Welcome, Guest
You have to register before you can post on our site.

Username
  

Password
  





Search Forums

(Advanced Search)

Forum Statistics
» Members: 8,982
» Latest member: lucilegr4
» Forum threads: 9,058
» Forum posts: 83,244

Full Statistics

Online Users
There are currently 302 online users.
» 0 Member(s) | 299 Guest(s)
Applebot, Bing, Google

Latest Threads
±ôÀÊ ÀÈ¢ì¸Ä¡õ
Forum: நகைச்சுவை
Last Post: UsArgum
01-10-2026, 09:07 AM
» Replies: 28
» Views: 10,325
Mrs.Sirimao Bandaranayake
Forum: நகைச்சுவை
Last Post: GeraTep
11-14-2025, 10:46 AM
» Replies: 14
» Views: 3,234
Farty time
Forum: நகைச்சுவை
Last Post: ㄹㅈㄷㄹㅈ
08-26-2025, 03:48 PM
» Replies: 11
» Views: 5,608
கனவே கலைகிறதே
Forum: பொழுதுபோக்கு
Last Post: KULAKADDAN
04-30-2006, 06:37 PM
» Replies: 0
» Views: 6,300
Karuna Cadres were captur...
Forum: பிறமொழி ஆக்கங்கள்
Last Post: ஜெயதேவன்
04-30-2006, 06:17 PM
» Replies: 4
» Views: 8,647
என்ன நடந்தது யாழிற்கு?
Forum: உங்கள் கருத்துக்கள்
Last Post: ஜெயதேவன்
04-30-2006, 06:03 PM
» Replies: 42
» Views: 31,081
முடியுமானால் முயற்ச்சியுங...
Forum: போட்டிகள்
Last Post: Subiththiran
04-30-2006, 05:00 PM
» Replies: 15
» Views: 14,470
**சுடேக்கு** புதிர் விளைய...
Forum: போட்டிகள்
Last Post: kavithaa
04-30-2006, 04:30 PM
» Replies: 63
» Views: 38,508
புல்மோட்டையில் தாக்குதல்
Forum: செய்திகள் : தமிழீழம்
Last Post: Sriramanan
04-30-2006, 04:10 PM
» Replies: 2
» Views: 8,043
போதனை வேண்டாம்! பு...
Forum: செய்திகள் : தமிழீழம்
Last Post: alika
04-30-2006, 03:13 PM
» Replies: 4
» Views: 6,242

 
  தமிழீழ விடுதலைப் புலிகளின் ஊடக அறிக்கை
Posted by: anpagam - 01-05-2005, 02:01 AM - Forum: செய்திகள் : தமிழீழம் - Replies (1)

[b]தமிழீழ விடுதலைப் புலிகளின் ஊடக அறிக்கை

(புதன்கிழமை 5 சனவரி 2005 தமிழீழ விடுதலைப்புலிகளின் ஊடகத்துறையின் பொறுப்பாளர்.)

வடக்கு கிழக்கில் சுனாமி பேரலையினால் ஏற்பட்ட அழிவால் இடம் பெயர்ந்தவர்களுக்கான மனிதாபிமான உதவிகள் தொடர்பாக உள்ளுர் மற்றும் சர்வதேச ஊடகங்களுக்கான அவசர வேண்டுகோள் இது. முற்றுமுழுதாக மனிதாபிமானம் சார்ந்த விடயங்களின் மக்களைப் பிழையாக வழி நடத்தும் விதமான தவறான ஊடக அறிக்கைகளை நாம் காணக் கூடியதாக உள்ளது. ஊடகச் செய்திகளில் தவறுகளும் பக்கச்சார்புத் தன்மையும் இருப்பது தற்பொழுது முன்னெடுக்கப்படும் மனிதாபிமான உதவிப் பணிகளுக்கான கூட்டு முயற்சிகளைப் பெரிதும் பாதிக்கும் என்பதால் அவல நிலையைக் கருத்தில் கொண்டு செய்தி வெளியிடுவதில் அவதானமும் பொறுப்பும் இருக்க வேண்டும் என்று இதனூடாக வேண்டிக் கொள்கின்றோம்.

ஆரம்ப கட்டத்தில் அநேகமான ஊடகவியலாளர்கள் கொழும்பை மையமாகக் கொண்டிருக்கும் வகையில் ஊடகக் கவனம் கொழும்புக்கு அண்மித்த பிரதேசங்களிலேயே இருந்தது. இது எங்களால் விளங்கிக் கொள்ளக் கூடியது. தற்பொழுது ஊடகக் கவனம் வடக்கு கிழக்கின் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு திரும்பியிருக்கும் வகையில் இன்னும் கூட செய்திகளில் சில உண்மைத் தன்மையற்ற நிலை காணப்படுவது அதிர்ச்சி தருவதாக உள்ளது. வடக்கில் புலிப் புரட்சியாளர் நலன்புரி நிலையத்துக்கு தீ வைத்தார்கள் தெற்கில் இருந்து வரும் உதவி விடுதலைப் புலிகளால் தடுக்கப்படுகின்றது ரஷ்ய வைத்தியர்களுக்கு புலிகளின் பிரதேசத்துக்குச் செல்ல அனுமதி மறுப்பு போன்ற செய்திகள் துரதிஸ்டவசமானவை.

