| Welcome, Guest |
You have to register before you can post on our site.
|
| Forum Statistics |
» Members: 8,982
» Latest member: lucilegr4
» Forum threads: 9,058
» Forum posts: 83,244
Full Statistics
|
| Online Users |
There are currently 228 online users. » 0 Member(s) | 226 Guest(s) Bing, Google
|
| Latest Threads |
±ôÀÊ ÀÈ¢ì¸Ä¡õ
Forum: நகைச்சுவை
Last Post: UsArgum
01-10-2026, 09:07 AM
» Replies: 28
» Views: 10,311
|
Mrs.Sirimao Bandaranayake
Forum: நகைச்சுவை
Last Post: GeraTep
11-14-2025, 10:46 AM
» Replies: 14
» Views: 3,231
|
Farty time
Forum: நகைச்சுவை
Last Post: ㄹㅈㄷㄹㅈ
08-26-2025, 03:48 PM
» Replies: 11
» Views: 5,605
|
கனவே கலைகிறதே
Forum: பொழுதுபோக்கு
Last Post: KULAKADDAN
04-30-2006, 06:37 PM
» Replies: 0
» Views: 6,296
|
Karuna Cadres were captur...
Forum: பிறமொழி ஆக்கங்கள்
Last Post: ஜெயதேவன்
04-30-2006, 06:17 PM
» Replies: 4
» Views: 8,636
|
என்ன நடந்தது யாழிற்கு?
Forum: உங்கள் கருத்துக்கள்
Last Post: ஜெயதேவன்
04-30-2006, 06:03 PM
» Replies: 42
» Views: 31,062
|
முடியுமானால் முயற்ச்சியுங...
Forum: போட்டிகள்
Last Post: Subiththiran
04-30-2006, 05:00 PM
» Replies: 15
» Views: 14,465
|
**சுடேக்கு** புதிர் விளைய...
Forum: போட்டிகள்
Last Post: kavithaa
04-30-2006, 04:30 PM
» Replies: 63
» Views: 38,485
|
புல்மோட்டையில் தாக்குதல்
Forum: செய்திகள் : தமிழீழம்
Last Post: Sriramanan
04-30-2006, 04:10 PM
» Replies: 2
» Views: 8,037
|
போதனை வேண்டாம்! பு...
Forum: செய்திகள் : தமிழீழம்
Last Post: alika
04-30-2006, 03:13 PM
» Replies: 4
» Views: 6,239
|
|
|
| பிரபல சிங்களத் திரைக்கலைஞர் காமினி பொன்சேகா காலமாகிவிட்டார் |
|
Posted by: ஆவி - 09-30-2004, 07:52 PM - Forum: சினிமா
- Replies (6)
|
 |
பிரபல சிங்களத் திரைக்கலைஞர் காமினி பொன்சேகா காலமாகிவிட்டார்
ஜ கொழும்பிலிருந்து சிங்கதுரை ஸ ஜ வியாழக்கிழமை, 30 செப்ரெம்பர் 2004, 21:43 ஈழம் ஸ
சிங்களத் திரைப்படங்கள் மூலம் தன் நடிப்புத்திறனை வெளிப்படுத்திய காமினி பொன்சேகா சிறந்த கலைத்துவம் மிக்க கலைஞராக விளங்கினார். திரை நடிப்புடன் இயக்குனராகவும், டைரக்டராகவும் இவர் விளங்கினார்.
உலகப்புகள் பெற்ற திரைக்கலைஞரான லெஸ்ரர் ஜேம்ஸ் பீரிஸின் பல திரைப்படங்களில் காமினி நடித்து சர்வதேச மட்டத்தில் அறிமுகமானவர்.
1959ம் ஆண்டு வெளியான தெய்வ யோகயா என்ற திரைப்படத்தில் அறிமுகமானவர் காமினி பொன்சேகா அவர்கள். 60, 70, 80களின் காலப்பகுதியில் சிங்களத் திரையுலகில் கொடிகட்டிப் பறந்த இவர், பெரிதாக வளர்ச்சி கண்டிராத சிங்களத் திரையுலகை வளர்தெடுத்து மக்கள் மத்தியில் புகழ்பெற வைத்த பெருமையும் இவருக்குண்டு.
பிற்காலத்தில் தமிழ்-சிங்கள அரசியல் பிரச்சனையை வைத்து கொட்டி வலிகய என்ற திரைப்படத்தை இவர் இயக்கினார்.
