவிக் கொள்ளுமா??
சமன்செய்து சீர்தூக்குங் கோல்போல் அமைந்தொருபாற்
கோடாமை சான்றோர்க் கணி. (குறள்: 12.8 )
நன்றி: கனடா சுதந்திரன் 11-12-03 & தமிழ்நாதம்.
|
|
|
| கிறிஸ்மஸ்- புதுவருட வாழ்த்துக்கள் 2003/4 |
|
Posted by: kuruvikal - 12-12-2003, 11:29 PM - Forum: வாழ்த்துக்கள் பாராட்டுக்கள்
- Replies (11)
|
 |
<img src='http://posty.net/williebobd/i/moreholidayframeschristmas32.gif' border='0' alt='user posted image'>
<img src='http://posty.net/williebobd/i/moreholidayframeschristmas39.gif' border='0' alt='user posted image'>
கள உறவுகள் அனைவருக்கும் முன்கூட்டிய கிறிஸ்மஸ் தின வாழ்த்துக்கள்...!
இறைதூதனாய்
விண் விட்டு மண் வந்து
மனிதத்திற்காய்
மரத்தில் மரணித்த
மகானின் பிறப்பை
மனதெங்கும் மாட்டி வைத்து
மரணம் வரினும்
மனிதம் காப்போம் என்று
மனமே சாட்சியாக
உறுதியெடுப்போம்- அதை
கணமும் காத்து நிற்போம்...!
வாழ்த்துக்களுடன்,
உங்கள் அன்பின் குருவிகள்...!
<img src='http://posty.net/williebobd/i/merryc19.jpg' border='0' alt='user posted image'>
|
|
|
| பூமியின் காந்த மண்டலத்தின் விதி...... |
|
Posted by: kuruvikal - 12-12-2003, 02:32 PM - Forum: விஞ்ஞானம் - தொழில்நுட்பம்
- Replies (1)
|
 |
<img src='http://www.gsfc.nasa.gov/ftp/spacepix/image/euv_presstiny.jpg' border='0' alt='user posted image'>
பூமியின் காந்த மண்டலம் (NASA)
பூமியின் காந்த மண்டலம் கடந்த 150 வருடங்களில் 10 சதவீதத்தால் பலவீனம் அடைந்துள்ளதாகவும் இந்த பலவீன விகிதத்தில் காந்த மண்டலம் தொடர்ந்து பலவீனமானால் பூமியின் முழுக் காந்த மணடலமும் இன்னும் 1500 தொடக்கம் 2000 வருடங்களுக்குள் முற்றாக பலமிழந்து விடும் என்றும் அமெரிக்க கவாட் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் அறிவித்துள்ளனர்....!
இந்த காந்த மண்டலப்பலவீனம் தென் அத்திலாந்திக் சமுத்திரத்தின் மேல் நன்கு அவதானிக்கப்பட்டுள்ளது...இதனூடாகவே பூமிக்கு மிக அருகில் சுற்றிவரும் செயற்கைக் கோள்கள் தமது மின் காந்த அலைகளை பூமிக்கு அனுப்பி வருகின்றனவாம்....! இந்தக் காந்த மண்டல அழிவு பூமிக்குள் பலமான மின்காந்த அலைகள், மின்னேற்றம் பெற்ற துணிக்கைகள் தடையின்றி உள் வர உதவி அளிக்கும் என்றும் இவை உயிரினங்களுக்கும் பூமிக்கும் அதன் காற்றுமண்டலக் கட்டமைப்புக்கும் ஆபத்தானவை ஆகவும் அமையலாம்....!
------------------------------
தமிழில் தகவல் குருவிகளின் வலைப்பூ...!
|
|
|
| வசியக்காரி..பகுதி-7 |
|
Posted by: sharish - 12-12-2003, 11:44 AM - Forum: கவிதை/பாடல்
- Replies (1)
|
 |
[b][size=18]வசியக்காரி..பகுதி-7
இன்றுதான் நீ
என்னை அணைக்கவில்லை
நாளை....
என் கல்லறையிலாவது
ஒருமுறை அழுதுவிடு...!
காலங்கள்...
