Yarl Forum
oh our INDIA ??!! - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: சிந்தனைக் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=7)
+--- Forum: அரசியல் / பொருளாதாரம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=36)
+--- Thread: oh our INDIA ??!! (/showthread.php?tid=7675)

Pages: 1 2 3 4 5


oh our INDIA ??!! - anpagam - 12-13-2003

சுதந்திரன் பார்வையில்...
இந்தியா மனமாற்றம் பெறுமா?!


மகாத்மா காந்தியைச் சுட்டவர்களுக்கும், இந்திரா காந்தியைச் சுட்டவர்களுக்கும், ராஜீவ் காந்தியைப் பகிரங்கமாகக் கொல்ல முயன்ற சிங்களச் சிப்பாய்க்கும் மன்னிப்பு வழங்கிய இந்திய அரசு, இதுவரை ஊர்ஜிதம் செய்யப்படாத ராஜீவ் காந்தி கொலையில் மட்டும், விடுதலைப் புலிகளை மன்னிக்க மறுப்பது எதற்காக? என்ற ஒரு தெளிவான நேரடிக் கேள்வியை முன்வைத்து, பதிலை ஆராய்ந்தால், இந்தியாவின் புறக்கணிப்புக்கு ராஜீவ் காந்தியின் கொலை நிச்சயமாக அடிப்படைக் காரணமல்ல என்பது உள்ளங்கை நெல்லிக்கனியாகப் புரிந்து விடுகிறது.

ஈழப்பிரச்சனை தீர்வதனால் இந்தியா நன்மையடையுமா?

ஈழத்தமிழ் அகதிகளுக்கு இந்திய அரசு வருடாவருடம் பெருந்தொகைப் பணத்தை பல தேவைகளுக்காகவும் செலவிடுவதனால், ஈழப்பிரச்சனை தீர்வதனால், இந்தியாவின் அநாவசியச் செலவு மீதப்படுத்தப்படுகிறது.

இலங்கையில் போர் நடைபெறும் காலத்தில், இந்தியக் கடல் எல்லையில் இரட்டிப்புப் பாதுகாப்பு தேவைப்படுகிறது என்று இந்திய பாதுகாப்பு அதிகாரி சொன்னதை வைத்துப் பார்த்தால், இலங்கையில் அமைதி நிலவுவது கடல் எல்லைப் பாதுகாப்பை இலகுவாக்குகிறது.

ஆசிய பிராந்திய நாடுகளின் உள்நாட்டுப் பிரச்சனைகள் மோசமாக இல்லாதவிடத்து, இந்தியா தனது உள்நாட்டு வெளிநாட்டுப் பிரச்சனைகளில் அதிக கவனத்தைச் செலுத்த வாய்ப்பிருப்பதால், மத்திய அமைச்சரவையிலும் ஒரு சாதக நிலையே தெரிகிறது.

ஈழத்தமிழரின் பிரச்சனையைத் தீர்த்து வைப்பதற்கு இந்தியத் தமிழர்கள் ஆதரவு தர மறுக்கிறார்களா என்று பார்த்தால், அதற்கு முற்றிலும் மாறாக, ஈழத்தவர் இழுபறிகள் தீர்வதற்காக தமிழ்நாட்டு மக்கள் வலுவாகக் குரல் கொடுப்பதுடன், பல முக்கியத் தலைவர்களும் சிறையில் அடைபட்டும் அஞ்சாது ஆதரவு தருகிறார்கள்.

இலங்கையில் வாழும் இந்தியத் தமிழர்கள் (மலையகத் தமிழர்கள்) ஈழத் தமிழர் பிரச்சனை தீருவதை வெறுக்கிறார்களா என்று பார்த்தால், அங்கிருந்து ஏகோபித்த ஆதரவு கிடைப்பதுடன், தமிழர் பிரதிநிதிகளுடன் இணைந்து செயற்படவே அவர்கள் பகிரங்கமாக ஆர்வம் காட்டுகிறார்கள்.

உள்நாட்டுப் பிரச்சனைகள் பேசித் தீர்த்துக் கொள்ளப்படுவதற்கு இந்தியா என்றுமே ஆதரவு தந்ததில்லை என்று வாதாடவும் வாய்ப்பில்லை. பங்களாதேஷ், காஷ்மீர், பஞ்சாப், பாக்கிஸ்தான் என்று அத்தனை புூதாகாரப் பிரச்சனைகளும் பேச்சுவார்த்தை மூலம் தீர்க்கப்படுவதை இந்திய அரசு ஆதரித்தே வந்திருக்கிறது, வருகிறது.

கடந்த காலத்தில், விடுதலைப் புலிகள் தனிநாட்டுக் கோரிக்கையை முன்வைத்ததனால், ஒரு தனிநாட்டுப் பிரிவினையை இந்தியா ஆதரிக்கவில்லை என்று வைத்துக் கொண்டாலும், தற்போது ஒரு நாட்டிற்குள் சமஷ்டித் தீர்வை ஆராயும் வேளையில் இந்தியாவின் இந்த வாதம் ஒவ்வாமற் போகிறது.

இலங்கைப் பிரச்சனை உக்கிரமடைவதால் இந்திய எல்லைப் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் நேரும் என்ற வாதத்தை ஏற்கலாம், ஆனால் இலங்கைப் பிரச்சனை தீர்வதால் இந்தியப் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் நேரும் என்பதை நியாயப்படுத்த எந்த வாதமும் இடம்கொடுக்கப் போவதில்லை.

ஈழத்தமிழர்கள் இந்திய அரசிடமிருந்தோ, மாநிலங்களிலிருந்தோ ஒரு சிறு நிலப்பரப்பையோ, கடற்பரப்பையோ, பணத்தொகையையோ, படைப்பலத்தையோ, பாதுகாப்பையோ, மக்களையோ, உரிமைகளையோ, ஒப்பந்தங்களையோ, கண்காணிப்பையோ, காவலையோ எதையுமே முன்நிபந்தனையாகக் கேட்கவில்லை, பின்நிபந்தனையாக வைத்திருக்கவும் இல்லை, அத்தகைய தேவைகளும் இருப்பதாகத் தெரியவில்லை.

இலங்கை அரசையோ விடுதலைப் புலிகளையோ இந்தியா நம்பவில்லை என்ற ஒரு காரணத்தை முன்வைத்தாலும், இம்முறை மூன்றாந்தரப்பின் வலுவான பின்புலம் இருப்பதுடன், அமெரிக்கா, ஜப்பான், பிரித்தானியா, கனடா போன்ற வலுவான பல மேற்குலக நாடுகள் வெளிப்படையாக ஆதரவு தருவதனால், இந்தியா அவ்வளவு சுலபமாக ஏமாற்றப்படும் நாடாக மாறிவிட வாய்ப்பில்லை.

பங்களாதேஷ் என்ற ஒரு சிறிய நாட்டிற்கு விடுதலை கொடுத்ததால், இந்தியா என்ற ஒரு வல்லசுக்கு ஆபத்தோ அச்சுறுத்தலோ வந்ததா என்று ஆராய்ந்தால், அதற்கும் இல்லை என்றே விடை கிடைக்கிறது.

ஏன் இந்தக் காழ்ப்புணர்வு?

பால் பொங்கி வரும்போது தாளி உடையப்போகிறதே, காப்பாற்ற மாட்டீர்களா என்று ஈழத் தமிழர்கள், புலம்பெயர் ஈழத்தமிழர்கள், இந்தியாவில் அகதிகளாக வாழும் ஈழத்தமிழர்கள், மலையகத் தமிழர்கள் இப்படி அனைவருடனும், விடுதலைப் புலிகளின் தலைமையும் இந்தியாவின் தலையீட்டையும் ஒத்துழைப்பையும் தொடர்ச்சியாக வலியுறுத்திவர, இந்தியா மட்டும் பாராமுகம் காட்டுவதன் மர்மம் என்னவென்று யாருக்கும் புரியவில்லை.

இதைவிட ஒருபடி மேலே சென்று, இலங்கை இராணுவத்திற்குப் பயிற்சி, இராணுவ முகாம்களும் தளபாடங்களும் புதிப்பிக்க உதவிகள், இருநாட்டுத் தளபதிகளின் சிறப்புச் சந்திப்புக்கள், இராணுவ ஆலோசனைப் பரிமாற்றங்கள், முப்படைத் தளபதி பலகல்லவின் தலைமையில் உயர்மட்ட இராணுவக் குழுவின் இந்தியப் பயணம், இக்குழுவில் துப்பறியும் இராணுவப் பிரிவின் தலைமை பிரிகேடியர் கபில கெந்தவதான உள்ளடக்கப்பட்டிருப்பது என்று இந்தியாவின் ஒவ்வொரு அசைவும் ஈழத் தமிழர்களுக்கு எதிராகவே எடுத்து வைக்கப்படுகிறது.

ஒன்றுபட்டு இயங்கி வந்த தமிழர் தேசிய கூட்டமைப்பையும் பலமான அரசியல் ராஜதந்திரத்தின் மூலம் பிரித்து உடைத்து, இந்தியாவுக்கே உரித்தான உட்கட்சிப் புூசலைக் கிழப்பும் பண்பிலும் இந்தியா வெற்றி கண்டிருக்கிறது.

விடுதலைப் புலிகளின் நடமாட்டத்தை இந்தியாவின் அத்தனை மாநிலங்களிலும் கறாராகத் தடைசெய்து ஒதுக்கிவரும் இந்தியா, ஈழத்தமிழரைக் காக்க மறந்து ஓடித்தப்பிய ஏனைய தலையாட்டிக் குழுக்களுக்கெல்லாம் பாதுகாப்பும் தங்குமிட வசதிகளும் வழங்குவதுடன், நாடு முழுவதும் சுதந்திரமாகப் பயணிப்பதை அனுமதிக்கிறது. அண்மையில் ஈபிடிபி உறுப்பினர் ஒருவர் தமிழ்நாட்டின் அகதிமுகாமிலிருந்து சிலரை அழைத்துவந்து, ஊர்காவற்றுறையில் அவர்கள் அமைத்துள்ள பயிற்சி முகாமில் பயிற்சிக்குச் சேர்த்து வந்துள்ளதை சர்வதேச ஊடகங்கள் சுட்டிக் காட்டியுள்ளன. இந்தியா இதுகுறித்து ஆராயவோ கருத்துக் கூறவோ மறுத்து விட்டது.

ஜெயலலிதா துஷ்பிரயோகம் செய்யும் பொடாச் சட்டம்

ராஜீவ் காந்தியின் கொலைக்கு முன்னர், இந்திய அரசும் தமிழ்நாடு அரசும் இந்திய மக்களும் விடுதலைப் புலிகளுக்கு ஆதரவு தந்தபோது, அதே ஆதரவை வழங்கியவர்களில், தனக்கு எதிரானவர்களைப் பழிவாங்க ஜெயலலிதா பொடா சட்டத்தை துஷ்பிரயோகம் செய்தும், புதுடில்லி கண்மூடியே காட்சி தருகிறது. ஒரு வைகோவோ நெடுமாறனோ சுபவீரபாண்டியனோ மட்டுமல்ல, இன்னும் எத்தனையோ ஆயிரம் பிரபலங்கள் விடுதலைப் புலிகளை ஆதரித்து எத்தனையோ மேடைகளில் குரல்கொடுத்திருந்தும், ஜெயலலிதா தனது எதிரிகளை மட்டுமே பழிவாங்கியிருப்பது, இந்திய அரசுக்கு மிகக் கேவலமான ஒரு பெயரையே பெற்றுக் கொடுத்திருக்கிறது.

அந்தக் காலகட்டங்களில், எதிர்க்கட்சித் தலைவியாக இருந்த ஜெயலலிதாகூட, விடுதலைப் புலிகளை ஆதரித்துத்தான் மேடைகளில் முழங்கி வந்தார் என்பதை அவரது உரையின் ஒலிநாடாக்களைக் கேட்டு அறிந்து கொள்ள, பொடா வழக்கை ஆராயும் நீதிபதிகளுக்கு எத்தனை மணித்துளிகள் தேவைப்படப் போகிறது?!

இந்தியா மனம் வைக்குமா?

ஆக, ஈழத்தமிழர்கள் விடுதலைபெற்று வாழ்வதற்கான பரிநாண் கயிற்றைத் தன்கையில் வைத்திருக்கும் இந்தியா, மனம் வைத்தால் நிட்சயம் இலங்கைப் பிரச்சனையில் தனது கொள்கையை சற்றே இறக்கிக் கொள்ளலாம்.

இலங்கைத் தலைமையில் பெரும் அரசியற் குழப்பம் ஏற்பட்டிருப்பதுடன், நிரந்தர சமாதானம் உருவாகக்கூடிய இறுதி வாய்ப்புக்கும் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ள நிலையில், விடுதலைப் புலிகளின் மதியுரைஞரும் ஆலோசகருமான கலாநிதி அன்ரன் பாலசிங்கத்தின் நேரடியான அழைப்பை ஒரு கௌரவ வரவேற்பாகக் கருதி, வீசப்பட்டுள்ள துருப்பைக் கெட்டியாகப் பிடித்து இந்தியா நேரடியாகத் தலையிட வேண்டுமென்பதே அனைவரதும் எதிர்பார்ப்பாக விரிந்து கிடக்கிறது.

ரணில்-சந்திரிகா-விடுதலைப் புலிகள்-இந்தியா என்ற நாற்கோணச் சந்திப்பொன்றை, நோர்வே-ஜப்பான் மத்தியஸ்தத்தில் அமைத்துக்கொடுத்து, இலங்கை என்ற நாட்டிற்கு ஓர் நிரந்தரத் தீர்வை வழங்க இந்தியா முன்வருமா?

இந்த உலக வரலாறு படைக்கக்கூடிய சந்திப்பை, ஈழத்தமிழர்கள் என்றுமே மறக்கமுடியாத திம்பு நகரில் அமைத்துக் கொடுத்து இந்தியா தன் நீண்டகாலக் கறைகளைக் கழுவிக் கொள்ளுமா??

சமன்செய்து சீர்தூக்குங் கோல்போல் அமைந்தொருபாற்
கோடாமை சான்றோர்க் கணி. (குறள்: 12.8 )


நன்றி: கனடா சுதந்திரன் 11-12-03 & தமிழ்நாதம்.


- anpagam - 12-14-2003

இந்திய உறவு: புதிய பாணியிலான இராஜதந்திர நகர்வு
சுதர்மா - கனடா


இந்தியாவுடனான உறவுப் புதுப்பித்தலுக்கு தமிழர் தரப்பு வேண்டுகோள் விடுத்திருக்கும் இன்றைய கால கட்டத்தில், இந்திய மத்திய அரசானது தமிழர் தரப்பிற்கு எதிரானவர்களால் இரண்டு வகையான அழுத்தங்களைப் பெறுகிறது. தமிழர் தரப்புடனான பொருதுதலை ஏற்படுத்து முகமாக, திருமலை பற்றி வலிந்து மேற்கொள்ளப்படும் பிரச்சாரம் சிறீலங்கா சார்ந்த தரப்பால் முன்னெடுத்துச் செல்லப்பட, இந்திய மீனவர்கள் கைது செய்யப்படுவது குறித்த விவகாரம் இந்தியாவிலுள்ள தமிழின எதிர்ப்பாளர்களால் முன்னெடுத்துச் செல்லப்படுகின்றன.

தமிழீழக் கடற்பரப்பில் மீன்;பிடியில் ஈடுபட்டதோடு மீனவர்களின் வலைகளையும் அறுத்தெறியும் செயற்பாடுகளில் ஈடுபட்டிருந்த 32 மீனவர்கள் அப்பகுதி மீனவர்களால் கைது செய்யப்பட்டனர். குறிப்பிட்ட மேற்படி மீனவர்கள் விடுதலையானவுடன், தாங்கள் விடுதலைப் புலிகளின் தலையீட்டாலே விடுதலையானதாக இந்திய கரையோர பாதுகாப்பு அதிகாரிகளுக்குத் தெரிவித்துள்ளனர். ஆனால் தமிழக முதல்வர் செல்வி ஜெயலலிதாவோ, மீனவர்களைக் கைது செய்த விடுதலைப் புலிகளை இந்திய அரசு கண்டிக்க வேண்டும் என்று மத்திய அரசைக் கோரியுள்ளார்.

அதுபோன்றே, கொழும்பில் சந்திரிகா சார்ந்தவர்களால் ஏற்பாடு செய்யப்பட்ட 'இலங்கை இந்திய இராஜதந்திரப் பேச்சுகள்" என்ற கருத்தரங்கில் உரையாற்றிய முன்னைநாள் இந்திய வெளியுறவுச் செயலர் ராஜ் சோத்ரா மற்றும் இந்திய பாதுகாப்பு சபையின் முன்னாள் உறுப்பினரான பேராசிரியர் எஸ்.டி. முனி ஆகியோர் தமிழர் தரப்பின் கடற்படை பற்றிய எச்சரிக்கையை வெளிப்படுத்தியதுடன், இந்திய மீனவர்களைக் கைது செய்வது போன்ற செயல்களின் மூலம் இந்திய அரசைக் கோபமடைய வைக்கும் செயற்பாடுகளில் ஈடுபடக்கூடாது என்ற தொனியில் எச்சரித்துள்ளனர்.


இன்றுவரை தமிழகத்தைச் சேர்ந்த சுமார் 200 மீனவர்கள் சிறீலங்காக் கடற்படையால் கொல்லப்பட்டது பற்றி எந்தவித உணர்வையும் வெளிப்படுத்தாத மேற்படி நபர்கள் இந்தியாவின் சார்பாக பேசும் அதிகாரத்தை கொண்டிராதவர்கள் என்பதோடு, சிறீலங்காவின் இனவாத தலைமைக்குச் சார்பானவர்கள். இப்போது இவர்களால் விவகாரமாக்கப்பட்டுள்ள மீனவர்களோ தமது விவகாரத்தில் தலையிட்டு தாம் விடுதலையடைய வழிவகுத்ததிற்காக தமிழர் தரப்பிற்கு நன்றி தெரிவிக்க, இவர்களோ எந்தவித உண்மையுமற்ற கருத்து வெளிப்பாடுகளை மேற்கொண்டுள்ளனர்.

எனவே இவ்விவகாரம் மிகவும் திட்டமிட்டே பெரிதுபடுத்தப்படுகிறது என்ற உண்மையை உள்வாங்கியதாகவே தமிழர் தரப்பின் இந்திய உறவு புதுப்பித்தல் மற்றும் வெளிவிவகாரக் கொள்கையில் மாற்றம் தொடர்பான கோரிக்கை என்பன வெளிப்படுத்துகின்றன. இலங்கையின் இனப்பிரச்சினையில் தற்போது இந்தியாவின் பங்கிற்கான சாத்தியம் இல்லையாயினும், சிறீலங்காவின் கருத்துக்களை இந்தியா எழுந்தமானமாக உள்வாங்கக்கூடாது என்பதற்கான எச்சரிக்கையாகவே இப்போதைய தமிழர் தரப்பின் வேண்டுகோள் அமைந்துள்ளது.

சிறீலங்காவின் தற்போதைய அணுகுமுறையைப் பற்றிய ~உண்மைமுகம்| ஆகஸ்ட் மாதம் 16ம் திகதி டில்லியில் வைத்து கதிர்காமரால் வெளியிடப்பட்டது. ரணில் சார்ந்த ஐக்கிய தேசிய முன்னணியும் இதே பாணியிலான பிரச்சாரத்தை முன்னெடுத்துச் சென்றாலும், அதனை நேரடியாகவே வெளிப்படுத்தியது சந்திரிகா தரப்பே. குறிப்பாக ஜப்பான் சமாதான நடவடிக்கையில் தீவிரமாகப் பங்களிப்பதை இந்தியா விரும்பவில்லையென்று தெரிவித்த கதிர்காமர், தமிழர் தரப்பின் செயற்பாடுகள் குறித்து தான் இந்தியாவிற்கு எடுத்துக் கூறியதாகவும், இந்த ஆபத்துக் குறித்து இந்தியா இப்போது விழிப்படைந்திருக்குமென்றும் கூறியிருந்தார்.

அத்தோடு, பாக்கு நீரிணையில் இந்திய-இலங்கைக் கடற்படைகளுக்கு போட்டியாக புலிகளின் கடற்புலிகளையும் அனுமதிப்பதிலுள்ள ஆபத்தை இந்தியக் கடற்படை நன்றாக உணர்ந்திருந்தாலும், இந்தியாவின் அரசியல் தலைமைப் பீடத்திற்கு நிலைமையின் தார்ப்பரியம் சென்றடைய நீண்ட காலம் செல்லும் என்ற காரணத்தால், இந்த ஆபத்தான நிலையை புதுடில்லியின் அரசியல் தலைமைக்கு எடுத்துக் கூறவே தனது டில்லிக்கான பயணம் எனத் தெரிவித்ததோடு, இது தொடர்பாக தான் வழங்கிய விளக்கத்தை இந்திய தரப்பினர் விளங்கியுள்ளனர் எனத் தெரிவித்திருந்தார்.

இதற்கும் மேலாக, இனப்பிரச்சினைக்கு சட்ட ரீதியில் எந்த வகையான தீர்வுகள் காண முடியும் என்பது பற்றி இந்தியா தீவிரமாகச் சிந்திக்க வேண்டும் என்றும், இல்லாவிட்டால், இலங்கையில் புதிய நாடொன்று உருவாவதை இந்தியா பார்க்க நேரும் என்றும் தெரிவித்ததோடு, புலிகள் இந்தியாவைப் பற்றி பெரிதும் கவலைப்படுகிறார்கள் என்பது வெளிப்படையான உண்மை. இந்தியாவுடன் நட்புடன் இருக்க பிரபாகரன் விரும்புவதாக கூட நான் கேள்விப் பட்டேன். அதனால்தான் கடந்த கால தவறுகளில் இருந்து விடுபட வேண்டும் என புலிகள் விரும்புகின்றனர் என ஊகம் தெரிவித்திருந்தார் கதிர்காமர்.

கதிர்காமரின் இக்கூற்றில் இந்தியாவை மீண்டும் நுழைய வைப்பதற்கான அம்சங்களே முற்றாக அடங்கியிருந்தன. அதுகூட சிங்களம் சார்ந்த ஒரு தரப்பாக இந்தியா உள்நுழைய வேண்டும் என்பதற்கான தரவுகளைத் தன்னகத்தே கொண்டதாகவும், ஜப்பான், நோர்வேயின் பங்காற்றுகையைக் குறைத்து இந்தியாவின் கைகளில் இனப்பிரச்சினை மீண்டும் பாரப்படுத்தப்பட வேண்டும் என்பதாகவும் அது அமைந்திருந்தது. அதனைத் தொடர்ந்து சர்வதேச அக்கைறையை பலவீனப்படுத்தும் நடவடிக்கைகளில் சிறீலங்கா அரசும், அதுசார் இந்திய விசுவாசிகளும் இறங்கியுள்ளனர்.