இத்தகைய செய்திகள் தொடர்பாக பொருத்தமான தரப்புக்களிடம் இருந்துää உதாரணத்துக்கு யுத்த நிறுத்தக் கண்காணிப்புக்குழு அல்லது சம்மந்தப்பட்ட தரப்புடன் உண்மைத் தன்மை பற்றி சரி பார்த்துக் கொள்வது உள்நோக்கத்துடன் செய்திகளை வழங்கும் மூலங்களில் தங்கியிருப்பதை விடச் சிறந்தது.
இந்த வகையில் மனிதாபிமானப் பணி தொடர்பான செய்திகளில் திரிபு ஏற்படாமல் இருப்பதை ஊடகங்களுக்கு வசதி செய்து கொடுக்கும் முகமாகää சில விடயங்களைத் தெளிவுபடுத்துவது பொருத்தமானது எனக் கருதுகின்றோம்;.

தனிநபரோ நிறுவனங்களோ மற்றும் எவராக இருப்பினும் அழிவுப் பிரதேசங்களுக்கு வந்து பார்வையிடுவதையும் நலன்புரி நிலையங்களில தங்கியிருப்பவர்களைச் சந்திப்பதையும் மாவட்ட மட்டத்தில் உள்வரும் எல்லா உதவிகளையும் பொறுப்பாக பதிவுக்குட்படுத்தி வெளிப்படைத் தன்மையுடன் வைத்திருப்பதற்காக ஒழுங்கமைக்கப்பட்ட அமைப்புக்களின் காத்திரத் தன்மையை அறிந்து கொள்வதற்கும் நாம் திறந்த மனதுடன் வரவேற்கின்றோம். மாவட்ட மட்டத்தில் அரச அதிபர் சர்வதேச உள்ளுர் தொண்டர் நிறுவனங்கள் மக்கள் அமைப்புக்களின் பிரதிநிதிகளை உள்ளடக்கிய இக்கட்டமைப்பு மிகச் செயற்றிறன் மிக்க ஒன்றென நிரூபிக்கப்பட்டுள்ளது.

இங்கு விஜயம் செய்யும் சர்வதேச தொண்டர் நிறுவனப் பிரதிநிதிகள்ää ஐ.நா அமைப்பின் அதிகாரிகள் போன்றோர் இக்கட்டமைப்பின் செயற்றிறனை வெகுவாகப் பாராட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது. எங்கள் நிர்வாகப் பிரதேசத்துக்குள் மனிதாபிமானப் பணி தொடர்பாக எல்லோருக்கும் தங்குதடையற்ற அனுமதி உண்டு என்பதுடன்ää உதவிப் பொருட்களைக் கொண்டு வரும் வாகனங்கள் விடுதலைப் புலிகளால் திருப்பி அனுப்பப்படுகின்றன என்ற குற்றச்சாட்டில் எவ்வித உண்மையில்லை என்பதையும் தெரிவித்துக் கொள்ள விரும்புகின்றோம். மனிதாபிமான உதவிக்கெனக் கொண்டு வரும் பொருட்கள் மீது வரியேதும் அறவிடப்படுவதில்லை என்பதையும் இங்கு குறிப்பிட வேண்டும்.

மனிதாபிமானப் பணி தொடர்பான விடயங்களில் விளக்கங்கள் தேவைப்படின் தமிழீழ விடுதலைப் புலிகளின் சமாதன செயலகத்துடன் தொடர்பு கொள்ள முடியும் என்பதையும் தெரிவித்துக் கொள்ளுகின்றோம்.

நன்றி: நிதர்சனம்

Print this item

  இந்திய செய்தியரங்கத்தில்
Posted by: AJeevan - 01-05-2005, 01:01 AM - Forum: செய்திகள் : தமிழீழம் - No Replies

<img src='http://www.bbc.co.uk/worldservice/images/2005/01/20050101191642aid203.jpg' border='0' alt='user posted image'>
<b>உதவிகோரி தமிழக முதல்வர் இந்தியப் பிரதமருக்குக் கடிதம்</b>

கடற்கொந்தளிப்பினால் பெரும் சேதங்களைச் சந்தித்துள்ள தமிழ்நாட்டின் மாவட்டங்களுக்கு நிவாரணமாக 4,500 கோடி ரூபாய் நிதியும் 54 ஆயிரம் டன் உணவு தானியமும் மத்திய அரசு தந்துதவ வேண்டும் என தமிழக முதல்வர் ஜெயலலிதா இந்தியப் பிரதம்ர் மன்மோகன் சிங்குக்கு கடிதம் எழுதியுள்ளார்.