எவ்வளவுதான் கடந்துபோனாலும்
என்றும் என்
கல்லறைக்குள்ளிருந்து
ஒரு குரல்
கேட்டுக்கொண்டே இருக்கும்
""நான் உன்னைக் காதலிக்கிறேன்""
யாராவது
என் கல்லறையைக்காட்டி
இவன் ஏன் இறந்தான்
எனக்கேட்டால்....
காதலியே...
நீ
அவர்களின்
அறியாமையை விளக்கு...
இவன் இறக்கவில்லை
என்னைக்
காதலித்துக்கொண்டிருக்கிறான்...!!!
போகிறேன்
என்று என்னிடம் சொல்லாதே...!
போய் வருகிறேன்
என்றும்
என்னிடம் சொல்லாதே....!
நீ வரும்போது
யார்
உயிரோடு இருப்பார்களோ...
அவர்களிடம்
சொல்லிவிட்டுப் போ...!!!
நான்
ஒரு பாடகனாக
இருந்திருந்தால்
நீ பிரிந்த மறுகணமே
பாடுவதை நிறுத்தியிருப்பேன்...!
ஆனால்
நான்
ஒரு கவிஞனாயிற்றே
கவலையை போக்க...
வேறு வழிதெரியவில்லை
அதனால்தான்
எழுதுகிறேன்...!
சொல்லாமலே செல்கிறாய்
என்னை
கண்டுகொள்ளவில்லை...!
நில்லாமலே
மழையில் நனைந்து
அழுதுகொண்டே அலைகிறேன்
உன்னைப்போல்...
யாருமே
கண்டுகொள்ளவில்லை..!
நீ
அருகில் இருந்தபோது
உலகமே என் அருகில்...!
நீ
தொலைவில் சென்றபோது
உலகமும் எங்கோ
ஒரு தூரத்தில்...!
நீ காதல்செய்யவென
கண்ணெதிரே வந்தாய்
நீ
கனவாய்போனபோது
கண்ணீர்தான் தந்தாய்..!
மூங்கில்காடு
தானாகத் தீப்பிடித்து எரிகிறது
நீ
புல்லாங்குளல் வாசிக்க
வராததால்..!
பெய்த மழை...
மேல்நோக்கி எழுகிறது
நனைய...
நீ வராததால்...!
கல்லூரிப் படிக்கட்டு
கண்ணீர் வடிக்கிறது...!
உன் பாதம் படாததால்...!
என் வீட்டுக் கண்ணாடி
உடைந்து கீழே விழுகிறது
உன் பார்வை படாததால்...!
உன் கிராமத்துத்
தொடரூந்து
வனவாசம் செல்கிறது
அதில் நீ
பயணம் செய்யாததால்...!
நீ
என்னோடிருந்த போதுதான்
யுகத்தின் வேகம் தெரிந்தது
நீ
பிரிந்துபோன போதுதான்
கணத்தின் நீழம் புரிந்தது..!
(இன்னும் வரும்..)
த.சரீஷ்
10.12.2003 (பாரீஸ்)
|
|
|
| வசியக்காரி..பகுதி-6 |
|
Posted by: sharish - 12-12-2003, 11:38 AM - Forum: கவிதை/பாடல்
- Replies (1)
|
 |
[b][size=18]வசியக்காரி..பகுதி-6
ஆண்மைக்கும்
பெண்மைக்கும் இடையில்...
மோகம் என்ற ஒன்னு
இல்லையேல்.....
தற்கொலைதான் தலைசிறந்த
பொழுதுபோக்காகியிருக்கும்..!
ஞனப்பழம் கேட்டு
வினாயகன்...
அம்மையப்பனைச் சுற்றிவந்தானாம்...!
நான் உன்னைத்தானே
சுற்றி சற்றி வருகிறேன்
காதல்ப்பழம் கேட்டு...!
அலைகள் அடிக்காமல்போனால்
கடலில் அழகில்லை
இதயம் துடிக்காதுபோனால்
உடலில் உயிரில்லை
உன்னை நினைக்காதுபோனால்
எனக்குள் நானில்லை...!
அரைகுறையாய் மரணித்தபின்
மறந்துவிடு என்கிறாய்...?
மரத்துப்போன
மனம்கொண்ட மாயக்காரி....
