| Welcome, Guest |
You have to register before you can post on our site.
|
| Forum Statistics |
» Members: 8,982
» Latest member: lucilegr4
» Forum threads: 9,058
» Forum posts: 83,244
Full Statistics
|
| Online Users |
There are currently 305 online users. » 0 Member(s) | 302 Guest(s) Applebot, Bing, Google
|
| Latest Threads |
±ôÀÊ ÀÈ¢ì¸Ä¡õ
Forum: நகைச்சுவை
Last Post: UsArgum
01-10-2026, 09:07 AM
» Replies: 28
» Views: 10,325
|
Mrs.Sirimao Bandaranayake
Forum: நகைச்சுவை
Last Post: GeraTep
11-14-2025, 10:46 AM
» Replies: 14
» Views: 3,234
|
Farty time
Forum: நகைச்சுவை
Last Post: ㄹㅈㄷㄹㅈ
08-26-2025, 03:48 PM
» Replies: 11
» Views: 5,608
|
கனவே கலைகிறதே
Forum: பொழுதுபோக்கு
Last Post: KULAKADDAN
04-30-2006, 06:37 PM
» Replies: 0
» Views: 6,300
|
Karuna Cadres were captur...
Forum: பிறமொழி ஆக்கங்கள்
Last Post: ஜெயதேவன்
04-30-2006, 06:17 PM
» Replies: 4
» Views: 8,647
|
என்ன நடந்தது யாழிற்கு?
Forum: உங்கள் கருத்துக்கள்
Last Post: ஜெயதேவன்
04-30-2006, 06:03 PM
» Replies: 42
» Views: 31,081
|
முடியுமானால் முயற்ச்சியுங...
Forum: போட்டிகள்
Last Post: Subiththiran
04-30-2006, 05:00 PM
» Replies: 15
» Views: 14,470
|
**சுடேக்கு** புதிர் விளைய...
Forum: போட்டிகள்
Last Post: kavithaa
04-30-2006, 04:30 PM
» Replies: 63
» Views: 38,508
|
புல்மோட்டையில் தாக்குதல்
Forum: செய்திகள் : தமிழீழம்
Last Post: Sriramanan
04-30-2006, 04:10 PM
» Replies: 2
» Views: 8,043
|
போதனை வேண்டாம்! பு...
Forum: செய்திகள் : தமிழீழம்
Last Post: alika
04-30-2006, 03:13 PM
» Replies: 4
» Views: 6,242
|
|
|
| இலங்கையிலிருந்து அமெரிக்கப் படைகள் உடனடியாக வெளியேற வேண்டும் |
|
Posted by: anpagam - 01-04-2005, 03:11 AM - Forum: செய்திகள் : தமிழீழம்
- Replies (11)
|
 |
இலங்கையிலிருந்து அமெரிக்கப் படைகள் உடனடியாக வெளியேற வேண்டும் - இந்தியா
இலங்கையிலிருந்து அமெரிக்கப் படைகள் உடனடியாக வெளியேற வேண்டுமென்று இந்தியா ஊடகம் ஒன்றின் ஊடாக கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்தியப் பத்திரிகையான இந்துஸ்தான் ரைம் என்டிரிவி ஆகிய இணையங்களின் ஊடாக இக்கோரிக்கையை இந்தியா வெளியிட்டுள்ளது. அப்பத்திரிகையில் மேலும் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது இந்தியாவின் அனுமதி இல்லாமல் இலங்கையரசு இரகசியமாக அமெரிக்கப் படைகளை வருவித்துள்ளது. இவ்விடயம் தொடர்பாக உடனடியாக இந்தியாவிற்கு இலங்கை அரசு அறிவிக்கத் தவறியுள்ளது. அமெரிக்கப் படைகள் உடனடியாக வெளியேறுவதே சிறந்தது.