இதனைத் இந்தியத் தரப்பிற்குத் தெளிவுபடுத்துவதாகவே 'இந்தியாவையும், புலிகளையும் முரண்பட வைப்பதற்கு சிங்கள மக்கள் மத்தியில் உள்ள இனவாத சக்திகள் விரும்புவதாகவும,; அந்தத் தூண்டுதலுக்கு இந்திய அரசு இரையாகக்கூடாது என்றும், இலங்கைப் பிரச்சினையில் இந்தியா முக்கிய பங்களிப்பினை வழங்குவதாயின் புலிகளுடன் நட்புறவை வளர்த்துக் கொள்வதுடன் புதிய அணுகுமுறையையும் கைக்கொள்ள வேண்டும்" என்றும் விடுதலைப் புலிகளின் அரசியல் ஆலோசகர் அன்ரன் பாலசிங்கம் அவர்கள் விடுத்த வேண்டுகோள் அமைந்திருந்தது.

2000ம் ஆண்டின் பின்னான இந்தியச் செயற்பாடுகள் மென்மைப் போக்குடையதாக இருந்தன. குறிப்பாக 2001 யுூன் மாதம் சிறீலங்கா விமானப்படை மேற்கொண்ட குண்டுவீச்சுக்களைக் கண்டித்து அறிக்கை வெளியிட்டிருந்தது. இந்திய -ஈழப் போரின் பின்னான புதிய நகர்வாக இது இருந்தது. அதுபோலவே அதன் தொடர்ச்சியாக யுூலை மாதம் கட்டுநாயக்கா விமானப்படைத்தளம் தமிழர் தரப்பால் தாக்கியழிக்கப்பட்ட போது, கண்டனம் தெரிவிக்கும் பாங்கு இல்லாமல், மிகவும் அவதானமான வார்த்தைப் பிரயோகங்களையே இந்தியா தனது அறிக்கையில் மேற்கொண்டிருந்தது.

அதுபோன்றே 2002ன் ஆரம்பத்தில் நோர்வேயின் சமாதான முயற்சிகளில் மற்றும் நிதி வழங்கும் மாநாட்டில் இந்தியா பங்களிப்பை மேற்கொள்ளும் என வெளியுறவுச் செயலர் கென்வால் சிபால் தெரிவித்திருந்தார். எனினும் தமிழர் தரப்பின் அரசியல் ஆலோசகரின் தமிழீழப் பயணத்திற்கு தென்னிந்தியாவைப் பயன்படுத்த அனுமதிக்க மறுத்தமை, பல்கட்சி அரசியல் பிரசன்னம், மனிதவுரிமை பேணல் போன்ற அறிவுறுத்தல்களை வெளிப்படுத்தியதோடு இந்தியா பேச்சுக்களின் போக்கில் தலையிடும் ஒரு சக்தியாக இல்லாமல் தானாகவே ஒதுங்கிக் கொண்டது.

குறிப்பாக, தாங்கள் மீண்டும் காவு கொடுக்கப்படாமல் இருப்பதற்கான வழிவகைகளையே இக் காலகட்டத்தில் இந்தியா கையாண்டது. எனினும் இப்பிராந்தியத்திலான சர்வதேசத்தின் பிரசன்னமும் தமிழீழ நிலழரசு அங்கீகாரம் பெறும் தன்மையும் இந்தியப் போக்கில் இப்போது மாற்றத்தை ஏற்படுத்த முனைகின்றன. குறிப்பாக கடற்புலிகளின் வளர்ச்சி பற்றிய அதிகளவு பயத்தை வாங்கிய தரப்பாக இந்தியா மாற்றப்பட்டுள்ளது என்பதை, ஒரு நாட்டிற்குள் இரண்டு கடற்படைகள் கூடாது என்று இந்தியப் பாதுகாப்பமைச்சர் கூறியுள்ளது எடுத்தியம்புகிறது.

அதுதவிர இந்திய அரசு ஒன்றுபட்ட இலங்கைக்குள் தமிழர்களின் பிரச்சினைக்கான நிரந்தரத் தீர்வு காண வேண்டும் என்பதை வலியுறுத்துவதை ஒருபுறமாகவும் பாதுகாப்புத்துறை, கடற்கண்காணிப்பு சார் உதவிகள், பேச்சுத் தரப்புகளிற்கான மறைமுக அழுத்தங்கள், எதிரணிகளிற்கான ஆதரவு, பிராந்திய நலன்பேண் செயற்பாடுகள் போன்றவற்றை மேற்கொள்வதை இன்னொரு புறமாகவும் மேற்கொள்ளும் சாத்தியத்தைப் பெற்றுள்ளதொரு நிலையிலேயே தமிழர் தரப்பின் மீள்பரிசீலனைக்கான வேண்டுகோள் முன்வைக்கப்பட்டுள்ளது.

ஏனெனில் இந்தியா முன்னரைப் போல இலங்கைத் தீவு தொடர்பான பிரச்சினையில் நேரடித் தலையீட்டை இப்போது விரும்பவில்லை. தமது நாட்டின் பாதுகாப்புத் தேவைகளிற்கு படைபலம் தேவையாக உள்ளது என்பதற்காக ஈராக்கியப் போருக்கு துருப்புக்களை வழங்க முன்வராத இந்தியா, இலங்கைத் தீவில் மீண்டும் போர் ஏற்பட்டாலும் இராணுவ ரீதியாகத் தலையிடும் எண்ணத்தை நியாயப்படுத்த முடியாத ஒரு தரப்பாகவே உள்ளது. எனவே பேச்சுக்களின் போதான சர்வதேசத்தின் பங்காற்றலைக் குறைப்பதற்கான செயற்பாடுகளே அதற்கான எஞ்சியுள்ள தெரிவு.

பல்வேறுபட்ட தெரிவுகளைப் பரிசீலனை செய்ய வேண்டியதொரு நிலையில் இந்தியா உள்ளதொரு காலகட்டத்திலேயே தமிழர் தரப்பின் இந்தியாவிற்கான வேண்டுகோள் வெளிப்பட்டிருக்கிறது. மத்திய அரசு தனது நிலைப்பாடு பற்றி அறிவிக்கும் சாத்தியக்கூறுகள் எதுவும் தற்போது இல்லாததொரு நிலையில், இரண்டாந்தர இராஜதந்திரிகளின் கருத்து வெளிப்பாடுகளையும், பரப்புரைகளையும் நாம் கவனத்திலெடுக்க முடியாது. ஆனால் இந்தியாவிற்கு தமிழர் தரப்பின் செய்தி, நிலைப்பாடு என்பன தகுந்ததொரு காலத்தில் தெளிவாகக்கப்பட்டிருக்கிறது.

நன்றி: தமிழ்நாதம்.


- aathipan - 12-20-2003

இந்தியா ஒரு சுயநலம் கொண்ட நாடு. எப்பவும் அது எங்கள் தமிழர்மேல் இரக்கம் கொள்ளாது. சிங்களவர்கள் தந்திரமாக எங்கள்மேலே உள்ள வெறுப்பு குறையாமல் இருக்கும்படி பார்த்துக்கொள்கிறார்கள். நாங்களும் எதாவது தந்திரம் செய்து அதன் வெறுப்பை இலங்கை அரசுமேலும் பௌத்த மதவாதிகள் மேலும் மாற்றவேண்டும். சிங்களவரின் நடவடிக்கைகள் இந்தியாவிற்கு எதிராக உள்ளது என்ற உண்மையைக் காட்டவேண்டும். எமது கரங்கள் இந்தியாவைநோக்கி நட்புடன் நீண்டாலும் அதை ஏற்று நட்புக்கரம் நீட்ட இந்தியாவால் முடியாது ஏன் என்றால் அதன் கையை இறுக்கமாக சிங்கள அரசியல் வாதிகள் பிடித்துக்கொண்டுள்ளனர். அடிக்கடி அவர்கள் இங்கு வந்து மந்திரம் போட்டு வைத்துள்ளனர். எமது பொதுவான தலைவர்கள் அடிக்கடி இந்தியா வந்து எமது நிலையைச்சொல்லவேண்டும். அப்படிப்பேச தலைவர்கள் உள்ளார்களா? தெரியவில்லை. இருந்தாலும் ஏதாவது முயற்சிகள் செய்யவேண்டும். சிங்களவர்களுடனான அதன் நட்பைக்குறைத்தாலேபோதும். மேற்கொண்டு எந்தவிதமான இராணுவ ஒப்பந்தங்களையும் இலங்கை அரசுடன் மேற்கொள்ளாமல் அது தவிர்த்தாலே வெற்றிதான். எமது தரப்பில் ஒரு தூதுவர் இல்லை. நோர்வே எந்தளவு இதில் ஈடுபடுத்தப்படுகிறது என்று தெரியவில்லை.


- Kanakkayanaar - 12-20-2003

தனித்தமிழீழம் ஏன் தில்லியின் நலத்திற்கு, ஊறு செய்யுமென அவர்கள் ஏன் எண்ணுகிறார்கள் என்று விளங்கவில்லை.
நான் படித்த செய்தி, ஆய்வு, கருத்து என்பவை வைத்து எனக்கு தோன்றுவது யாதெனில், தில்லி இலங்கைத் தீவில் அமைதி நிலவுவதை விழையவில்லை. (அதுத் தனித் தமிழீழம் என்றலும் சரி, சிங்களவர் ஆதிக்கதுக்கு உள்ளான ஒன்றுபட்ட நாடென்றாலும் சரி) அவர்கள் விழைவதெல்லாம், 'மெல்லவும் முடியாது, விழுங்கவும் முடியாது' எனும் சூழ்நிலையின் நீடிப்பையே. இதனால் அவர்களுக்கு ஒரு போட்டியாளர் குறையும், பிற நாடுகள் இலங்கயை தெற்காசியாவின் நுழை வாயிலாகப் பயன் படுத்துவதைக் கட்டுக்குள் வைத்துக் கொள்ளலாம். ஆயுத விற்பனை பிற பொருண்மிய ஆதாயம் வரும், தமிழகத்தில் இருக்கும் தமிழின உணர்வை மட்டுப் படுத்தலாம். ஏதோ ஒரு சாராரைப் பயன் படுத்தி இலங்கை அரசியல் தன் தலையீட்டை வைத்துக் கொள்ளலாம் போன்ற நலன்கள் தில்லிக்கு கிடிஅக்கும்.


- anpagam - 12-20-2003

<b>இந்தியா எம் மக்களை கைவிடுமாயின்
நாம் இந்தியாவைக் கைவிடுவோம்
அமைச்சர் சந்திரசேகரன் தெரிவிப்பு </b>
Idea 8) Arrow
இலங்கை இனப்பிரச்சினை என் பது விடுதலைப் புலிகளுடைய பிரச் சினை மட்டுமல்ல் இலங்கையில் வாழுகின்ற 35 லட்சம் தமிழ் மக்களு டைய பிரச்சினை. ஆகவே, யாரோ ஒருவரை நினைத்துக்கொண்டு இந் தியா எம்மைக் கைவிட்டுவிட முடி யாது. அப்படி இந்தியா எம்மைக் கை விட்டால் நாம் இந்தியாவைக் கைவிட வேண்டிவரும்.
- இப்படித் தெரிவித்தார் மலை யகமக்கள் முன்னணித் தலைவரும் சமூக அபிவிருத்தி அமைச்சருமான பெ.சந்திரசேகரன்.
நாடாளுமன்ற உறுப்பினர் அ.விநா யகமூர்த்தியின் சேவை நலன் பாராட்டுவிழா நேற்று யாழ்ப்பாணத்தில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றுகையிலேயே அவர் இப்படிக் கூறினார்.
இந்த நிகழ்ச்சிகள் நேற்று மாலை 4 மணியளவில் யாழ். வீரசிங்கம் மண்டபத்தில் நடைபெற்றன.
அவர் அங்கு மேலும் தெரிவித் ததாவது:-
இங்குள்ள தமிழர்களுக்கு ஓர் ஆபத்து என்றால், அவர்களுக்காகக் குரல் கொடுப்பதற்காக மலையகத் தில் 15 லட்சம் தமிழர்கள் இருக்கி றார்கள். அதேபோல் எங்களுக்கு ஒரு ஆபத்து என்றால் நீங்கள் குரல் எழுப்பவேண்டும்.
இது புலிகளின் பிரச்சினை அல்ல் இலங்கையில் உள்ள அனைத்துத் தமிழர்களினதும் பிரச்சினை என் பதை இந்தியாவுக்கு நாம் தெளி வாகச் சொல்லி இருக்கிறோம்.
தமிழ் மக்கள் அனைவரும் ஒன்று படவேண்டும். ஜே.வி.பி. என்ற அமைப் புக்கு 16 நாடாளுமன்ற ஆசனங்களைப் பெறமுடியுமென்றால், தமிழர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்தால் 40 இற்கும் அதிகமான நாடாளுமன்ற ஆச னங்களைப் பெற்றுக்கொள்ள முடியும். அவ்வாறான ஒரு நிலையில் எந்தத் தேசியக்கட்சி ஆட்சிக்கு வந்தாலும் அது எமது காலடியிலே விழவேண் டிய அவசியம் ஏற்படும்.
மலையகத் தமிழர்களும், வடக்கு - கிழக்குத் தமிழர்களும், கொழும் புத் தமிழர்களும் ஒன்றாகச் சேர்ந் தால் இலங்கையை ஆட்டிப் படைக்கக் கூடிய பலத்தை உருவாக்கலாம். அதற் கான சரியான அடித்தளத்தை நாம் இப்போதிருந்தே உருவாக்க வேண் டும். நாங்கள் ஒன்றுபடுவதில் ஏதா
வது தடை இருக்குமாக இருந்தால் அதனை இப்போதே அகற்றிவிட வேண் டும்.
- இப்படி சந்திரசேகரன் கூறினார்.
நேற்றுக்காலை விமானம் மூலம் பலாலி வந்த அமைச்சர், அங்கிருந்து யாழ். செயலகம் சென்று அரச அதி பரைச் சந்தித்து யாழ். குடா நாட் டின் நிலைமைகள் தொடர்பாகக் கலந்துரையாடினார்.
சாவகச்சேரி மற்றும் யாழ். நகரப் பகுதிகளையும் சுற்றிப்பார்வையிட்டார்.
நன்றி: உதயன்.


- anpagam - 12-26-2003

<b>சிந்தியா த(தா) இந்தியா?!</b> :roll: <!--emo&Sad--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo--> :?

(இவ் ஆய்வு 22.12.03 அன்று அவுஸ்திரேலியா மெல்பேர்ன் நகரில் ~தமிழ்க்குரல்| வானொலி நிகழ்ச்சியில் ஒலிபரப்பாகியது)



சிறிலங்காவின் அரசியல் தளத்தைப் போல் இந்தியாவின் அரசியல் தளமும் இப்போது பரபரப்பு மிகுந்த ஒன்றாக விளங்குகின்றது. இந்தியாவில் சமீபத்தில் நடந்த நான்கு மாநிலத் தேர்தல்களில் மூன்று மாநிலங்களில் பாரதிய ஜனதாக் கட்சி வெற்றி பெற்றுள்ளது. இந்த வெற்றிகளை பாரதிய ஜனதாக் கட்சியே எதிர்பார்த்திருக்கவில்லை என்பதும் ஓர் ஆச்சரியமான உண்மையாகும். அதேவேளை திராவிட முன்னேற்றக் கழகத்திற்கும், பாரதிய ஜனதாக் கட்சிக்குமிடையேயுள்ள முறுகல் நிலை மேலும் கசப்படைந்து மத்திய அமைச்சரவையிலிருந்து திராவிட முன்னேற்றக் கழகம் வெளியேறிக் கொள்கின்ற அளவிற்கு இந்த இரண்டு கட்சிகளுக்குமிடையேயான உறவு பாதிக்கப்பட்டுள்ள பரபரப்பு நிலையையும் நாம் காணக்கூடியதாக உள்ளது. எதிர்காலத்தில் இந்திய மத்திய-மாநில அரசியல் கூட்டணிகளில் மாற்றங்கள் வருமா? அரசில் நிலைப்பாடுகளில் மாற்றங்கள் வருமா? என்றெல்லாம் இப்போது பரவலாகப் பேசுவதும் ஆரம்பமாகிவிட்டது.

இந்தியாவிற்குள் எத்தகைய அரசில் மாற்றங்கள் வந்தாலும் இந்தியாவின் வெளிவிவகாரக் கொள்கைகளில் பெரிதாக மாற்றம் எதுவும் நடந்து விடுவதில்லை அரசியல் நோக்கர்கள் அறிவார்கள். பொதுவாக சகல உலக நாடுகளிலும் இதே நடைமுறைதான் கடைப்பிடிக்கப்பட்டு வருகின்றது. ஆளும் கட்சியோ அல்லது எதிர்க்கட்சியோ எது தேர்தலில் வென்று ஆட்சியைக் கைப்பற்றினாலும் அந்த அரசு தன்னுடைய நாட்டின் வெளிவிவகாரக் கொள்கைகளில், அதனது நடைமுறைகளில் அதிக மாற்றங்களைச் செய்வதில்லை. இந்த அணுகுமுறைதான் பொதுவாக சகல வெளிநாடுகளிலும் கடைப்பிடிக்கப்பட்டு வருகின்றது.

ஆனால் இந்தியாவின் வெளியுறவுக் கொள்கை ஒன்றில் முக்கியமான மாற்றம் ஒன்று வரவேண்டும் என்று விரும்புகின்ற ஓர் இனம் இந்தியாவிற்கு மிக அருகிலேயே இருக்கின்றது என்பதையும் இந்த வேளையில் நாம் சுட்டிக்காட்ட விரும்புகிறோம். பண்டைக் காலத்திலிருந்தே வரலாற்று ரீதியாக, பண்பாட்டு ரீதியாக, அரசியல் பொருளாதார ரீதியாக ஈழத்தமிழினத்திற்கும், இந்தியாவிற்கும் குறிப்பாக தென்னிந்தியாவிற்கு இடையே நெருங்கிய தொடர்பு இருந்து வந்துள்ளதை வரலாறு கூறும். பின்னாளில் ஒருங்கிணைந்த சுதந்திர இந்தியாவிற்குள் தென்னிந்தியாவும் சேர்ந்து கொண்டது உண்மையென்றாலும் அண்மைக் காலம்வரை ஈழத்தமிழினத்திற்கும், நவ இந்தியாவிற்குமிடையே நெருங்கிய நல்லுறவு இருந்தே வந்துள்ளது. திருமதி இந்திரா காந்தியின் அரசியல் பார்வை இந்த நல்லுறவின் உச்சியைத் தொடவைத்தது.

ஈழத்தமிழர்கள் குறித்த ஆனால் ஈழத்தமிழர்கள் சம்பந்தப்படாத இலங்கை-இந்திய ஒப்பந்தத்தின் பின்னால் இந்த நல்லுறவில் விரிசல் ஏற்பட்டமை ஒரு துர் அதிர்ஷ்டமான காலப்பகுதியாகும். ஈழத்தமிழினத்தின் அடிப்படைப் பிரச்சனைகளைப் புரிந்து கொள்ளாமல், அரசியல் தீர்க்க தரிசனம் இல்லாமல் அன்றைய இந்திய அரசும், அதன் வெளிவிவகார ஆலோசகர்களும் எடுத்த அவசர, அலங்கோல முடிவுகள் ஈற்றில் அனர்த்தத்தையே கொண்டு வந்தன. அன்றைய நிலையில் இப்படிப்பட்ட ஒப்பந்தம் ஒன்றை வேறு ஒரு வெளிநாடு இந்தியா மீது திணித்திருந்தால் இந்தியா எவ்வாறு தனது உரிமையையும், சுதந்திரத்தையும் காப்பாற்ற போராடியிருக்குமோ அதையேதான் ஈழத்தமிழினமும் செய்தது அதில் இருந்த நியாயத்தை விருப்பு வெறுப்பின்றிச் சிந்தித்தால் எவரும் புரிந்து கொள்ள முடியும்.

'இலங்கைப் பிரச்சனையில் இந்தியா முக்கிய பங்களிப்பை வழங்குவதானால் அதனுடைய வெளியுறவுக் கொள்கையில் மாற்றம் ஏற்பட வேண்டும்" என்று தமிழீழ விடுதலைப் புலிகளின் மதியுரைஞர் அன்ரன் பாலசிங்கம் அவர்கள் இலண்டன் நகர மாவீரர் நாள் உரையின்போது தெரிவித்துள்ளார். இது ஒரு முக்கியமான கருத்தாகும். இது குறித்து சில விடயங்களைத் தர்க்கிப்பது இவ்வேளையில் பொருத்தமானதாக இருக்கும் என்று நாம் நம்புகின்றோம்.

இந்தியாவுடனான ஆத்மார்த்தமான நட்புறவை நாடி தன்னுடைய விருப்பத்தை, வேண்டுகோளை தமிழீழத் தலைமை தொடர்ந்து தெரிவித்தே வந்துள்ளது. தன்மீது இந்திய அரசியல்-இராணுவ அழுத்தங்கள் இருந்த நேரத்திலும் சரி, அந்த அழுத்தங்களை வெற்றிகொண்ட வேளையிலும் சரி சிங்கள அரசுகளுடனான போரில் பல இராணுவ வெற்றிகளையும், அரசியல் வெற்றிகளையும் அடைந்த போதும் சரி தமிழீழத் தலைமை தன்னுடைய உள்ளக் கிடக்கையை இந்திய தேசத்தின் மீதான தன்னுடைய நட்புணர்வை வெளிப்படுத்தியே வந்துள்ளது. இது குறித்து சில சம்பவங்களைச் சுட்டிக் காட்டலாம்.

