Yarl Forum
..இலையுதிர் காலத்தின் கூறுகள்... - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: படைப்புக் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=11)
+--- Forum: கவிதை/பாடல் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=52)
+--- Thread: ..இலையுதிர் காலத்தின் கூறுகள்... (/showthread.php?tid=6687)



..இலையுதிர் காலத்தின் - சுடரோன் - 09-24-2004

<img src='http://www.biospiritual.org/images/crying-child.jpg' border='0' alt='user posted image'>
[size=18]<b>இலையுதிர் காலத்தின் கூறுகள் </b>

கீழ்நிலைக் கல்விக்கூடம்
தன் கதவைத் திறந்து
கதிர்களைப் பரப்பிக்கொண்டிருந்தது,

சந்தோஷக் கொடிகளையேந்திய வண்ணம்
சிறுகால்கள்
வீடுகளை நோக்கி..

முதல் மாடியின் நடைபாதையில் நான் நின்று
அந்த நடக்கும்
பூத்தசோலையைப் பார்க்கின்றேன்

சோதரியின் வாய் வெடித்த
சொல் தந்த அழுத்தம்..
மாற்றம் தேடி வாசலுக்கு வந்தேன்..
சிறையிலுருந்து
விடுபட்ட சந்தோஷம்
அந்த மாணவர்களைப் போல்,

செவப்பு அப்பிள் மரம்
அந்தக் கால்வாய்
அந்த ஐக் மரங்கள்
எல்லாம் அதனதன் வடிவங்களில்.....

மத்தியானவேளை
பிரகாசக் கதிர்கள்

சின்னப் பறவைகளின்
விசிலடிப்பு சிறகடிப்பு

செல்லமுகங்ளில்
சந்தோஷக் காட்சிகளின் அனிவகுப்பு..
இளங்கால்களின் சுருதிச் சேர்ப்பு
கையோடு கைகோர்ப்பு
நன்பர்களின் கைகளில் பரிமாறும் இனிப்பு
தேவலேகம் வழங்கும்
அமுதம் அதுவா?

அதோ...
ஒரு சிறுவன்
அங்கே மத்தியானச் சூரியன் போல்
என் மூத்தமகனின் வயதிருக்கும்

உதிக்கும் விழிகள் கீழே நோக்க ..
மிகத் தனிமையாய்...
நொந்தபடி..
துன்புறுத்துப்பட்டிருக்கலாம் மற்ற மானவர்களால்,

ஹலோ சொன்னேன்
வாழ்த்தாகமட்டுமன்றி
ஒரு வாஞ்சையாயும்..
தேற்றவும் எண்ணி

அந்த முகத்தில்
மெல்லியதான புன்னகைக்காய்க் காத்து நின்றேன்.

இங்குமங்குமாய்
அந்தப்பொன்னிற முதிர் இலைகள்
வீழ்ந்த வண்ணமிருந்தன..

கல்விக் கூட
கதவு வாசலில்
காண முடியவில்லை யாரையும்
அந்தக் காட்சிகடந்தது விரைவாய்.

துப்பல்...

எனை வெறுத்து
அந்தச் சிறுவன் எச்சில் உமிழ்ந்தான்
திரும்பி ஆட்காட்டிவிரலால் தன் நெற்றியில் வைத்து
உணக்கென்ன பைத்தியமா என்று சைகை செய்தான்.

எனக்கென்ன பைத்தியமா ?

எனக்குத் தெரியும்
அநேக மகரந்த மணிகள் அலைந்தபடி
அலைந்தபடி...
இந்த காற்றுவெளியெங்கும் அலைந்தபடி
மிகப்பெரிய கூட்டமாய்க் கூடி
அநேக மகரந்த மணிகள் அலைந்தபடி
வாழ்த்த முந்தியபடி...

ஆயினும்
நான் அந்தத் துப்பலைப் பார்த்தேன் ...
என்னைப் பொறுத்தவரை
ஆப்பிரகாம் கைப்பர் வீதியை ஒரு தேவதை
முத்தமிட்ட சுவடு அது.

அதோ
எனக்கு மிக அண்மையாய்
இலங்கைத் தீவிலுருந்து
என் மகன் முத்தமிட்ட மகரந்த மணிகள்
முத்தமிட முந்துகின்றன....

Quote:ஆப்பிரகாம் கைப்பர் வீதி: ஒல்லாந்தில் நான் வாழ்ந்த ஒரு தெரு.


Quote:நெதர்லாந்து மொழியில் எழுதினேன், வருடாந்த டச்சுக் கவிஞர்கள் ஒன்று கூடும் விழாவில் தெரிவுசெய்யப்பட்டுப்பிரசுரமாகியது,
தமிழில் இப்போ மொழிபெயர்த்துள்ளேன்.



- ஆவி - 09-24-2004

மொழிபெயர்த்தாலும் சந்தம் மாறாமல் உயிரோடு உள்ள கவிதைக்கு வாழ்த்துக்கள்


- tamilini - 09-24-2004

Quote:அதோ
எனக்கு மிக அண்மையாய்
இலங்கைத் தீவிலுருந்து
என் மகன் முத்தமிட்ட மகரந்த மணிகள்
முத்தமிட முந்துகின்றன....
அருமையான அழகான கவிதை வாழ்த்துக்கள்.. தொடர்ந்து எழுதுங்கள் அண்ணா...


- kavithan - 09-24-2004

நன்றாக இருக்கிறது.. வாழ்த்துக்கள் அண்ணா


- hari - 09-29-2004

அருமையான கவிதை தொடர்ந்து எழுதுங்கள் சுடரோன் அண்ணா.
வாழ்த்துக்கள் !!