இவர்கள் தொடர்ந்து நிலைகொள்வார்களாக இருந்தால் இந்தியாவின் அயல் நாடுகள் மீதான உறவுகளில் பாரிய மாற்றம் எற்படும் என்பதனையும் எமது கடுமையான கண்டனத்தையும் இந்தச் சந்தர்ப்பத்தில் இந்தியா தெரிவித்துக் கொள்வதாகவும் அந்தப் பத்திரிகையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நன்றி:நிதர்சனம்
மேலதிக விபரங்களுக்கு இங்கு போகவும்...
http://www.yarl.com/forum/viewtopic.php?t=2698
|
|
|
| ÓÕí¨¸ Áà §Å¾Çõ..... |
|
Posted by: KULAKADDAN - 01-04-2005, 01:55 AM - Forum: அரசியல் / பொருளாதாரம்
- Replies (2)
|
 |
இலங்கையின் வடக்கே நிவாரண உதவிகள் போதவில்லை என்கின்றனர் விடுதலைப் புலிகள்
இலங்கையில் விடுதலைப் புலிகள் கட்டுப்பாட்டில் அரசாங்கம் போதுமான நிவாரணப் பணிகளைச் செய்யவில்லை என விடுதலைப் புலிகளின் அரசியற் துறை பொறுப்பாளர் சுப தமிழ்ச்செல்வன் தெரிவித்துள்ளார். விடுதலைப் புலிகளின் செயலணிக் குழுக்கள்தான் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகளையும், மறு வாழ்வுப் பணிகளையும் மேற்கொண்டு வருகிறது, இந் நிலையில் இப் பகுதிகளில் உதவிகள் செய்கிறோம் என்று அரசாங்கம் பிரச்சாரம்தான் செய்து வருகிறது என்று அவர் தெரிவித்துள்ளார்.
விடுதலைப் புலிகளின் தமிழ்ச்செல்வன்
ஆனால், இலங்கையின் வடக்கே விடுதலைப் புலிகள் கட்டுப்பாட்டு பகுதிக்கு போதுமான நிவாரணப் பொருட்கள் வழங்கப்படவில்லை என்கின்ற குற்றச்சாட்டினை இலங்கை ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்கா அவர்கள் மறுத்துள்ளார்.
இப்பிரச்சனை தொடர்பாக பி பி சிக்கு செவ்வியளித்த சந்திரிகா குமாரதுங்கா அவர்கள், இரண்டு நாட்களுக்கு முன்னர் வரை நாங்கள் இரண்டாயிரம் மெட்ரிக் டன்கள் எடையுள்ள அடிப்படை உணவுப் பொருட்களை அனுப்பி இருக்கிறோம். இதில் நாங்கள் அனுப்பியுள்ள மருந்துகள், மருத்துவ உபகரணங்கள், மருத்துவர்கள் ஆகியவற்றை இந்தக் கணக்கில் சேர்க்கவில்லை என்றார்.
இலங்கை ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்கா
ஆனால், இலங்கையின் தெற்குப் புறத்தில் மூன்று மாவட்டங்கள் கூட மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளன. வடக்கே யாழ்ப்பாணம், முல்லைத்தீவு, கிளிநொச்சி ஆகிய பகுதிகளில் இறந்ததாகக் தெரிவிக்கப்படும் எண்ணிக்கையை விட தெற்கில் ஐந்து அல்லது ஆறு மடங்கு அதிகமாக மக்கள் இறந்திருக்கின்றனர். ஆனால், தெற்குப் பகுதிக்கு நாங்கள் வெறும் 180 மெட்ரிக் டன் அளவிலான உணவுப் பொருட்களையே அனுப்பியுள்ளோம் என்று சந்திரிகா அவர்கள் கூறினார்.
From BBC tamil
|
|
|
| இதுவும் ஒரு சுனாமியா ? இல்லை பினாமியா ? அமெரிக்கா ! இந்தியா |
|
Posted by: ravi_dk - 01-04-2005, 01:05 AM - Forum: அரசியல் / பொருளாதாரம்
- Replies (14)
|
 |
அலைகள் இரவுச் செய்தியின் சிந்தனைகள் 03.01.2005 இரவு 23.00 மணி.