பொதுவான பேரழிவு நிதி வழங்குவதில் பின்பற்றப்படும் விதிகளைத் தாண்டி விசேஷத் திட்டங்களை இந்த சுனாமி பேரழிவு தொடர்பாக மத்திய அரசு உருவாக்க வேண்டும் என்றும் அக்கடிதத்தில் கோரப்பட்டுள்ளது.

நிவாரணத் தேவைகளை மதிப்பிடுவதற்காக அமைக்கப்பட்டுள்ள மத்தியக் குழு இன்று சென்னை வந்து அங்கு பாதிக்கப்பட்ட பிரதேசத்தைப் பார்வையிட்டுள்ளது.

இக்குழு நான்கு பிரிவுகளாகப் பிரிந்து நாகை மாவட்டம்,கடலூர் மாவட்டம், , பாண்டிச்சேரி மற்றும் குமரி மாவட்டம் ஆகிய இடங்களுக்குச் சென்று அங்கு சேதங்கள் மற்றும் தேவைகளின் அளவை மதிப்பிட இருக்கிறது.

இதனிடையே, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் தமிழக சட்டமன்ற உறுப்பினர்கள் இன்று முதல்வரைச் சந்தித்து நிவாரணப் பணிகளை நிர்வகிப்பது தொடர்பாக அனைத்துக் கட்சிக் குழு ஒன்று உருவாக்கப்பட வேண்டும் என்று கோரியுள்ளனர்.

சென்னையில் இன்று பிற்பகல் நந்தனம் போன்ற இடங்களில் லேசான நில அதிர்வு மெலிதாக உணரப்பட்டது, இது 15 விநாடிகள் நீடித்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.


<img src='http://www.bbc.co.uk/worldservice/images/2004/12/20041229091231tsunami_ind2.jpg' border='0' alt='user posted image'>
<b>தமிழகத்தில் நிவாரணப் பணிகளில் அரசியலை நுழைக்க முயற்சி -
மருத்துவ உதவிகளை செய்துவரும் டாக்டர் குற்றச்சாட்டு</b>


அமைதி மற்றும் முன்னேற்றத்திற்கான மருத்துவர் தன்னார்வக் குழுவைச் சேர்ந்த 20 மருத்துவர்கள், தமிழகத்தில் சுனாமியால் பெரிதும் பாதிக்கப்பட்ட நாகை மாவட்டத்தில் உயிர்தப்பியவர்களுக்கு மருத்துவ உதவிகளை வழங்கிவருகின்றனர். அக்குழுவைச் சேர்ந்த டாக்டர்.ரவீந்திரநாத் தமிழோசையிடம் கருத்து வெளியிட்டார்.

நிறைய அளவிலான மருந்துப் பொருட்களுடன் தங்கள் குழு நாகை மாவட்டத்தில் உதவச் சென்றபோது தாங்கள் அரசு அதிகாரிகளால் அழைக்கழிக்கப்பட்டு முதல்நாள் தம்மால் ஒரு உதவியும் செய்யமுடியாமல் போனதென்று அவர் குறிப்பிடுகிறார்.

நாகை வேளாங்கண்ணி வேதாரண்யம் போன்ற நகரப் பகுதிகளுக்கு அரசின் மருத்துவ உதவிகள் கிடைக்கின்றன என்றாலும் ஒதுக்குப்புறமான கிராமப் பகுதிகளுக்கு அவை இன்னும் கிட்டவில்லை என்று அவர் தெரிவித்தார்.

நிவாரண உதவிகளில்கூட அரசியலை நுழைக்கும் தன்மை இருப்பது பணிகளில் தடங்கல்களை ஏற்படுத்திவருகிறது என்று அவர் தெரிவித்தார்.

நாகையில் பாதிக்கப்பட்ட மக்கள் தங்கவைக்கப்பட்டுள்ள முகாம்களில் சுகாதார வசதிகள் இல்லாத காரணத்தால் வாந்திபேதி, காலரா போன்ற நோய்கள் பரவ வாய்ப்பிருப்பதாக அவர் குறிப்பிட்டார்.

Thanks: BBC

Print this item

  இலங்கையில் இன்றைய செய்தியரங்கத்தில்
Posted by: AJeevan - 01-05-2005, 12:56 AM - Forum: செய்திகள் : தமிழீழம் - No Replies


<b>Invite LTTE to rebuild : JHU </b>
<img src='http://www.bbc.co.uk/worldservice/images/2004/12/20041231195647lamps.jpg' border='0' alt='user posted image'>
United efforts to move forward
Parliament sessions commenced with a minute's silence to remember those who lost there lives in the Tsunami disaster.
The environment was sombre says journalist Daya Lankapura.