வடக்கு கிழக்கு மாகாண சபை ஆளுனராகவும் இவர் பதவி வகித்துள்ளார். இனவாதமற்ற ஒரு கலைஞனாக விளங்கிய இவர் இலங்கை இந்திய கூட்டுத்தயாரிப்பான நங்கூரம், நீலக்கடலின் ஓரத்திலே ஆகிய தமழ்ப்படங்களில் கூட நடித்திருக்கிறார்.
இவ்வருட ஆரம்பத்தில், இலங்கை திரையுலகம், காமினி பொன்சேகாவின் திரையுலகப் பொன்விழாவை பண்டாரநாயக்கா சர்வதேச நினைவரங்கில் கொண்டாடியபோது, இன மத மொழி பேதமின்றி, இலங்கைத் திரையுலகின் அத்தனை கலைஞர்களும் வந்திருந்து வாழ்த்தியமை குறிப்பிடத்தக்கது.
அவ்விழாவில் உரையாற்றிய காமினி பொன்சேகா அவர்கள், திரைக்கலைஞர்கள் அரசியலுக்குள் காலடி எடுத்து வைப்பதை முற்றாகத் தவிர்க்கும் படியும், தனது அனுபவத்தில், பிரதான இரு சிங்களக் கட்சிகளுக்கும் தான் நிறையவே உழைப்பையும் ஆதரவையும் வழங்கியும்கூட, திரையுலகிற்கு அவர்கள் செய்வதாக உறுதியளித்த எதையுமே செய்ய முன்வரவில்லை என்றார்.
சிறீலங்காவின் பிரதான கட்சிகள் மக்களையும் திரையுலகையும் நிறையவே ஏமாற்றி விட்டதாகக் கவலையுடன் குறிப்பிட்ட காமினி பொன்சேகா அவர்கள், இனிமேலும் இக்கட்சிகள் திரையுலகிற்கு எதுவும் செய்வார்கள் என்று எதிர்பார்க்காது, திரைக்கலைஞர்கள் தாங்களாகவே முன்வந்து திரையுலகை வளர்க்க வேண்டுமென்றும் கேட்டுக்கொண்டார்.
இலங்கையில் வாழும் அனைத்து மக்களும் சமத்துவமான உரிமைகளுடன் வாழ வேண்டுமென்ற கொள்கையுள்ளவரும், இனப்பிரச்சனைக்குத் தீர்வு காண்பது அவசியம் என்பதை சிங்கள மக்களிடையே வலியுறுத்தி வந்தவருமான பிரபல கலைஞரும் அரசியல்வாதியுமான அமரர் காமினி பொன்சேகா அவர்களுக்கு தமிழ் மக்களும் தங்கள் கண்ணீர் அஞ்சலியைச் செலுத்தி நிற்கிறார்கள்.
நன்றி புதினம்
|
|
|
| அதிகம் உங்களை கவர்ந்த தளம் |
|
Posted by: nirmalan - 09-29-2004, 06:05 AM - Forum: அறிமுகம்
- Replies (14)
|
 |
எமது ஈழத் தமிழர்கள் நடத்தும் இணையத்தளங்களில் அதிகம் உங்களை கவர்ந்த இணையத்தளங்கள் இதில் பரிமாறுங்கள். நானும், மற்றவர்களும் இதன் ஊடாக அறிந்துகொள்ள முடியும்.
நான் அடிக்கடி பார்க்கும் தளம் எனில், யாழ் இணையத்தளம், தினக்குரல், உதயன், சூரியன், ஐபிசி வானொலி ஆகிய தளங்களாகும்.
|
|
|
| அரசியல்துறைப் பொறுப்பாளர் தலைமையிலான விடுதலைப் புலிகளின் குழ |
|
Posted by: Thusi - 09-28-2004, 01:58 PM - Forum: செய்திகள் : தமிழீழம்
- Replies (8)
|
 |
அரசியல்துறைப் பொறுப்பாளர் தலைமையிலான விடுதலைப் புலிகளின் குழு ஜெனீவா பயணம்
தமிழீழ விடுதலைப்புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் சு.ப. தமிழ்ச்செல்வன் தலைமையிலான குழுவினர் ஜெனீவாவில் தமது அரசியல் விவகாரக் குழுவின் மாநாட்டில் பங்குகொள்வதற்காகவும், மற்றும் ஐரோப்பிய நாடுகளில் பல்வேறு சந்திப்புகளை மேற்கொள்வதற்கானதுமான பயணத்தினை மேற்கொண்டு இன்று நண்பகல் 1 மணியளவில் கிளிநொச்சியிலிருந்து உலங்குவானு}ர்தி மூலமாகப் புறப்பட்டுச் சென்றனர்.
