![]() |
|
திலீபன் - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: படைப்புக் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=11) +--- Forum: கவிதை/பாடல் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=52) +--- Thread: திலீபன் (/showthread.php?tid=6686) |
திலீபன் - Thusi - 09-24-2004 திலீபன் நீண்ட பன்னிரு நாட்கள்...... எப்படித்தான் தாங்கினாய் கொழுந்து விட்டெழும் பசித் தீயை.... ஒரு நேரம் உணவில்லையென்றால் உடல் தொய்ந்து உயிர்வற்றிப் போகிறது எமக்கு. உணவின் தேவை சகல உயிர்களும் உணரும். நீ, திலீபா, உணர்வின் வேட்கைக்காய் உணவு மறுத்து உயிர் துறந்தாய். நல்லூரின் வீதியில் நல்லுள்ளங்கள் சூழ நாசம் செய் படைகளுக்கெதிராய் நம்மவரின் தேவைகள் முன்வைத்து திலீபா நீ யாகம் இயற்றினாய் - உயிர் நெய்யுூற்றி. அகிம்சை போதித்த மகாத்மாவின் தேசத்துப் படைகள் எமது அகிம்சா வீரனை பசித்தீயில் எரித்தழித்தார்கள். மறவோம் திலீபா. நீ சொன்ன விடுதலைத் தேசம் மரணத்திலும் மறவோம். நாம் செத்து விழுந்தாலும் இற்றுப்போகாதெம் வரலாறு. வரலாற்றின் பக்கங்களில் நீ என்றும் வாழுவாய் - வாழ்ந்துகொண்டேயிருப்பாய். - tamilini - 09-24-2004 உண்ணா நோன்பிருந்து உயிரி நீத்த உன்னத வீரனுக்காய்.. உள்ளத்தில் இருந்து உதித்த கவி நன்று... தொடருங்கள்... - kuruvikal - 09-24-2004 அண்ணனவன் பாதங்கள் பதிந்த பாதைகள் எங்கள் கால்தடம் மிதித்ததால் தியாக தீபம் திலீபன் எமக்குள் என்றும் சுடர்விடுவான் தியாகத் தீ தந்து விடுதலை வேள்வி வளர்த்து நிற்பான்....! - kavithan - 09-24-2004 அண்ணன் தீலிபனுக்காய் அருங்கவி வடித்த நீங்கள் இன்னும் இன்னும் கவிபாடி களம் வர வேண்டுகிறேன் - shanmuhi - 09-25-2004 நினைத்தாலும் சிலிர்க்குது என் உடம்பு உண்ணா நோன்பிருந்து உயிர்நீத்த உன்னத தியாக தீபமாய் என்றும் எமக்குள் சடர்விட்டபடியே நினைவுதனை மறக்க முடியவில்லை என்னால் |