The opposition requested a Parliamentary Select Committee to find out why an early warning on the deadly tidal wave was not made available.

Members of the opposition said that an earthquake signal was recorded around six a clock local time in the morning on the fatal day at the Pallekale monitoring centre.

<b>TNA thanks Sinhalese</b>

All parties including the LTTE should be called upon to actively participate in the reconstruction process said Venerable Aturaliye Ratana of Jathika Hela Urumaya (JHU).

R Sambanthan, leader of the Tamil National Alliances (TNA) parliamentary group thanked all the Sinhalese who helped the Tamils and explained how the LTTE had come forward to help Sinhalese who had been caught in the disaster.

Meanwhile the speaker WJM Lokubandara informed Parliament that the Supreme Court has decided that that the proposed anti-conversion bill which prevents unacceptable influence for religious conversion has a number of clauses that are not compatible with the constitution.

If the proposed amendments are to become law a majority vote as well as approval at a referendum will be needed.

<b>இலங்கையில் சுனாமியால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு உதவ ஜனாதிபதி திட்டம்</b>
<img src='http://www.bbc.co.uk/worldservice/images/2004/12/20041230190443cbk-meets-tsunami-victims-0.jpg' border='0' alt='user posted image'>
சுனாமி பேரலைகள் தாக்கியதால் இலங்கையில் மொத்தத்தில் கொல்லப்பட்டோரின் உத்தியோகப்பூர்வ எண்ணிக்கை 30,229ஆக அதிகரித்துள்ளது. காணாமல் போனோர் எண்ணிக்கை 3,588 என்றும் காயமடைந்தோர் எண்ணிக்கை 18,883 என்றும் அரசு தரப்பில் தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

இந்நிலையில் கடற்கொந்தளிப்பால் பாதிக்கப்பட்ட சிறார்களை பாதுகாப்பதற்காக விசேஷ செயற்திட்டம் ஒன்றைச் செயல்படுத்தவிருப்பதாக இன்று இலங்கை ஜனாதிபதி அறிவித்துள்ளார். ஆனாதைகளாக்கப்பட்ட சிறார்களைத் தத்தெடுத்து பராமரிப்பவர்களுக்கான விசேஷ உதவித்திட்டம் பற்றியும் ஜனாதிபதி ஆராயவிருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது.

ஐ.நா.மன்ற குழந்தைகள் நிதியத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் கரோல் பெல்லமி அம்மையார் நேற்று ஜனாதிபதியைச் சந்தித்ததன் பிறகு இந்த அறிவிப்புகள் வெளியாகியுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

நிவாரணப் பணிகளை மேற்கொள்ளும் பொறுப்பு இலங்கை ராணுவத்திடம் அதிகாரப்பூர்வமாக ஒப்படைக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் சேத நிலையைப் பார்வையிட ஐ.நா.மன்ற தலைமைச் செயலர் கோஃபி அன்னான் எதிர்வரும் பத்தாம் தேதி இலங்கை வரவிருக்கிறார்.

அமெரிக்க அரசுத்துறைச் செயலர் கொலின் பவலும் எதிர்வரும் வெள்ளிக்கிழமை இலங்கை வருகிறார். அன்றைய தினமே அமெரிக்க கடற்படையின் பாரியக் கப்பலில் 1500 மரைன்ஸ் படையினர் வரவிருக்கின்றனர்.

<b>மட்டக்களப்பு, அம்பாறையில் சடலங்கள் தொடர்ந்து கிடைத்துவருகின்றன</b>
<img src='http://www.bbc.co.uk/worldservice/images/2005/01/20050104173211ninthavurschoolhospital203.gif' border='0' alt='user posted image'>

நிந்தவூர் அரச மருத்துவமனை ஒரு பாடசாலையில் செயல்படுகிறது
மட்டக்களப்பு அம்பாறை மாவட்டங்களில் கடல்கொந்தளிப்பால் கொல்லப்பட்டோர் சடலங்கள் தொடர்ந்து கண்டெடுக்கப்பட்டுவருவதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

அம்பாறையில் இதுவரை கடற்கொந்தளிப்பு தொடர்பாக 10,436 மரணங்கள் பதிவுசெய்யப்பட்டுள்ளன; காணாமல் போனோர் எண்ணிக்கையும் இதில் அடங்கும்.

மட்டக்களப்பில் 2591 மரணங்கள் பதிவுசெய்யப்பட்டுள்ளன என்றும் 1149 காணாமல் போயிருப்பதாக புகார்கள் வந்துள்ளன என்றும் தெரிவிக்கப்படுகிறது. கொல்லப்பட்டோர் எண்ணிக்கை இன்று மட்டும் 62 கூடுதலாகியுள்ளது.

இதுதவிர மட்டக்களப்பில் 7 மருத்துவமனைகளும், அம்பாறையில் 6ம், திருகோணமலையில் 2ம் கடல்கொந்தளிப்பால் சேதமடைந்துள்ளன.

