Yarl Forum
என் காதல் - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: படைப்புக் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=11)
+--- Forum: கவிதை/பாடல் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=52)
+--- Thread: என் காதல் (/showthread.php?tid=7724)



என் காதல் - thamarai - 11-30-2003

<b>என் காதல்</b>

<b>படைப்பு: தாமரை (பிரான்ஸ்)
----------------------------------</b>

<img src='http://www.yarl.com/forum/files/love.jpg' border='0' alt='user posted image'>

அன்பே!

நீ என்னை சோதிக்கும் போதுதான்
என் காதலின் ஆழம் புரிந்தது

பெண் மனது ஆழம் என்பார்கள்
ஆழமான காதலை
பெண்கள் அடக்கி வைத்திருப்பதாலோ?

உனது மூச்சுக் காற்றை
நான் உணர வேண்டும்
அதற்கு அனுமதி அளிப்பாயா?

உன்னை அடைய முதலே
உன் உறவுகளை
நேசிக்கத் தொடங்கி விட்டேன்!

உன் வீட்டு முற்றத்து ரோஜாக்களைக் கூட
சூடிப் பார்த்து விட்டேன்!
என் கனவில்!

உன்னோடு சேர்ந்தால்
நிஜத்தில் வாழ்வேன்
இல்லையேல்,
உன் நினைவில் வாழ்வேன்!


- TMR - 11-30-2003

கவிதை பாடிய கவிக்குயிலுக்கு நன்றி மேலும் வளர வாழ்த்துக்கள்
றஜி சுவிற்சலாந்து
[scroll:a876f185ec] <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> [/scroll:a876f185ec]


- இளைஞன் - 11-30-2003

வணக்கம் தாமரை...

காதலினால் பாதிக்கப்பட்டால் (இன்பம், துன்பம்) எல்லோருமே கவிஞர்கள் ஆகிவிடுவார்கள் போலும். கருத்துக்களத்தில் ஏற்கனவே நளாயினி அக்கா, பரணீ அண்ணா என்று இருவர் இருக்க, போட்டிக்கு ஆதிபன் களத்தில் இறங்கினார். அவரையடுத்து இப்போது நீங்கள் காதல் கவிதைகளோடு களம் இறங்குகிறீர்கள். ம்... வாழ்த்துக்கள்! களமாடுங்கள்.

Quote:உன்னோடு சேர்ந்தால்
நிஜத்தில் வாழ்வேன்
இல்லையேல்,
உன் நினைவில் வாழ்வேன்!

அருமையான வரிகள்.

Quote:பெண் மனது ஆழம் என்பார்கள்
ஆழமான காதலை
பெண்கள் அடக்கி வைத்திருப்பதாலோ?

கண்டுபிடிப்போ? கண்டறிந்து அனுபவித்ததோ? தொடருங்கள். அருமையான வளர்ச்சி. நிறைய எழுதுங்கள். காதலோடு மட்டும் நின்றுவிடாமல், சமுதாயத்தின் மற்றைய பக்கங்களையும் புரட்டிப் பாருங்கள்.

பாராட்டுகள். <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->


- sOliyAn - 12-01-2003

பாராட்டுக்கள் தாமரை.. யதார்த்தமான உணர்வின் வெளிப்பாடு. தேடல்கள் தொடரட்டும்.


- Paranee - 12-01-2003

நினைவில் வாழாமல் நிஜத்தில் வாழ வாழ்த்திக்கொண்டு
அன்பின் கவிக்கு எனது வாழ்த்துக்கள்

தருக இன்னும் புதிய புதிய கவிதைகளை
காதலோடு தருக
தேசத்தின் காதல்
உறவின் காதல்
உரிமைக்காதல்
உண்மைக்காதல்
எல்லாமே காதல்தான்

இன்னமும் நிறைய எதிர்பார்ப்புடன்


- பாரதி - 12-01-2003

காதல் என்றாலே கனிமொழி தான். தாமரையின் வரவு காதல் கவிதைகளிற்கு மகுடம் சு10ட்டட்டும்.


Re: என் காதல் - AJeevan - 12-01-2003

thamarai Wrote:<b>என் காதல்</b>

<b>படைப்பு: தாமரை (பிரான்ஸ்)
----------------------------------</b>

<img src='http://www.yarl.com/forum/files/love.jpg' border='0' alt='user posted image'>

உன்னோடு சேர்ந்தால்
நிஜத்தில் வாழ்வேன்
இல்லையேல்,
உன் நினைவில் வாழ்வேன்!

அழகானதும், மென்மையும் கூடிய கவிதை நயம்,தேர்வுப் படம் கூட மிக அருமை.

வாழ்த்துகள்.
__________________________________அஜீவன்


- nalayiny - 12-01-2003

காதல் கவிதைகள் எல்லாருக்கும் வந்து அமைந்து விடுவதில்லை. அது ஒரு வரப்பிரசாத ரசனை. பாராட்டுக்கள். காதல் உணர்வை உள்வாங்கி கவிதை ஆக்குவது ஒரு கலைத்தோற்றம்.அந்த கலைத்தோற்றத்துள் தாமரையின் கவிதைகள் நிச்சயம் தடம் பதிக்கும்.


Re: என் காதல் - aathipan - 12-02-2003

Quote:உன்னை அடைய முதலே
உன் உறவுகளை
நேசிக்கத் தொடங்கி விட்டேன்!


அற்புதமான கவிதை தாமரை... வாழ்த்துகள்


இந்தியாவில் ஏற்கனவே ஒருதாமரை உண்டு
சினிமாவில் இப்போது பாட்டு எழுதுகின்றார். அவர்களை அனைவருக்கும் தெரிந்திருக்கும். தெரியாதது அவர்கள் எம் இலங்கைத்தமிழ் மக்களின் இன்னல்களைப்பற்றி எல்லாம் கவிதை வடித்துள்ளார்...


- sOliyAn - 12-02-2003

ஆதித்யன்.. அந்த தாமரையின் ஆக்கங்களையும் முடிந்தால் இணையுங்கள்.


- thamarai - 12-02-2003

எனது கவிதைக்கு இவ்வளவு கருத்துகள் வருமென்று நான் நினைக்கவேயில்லை. இத்தனைபேர் வந்து என்னைப் பாராட்டி எனது கவிதைகளுக்கு விமர்சனம் எழுதியிருப்பது எனக்கு மிகப்பெரிய சந்தோசத்தையும், உற்சாகத்தையும் தந்திருக்கிறது.

எனது மனமார்ந்த நன்றிகளை அனைவருக்கும் தெரிவிக்கிறேன். என்னை மென்மேலும் ஊக்குவித்து வளப்படுத்தவேண்டுமென்று கேட்டுக்கொள்கிறேன். நன்றிகள்

..........................................................................................................................................
பிகு: கணணியில் தமிழில் எழுதுவது எனக்கு கடினமான விடயம். அதனால் எனது பதில்கள் தாமதமாக வரலாம். அதற்காய்ப் பொறுத்துக் கொள்ளுங்கள்.


- sOliyAn - 12-02-2003

சித்திரமும் கைப்பழக்கம். செந்தமிழும் நாப்பழக்கம். எழுத எழுத தமிழ் கணனியில் இலகுவாகும்.