இக்குழுவில் காவல்துறைப்பொறுப்பாளர் பா. நடேசன், நீதி நிர்வாகத்துறைப் பொறுப்பாளர் பரா, மட்டு-அம்பாறை மாவட்ட அரசியல்துறைப் பொறுப்பாளர் கௌசல்யன் ஆகியோர் உட்பட பலரும் அங்கம் வகிக்கின்றனர்.
இக்குழுவினர் முதலில் ஜெனீவாவில் நடைபெறும் விடுதலைப்புலிகளின் அரசியல் விவகாரக் குழுவினரின் மாநாட்டில் பங்குகொள்வர். இதில் சமாதான முன்னெடுப்புகளின் தற்போதைய நிலைஇ மற்றும் இடைக்hல தன்னாட்சி அதிகார சபைப் பிரேரணை தொடர்பாகவும் மற்றும் பல விடயங்களும் கலந்துரையாடப்படுமெனத் தெரிகிறது.
|
|
|
| LAUGHTER - THE BEST MEDICINE |
|
Posted by: hari - 09-28-2004, 09:16 AM - Forum: நகைச்சுவை
- Replies (25)
|
 |
THREE PROFESSORS at the railway station were deep in conversation. They did not notice the train arrive. Then the guard shouted, "Take your seats, please." The professors rushed for the train, and two of them managed to clamber aboard before it moved. The third one was left behind. One of the professor's students happened to be at the station and he offered words of comfort. "Two out of three caught the train, Sir," he said. "That's not too bad." "I know," said the professor. "But it was my train. My friends only came to say good-bye."
<img src='http://www.area5.co.uk/holmfirth/station1.jpg' border='0' alt='user posted image'>
|
|
|
| Please give me the permission to post |
|
Posted by: Sriramanan - 09-28-2004, 01:36 AM - Forum: அறிமுகம்
- Replies (9)
|
 |
வணக்கம், யாழ் இணைய பொறுப்பாளர் அவர்களே.
நான் யாழ் கருத்துக்களத்தில் என்னைப் பதிவு செய்து கிட்டத் தட்ட அரை ஆண்டுகள் சென்று விட்டது. ஆனால் இன்னும் எனக்கு எனது கருத்துக்களைப் பதிவு செய்ய அனுமதிக்கப்படவில்லை. தயவு செய்து எனது கருத்துக்களையும் பதிவு செய்ய அனுமதியுங்கள் அல்லது என்னை உங்களுடைய கருத்துக் களத்திலிருந்து நீக்கி விடுங்கள் நன்றி
|
|
|
| உயிர் உள்ள வரை.......! |
|
Posted by: tamilini - 09-26-2004, 03:51 PM - Forum: கவிதை/பாடல்
- Replies (12)
|
 |
<img src='http://www.yarl.com/forum/files/1011-008-78-1068.gif' border='0' alt='user posted image'>
[b]காலம் முழுதும் காத்திருந்து
உன்னை கண்டுபிடித்தேன்..
உன் கண்கள் கொண்ட
காந்தம் கொண்டு
நம் காதல் கண்டுபிடித்தேன்...
தேடலிலே கிடைத்த புதையல் நீ
உன்னை சேர துடிக்கும்
சிறு உயிர் நான்...
மனங்கள் கொண்ட மாற்றத்தினால்
மாற்றம் வந்தது உறவினிலே...
உன்னை நினையாத நிமிடம்...
என்று ஒன்று இல்லாமல் இன்று
இதுவரை நாம் இளைஞர்களாய்..
இன்று முதல் நாம் குழந்தைகளாய்..
கவலைகள் அற்ற அற்புத நிலையில்
கலைகள் நிறைந்த புதிய உலகில்..
காதல் என்னும் சமுத்திரத்தில்..
ஜோடி மீன்களாய் இனி நாம்
உயிர் உள்ள வரை இவ்உலகில்.......
|
|
|
| நடிகர் கமலின் காதல் கடிதம் |
|
Posted by: ஆவி - 09-26-2004, 02:04 PM - Forum: சினிமா
- No Replies
|
 |
<b>நடிகர் கமலின் காதல் கடிதம்</b>
1.12.1982
அன்பே உனக்கொரு கடிதம்,
எனக்கு உன்மேலுள்ள காதலை, ஆயிரம் முறை வார்த்தைகளில் நனைத்து உனக்கு அஞ்சலியாக்கி விட்டேன். உனதுணர்வை நானும், எனதுணர்வை நீயும், வார்த்தையின்றி அடையாளம் கண்டுகொள்ளும் உன்னதத்தை நம் காதல் எய்திவிட்டபின், வார்த்தைகள் திகட்டுகின்றன. இனி என் கடிதங்கள் வெற்றுக் காகிதங்களாக உனை வந்தடைந்தாலும் என் நிலையறியும் திறன் உனக்குண்டு. நான் அறிவேன்.