இனி புதிதாக அமைக்கப்படும் வைத்தியசாலைகள் கடற்கரையை ஒட்டி அமைக்கப்பட வேண்டாம் என்று நோயாளர்களும் பொதுமக்களும் கருத்துவெளியிட்டுள்ளனர்.

நிந்தவூர் மாவட்ட வைத்தியசாலையில் பணியாற்றும் ஊழியர் ஒருவரும் இதே கருத்தைத் தெரிவித்தார்.


<b>திருகோணமலை மாவட்ட நிவாரணப் பணி நிலவரம்</b>
<img src='http://www.bbc.co.uk/worldservice/images/2005/01/20050104091830sri203.jpg' border='0' alt='user posted image'>

திருகோணமலை மாவட்டத்தில் இடம்பெற்ற கடற்கொந்தளிப்பின் விளைவாகப் பாதிக்கப்பட்ட மக்களை மீளக் குடியேற்றவும் இவர்களின் தொழில் முயற்சிகள் தொடர்பான பாதிப்புகளை மதிப்பீடு செய்யவுமான நடவடிக்கைகள் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

கொழும்பிலிருந்து திருகோணமலையைச் சென்றடைந்த மீன்பிடி அமைச்சு அதிகாரிகள் இது தொடர்பான விபரங்களைப் பதிவு செய்து வருகின்றனர்.

இதேவேளை, முகாம்களில் தங்கியுள்ள மக்களை மீளக் குடியேற்றவதில் பாரிய பிரச்சனைகள் எதிர்நோக்கப்பட்டுள்ளன; குறிப்பாக இவர்களில் பெரும்பாலானோரின் வீடுகள் சுனாமி பேரலைகளின் தாக்கத்தினால் அழிந்தும் சேதமடைந்தும் உள்ளன.

இந்த நிலையில், வேறு இடங்களில் தற்காலிகமாக இவர்களை குடியமர்த்தவும் ஆலோசிக்கப்பட்டு வருகின்றது.

<b>முல்லைத்தீவு நிவாரணப் பணி நிலவரம்</b>
<img src='http://www.bbc.co.uk/worldservice/images/2005/01/20050104173141manicksmullaitheevu203.gif' border='0' alt='user posted image'>

முல்லைத்தீவில் கடற்கொந்தளிப்பால் சேதமடைந்து நிற்கும் தேவாலயம்
முல்லைத்தீவு மற்றும் வடமராச்சி கிழக்குப் பகுதிகளில் கடற்கொந்தளிப்பால் பாதிக்கப்பட்டு முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளவர்களில் வீடுகள் பாதிக்கப்படாதவர்களை மீண்டும் அவரவர் வீடுகளுக்குத் திருப்பியனுப்பும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுவருகின்றன.

இடம்பெயர்ந்தவர்களின் நலன்களை கவனிப்பதற்காக அமைக்கப்பட்டுள்ள செயலணிக் குழு அதிகாரிகள் இந்நடவடிக்கையினை மேற்கொள்கின்றனர்.

வீடுகளை இழந்தவர்களில் முதல்கட்டமாக நூறு குடும்பத்தினரை தனித்தனி குடில்களில் தங்கவைப்பதற்கான முயற்சிகளும் மேற்கொள்ளப்பட இருக்கின்றன.

பாதிக்கப்பட்ட பிரதேசங்களில் சுத்தம் செய்து, நோய்தொற்றுக் கிருமிகளை அழித்து தூய்மைப்படுத்துவதற்கு 5 கோடி ரூபாய்கள் தேவையென்றும் இப்பகுதிகளில் மீண்டும் வீடுகள் அமைக்கும் விதமாகத் திருத்தியமைப்பதற்கு 75 கோடி ரூபாய்கள் தேவைப்படலாம் என ஆரம்பகட்ட மதிப்பீடுகள் தெரிவிக்கின்றன.

உளரீதியாகப் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிகள் வழங்கவும் முல்லைத்தீவு மாவட்டத்தில் முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன.

BBC

Print this item

  தமிழர் புனர் வாழ்வுக் கழகத்தினரை மனதார வாழ்த்துவோம்
Posted by: sinnappu - 01-04-2005, 06:32 PM - Forum: செய்திகள் : தமிழீழம் - Replies (4)

என் இனிய கள உறவுகளோ இந்த இக்கட்டான நிலையில் தமது சேவையினைச்செய்த இன்னும் செய்து கொண்டிருக்கும் எமது தமிழர் புனர் வாழ்வுக் கழகத்திற்கு எம் ஆதரவைக் கொடுத்து அவர்களை வாழ்த்துவோம்அவர்கள் கரங்களோடு எம்கரங்களை இறுகப்பற்றி அவர்களுக்கு எம் ஆதரவை கொடுப்போம்

