| Welcome, Guest |
You have to register before you can post on our site.
|
| Forum Statistics |
» Members: 8,982
» Latest member: lucilegr4
» Forum threads: 9,058
» Forum posts: 83,244
Full Statistics
|
| Online Users |
There are currently 223 online users. » 0 Member(s) | 221 Guest(s) Bing, Google
|
| Latest Threads |
±ôÀÊ ÀÈ¢ì¸Ä¡õ
Forum: நகைச்சுவை
Last Post: UsArgum
01-10-2026, 09:07 AM
» Replies: 28
» Views: 10,311
|
Mrs.Sirimao Bandaranayake
Forum: நகைச்சுவை
Last Post: GeraTep
11-14-2025, 10:46 AM
» Replies: 14
» Views: 3,231
|
Farty time
Forum: நகைச்சுவை
Last Post: ㄹㅈㄷㄹㅈ
08-26-2025, 03:48 PM
» Replies: 11
» Views: 5,605
|
கனவே கலைகிறதே
Forum: பொழுதுபோக்கு
Last Post: KULAKADDAN
04-30-2006, 06:37 PM
» Replies: 0
» Views: 6,296
|
Karuna Cadres were captur...
Forum: பிறமொழி ஆக்கங்கள்
Last Post: ஜெயதேவன்
04-30-2006, 06:17 PM
» Replies: 4
» Views: 8,636
|
என்ன நடந்தது யாழிற்கு?
Forum: உங்கள் கருத்துக்கள்
Last Post: ஜெயதேவன்
04-30-2006, 06:03 PM
» Replies: 42
» Views: 31,062
|
முடியுமானால் முயற்ச்சியுங...
Forum: போட்டிகள்
Last Post: Subiththiran
04-30-2006, 05:00 PM
» Replies: 15
» Views: 14,465
|
**சுடேக்கு** புதிர் விளைய...
Forum: போட்டிகள்
Last Post: kavithaa
04-30-2006, 04:30 PM
» Replies: 63
» Views: 38,485
|
புல்மோட்டையில் தாக்குதல்
Forum: செய்திகள் : தமிழீழம்
Last Post: Sriramanan
04-30-2006, 04:10 PM
» Replies: 2
» Views: 8,037
|
போதனை வேண்டாம்! பு...
Forum: செய்திகள் : தமிழீழம்
Last Post: alika
04-30-2006, 03:13 PM
» Replies: 4
» Views: 6,239
|
|
|
| தமிழ்ச்செல்வன் பேட்டி- குமுதம் |
|
Posted by: vasisutha - 09-26-2004, 04:01 AM - Forum: தமிழீழம்
- No Replies
|
 |
<img src='http://www.kumudam.com/Special/ltte-t.jpg' border='0' alt='user posted image'>
[size=13]ஒரு ராணுவ அமைப்பின் அரசியல் தலைமையகம் என்று சத்தியம் செய்தால் கூட நம்ப முடியாத அளவுக்கு இருக்கிறது கிளிநொச்சியிலுள்ள விடுதலைப்புலிகளின் அரசியல் நடுவப் பணியகம். வாயிலில் இரு காவலர்கள், அலுவலகத்தின் உள்ளே புலிகளின் அரசியல்துறைத் தலைவரின் மெய்க்காப்பாளர்கள் இருவர். உள்ளே வராந்தாவில் அமர்ந்திருந்தார் சு.ப.தமிழ்ச்செல்வன். கருணா விவகாரம், அமைதிப் பேச்சு வார்த்தை முடக்கம், மீண்டும் போர் வரக்கூடிய சூழல் போன்ற பலவற்றைப் பற்றி தன்னுடைய டிரேட் மார்க் 'பளீர்' புன்னகையுடன் பேசத்துவங்கினார்.
போர் நிறுத்த உடன்படிக்கை அறிவித்த பிறகு இரண்டு வருடங்களுக்குமேல் ஆகியிருக்கும் நிலையில், இப்போது அதில் தேக்க நிலை ஏற்பட்டு, மீண்டும் போர் ஏற்படக்கூடிய சூழல் வந்து விட்டதா?
தமிழ்ச்செல்வன்: போர் நிறுத்த உடன்படிக்கைக்குப் பிறகு அரசியல் தீர்வுக்கான பேச்சுவார்த்தைக்கு சாத்தியம் இருப்பது மாதிரியான ஒரு தோற்றம் உருவானது. ஆனால் இரண்டரை வருடங்களுக்குப் பிறகு, இப்போது பார்த்தால் அரசியல் பேச்சுவார்த்தையில் எந்த முன்னேற்றமும் இல்லை. இது மக்கள் மத்தியில் ஒரு ஏமாற்றத்தையே தந்திருக்கிறது. தமிழ் மக்கள் தங்கள் நிலங்களில் ராணுவ ஆக்கிரமிப்பால் மிகுந்த துயரத்தை அடைந்தார்கள். போர் நிறுத்தத்திற்குப் பிறகும் அந்த ராணுவ ஆக்கிரமிப்புகள் அப்படியேதான் தொடர்கின்றன. நீங்கள் ஈழப் பகுதியில் பார்த்திருப்பீர்கள். விடுவிக்கப்பட்ட பகுதிகளில் மக்கள் சுதந்திரமாகவும், பயமில்லாமலும் தங்கள் இயல்பு வாழ்க்கையில் நிம்மதியாக இருக்கிறார்கள். ஆனால் ராணுவ ஆக்கிரமிப்புப் பகுதிகளில் கட்டுப்பாடுகளும், தடைகளும் பழையபடியே இருக்கின்றன. மக்கள் விவசாயமோ, கடல் தொழிலோ பயமின்றிச் செய்ய முடியாத சூழலில் இருக்கிறார்கள். போர் நிறுத்த உடன்படிக்கையின் ஷரத்துகளின்படி இதிலெல்லாம் மாற்றம் வந்திருக்க வேண்டும். குறிப்பிட்ட நாட்களுக்குள் ராணுவம் தங்கள் நிலைகளிலிருந்து வெளியேறி இருக்க வேண்டும். அப்படி ஏதும் நடக்கவில்லை. பழைய நிலைதான் தொடர்கிறது. கிளிநொச்சி, கண்டிரோடு மாதிரியான ஒரு சில இடங்களில் மட்டும்தான் இயல்பு நிலை வந்திருக்கிறதே தவிர, பெரும்பாலான இடங்களில், முக்கியமாக கிராமங்களில் எந்த அபிவிருத்தியும் இல்லை. வீடு, வாசல், நிலங்களை இழந்த மக்கள் அதைத் திரும்பப் பெற்றால்தானே அது முன்னேற்றம்? அப்படி ஏதும் நடக்கவில்லை.