பின் ஏன் இந்தக் கடிதம்?
நம்முறவின் உன்னதம் உலகுக்குப் புரியாமல், அது ஊமையாக மாண்டுவிடக்கூடாது என்பதற்காக, நாளை மரணம் நம்மைப் பூஜைக்குரியவர்களாக ஆக்கிவிட்ட பின்பு, நமது சரிதையின் உயிர்ச்சான்றுகளாக இக்கடிதங்கள் வாழும். இன்று நம்முறவுக்கு கண்டனம் சொல்லும் சமுதாயம், நாளை நமக்குப் பின் நமது கால் துகள்களைக்கூட பத்திரப்படுத்த முற்படுமே, அப்போது இக் கடிதங்கள் அவர்களுக்குப் பொக்கிஷமாகும்.
எனவே, காதலி இக்கடிதத்தைப் பத்திரப்படுத்தி வை. இன்றைய விமரிசனங்களில் சிக்கிச் சிதைந்துவிடாமல் பாதுகாத்து வை. காதலுக்கும் அன்புக்கும் வெறுப்புக்கும் வித்தியாசம் இம்மி அளவே என்பதை இன்று நாம் உணர்ந்ததை நாளை அவர்கள் புரிந்து கொள்ளும் வரை வெறும் பரிச்சயம் என்ற இடக்கரடக்கலின் நிழலில் நம் காதல் வாழட்டும்.
நேற்றைய புரட்சிக்காரர்களின் திருட்டுக் கவிதைகள்
இன்று தேசிய கீதங்களானது போல்
நாளை நம் காதலும்...
உனது
நான்
பல நாட்களுக்குப் பிறகு...
சரியாகச் சொன்னால்
20 வருடங்களுக்குப் பிறகு
மீண்டும் உனக்கொரு காதல் கடிதம்.
உன் விலாசம் எப்படியும் மாறும்
என்ற காரணத்தினாலோ என்னவோ
உனது விலாசத்தை காதலி என்பதோடு
அன்று விஸ்தீரணம் செய்யாது விட்டுவிட்டேன்.
காதலி... மீண்டும் உனக்கொரு கடிதம்.
நான் முன்பு எழுதிய கடிதம்
உனக்கல்ல எனினும் இத்துடன்
அதையும் இணைத்துள்ளேன்.
காதல் ரிஷிகளின் மூலம் பார்ப்பது
அனாசாரமாகாது. பார்த்துப் புரிந்துகொள்.
பழைய கடிதத்தின் சொந்தக்காரியிடம்
இந்தக் கடிதத்தைக் காண்பிக்க வேண்டிய
அவசியமில்லை. அவளுக்கு ஆர்வமும்
இருக்க வாய்ப்பில்லை.
காதல் மாறாதது என்பது
உண்மை. ஆள் மாறினாலும்
இல்லாள் மாறினாலும் காதல்
மாறுவதில்லை.
கூடி வாழ்வதும் காதலில் கூடுவதும்
இருவேறு நிலைகள்.
அவள் என்னவள்
அவன் என்னவன் என
அறம் என்ற பெயரால் அடையாளச்
சூடு வைக்கும் மிருகத்தனம்
மனிதனுக்கே உரித்தானது.
நமது ஆறாவது உணர்வை
போற்று. பண்டிதர்கள் மெதுவாக
உறுதியான மற்ற
ஐந்து உணர்வுகளின்
உத்வேகம் குறைந்து வருவதை
உணர மறுக்கிறார்கள்.
அந்த மறுப்பில்
என் (நம்) காதலும் சிக்குண்டு
தவிக்கிறது.
மௌன விரதம் பூண்டவர்கள்
சமிக்ஞை செய்து
கவிதையை வைக்கிறார்கள்.
நான் காதலன் கவிஞன்
ஆதலால் காதலால் மீண்டும்
உனக்கொரு கடிதம்.
இதில் மறுபடியும் விலாசமில்லாமல் விட்டிருப்பது
விபத்தல்ல
நீ விலாசத்தை மாற்றிக்கொண்டே யிருக்கிறாய்
நான் என்ன செய்ய?
அதே நான்தான்,
நீ மட்டும் வேறு!
நன்றி விகடன்
|
|
|
|