இந்திய - இலங்கை ஒப்பந்தக் கால கட்டத்தில் அதாவது சுமார் பதினாறு ஆண்டுகளுக்கு முன்பு தமிழீழத் தேசியத் தலைவர் பிரபாகரன் அவர்கள் சுதுமலையில் பேசிய உரையின்போதும், இந்தியாவுடனான நட்புறவை வலியுறுத்திப் பேசியிருந்தார். 'இந்திய - இலங்கை ஒப்பந்தமானது தமிழ் மக்களுக்கு எந்தவித உரிமையையும் பெற்றுத்தராது" என்பதை விளக்கிய தலைவர் அதே மேடையிலேயே இந்தியாவின் மீதான தன்னுடைய நம்பிக்கையையும், நட்புணர்வையும் தெளிவுபடுத்தியிருந்தார். 'நாம் இந்தியாவை நேசிக்கின்றோம், இந்திய மக்களை நேசிக்கின்றோம் நாம் இந்தியாவிற்கு எதிரானவர்கள் அல்ல" என்று தமிழீழ விடுதலைப் புலிகளின் நிலைப்பாட்டை அவர் தெளிவாகவே கூறியிருந்தார்.

தேசியத் தலைவரின் அந்தக் கூற்று நேர்மையானதாகவும், தெளிவானதாகவும் இருந்துள்ளது. இந்தியாவின் அப்போதைய அரசின் தெளிவற்ற சிந்தனையால் உருவாக்கப்பட்ட இந்திய - இலங்கை ஒப்பந்தத்தை விமர்சித்த தலைவர் அதே வேளையில் இந்திய தேசத்தின் மீதான தம்முடைய நட்புறவையும் தெளிவுபடுத்தியிருந்தார். இந்தியாவின் இறையாண்மைக்கும், இந்திய நாட்டிற்கும், அதன் மக்களுக்கும் அடிப்படையில் புலிகள் எதிரானவர்கள் அல்ல என்ற திடமான, தெளிவான சிந்தனையை அப்போதே தலைவர் வெளிப்படுத்தியிருந்தார்.

கடந்த ஆண்டு மிகவும் பரபரப்பான சூழ்நிலையில் உலக நாடுகள் அனைத்தினது கவனத்தையும் ஈர்த்த சர்வதேச ஊடகவியலாளர் மகாநாட்டின் போதும் தலைவர் பிரபாகரன் அவர்கள் இந்தியாவுடனான நட்புறவு குறித்து மீண்டும் வலியுறுத்திப் பேசியிருந்தார். 1987ம் ஆண்டு புலிகளுக்கு இருந்த இராணுவப் பலமும், அரசியல் பலமும் வேறாக இருந்தன. 2002ம் ஆண்டு சமாதானச் சூழ்நிலை ஏற்படுகின்ற வேளையில் புலிகளுக்கு இருந்த இராணுவப் பலமும், அரசியல் பலமும் வேறாக விசுவரூபமாக இருந்தன. ஆனால் அந்த இரண்டு வித்தியாசமான காலப்பகுதிகளிலும் தமிழீழத் தேசியத் தலைவர் இந்தியாவின் நட்புறவு குறித்து ஒரே கருத்தைத்தான் கொண்டிருந்தார்.

பின்னர் சிறிலங்கா அரசுடனான சமாதானப் பேச்சுக்கள் ஆரம்பமாகிய போதும் இந்தியாவின் அனுசரனையை விடுதலைப்புலிகள் நாடி நின்றதை நாம் அறிவோம். சுமாதானப் பேச்சுக்களை விடுதலைப் புலிகளின் சார்பில் முன்னின்று நடாத்திய மதியுரைஞர் திரு அன்ரன் பாலசிங்கம் அவர்கள் அவ்வேளையில் இந்தியாவின் அனுசரணையை பல வழிகளில் நாடியதையும் நாமறிவோம். துரதிர்ஷ்டவசமாக தற்போதய இந்திய அரசு விடுதலைப் புலிகளின் நேசக்கரத்தை புறந்தள்ளியது.

தமிழீழ விடுதலைப் புலிகள் தொடர்ந்தும் தமது நட்புறவை வெளிப்படுத்தiயே வந்துள்ளார்கள். சில மாதங்களுக்கு முன்னரும் தமிழீழ விடுதலைப் புலிகளின் மூத்த உருப்பினர்களில் ஒருவரான வே.பாலகுமாரன் அவர்கள் மீண்டும் இதே கருத்துக்களை தெரிவித்திருந்தார். திரு பாலகுமாரன் அவர்கள் தெரிவித்த அக்கருத்துக்கள் இந்தியாவுடனான நிலைப்பாடு குறித்து தேசியத் தலைவரின் சிந்தனையை மீண்டும் அடிக்கோடிடுவதாகவே அமைந்துள்ளன.

திரு வே.பாலகுமாரன் அவர்கள் கீழ்வருமாறு பேசியிருந்தார்.

'இந்தியாவுடன் நட்புறவோடு இணங்கிச் செயற்பட மனப்புூர்வமாக விரும்புகின்றோம். இதில் எந்தவிதமான அநாவசியமான குழப்பங்களும் கிடையாது. இந்தியா எமது து}ரத்து உறவு நாடு. நாங்கள் இந்தியாவிடம் எந்த மோதலையும் ஏற்படுத்த என்றுமே விரும்பியதில்லை. நடந்தவை எல்லாம் நடந்தவையாக இருக்கட்டும். நாங்கள் என்றைக்கும் இந்தியாவின் போக்குக்கு எதிராகச் செயல்படப்போவதில்லை. இதைத்தான் இந்தியாவிற்கு சொல்ல விரும்புகிநோம். இந்தியாவுடன் எந்தச் சிக்கலுக்கும் போகாமல் நல்லுறவைப் பேண விரும்புகிறோம். எனவே இந்தியா எங்களைப் பகைக்க வேண்டிய அவசியம் கிடையாது. இதை இந்தியா உணர்ந்து கொள்ளும் என்பது எமக்குத் தெரியும். எம்மோடு இந்தியா நேர்மையாக உறவு வைக்க முன்வந்தால் நாங்களும் இணக்கமாகச் செயல்பட தயாராக இருக்கின்றோம். அவர்களாகவே உருவாக்கிக் கொண்டால் அன்றி எம்மோடு மோதுவதற்கு இந்தியாவிற்கு எந்தக் காரணமும் கிடையாது. நாம் இதை புதுடில்லிக்கு தெளிவாகச் சொல்லியிருக்கின்றோம். இந்தியவின் பிராந்திய அரசியலில் எந்தக் குழப்பத்தையும் கொண்டுவர நாங்கள் தயாராக இல்லை. எனவே இந்தியா புலிகளை இராஜதந்திர ரீதியாக அனுகவேண்டும் என்று திரு பாலகுமாரன் அவர்கள் இந்தியாவுடனான புலிகளின் நிலைப்பாடு குறித்து கருத்து வெளியிட்டுள்ளார். 'தற்போதய அரசியல் நிலைமை தொடர்பாகத் தமிழீழத் தேசியத் தலைவர் எமக்கு விளக்கம் அளித்திருக்கின்றார். முழு உணர்வுத்திறனுடன் இன்றைய சர்வதேச அரசியலை முன்கூட்டியே அறிந்து அதன்படி செயல்படுகின்றோம். என்று தேசியத் தலைவர் எமக்குக் கூறியிருக்கின்றார்" என்று திரு வே.பாலகுமாரன் தெரிவித்திருப்பதானது தலைவரின் சிந்தனையின் தீர்க்க தரிசனத்தைக் கோடிட்டுக் காட்டுகின்றது. 'இந்தியாவின் பிராந்திய அரசியலில் எந்தக் குழப்பத்தையும் கொண்டுவர புலிகள் தயாராக இல்லை எனவே இந்தியா புலிகளை இராஜதந்திர ரீதியாக அணுகவேண்டும் என்ற அந்தச் சொற்றொடர் ஆழமான கருத்தைக் கொண்டுள்ளது. தமிழீழத் தேசியத் தலைவர் இந்தியாவுடனான நட்புறவு குறித்து தமது நிலைப்பாட்டை முன்னர் 1987 இலும் பின்னர் 2002இலும் பகிரங்கமாகத் தெரிவித்துள்ளார். இப்போது தமிழீழ விடுதலைப் புலிகளின் மூத்த உறுப்பினரான திரு வே.பாலகுமாரன் ஊடாகவும் மீண்டும் தலைவரது நிலைப்பாடு வெளிப்படுத்தப்பட்டுள்ளது."

இப்போது மீண்டும் தமிழீழ விடுதலைப் புலிகளின் மதியுரைஞர் திரு அன்ரன் பாலசிங்கம் அவர்கள் இந்தியாவுடனான நட்புறவை வெளிப்படுத்தியுள்ளதோடு இந்திய வெளியுறவில் மாற்றம் வேண்டும் என்றும் கோறியுள்ளார்.

தமிழீழ மக்களும், தமிழீழ விடுதலைப் புலிகளும் தங்களுடைய நிலைப்பாட்டை இன்றல்ல, நேற்றல்ல அன்றிலிருந்து இன்றுவரை தெளிவாகவே வெளிப்படுத்தி வந்துள்ளார்கள். ஆனால் சிங்கள தேசம் அவ்வாறு நடந்துள்ளதா? சிங்களத் தலைமைகள் அவ்வாறு நடந்துள்ளதா? சராசரி சிங்கள மக்கள் இந்தியா மீது கொண்டுள்ள அபிப்பிராயம்தான் என்ன?

வரலாற்று ரீதியாக ஈழத் தமிழினத்திற்கும், இந்தியாவிற்கும் நெருங்கிய நட்புறவு இருந்து வந்துள்ளமையை முன்னர் குறிப்பிட்டிருந்தோம். ஆனால் சிங்கள தேசமும், இந்தியாவும் தொடர்ந்து முரண்பட்டே வந்துள்ளதைத்தான் வரலாறு காட்டி நிற்கின்றது. இலங்கைக்கு பிரித்தானியாவிடமிருந்து சுதந்திரம் கிடைத்த பின்னரும்கூட இதே இந்திய வெறுப்புணர்வைத்தான் சிங்களத் தலைமைகளும், அரசியல்வாதிகளும் கொண்டிருந்தனர். அரசியல் ரீதியாக, பொருளாதார ரீதியாக, இராணுவ உதவிகள் ரீதியாக சிறிலங்கா தொடர்பு கொண்டிருந்த நாடுகளில் பல இந்திய எதிர்ப்பு நாடுகளாகவே இருந்தன. சீனாவையும், பாகிஸ்தானையும் உதாரணத்திற்கு எடுத்துக் காட்டலாம். முன்னர் வல்லரசாக இருந்த ரஷ்யாவோடு இந்தியா நெருங்கிய நட்புக் கொண்டிருந்த காலத்தில் சிறிலங்கா அமெரிக்காவுடன் நெருக்கத்தை ஏற்படுத்த முயன்றது.

இந்தியா மீதும், இந்திய மக்கள் மீதும் சிங்கள தேசம் கொண்டுள்ள வெறுப்புணர்ச்சி பரம்பரை, பரம்பரையாகவே தொடரப்பட்டுள்ளது. வருந்தத்தக்க வகையில் இந்தத் துவேச உணர்ச்சியானது சாதாரணச் சிங்களப் பொதுமக்களிடமும் பலமாக விதைக்கப்பட்டுவிட்டது. 1985 இல் இந்தியாவும், இலங்கையும் கலந்து கொண்ட 'டெஸ்ட்" (வுநளவ) கிரிக்கெட் போட்டியில் இந்தியாவை சிறிலங்கா வென்றது. இந்திய அணியை சிறிலங்கா அணி வென்றதைக் கொண்டாடுமுகமாக அடுத்த நாளை நாடு தழுவிய பொது விடுமுறையாக சிறிலங்கா அரசு அறிவித்ததை எமது நேயர்கள் மறந்திருக்க மாட்டார்கள்.

ஈழத் தமிழினத்தை கலந்து கொள்ளாமல் அவர்களுடைய பிரச்சனைக்குத் தீர்வு காண முடியாத இலங்கை - இந்திய ஒப்பந்தத்தை இரு அரசுகளும் கைச்சாத்திட முயன்ற போது சிங்களப் பகுதிகளில் கடும் எதிர்ப்புத் தோன்றியதன் காரணம் என்ன? பிரச்சனை எதுவாக இருந்தாலும் அதில் இந்தியா சம்பந்தப்படக் கூடாது என்ற இந்திய எதிர்ப்பு நிலைப்பாடுதான் அதற்கு அடிப்படைக் காரணமாக அமைந்தது.

அன்று இந்தியா வரக்கூடாது என்று கூக்குரல் இட்ட அதே சிங்களச் சக்திகள் இன்று இந்தியா வரவேண்டும் என்று கெஞ்சுவதன் காரணம் மனமாற்றம் அல்ல! தமிழினத்தின் பலத்தை, உரிமைப் போராட்டத்தை எந்த வகையிலாவது நசுக்கிவிட வேண்டும் என்ற பரிதவிப்புத்தான்.

இப்படிப்பட்ட பின்புலத்தில் சிறிலங்கா குறித்த இந்தியாவின் வெளிவிவகாரக் கொள்கையை நாம் தர்க்கிக்க விரும்புகின்றோம்.

பல மொழிகளைப் பேசுகின்ற, பல இனங்களைச் சார்ந்த, பல மதங்களைப் பின்பற்றுகின்ற மக்களை உள்ளடக்கியுள்ள இந்தியாவின் அரசு தன்னை இந்த மக்களின் பிரதிநிதியாக் கருதிச் செயல்படுகின்றது. அதுவே முறையானதாகும். பல்லின மொழி, பண்பாட்டை ஒருங்கிணைத்துப் பிரதிநிதித்துவம் செய்கின்ற இந்தியா அதே உள்நாட்டுப் பார்வையை தனது அண்டை நாடுகளிடமும் காட்ட வேண்டும். ஆனால் இந்தியாவோ தனது அண்டை நாடான இலங்கைத் தீவின் பிரச்சனைகளை சிங்கள தேசத்தின் நலனை மட்டும் கருத்தில் கொண்டு பார்க்கின்றது. ஆகவே இந்தியாவின் கொள்கையானது தமிழர் நலனையும், சிங்களவர் நலனையும் சமமாகச் சீர் கொண்டு பார்க்காமல் சிங்கள ஏகாதிபத்தியத்தின் பால் சார்பாகச் செயல்படுகின்றது. இந்தியாவின் வெளிநாட்டுக் கொள்கையானது இலங்கைத் தீவின் இரண்டு இனங்களுக்கும் பொதுவானதாகவே அமைய வேண்டும் இந்த மாற்றம் இந்தியாவிடம் ஏற்பட வேண்டும்.

தமிழீழத்தவரின் விடுதலைப் போராட்டத்தைச் சற்று ஆழமாகக் கூர்ந்து கவனித்தால் ஓர் உண்மை புலப்படும் தமிழீழத்தவரின் விடுதலைப் போராட்டத்தால்தான் இந்தியாவின் பிராந்திய மேலாண்மை ஓரளவிற்காவது காப்பாற்றப்பட்டுள்ளது. இன்று தமிழர் தேசம் தமது நிலப்பரப்புக்களைத் தம்மிடமே தக்க வைத்துக் கொண்டிருப்பதானால்தான் இந்தப் பகுதிகளுக்குள் இந்திய விரோத நாடுகளின் சக்திகள் புக முடியாமல் இருக்கின்றன. இன்று தமிழர் தேசம் தனது நிலப்பரப்பைத் தக்க வைக்காமல் போயிருந்தால் அந்தப் பகுதிகளையெல்லாம் இந்திய விரோத நாடுகளுக்கு சிறிலங்கா அரசு குத்தகைக்குக் கொடுத்து விட்டிருக்கும். இப்போது வாயளவிலும், காகிதத்திலும் போடப்படுவதாகச் சொல்லப்படுகின்ற வெளிநாட்டு ஒப்பந்தங்கள் முழுமையாகச் செயல்படுத்தப்பட்டு இலங்கைத் தீவின் கரையோரப் பகுதிகளில் இந்திய விரோத சக்திகள்தான் குடியிருந்திருக்கும்.

இந்தியா சிந்திக்க வேண்டும்!

நீண்ட காலமாகவே இந்தியா குறித்த தங்கள் நிலைப்பாட்டை தமிழீழ விடுதலைப் புலிகள் தெளிவுபடுத்தி வந்துள்ளர்கள். மீண்டும், மீண்டும் இந்தியாவுடனான ஆத்மார்த்த நட்பினை வேண்டி தமிழர் தலைமை நேசக்கரத்தை நீட்டி நிற்கின்றது. இந்தியா போன்ற ஒரு பிராந்திய முக்கியத்துவம் கொண்ட நாடு கரிசனப்படக்கூடிய விடயங்கள் பல உண்டுதான்! மறுக்கவில்லை! அதேபோல் இலங்கைத் தீவில் வாழும் தெசிய இனமான தமிழினத்தை இன்று உரு பலம் பொருந்திய இனமாக மாற்றிய மாபெரும் சக்தியாக விடுதலைப் புலிகள் இயக்கம் விளங்குகின்றது என்பதும் மறுக்க முடியாத உண்மைதான்! இப்படிப்பட்ட நிலையில் இந்தியா கருத்தில் கொள்ளக் கூடிய பல கேள்விகளுக்கு தமிழீழ விடுதலைப் புலிகள் தெளிவாகவும், விரிவாகவும் விடையிருத்தே வந்துள்ளர்கள். தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைமைப் பீடம் பகிரங்கமாக அறிவித்து வருகின்ற விடயங்கள்தான் என்ன?

'இந்தியாவின் பிராந்திய மோலாண்மைக்குப் பங்கம் விளைவிக்க விடுதலைப் புலிகள் விரும்பவில்லை"

'இந்தியாவின் இறையாண்மைக்கும், இந்திய நாட்டிற்கும், இந்திய மக்களுக்கும் விடுதலைப் பலிகள் எதிரானவர்கள் அல்ல"

'இந்தியாவின் தேசிய நலன்களுக்கு விடுதலைப் புலிகள் தடையாக இருக்கப் போவதில்லை"

'இந்தியாவின் புவியியல் கேந்திர நலனுக்கு எதிராக விடுதலைப் புலிகள் செயல்படுபவர்கள் அல்ல"

'இந்தியாவின் பொருளாதார நலன்களுக்குப் பங்கம் ஏற்படுத்த விடுதலைப் புலிகள் விரும்பவில்லை"

'இந்தியாவின் பிராந்திய அரசியல்க் களத்தில் குழப்பம் எதையும் ஏற்படுத்த விடுதலைப் புலிகள் விரும்பவில்லை"

மாறாக விடுதலைப் பலிகள் விரும்புவது என்ன?

'இந்தியாவுடன் நல்லுறவைப் பேணவே விடுதலைப் புலிகள் விரும்புகின்றார்கள்"

'இந்தியாவை ஒரு நட்புச் சக்தியாக, நேசச் சக்தியாகவே விடுதலைப் புலிகள் கருதுகின்றார்கள்"

'இந்தியாவுடன் நட்புறவோடு நெருங்கிச் செயற்பட விடுதலைப் புலிகள் மனப்புூர்வமாக விரும்புகின்றார்கள்"

'இப்படிப்பட்ட சுமுகமான உறவை ஏற்படுத்துவதற்காக இந்தியா தனது வெளியுறவுக் கொள்கையில் மாற்றத்தைக் கொண்டுவர வேண்டும்"

தமிழீழ விடுதலைப் பலிகளின் இந்த நியாயமான வேண்டுகோளை இந்தியா ஏற்க வேண்டும். அதற்குறிய நடவடிக்கைகளில் இந்தியா இறங்க வேண்டும். இந்த விடயங்களில் மேலும் தெளிவு தேவைப்படும் பட்சத்தில் அவற்றைப் பேசித் தீர்த்துக் கொள்ளலாம் ஆகவே இந்தியா புலிகளை இராஜதந்திர ரீதியாக அணுக வேண்டும்!

இதுவே ஈழத் தமிழினத்தினதும் அதன் தலைமையினதும் கோரிக்கையாகும்.

இந்தியா சிந்திக்க வேண்டும்!

நன்றி: தமிழ்நாதம் & தமிழ்க்குரல்| வானொலி (அவுஸ்திரேலியா )


- anpagam - 12-26-2003

இந்திய ஆதரவு - மிகைப்படுத்தப்பட்ட பிரச்சாரம்
சுதர்மா - கனடா
:?
http://www.tamilworldnews.com/Sutharma20031225.htm


- anpagam - 12-28-2003

<b>புலிகளை முடக்கவா இலங்கை - இந்திய
பாதுகாப்பு கூட்டுறவு ஒப்பந்தம்
டி. சிவராம் (தராக்கி) </b> :?


பிசாசுடன் கூட்டுவைத்தாவது தமிழ் பேசும் மக்களின் உரிமைப் போராட்டத்தை முறியடிக்க வேண்டும் எனக்கூறினார் ஜே.ஆர். ஜெயவர்த்தனா அவருடைய வழிவந்த சிறிலங்காப் பிரதமர் ரணில் விக்கிரமசிங்காவும் இதற்கு விதிவிலக்கல்ல. முன்னையவர் தான் எண்ணியதை வெளிப்படையாகச் சொன்னார். பின்னையவர் அதையே தான் மிகுந்த மதிநுட்பத்துடன் செய்ய முற்பட்டதாக எண்ணுகிறார். புலிகள் முன்வைத்த இடைக்காலத் தன்னாட்சி அதிகாரசபை வரைவு பற்றி பிரதமர் ரணில் விக்கிரமசிங்காவின் அரசு வெளியிட்ட அதிகாரபூர்வமான அறிக்கையில் ~இலங்கைப் பிரதமரும் இந்தியப் பிரதமரும் அண்மையில் சந்தித்தபோது இலங்கை இனச்சிக்கலுக்கான தீர்வு எந்த வரையறைகளுக்குள் அமைய வேண்டும் என உடன்பாடு| கண்டதாகக் சுட்டிக்காட்டப்பட்டது.

புலிகளின் இடைக்கால வரைவைப் பற்றிக் கருத்துக் கூறுகையில் அதற்குள் ஏன் இந்தியாவை இழுக்க வேண்டும்? இனச்சிக்கலின் இறுதித்தீர்வு எவ்வாறு அமைய வேண்டுமென இந்தியா கொண்டுள்ள கருத்தை ஏன் புலிகளின் இடைக்கால வரைவு பற்றி வெளியிட்ட அறிக்கையினுள் புகுத்த வேண்டும்? நீங்கள் உங்களுடைய உரிமைகளை நிலைநாட்டுகின்ற விடயத்தில் எல்லைமீறினால் அதைத் தடுக்க இந்தியா எம்பக்கம் நிற்கிறது என மறைமுகமாக விடப்பட்ட மிரட்டலாகவே நாம் மேற்படி அறிக்கையைக் கொள்ள வேண் ண்டியிருக்கிறது. பிரதமர் ரணில் விக்கிரமசிங்காவிற்கு சளைத்தவர்கள் அல்ல என்பதைக்காட்டிடும் ஆவலில் பொதுஜன ஐக்கிய முன்னணியும், ஜே.வி.பி.யும் புலிகள் மீது இந்தியா நடவடிக்கை எடுக்க வேண்டுமெனக் கூக்குரலிட்டு வருகின்றன.