தற்போதைய தேக்க நிலைக்கோ அல்லது பின்னடைவுக்கோ கருணா விவகாரம் ஒரு காரணமாக இருக்கிறதா? இலங்கை அரசுத் தரப்பிலும் இப்படி விமர்சனம் நிலவுகிறதே?
தமிழ்ச்செல்வன் : அது உண்மையல்ல. தமிழீழ விடுதலைப் புலிகளின் கட்டுப்பாடுகள், ஒழுக்க விதிகள் இதையெல்லாம் மீறியதால் நடவடிக்கை எடுக்கப்பட்டு வெளியேற்றப்பட்டவர்தான் கருணா. அதற்கும் இந்த தேக்க நிலைக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது. மட்டக்களப்பு மற்றும் கிழக்குப் பகுதிகள் அனைத்தும் தேசியத் தலைவருடைய ஆளுமையின், கட்டுப்பாட்டின் கீழ் முழுமையாக வந்துவிட்டது. இலங்கை ராணுவமே கருணாவைத் தங்கள் பாதுகாப்பில் வைத்து சில குழப்பங்களை ஏற்படுத்த முயன்றதே தவிர, எங்கள் அரசியல் முன்னெடுப்புகளில் அதனால் எந்த பாதிப்பும் இல்லை. நாற்பது நாட்கள் கருணா கிழக்கில் இருந்து சில சிறு குழப்பங்களை ஏற்படுத்த முயன்றார். அவ்வளவுதான். அதை முற்றிலும் சரிப்படுத்தியாகிவிட்டது. இலங்கை ராணுவம்தான் கருணாவைப் பயன்படுத்திக் கொண்டது. கருணா விவகாரம், முடிந்துபோன ஒன்று.
விடுதலைப் புலிகள் அமைப்பிலும், அபிவிருத்தித் திட்டங்களிலும் கிழக்குப் பகுதியினருக்கு சரியான பிரதிநிதித்துவம் இல்லை என்கிற விமர்சனமும் கருணாவினால் எழுந்ததே?
தமிழ்ச்செல்வன்: அதுவும் பொய்யானதுதான். ஊடகங்கள் உருவாக்கிய ஒன்றுதான். எல்லா மாவட்டங்களையும் சேர்ந்தவர்கள் பாரபட்சமின்றி திறமையின் அடிப்படையில் எல்லா பிரிவு அமைப்புகளிலும் பொறுப்பான பதவிகளில் இருக்கிறார்கள் என்பதே உண்மை. இப்படி ஒரு குற்றச்சாட்டைக் கூறினால் கிழக்குப் பகுதி மக்கள் தம் பக்கம் வருவார்கள் என்று கணக்கிடப்பட்டு, பரப்பப்பட்ட பொய் அது. அதை மக்கள் முழுக்க நிராகரித்தார்கள் என்பதுதான் உண்மை. வடக்கு, கிழக்கு இரண்டுமே பொதுவான தமிழீழத் தாயகப் பிரதேசம்தான். இரண்டிலுமே அரசாங்கத்தினால் எந்தவிதமான அபிவிருத்தியும் செய்யப்படவில்லை. அபிவிருத்தித் திட்டங்களில் கிழக்குப் பகுதி புறக்கணிக்கப்பட்டதாகச் சொன்ன கருணா, சில மாதங்களுக்கு முன்பு நடந்த ஒரு மாநாட்டிலேயே 'தமிழீழத்தின் எந்தப் பகுதியிலும் அபிவிருத்திக்கான திட்டங்கள் அரசால் செயல்படுத்தப் படவில்லை' என்று பேசியிருக்கிறார். பிறகு அதையே மாற்றிப் பேசியது சுயநலத்துக்காகத்தான்.
கருணா விவகாரம் இல்லையென்றால், பேச்சுவார்த்தை முடக்கத்திற்கான உண்மையான காரணம் என்ன?
தமிழ்ச்செல்வன்: பேச்சுவார்த்தை முடக்கமடைந்திருப்பது உண்மை. சந்திரிகா அம்மையார் சில அரசியல் குழப்பங்களை ஏற்படுத்தி, ஆட்சிக் கவிழ்ப்புகள் செய்து, தெற்கில் சில குளறுபடிகளை செய்ததுதான் இந்த முடக்கத்திற்குக் காரணமே தவிர வேறொன்றுமில்லை.
வடக்கு, கிழக்கு பகுதிகளில் பூகோள ரீதியாகவே சில ஏற்றத்தாழ்வுகள் உண்டு, அது மேலும் வளர்ச்சியடைந்ததாக சில இலங்கை அரசியல், சமூக விமர்சகர்கள் சொல்வது பற்றி?
தமிழ்ச்செல்வன் : உண்டு. குறிப்பாக யாழ்ப்பாணத்தில் வாழ்ந்த சமூகத்தினர் கல்வியிலும் நிர்வாகத்திலும் வளர்ச்சியடைந்து இருந்தார்கள். பிரிட்டிஷ்காரர்களின் காலனி இருப்பு யாழ்ப்பாணத்தில் நிறையவே இருந்ததால் கல்வி, சுகாதாரம், நிர்வாகம் போன்றவை வேகமாக வளர்ந்தது உண்மை.
