Yarl Forum
இனிய து}றலிது....! - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: படைப்புக் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=11)
+--- Forum: கவிதை/பாடல் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=52)
+--- Thread: இனிய து}றலிது....! (/showthread.php?tid=7730)



இனிய து}றலிது....! - shanthy - 11-27-2003

இனிய து}றலிது....!

தடைகள் உடைந்து வீழ
தலை நிமிர்ந்து
செருக்கொடு நடந்தவரே !
முகவரி தந்தெங்கள்
முகம் நிமிர்த்திய மூத்தவரே !

இரவுகள் இடி முழங்க
இருளதிர்ந்து ஒளிகீற
உறவுகள் நினைவெங்கும்
உங்களின் அதிர்வுகள்.

ஒவ்வொரு துளியிலும்
உங்களின் ஒளி நிழல்
உயிரி;லே விழுந்திட
இமைகளில் கார்த்திகை
இதழ் விரித்து உயிர் காணும்.

இருள் முகம் உங்களின்
ஒளியினில் ஒளியாகும்.
வான்வெளி மின்னித் திரியும்
நட்சத்திர விளக்கெங்கும்
உங்கள் முகம் முளைத்திருக்கும்.

ஊரில் இன்று உங்களை
நினைவு கொண்டு
துயிலிடங்கள் எல்லாமே
து}றல் மழை நனைக்க
ஒளிப்பந்து அருகில் நாட்டி
உறவுகள் எல்லாரும்
அருகருகாய் நின்று
அவருணர்வு பகர்கின்றார்....

ஒளியலையில் எல்லாமே
உங்கள் நினைவுகள்
அள்ளி வந்து பொழிகிறது.
அழுகிறோம்....
உம் நினைவு தெளித்து - எம்
உயிரெங்கும் ஊர் வந்து
உங்கள் அருகிருந்து
அழுவதாய் ஓர் உணர்வு....
அது தாண்டி மனசெங்கும்
ஏதோ பெரும் நினைவு...
எல்லாம் உமதாக....

இங்கும் து}றல் மழை
விளக்கேற்றி உம் முகம் காணும்
நிழற்படத்தில் விழிபதிய
துளித்துளியாய் சிறுது}றல்.....
சன்னல் கண்ணாடி
சத்தமிட்டு அழைக்கிறது.
முன்னொரு வருடமும்
முகர்ந்திராத வாசமிது....

தலைவர் உரை செவிபாய
இரைச்சலோடு பெரும் து}றல்.....
இதுவும் இன்று மட்டும்
உணர்ந்து கொண்ட
இனிய து}றல்.....

27.11.03.


- இளைஞன் - 11-29-2003

2003 இன் கார்த்திகை 27 நிகழ்வுகளை பதிவுபடுத்துகிற கவிதை. அதிலும் எனக்குப் பிடித்த அருமையான வரிகள் இவை.

Quote:இரவுகள் இடி முழங்க
இருளதிர்ந்து ஒளிகீற
உறவுகள் நினைவெங்கும்
உங்களின் அதிர்வுகள்.

ஒவ்வொரு துளியிலும்
உங்களின் ஒளி நிழல்
உயிரிலே விழுந்திட
இமைகளில் கார்த்திகை

"ஒவ்வொரு துளியிலும் உங்களின் ஒளி நிழல்" மனதுக்குள் மறுபடி மறுபடி ஒலித்துக்கொள்ள ஆசைப்படுகின்றன. கருத்தோடு கவர்ந்தீர்க்கும் வரியமைப்பு.

தொடர்க...