உலகமே கைவிட்டநிலையிலிருந்த எம்மை தங்கள் மனத்துனிவோடு இறங்கி பல செயற்பாடுகளை செய்தவர்களை வாழ்த்துவோம்
<!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->

Print this item

  ஈழத்தமிழரை நோக்கி நீழும் சில திரையுலக உதவிக் கரங்கள்...!
Posted by: kuruvikal - 01-04-2005, 04:16 PM - Forum: சினிமா - Replies (55)

<img src='http://www.thatstamil.com/images25/lankaa-289.jpg' border='0' alt='user posted image'>

சுனாமியால் பாதிக்கப்பட்ட இலங்கைத் தமிழர்களுக்கு நிவாரணம் வழங்க ரூ. 6 லட்சம் அளித்துள்ளார் நடிகர் விஜய்காந்த். இதே போல நடிகர் விஜய்யும் ரூ. 1 லட்சம் நிதியுதவி வழங்கியுள்ளதோடு பொது மக்களிடம் நிவாரண நிதி வசூலும் செய்தார்.

விஜய்காந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

சுனாமியால் பாதிக்கப்பட்ட பகுதிகளை நேரில் பார்வையிட்டு கலங்கிப் போய்விட்டேன். என் மன்றத்தின் மூலம் ஆயிரம் மூட்டை அரிசி, குடங்கள், பாத்திரங்கள், பாய், போர்வை வழங்கியுள்ளோம். மேலும் முதல்வரின் நிவாரண நிதிக்கும் ரூ. 10 லட்சம் வழங்கினேன்.

தமிழகத்தை மட்டுமல்ல, இலங்கையில் வாழும் நம் சக தமிழர்களையும் சுனாமி தாக்கி பேரழிவை ஏற்படுத்துவிட்டது. அந்த மக்களுக்கு ரூ. 6 லட்சத்தை அங்குள்ள செஞ்சிலுவைச் சங்கம் மூலம் வழங்கியிருக்கிறேன்.

இது மிகச் சிறிய உதவி தான். ஆனாலும் இந்த நேரத்தில கை கொடுத்து அந்த மக்களின் சோகத்தில் பங்கேற்கிறேன் என்று கூறியுள்ளார்.

விஜய் உதவி:

அதே போல நடிகர் விஜய்யும் இலங்கை தமிழர் பகுதி நிவாரணத்துக்கு ரூ. 1 லட்சம் வழங்கியதோடு 200 மூட்டை அரிசியும் அனுப்பி வைத்துள்ளார்.

தமிழக நிவாரணத்துக்கு ரூ. 5 லட்சம் வழங்கியுள்ள அவர் இன்று சென்னையில் கடை வீதியில் பொது மக்களிடம் நிவாரண நிதி திரட்டினார். நிருபர்களிடம் பேசுகையில், தமிழக நிவாரணப் பணிக்கு மேலும் ரூ. 10 லட்சம் வழங்க இருக்கிறோம்.

இலங்கையிலும் ஏற்பட்டுள்ள பெரும் சேதத்தில் நம் சக தமிழர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கும் நாம் உதவ வேண்டும் எனறார்.

thatstamil.com

Print this item

  எஸ்.கே.வைகுந்தவாசகன்
Posted by: Vaanampaadi - 01-04-2005, 11:53 AM - Forum: துயர்பகிர்வு / நினைவுகூரல் - Replies (9)

இலண்டனில் எஸ்.கே.வைகுந்தவாசகன் காலமானார்.
செவ்வாய்கிழமை 4 சனவரி 2005
தமிழீழத்தை ஜக்கிய நாடுகள் சபையில் பிரகடனப்படுத்துமாறு கோரிய ஈழத்தமிழரான எஸ் கே. வைகுந்தவாசகன் இலண்டனில் இயற்கை மரணம் எய்தியுள்ளார். ஈழத்தமிழர்களின் பிரச்சனையை ஜக்கிய நாடுகள் சபையின் கவனத்தில் கொண்டு வந்து தமிழீழ தேசத்தினைத் தனிநாடாக அங்கீகரிக்குமாறு பலவருடங்களுக்கு முன்னர் கோரியிருந்த இவர் இடதுசாரியாகச் செயற்பட்டதுடன் காலப்போக்கில் தாயக விடுதலைப் போராட்டத்திலிருந்தும் தமிழ்மக்களின் நலன்களில் இருந்தும் ஒதுங்கியிருந்தவர். இலங்கையில் பத்திரிகையாளராகவும் சட்டத்தரணியாகவும் சேவையாற்றியவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Print this item

  Uthavijum, Ujirkaakkum Ulamum, Tsunami Thinra Desankal
Posted by: KaviPriyan - 01-04-2005, 11:47 AM - Forum: அறிமுகம் - No Replies

[size=24]www.tsunamiineelam.com

<img src='http://home.no/tsunamiineelam/images/sri.jpg' border='0' alt='user posted image'>