அதனால் மக்கள் அங்கேயே குவியத் தொடங்கினார்கள். பாடசாலைகள் மிகுந்ததால் வளர்ச்சி சாதகமாகவே இருந்தது. ஆனால் வன்னி, மட்டக்களப்பு பகுதிகளைப் பொறுத்தவரை காட்டுப் பிரதேசமாய் இருந்ததால் அங்கே கவனம், நகர்வுகள் குறைவாகவே இருந்தது. அதனாலே யாழ்ப்பாணத்தவர்களின் மேலாதிக்கம் எல்லா பகுதிகளிலும் இருப்பதான கருத்தும் பரவலாக ஏற்படலாயிற்று. எங்கள் விடுதலை அமைப்பு தோன்றிய பிறகு இந்தப் பாகுபாடுகளை நீக்கி சகோதரத்துவத்தை கொண்டுவர, பல பரந்துபட்ட திட்டங்ளைத் தீட்டி அவற்றை செயல்படுத்தி வந்தோம். அதில் நல்ல முன்னேற்றத்தையும் கண்டிருக்கிறோம். இன்றைக்கும் சிறுசிறு வேறுபாடுகள் உண்டு. அதை முற்றிலும் சரி செய்யவே நாங்கள் செயல்பட்டுக் கொண்டிருக்கிறோம்.
பேச்சுவார்த்தை முடக்கத்திற்கு இன்னொரு காரணமாக, புதிதாக கொழும்பிலும் பிற இடங்களிலும் நடத்தப்பட்டு வரும் படுகொலைகளைச் சொல்லலாமா?
தமிழ்ச் செல்வன் : ஈ.பி.டி.பி. ராணுவப் புலனாய்வு, கருணா குழு போன்றவை சேர்ந்து கொண்டு வேண்டுமென்றே படுகொலைகளைச் செய்து குழப்பம் ஏற்படச் செய்கிறார்கள். படுகொலை முயற்சியிலிருந்து தப்பிய பலர், அக்குழுவையே சேர்ந்தவர்கள், எங்களிடம் மறுபடி வந்து சேர்ந்திருக்கிறார்கள். இவ்வளவு காலமாக இல்லாத படுகொலைகள் திடீரென்று நடப்பதற்குக் காரணம் இக்குழுக்கள்தான். அவர்களிடையே உள்ள முரண்பாடுகளும் அதற்குக் காரணமாக இருக்கலாம். எங்களது கட்டுப்பாட்டுப் பகுதியில் எங்கேயும் எந்த அசம்பாவிதமும் நடக்கவில்லை.
மீண்டும் அமைதிப் பேச்சுவார்த்தைக்கான சாத்தியம் எந்த அளவுக்கு இருக்கிறது?
தமிழ்ச்செல்வன்: வரலாற்று ரீதியாகப் பார்த்தால் தமிழர்களுக்கு சொந்தமான, அவர்கள் ஆட்சி செய்த தாயகத்தை அந்நியர்கள் ஆக்ரமித்துப் பிறகு ஒரே நாடாக மாற்றினார்கள். பிறகு எங்களுடைய உரிமை பறிக்கப்பட்டு, ஒடுக்கப்பட்டு, அடிமைகள் ஆக்கப்பட்டு இருக்கிறோம். இது எங்கள் வாழ்க்கைப் பிரச்னை. அதிலிருந்து விடுபட போராடிக் கொண்டிருக்கிறோம். இந்த லட்சியத்திலிருந்து ஒரு போதும் நாங்கள் பின்வாங்கப் போவதில்லை. அமைதிக்கான சூழ்நிலை உருவான சமயத்தில் அதற்கு உடன்பட்டு பேச்சுவார்த்தைக்கு ஒப்புக்கொண்டோம்.
உடன்படிக்கை ஒப்பந்தப்படி நடந்து கொள்ளாமல், விட்டுக் கொடுக்கவும் முன்வராமல் அவர்கள் இருந்தால் அதற்கான நெருக்கடியை சந்தித்துத்தான் தீர வேண்டும். கொழும்பிலும், தெற்கிலும் நடக்கக் கூடியவைகளைப் பார்க்கும் போது தமிழ் மக்களுக்கு ஒரு தீர்வை, நிரந்தர அமைதியைத் தர அவர்கள் ஒத்துழைப்பார்களா என்பது ஒரு கேள்விக்குறியாகவே ஆகிவிட்டது. இன்று தெற்கிலேயே வாழ்க்கை நிலை மிக மோசமாகிவிட்டது. அவர்கள் என்றாவது ஒரு நாள் எங்கள் தமிழ் மக்களின் நியாயத்தை ஏற்கத்தான் வேண்டும். எங்களை உணர்ச்சி வசப்படுத்தி, ஆத்திரப்படுத்தி, தூண்டிவிடும் காரியங்களை அவர்கள் செய்து கொண்டுதான் இருக்கிறார்கள். நாங்களும் பொறுமையாகத்தான் இருக்கிறோம். ஆனால் எங்களின் பொறுமைக்கும் ஒரு எல்லை உண்டு.
இந்தியாவின் நிலை, இந்தப் பிரச்னையில் எப்படி இருக்க வேண்டும் என்று நினைக்கிறீர்கள்?
தமிழ்ச்செல்வன் : இந்தியாவை ஒரு நேச சக்தியாகத்தான் பார்க்கிறோம். கடந்த காலங்களில் சில கொள்கை வகுப்பாளர்களால் ஏற்பட்ட சில நடவடிக்கைகள் காரணமாக சில கசப்பான நிகழ்வுகள் நடந்ததே ஒழிய, இந்தியாவை, இந்திய மக்களை, தமிழ்நாட்டு மக்களை ஒரு நேச சக்தியாகவே நாங்கள் பார்க்கிறோம். இடையில் நடந்த சம்பவத்தை வைத்து தவறான கணிப்புகள் செய்ய வேண்டாம் என்பதுதான் எங்கள் எண்ணம். இங்கே, பாதிக்கப்பட்ட தமிழ்மக்களின் அபிலாஷைகளையும், பிரச்னைகளையும் புரிந்து கொண்டு தங்கள் நிலைப்பாடுகளை இந்தியா மாற்றிக் கொள்ள வேண்டுமென்று நினைக்கிறோம். ஏற்கெனவே எங்களுக்கு நேசக்கரம் நீட்டியவர்கள்தானே தமிழ்மக்கள்?