எப்படி உன்னால் முடிந்தது...
குற்றுயிராய் கிடக்கும்
என்னுயுரை கொலைசெய்ய...???
கண்களால் காயம் செய்தாய்
பார்வையால் கைதுசெய்தாய்
வார்த்தையால் கொலையே செய்தாய்
இனியும் என்ன...???
வாழ்வை முடித்து...
முற்றுப்புள்ளி வைத்துவிட்டு
இதயம் புறப்படுகிறது
வழியனுப்ப வா...!
காதலில்
தோற்றுப்போன காதலர்களே...
வாருங்கள்
காதலின் ஆழம் அறியாத
ஆண்களின் காதல் புரியாத
காதலிகளுக்கா ஒரு முறை
அழுதுவிடுவோம்...!
காதல் தோல்வியை
தாங்கிக்கொள்ளும்
மனப்பக்குவம் கொண்டவன்
விகடனாகிறாம்...!
இல்லாதவன்...
முரடனாகிறான்..!
காதலர்கள் ஏன்
தற்கொலை செய்கிறார்கள்...?
இந்தக்கேள்வி எழும்போதெல்லாம்
நான் ஆத்திரப் படுவதுண்டு...!
ஆனால்...
அது நல்ல வழிதானே...!
எத்தனை தடவைதான்
செத்துச் செத்து பிழைப்பது...?
ஒரே தடவையில் தற்கொலை
இது...
நல்ல வழிதானே...!!!
கல்லறையில் இருக்கின்ற
காதலர்கள் கோபம்கொண்டு
கொதிக்கின்றார்கள்...!
நீ அந்தவழியால் செல்லாதே அன்பே...!
அவர்கள்...
என்மீது இரக்கப்பட்டு...
உன்னைத் தாக்கவரக்கூடும்...!
வளர்ந்து வரும் விஞ்ஞான உலகில்
எதையெதையோ எல்லாம்
கண்டுபிடிக்கிறார்கள்
உன் மௌனத்தின் அர்த்தத்தை
கண்டுபிடிக்கும் கருவியைத் தவிர...!
ஆண்மீகவாதியையும்
தீவீரவாதியையும்
ஒரு பெண்னே
உருவாக்குகின்றாள்..!
வல்லரசுகள் எல்லாம்
ஏன் இந்த
அணுகுண்டுகளை தயாரிக்கிறார்கள்...?
பதிலாக...
பெண்மனதை அறிந்துகொள்ள
ஏதாவது தயாரித்தால் போதும்...!
ஏனெனில்...
உலக யுத்தங்கள்
உருவாகுவதற்கு...
ஏதோ ஒரு வழியில்
ஒரு பெண்தான்
காரணமாய் இருப்பாள்..!!!
கல்லறையை கடந்துசெல்லும்
காற்றே.....
நீ என்னைத் தொட்டுத் தழுவு
இறந்துபோன காதலர்
கனவுகள் எல்லாம்
மூச்சுக்காற்றினூடாக என்னுள்
புகுந்துகொள்ளட்டும்...!
நீ
என்னைக் காதலிக்கும் முன்பே
நான் இறந்துவிடுவேனா...?
அன்புக்குரிய நண்பர்களே....
நான் சிலவேளை
இறந்துபோனால்...
என் கல்லறைமீது எழுதிவிடுங்கள்
இப்படி....
""ஒரு காதலன் கவிஞனாகினான்
காதலிக்காக மட்டும்
கவிதைகள் எழுதியவன்
இப்போது ஓய்வெடுக்கிறான்""
(இன்னும் வரும்..)
த.சரீஷ்
10.12.2003 (பாரீஸ்)
|
|
|
| வசியக்காரி..பகுதி-5 |
|
Posted by: sharish - 12-12-2003, 11:34 AM - Forum: கவிதை/பாடல்
- Replies (1)
|
 |
[b][size=18]வசியக்காரி...பகுதி-5
நான்
உன் கண்களாய்
இருக்கிறேன் என்றாய்...!
அதைவிட
கண்ணீராய் இருப்பதையே
நான் விரும்புகிறேன்...!
அப்போதுதான்
உன் கண்களில் இருந்து
ஒரு துளி கண்ணீர்கூட
வெளியேறாது...!