இதுவும் ஒரு சுனாமியா ? இல்லை பினாமியா ? அமெரிக்கா ! இந்தியா ! பாகிஸ்தான் ! பிரிட்டன் ! இலங்கைத் தீவில் புதிய அரசியல் சூழல்?
முன்னாள் ஜனாதிபதிகளான கிளின்டன் ää புஸ் இருவரும் புதிதாக நியமனம்.
சுனாமி என்றால் ஜப்பானிய சொல் என்று கூறுகிறார்கள். சு - என்றால் துறைமுகம்ää னாமி - என்றால் அலை என்கிறார்கள். ஆக சுனாமி என்றால் துறைமுக அலை என்பது பொருளாகும். சுமார் 12 நாடுகளில் சுமனாமி தாக்குதலை நடாத்தினாலும் இலங்கையில்தான் துறைமுக அலை என்ற பொருள் அழகாக விழுந்திருக்கிறது. ஆமாம் ! இலங்கையின் துறை முகங்களில் இனி இந்தியää அமெரிக்கää பாகிஸ்தானியää வங்காள தேசää பிரிட்டன் கப்பல்கள் அலையலையாக வரப்போகின்றன. இதுதான் சுனாமி என்னும் துறைமுக அலை ஏற்படுத்தப் போகும் தாக்கமாகும். சுனாமியை விடுங்கள் இப்போது வரும் வெளிநாட்டு யுத்தக் கப்பல்கள் யாருக்கு பினாமியாக வருகின்றன என்பதுதான் முக்கிய கேள்வி.
சற்று முன்னர் அமெரிக்காவின் இராட்சத விமானம் ஜலக்சி ஜப்பானில் இருந்து கொழும்பு போய் இறங்கியுள்ளது. இதில் சுமார் 200 க்கும் மேற்பட்ட துருப்புக்களும்ää 20 உலங்குவானூர்திகளும் வந்துவிட்டன. அடுத்து இரத்மலானையில் இரண்டு விமானங்கள் மருந்துப் பொருட்களுடன் வந்திருக்கின்றன. இவற்றில் 30 பேர் வந்திருக்கிறார்கள். அமெரிக்காவின் நவீன உபகரணங்களை பொருத்தும் பணியாளர்களே முதலில் வந்திருக்கும் 150 பேர் என்று சற்று முன் வெளியான செய்திகள் கூறுகின்றன.
அமெரிக்கா புறப்பட்ட சொற்ப நேரத்தில் துடித்தெழுந்தது இந்தியா. அந்தத் துடிப்பிற்குள் டீக்சித்தின் மரணச் செய்திகூட அடிபட்டுப் போனது இன்னொரு விடயம். தற்போது காலியில் இருக்கும் இந்தியத் துருப்புக்கள் மட்டுமல்லää மேலும் பல கப்பல்களில் இந்தியத் துருப்புக்கள் இலங்கை வரவிருப்பதாக பிந்திய செய்திகள் கூறுகின்றன.
இந்தியா வந்தால் நான் சும்மா இருப்பேனா என்பது போல 400 படை வீரர்களுடன் பாகிஸ்தானிய போர்க்கப்பல்கள் புறப்படவிருப்பதாக செய்திகள் சற்றுமுன் வெளியாகின. அத்தோடு இத்தாலியில் இருந்து கடல் விமானங்கள் இரண்டும் வருகின்றன. பிரிட்டனின் யுத்தக்கப்பல் இன்று மாலை கொழும்பு வந்துள்ளது. முக்கிய இராஜதந்திர குழுவினர் அடுத்து வரவுள்ளனர். இவர்களுடன் ரஸ்யர்கள் வேறு விட்டேனா பார் என்று வந்துவிட்டார்கள். இன்னும் பின்லாடன் கப்பலோடு வருகிறார் என்ற செய்திதான் பாக்கி என்று நினைக்காதீர்கள். சில வாரங்களுக்கு முன்னரே பின்லாடனின் ஆட்கள் மட்டக்களப்பு பக்கமாக வந்து போனதாக இலங்கை ஊடகங்கள் செய்தி வெளியிட்டு முடிந்துவிட்டன.