<img src='http://www.kumudam.com/Special/ltte-2.jpg' border='0' alt='user posted image'>
அதற்கான முயற்சிகளை நீங்கள் எடுத்திருக்கிறார்களா?
தமிழ்ச்செல்வன்: இந்தியாவில் நாங்கள் ஒரு தடை செய்யப்பட்ட அமைப்பாக இருப்பதால் வெளிப்படையான முயற்சிகளை எடுப்பதில் முடக்கம் ஏற்பட்டிருக்கிறது. பொடா சட்டத்தினால் பல குரல்கள் அடக்கப்பட்ட நிலையே, இன்றுதான் அங்கே பொடா சட்டம் நீக்கம் மூலமாக மாறியிருக்கிறது. கலைஞர் போன்றவர்களின் பெரு முயற்சியினால் ஆளும் கட்சிக்கு பரிந்துரைக்கப்பட்டு அந்தச் சட்டம் நீக்கப்பட்டிருக்கிறது. தவறான சில கொள்கை வகுப்பாளர்களால் நடந்த ஒரு தவறான சம்பவத்தை கொண்டு ஏற்படுத்தப்பட்ட அந்தத் தடை நீக்கப்பட வேண்டும் என்று விரும்புகிறோம். தமிழகத்துடன் நல்லுறவை நாங்கள் மிகவும் எதிர்பார்க்கிறோம்.
www.kumudam.com
|
|
|
| ரஜினியின் புதிய படம் 'சந்திரமுகி' |
|
Posted by: shanmuhi - 09-25-2004, 08:51 PM - Forum: சினிமா
- Replies (9)
|
 |
ரஜினியின் புதிய படம் 'சந்திரமுகி'
மக்களவைத் தேர்தலின்போது ஆராவாராமாய் தொடங்கப்பட்ட ஜக்குபாய் அப்படியே கிடப்பில் போடப்பட்டுள்ள நிலையில் சிவாஜி பிலிம்ஸ் தயாரிக்கவுள்ள ஒரு படத்தில் நடிக்க ரஜினி முடிவு செய்துள்ளார். அவருக்கு ஜோடி சிம்ரன் அல்லது ரீமா சென்னாம்.
''இறைவா, நண்பர்களிடம் இருந்து என்னைக் காப்பாற்று. எதிரிகளை நான் பார்த்துக் கொள்கிறேன்'' என்ற பன்ச் லைனோடு ரஜினி வெளியிட்ட ஜக்குபாய் ஸ்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
ஆனால், தேர்தல் நேரத்தில் தனது தரப்பு வாதம் (பா.ஜ.க.அதிமுக கூட்டணிக்கு ஆதரவு) மக்களைச் சென்றடையும் வகையில் வெறும் பரபரப்புக்காகவே ஜக்குபாய் தொடங்கப்பட்டதோ என்ற சந்தேகத்தை ஏற்படுத்தும் வகையில் அந்தப் படம் அத்தோடு கைவிடப்பட்டுவிட்டது.
அதன் பிறகு கத கத கேளு என்று ஹரி, தேஜா என பல மொழி இயக்குனர்களையும் அழைத்து கதை கேட்டார் ரஜினி. ஒன்றும் சரிப்பட்டு வரவில்லை.
இந் நிலையில் சிவாஜி பிலிம்ஸ் நிறுவனத்தின் சார்பில் ராம்குமார் (பிரபுவின் அண்ணன்) தயாரிக்கவுள்ள ஒரு படத்தில் ரஜினி நடிக்கப் போகிறார். படத்தின் பெயர் 'சந்திரமுகி' !
படத்தை இயக்கப் போவது 'சின்னதம்பி' பி.வாசு
நீண்ட காலமாக சொந்த தயாரிப்பிலேயே நடித்து வந்த ரஜினி வெளி நிறுவனத்தின் தயாரிப்பில் நடிக்கப் போவது இதுவே முதல் முறையாகும்.
அக்டோபர் 1ம் தேதி பூஜையைப் போட்டுவிட்டு நவம்பரில் சூட்டிங்கைத் தொடங்கப் போகிறார்களாம். ஜோடியாக சிம்ரனைப் போடவும் முடியாவிட்டால் ரீமா சென்னை புக் செய்யவும் திட்டமிட்டுள்ளார்கள்.
சென்டிமெண்ட் கதை மன்னரான பி.வாசு, நீண்ட நாட்களாய் தமிழில் படம் இல்லாமல் கன்னடப் பக்கம் போய்விட்டார். அங்கு இப்போது அவர் படு பிஸி. இப்போது ரஜினியை வைத்து இயக்கப் போகும் சந்திரமுகி படம் வாசுவுக்கு 50வது படமாம்
¿ýÈ¢ . thatstamil.
|
|
|
| "[color=red]தடைகளை உடைத்து தேசத்தின் தேசியத்தின் குரலாக பொங" |
|
Posted by: Nellaiyan - 09-24-2004, 09:10 PM - Forum: செய்திகள் : தமிழீழம்
- Replies (4)
|
 |
கனடாவில் நடைபெறவுள்ள "பொங்கு தமிழ்" தடைகளை உடைத்து எழுச்சி புூர்வமாக பொங்கிப் பிரவாகிக்க "யாழ்" மூலம் எமது வாழ்த்துக்களை தெரிவிக்கிறோம்.
எத்தனை தடைகள், எத்தனை அழுத்தங்கள் அவற்றை தகத்தெறிந்து புலத்திலிருந்து களத்திற்கு எமது சூரியத்தேவனுக்கோர் இனிய சேதி சொல்வோம் - "எத்தனை ஆயிரம் மைல்கள் கடந்து சென்றாலும் உன்னுடனே நாமெல்லாம் உள்ளோம்மென்று".
பொங்கட்டும் பொங்கட்டும் எமது தேசியத்தின் குரல்களாக - எமது தேசத்தின் விடுதலையை நோக்கி .......