நீ என்னைக் காதலிக்கிறாய்
ஆசைமொழி பேசி
அரவணைக்கிறாய்...!
ஆதலால்த்தான் நான்
அன்பில் ஆதவனாய் இருக்கிறேன்...!
இல்லையேல்...
அன்பில்லாதவனாய்த்தான்
போயிருப்பேன்...!!!
இனி
மீண்டும் நளை சந்திப்போம்..!
நீ
சொல்லிக்கொண்டே
கையசைத்துச் செல்கின்றாய்
நான்
நாளைவரை
எத்தனை நிமிடங்கள் அல்ல
எத்தனை வினாடிகள்
என்று
எண்ணிக்கொண்டிருக்கிறேன்...!
நீ என் காதலியா...?
இல்லை...
ஒருபோதும் சாத்தியமில்லை...!
இப்போது...
நீ என் மனைவி..!
நாளைதான்
நீ என் காதலி...!!!
தென்றல் தவிழ்கிறது
மேகம் கவிகிறது
தேகம் குளிர்கிறது
மோகம் முளைக்கிறது
காலை விடியும்வரை
கனவிலாவது வா...!
நான் ஒரு
காதல் குழந்தை...!
அதனால்தான்
உன்னைக்கண்டதும்
உடனே...
உன் மடியில்
தவழத் துடிக்கிறேன்...!
காதல் கலைவெண்ணிலா...
நிழலொன்றுக்கு
ஒளிகொடுத்து உயிர்கொடு...!
இல்லையேல்...
உடலொன்றுக்கு...
உயிர்கொடுத்து நிழல்கொடு..!
மோகத்தீ மோகினி...
எனக்காக காத்திரு
விரைவில் வருவேன்...!
என்னை உன்னுள்
விதைத்துவிட...!
இல்லையேல்...
நானே உனக்காகக்
காத்திருப்பேன்...!
உன்னாலே...
மண்ணுக்குள் புதைந்துவிட...!
மாயக்குரல் மாதவி...
ஒன்றில்...
மன்மதத் திரையை
திறந்துவைத்து
விடியும்வரை விருந்துக்களை...!
அல்லது...
ஆசைத்தீயை அணைத்துவிட்டு
சாகும் வரம் தந்துதொலை...!
பசிதீரப் பழம்தரும்
பதினெட்டுவயதுப் பாவையே....
எனக்கு இரண்டும் வேண்டும்...!
சுட்ட பழமும்
சுடாத பழமும்...!
தூக்கத்தை விற்று
உன் நினைவுகள் வாங்கிய
வியாபாரி நான்
நள்ளிரவில்
யன்னல் திறந்தேன்
யன்னல்வழிவந்த தென்றல்
என் மேனி தழுவியது
அதுவும் உன்னைப்போலவே
இடைவிடாமல்...
தொட்டும்...
தொடர்ந்தும்...!!!
இயற்கைதந்த இன்பநிலா...
இரக்கம்காட்டு...
இரும்புமனதை இளகவிட்டு
இளமைக்கதவை திறந்துவிடு
இன்பம் பொங்கிவழியட்டும்
இல்லை...
மாயவலை விரித்துவிடு
மரணத்தோடென்னைப்
பிணைத்துவிடு...!
இதில் என்ன
பிழைகண்டாய்...???
மோகமில்லையேல்
நீயும் இல்லை
நானும் இல்லை
யாருமே இல்லை...!
காதலில்லையேல் புவனமில்லை
வாழ்க்கையில்லை
தேடலில்லை
எதுவுமே இல்லை
இதிலிருந்து...
இன்னும் ஒன்றல்ல...!
இதிலிருந்துதான் எல்லாமே...!!!
நானும் உன்னை
அனைத்துக்கும்தானே அழைக்கிறேன்...!
இதில் ஏதும்
பிழையுண்டோ....???
அழியாத ஓவியமே
ஓடிவா...
வெட்கத்தை களைந்து
காலமழையில்
நானும் நீயும் நனைவோம்..!
காமத்தின் ஈரத்தை
துவட்டிவிட்டு
கடைசில்
தூய்மையான
காதலுடன் நடமாடுவோம்...!
(இன்னும் வரும்..)