இந்தியா புலிக்கு எதிரி, புலி நமக்கு எதிரி எனவே எதிரிக்கு எதிரி நண்பன் என்ற வகையில் சிங்கள அரசியலாளர் பலர் சிறுபிள்ளைத்தனமாக எண்ணுவதும், பேசுவதும் அதைக்கண்டு எம்மத்தியிலுள்ள படித்த பேதைகள் பலர் ~ஆகா, நம் பாரதத்தாயை சிங்களப்பேரினவாதிகள் குழப்பிவிட்டார்கள். நாம் உண்மையை எடுத்தியம்பி இந்தியாவை எம்பக்கம் திருப்பிட வேண்டும்" என அங்கலாய்ப்பர். இவற்றிடையே ~புலிகளின் கடற்படை இந்தியாவின் பாதுகாப்பிற்கு பெரும் அச்சுறுத்தலாக உருவெடுத்துள்ளது என டெல்லியில் உள்ளவர்கள் கவலை கொள்கின்றனர். புலிகள் எங்ஙனம் தமது படைபலத்தை இந்த அமைதிப் பேச்சுவார்த்தையின்போது இரட்டிப்பாக்கியுள்ளனர் என நான் இந்தியாவிற்கு விளக்கினேன்" என்பது போன்ற கூற்றுகளை அடிக்கடி வெளியிட்டு அவருக்கே கைவந்த பாணியில் கோமாளிக் கூத்தாடுகிறார் கதிர்காமர்.

இதற்கெல்லாம் சிகரம் வைத்தது போல் சிறிலங்காவும் இந்தியாவும் விரைவில் லபாதுகாப்புக் கூட்டுறவு ஒப்பந்தம். (னுநகநளெந ஊழழிநசயவழைn) ஒன்றில் கைச்சாத்திட இருப்பதாகவும் அதுபற்றி இருதரப்பும் தற்போது பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டுள்ளதாகவும் ஒரு தகவல் கிளம்பி எம்மிடையே வலம் வந்து கொண்டிருக்கிறது. இந்த ஒப்பந்தம் எழுதப்பட்டால் புலிகளின் படைவலு முடக்கப்பட்டுவிடும் எனவும் பேச்சுவார்த்தை பிழைத்து சிங்களப்பேரினவாதிகள் தமிழ் மக்கள் மீது போரைக்கட்ட விழ்த்து விடும் போது மேற்படி ஒப்பந்தத்தின் அடிப்படையில் சிறிலங்காப் படைகளுக்கு இந்தியா உதவும் எனவும் ஒரு கருத்து இப்போது உலவுகிறது.

இவ்வொப்பந்தம் நமது உரிமைப் போராட்டப்பாதையில் ஒரு பெரும்பின்னடைவை ஏற்படுத்தப்போகின்றது என வீரியமற்ற தமிழ்க் கருத்தியலாளர் முனகுவதையும் நாம் கேட்கக் கூடியதாயுள்ளது. பழம் எப்போ நழுவிப்பாலில் விழும் அது எப்போ நழுவி வாயில் விழும் என எம்மிடையே காத்துக் கிடந்த எட்டப்பர்கள் சிலர் இதுதான் சரியான சந்தர்ப்பமென எண்ணி 'இந்தியாவே தமிழரின் தாயகம், எனவே இந்தியா இங்கு வந்து தமிழரைக் காப்பாற்ற வேண்டும்" என்று நீலிக்கண்ணீர் வடிக்கிறார்கள்.

மேற்படி ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டு விட்டால் புலிகளைப் பற்றிப் பயப்படத்தேவையில்லை எனக் கனவு காண்கின்றனர் இந்தியதாசர்ளாக மாறியுள்ள ஜே.வி.பி. போன்ற பல சிங்களப் பேரினவாதிகள். இனி பாதுகாப்புக்கூட்டுறவு ஒப்பந்தம் என இந்தியா கூறுவது என்ன என்பதை பார்ப்போம்.

இதில் முதலாவதாக நாம் கவனிக்க வேண்டியது என்னவெனில் இவ்வொப்பந்தம் சிறிலங்காவுக்கென பிரத்தியேகமாக இந்தியாவால் தயாரிக்கப்பட்ட ஒன்றல்ல. 1987இல் கைச்சாத்திடப்பட்ட இந்திய - இலங்கை ஒப்பந்தம் சிறிலங்காவுக்கெனவே விசேடமாகத் தயாரிக்கப்பட்டது. ஆனால் மேற்படி பாதுகாப்புக் கூட்டுறவு ஒப்பந்தமானது. சுதந்திர வர்த்தக ஒப்பந்தம், திறந்த வான் பறப்பு ஒப்பந்தம் ஆகியவற்றைப்போல ஒரு பொதுச் சட்டகத்தினடிப்படையில் அமைந்ததாகும். 2000ஆம் ஆண்டு மார்ச் மாதம் இந்தியா வியட்நாம் அரசுடன் மேற்படி பாதுகாப்புக் கூட்டுறவு ஒப்பந்தமொன்றைக் கைச்சாத்திட்டது. வியட்நாமினுடைய ரஷ்ய தயாரிப்பு மிக் வேக வானு}ர்திகளை பழுதுபார்க்கவும், அவற்றிற்கான புதிய ஓட்டிகளுக்குப் பயிற்சியளிக்கவும், சிறிய மற்றும் நடுத்தர ஆயுத உற்பத்தி செய்ய உதவி வழங்கவும், வியட்நாமியக் கடற்படையின் சண்டைப்படகுகள், கப்பல்கள் ஆகியவற்றைப் பழுதுபார்க்கவும், தரமுயர்த்தவும் மேற்படி ஒப்பந்தத்தின் கீழ் இந்தியா ஒத்துக்கொண்டது. அத்துடன் இந்தியா தயாரிக்கும் போர்த் தளபாடங்களை முன்னிணக்க விலைக்கு வியட்நாமிற்கு விற்கவும் இந்த ஒப்பந்தம் வழிசமைத்தது. இந்திய படைகளுக்கு விசேட காட்டுச் சண்டைப் பயிற்சி வழங்கவும் இந்தியாவிடமிருந்தது அதிவேக ரோந்துப்படகுகளை வாங்கவும், இந்தியக் கடலோர பாதுகாப்புப் படையுடன் கூட்டாகச் செயற்படவும் மேற்படி பாதுகாப்புக் கூட்டுறவு ஒப்பந்தத்தின்படி வியட்நாம் ஒத்துக் கொண்டது. 2000ஆம் ஆண்டு மார்ச் மாதம் 27ஆம் திகதி வியட்நாம் தலைநகர் சென்ற இந்தியப் பாதுகாப்பு அமைச்சர் ஜோர்ஜ் பெர்னாண்டஸ் அங்கு ஐந்து நாள் தங்கி மேற்படி ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டார்.

இதைத் தொடர்ந்து இவ்வருடம் ஒக்டோபர் மாதம் 14ஆம் திகதி டெல்லி சென்ற சிங்கப்பூர் பாதுகாப்பு அமைச்சர் தியோசீ ஹியானும் இந்தியப் பாதுகாப்பு அமைச்சர் பெர்னாண்டஸ{ம் இரு நாடுகளுக்குமிடையிலான ~பாதுகாப்புக் கூட்டுறவு ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டனர். கடந்த ஆண்டு சிங்கப்பூர் சென்ற இந்தியப் பாதுகாப்பு அமைச்சர் ஆரம்பித்த பேச்சுவார்த்தைகளின் பயனாகவே இவ்வொப்பந்தம் நிறைவேறியது. தென்கிழக்காசியாவின் அமெரிக்கச்சார்புக் கூட்டணியான ஆசியானின் (யுளநயn) அமைப்பை சேர்ந்த நாடுகளில் இந்தியாவுடன் பாதுகாப்பு ஒப்பந்தமொன்றைச் செய்து கொண்ட முதலாவது நாடு சிங்கப்பூராகும்.

புலனாய்வுப் பரிமாற்றம், படைத்துறைப் பயிற்சி படையதிகாரிகள் பரிமாற்றம், கூட்டுக் கடற்படைப்பயிற்சி நடவடிக்கை என்பன இந்திய - சிங்கப்பூர் பாதுகாப்புக்கூட்டுறவு ஒப்பந்தத்தின் கீழ் நடைபெறும். இந்திய மாகடல் வரை படத்தை நீங்கள் அவதானித்தால் சிங்கப்பூரின் இருப்பிற்கும் பொருளாதார நலனுக்கும் இன்றியமையாத மலாக்கா நீரிணையின் வாயிலாக இந்தியாவின் கட்டுப்பாட்டிலுள்ள அந்தமான் - நிக்கோபார் தீவுகள் அமைந்துள்ளதைக் காணலாம். இந்த வகையிலும், மலேசியா, இந்தோனேசியா ஆகிய பெரிய நாடுகளின் பிராந்தியச் செல்வாக்கை ஓரளவு சமநிலைப்படுத்தவும் சிங்கப்பூருக்கு இருக்கும் தேவையை கணக்குப் பண்ணி இந்த பாதுகாப்புக்கூட்டுறவு ஒப்பந்தத்தை இந்தியா ஏற்படுத்திக் கொண்டுள்ளது எனலாம். (எனினும் இது அமெரிக்காவிற்கும் சிங்கப்பூருக்குமிடையில் இருக்கும் மிக நெருக்கமான பரஸ்பர பாதுகாப்பு ஒப்பந்தத்தை எவ்வகையிலும் பாதிக்காது என்பதையும் இங்கு குறிப்பிட வேண்டும்.)

நவம்பர் மாத இறுதியில் இந்தியத் தலைநகரம் வந்த பிறேசில் நாட்டின் பாதுகாப்பு அமைச்சரும் அந்நாட்டின் உயர்மட்ட படைத்துறைக்குழுவினரும், இந்தியப் பாதுகாப்பு அமைச்சருடன் ஒரு விரிவான பாதுகாப்புக் கூட்டுறவு ஒப்பந்தமொன்றைத் தயாரிப்பது தொடர்பான பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டனர். ஆயுதம் மற்றும் பல்வேறு போர்த்தளபாட, சண்டை வானு}ர்தி உற்பத்தியில் முன்னணி வகிக்கும் மூன்றாம் உலக நாடு பிறேசிலாகும். அதன் போர்த்தளபாட, ஆயுதத் தொழிற்றுறையில் பங்கெடுக்கவும், பயனடையவும் அந்நாட்டுடனான பாதுகாப்புக்கூட்டுறவு ஒப்பந்தம் வாய்ப்பளிக்கும் என்பது டெல்லியின் கணிப்பு.

இதுபோல செக் குடியரசுடனும் இந்தியா இந்த பாதுகாப்பு கூட்டுறவு ஒப்பந்தத்தை ஏற்படுத்தியுள்ளது. இதுபற்றி விரிவான பேச்சுக்களை நடத்துமுகமாக இந்தியப் பாதுகாப்பு அமைச்சர் ஒக்டோபர் மாதம் 20ஆம் திகதியிலிருந்து 23ஆம் திகதி வரை செக்குடியரசின் தலைநகரான பிராக் சென்றிருந்தார். 'இந்தியப்படைகளுக்கான பார ஊர்திகளை கூட்டாக உற்பத்தி செய்வது தொடர்பாகவும் வு - 72 தாங்கிகளையும் ஆஐ ரக உலங்கு வானு}ர்திகளையும் தரமுயர்த்துவது பற்றியும், இருநாடுகளுக்கும் பொதுவான பாதுகாப்பு விடயங்கள் தொடர்பாகவும் பெர்னாண்டஸ{க்கும் செக் பாதுகாப்பு அமைச்சர் மிரோஸ்லாவ் கொஸ்டெல்காவிற்குமிடையில் விரிவான பேச்சுகள் நடைபெற்றன" என இந்தியப் பாதுகாப்பு அமைச்சின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்திருந்தார். பெர்னாண்டசும் செக் பாதுகாப்பு அமைச்சரும் அக்டோபர் 20ஆம் திகதி பாதுகாப்புக்கூட்டுறவு ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டனர்.

கடந்த மாதம் ஓமான் நாட்டுடனும் மேற்படி பாதுகாப்புக் கூட்டுறவு ஒப்பந்தத்தை ஏற்படுத்திக் கொள்வதற்கான விரிவான பேச்சுவார்த்தைகளை இந்தியா ஆரம்பித்தது. அதற்குரிய இறுதிவரைவு தற்போது தயாரிக்கப்பட்டுள்ளது. அடுத்த ஆண்டு அது கைச்சாத்திடப்படவுள்ளது.

இந்த ஒப்பந்தத்தின் கீழ் ஓமானின் படைவீரர்கள், அதிகாரிகள் ஆகியோருக்கு இந்தியா பயிற்சி வழங்கும். அத்துடன் இந்தியப் போர்த் தளபாடங்களை ஓமான் இதனடிப்டையில் வசதிவிலைக்கு வாங்கவும் ஏற்பாடாகிறது.

இவற்றையெல்லாம் கவனமாக ஆராய்ந்து பார்ப்போமேயானால் இந்தியாவின் பாதுகாப்புக்கூட்டுறவு ஒப்பந்தம் யாதென்பது ஓரளவேணும் புரியும். உலகின் பல்வேறு படைகளுடன் நேரடிப் பயிற்சி, கூட்டு நடவடிக்கைகள், தகவல் மற்றும் புலனாய்வுப் பரிமாற்றம் என்பவற்று}டாக தொடர்புகளை வளர்த்தெடுத்தல், போர்த்தளபாட விற்பனவு, கூட்டு உற்பத்தி என்பவற்றிற்கான வாய்ப்புக்களைப் பெருக்குதல் என்பவற்றையே மேற்படி இந்திய பாதுகாப்புக் கூட்டுறவு ஒப்பந்தம் அடிப்படையாகக் கொண்டுள்ளது. தென்னாசியப் பிராந்தியத்திற்கு அப்பாலும் போரியற் செல்வாக்குள்ள ஒரு அரசாக உலக அரங்கில் காலடி எடுத்துவைக்கவும் இவ்வொப்பந்தம் இந்தியாவிற்கு வழிசமைக்கிறது. அதைவிட மிக முக்கியமானதாக இவ்வொப்பந்தத்தில் நாம் கவனிக்க வேண்டிய விடயம் என்னவெனில் இது எவ்வகையிலும் ஒரு பரஸ்பர பாதுகாப்பு ஒப்பந்தம் அல்ல என்பதே. அந்த நோக்கில் அதன் சட்டகம் வடிவமைக்கப்படவில்லை என்பது மேற்கூறிய உதாரணங்களிலிருந்தும் நாம் புரிந்து கொள்ளலாம்.

பரஸ்பர பாதுகாப்பு ஒப்பந்தமாயின் அதைக் கைச்சாத்திடும் இருநாடுகளில் ஒன்றுக்கு ஏதாவது பாதுகாப்பு அச்சுறுத்தல் ஏற்பட்டால் மற்ற நாடு படையுதவி செய்ய வேண்டுமென்பதே அதன் அடிப்படை. இவ்வாறான ஒரு ஒப்பந்தத்தை 1971ஆம் ஆண்டு சோவியத் குடியரசுடன் மட்டுமே இந்தியா செய்திருந்தது. அதுவும் 2001ஆம் ஆண்டு காலாவதியாகிவிட்டது. இந்த பரஸ்பர பாதுகாப்பு ஒப்பந்தத்தின் எதிர்மறையான விளைவுகளிலிருந்து விடுபடுவதும் மேற்படி கூட்டுறவு ஒப்பந்தங்களை பரவலாக இந்தியா செய்வதன் பின்னணியிலுள்ள ஒரு நோக்கமாகும்.

இது சிறிலங்காவிற்கென பிரத்தியேகமாக உருவாக்கப்பட்ட ஒப்பந்தமல்ல என்பதும் தெளிவு. இந்தியாவின் மாறி வரும் பிராந்திய மற்றும் உலகளாவிய பாதுகாப்பு வீயுூகங்களென்ன என்பதை அடுத்த வாரம் பார்ப்போம்.


நன்றி: வீரகேசரி 21-12-03


- anpagam - 12-28-2003

கதிர்காமரின் பிரசாரங்களும் இந்தியாவின் பிரதிபலிப்பும்
27-12-2003 - நமது ஈழநாடு


சிறிலங்காவின் சர்வதேச புகழ்பெற்ற விடுதலைப்புலிகள் எதிர்ப்பு பிரசாரகரும்இ ஜனாதிபதி சந்திரிகாவின் விசேட ஆலோசகரும்இ முன்னாள் வெளிவிவகார அமைச்சருமான லக்ஸ்மன் கதிர்காமருக்கு இரண்டாவது தடவையாக நெற்றியடி ஒன்று இடியாக வீழ்ந்துள்ளது.

இந்த "அடி"யையும் இந்தியத்தரப்பே...அதாவது எந்த இந்தியாவுக்கும் தான் ஒரு விசுவாசமான ஊழியராகவும்இ இந்திய நலனின்மீது ஆழமான அக்கறை கொண்ட சிறிலங்கா ஜனாதிபதியின் தூதுவராக தன்னை வெளிப்படையாக இனங்காட்டிக்கொண்டு புதுடில்லிக்கும்இ கொழும்புக்கும் இடையே பறந்துகொண்டிருக்கின்றாரோ-அதே இந்தியாவின் பொறுப்புள்ள அதிகாரியொருவரே வழங்கியுள்ளமைதான் கதிர்காமரை பரிதாபத்துக்குரிய கோமாளியாக மாற்றியுள்ளது.

உண்டவீட்டுக்கு இருண்டகம் செய்யக்கூடாது...செய்நன்றி மறக்கக்கூடாதுஇ தனக்கு சோறுபோடும் எஜமானுக்கு விசுவாசமாக இருக்கவேண்டும் என்பது கொள்கையளவில் முரண்படமுடியாத விடயம்தான்.ஆனால் தன்னினத்தைஇ தன்சுயமரியாதையைஇஅரசியல் உரிமையைஇஎல்லாவற்றிலும் மேலாக தன்மானத்தை அற்பபதவிக்காக விற்றுவிட்டு அல்லது கைவிட்டுவிட்டு தன்னினத்தையே காட்டிக்கொடுக்கும் கைங்கரியத்தை ஒருபெருமையாகக் கருதி ஒருவர் செயற்படுவதைத்தான் ஏற்றுக்கொள்ளமுடியாது.

நியாhயமற்றதும்இ உண்மைக்கு மாறானதும்இவெறுமனே பிரசார நோக்கினைக்கொண்டதும்இசிறிலங்காவின் நிறைவேற்று அதிகார ஜனாதிபதியின் அரசியல் அபிலாஷைகளை இலக்காக்கொண்டதுமான கருத்துக்களை மட்டுமே சர்வதேச சமூகத்திற்;குஇ குறிப்பாக தற்போது இந்தியாவுக்கு எடுத்துக்கூறுவதன் மூலம் இனப்பிரச்சினைக்கான சமாதான நகர்வுகளில்இ இந்தியாவை மீண்டும் ஒரு தவறான கருத்துருவாக்கத்திற்குள்ளாக்கி தலையீடுசெய்ய வைத்துஇ குழப்பங்களை ஏற்படுத்துவதையே இலட்சியமாகக்கொண்டு செயற்பட்டுவரும் கதிர்காமரின் கைங்கரியம் மேற்குறிப்பிட்ட தன்மையையே கொண்டதாகும்.

எப்படியாவது தற்போது நோர்வே நாட்டின் அனுசரணையுடனும்இ சர்வதேச சமூகத்தின் ஆதரவுடனும் மேற்கொள்ளப்பட்டுவரும் அமைதிமுயற்சிகள் யாவும் குழம்ப வேண்டுமென்பதே ஜனாதிபதி சந்திரிகாவின் தீராத தாகமாகும்.இதேவேளைஇ இதுபோன்றதோர் நிலைப்பாட்டை உள்ளத்தில் ஆழமாக கொண்டபடியேஇ வெளியே சமாதானத்திற்கு ஆதரவுபோல் பாவனைகாட்டும் இந்தியாவின் புவிசார் அரசியல் அபிலாஸைகளையும் சந்திரிகா நன்கு அறிவார்.

அத்துடன்இ விடுதலைப்புலிளுக்கும் இந்தியாவுக்குமிடையே தற்காலிகமாக நிலவும் கருத்து முரண்பாடுகள் குறித்தும் சந்திரிகாவுக்கு தெரியும். இலங்கையின் இன விவகாரங்களில் அமெரிக்காவோஇ அல்லது ஐரோப்பிய சமூகமோ அல்லது வேறு வல்லாதிக்க சிந்தனை கொண்ட சக்திகளோ மேலாதிக்கம் செய்ய ஊடுருவல் செய்வதையும் இந்தியா விரும்பவில்லை என்பதும் சந்திரிகாவுக்கு தெளிவாகத் தெரிந்த விடயமேயாகும்.

இந்;த நிலையில் இவையனைத்தையும் மதிப்பீடு செய்து விடுதலைப்புலிகளுக்கும் இந்தியாவுக்குமிடையிலான உறவு முரண்பாடுகளை மிகைப்படுத்திஇ முறுகல் அல்லது மோதல் நிலையை உருவாக்குவதன் மூலம் தனது அரசியல் அபிலாஸைகளை அடையும் மூலோபாயத்தை சந்திரிகாஇ கதிர்காமர் என்ற தனது நம்பிக்கைக்குரிய விசுவாசியை வைத்து நடைமுறைப்படுத்த பல்வேறு திட்டங்களை வகுத்து செயற்பட்டு வருகிறார் என்பது வெளிப்படையான விடயமாகும்.

உண்மையில் அவரின் இந்த நகர்வுகள் இந்தியாவின் நலனை விரும்பியதால் மேற்கொள்ளப்படுபவையல்ல... மாறாக இந்தியாவை ஒரு சிக்கலுக்குள் தனது நுட்பமான இராஜதந்திரத்தின் மூலம் உள்நுழைய வைத்து விட்டு தன் அரசியல் இலக்குகளை எட்ட முயல்வதே அவரது நோக்கமாகும்.