<b>"நம்புங்கள் தமிழீழம் நாளை பிறக்கும்"</b>
|
|
|
| அரசியல் துறை பொறுப்பாளர் சு.ப தமிழ்ச்செல்வன் அவர்களின் செவ்வ |
|
Posted by: ஆவி - 09-24-2004, 06:38 PM - Forum: செய்திகள் : தமிழீழம்
- Replies (1)
|
 |
<b>குமுதம் சஞ்சிகைக்கு அரசியல் துறை பொறுப்பாளர் சு.ப தமிழ்ச்செல்வன் அவர்களின் செவ்வி</b>
ஒரு ராணுவ அமைப்பின் அரசியல் தலைமையகம் என்று சத்தியம் செய்தால் கூட நம்ப முடியாத அளவுக்கு இருக்கிறது கிளிநொச்சியிலுள்ள விடுதலைப்புலிகளின் அரசியல் நடுவப் பணியகம். வாயிலில் இரு காவலர்கள், அலுவலகத்தின் உள்ளே புலிகளின் அரசியல்துறைத் தலைவரின் மெய்க்காப்பாளர்கள் இருவர். உள்ளே வராந்தாவில் அமர்ந்திருந்தார் சு.ப.தமிழ்ச்செல்வம். கருணா விவகாரம், அமைதிப் பேச்சு வார்த்தை முடக்கம், மீண்டும் போர் வரக்கூடிய சூழல் போன்ற பலவற்றைப் பற்றி தன்னுடைய டிரேட் மார்க் ‘பளீர்’ புன்னகையுடன் பேசத்துவங்கினார்.
போர் நிறுத்த உடன்படிக்கை அறிவித்த பிறகு இரண்டு வருடங்களுக்குமேல் ஆகியிருக்கும் நிலையில், இப்போது அதில் தேக்க நிலை ஏற்பட்டு, மீண்டும் போர் ஏற்படக்கூடிய சூழல் வந்து விட்டதா?
தமிழ்ச்செல்வம்: போர் நிறுத்த உடன்படிக்கைக்குப் பிறகு அரசியல் தீர்வுக்கான பேச்சுவார்த்தைக்கு சாத்தியம் இருப்பது மாதிரியான ஒரு தோற்றம் உருவானது. ஆனால் இரண்டரை வருடங்களுக்குப் பிறகு, இப்போது பார்த்தால் அரசியல் பேச்சுவார்த்தையில் எந்த முன்னேற்றமும் இல்லை. இது மக்கள் மத்தியில் ஒரு ஏமாற்றத்தையே தந்திருக்கிறது. தமிழ் மக்கள் தங்கள் நிலங்களில் ராணுவ ஆக்கிரமிப்பால் மிகுந்த துயரத்தை அடைந்தார்கள். போர் நிறுத்தத்திற்குப் பிறகும் அந்த ராணுவ ஆக்கிரமிப்புகள் அப்படியேதான் தொடர்கின்றன. நீங்கள் ஈழப் பகுதியில் பார்த்திருப்பீர்கள். விடுவிக்கப்பட்ட பகுதிகளில் மக்கள் சுதந்திரமாகவும், பயமில்லாமலும் தங்கள் இயல்பு வாழ்க்கையில் நிம்மதியாக இருக்கிறார்கள். ஆனால் ராணுவ ஆக்கிரமிப்புப் பகுதிகளில் கட்டுப்பாடுகளும், தடைகளும் பழையபடியே இருக்கின்றன. மக்கள் விவசாயமோ, கடல் தொழிலோ பயமின்றிச் செய்ய முடியாத சூழலில் இருக்கிறார்கள். போர் நிறுத்த உடன்படிக்கையின் ஷரத்துகளின்படி இதிலெல்லாம் மாற்றம் வந்திருக்க வேண்டும். குறிப்பிட்ட நாட்களுக்குள் ராணுவம் தங்கள் நிலைகளிலிருந்து வெளியேறி இருக்க வேண்டும். அப்படி ஏதும் நடக்கவில்லை. பழைய நிலைதான் தொடர்கிறது. கிளிநொச்சி, கண்டிரோடு மாதிரியான ஒரு சில இடங்களில் மட்டும்தான் இயல்பு நிலை வந்திருக்கிறதே தவிர, பெரும்பாலான இடங்களில், முக்கியமாக கிராமங்களில் எந்த அபிவிருத்தியும் இல்லை. வீடு, வாசல், நிலங்களை இழந்த மக்கள் அதைத் திரும்பப் பெற்றால்தானே அது முன்னேற்றம்? அப்படி ஏதும் நடக்கவில்லை.
தற்போதைய தேக்க நிலைக்கோ அல்லது பின்னடைவுக்கோ கருணா விவகாரம் ஒரு காரணமாக இருக்கிறதா? இலங்கை அரசுத் தரப்பிலும் இப்படி விமர்சனம் நிலவுகிறதே?
தமிழ்ச்செல்வம் : அது உண்மையல்ல. தமிழீழ விடுதலைப் புலிகளின் கட்டுப்பாடுகள், ஒழுக்க விதிகள் இதையெல்லாம் மீறியதால் நடவடிக்கை எடுக்கப்பட்டு வெளியேற்றப்பட்டவர்தான் கருணா. அதற்கும் இந்த தேக்க நிலைக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது. மட்டக்களப்பு மற்றும் கிழக்குப் பகுதிகள் அனைத்தும் தேசியத் தலைவருடைய ஆளுமையின், கட்டுப்பாட்டின் கீழ் முழுமையாக வந்துவிட்டது. இலங்கை ராணுவமே கருணாவைத் தங்கள் பாதுகாப்பில் வைத்து சில குழப்பங்களை ஏற்படுத்த முயன்றதே தவிர, எங்கள் அரசியல் முன்னெடுப்புகளில் அதனால் எந்த பாதிப்பும் இல்லை. நாற்பது நாட்கள் கருணா கிழக்கில் இருந்து சில சிறு குழப்பங்களை ஏற்படுத்த முயன்றார். அவ்வளவுதான். அதை முற்றிலும் சரிப்படுத்தியாகிவிட்டது. இலங்கை ராணுவம்தான் கருணாவைப் பயன்படுத்திக் கொண்டது. கருணா விவகாரம், முடிந்துபோன ஒன்று.