இவர்கள் எல்லாம் ஏன் வந்திருக்கிறார்கள்? சுனாமியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி நிவாரணங்களை செய்ய வந்திருக்கிறார்கள் என்று கூறப்படுகிறது. இந்தச் செய்திகள் அனைத்தும் உதவிகளுக்கு அப்பால் உருவாக்கும் கேள்விகள் இவை - சுனாமி ஒன்று வருமா என்ற கேள்வியே இல்லாமல் வாழ்ந்த நாம் இனிமேலாவது பல பக்கங்களிலும் சிந்திக்க வேண்டியது அவசியமாயிருக்கிறது. முதலில் எல்லாம் நலமாக நடக்க வேண்டும் என்று எண்ணும் அதேவேளை எதிர்ப்பக்கமாகவும் சிந்திப்பது நமது கடமை. ஆகவேதான் நமது அறிவுக்கு எட்டிய கேள்விகளை கேட்டுப் பார்க்கிறோம்.
01. முஸ்லீம்களின் பகுதியில் அமெரிக்க இராணுவமும்ää இந்திய இராணுவமும் பணியாற்ற இயலாத காரணத்தினாலா பாகிஸ்தான் இராணுவம் வருகிறது ? அல்லது இந்தியா வருவதால் அதற்கு ஏட்டிக்குப் போட்டியாக அது வருகிறதா ?
02. பங்களாதேஸ் இராணுவக்கப்பல் ஏன் வருகிறது ? சியா முஸ்லீம் சன்னி முஸ்லீம் பிரிவுகளைக் கருத்தில் கொண்டு இவர்கள் வருகிறார்களா ?
03. சுனாமியின் பாதிப்புக்கு உதவ இவ்வளவு பெரிய இயந்திரங்களுடன் வரும் அமெரிக்காää சுனாமி வர முன்னர் ஏன் உரிய தகவல்களை வழங்கவில்லை ? சுனாமி வருவதற்கு முந்திய படங்களையும் அதற்குப் பிந்திய படங்களையும் அமெரிக்க செய்மதிகள் படம் பிடித்துள்ளன. ஆனால் தகவல் மட்டும் கொடுக்காதது ஏன் ?
04. இவ்வளவு அக்கறை கொண்ட அமெரிக்க அதிபர் சுனாமி வந்ததும் உடனடியாக செயற்படாமலிருந்து தாமதமாகச் செயற்படுவது ஏன் ?
05. விடுதலைப் புலிகளுக்கு தடை விதித்துள்ள இந்தியாவும்ää அமெரிக்காவும் புலிகளுடைய கட்டுப்பாட்டுப் பகுதியில் பணியாற்றுவது எப்படி ?
06. வரும் படையினர் எவருமே போகும் திகதி அறிவிப்பதில்லை இவர்கள் எப்போது திரும்புவார்கள் ? அல்லது பணி முடிந்ததும் திரும்புவோமென ஒரு வார்ததைகூட பேசாமல் இருப்பது ஏன் ?
07. நிவாரணப் பணிகளில் புலிகளும்ää அரசும் இணைந்து செயற்படுவதால் பேச்சுவார்த்தை நடாத்த நல்ல சூழல் உருவாகும் என்று சிங்கள அமைச்சர் ஒருவரும்ää ஜனாதிபதியும் கூறியிருப்பதன் பொருள் என்ன ?
08. அரசின் கடற்படைப் பிரிவுகள் பாரிய அழிவைச் சந்தித்துள்ளதால் அதை நிரவுவதற்கு வெளிநாட்டுப் படைகளை அவசரமாக சிறீலங்கா அரசு வரவழைத்து தன்னை பாதுகாக்க முற்படுகிறதா ? விடுதலைப் புலிகளின் கடற்படை அழிவடைந்துள்ளதாக சந்திரிகா கதையளந்து புலிகளின் வாயைக் கிளறி உண்மையை எடுக்க முயன்றாரா ?
09. நோர்வேயையும்ää மேற்கு நாடுகளையும் எதிர்க்கும் ஜே.வி.பியும் nஉறல உறுமயவும் இப்போது ஏன் வாலைச் சுருட்டி மௌனம் காக்கிறார்கள் ?