த.சரீஷ்
09.12.2003 (பாரீஸ்)
|
|
|
| வசியக்காரி... பகுதி-4 |
|
Posted by: sharish - 12-12-2003, 09:26 AM - Forum: கவிதை/பாடல்
- Replies (1)
|
 |
[b][size=18]வசியக்காரி... பகுதி-4
காதல்
ஒருதடவைதான்
வருமென்று யார் சொன்னது...?
கவிதரும் கல்யாணியே...
உன்னைக்காணும்போதெல்லாம்
புதுப்புதுக் காதல்
மலர்ந்துனொண்டே இருக்கிறது
எனக்குள்...!!!
அதோ...
நீ அங்கு
துள்ளி துள்ளி
விழையாடித் திரிகிறாய்
என் மரத்துப்போன
மனப்பாறையில்
அலைவந்து
மோதி மோதிச் செல்கிறது..!
என்
இதயத்தைக் காணவில்லை
பதட்டத்தோடு
தேடிக்கொண்டிருக்கிறேன்...!
அதோ...
அந்த மைதானத்தில்
நீ அதை
உருட்டி உருட்டி
கால்பந்து....
விழையாடிக்கொண்டிருக்கிறாய்...!
திருமுகத்தில்
பொறிபறக்கும்
திமிர்பிடித்த தீயே....
உன்
ஆணவத்தையும்
அகங்காரத்தையும்
தீக்கிரையாக்கு...!
இருண்டுபோன என்
இதயத்தில் வந்து
தீபமொன்றை ஏற்று...!!!
இப்போதெல்லாம்
தேய்பிறை
அடிக்கடி வருகிறது...!
எல்லாம் உன்னால்த்தான்
நீ
என்னைப் பார்ப்பதுபோல்...
வெறுப்புடனே
வானத்தையும் பார்த்திருப்பாய்
அதனால்த்தான்
வெண்ணிலவில் பாதியை
ஏதோ
விழுங்கிக்கொள்கிறது...!
உன்
வெறுப்புக்களை எல்லாம்
ஒரே பார்வையில்
காட்டுகிறாய்...!
அதில்
எரித்துவிட விரும்புவது
என்னையா...?
என் காதலையா...?
என் உணர்வுகளை
உதறிவிட்டாய்...!
உன் மனச்சாட்சியை
மண்ணுக்குள்
புதைத்துவிட்டாய்
உண்மை
அது ஒருநாளும்
உறங்காது உயிரே...!
ஒரு நாள்...
உன் கதவைத்தட்டி
கேள்வி கேட்கும்...!
பதில் சொல்லத்
தயாராய் இரு...!!!
கண்ணுக்குள்
கத்திவைத்துக்கொண்டு
என் கண்முன்னே நடமாடும்
நாகரீகமான
கொலைகாறி நீ...!
இன்னும்
எத்தனை தடவை
இதயத்தில்...
குத்துவதாய் ஏற்பாடு...?
சிந்தையை
சிறகடிக்கவைத்த
சின்னமேனியே...
ஆசையை
அலைபாயவைத்த
அல்லிராணியே...
இதயத்தை
இருதுண்டாய்பிழந்த
படுபாவியே...
போய்விடு என்
இதயத்தை விட்டு
சீ............
வேண்டாம் காதல்..!
என் கைகளுக்கு
எட்டவில்லை
சீச்சீ........... வேண்டாம்...!
இந்தக் க(ன்)னி புளிக்கும்...!
இப்படி...
என் உதடுகள்தான் சொல்கிறது..!
இருப்பினும்...
நெஞ்சம் கொஞ்சம் வாடுது...!
உந்தன் புகழ் பாடிக்கொண்டே
கண்கள் உன்னைத்தேடுதே...!!!
அகங்கார அனல்வீசும்
மாய மனிஷியே...
உன்னை அடக்கவென்றுதான்
ஆவேசமாக வந்தேன்
உன் சிரிப்பில் மயங்கி
கன்னக்குளி கிடங்கில்
விழுந்து மரித்துவிட்டது...
என் ஆத்திரம் ...!
(இன்னும் வரும்...)
த.சரீஷ்
09.12.2003 (பாரீஸ்)
|
|
|
|