விடுதலைப் புலிகள் அமைப்பிலும், அபிவிருத்தித் திட்டங்களிலும் கிழக்குப் பகுதியினருக்கு சரியான பிரதிநிதித்துவம் இல்லை என்கிற விமர்சனமும் கருணாவினால் எழுந்ததே?
தமிழ்ச்செல்வம்: அதுவும் பொய்யானதுதான். ஊடகங்கள் உருவாக்கிய ஒன்றுதான். எல்லா மாவட்டங்களையும் சேர்ந்தவர்கள் பாரபட்சமின்றி திறமையின் அடிப்படையில் எல்லா பிரிவு அமைப்புகளிலும் பொறுப்பான பதவிகளில் இருக்கிறார்கள் என்பதே உண்மை. இப்படி ஒரு குற்றச்சாட்டைக் கூறினால் கிழக்குப் பகுதி மக்கள் தம் பக்கம் வருவார்கள் என்று கணக்கிடப்பட்டு, பரப்பப்பட்ட பொய் அது. அதை மக்கள் முழுக்க நிராகரித்தார்கள் என்பதுதான் உண்மை. வடக்கு, கிழக்கு இரண்டுமே பொதுவான தமிழீழத் தாயகப் பிரதேசம்தான். இரண்டிலுமே அரசாங்கத்தினால் எந்தவிதமான அபிவிருத்தியும் செய்யப்படவில்லை. அபிவிருத்தித் திட்டங்களில் கிழக்குப் பகுதி புறக்கணிக்கப்பட்டதாகச் சொன்ன கருணா, சில மாதங்களுக்கு முன்பு நடந்த ஒரு மாநாட்டிலேயே ‘தமிழீழத்தின் எந்தப் பகுதியிலும் அபிவிருத்திக்கான திட்டங்கள் அரசால் செயல்படுத்தப் படவில்லை’ என்று பேசியிருக்கிறார். பிறகு அதையே மாற்றிப் பேசியது சுயநலத்துக்காகத்தான்.
கருணா விவகாரம் இல்லையென்றால், பேச்சுவார்த்தை முடக்கத்திற்கான உண்மையான காரணம் என்ன?
தமிழ்ச்செல்வம்: பேச்சுவார்த்தை முடக்கமடைந்திருப்பது உண்மை. சந்திரிகா அம்மையார் சில அரசியல் குழப்பங்களை ஏற்படுத்தி, ஆட்சிக் கவிழ்ப்புகள் செய்து, தெற்கில் சில குளறுபடிகளை செய்ததுதான் இந்த முடக்கத்திற்குக் காரணமே தவிர வேறொன்றுமில்லை.
வடக்கு, கிழக்கு பகுதிகளில் பூகோள ரீதியாகவே சில ஏற்றத்தாழ்வுகள் உண்டு, அது மேலும் வளர்ச்சியடைந்ததாக சில இலங்கை அரசியல், சமூக விமர்சகர்கள் சொல்வது பற்றி?
தமிழ்ச்செல்வம் : உண்டு. குறிப்பாக யாழ்ப்பாணத்தில் வாழ்ந்த சமூகத்தினர் கல்வியிலும் நிர்வாகத்திலும் வளர்ச்சியடைந்து இருந்தார்கள். பிரிட்டிஷ்காரர்களின் காலனி இருப்பு யாழ்ப்பாணத்தில் நிறையவே இருந்ததால் கல்வி, சுகாதாரம், நிர்வாகம் போன்றவை வேகமாக வளர்ந்தது உண்மை.
அதனால் மக்கள் அங்கேயே குவியத் தொடங்கினார்கள். பாடசாலைகள் மிகுந்ததால் வளர்ச்சி சாதகமாகவே இருந்தது. ஆனால் வன்னி, மட்டக்களப்பு பகுதிகளைப் பொறுத்தவரை காட்டுப் பிரதேசமாய் இருந்ததால் அங்கே கவனம், நகர்வுகள் குறைவாகவே இருந்தது. அதனாலே யாழ்ப்பாணத்தவர்களின் மேலாதிக்கம் எல்லா பகுதிகளிலும் இருப்பதான கருத்தும் பரவலாக ஏற்படலாயிற்று. எங்கள் விடுதலை அமைப்பு தோன்றிய பிறகு இந்தப் பாகுபாடுகளை நீக்கி சகோதரத்துவத்தை கொண்டுவர, பல பரந்துபட்ட திட்டங்ளைத் தீட்டி அவற்றை செயல்படுத்தி வந்தோம். அதில் நல்ல முன்னேற்றத்தையும் கண்டிருக்கிறோம். இன்றைக்கும் சிறுசிறு வேறுபாடுகள் உண்டு. அதை முற்றிலும் சரி செய்யவே நாங்கள் செயல்பட்டுக் கொண்டிருக்கிறோம்.
பேச்சுவார்த்தை முடக்கத்திற்கு இன்னொரு காரணமாக, புதிதாக கொழும்பிலும் பிற இடங்களிலும் நடத்தப்பட்டு வரும் படுகொலைகளைச் சொல்லலாமா?
தமிழ்ச் செல்வம் : ஈ.பி.டி.பி. ராணுவப் புலனாய்வு, கருணா குழு போன்றவை சேர்ந்து கொண்டு வேண்டுமென்றே படுகொலைகளைச் செய்து குழப்பம் ஏற்படச் செய்கிறார்கள். படுகொலை முயற்சியிலிருந்து தப்பிய பலர், அக்குழுவையே சேர்ந்தவர்கள், எங்களிடம் மறுபடி வந்து சேர்ந்திருக்கிறார்கள். இவ்வளவு காலமாக இல்லாத படுகொலைகள் திடீரென்று நடப்பதற்குக் காரணம் இக்குழுக்கள்தான். அவர்களிடையே உள்ள முரண்பாடுகளும் அதற்குக் காரணமாக இருக்கலாம். எங்களது கட்டுப்பாட்டுப் பகுதியில் எங்கேயும் எந்த அசம்பாவிதமும் நடக்கவில்லை.