10. உலக வல்லரசுகள் தங்களுடைய பினாமிகளாகவே ஆசிய வட்டகையில் அரசுகளை வைத்திருப்பதாக சிலர் கூறுவார்கள். எல்லாருமே இங்கு மக்களின் வேண்டுதலின்றி திடீரென வருவதால் இவர்களுடைய பினாமியாக இருக்கிறதா சிறீலங்கா அரசு ?
11. ஊடகங்கள் எல்லாமே எதைச் சொல்வது ? எங்கிருந்து ஆரம்பிப்பது என்று தெரியாமல் திணறுவதன் நோக்கம் என்ன ?
12. எல்லா நாடுகளும் படைக்கப்பல்களுடன் வந்திருப்பது அமைதி முயற்சிக்கான கண்காணிப்பு வேலைக்குத்தான் என்று யாராவது கூறினால் அதற்கு என்ன பதில் கூறலாம் ?
13. இஸ்ரேல் பாணியல் பாதிக்கப்பட்டோர் தங்கியிருந்த அகதி முகாமை எரித்தது இந்த படைகளின் வரவு பற்றிய எண்ணங்களை திசை திருப்பவா ?
14. இவர்கள் அனைவருமே உதவும் உள்ளங்கள் என்று சொல்வதுதான் சரியா ? அப்படியானால் வந்த விமானங்கள் என்னென்ன கொண்டு வந்தன ?
15. வந்திருக்கும் எல்லா முகங்களையும் ஒரு வரிசையில் அடுக்குங்கள்ää இவர்கள் அனைவரும் என்றாவது ஒரு கருத்துடன் இருந்ததாக வரலாறு இருக்கிறதா? என்று ஒரு பாமரன் கேட்டால் என்ன பதில் சொல்வது?
16. நாம் வீணாக அலட்டத் தேவையில்லைää பாதிக்கப்பட்டவருக்கு உதவ வந்தவர்கள் பற்றி நாம் அவசரமாக சிந்திப்பது தவறு என்று கூறலாமா ?
17. இது குறித்த விரிவான செய்திகளின்றி ஊடகங்கள் கிடப்பது ஏன் ?
18. பில் கிளின்டன்ää முதலாவது புஸ் இருவரும் சேவை புரிய வருவதால் இது உண்மையான மனிதாபிமானப் பணியென அமெரிக்கா காட்ட முற்படுகிறதா ? அல்லது உண்மையாகவே மனிதாபிமானப் பணிதானா ?
19. இதனால் சிறிலங்கா அரசுக்கோ அல்லது தமிழருக்கோ தனித்தனியாக பாதிப்பு உண்டா ? அல்லது இரு தரப்பிற்குமே பாதிப்பா ? அல்லது இரு தரப்பிற்குமே நன்மை உண்டா ?
20. இதுவரை பல இலட்சம்பேர் மடிந்தபோது மௌனமாக இருந்த இவர்கள் இப்போது ஏன் வந்தார்கள் ?
21. சுனாமி வருவதற்கு முன்னரே அமெரிக்கா அதிகாரிகள் இராணுவ முகாம்களை கண்காணித்தது ஏன் ?
இப்படிப் பல கேள்விகள் எழுகின்றன. செய்திகளின்படி பார்த்தால் எல்லோருமே நல்லவர்கள்ää நல்லதிற்காகவே வருவது போலவே செய்திகள் வெளியாகின்றன. வெளிப்பார்வைக்கு பாலும் தேனும் ஆறாக ஓடப்போவது போல காட்சியை உண்டு பண்ணுகிறது. ஆனால் அரசியல் வானில் எல்லோரும் நல்லவர்களாக ஒரு போதும் இருக்க முடியுமா? இதுவும் ஒரு சுனாமியா ? இல்லை பினாமியா ? அமெரிக்கா ! இந்தியா ! பாகிஸ்தான் ! பிரிட்டன் ! இலங்கைத் தீவில் புதிய அரசியல் சூழல் என்ன? காலம்தான் பதில் சொல்ல வேண்டும்.