Print this item

  புலிகள் வெளிநாட்டு நிதியுதவி கோர முடியாது: சந்திரிகா
Posted by: Vaanampaadi - 01-04-2005, 11:44 AM - Forum: செய்திகள் : தமிழீழம் - Replies (9)

ஜனவரி 04, 2005

புலிகள் வெளிநாட்டு நிதியுதவி கோர முடியாது: சந்திரிகா

கொழும்பு:



வட கிழக்கு இலங்கையில் நிவாரணப் பணிகளுக்கு விடுதலைப் புலிகள் வெளிநாடுகளில் இருந்து நேரடியாக நிதியுதவி கோர முடியாது என இலங்கை அதிபர் சந்திரிகா குமாரதுங்கா கூறியுள்ளார்.

ஆனால், அரசாங்கத்தின் உதவி கிடைக்காத நிலையில் அன்னிய நிதியுதவியை நேரில் பெறுவதைத் தவிர தங்களுக்கு வேறு வழியில்லை என புலிகள் கூறியுள்ளனர்.

தனியார் தொலைக்காட்சிக்கு சந்திரிகா அளித்துள்ள பேட்டியில், நிவாரணப் பணிகளில் தமிழர் பகுதி, சிங்களர் பகுதி என்றெல்லாம் பாகுபாடு பார்க்கப்படவில்லை. விடுதலைப் புலிகளுடன் இணைந்து மீட்புப் பணிகளில் ஈடுபட்டு வருகிறோம்.

என்ன வகையான உதவி தேவை என்பதை புலிகளின் அரசியல் பிரிவுத் தலைவர் தமிழ்ச்செல்வனிடம் தொலைபேசியில் கேட்டு, வேண்டியதை செய்து வருகிறார் எனது உதவியாளர் என்றார் சந்திரிகா.

ஆனால், மிகக் கடுமையாக பாதிக்கப்பட்ட வட கிழக்குப் பகுதியில் அரசின் உதவி போதிய அளவில் வந்து சேரவில்லை. இதனால் புலிகள் தான் நிதி திரட்டி நிவாரணப் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

வெளிநாடுகளில் இருந்து ஏராளமான நிதியுதவியும், நிவாரணப் பொருட்களும் இலங்கையில் குவிந்த வண்ணம் இருந்தாலும் கடுமையாக பாதிக்கப்பட்ட மட்டக்களப்பு, அம்பாரை மாவட்டங்களுக்கு இதுவரை எந்த உதவியும் வந்து சேரவில்லை என்கிறார் புலிகளின் கமாண்டரான பானு.

மேலும் வட கிழக்குப் பகுதிக்குள் வரும் தன்னார்வ அமைப்புக்களின் நிவாரணப் பொருட்கள் ஏற்றப்பட்ட வாகனங்களை ராணுவ செக்போஸ்ட்களில் நீண்ட நேரம் நிறுத்தி வைப்பதாகவும் புகார் எழுந்துள்ளது.

வட கிழக்கில் அழுகிய உடல்களாலும், தொடர் மழையாலும் சுகாதார நிலைமை மிகவும் மோசமடைந்துள்ளது. குறிப்பாக திரிகோணமலையில் நிலைமை படு மோசமாக உள்ளது.

படாலிபுரம் என்ற இடத்தில் பள்ளியொன்றில் 209 குடும்பங்கள் தங்க வைக்கப்பட்டுள்ளன. அங்கு ஒரே ஒரு கழிப்பறை தான் உள்ளது.

சுனாமியால் உயிரிழந்தோர் விவரம்:

அம்பாறை 11,225 பேர்

மட்டக்களப்பு 2,040

யாழ்பாணம், கிழக்கு வடமராச்சி 780

முல்லைத்தீவு 1,666

திரிகோணமலை 946

மொத்தத்தில் இப் பகுதியில் 16,650க்கும் மேற்பட்டவர்கள் பலியாகியுள்ளனர். மேலும் சில ஆயிரம் பேரைக் காணவில்லை.

இதே போன்ற நிலை தான் இலங்கையின் தென் பகுதிகளிலும் நிலவுகிறது. அங்கும் சுமார் 20,000 பேர் பலியாகியுள்ளனர். மேலும் சில ஆயிரம் பேரைக் காணவில்லை.

மொத்தத்தில் இலங்கையில் பலியானவர்களின் எண்ணிக்கை 40,000த் தாண்டியுள்ளது.

தமிழகத்தை காத்த இலங்கை:

சுமத்ராவில் ஏற்பட்ட பயங்கர கடல் அலைகளின் பெரும் தாக்கத்தை இலங்கை சந்தித்துவிட்டதால் தான் ராமேஸ்வரம் தொடங்கி தமிழகத்தின் தென் கடலோர மாவட்டங்களில் பெரும் சேதம் ஏற்படவில்லை.