மீண்டும் அமைதிப் பேச்சுவார்த்தைக்கான சாத்தியம் எந்த அளவுக்கு இருக்கிறது?
தமிழ்ச்செல்வம்: வரலாற்று ரீதியாகப் பார்த்தால் தமிழர்களுக்கு சொந்தமான, அவர்கள் ஆட்சி செய்த தாயகத்தை அந்நியர்கள் ஆக்ரமித்துப் பிறகு ஒரே நாடாக மாற்றினார்கள். பிறகு எங்களுடைய உரிமை பறிக்கப்பட்டு, ஒடுக்கப்பட்டு, அடிமைகள் ஆக்கப்பட்டு இருக்கிறோம். இது எங்கள் வாழ்க்கைப் பிரச்னை. அதிலிருந்து விடுபட போராடிக் கொண்டிருக்கிறோம். இந்த லட்சியத்திலிருந்து ஒரு போதும் நாங்கள் பின்வாங்கப் போவதில்லை. அமைதிக்கான சூழ்நிலை உருவான சமயத்தில் அதற்கு உடன்பட்டு பேச்சுவார்த்தைக்கு ஒப்புக்கொண்டோம்.
உடன்படிக்கை ஒப்பந்தப்படி நடந்து கொள்ளாமல், விட்டுக் கொடுக்கவும் முன்வராமல் அவர்கள் இருந்தால் அதற்கான நெருக்கடியை சந்தித்துத்தான் தீர வேண்டும். கொழும்பிலும், தெற்கிலும் நடக்கக் கூடியவைகளைப் பார்க்கும் போது தமிழ் மக்களுக்கு ஒரு தீர்வை, நிரந்தர அமைதியைத் தர அவர்கள் ஒத்துழைப்பார்களா என்பது ஒரு கேள்விக்குறியாகவே ஆகிவிட்டது. இன்று தெற்கிலேயே வாழ்க்கை நிலை மிக மோசமாகிவிட்டது. அவர்கள் என்றாவது ஒரு நாள் எங்கள் தமிழ் மக்களின் நியாயத்தை ஏற்கத்தான் வேண்டும். எங்களை உணர்ச்சி வசப்படுத்தி, ஆத்திரப்படுத்தி, தூண்டிவிடும் காரியங்களை அவர்கள் செய்து கொண்டுதான் இருக்கிறார்கள். நாங்களும் பொறுமையாகத்தான் இருக்கிறோம். ஆனால் எங்களின் பொறுமைக்கும் ஒரு எல்லை உண்டு.
இந்தியாவின் நிலை, இந்தப் பிரச்னையில் எப்படி இருக்க வேண்டும் என்று நினைக்கிறீர்கள்?
தமிழ்ச்செல்வம் : இந்தியாவை ஒரு நேச சக்தியாகத்தான் பார்க்கிறோம். கடந்த காலங்களில் சில கொள்கை வகுப்பாளர்களால் ஏற்பட்ட சில நடவடிக்கைகள் காரணமாக சில கசப்பான நிகழ்வுகள் நடந்ததே ஒழிய, இந்தியாவை, இந்திய மக்களை, தமிழ்நாட்டு மக்களை ஒரு நேச சக்தியாகவே நாங்கள் பார்க்கிறோம். இடையில் நடந்த சம்பவத்தை வைத்து தவறான கணிப்புகள் செய்ய வேண்டாம் என்பதுதான் எங்கள் எண்ணம். இங்கே, பாதிக்கப்பட்ட தமிழ்மக்களின் அபிலாஷைகளையும், பிரச்னைகளையும் புரிந்து கொண்டு தங்கள் நிலைப்பாடுகளை இந்தியா மாற்றிக் கொள்ள வேண்டுமென்று நினைக்கிறோம். ஏற்கெனவே எங்களுக்கு நேசக்கரம் நீட்டியவர்கள்தானே தமிழ்மக்கள்?
அதற்கான முயற்சிகளை நீங்கள் எடுத்திருக்கிறார்களா?
தமிழ்ச்செல்வம்: இந்தியாவில் நாங்கள் ஒரு தடை செய்யப்பட்ட அமைப்பாக இருப்பதால் வெளிப்படையான முயற்சிகளை எடுப்பதில் முடக்கம் ஏற்பட்டிருக்கிறது. பொடா சட்டத்தினால் பல குரல்கள் அடக்கப்பட்ட நிலையே, இன்றுதான் அங்கே பொடா சட்டம் நீக்கம் மூலமாக மாறியிருக்கிறது. கலைஞர் போன்றவர்களின் பெரு முயற்சியினால் ஆளும் கட்சிக்கு பரிந்துரைக்கப்பட்டு அந்தச் சட்டம் நீக்கப்பட்டிருக்கிறது. தவறான சில கொள்கை வகுப்பாளர்களால் நடந்த ஒரு தவறான சம்பவத்தை கொண்டு ஏற்படுத்தப்பட்ட அந்தத் தடை நீக்கப்பட வேண்டும் என்று விரும்புகிறோம். தமிழகத்துடன் நல்லுறவை நாங்கள் மிகவும் எதிர்பார்க்கிறோம்.
|
|
|
| திலீபன் |
|
Posted by: Thusi - 09-24-2004, 03:43 PM - Forum: கவிதை/பாடல்
- Replies (4)
|
 |
திலீபன்
நீண்ட பன்னிரு நாட்கள்......
எப்படித்தான் தாங்கினாய் கொழுந்து விட்டெழும் பசித் தீயை....
ஒரு நேரம் உணவில்லையென்றால் உடல் தொய்ந்து உயிர்வற்றிப் போகிறது எமக்கு.
உணவின் தேவை சகல உயிர்களும் உணரும்.
நீ, திலீபா, உணர்வின் வேட்கைக்காய் உணவு மறுத்து உயிர் துறந்தாய்.
நல்லூரின் வீதியில்
நல்லுள்ளங்கள் சூழ
நாசம் செய் படைகளுக்கெதிராய்
நம்மவரின் தேவைகள் முன்வைத்து
திலீபா நீ யாகம் இயற்றினாய் - உயிர் நெய்யுூற்றி.