அலைகள் நள்ளிரவு 03.01.2005
|
|
|
| ஆறுமா எம் துயர்? |
|
Posted by: Thusi - 01-03-2005, 08:34 PM - Forum: கவிதை/பாடல்
- Replies (1)
|
 |
கடல்தாயே!
நேற்றுவரை உன்னைத்தானே தாயென்றோம்.
தாய் மடியென்றோம்
எமையெல்லாம் உறங்கவைக்கும்
தாலாட்டென்றோம்.
எந்தையும் தாயும் உன்மடியில்தானே
தவழ்ந்தார்கள்.
நானும் தம்பி தங்கையரும்
உன் அலையில் தானே கால் நனைத்து
கரையில் மணல்வீடு கட்டிமகிழ்ந்தோம்.
கற்பனை வானில் சிறகடிக்கும் காதலர்கள் கூட
உன்கரையில் தானே கதைபேசி மகிழ்ந்தார்கள்.
இன்று –
என்ன நடந்தது உனக்கு?
ஏணிப்படியாய் இருந்த நீ இன்று
ஏனிப்படி பேயாட்டம் ஆடி ஓய்ந்தாய்?
எம்மவரின் மீது உனக்கு என்ன கோபம்?
பூவாகப் பிஞ்சாக காயாகக் கனியாக
ஏனிப்படி உதிர்த்துக் கொட்டினாய்?
ஒன்றல்ல இரண்டல்ல பூக்கள்ää கொத்துக் கொத்தாக
ஏன் கொய்துதள்ளியாய்?
ஒரு பாவமும் அறிய பிஞ்சுப் பாலகர்களை
எதற்காய் மூச்சடைத்துக் கொன்றாய்?
பாவைப் பிள்ளைகள் கொண்டு விளையாடிக்கொண்டிருந்த
தளிர்களை ஏன் தின்றாய்?
தாய்மடியே இன்று சிதையாகிவிட்டது.
நீ கொன்றொழித்த உன் பிள்ளைகளை
உன் மடியிலேயே புதைக்கின்றோம்.
அப்போது தான் உனக்கு எம்மவர் துயரம் புரியும்.
தாயின் கண்ணீர் தெரியும்.
பொங்கிவந்த கடலலை போய்முடிந்துவிட்டது.
அது விட்டுச்சென்ற - இட்டுச்சென்ற துயரலை
பெருக்கெடுத்து எம் நெஞ்சங்களில் அறைகிறது.
மறப்போமா நாம்? ஜென்மங்கள் சென்றாலும்
ஆறுமா எம் துயர்?
|
|
|
| மழை மீண்டும் பூமி அதிர்ச்சி மீட்பு பணி நிறுத்தம் |
|
Posted by: ஊமை - 01-03-2005, 08:04 PM - Forum: செய்திகள் : தமிழீழம்
- No Replies
|
 |
போர்ட்பிளேர், ஜனவரி.03
சுனாமி தாக்கிய அந்தமான், இலங்;கை-இந்தோனேசியாவை பேய்மழை தாக்கியது. நிவாரண முகாம்களில் எஞ்சி இருந்த பொருட்களை மழை வெள்ளம் அடித்து சென்றது. நேற்று மீண்டும் பூமி அதிர்ச்சியும் தாக்கியது. இதனால் நிவாரண மீட்பு பணி நிறுத்தப்பட்டது.
கடந்த மாதம் 26-ந்தேதி தாக்கிய சுனாமி அலைக்கு அந்தமான் நிகோபார் தீவுகளில் 10 ஆயிரம் பேரும், இலங்கையில் 25 ஆயிரம் பேரும், இந் தோனேசியாவில் 1லட்சத்து 25 ஆயிரம் பேரும் பலியாகி உள்ளனர். சுனாமி தாக்கி 7 நாள் ஆகியும் பிணங்களை முழுமையாக மீட்க முடியவில்லை. தொடர்ந்து மீட்பு பணி நடந்து வந்தது?
