11-28-2003, 06:50 AM
dinamalar.com
""எங்களின் புதிய அமைதி ஒப்பந்தத்தை பிரபாகரன் ஏற்றுக் கொள்வார்'' ஐரோப்பிய யூனியன் வெளியுறவுத் துறை கமிஷனர் நம்பிக்கை
சென்னை: ""இலங்கை போன்ற ஒரு அழகான நாட்டில் அமைதி ஏற்பட அனைத்து தரப்பினரும் முயற்சி செய்ய வேண்டும். இதற்காக ஒரு புதிய திட்டம் ஐரோப்பிய யூனியன் சார்பில் தற்போது வழங்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தை விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் ஏற்றுக் கொள்வார் என்ற நம்பிக்கை உள்ளது'' என ஐரோப்பிய கூட்டமைப்பு நாடுகளின் வெளியுறவுத் துறை ஆணையாளர் கிரீஸ் பேட்டர்சன் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
தனது இரண்டு நாள் இலங்கை பயணத்தை முடித்துக் கொண்டு கிரீஸ் பேட்டர்சன் நேற்று சென்னை திரும்பினார். சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் அவர் நிருபர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:
இலங்கை ஒரு அழகான தீவு நாடு. இந்த நாட்டிற்கு என்று வரலாற்று பெருமைகள் உண்டு. இருப்பினும் இந்த அழகான நாட்டில் இன மோதல்கள் நடந்ததால், அந்த நாடு பல வழிகளில் சிதறுண்டு போயுள்ளது. இந்நிலையில் விடுதலைப் புலிகளுக்கும், இலங்கை அரசுக்கும் இடையில் அமைதி ஏற்படும் முயற்சியில், ஒரு புதிய திட்டத்தை ஐரோப்பிய கூட்டமைப்பு நாடுகள் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்திட்டம் குறித்து விளக்கமாக கூறுவதற்காகத் தான் நான் கடந்த இரு தினங்களாக இலங்கையில் சுற்றுப் பயணம் மேற்கொண்டேன்.
இந்த பயணத்தின் போது விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனையும் சந்தித்து, ஐரோப்பிய யூனியனின் அமைதி முயற்சிக்கான புதிய ஒப்பந்தம் குறித்து பேசினேன். அவரும் இந்த ஒப்பந்தம் குறித்து திருப்தி தெரிவித்துள்ளார். இந்த புதிய முயற்சிக்கு அவர் ஒத்துழைப்பார் என்ற நம்பிக்கை இருக்கிறது. பிரபாகரனிடம் நடத்திய பேச்சு வார்த்தையின் போது, "நீங்கள் ஆயுதங்களை கீழே போட்டு விட்டு அமைதி வழிக்கு திரும்புங்கள்' என்று கோரிக்கை வைத்தேன். மேலும், "தனி நாடு கோரிக்கையை கைவிட்டு விட்டு ஒன்றுபட்ட இலங்கை அமைய ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்' என்று கூறினேன். இவற்றை பரிசீலிப்பதாக அவர் கூறியுள்ளார்.
இலங்கை பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காண அனைத்து பிரிவினரும் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். அதற்காக இலங்கை அரசு, விடுதலைப் புலிகள், தமிழ் மற்றும் சிங்கள தலைவர்கள், முஸ்லிம்கள் என பல பிரிவினர் கொண்ட ஒரு அமைப்பு ஏற்படுத்தப்பட வேண்டும். அனைத்து முடிவுகளும் அந்த அமைப்பின் ஒப்புதலுக்கு பின்னரே செயல்படுத்தப்பட வேண்டும். இதைத் தான் ஐரோப்பிய யூனியன் தனது புதிய திட்டமாக கூறியுள்ளது. இந்தியாவைப் பொறுத்த வரையில் அது மற்ற நாடுகளை காட்டிலும் மிக வேகமாக வளர்ந்து வருகிறது. கடந்த சில ஆண்டுகளாக வெளிநாட்டு முதலீடுகள் இங்கு அதிகரித்து வருகின்றன. ஐரோப்பிய யூனியனைச் சேர்ந்த நாடுகளும் இந்தியாவில் தொழில் மற்றும் வர்த்தகம் போன்றவற்றில் முதலீடு செய்ய ஆர்வம் காட்டி வருகின்றன. அது குறித்து இந்த இந்தியப் பயணத்தின் போது பேசுவேன்.
இவ்வாறு கிரீஸ் பேட்டர்சன் கூறினார்.