சில மாதங்களின் முன் இதே கதிர்காமர் திடீரென ஒருநாள் டில்லிக்குப் பறந்துபோய் குரங்குபாஞ்சான் முகாம் என்ற ஒன்றுமற்ற பிரச்சினைக்கு ஒரு ஷபேயுருவத்தை| உருவாக்கிஇ திருகோணமலை புலிகளால் முற்று கையிடப்பட்டுவிட்டதாகவும்இ திருமலைத் துறைமுகத்துக்கு ஆபத்து நேர்ந்துவிட்டதாகவும்இ அங்குள்ள இந்திய எண்ணெய்க் குதங்களுக்கு புலிகள் இலக்கு வைத்துள்ளதாகவும் பெருமெடுப்பில் அச்சுறுத்தல் விடுத்து இந்தியாவுக்கு கிலி ஏற்படுத்தி உருவேற்றமுயன்றார்.

ஆனால்இ அது எடுபடவேயில்லை. நெற்றியடி வாங்கியதுதான் மிச்சம் இந்திய எண்ணெய்க் குதங்களுக்கு புலிகளால் ஆபத்தில்லை என்று விட்டனர் இந்தியஅதிகாரிகள்.அண்மையில் இந்திய மீனவரை விடுதலைப்புலிகள் தான் கைதுசெய்து கடத்திச் செல்கிறார்கள் என கதிர்காமர் மீண்டும் ஒரு கரடியை விட்டுப்பார்த்தார்.அதையும் இந்தியக் கடலோரகாவற்படைத் தளபதி நிராகரித்து அடுத்த நெற்றியடியை வழங்கிவிட்டார்.

இவை சந்திரிகாவினதும்இ கதிர்காமரினதும் பொய்பிரசாரம் தோல்வி கண்டுவருவதற்கு எடுத்துக்காட்டாகும்.இந்தியா இந்த "கோயபல்ஸ்" வாரிசுகளின் கூறல்களுக்கு காது கொடுக்காதுஇ கொடுக்கக்கூடாது என்றே நம்புகிறார்கள் விரும்புகிறார்கள்.

<!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> :mrgreen:
நன்றி: நமது ஈழநாடு


- pepsi - 12-28-2003

<!--QuoteBegin-aathipan+-->QUOTE(aathipan)<!--QuoteEBegin-->இந்தியா ஒரு சுயநலம் கொண்ட நாடு. எப்பவும் அது எங்கள் தமிழர்மேல் இரக்கம் கொள்ளாது. சிங்களவர்கள் தந்திரமாக எங்கள்மேலே உள்ள வெறுப்பு குறையாமல் இருக்கும்படி பார்த்துக்கொள்கிறார்கள். நாங்களும் எதாவது தந்திரம் செய்து அதன் வெறுப்பை இலங்கை அரசுமேலும் பௌத்த மதவாதிகள் மேலும் மாற்றவேண்டும். சிங்களவரின் நடவடிக்கைகள் இந்தியாவிற்கு எதிராக உள்ளது என்ற உண்மையைக் காட்டவேண்டும். எமது கரங்கள் இந்தியாவைநோக்கி நட்புடன் நீண்டாலும் அதை ஏற்று நட்புக்கரம் நீட்ட இந்தியாவால் முடியாது ஏன் என்றால் அதன் கையை இறுக்கமாக சிங்கள அரசியல் வாதிகள் பிடித்துக்கொண்டுள்ளனர். அடிக்கடி அவர்கள் இங்கு வந்து மந்திரம் போட்டு வைத்துள்ளனர். எமது பொதுவான தலைவர்கள் அடிக்கடி இந்தியா வந்து எமது நிலையைச்சொல்லவேண்டும். அப்படிப்பேச தலைவர்கள் உள்ளார்களா? தெரியவில்லை. இருந்தாலும் ஏதாவது முயற்சிகள் செய்யவேண்டும். சிங்களவர்களுடனான அதன் நட்பைக்குறைத்தாலேபோதும். மேற்கொண்டு எந்தவிதமான இராணுவ ஒப்பந்தங்களையும் இலங்கை அரசுடன் மேற்கொள்ளாமல் அது தவிர்த்தாலே வெற்றிதான். எமது தரப்பில் ஒரு தூதுவர் இல்லை. நோர்வே எந்தளவு இதில் ஈடுபடுத்தப்படுகிறது என்று தெரியவில்லை.<!--QuoteEnd--><!--QuoteEEnd-->
ஆதீபன் நீங்கள் சொல்வது 100 க்கு 100 உண்மை :evil:


- anpagam - 12-28-2003

இந்தியாவின் தென்னாசிய பாதுகாப்பு வலயத்தில் சிறிலங்கா - தமிழீழம்
டி. சிவராம் (தராக்கி)


நொக்கியா செல்லிடத் தொலைபேசியை அறியாத தமிழர் ஒரு சிலரே உள்ளனர். அது உற்பத்தி செய்யப்படும் நாடு பின்லாந்து என்பது கூட நம்மவர் சிலருக்குத் தெரியும்.

போன கிழமை இந்தியாவைப் பற்றி எழுதுகிறேன் என கூறியவன். இப்போது ஏன் பின்லாந்தைப் பற்றிக் கதைக்க வெளிக்கிடுறான் எனக் கேள்வி எழலாம்.

பின்லாந்து ரஷ்யாவின் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த எல்லைப்புற நாடு. இரண்டாம் உலகப் போர் முடிவடைந்த பின்னர் தனது சுற்றுப்புறப் பிராந்தியப் பாதுகாப்பை மிகக் கவனமாகக் பலப்படுத்தவேண்டிய தேவை அப்போதைய சோவியத் யுூனியனுக்கு ஏற்பட்டது.

அமெரிக்காவும் அதன் பிரதான நேச நாடான பிரித்தானியாவும் சோவியத் யுூனியனுடைய ஐரோப்பிய எல்லைப்புறத்தைப் பலவீனப்படுத்தும் நோக்கில் வட அத்திலாந்திக் ஒப்பந்த அணியை (ழேசவா யுவடயவெiஉ வுசநயவல ழுசபயnணையவழைn - Nயுவுழு) ஐரோப்பாவின் கிழக்குப் புறமாகவும் வடக்குப் பக்கமாகவும் விரிவாக்கலாயின.

இதைத் தடுப்பதற்காக கிழக்கு ஐரோப்பாவின் சில நாடுகளை மறைமுகமாகவும் சிலவற்றை நேரடியாகவும் தனது நேரடிக் கேந்திரப் பாதுகாப்பு வலயத்தினுள் சோவியத் யுூனியன் கொண்டு வந்தது.

மேற்படி கிழக்கு ஐரோப்பிய நாடுகளில் வலுவுள்ள சோவியத் சார்பு இடதுசாரி இயக்கங்கள் இருந்ததும் சோவியத் யுூனியனுக்கு வாய்ப்பாக அமைந்துவிட்டது.

ஆனால் வட ஐரோப்பாவில் சோவியத் யுூனியனின் எல்லைப்புற நிலைமை வேறாகக் காணப்பட்டது. சோவியத் யுூனியன் தனது வட ஐரோப்பிய பாதுகாப்பு வலயமாகக் கருதிய பிராந்தியத்தினுள் முதலாவதாகப் பின்லாந்தும் இரண்டாவதாக சுவீடனும் மூன்றாவது நோர்வேயும் நான்காவதாக டென்மார்க்கும் காணப்பட்டன.

(இந்நான்கு நாடுகளையுமே ஸ்கந்திநேவிய நாடுகள் என அழைக்கிறோம்)

நான்கு நாடுகளுக்கும் அப்போதிருந்த சிக்கல் சோவியத் யுூனியனுடைய பாதுகாப்பு வட்டம் என்பதற்குள் நேரடியாக மாட்டிக்கொண்டு கிழக்கு ஐரோப்பிய நாடுகளைப்போல் தமது இறைமையை முற்றாக இழப்பதா அல்லது தமது சுதந்திரத்தைப் பேணக்கூடிய முறையில் சமரசம் செய்து கொள்வதா என்பதே.

இதில் பின்லாந்தும், சுவீடனும் அமெரிக்காவின் நேட்டோ (Nயுவுழு) இராணுவக் கூட்டில் இணையாமல் தவிர்த்துக்கொண்டன. நோர்வேயும் டென்மார்க்கும் நேட்டோவில் இணைந்து கொண்டபோதும் சோவியத் யுூனியனுடைய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தக்கூடிய எந்த இராணுவ hPதியிலான அலுவலிலும் ஈடுபடுவதில்லை என அறிவித்தன.

(இதில் நோர்வே பின்னர் சோவியத் யுூனியன் மீது அமெரிக்கா இலத்திரனியல் புலனாய்வு வேலைகளை செய்வதற்குப் பெருமளவு ஒத்துழைத்தது என்பது நாம் கவனிக்கவேண்டும்.)

மேற்படி நான்கு ஸ்கந்திநேவிய நாடுகளில் பின்லாந்து சோவியத் யுூனியனுடன் நீண்ட நேரடி எல்லைப்புறத்தைக் கொண்டதாகும்.

எனவே சோவியத் யுூனியனுடைய பாதுகாப்பிற்குக் குந்தகமாக அமையக்கூடிய எந்தவொரு உள்நாட்டு, வெளிநாட்டு கொள்கையையோ நடைமுறையையோ கடைப்பிடிப்பதில்லை என்ற அடிப்படையில் பின்லாந்து அன்றைய அந்த உலக வல்லரசுடன் ஒரு ~நட்புறவு| ஒப்பந்தத்தைச் செய்துகொண்டது.

இவ்வொப்பந்தம் பின்லாந்தினுடைய இறைமையை - தனித்துவத்தை - பறித்தெடுத்து விட்டது என அமெரிக்கா சார்பு விமர்சகர்கள் அன்று கண்டித்தனர். ஆனால் சோவியத் எதிர்ப்பு நடவடிக்கைகளுக்கு தளமாகாமல் தனது சுதந்திரத்தைப் பேணுவதே ஸ்கந்திநேவியத் பிராந்தியத்தின் பாதுகாப்பிற்கு அடித்தளமாகும் என பின்லாந்து தான் செய்துகொண்ட ஒப்பந்தத்தை நியாயப்படுத்தியது. கிழக்கு ஐரோப்பிய நாடுகளைப் போல் பின்லாந்து சோவியத் யுூனியனின் இரும்புத்திரைக்குள் மறைந்து போகாது மேற்குடனும் தனது பொருளாதார உறவுகளை தொடர்ந்து பேணிட இவ்வொப்பந்தமே காரணமாயிற்று எனச் சில ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டுவர். பின்லாந்தின் இந்த அனுபவம் சர்வதேச அரசியற் கற்கைகளில் ஒரு முக்கிய கோட்பாட்டின் தோற்றத்திற்கு வழிவகுத்தது. இதுவே ~பின்லாந்துப்படுத்தல்| (குiடெயனெளையவழைn) என்றறியப்படும்.

1987ஆம் ஆண்டு சிறிலங்கா இந்தியாவுடன் செய்துகொண்ட ஒப்பந்தத்தின் மூலம் அது பின்லாந்துப்படுத்தப்பட்டுவிட்டது எனச் சில உலக அரசியல் ஆய்வாளர் கூறுவர். இக்கருத்தை கலாநிதி அமால் ஐயவர்த்தன அந்நேரத்தில் ஐலண்ட் ஆங்கில நாளேட்டில் எழுதிய ஓரு ஆய்வுக்கட்டுரையில் முன்வைத்தார். அவருடைய கருத்தைப் பல சிங்கள ஆய்வாளர் ஏற்க மறுத்து வருகின்றனர்.

கொழும்பிலுள்ள 'விவரமறிந்த" ஆங்கில பத்தி எழுத்தாளர் ஒருவர் அண்மையில் என்னுடன் இந்தியா பற்றி பேசிக்கொண்டிருக்கும்போது 1987 சிறிலங்கா - இந்தியா ஒப்பந்தம் காலாவதியாகிவிட்டது என ஆணித்தரமாகக் கூறினார். அவரைப்போலவே பல சிங்களக் கருத்தியலாளரும் அரசியலாளரும் எண்ணுகின்றனர். சிறிலங்காவின் வெளியுறவுக் கொள்கையை மட்டுமல்லாது அதனுடைய உள்நாட்டுக் கொள்கையையும் இந்திய - இலங்கை ஒப்பந்தமும் அதன் பின்னிணைப்பான கடிதப் பரிமாற்றமும் கட்டுப்படுத்துகின்றன என்ற இந்த உண்மையை கண்ணை மூடிப் பால் குடித்த பூனையைப்போல இவர்கள் காண மறுக்கின்றனர்.

இந்த வகையில் சிறிலங்கா முழுமையாகப் பின்லாந்துப்படுத்தப்படவில்லை எனக் கூற வேண்டியுள்ளது. இரண்டாம் உலகப்போருக்குப் பின்னர் இன்று வரை பின்லாந்து சோவியத் யுூனியனுடனான ஒப்பந்தத்திற்கு முரணாக எதுவும் செய்திடாத வகையில் தனது இறைமையைப் பேணுவதில் தெளிவாக செயற்பட்டு வருகிறது.

(ஆலாந்து என்ற சிறிய பகுதிக்குக் கொடுக்கப்பட்டிருக்கும் சிறப்பு தன்னாட்சி முறையும் இந்தப் பின்னணியில் புரிந்துகொள்ளப்படலாம்)

ஆனால் தென்னாசியாவிற்கு ஒரு பொதுமையான பாதுகாப்பு ஒழுங்கு இருக்கின்றது எனவே அதற்குத் தனது பின்லாந்துப்படுத்தல் இன்றியமையாத ஒன்று எனவோ சிங்கள அரசியலாளரோ, வெளியுறவுக் கொள்கையாளரோ அன்றும் இன்றும் ஏற்றுக்கொள்ளத் தயாராக இல்லை - இருக்கப்போவதுமில்லை. இந்திய - இலங்கை ஒப்பந்தமானது சிறிலங்காவின் உள்ளக மற்றும் வெளிசுயநிர்ணய உரிமையையும், இறைமையையும் சட்டாPதியாக மட்டுப்படுத்திவிட்டது என்பதை அவர்களால் ஜீரணிக்க முடியவில்லை. இதன் காரணமாக இந்திய - சிறிலங்கா உறவு ஒருபோதும் முழுமையான பின்லாந்துப்படுத்தலின் அடிப்படையில் அமையமுடியாது எனக் கூறலாம். கடந்த சில ஆண்டுகளாக அமெரிக்காவுடனும் பாகிஸ்தானுடனும் சிறிலங்கா செய்ய முற்பட்ட ஒப்பந்தங்கள் இரண்டும் இந்திய - இலங்கை ஒப்பந்தத்திற்கு மிக முரணாகவும் இந்தியாவின் பாதுகாப்பிற்கு நேரடியாக அச்சுறுத்தல் விடுபவையாகவும் இருந்தமை எனது மேற்படி கூற்றிற்கு வலுச்சேர்ப்பதாகும்.

இலங்கை, நேபாளம், பங்களாதேஷ், பூட்டான் ஆகிய நான்கு நாடுகளும் தனது பாதுகாப்பு வலயத்திற்கு இன்றியமையாத பின்லாந்துப் படுத்தப்பட வேண்டிய நாடுகள் என இந்தியா நீண்ட காலமாகக் கருதிவருகிறது. ஆனால் ஸ்கந்தி நேவியப் பிராந்திய நாடுகளைப்போலன்றி மேற்படி நான்கு நாடுகளும் இதை தமது வெளியுறவு மற்றும் பாதுகாப்புக் கோட்பாடுகளின் ஒரு இன்றியமையாத அம்சமாக ஆரம்பத்திலிருந்தே ஏற்க மறுத்து வருகின்றன.

இனி தென்னாசியப் பிராந்தியத்தில் இவ்வாறான ஒரு நிலைப்பாட்டை எடுப்பதற்கு இந்தியா சுதந்திரமடைந்த காலத்திலிருந்து அதற்கு இருந்து வந்த உந்தல்கள் என்ன என்பதையும் அவை காலத்திற்குக்காலம் உலக அரசியற் சூழ்நிலைகளுக்கு ஏற்ப எங்ஙனம் மாற்றமடைந்து வருகின்றன என்பதையும் பார்ப்போம்.

இந்தியா சுதந்திரமடைந்த பொழுது தனது பாதுகாப்பிற்கு இன்றியமையாத ஒரு அரணாக இமயமலைத் தொடரைக் கருதிற்று. ஆனால் இமயமலை அடிவாரத்தின் முக்கிய பகுதிகள் அப்போது தனி இறைமையுள்ள அரசுகளாக இருந்த நேபாளம், புூட்டான், சீக்கிம் மற்றும் காஷ்மீர் ஆகியவற்றின் கட்டுப்பாட்டிலேயே இருந்தன. இவற்றில் காஷ்மீர் இராச்சியத்தின் மன்னர் தனது நாட்டின் உரிமையை இந்தியா சுதந்திரமடைந்த கையோடு அதனுடன் பேரம் பேசிக் கொடுத்து விட்டார். இதைப் பாகிஸ்தான் ஏற்க மறுத்ததும், காஷ்மீர் மீது அது படையெடுத்து அந்நாட்டின் ஒரு பகுதியைக் கைப்பற்றியதும், அச்சிக்கல் இன்றுவரை தொடர்வதும் நீங்களறிந்த விடயங்களே.

இமயமலையின் அடிவாரத்திலிருந்த நாடுகளை தன் நேரடி அல்லது மறைமுக கட்டுப்பாட்டில் வைத்திருக்க வேண்டும் என இந்தியா கருதியமைக்கு ஒரு மிக முக்கியமான போரியல் காரணம் உண்டு. மலையும் சமதரையும் உள்ள ஒரு பிராந்தியத்தில் இருபடைகள் மோதுமாயின் மலை உச்சிகள் யார் கைகளில் உண்டோ அவர்களே வெல்வர் என்பது மரபு வழிப் போரியலின் பொது நியதி. எனவே சீனா, பாகிஸ்தான் ஆகியவற்றின் படைகள் நேபாளம், புூட்டான், சீக்கிம், காஷ்மீர் ஆகியவற்றின் எல்லைபுறங்களாக அமைந்துள்ள இமயமலை தொடரின் முக்கிய உச்சிகளை - குறிப்பாகக் கணவாய்கள், பனிநகர்விடங்கள் (புடயஉநைசள) போன்றவற்றின் மேலாக உள்ளவற்றை - தமது செல்வாக்கினுள் கொணர்ந்து விட்டால் தனது பாதுகாப்பு பெரும் அச்சுறுத்தலுக்கு உள்ளாகிவிடும் என இந்தியா கருதிற்று.

எனவே பிரித்தானிய ஏகாதிபத்தியத்திடம் இருந்து சுதந்திரம் கிடைத்த அடுத்த ஆண்டே அதாவது 1949 இலே இந்தியா இமயமலைத் தொடரின் மிகக் கேந்திரநுட்பம் வாய்ந்த இடத்தில் அமைந்திருத்த புூட்டானுடன் ஒரு பாதுகாப்பு ஒப்பந்தத்தை செய்து கொண்டது. இதன்படி பூட்டான் தனது வெளிவிவகாரங்iளை இந்தியாவின் மதியுரைப்படியே செய்யுமெனவும், ஆனால் இந்தியா அந்நாட்டின் உள்ளக விவகாரங்களில் தலையிடாது எனவும் ஒப்புக் கொள்ளப்பட்டது. 1949ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் கைச்சாத்திடப்பட்ட இந்தியா - பூட்டான் ஒப்பந்தத்தின் 6ஆவது பிரிவின்படி புூட்டான் தனக்குத் தேவையான ஆயுதங்கள், ரவைகள், இயந்திரங்கள் என அனைத்துப் போர்த் தளபாடங் களையும் இந்தியாவினூடாகவே கொள்வனவு செய்ய வேண்டுமென வரையறுக்கப்பட்டது.

இவ்விடத்தில் ஒன்றைக்குறிப்பிட வேண்டும்.

தென்னாசியாவின் பின்லாந்துப்படுத்தலில் அகப்பட்ட நாடுகளுள் சிறிலங்கா பூட்டானை விடக் கவலைக்கிடமான நிலையில் உள்ள தென்பதே அது. இந்தியா - புூட்டான் ஒப்பந்தத்தில் பின்னைய நாட்டின் உள் விவகாரங்களில் தலையிட மாட்டேன் என இந்தியா எழுத்தில் கொடுத்துள்ளது. ஆனால் சிறிலங்காவின் உள்நாட்டுச் சிக்கல்களிலெல்லாம் தலையாய சிக்கலான தமிழ்பேசும் மக்களின் பிரச்சினையை எவ்வாறு தீர்ப்பது என்ற விடயத்தில் இந்தியாவிற்கு மிக முக்கிய பங்கு உள்ளது என இந்திய - இலங்கை ஒப்பந்தம் கூறுகிறது. புூட்டானை அடுத்து இந்தியா நேபாளத்துடன் 1950ஆம் ஆண்டு ஒரு ஒப்பந்தத்தைச் செய்து கொண்டது.

இவ்வொப்பந்தத்தை ஒட்டியும் இந்திய - இலங்கை ஒப்பந்தம் போன்று ஒரு கடிதப் பரிமாற்றம் செய்யப்பட்டது. இக்கடிதப் பரிமாற்றத்தின் உட்கிடை 1959ஆம் ஆண்டு வரை இரகசியமாகவே வைக்கப்பட்டிருந்தது.

(ஒப்பந்தங்களை ஒட்டிய கடித அல்லது குறிப்புப் பரிமாற்றங்கள் (நுஒஉhயபெந ழக டுநவவநசள ழச ழேவநள) ஒப்பந்தங்களைப் போலவே முழுச் சட்டவலுவுள்ளவை என்பது இங்கு குறிப்பிடப்பட வேண்டும்) இந்திய - நேபாள ஒப்பந்தத்தின் படி இந்தியாவின் பாதுகாப்புக்குக் குந்தகமாக நேபாளம் எந்தவொரு வெளிநாட்டுச் சக்தியையும் தனது மண்ணில் அனுமதிக்காது எனவும், இந்தியாவும் அங்ஙனமே நடந்து கொள்ளும் எனவும் இணங்கப்பட்டது.

அத்துடன் அந்த ஒப்பந்தத்தின் ஐந்தாவது பிரிவின்படி நேபாளம் தனது போர்த்தள பாடங்களை இந்தியாவினு}டாகவே வாங்க வேண்டுமெனவும் வரையறுக்கப்பட்டது. ஒப்பந்தம் எழுதியாயிற்று, வேலை முடிந்தது என்றபடி இந்தியா சும்மா இருப்பதில்லை என்பதை இங்கு நாம் நோக்க வேண்டும்.