பாதிக்கப்பட்ட மக்களை நிவாரண முகாம்களில் சேர்த்து உணவு அளிக்கும் வேலையும் நடந்து வந்தது.
இந்த நிலையில் மேற்கண்ட நாடுகளில் நேற்று முன்தினம் இரவு முதல் பேய்மழை கொட்டத்தொடங்கியது. இதனால் ஏற்கெனவே கடல்நீரால் நனைக்கப்பட்ட பகுதிகளில் மழை வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் பிணங்களை மீட்கும் பணி நிறுத்தப்பட்டது. 7 நாளாக அழுகிக் கிடக்கும் பிணங்களில் துர்நாற்றம் இன்னமும் அதிகமானது.
நிவாரண முகாம்களில் எஞ்சிய உடமைகளுடன் பாதிக்கப்பட்ட மக்கள் தங்கி இருந்தனர். அந்த முகாம்களுக்குள் மழை வெள்ளம் புகுந்து எஞ்சிய பொருட்களையும் அடித்து சென்றுவிட்டது. நிவாரணம் வழங்குவதற்காக வைக்கப்பட்டு இருந்த உணவு - துணி மணிகளும் வெள்ளத்தில் இழுத்து செல்லப்பட்டன.
இதனால் இந்த நாடுகளில் மக்கள் அனுபவிக்கும் துன்பம் மேலும் அதிகமாகியது. காய்ந்த துணிகூட இல்லாமல் மக்கள் குளிரில் நடுங்கிக்கொண்டு இருக்கிறார்கள். மழை காரணமாக மீட்பு-நிவாரண பணிகள் நிறுத்தப்பட்டன.
இலங்கை காரைத்தீவு நிவாரண முகாமில் இருக்கும் சாம்பசிவம் கூறும்போது- சுனாமி அலையால் தாக்கப்பட்ட எனது வீட்டில் எஞ்சிய பொருட்களை மூட்டை கட்டிக்கொண்டு இந்த முகாமுக்கு வந்தேன். மழை வெள்ளத்தில் அந்த மூட்டையும் அடித்து செல்லப்பட்டுவிட்டது. இந்த கொடுமையை யாரிடம் போய் சொல்வேன் என்றார்.
அம்பாரை முகாமில் உள்ள போரின்பராஜா கூறும்போது-
சுனாமி அலைக்கு சொந்த பந்தங்களை பறிகொடுத்துவிட்டு இங்கு வந்து முடங்கி கிடக்கிறேhம். எங்களுக்கு உணவு இல்லை. உடுக்க துணி இல்லை. தூக்கமும் கிடையாது. இப்போது மழை எங்கள் இன்னலை இன்னும் அதிகமாக்கிவிட்டது.
கடந்த மாதம் 26-ந்தேதி சுமத்ரா தீவில் ஏற்பட்ட பூமி அதிர்ச்சியை தொடர்ந்து இந்த நாடுகள் ஆப்டர் ஷhக் என்று அழைக்கக்கூடிய தொடர்பூமி அதிர்ச்சி ஏற்பட்டு வருகிறது அல்லவா?
நேற்று முன்தினம் ரிக்டர் அளவு கோலில் 6.5 அளவிலான கடுமையான பூமி அதிர்ச்சி ஏற்பட்டது. அது இலங்கையிலும் கூட உணரப்பட்டது.
நேற்று ரிக்டர் அளவு கோலில் 5.3 அளவிலான பூமி அதிர்ச்சி, 3 முறை ஏற்பட்டது. அது அந்தமான், இலங்கை, இந்தோனேசியாவில் எதி ரொலித்தது. இதனால் வீடுகளில் இருந்த பொருட்கள் ஆடின. மக்கள் விழுந்தடித்து வீடுகளை விட்டு வெளியே வந்தனர்.