திருச்செந்தூர், தூத்துக்குடி, ராமநாதபுரம் மாவட்ட கடலோரப் பகுதிகள் மீதான கடல் அலைகளை இலங்கையின் கிழக்குப் பகுதி சந்தித்துவிட்டது.

அதே நேரத்தில் இலங்கைக்கு மேலே மூக்கு மாதிரி நீட்டிக் கொண்டிருக்கும் நாகப்பட்டிணமும், அதன் முனையில் இருந்த வேளாங்கண்ணியும் பெரும் சேதத்தைத் சந்தித்துள்ளன. மேலும் இலங்கையின் தென் பகுதியைத் தாக்கிய சுனாமி அலைகள் கொஞ்சமாய் திரும்பி வந்ததன் விளைவைத் தான் கன்னியாகுமரி மாவட்டமும் குளச்சலும் சந்தித்துள்ளன.

இப் பகுதியிலும் சுனாமி பேய்த் தாக்குதலை இலங்கை தான் பெருமளவில் சந்தித்துள்ளது.

இலங்கையால் தான் தென் தமிழகம் இந்த அளவோடு சுனாமியிடம் இருந்து தப்பியுள்ளது.

Print this item

  வணக்கம் அன்புக்கியவர்களே,வேண்டாம் எனியும் இந்தத் தவறு!
Posted by: Thaven - 01-04-2005, 10:42 AM - Forum: பொழுதுபோக்கு - Replies (11)

வணக்கம் அன்புக்கியவர்களே நான் இந்தக்களத்திற்குப் புதியவன் எனவே மீண்டும் எனது முதல் வணக்கம். நான் உங்கள் யாழ் இணையம் களத்தினை அவுஸ்திரேலியாவில் இருந்து பார்க்கும் போது பூரிப்படைவேன்.
ஆனால் எனது மனதை தாக்கிய சம்பவத்தை உங்களுடன் பகிரவேண்டும் என்ற ஆசை. சிலவருடங்களின் முன்பு நான் எனது வெள்ளைக்கார நண்பனுடன் பேசிக்கொண்டிருக்கும் போது இங்கு இயங்கும் தமிழர் ஒருங்கிணைப்புக்குழு தொடர்பாக பேசவேண்டிய சந்தர்ப்பம் வந்து அவர்களின் ஒரு ஆங்கிலத்தில் தயாரிக்கப்பட்ட கடித்தத்தையும் காட்ட வேண்டிய தேவை எற்பட்டதுää அன்றை சம்பாசனை அத்துடன் நிறைவடைந்து நாம் எம்வழியில் பிரிந்தோம். மீண்டும் சிலமாதங்களின் பின்னர் என்னை அந்த நண்பன் மீண்டும் சந்திக்கும் போது கேட்டார் hi Thaven how is your Kuzh going? ஏன்று, இதில் என்ன இருக்கிறது என நினைகிறீர்களா அவர் கேட்டது தேவன் உங்களின் "குசு" எப்படி போகின்றது என்று? சில நிமிடம் அப்படியே ஆடிப்போய் விட்டேன் ஆகா! இவனுக்கு என்ன இதைப்பற்றி அக்கறை என! ஆனால் சில நிமிடங்கில் நான் சுதாரித்துக்கொண்டேன் ஓ! அவன் கேட்டது எனது குசு வைப்பற்றியில்லை (Thamilar Orungkinnaipu kuzh) தமிழர் ஒருங்கிணைப்பு குசு (மன்னிக்கவேண்டும் குழு) வைப்பற்றி என்று.
பார்த்தீர்களா தமிழின் பரிதாப நிலையை வேண்டாம் இந்த மொழிக் கொலை ஆங்கிலம் ஆங்கிலேயரின் மொழி எனவே அவர்கள் எதை எப்படி செல்வார்களோ அதற்கேற்றாற்போல் நாமும் மாறுவோம். தமிழை நயம்பட எழுதுவதாக நினைத்துக்கொண்டு கழுத்தை நெரித்துக்கொல்லவேண்டாம்.
நான் ஏன் இதை ஏழுதுகின்றேன் என்றால் இந்தக்களத்தில் சிலர் தங்களின் பெயரை மேற்குறியவாறு ZH போட்டு எழுதுகின்றனர். மாற்றுங்கள்! வேண்டாம் எனியும் இந்தத் தவறு!.

Print this item

  2005 இல் தமிழன் இலங்கையை ஆள்வான் - கல்வெட்டு
Posted by: thamizh.nila - 01-04-2005, 10:01 AM - Forum: தமிழ் /தமிழர் - Replies (26)

[size=20]2005 இல் தமிழன் இலங்கையை ஆள்வான் - என இலங்கையில் ஒரு கல்வெட்டு இருப்பதாக ஒரு செய்தி...இது நிஜமா? யாருக்காவது ஏதாவது இதைப் பற்றி தெரியுமா?

Print this item