இந்தியாவின் பிடியிலிருந்து சிறிது சிறிதாக விடுபட்டு தனது நாட்டின் முழு இறைமையை நிலைநாட்டிடும் நோக்கில் நேபாள மன்னர் தனது அடுத்த அண்டை நாடான சீனாவுடன் பலதரப்பட்ட உறவுகளை வளர்க்கலானார். இவ்வுறவு படிப்படியாக வளர்ச்சியடைந்து 1986 - 87இல் சீனாவிடமிருந்து சில போர்த்தளபாடங்களை நேபாளம் வாங்குமளவிற்குச் சென்றது.

இதையறிந்த உடனேயே நேபாளத்துடனான தனது எல்லையை இந்தியா மூடிவிட்டது. இதனால் அந்நாட்டில் பெரும் பொருளாதார நெருக்கடி உருவாயிற்று. இச்சூழலைப் பயன்படுத்தி ஜனநாயகத்துக்கான இயக்கம் என ஒன்று இந்தியாவின் மறைமுக உதவியோடு கிளம்பி மன்னராட்சியின் அதிகாரத்தை மட்டுப்படுத்திடப் போராட்டத்தில் இறங்கியது. இதனால் இந்தியாவின் கைப்பொம்மையாகக் கருதப்பட்ட கிரிஜ பிரசாத் கொய்ராலா பிரதமராக அதிகாரத்திற்கு வந்தார். 1990ஆம் ஆண்டு ஜூன் மாதம் இந்தியப் பிரதமரும் நோபாளப் பிரதமரும் சந்தித்து கூட்டாக ஒரு அறிக்கை வெளியிட்டனர். இதில் நேபாளம் இந்தியாவின் பாதுகாப்பு பற்றிய அக்கறைகளை முழுமையாக மதிக்கும் எனவும் தனது மண்ணில் இந்தியாவிற்கு அச்சுறுத்தலோ பாதுகாப்புக்குத் குந்தகமோ ஏற்படுத்தக்கூடிய மூன்றாம் தரப்பினரை அனுமதிக்காது எனவும், இந்தியாவும் நேபாளத்தைப் பொறுத்தவரை மேற்படியே நடந்துகொள்ளுமெனவும் பாதுகாப்பு விடயங்களில் இரு நாடுகளும் கலந்தோலோசித்தே முடிவுவெடுக்கும் எனவும் பிரகடனப்படுத்தப்பட்டது.

அதாவது 1950ஆம் ஆண்டு உடன்படிக்கையிலிருந்து இம்மியளவும் நேபாளம் வழுவாமலிருக்க வேண்டும் என்பதில் இந்தியா மிக உன்னிப்பாகச் செயல்பட்டு வருவதை இதிலிருந்து நாம் புரிந்துகொள்ளலாம். 1987 இலங்கை - இந்திய ஒப்பந்தமும் இதற்கு விதிவிலக்கல்ல.

1950இல் அப்போது சுதந்திர இராச்சியமாக விருந்த சீக்கிம்முடனும் இந்தியா மேற்கூறியது போன்ற பின்லாந்துப்படுத்தும் ஒப்பந்தமொன்றைச் செய்து கொண்டது. சீக்கிம் இந்தியாவினுடைய 'கையாளலை" எதிர்கொண்டு அல்லது வெட்டியோடி தனது இறைமையைப் பேணிடக் கூடிய தகைமை கொண்ட அரசாட்சியற்ற நாடாக இருந்தமையால் 1975 இல் அதை தனது இருபத்தியிரண்டாவது மாநிலமாக இந்தியா உள்வாங்கிவிட்டது.

இது மட்டுமன்றி பாகிஸ்தானிடமிருந்து தனிநாடாக பங்களாதேஷ் பிரிந்தவுடனேயே அதனுடன் இந்தியா ஒரு பாதுகாப்பு மையப்பட்ட ஒரு நட்புறவு ஒப்பந்தத்தை 1972இல் ஏற்படுத்திக் கொண்டது. இதன்படி பங்களாதேஷ் இந்தியா தவிர்ந்த வேறு எந்த நாட்டுடனும் இராணுவக் கூட்டு வைத்துக்கொள்ளக்கூடாது என வரையறுக்கப்பட்டது. (இவ்வொப்பந்தம் இப்போது காலாவதியாவிட்டதாக அண்மையில் நான் சந்தித்த ஒரு வங்காளப் அரசியல்துறைப் பேராசிரியர் கூறுகிறார்)

இந்தியா பின்லாந்துப்படுத்திய அல்லது பின்லாந்துப்படுத்திட முயன்றுவரும் மேற்படி நாடுகளுக்கும் இலங்கைக்கும் அடிப்படைப் பாதுகாப்பு மற்றும் போரியல் சார் வேற்றுமைகள் உண்டு. தமிழீழத்திற்கும் இவை செல்லுபடியாகும்.

இவை என்ன, இவற்றிற்கு முகம் கொடுத்து எமது முழு இறைமையை விட்டுக்கொடுக்காதபடி நாம் எமது பயணத்தைத் தொடர்வதற்கான அரசியற் கேந்திர சூழல் எங்ஙனம் அமைகிறது என்பதை அடுத்த கிழமை பார்ப்போம்.


நன்றி: வீரகேசரி (28-12-03) & தமிழ்நாதம்.


- aathipan - 12-28-2003

நன்றி அன்பகம். பயனுள்ள கட்டுரைகள்.

இந்தியாவின் அடிமனதில் உள்ள கெட்ட எண்ணம் நன்றாக புரிகிறது இப்போது. முன்பு

ஒருதடவை மாலைதீவில் கூ பரட்சி நடந்தபோது ஓடிப்போய் உதவி செய்தது. அந்த நாட்டுடனும் இந்தவகை ஒப்பந்தம் செய்துகொண்டிருக்கும். எல்லாம் சுயநலம்.

சிங்கள அரசியல்வாதிகளை அடக்க தமிழ்பபோராளிகளை பயிற்றுவித்து உள்ளே அனுப்பியது. பின் உதவுகிறேன் என்று ராணுவத்தை அனுப்பி அப்பாவித்தமிழர்களை அழித்தது. எத்தனை அநியாயம் எத்தனைதடவை எமது கப்பல்களை காட்டிக்கொடுத்து அழித்துள்ளது. வஞ்சக எண்ணம் கொண்ட இந்தியாவை நாமும் வஞ்சகமாகவே அணுகவேண்டும்.

அங்கு வாழும்தமிழர்களுக்கு இது எதுவும் தெரியாது. ஆகவே எமது வெறுப்பு அவர்கள்மேல் திரும்பக்கூடாது.


- anpagam - 01-02-2004

<b>சமாதான முயற்சிகளுக்கு சிங்கள அரசியல் வர்க்கத்தின் ஆதரவின்மையால் ஏற்படப் போகின்ற விளைவை இந்தியாவும் அமெரிக்காவும் தலையிடாவிட்டால் நீதியான, நேர்மையான சமாதானம் இலங்கையில் மலரும் </b>

சர்வதேச சமூகம் எவ்வாறு எதிர்கொள்ளும்?

இனப்பிரச்சினை விடயமாக இராமநாதன் காலத்திலே ஆரம்பித்து 1956 ஆம் ஆண்டு சிங்களம் மாத்திரம் என்ற சட்டம் வந்த காலத்தில் இனக் கலவரங்களையும், வன்முறைகளையும் தமிழர் எதிர் கொண்டனர். அதன் பின்பு 1958, 1961, 1977, 1981, 1983 முதலிய வருடங்களில் இனக் கலவரங்கள் ஏற்பட்டன.

1983 இல் இனக்கலவரங்கள் நடந்த போது அப்பட்டமான பகிரங்கமான இனப்படுகொலைகள் நடந்தேறின. 4000 க்கு மேற்பட்ட அப்பாவி தமிழர்களை பெற்றோல் ஊற்றி எரித்த சம்பவங்கள் நாகரிக உலகில் காணப்படவில்லை. இதை நேரில் கண்ணால் கண்ட இராஜதந்திரிகள் தங்கள் அரசாங்கங்களுக்கு விபரமாக எடுத்துக் கூறிவிட்டார்கள். இதை அறிந்த சர்வதேச சமூகம் அதிர்ச்சி அடைந்ததுடன் இந்தியா உட்பட அநேக நாடுகள் தமிழர்களை அகதிகளாக வரவேற்று உபசரித்தனர். அதேசமயம் சர்வதேச சமூகம் இலங்கை அரசாங்கத்தை காட்டு மிராண்டித்தன்மையான நாட்டின் அரசாங்கமெனவர்ணித்தது ஆகவே 1983 இல் தான் தமிழ் பிரச்சினையில் சர்வதேச சமூகம் அக்கறை கொள்ளத்தொடங்கியது.

அயல் நாடாகிய இந்தியா தகுந்த நடவடிக்கை எடுக்குமென்று எண்ணி ஏனைய நாடுகள் நேரடியாகத் தலையீடு செய்யவில்லை. உண்மையில் பொது நல அமைப்பு நாடுகள் இலங்கை அரசாங்கத்தை, இனப்படுகொலை புரிந்ததன் காரணமாகவம், மனித குலத்துக்கெதிரான குற்றம் புரிந்ததன் காரணமாகவும் அந்த அமைப்பிலிருந்து விலக்கியிருக்க வேண்டும். ஏனெனில், சிம்பாப்வே அரசாங்கம் வெள்ளையர்களிடமிருந்த கமத் தொழில் காணிகளை எடுத்ததற்காக அந்த அரசாங்கத்தை பொதுநல அமைப்பு நாடுகளிலிருந்து தற்காலிகமாக இடை நிறுத்தம் செய்திருந்தது. அது போல் பாகிஸ்தானில் ஜனநாயகத்தை பறித்ததன் காரணமாக பொதுநல அமைப்பு நாடுகள் தற்காலிகமாக பாகிஸ்தானை இடைநிறுத்திவிட்டது. அப்படியானால் சிங்கள அரசாங்கம் பகிரங்க இனப்படுகொலைகளில் ஈடுபட்டகாரணத்தினால் ஐ.நா.வுடைய விதிக் கோட்பாட்டுக்கமைவாகவும் மனித குலத்துக்கு எதிரான காரணத்தினாலும் ஐயவர்தன அரசாங்கத்தை பொதுநல அமைப்பு நாடுகளிலிருந்து விலக்கியிருந்தால் பக்கச் சார்பு இல்லாத மக்கள் நன்றியுடன் வரவேற்றிருப்பார்கள்.

ஆனால், தற்போது சர்வதேச சமூகம் விட்ட தவறுகளை உணர்ந்து இலங்கையில் இரு இனங்களுக்கிடையே நடக்கும் யுத்தத்தை முடிவுக்குக் கொண்டுவர முன்வந்துள்ளது.

ஜனாதிபதி சந்திரிகா ஆட்சியின் காலத்தில் நோர்வே அரசாங்கம் சமாதானத் தீர்வில் ஈடுபட்டது. ஆனால் கதிர்காமரின் கடும் போக்குத் தன்மையினால் நோர்வேயின் முயற்சிகள் தோல்வியைத் தழுவின. 2000 ஆண்டு இறுதியில் ஐக்கிய தேசியக் கட்சி வென்று ஆட்சிக்கு வந்தபின்னர் சர்வதேச சமூகம் எதிர்பாராதவகையில் விடுதலைப்புலிகள் தன்னிச்சையாக யுத்த நிறுத்தத்தை அறிவித்தார்கள். புலிகளின் யுத்த நிறுத்தத்தை, அவர்களை தடைசெய்த நாடுகள் உட்பட அனைத்து நாடுகளும் வரவேற்றன. ஐக்கிய தேசியக் கட்சியும் வரவேற்றதுடன் ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கமும் யுத்த நிறுத்தத்துக்கு உடன்பட்டது. இதன் விளைவாக விடுதலைப் புலிகள் அநேக ஆத்திரமூ ட்டும் செயல்களுக்கு மத்தியிலும் யுத்த நிறுத்தத்தை கடைப்பிடித்தார்கள்.

2001 தொடக்கம் 2003 சித்திரை மாதம் வரையில் உலகில் அநேக இடங்களில் நோர்வே நாட்டின் உதவியுடன் சமாதானப் பேச்சுவார்த்தைகள் நடந்தேறியுள்ளன. ஆனால் இந்தப் பேச்சுவார்த்தைகளினால் ஏற்பட்ட உடன்பாடுகளை அரசாங்கம் அமுல்படுத்தாத காரணத்தினால் விடுதலைப் புலிகள் தற்காலிகமாகப் பேச்சுவார்த்தைகளிலிருந்து விலகி விட்டார்கள்.

சென்ற கார்த்திகை மாதம் 1 ஆம் திகதி இந்த இக்கட்டான சூழ் நிலையிலும், விடுதலைப் புலிகள் தம்மால் தயாரிக்கப்பட்ட, இடைக்கால தன்னாட்சி நிருவாக சபை பற்றிய யோசனைகளை நோர்வே அரசு மூலம் சமர்ப்பித்தார்கள். இந்த யோசனைகளை அறிவித்த 4 ஆம் நாளில் ஜனாதிபதி, பிரதமர் இல்லாத சமயத்தில் மூன்று பிரதான அமைச்சுகளை தன்வசப்படுத்திக் கொண்டார். இதனால் மக்களினால் தெரிவு செய்யப்பட்ட அரசாங்கத்துக்கும் சர்வ அதிகாரங்கொண்ட ஜனாதிபதிக்கும் இலங்கை கண்டிராத மிக மோசமான அரசியல் நெருக்கடி ஏற்பட்டுவிட்டது.

சமாதானத்துக்கு மிக அவசியமானது பாதுகாப்புத்துறை அது தன் வசமில்லாது விடில் சமாதான முன்னெடுப்புகளை தனது அரசாங்கம் செய்யமுடியாதெனச் பிரதமர் சொல்லிவிட்டார். ஆனால், தான் சமாதானப் பேச்சுவார்த்தைகளைச் செய்யாவிட்டாலும் ஜனாதிபதி பாதுகாப்பு அமைச்சைப் பொறுப்பேற்றபடியினால் அவரே சமாதானப் பேச்சுவார்த்தைகளை செய்யும்படி கூறிவிட்டார்.

புரிந்துணர்வு ஒப்பந்த காலங்களில் தென்னிலங்கையே பொருளாதாரத்துறையில் முன்னேற்றத்தைக் கண்டுள்ளது. இதன் விளைவாக, தென்னிலங்கையில் பொருளாதார வளர்ச்சி 5 1ஃ2 வீதம் முன்னேற்றம் ஏற்பட்டது. ஆனால், வடகீழ்த் தமிழ் பிராந்தியத்தில் பொருளாதார வளர்ச்சி 1ஃ2 வீதம் கூட ஏற்படவில்லை. ஆகவே, தென்னிலங்கையைப் பொறுத்தவரை யுத்தமும், சமாதானமும் இல்லாத பொழுதிலும் 5 1ஃ2 தொடக்கம் 6 1ஃ2 வீதம் பொருளாதார வளர்ச்சி ஏற்படும்.

ஆனால், 20 வருடகால யுத்தத்தை எதிர்கொண்ட தமிழ்த் தாயகம் ஒரு 1ஃ4 வீதம் கூ ட பொருளாதார வளர்ச்சியை எதிர்பாக்க முடியாது. இதன் விளைவாக தமிழ்ப் பிராந்தியத்தில் புனர்நிர்மாணம், புனரமைப்பு புனர்வாழ்வு அபிவிருத்தி எல்லாம் கடுமையாகப் பாதிக்கப்படும். இந்த நிலைமையில், விடுதலைப்புலிகளோ அல்லது தமிழ்ச் சமுதாயமோ பொறுமையுடன் இருக்க முடியாது. ஆகவே, இதற்கு சர்வதேச சமூகம் இந்நிலையை எவ்வாறு எதிர்கொள்ளப் போகின்தென்ற கேள்வி உதயமாகின்றது. இந்த விடயத்தில் சர்வதேச சமூகம் இரண்டு விதமான சூழ்நிலைகளை எதிர்பார்க்கலாம்.

யுத்தமும், சமாதானமும் இல்லாத சூழ்நிலையில் யுத்த சூழ்நிலை.

உடனடியாக புனர்நிர்மாணம், புனரமைப்பு புனர்வாழ்வு அபிவிருத்தி முதலிய துறைகளுக்கு ஐரோப்பிய ஒன்றியம், ஜப்பான், கனடா, அவுஸ்திரேலியா, தென்னாபிரிக்கா, அமெரிக்கா முதலிய நாடுகளும், உலக வங்கி, ஆசிய அபிவிருத்தி வங்கி, ஐ.நா. நிறுவனங்களும் ஒன்றிணைந்து புலிகளின் ஒத்தாசையுடன் அவசர நிதி உதவிகளை உதவ வேண்டும். இந்த நிதி உதவிகளை மனிதாபிமானமென்ற அடிப்படையில் உதவ முன்வரலாம்.

இது சர்வதேச சமூகத்தின் மனிதாபிமான தலையீடு என்றும் கருதலாம்.

இந்தச் சர்வதேச மனிதாபிமான தலையீட்டை இலங்கை அரசாங்கம் எதிர்த்தால் ஐ.நா.வுக்கு முறையீடு செய்ய வேண்டிய கடமையுண்டு. அதற்கு மேலாக, சர்வதேச சமூ கமும், உலகவங்கி, ஆசிய அபிவிருத்தி வங்கிகளும் இலங்கை அரசுக்கு நிதியுதவி செய்வதை தற்காலிகமாக நிறுத்துவதற்கு நிர்ப்பந்தமேற்படும்.

அதேநேரத்தில், ஐரோப்ய ஒன்றியம் மறைமுகமாகவோ அல்லது நேரடியாகவோ விடுதலைப்புலிகளின் பொறுமையைச் சோதிக்க வேண்டாமென்று வலியுறுத்துவது கடமை.

யுத்த சூழ்நிலை

சில இராணுவப் பிரிவுகள் விடுதலைப்புலிகளுக்கு எதிராக சில நடவடிக்கைகளை எடுத்தால், அதன் விளைவாக யுத்தம் வெடித்தால், ஐரோப்பிய ஒன்றியம், கனடா, ஜப்பான் முதலிய நாடுகளுக்கு இலங்கையில் இந்த யுத்தத்தில் வெளிநாட்டுச் சக்திகள் பங்குபற்றலாகாது என்று பகிரங்கமாகச் சொல்ல வேண்டிய கடமையுண்டு. அரசாங்கம் யுத்தம் வெடித்தால் அமெரிக்காவையும், இந்தியாவையும் தங்களுக்கு உதவி செய்யும் படி கேட்கக் கூடும். ஆகவே, ஐரோப்பிய ஒன்றியத்தின் முக்கிய நாடுகளான பிரான்ஸ், ஜேர்மனி, நேர்வே, சுவீடன், டென்மார்க் போன்ற நாடுகள் இந்தியாவையும், அமெரிக்காவையும் இராணுவத் தலையீடு அல்லது இராணுவ உதவி அல்லது கடற்படை முற்றுகை முதலியவைகளை தவிர்த்துக் கொள்ள வேண்டுமென்று சொல்லுவது அவசியம். இனிமேல் துரதிர்ர்;டமாக யுத்தம் வெடித்தால் அது பயங்கரமாகவே அமையும்.

ஆகவே, யுத்தம் வெடித்தவுடன் ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் ஐ.நா. பாதுகாப்புச் சபைக்கு அறிவித்து ஐ.நா. மூலமாக யுத்த நிறுத்தத்துக்கு ஒழுங்கு செய்வது அவசியம். ஐ.நா. அங்கீகாரத்துடன், இலங்கையில் அமைதி காப்பதற்கு ஐரோப்பிய ஒன்றியத்தின் படைதான் அனுப்ப வேண்டுமென்ற நிலைப்பாட்டை ஏற்படுத்த வேண்டும். எக்காரணம் கொண்டும் எந்தச் சூழ்நிலையிலும் எந்தச் சந்தர்ப்பத்திலும் அமெரிக்காவோ, இந்தியாவோ, பிரித்தானியாவோ இராணுவ ரீதியாகவோ, அரசியல் ரீதியாகவோ இலங்கை விடயத்தில் தலையிடாக் கொள்கையை இந்த நாடுகள் கடைப்பிடிக்க வேண்டுமென்று பகிரங்கமாக ஐரோப்பிய ஒன்றியம் உலக சமுதாயத்துக்கு குரல் கொடுக்க வேண்டும்.

ஏனெனில், இந்தியா, அமெரிக்கா, பிரித்தானியா, சிங்களச் சமுதாயத்துக்கு பாரபட்சமாக நடந்து விட்டார்கள். இது சகலருக்கும் தெரிந்த விடயம். விசேடமாக இந்தியாவும், அமெரிக்காவும் தலையிடாவிட்டால் நீதியான, நேர்மையான, சமாதானம் இலங்கையில் மலரும் என்பதே தமிழ் மக்களின் கருத்து.

யாழ். குடாநாட்டில் இன்று ஐந்து இலட்சம் மக்கள் வாழ்கின்றனர். ஆனால் யாழ். குடாநாட்டில் ஐம்பதினாயிரத்துக்கு மேற்பட்ட சிங்கள இராணுவத்தினர் இனத்தாலும், மொழியாலும், மதத்தாலும் வேறுபட்ட ஆக்கிரமிப்பு இராணுவமாகவேயுள்ளனர். ஆகவே, பத்து அப்பாவி மக்களைக் கொல்வதற்கு ஒரு இராணுவ வீரர் எந்த அடிப்படையில் நியாயப்படுத்த முடியும். இந்த அநியாயத்தைக் கேட்கவிரும்பாக அமெரிக்காவோ, இந்தியாவோ, பிரித்தானியாவோ இலங்கையில் யுத்தம் ஏற்பட்டால் இராணுவ ரீதியாகவோ, அரசியல் ரீதியாகவோ தலையீடு செய்வதற்கு ஒரு வித உரிமையுமில்லை. நியாயமுமில்லை.

இந்த அடிப்படையில் அமைதிகாக்கும் படையோ? இந்தியப் படைகளோ, அமெரிக்கப் படைகளோ, பிரித்தானியப் படைகளோ சேர்க்கப்படலாகாதென்ற கோரிக்கையை ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் சர்வதேச அரங்குகளிலும் ஐ.நா.விலும் குரல் கொடுக்க வேண்டும்.