அகிம்சை போதித்த மகாத்மாவின் தேசத்துப் படைகள்
எமது அகிம்சா வீரனை பசித்தீயில் எரித்தழித்தார்கள்.
மறவோம் திலீபா.
நீ சொன்ன விடுதலைத் தேசம் மரணத்திலும் மறவோம்.
நாம் செத்து விழுந்தாலும்
இற்றுப்போகாதெம் வரலாறு.
வரலாற்றின் பக்கங்களில் நீ என்றும் வாழுவாய் - வாழ்ந்துகொண்டேயிருப்பாய்.
|
|
|
| ..இலையுதிர் காலத்தின் கூறுகள்... |
|
Posted by: சுடரோன் - 09-24-2004, 02:30 PM - Forum: கவிதை/பாடல்
- Replies (4)
|
 |
<img src='http://www.biospiritual.org/images/crying-child.jpg' border='0' alt='user posted image'>
[size=18]<b>இலையுதிர் காலத்தின் கூறுகள் </b>
கீழ்நிலைக் கல்விக்கூடம்
தன் கதவைத் திறந்து
கதிர்களைப் பரப்பிக்கொண்டிருந்தது,
சந்தோஷக் கொடிகளையேந்திய வண்ணம்
சிறுகால்கள்
வீடுகளை நோக்கி..
முதல் மாடியின் நடைபாதையில் நான் நின்று
அந்த நடக்கும்
பூத்தசோலையைப் பார்க்கின்றேன்
சோதரியின் வாய் வெடித்த
சொல் தந்த அழுத்தம்..
மாற்றம் தேடி வாசலுக்கு வந்தேன்..
சிறையிலுருந்து
விடுபட்ட சந்தோஷம்
அந்த மாணவர்களைப் போல்,
செவப்பு அப்பிள் மரம்
அந்தக் கால்வாய்
அந்த ஐக் மரங்கள்
எல்லாம் அதனதன் வடிவங்களில்.....
மத்தியானவேளை
பிரகாசக் கதிர்கள்
சின்னப் பறவைகளின்
விசிலடிப்பு சிறகடிப்பு
செல்லமுகங்ளில்
சந்தோஷக் காட்சிகளின் அனிவகுப்பு..
இளங்கால்களின் சுருதிச் சேர்ப்பு
கையோடு கைகோர்ப்பு
நன்பர்களின் கைகளில் பரிமாறும் இனிப்பு
தேவலேகம் வழங்கும்
அமுதம் அதுவா?
அதோ...
ஒரு சிறுவன்
அங்கே மத்தியானச் சூரியன் போல்
என் மூத்தமகனின் வயதிருக்கும்
உதிக்கும் விழிகள் கீழே நோக்க ..
மிகத் தனிமையாய்...
நொந்தபடி..
துன்புறுத்துப்பட்டிருக்கலாம் மற்ற மானவர்களால்,
ஹலோ சொன்னேன்
வாழ்த்தாகமட்டுமன்றி
ஒரு வாஞ்சையாயும்..
தேற்றவும் எண்ணி
அந்த முகத்தில்
மெல்லியதான புன்னகைக்காய்க் காத்து நின்றேன்.
இங்குமங்குமாய்
அந்தப்பொன்னிற முதிர் இலைகள்
வீழ்ந்த வண்ணமிருந்தன..
கல்விக் கூட
கதவு வாசலில்
காண முடியவில்லை யாரையும்
அந்தக் காட்சிகடந்தது விரைவாய்.
துப்பல்...
எனை வெறுத்து
அந்தச் சிறுவன் எச்சில் உமிழ்ந்தான்
திரும்பி ஆட்காட்டிவிரலால் தன் நெற்றியில் வைத்து
உணக்கென்ன பைத்தியமா என்று சைகை செய்தான்.
எனக்கென்ன பைத்தியமா ?
எனக்குத் தெரியும்
அநேக மகரந்த மணிகள் அலைந்தபடி
அலைந்தபடி...
இந்த காற்றுவெளியெங்கும் அலைந்தபடி
மிகப்பெரிய கூட்டமாய்க் கூடி
அநேக மகரந்த மணிகள் அலைந்தபடி
வாழ்த்த முந்தியபடி...
ஆயினும்
நான் அந்தத் துப்பலைப் பார்த்தேன் ...
என்னைப் பொறுத்தவரை
ஆப்பிரகாம் கைப்பர் வீதியை ஒரு தேவதை
முத்தமிட்ட சுவடு அது.
அதோ
எனக்கு மிக அண்மையாய்
இலங்கைத் தீவிலுருந்து
என் மகன் முத்தமிட்ட மகரந்த மணிகள்
முத்தமிட முந்துகின்றன....
Quote:ஆப்பிரகாம் கைப்பர் வீதி: ஒல்லாந்தில் நான் வாழ்ந்த ஒரு தெரு.
Quote:நெதர்லாந்து மொழியில் எழுதினேன், வருடாந்த டச்சுக் கவிஞர்கள் ஒன்று கூடும் விழாவில் தெரிவுசெய்யப்பட்டுப்பிரசுரமாகியது,
தமிழில் இப்போ மொழிபெயர்த்துள்ளேன்.
|
|
|
| ஜேர்மனியில் தமிழரின் அவலம் |
|
Posted by: ஆவி - 09-24-2004, 01:06 PM - Forum: புலம்
- Replies (48)
|
 |
ஜேர்மனியில் தமிழரின் அவலம்
இந்த வாரம் சுமார் 1000 பேருக்கு நீலபாஸ்போட் வைத்திருபவர்களை நாடு திருப்பு வதற்கான அதிரடி கடித தகவல் வந்தவுடன் அவர்களை நாடுதிருப்பும் நடைவெடிக்கையும் அதிதீவிரமாக வெளி நாட்டு திணைக்களம் இறங்தியுள்ளதாக பரிதாபமான தகவல் கிடைத்துள்ளது
சம்பந்தபட்டவர்யாரும் இருந்தால் தகவலை பகிர்ந்து கொள்ளுங்கள்
|
|
|
|