![]() |
|
வசியக்காரி... பகுதி-4 - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: படைப்புக் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=11) +--- Forum: கவிதை/பாடல் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=52) +--- Thread: வசியக்காரி... பகுதி-4 (/showthread.php?tid=7681) |
வசியக்காரி... பகுதி-4 - sharish - 12-12-2003 [b][size=18]வசியக்காரி... பகுதி-4 காதல் ஒருதடவைதான் வருமென்று யார் சொன்னது...? கவிதரும் கல்யாணியே... உன்னைக்காணும்போதெல்லாம் புதுப்புதுக் காதல் மலர்ந்துனொண்டே இருக்கிறது எனக்குள்...!!! அதோ... நீ அங்கு துள்ளி துள்ளி விழையாடித் திரிகிறாய் என் மரத்துப்போன மனப்பாறையில் அலைவந்து மோதி மோதிச் செல்கிறது..! என் இதயத்தைக் காணவில்லை பதட்டத்தோடு தேடிக்கொண்டிருக்கிறேன்...! அதோ... அந்த மைதானத்தில் நீ அதை உருட்டி உருட்டி கால்பந்து.... விழையாடிக்கொண்டிருக்கிறாய்...! திருமுகத்தில் பொறிபறக்கும் திமிர்பிடித்த தீயே.... உன் ஆணவத்தையும் அகங்காரத்தையும் தீக்கிரையாக்கு...! இருண்டுபோன என் இதயத்தில் வந்து தீபமொன்றை ஏற்று...!!! இப்போதெல்லாம் தேய்பிறை அடிக்கடி வருகிறது...! எல்லாம் உன்னால்த்தான் நீ என்னைப் பார்ப்பதுபோல்... வெறுப்புடனே வானத்தையும் பார்த்திருப்பாய் அதனால்த்தான் வெண்ணிலவில் பாதியை ஏதோ விழுங்கிக்கொள்கிறது...! உன் வெறுப்புக்களை எல்லாம் ஒரே பார்வையில் காட்டுகிறாய்...! அதில் எரித்துவிட விரும்புவது என்னையா...? என் காதலையா...? என் உணர்வுகளை உதறிவிட்டாய்...! உன் மனச்சாட்சியை மண்ணுக்குள் புதைத்துவிட்டாய் உண்மை அது ஒருநாளும் உறங்காது உயிரே...! ஒரு நாள்... உன் கதவைத்தட்டி கேள்வி கேட்கும்...! பதில் சொல்லத் தயாராய் இரு...!!! கண்ணுக்குள் கத்திவைத்துக்கொண்டு என் கண்முன்னே நடமாடும் நாகரீகமான கொலைகாறி நீ...! இன்னும் எத்தனை தடவை இதயத்தில்... குத்துவதாய் ஏற்பாடு...? சிந்தையை சிறகடிக்கவைத்த சின்னமேனியே... ஆசையை அலைபாயவைத்த அல்லிராணியே... இதயத்தை இருதுண்டாய்பிழந்த படுபாவியே... போய்விடு என் இதயத்தை விட்டு சீ............ வேண்டாம் காதல்..! என் கைகளுக்கு எட்டவில்லை சீச்சீ........... வேண்டாம்...! இந்தக் க(ன்)னி புளிக்கும்...! இப்படி... என் உதடுகள்தான் சொல்கிறது..! இருப்பினும்... நெஞ்சம் கொஞ்சம் வாடுது...! உந்தன் புகழ் பாடிக்கொண்டே கண்கள் உன்னைத்தேடுதே...!!! அகங்கார அனல்வீசும் மாய மனிஷியே... உன்னை அடக்கவென்றுதான் ஆவேசமாக வந்தேன் உன் சிரிப்பில் மயங்கி கன்னக்குளி கிடங்கில் விழுந்து மரித்துவிட்டது... என் ஆத்திரம் ...! (இன்னும் வரும்...) த.சரீஷ் 09.12.2003 (பாரீஸ்) - nalayiny - 12-12-2003 பாராட்ட வாற்தைகள் இல்லை. என்னிடம். உண்மையில் அத்தனை கவி வரிகளும் மிக நன்று. என் இதயத்தைக் காணவில்லை பதட்டத்தோடு தேடிக்கொண்டிருக்கிறேன்...! அதோ... அந்த மைதானத்தில் நீ அதை உருட்டி உருட்டி கால்பந்து.... விழையாடிக்கொண்டிருக்கிறாய்...! |