நன்றி: தில்லைக்கூத்தன் (தினக்குரல்)


- anpagam - 01-04-2004

<b>இலங்கை தமிழர்களுக்கும் புலிகளுக்கும் உதவும் வகையில் இந்திய வெளியுறவுக் கொள்கை மாற்றப்படவேண்டும் இந்தியப் பிரதமருக்கு மகஜர்</b>
ஜ தமிழ்மாறன் ஸ ஜ சனிக்கிழமை, 03 சனவரி 2004, 1:22 ஈழம் ஸ
இலங்கை வாழ் தமிழ் பேசும் மக்களுக்கும் அவர்களின் ஏக பிரதிநிதிகளான தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் உதவும் வகையில் இந்தியா தனது வெளியுறவுக் கொள்கையில் மாற்றத்தை ஏற்படுத்தவேண்டும் என்று யாழ்ப்பாணத்திலுள்ள மனித உரிமைகளுக்கும் அபிவிருத்திக்குமான தமிழ்ப் பேசும் மக்களின் அமையம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

கொழும்பிலுள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயத்தினு}டாக இந்திய பிரதமர் வாஜ்பாய்க்கு அனுப்பிவைத்துள்ள மகஜரிலேயே இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

மேற்படி அமையத்தின் இணைப்பாளர் சீ.வி.கே. சிவஞானம் கையொப்பமிட்டு அனுப்பியுள்ள அம் மகஜரில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது:-

இலங்கையின் இனப்பிரச்சினைக்கு இறுதியானதும் உறுதியானதுமான தீர்வை ஏற்படுத்துவதற்குரிய வகையில் இலங்கை அரசுக்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இடையில் மீண்டும் பேச்சுவார்த்தையை ஆரம்பிக்க இந்தியா அனைத்து நடவடிக்கைகளையும் உடனடியாக மேற்கொள்ளவேண்டும்.

அதேவேளை எக்கட்டத்திலும் தமிழீழ விடுதலைப் புலிகளை பலவீனப்படுத்தும் எத்தகைய நடவடிக்கையையும் இந்தியா மேற்கொள்ளக்கூடாது.

இலங்கையின் வடக்கு - கிழக்கு மாகாணத்துக்கு சமஷ்டி முறையிலான தீர்வை வழங்குவதற்குரிய அனைத்து ஏற்பாடுகளையும் அர்த்தமுள்ள வகையில் இந்தியா மேற்கொள்ளவேண்டும்.

இலங்கையில் கடந்த 50 வருடங்களாக இடம்பெற்றுவரும் இனப்பிரச்சினையைத் தீர்த்து வைப்பதற்கு நீதியான நடவடிக்கைகளை இந்தியா வலியுறுத்தவேண்டிய கடப்பாடு உள்ளது என நாம் திடமாக நம்புகின்றோம்.

தமிழ் பேசும் மக்கள் அனுபவித்து வருகின்ற துன்பங்கள், துயரங்களினால் நாம் எமது மனிதத்தை இழந்த நிலையில் உள்ளோம்.

எமக்கான அடிப்படை உரிமைகள் அனைத்துத்துறைகளிலும் மறுக்கப்பட்டு வருவது இன்று வழமையான நடவடிக்கையாகிவிட்டது.

எமது தாயகத்தின் கரையோரப்பகுதிகளை இராணுவத்தினர் முற்றுகையிட்டு அங்கு இருந்து வருவதால் மீன்பிடித்தொழிலை மட்டுமே நம்பியுள்ள 30 சதவீதமான எமது மக்கள் சொல்ல முடியாத பல்வேறு கஷ்டங்களையும் துன்பங்களையும் அனுபவித்து வருகின்றனர்.

இந்நிலையில் தமிழ்நாட்டு அரசு எமது தமிழ் மீனவர்கள் விடயத்தில் சரியான நிலைப்பாட்டினை கொண்டிருக்கவேண்டும் என இந்திய அரசாங்கம் உரிய அறிவுறுத்தல்களை வழங்கவேண்டும்.

இலங்கைத் தமிழர்கள் வடக்கு - கிழக்கு மாகாணத்தில் சுயாட்சி பெற்று வாழக்கூடிய வகையில் உரிய ஏற்பாடுகளை காலந்தாழ்த்தாது செய்யவேண்டும்.

இதேவேளை இந்தியா உட்பட சர்வதேச சமூகத்தின் முயற்சியுடன் நோர்வேயின் அனுசரணையில் ஆரம்பித்து வைக்கப்பட்ட சமாதானப் பேச்சுவார்த்தை தடைப்பட்ட நிலையில் அதனை மீளவும் காலதாமதமின்றி ஆரம்பிக்க இந்தியப் பிரதமராகிய நீங்கள் தென்பகுதியில் இருக்கும் அரசியல் சக்திகளுக்கு அழுத்தங்கொடுக்கவேண்டும்.

நன்றி: வீரகேசரி & புதினம்.com


- aathipan - 01-04-2004

நல்ல முயற்ச்சி


- anpagam - 01-05-2004

<b>இந்திய கடற் பாதுகாப்பு வலயத்தில் சிறிலங்கா</b>
டி. சிவராம் (தராக்கி)


உபகண்டத்தை புவியியல் hPதியாக இரண்டாகப் பிரிக்கலாம். ஒன்று இந்தியப் பெருநிலப்பரப்பு. மற்றது இந்தியக் குடாநாடு (Pநniளெரடயச ஐனெயை) போன கிழமை நேபாளம், புூட்டான், சீக்கிம், காஷ்மீர் ஆகியவை தொடர்பாக இந்தியா கொண்டிருந்த, கொண்டுள்ள பாதுகாப்புக் கரிசனைகள் பற்றியும் அவற்றையொட்டி அது செய்து கொண்ட உடன்படிக்கைகள், நடவடிக்கைகள் என்பன பற்றியும் பார்த்தோம்.

பங்களாதேஷ் உட்பட மேற்படி நாடுகள் அனைத்தும் இந்திய பெருநிலப்பரப்பின் பாதுகாப்பு வலயமென டெல்லியின் கேந்திரத் திட்டமிடலாளர் கொள்வதின் அங்கங்களாகும். இந்தியாவிற்குச் சுதந்திரம் கிடைத்த காலத்திலிருந்து வடபாலுள்ள பெருநிலப்பரப்பின் எல்லைகளையே டெல்லி ஆட்சியாளர் தமது நாட்டின் பாதுகாப்பிற்கு இன்றியமையாதபடி வலுப்படுத்திட வேண்டிய பிராந்தியமாகக் கருதிவந்தனர். பெருநிலப்பரப்பின் மேற்கிலும் கிழக்கிலும் பாகிஸ்தான் (இன்றைய பங்களாதேஷ் அன்றைய கிழக்குப் பாகிஸ்தான்) வடக்கிலும் கிழக்கிலும் சீனா என இந்தியாவுடன் கடுமையாக முரண்பட்ட இருநாடுகள் அமைந்திருந்தன. பிரித்தானியர் தன்னாட்சி கொடுத்துச்சென்ற கையோடு காஷ்மீரை கைப்பற்றுவதற்காக இந்தியாவும் பாகிஸ்தானும் போரிட்டன. பின்னர் எல்லைச்சிக்கல் காரணமாக இந்தியாவிற்கும் சீனாவிற்கும் போர்மூண்டது. இதில் இந்தியப் படைகளை சீன இராணுவம் தோற்கடித்தது.

இந்தியப் பெருநிலப்பரப்பில் இங்ஙனமாக போர்களும், உரசல்களும், கடும் முரண்பாடுகளும் நீண்டகாலமாகத் தொடர்ந்தன.

இதனால் தவிர்க்க முடியாதபடி இந்தியாவின் பாதுகாப்பு பற்றிய கவனம் பெருமளவு தனது பெருநிலப்பரப்பின் வடக்கு, மேற்கு, கிழக்கு எல்லைகளிலேயே குவிந்திருந்தது. பெருநிலப்பரப்பிற்கிருந்த நேரடி அச்சுறுத்தல்கள் காரணமாக தனது தரைப்படைகள், வான்படை என்பவற்றின் வளர்ச்சியிலேயே இந்தியா ஆரம்பத்தில் அதிக நாட்டம் செலுத்திற்று.

ஆனால் இந்தியாவின் பெருநிலப்பரப்புப் போலன்றி அதன் குடாநாடு எதுவித நேரடி அச்சுறுத்தலையும் கொண்டிருக்கவில்லை. அதன் கிழக்குப்புறம் வங்காள விரிகுடா, மேற்காக அரபிக் கடல், தென்புறம் பாக்குநீரிணை, இலங்கை, மாலைதீவு என்பன அமைந்துள்ளன. இதில் வங்காள விரிகுடாவில் தோன்றக் கூடிய எந்த அச்சுறுத்தலையும் கண்காணிக்கவும் அதனூடாகச் செல்லும் கடற்பாதைகளைக் கண்காணிக்கவும் மிக ஏதுவான அந்தமான் நீக்கோபார் தீவுகள் இந்தியாவின் கையில் உள்ளன.

மேற்குப்புறமாக அரபிக்கடலில் உள்ள இலட்சத் தீவுகளும் இந்தியாவின் கையிலேயே உள்ளன. இவ்விரு இடங்களையும் போரியல் நோக்கில் அது பேணிவந்துள்ளது. இந்த இரு இயற்கையான பாதுகாப்பு அரண்களும் இந்தியக் குடாநாட்டின் பாதுகாப்பிற்குப்போதுமென்ற கருத்தே ஆரம்பத்திலிருந்து டெல்லி ஆட்சியாளர் மற்றும் கேந்திரத் திட்டமிடலாளர் ஆகியோரின் எண்ணமாக நிலவிற்று. இதற்கு மாறாக இந்தியாவின் பாதுகாப்பிற்கு பரந்துபட்ட இந்து சமுத்திரப் பிராந்தியம் அனைத்திலும் அது ஆதிக்கம் செலுத்திடக்கூடிய முறையில் வளர்ச்சியடைவது இன்றியமையாததாகும் என கே.எம். பணிக்கர் என்ற தென்னிந்திய அறிஞர் வலியுறுத்தினார்.

1945 இல் சுதந்திர இந்தியாவின் கடற்பலம் எங்ஙனம் அமைய வேண்டும் என அவர் எழுதிய நூலில் மொறிசியஸ் தீவு, சிங்கப்பூர் செங்கடலின் நுழைவாயிலில் அமைந்துள்ள ஏடன் (யுனநn) (துறைமுக நகரம், மற்றும் சொக்கோட்ராதீவு (ளுழஉழவசய) என்பன இந்தியாவின் பிடிக்குள் இருப்பதும், பர்மா (தற்போதைய மியன்மார்) இலங்கை என்பவற்றை இந்தியாவின் அரசியற் செல்வாக்கிற்குட்பட்ட நாடுகளாக்குவதும் அதன் வருங்காலப் பாதுகாப்பிற்கும் வளர்ச்சிக்கும் அவசியம் என வாதிட்டார். 16 ஆம் நூற்றாண்டில் கடல் மீது தன் ஆதிக்கத்தை இந்தியா இழக்கும் வரை அது தன் சுதந்திரத்தை இழக்கவில்லை எனப் பணிக்கர் எழுதினார்.

16 ஆம் நூற்றாண்டில் இந்தியக் கடலின் அதிபதிகளாக இருந்தவர்கள் சாமூதிரிகள் என்ற கேரளக் கரையோரத்தை ஆண்ட சேர மன்னர் வழிவந்த அரசர்கள் என்பதும், வட இந்திய உயர்சாதிகளிடையே கப்பலேறுவது, கடல் கடப்பது என்பன செய்யப்படத்தகாத பாவமாகக் கருதப்பட்டன என்பதும் பணிக்கர் தனது இந்தியத் தேசிய விடுதலை உணர்வு காரணமாக கூறாது விட்ட விடயங்களாகும்.

(புறநானூறு, பதிற்றுப்பத்து ஆகிய சங்க நூல் ஏடுகளைத் தேடிப் பதிப்பிக்க முற்பட்ட வேளையில் பண்டைய சேர மன்னர் சிலர் கடலோட்டிய, கடல் பிறக்கோட்டிய என்ற பட்டங்களுடன் குறிப்பிடப்பட்டிருந்ததாகவும் சாமூதிரி மன்னர்கள் பற்றி தனது கேரள நண்பர் ஒருவரூடாகத் தெரிய வந்தபோது இது என்ன என்பது பற்றித் தனக்குத் தெளிவேற்பட்டதாகவும் உ. வே. சாமிநாதய்யர் அவருடைய வாழ்க்கை வரலாற்றில் குறிப்பிடுகிறார்)

இனி விட்ட இடத்திற்கு வருவோம். மேற்படி இந்தியாவின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட வேண்டுமாயின் இந்து சமுத்திரப் பிராந்தியம் எங்கும் அதன் கடலாதிக்கம் நிலை நிறுத்தப்பட வேண்டும் என கே.எம். பணிக்கர் கூறிய கருத்து பெருநிலப்பரப்பு மையப்பட்ட வட இந்திய கேந்திரத்திட்ட மிடலாளரிடம் நீண்டகாலம் பெரிதாக எடுபடாமலேயே போயிற்று.

இந்தியா தனது கடல் எல்லைகளை வரையறுப்பதற்கும் அவற்றைப் பாதுகாக்க நடவடிக்கை எடுப்பதற்குமான தேவை முதன் முதலில் 1965 இல் ஏற்பட்டது. இவ்வாண்டு இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்குமிடையில் போர் மூண்டபோது இந்தோனேசிய அரசு பாகிஸ்தானுக்கு ஆதரவாக தனது கடற்படையை அனுப்ப முனைந்ததோடு மட்டுமல்லாமல் இந்தியப் படைத்தலைமையை திசை திருப்பிடும் நோக்கில் அந்தமான் நிக்கோபார் தீவுகள் மீது படையெடுக்கப் போவதாகவும் சைகை காட்டிற்று. அத்துடன் பாகிஸ்தானுக்கு சில சண்டை வானு}ர்திகளை அனுப்புவதற்கு ஏதுவாக இலங்கையின் வான்படைத் தளங்களை பயன்படுத்த இந்தோனேசிய அரசு அனுமதி கோரிற்று. இந்து மாகடலின் பெயரை இந்தோனேசிய சமுத்திரம் என மாற்றவேண்டும் என்றும் அது கூறிற்று. இந்தோனேசியாவின் இந்தச் செயலே இந்திய ஆட்சியாளரை முதன் முறையாக வங்கக்கடலில், குறிப்பாகத் தென்கிழக்காசியாவின் நுழைவாயிற் பிராந்தியமான அந்தமான் நிக்கோபார் தீவுகளையும் தனது கிழக்குக் கரையை அண்டிய ஆழ்கடலையும், பலப்படுத்திடக்கூடிய கடற்படை விரிவாக்கத்தைப் பற்றி எண்ண வைத்தது எனலாம். ஆயினும் அதே ஆண்டிலேயே இந்தோனேசியாவில் இராணுவப் புரட்சி மூலம் பதவிக்கு வந்த அரசு இந்திய விரோதப் போக்கை கைவிட்டதால் டெல்லி ஆட்சியாளர் இந்தியப் பெருநிலப்பரப்பின் பாதுகாப்பு சிக்கல்களில் மீண்டு தம் கவனத்தை குவிக்கலாயினர். ஆனால் இப்போக்கு 1971 இந்திய - பாகிஸ்தான் போர் காரணமாக முற்றாக மாறிற்று. அப்போரில் கிழக்குப் பாகிஸ்தானில் (பங்களாதேஷ்) அந்நாட்டின் படைகளை முறியடிக்க இந்தியாவிற்கு உதவிய முக்கியமான விடயம் அதன் கடற்படைப் பலமே. 'அந்தமான் நிக்கோ பார் தீவுகள் எமது கையில் இருந்தமையாலேயே நாம் கிழக்குப் பாகிஸ்தான் படைகளை தனிமைப் படுத்தி அவற்றின் மூலாதாரமாக இருந்த கடல்வழி வழங்கற் பாதைகளை முற்றாக துண்டிக்கக்கூடியதாயிற்று" என அப்போரில் பங்குபற்றிய இந்திய கடற்படைத் தளபதி கூறுகிறார். இப்போரின் போது வங்காள விரிகுடாவினுள் அமெரிக்கா பாகிஸ்தானுக்குச் சார்பாக தனது விமானந்தாங்கிக் கப்பலொன்றை அச்சுறுத்தலாக அனுப்பிவைத்த சம்பவமும் வங்காள விரிகுடாப் பிராந்தியத்தில் தனது நிலையை போரியல் hPதியாகவும், பொருளாதார hPதியாகவும் வரையறுத்து வலுப்படுத்திட இந்தியாவைத் து}ண்டிற்று.

1971 இந்தியப் பாகிஸ்தான் போரின்போது கிழக்குப் பாகிஸ்தான் மீது இந்திய கடற்படை கடற்தடை (யேஎயட டீடழஉமயனந) போட்டபோது பாகிஸ்தான் வான்படை இங்கு வந்து எரிபொருள் நிரப்பிச்செல்ல சிறிலங்கா அனுமதித்தது. இது டெல்லிக்கு பெரும் கடுப்பை உண்டாக்கிற்று. அதுமட்டுமன்றி பங்களாதேஷ் போருக்குப் பின்னர் இந்தியாவின் படைத்துறை வளர்ச்சி மற்றும் கடலாதிக்கம் என்பவற்றை கண்டு கவனங்கொண்ட சிறிலங்காவின் வெளியுறவுக் கோட்பாட்டாளர் சீனாவுடன் கடற்படைசார் உறவுகளை வளர்த்தெடுக்கத் தலைப்பட்டனர். வங்காள விரிகுடாவில் 1971 இன் பின் இந்தியா எடுக்க முனைந்த கடலாதிக்கப் போக்கினை தனது கடற்பிராந்தியத்தில் ஓரளவாயினும் சமநிலைப்படுத்தும் உள்விருப்பில் சிறிலங்கா சீனாவிடம் கடற்படைக் கலங்களை வாங்கிற்று. இந்தியாவின் கடல் விரிவாக்க நோக்கங்கள் பற்றி சிறிலங்கா ஆட்சியாளர் கொண்டிருந்த சஞ்சலங்களை சீனா தனக்குச் சாதகமாகப் பயன்படுத்தத் தவறவில்லை.

1971 பங்களாதேஷ் போரின்போது பாகிஸ்தான் வான் படைக்கு எரிபொருள் நிரப்பிக் கொண்டு களமுனை செல்ல சிறிலங்கா அனுமதித்தமை டெல்லிக்கு எரிச்சலு}ட்டியபோதும் திருமதி சிறிமாவோ பண்டாரநாயக்காவின் அரசு அமெரிக்க ஏகாதிபத்திய எதிர்ப்புக் கோட்பாட்டைக் கடைப்பிடித்தமையாலும் அவருக்கும் இந்தியப் பிரதமர் இந்திராகாந்தி, உயர் டெல்லி அதிகாரிகள் ஆகியோருக்குமிடையில் நெருங்கிய உறவு இருந்தமையாலும் இந்து சமுத்திரப் பிராந்தியம் சம்பந்தப்பட்ட பொதுவிடயங்களில் இரு நாடுகளுக்குமிடையில் உடன்பாடு நிலவியது.

இக்காலகட்டத்தில் இந்து சமுத்திரப் பிராந்தியத்தில் அமெரிக்காவின் கடலாதிக்க வளர்ச்சி பற்றியே இந்தியாவும் அதன் நேச நாடான சோவியத் யுூனியனும் பெரும் அக்கறை கொண்டிருந்தன. அமெரிக்கா டியுகோ கார்சியா தீவில் அணு ஆயுதங்களையும் அணுவாயுதக் கப்பல்களையும் நிறுத்தி வைப்பதற்கான தளத்தை நிறுவியது. இது இந்தியாவிற்குப் பெரும் அச்சுறுத்தலை அக்கால கட்டத்தில் ஏற்படுத்திற்று. இதனாலேயே சிறிலங்காவை அமெரிக்க எதிர்ப்பணியில் தன்னோடு அணைத்துச் செல்வதிலும் சிற்சில விட்டுக்கொடுப்புகள் மூலம் அதற்குத் தன்பால் சில கடப்பாடுகளை ஏற்படுத்துவதிலும் அப்போது இந்தியா கவனமாக இருந்தது.

இதுவரை காலமும் தனது பெருநிலப்பரப்பின் பாதுகாப்பு வலயத்திலேயே குறியாக இருந்த இந்தியாவின் பார்வை இக்காலப்பகுதியில்தான் தனது தெற்குக் கடலெல்லைப் பக்கம் திரும்பிற்று.

இதன் விளைவாகவே இந்து சமுத்திரச் சமாதானப் பிராந்தியம் என்ற கோட்பாட்டை ஐக்கிய நாடுகள் பொதுச்சபையின் தீர்மானமாக நிறைவேற்றிட இந்தியாவும் சோவியத் யுூனியனும் முனைந்தன. இந்தத் திட்டத்தினுள் அவை சிறிலங்காவை வெற்றிகரமாக உள்வாங்கின.

இந்து சமுத்திரப் பிராந்தியத்தில் அமெரிக்கக் கடலாதிக்கத்திற்கெதிரான மேற்படி தீர்மானம் சிறிலங்காவினால் முன்மொழியப்பட்டு நிறைவேற்றப்பட்டது.

இதை மேலும் வலுவுூட்டும் வகையில் 1976 ஆம் ஆண்டு கொழும்பில் நடைபெற்ற அணிசேரா நாடுகளின் உச்சிமாநாட்டின்போது சிறிலங்கா, இந்தியா என்பவற்றின் முயற்சி காரணமாக டியாகோ கார்சியா தீவில் அமெரிக்காவின் படைத்தளம் இந்து சமுத்திரப் பிராந்தியத்தில் உள்ள நாடுகளின் இறைமைக்கும் பிராந்திய ஒருமைப்பாட்டிற்கும் பெரும் அச்சுறுத்தலாக அமைந்துள்ளதாக ஒரு கடுமையான அமெரிக்க எதிர்ப்புக் கண்டனம் நிறைவேற்றப்பட்டது.

இந்து சமுத்திரப் பிராந்தியத்தில் அமெரிக்க அணு ஆயுதத்தளம் அமைக்கப்பட்டமையும் 1971 இந்திய பாகிஸ்தான் (பங்களாதேஷ்) போரும் இந்தியாவிற்கு தன் கடற்பாதுகாப்பு வலயம் பற்றிய பெரும் அக்கறையை உண்டாக்கின என ஏலவே கண்டோம். இந்த அக்கறையின் முக்கிய வெளிப்பாடாக வங்காள விரிகுடாவில், குறிப்பாக இலங்கையைச் சுற்றிய கடற்பிராந்தியத்தில், தனது எல்லைகளை இந்தியா சட்ட hPதியாகவும் பாதுகாப்பு நோக்கிலும் வரையறுத்துக் கொண்டது.

<b>இதன் முதற்படியாக 1974 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 26 ஆம் திகதி கொழும்பிலும் 28 ஆம் திகதி டெல்லியிலும் இலங்கை - இந்தியக் கடல் எல்லை ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது. இதில் கச்சதீவை விட்டுக்கொடுத்ததன் மூலம் இலங்கையைத் தன்பால் நிரந்தர கடமைப்பாடு கொள்ள வைத்தது இந்தியா. அமெரிக்கா, சீனா ஆகியவற்றின் பக்கம் சிறிலங்கா சாய்ந்திடாமல் இருக்க இந்தியா சிங்கள ஆட்சியாளர்களுக்கு வழங்கிய ஒருவகை நிரந்தர கையுூட்டுதான் கச்சதீவு எனலாம்.</b> இதையடுத்து 1976 இல் மன்னார் வளைகுடா வங்காள விரிகுடா, பாக்கு நீரிணை, இராமர் அணை (தீடை) ஆகிய கடற்பகுதிகளில் எல்லைகள் மிக விரிவாக வகுக்கப்பட்டன. (இவ்வொப்பந்தத்தில் இவை பாகைகளில் வரையறுக்கப்படுகின்றன) 1976 நவம்பர் மாதம் மன்னார் வளைகுடாவில் இந்தியா, இலங்கை, மாலைதீவு ஆகிய மூன்றுக்குமான ஒரு முச்சந்திப் பொது எல்லையை வரையறுக்கும் ஒப்பந்தமும் கைச்சாத்தாகிற்று. (வுசi - தரnஉவழைn யபசநநஅநவெ) 1976 இந்திய - இலங்கை கடல் எல்லை ஒப்பந்தத்தைச் சட்டமாக்கும் வகையில் சிறிலங்கா அரசு கடற் பிராந்தியச் சட்டம் இல. 22 என்பதை ஏற்படுத்தியது. இதில் வெளிநாட்டுப் போர்க்கப்பல்கள் இலங்கையின் முன் அனுமதியின்றி அதன் கடல் எல்லைக்குள் பயணிக்கமுடியாது எனக் கூறப்பட்டது.

இவ்வாறாக இலங்கையை தனது தென் கடல் மற்றும் வங்காள விரிகுடா சார்ந்த பாதுகாப்பு வலயத்தினுள் கொண்டுவந்து அமெரிக்காவின் இந்து சமுத்திர மேலாதிக்கத்தை மட்டுப்படுத்திடலாம் என்ற இந்தியாவின் எண்ணத்தில் மண் விழ நீண்டகாலம் எடுக்கவில்லை.

நன்றி: வீரகேசரி 04.01.04 & தமிழ்நாதம்


- anpagam - 01-05-2004

<b>இலங்கைக்கு அகதிகளாக செல்லும் போராட்டம்: மீனவர்கள் முடிவு</b> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> :wink: :?

ஜனவரி 04இ 2003
ராமேஸ்வரம்:

இலங்கைக்கு அகதிகளாக பஞ்சம் பிழைக்கச் செல்லும் நூதனப் போராட்டத்தை நடத்த ராமேஸ்வரம் மீனவர்கள் மேற்கொள்ளவுள்ளனர்.


ராமேஸ்வரம் மற்றும் புதுக்கோட்டை பகுதிகளைச் சேர்ந்த தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் அடிக்கடி பிடித்துச் சென்று விடுவது நடந்த வருகிறது இதனால் பிழைப்புப் போய் வெறுத்துப் போன நிலையில் உள்ளனர் தமிழக மீனவர்கள்.

பல கட்டப் போராட்டங்களை நடத்தி விட்ட அவர்கள் தற்போது இறுதிக் கட்டமாக காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். வருகிற 12ம் தேதி அனைத்து மாவட்ட மீனவர்களும் வேலைநிறுத்தப் போராட்டத்தில் கலந்து கொள்கிறார்கள்.

அதன் பின்னர் 14ம் தேதி அனைத்து மாவட்ட மீனவர்களும் பங்கேற்கும் ரயில் மறியல்இ சாலை மறியல் போராட்டம் நடக்கவுள்ளது. அதன் பின்னர் ராமேஸ்வரத்திலிருந்து இலங்கைக்கு அகதிகளாக பஞ்சம் பிழைக்கச் செல்லும் நூதனப் போராட்டத்தையும் மீனவர்கள் நடத்தவுள்ளனர்.

அதன்படி படகுகள் மூலம் இலங்கைக்குச் சென்று அங்கு சிறையில் அடைக்கப்பட்டுள்ள மீனவர்களை மீட்பது அல்லது அகதிகளாக அங்கு தஞ்சம் புகுவது என்று மீனவர்கள் தீர்மானமாக முடிவெடுத்துள்ளனர்.

மீனவர்களின் இந்த முடிவால் ராமேஸ்வரம் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
நன்றி : thatstamil.com

:roll:
இலங்கை இந்திய தமிழருக்கு ஓர் நல்ல சிந்திக்க வைக்கும் செய்தி(இந்தியமக்களுக்கல்ல <!--emo&Wink--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/wink.gif' border='0' valign='absmiddle' alt='wink.gif'><!--endemo-->) உண்மையில் நல்ல யோசனை...... நல்ல நக்கல்..... யார் யாருக்காக... யாருக்காகவேண்டி... என்ன எண்ணத்துடன்... யாம் அறியோம் பராhலமே....
இப்படியான கருத்து.... எப்படி... :!: :?: Idea :wink: உண்மையில் எங்கிருந்து வந்தது சிந்திக்க வேண்டியது ... தமிழர்கள்என்றால் பிரச்சனை இல்லை ஆனால் ஆரையோ ஆர் என்னம் சீண்டிபார்கிறார்கள் போல் உள்ளது அல்லவா....... விளங்குபவர்களுக்குமட்டும் விளங்கினால் போதும்..... <!--emo&Wink--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/wink.gif' border='0' valign='absmiddle' alt='wink.gif'><!--endemo--> இது எனது தனிப்பட்ட கருத்து Arrow


- anpagam - 01-05-2004

<b>மாறிவரும் இந்திய அனுகுமுறை; ஆதிக்கம் செலுத்த புதிய வியூகம்!</b>

ஹக்கீமின் இரண்டாவது டிýல்லி விஜயம்

இலங்கையின் உள்நாட்டு விவகாரங்களில் கடந்த பல வருடங்களாக மௌனமான போக்கைக் கடைப்பிடிýத்து வந்த இந்தியா அண்மைக்காலமாக மீண்டும் தனது ஆதிக்கத்தை நிலைநாட்டும் போக்கில் பல்வேறு வியூகங்களை வகுத்துச் செயற்பட்டு வருவதைக் காணக்கூýடிýயதாகவுள்ளது.

இலங்கையின் இனநெருக்கடிý விவகாரம் தொடர்பான விடயங்களில் விடுதலைப் புலிகள் உட்பட பெரும்பாலான தமிழ்க் கட்சிகளுடனான உறவுகளைக் கைவிட்ட நிலையில் புதியதோர் அரசியல் அனுகுமுறையை கடைப்பிடிýக்கும் செயற்பாடுகளில் இந்தியா ஈடுபட்டு வருவதாக எழும் குற்றச்சாட்டுகளை எவரும் நிராகரித்துவிட முடிýயாது.

பெரும்பாலான தமிழ் இயக்கங்களுடன் இருந்த உறவுகளை முற்றாகத் துண்டிýத்துள்ள இந்தியத் தரப்பினர் தென்னிலங்கையின் கடும்போக்குடைய சிங்கள இனவாதக் கட்சிகள் மற்றும் வடக்கு, கிழக்கிலுள்ள முஸ்லிம் அமைப்புகளுடன் நெருக்கம் கொண்டுள்ளதையும் அண்மைய அரசியல் நடவடிýக்கைகள் உணர்த்தி நிற்கின்றன.

விடுதலைப் புலிகளுக்கும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் அரசுக்குமிடையே போர் நிறுத்தம் புரிந்துணர்வு உடன்படிýக்கை என்பன ஏற்பட்டு ஆறு சுற்றுப் பேச்சுவார்த்தைகள் இடம்பெற்று தற்காலிக பின்னடைவு தோன்றியுள்ள இன்றைய சூýழலிலேயே இந்தியாவின் ஈடுபாடு அதிகரித்து வருவதை அவதானிக்க முடிýகின்றது.

அரசு- விடுதலைப் புலிகள் புரிந்துணர்வு உடன்படிýக்கைக்கு பின்னரான காலகட்டத்தில் அது தொடர்பான பல்வேறு விடயங்களில் அதிகரித்து வரும் அமெரிக்க மற்றும் ஜப்பானின் இலங்கை மீதான அதிகளவிலான நாட்டம் என்பனவும் அயலகத் தரப்பினரின் மீண்டும் தொடங்கும் ஈடுபாட்டுக்கான காரணங்களில் ஒன்றென்பதையும் எவரும் மறுதலித்துவிட முடிýயாது.

இதனைவிட தமது தயவின்றி விடுதலைப் புலிகளுக்கும்- பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் அரசுக்குமிடையிலான சமாதானப் பேச்சுவார்த்தைகள் மூýலம் நிரந்தரத் தீர்வொன்று எட்டப்படுவதையும் இந்தியா அனுமதிக்கப்போவதில்லையென்பதையும் சமகால நிகழ்வுகள் துல்லியமாக கோடிýட்டுக் காட்டுகின்றன.

இதனை ஒட்டிýய நிகழ்வுகளாகவே தென்னிலங்கை இனவாதக் கட்சிகள் மற்றும் வடக்கு, கிழக்கு முஸ்லிம் அமைப்புகள் என்பவற்றுடன் நெருங்கிச் செல்லும் போக்கை அமைத்துள்ளது.

}லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும், அமைச்சருமான ரவூப் ஹக்கீம் மற்றும் கட்சியின் முக்கியஸ்தர்கள் அடங்கிய குழுவினரின் அண்மையகால இந்தியாவுக்கான விஜயம் இதனையொட்டிýயதாகவே இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இவர்களின் முதலாவது விஜயத்தின்போது அங்குள்ள முக்கிய தலைவர்களுடனான சந்திப்புகள் மட்டுமன்றி இந்திய மாநில அரசியல் அமைப்பில் சிறுபான்மைச் சமூýகங்களின் அரசியல் அபிலாiர்கள் எவ்வாறு உள்ளடக்கப்பட்டுள்ளன என்பது குறித்து ஆராயப்பட்டுள்ளன.

வடக்கு, கிழக்கு முஸ்லிம் சமூýகத்தின் அரசியல் உரிமைகளும் அவ்வாறானதோர் திட்டத்தின் அடிýப்படையில் அமைவதன் மூýலமே அவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த முடிýயுமென்று இந்தியாவுக்கான விஜயத்தின் பின்னர் }லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைமைத்துவம் கருத்து வெளியிட்டு வருவதையும் காணக் கூýடிýயதாகவுள்ளது.

இதெல்லாவற்றிற்கும் அப்பால் கடந்த வாரம் மீண்டும் திடீரென்று இந்தியாவுக்கான விஜயத்தை மேற்கொண்ட }லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் அந்த விஜயம் தொடர்பான விடயங்கள் வெளியே கசியத் தொடங்கியதையடுத்து அதுவொரு தனிப்பட்ட விஜயம் என்று கூýறிய போதிலும் அதன் பின்னணியில் அரசியல் உள்நோக்கம் உள்ளமையை எவரும் நிராகரிக்க முடிýயாது.

இதெல்லாவற்றிற்கும் அப்பால் கிழக்கில் அண்மைய காலங்களில் திடீரென்று முஸ்லிம் பிரதேசங்களில் நடத்தப்படும் ஹர்த்தால், கடையடைப்பு மற்றும் தமிழ்-முஸ்லிம் சமூýகங்களிடையேயான வன்முறைச் சம்பவங்கள் என்பவற்றின் உள்நோக்கம் சமாதான முயற்சிகளை சீர்குலைப்பதேயாகும் என்று தமிழ் அரசியல் தலைவர்களால் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளமையையும் கவனத்தில் கொள்ளவேண்டும்.

இதனிடையே அயலகத்துடன் நெருக்கமான உறவுகளை மேம்படுத்திக் கொள்வதில் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க மட்டுமன்றி பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் போட்டிý போட்டுக் கொண்டு செயற்படுவதையும் நிராகரித்து விட முடிýயாது.

குறிப்பாக பாதுகாப்புத்துறை சார்ந்த விடயங்களில் இந்தியாவுடன் நெருங்கிச் செல்லும் இலங்கையின் அரசியல் போக்குகள் பலாலி விமானத்தள விஸ்தரிப்பு என்ற போர்வையில் இந்தியாவின் தலையீடு உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

தமிழ்த் தேசிய கூýட்டமைப்பில் அங்கம் வகிக்கும் தமிழர் விடுதலைக் கூýட்டணி, அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ், தமிழீழ விடுதலை இயக்கம் (ரெலோ), ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி (ஈ.பி.ஆர்.எல்.எவ்-சுரேர்; அணி) மற்றும் விடுதலைப்புலிகள் என்பவற்றுடன் அரசியல் உறவுகளை கைவிட்டுள்ள அயலகத்தினர் தென்னிலங்கை இனவாதக் கட்சிகள் வடக்கு-கிழக்கு முஸ்லிம் அரசியல் கட்சிகள் என்பவற்றுடன் நெருங்கிச் செல்லும் போக்கு எதனை வெளிக்காட்டிý நிற்கின்றது.

நன்றி: தினக்குரல்


- anpagam - 01-06-2004

<b>இலங்கை அரசியற் குழப்பங்களைத் தீர்க்க இந்தியா தலையிடவுள்ளது? </b>
ஜ காவலு}ர் கவிதன் ஸ ஜ புதன்கிழமை, 07 சனவரி 2004, 1:12 ஈழம் ஸ
இலங்கையின் தற்போதைய அரசியற் குழப்பங்களையும் இழுபறி நிலையையும் தீர்த்து வைக்க இந்தியா தலையிட கொள்கையளவில் இணங்கியுள்ளதாகத் தெரிய வருகிறது.

இஸ்லமாபாத்தில் நடைபெற்ற சார்க் மாநாட்டின் இறுதி நாள் நிகழ்வின் பின்னர் சந்தித்து உரையாடிய இந்தியப் பிரதமர் வாஜ்பாய், இலங்கை ஜனாதிபதி சந்திரிகாவிடம் இவ்விடயத்தில் இணங்கியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. கொழும்பிலுள்ள ஜனாதிபதி செயலகம் இவ்விடயத்தை இதுவரை உறுதிசெய்யவில்லை.
:roll: :!: Confusedhock: :? Arrow

நன்றி: தமிழ்நாதம்.


- anpagam - 01-12-2004

<b>ஒத்துழைப்பு ஒப்பந்தமா? இராணுவ ஒப்பந்தமா?</b>


நாட்டின் பாதுகாப்புத்துறை தொடர்பாக ஜனாதிபதிக்கும் அரசின் தலைவர் பிரதமருக்கும் இடையிலான இழுபறி நீடிக்கின்றது. நாட்டின் மிக முக்கிய தேசியப் பிரச்சினையான இனப்பூசலுக்கு அமைதித்தீர்வு காணும் முயற்சிகளை பிரதமர் தொடர்வதா அல்லது ஜனாதிபதி பொறுப்பேற்றபதா என்ற சர்ச்சையும் கூட நீடிக்கின்றது.

இப்படி சிங்களப் பேரினவாதிகள் அதிகாரம் தொடர்பாகவும் அமைதி முயற்சிகள் சம்பந்தமாகவும் தங்களுக்குள் இழுபறிப்பட்டுஇ சர்ச்சை செய்து கொண்டிருந்தாலும் வேறு ஒரு விடயம் மட்டும் இருதரப்பு இணக்கத்துடன் ஏகமனதாக முன்னெடுக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது. இந்தியாவுடன் இராணுவ ஒப்பந்த இணக்கம் ஒன்றுக்கு வருவது தொடர்பான ஏற்பாடுகள் பற்றிய விடயமே அது.

உத்தேசிக்கப்பட்டிருப்பது இராணுவ ஒப்பந்தமா அல்லது இராணுவ ஒத்துழைப்பு ஒப்பந்தமா என்பது இன்னும் தெளிவாகவில்லை. வெறும் இராணுவ ஒத்துழைப்பு ஒப்பந்தமே அது என்று வெளியில் பூசி மெழுகும் முயற்சியில் இரண்டு நாட்டுப் பிரமுகர்களும்இ அதிகாரிகளும் ஈடுபட்டு வருவது வேறுவிடயம். கடந்த ஒக்ரோபரில் இந்தியப் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாயைஇ இலங்கைப் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க புதுடில்லியில் சந்தித்துப் பேசியபோதே இந்த ஒப்பந்தம் குறித்து முதன் முதலில் தகவல் வெளியிடப்பட்டது.

இலங்கையின் பாதுகாப்புப் படைகளுக்கு தற்போது இந்தியா வழங்கும் இராணுவப் பயிற்சிகள்இ ஆயுத தளபாட விநியோகங்கள் ஆகியவை குறித்துத் தமக்குள் கலந்துரையாடிய இரு நாட்டுப் பிரதமர்களும்இ விரைவில் இரு நாடுகளுக்கும் இடையில் இராணுவ ஒத்துழைப்பு ஒப்பந்தம் ஒன்றை எட்டும் நோக்கில் இரு தரப்புப் பேச்சுக்களை ஆரம்பிப்பது என முடிவு செய்தனர். -என்று அப்போது அறிவிக்கப்பட்டது.

இதைத் தொடர்ந்து கடந்த டிசெம்பர் முற்பகுதியில் இராணுவத் தளபதியும் இலங்கைப் படைகளின் சிரேஷ்ட அதிகாரியுமான லெப்டினன்ட் ஜெனரல் லயனல் பலகல்ல இந்தியாவுக்கு விஜயம் மேற்கொண்டு பூர்வாங்கப் பேச்சுக்களை ஆரம்பித்தார். அதன் பின்னர் நாடு திரும்பிய அவர்இ இரு நாடுகளுக்கும் இடையிலான இராணுவ ஒத்துழைப்பு கணிசமாக அதிகரிக்கும் என்று அறிவித்தார். உளவுத் தகவல்களைப் பரிமாறிக் கொள்ளல்இ பாக்கு நீரிணையில் இந்தியக் கடற்படை கரையோரக் காவல்;படை மற்றும் இலங்கைக் கடற்படை ஆகியன கூட்டு ரோந்தில் ஈடுபடல்இ இலங்கைப்படையினருக்கு இந்தியாவில் உயர் இராணுவப் பயிற்சிகளை வழங்கல்இ யுத்ததளபாடங்களையும்இ ஆயுதங்களையும் இந்தியாவிலிருந்து பெற்றுக் கொள்ளல் போன்ற நடவடிக்கைகளை இரு தரப்புக்கும் இடையில் முனைப்பாக மேற்கொள்ளப்படுவதற்கான வாய்ப்புக்கள் தோன்றியிருப்பதாக அவர் அறிவித்தார்.

இப்போது பன்னிரண்டாவது சார்க் மாநாட்டில் பங்குபற்றுவதற்காக பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்துக்குச் சென்றிருந்த இலங்கை ஜனாதிபதி சந்திரிகாஇ அங்கு இந்தியப் பிரதமர் வாஜ்பாயையும் ஏனைய மூத்த இந்தியத் தலைவர்களையும் சந்தித்துப் பேசியிருக்கின்றார். அப்போது இந்தப்பாதுகாப்பு ஒப்பந்தம் குறித்தும் இரு தலைவர்களும் விரிவாகப் பேசினார்கள் என்று அறியவருகிறது. இதனையடுத்து உத்தேச ஒப்பந்த ஏற்பாடுகளை இறுதியாக்குவதற்கான நடவடிக்கைகள் குறித்து ஆராய்வதற்காக இலங்கையிலிருந்து உயர் மட்டக்குழு ஒன்றை நாளை மறுதினம் புதுடில்லிக்கு அனுப்பி வைக்கிறார் இலங்கை ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க.

இலங்கைப் பாதுகாப்பு அமைச்சின் புதிய செயலாளர் சிறில் ஹேரத் தலைமையில் செல்லும் இக்குழுவில் லெப்டின்ட் ஜெனரல் பலகல்லவும் மற்றும் சட்டத் தரணி ஒருவரும் இடம்பெறுகின்றனர் எனத் தெரிகின்றது. ஆனால்இ இத்தகைய விடயங்களில் பேச்சு நடத்தும் குழுவில் வழமையாக இடம்பெறும் - வெளிவிவகார அமைச்சு மற்றும் சட்டமா அதிபர் திணைக்களம் ஆகியவற்றின் - பிரதிநிதிகள் இக்குழுவில் இடம்பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இவ்விரு அலுவலகங்களும் ஐ.தே.முன்னணி அரசின் கட்டுப்பாட்டின் கீழ் இருப்பதால் என்னவோ அவற்றைச் சேர்த்த பிரதிநிதிகளை ஒதுக்கிவிட்டு தமது குழுவைத் தேர்ந்தெடுத்திருக்கிறார் ஜனாதிபதி.

ஐ.தே.முன்னணி - பொதுமக்கள் ஐக்கிய முன்னணி ஆகியவை இரண்டுக்கும் இடையிலான பிரச்சினைகள் இழுபறிப்பட்டு தொடர்ந்தாலும் தமிழ்த்தேசியத்துக்கு எதிரான இராணுவ வல்லமையைக் கட்டி எழுப்பும் சிங்களப் பேரினவாதத்தின் முயற்சி மட்டும் தங்கு தடையின்றித் தொடரும் என்பதை நிரூபிக்கும் மற்றொரு செயல்பாடு இது. ஈழத்தழிழர்களின் ஏகப்பிரதிநிதிகள் என்ற அந்தஸ்தோடும் வலுமிக்க சக்தியோடும் திகழும் விடுதலைப் புலிகள் அமைப்பின் பலத்தை உடைப்பதற்கு இந்திய வல்லாதிக்கமும் சிங்களப் பேரினவாதமும் கூட்டுச் சேர்வதையும் இது வெளிப்படுத்தி நிற்கிறது.
:roll:

நன்றி: உதயன்