இதனால் மீட்பு-நிவாரண பணிகள் நிறுத்தப்பட்டன.
|
|
|
| தாய்ப்பே 101 |
|
Posted by: ஊமை - 01-03-2005, 07:52 PM - Forum: செய்திகள்: உலகம்
- No Replies
|
 |
<img src='http://img142.exs.cx/img142/4963/unbenannt3aw.jpg' border='0' alt='user posted image'>
தாய்வான் நாட்டிலமைந்துள்ள, 106 மாடிகளைக் கொண்ட ஒரு வானளாவி (skyscraper) ஆகும். ஆரம்பத்தில் இது, சீன மொழியிலுள்ள, உத்தியோகபூர்வப் பெயரான, தாய்ப்பே அனைத்துலக நிதியப் பெருங் கோபுரக் கட்டிடம் (臺北國際金融大樓 - Taipei International Financial Grand Tower-Building) என்ற பெயரை அடிப்படையாகக் கொண்ட, தாய்ப்பே நிதிய மையம் (Taipei Financial Center) என அழைக்கப்பட்டது.
தாய்ப்பே 101 கட்டப்பட்டுக் கொண்டிருக்கும்போது , ஜூலை 2003
அக்டோபர் 2003யில் கட்டி முடிக்கப்பட்டதிலிருந்து இன்றுவரை, உயர்ந்த கட்டிடங்கள் மற்றும் நகர வாழிடங்களுக்கான கவுன்சில் (Council on Tall Buildings and Urban Habitat (CTBUH)) நியமித்துள்ள, உலகின் உயர்ந்த கட்டிடங்களுக்கான நான்கு பட்டங்களில் இரண்டை இக் கட்டிடம் பெற்றுள்ளது. இது நிலமட்டத்துக்கு மேல் 101 மாடிகளையும், 5 நிலக்கீழ்த் தளங்களையும் உடையது.
உயர்ந்த கட்டிடங்களை வகைப்படுத்தும் 4 முறைகள்:
நிலத்திலிருந்து அலங்கார உச்சிவரை - இது தற்போது சியேர்ஸ் கோபுரத்திடம் உள்ளது. (529 மீ = 1736 அடி)
நிலத்திலிருந்து அமைப்பு உச்சிவரை - முன்னர் பெட்ரோனாஸ் கோபுரங்கள் (452 மீ = 1483 அடி)
நிலத்திலிருந்து கூரைவரை - முன்னர் சியேர்ஸ் கோபுரம் (431 மீ = 1430 அடி)
நிலத்திலிருந்து அதியுயரத்திலுள்ள ஆட்கள் பயன்படுத்தும் தளம் வரை - தற்போது சியேர்ஸ் கோபுரம் (2004 ல் பயன்பாட்டுக்கு விடப்படும் போது, தாய்ப்பே கோபுரம் இப் பெருமையைப் பெறும்).
மேலே சொல்லப்பட்ட வகைகளில், தாய்ப்பே 101 , முறையே பின்வரும் உயரங்களையுடையது.
அலங்கார மற்றும் அமைப்பு உச்சிவரை - 508 மீ = 1667 அடி
கூரைவரை - 448 மீ = 1470 அடி
அதி உயர் தளம் வரை - 438 மீ = 1437 அடி
இன்றுவரை கட்டப்பட்டுள்ள வானளாவிகளுள் (skyscraper), பல அம்சங்களில் தொழில்நுட்ப ரீதியில் உயர்ந்த நிலையிலுள்ளது இதுவேயாகும். இக் கட்டிடத்தில் செக்கனுக்கு ஒரு கிகாபைட்டு வரை வேகமுள்ள பைபர் ஒப்டிக் (fiber-optic) மற்றும் செயற்கைக்கோள் வலையக இணைப்புக்கள் உண்டு. தொஷீபா(Toshiba) நிறுவனத்தினால் செய்யப்பட்ட, நிமிடத்துக்கு 1008 மீட்டர் வேகத்தில் செல்லக்கூடிய, உலகின் அதிவேக உயர்த்திகள் இரண்டு இங்கே பொருத்தப்பட்டுள்ளன. பூமியதிர்ச்சி, புயல் மற்றும் காற்றுத் தாக்கங்களுக்கு எதிராகக் கட்டிடத்தை நிலைப்படுத்துவதற்காக, 800 தொன் அளவுள்ள, tuned mass damper, 88 ஆவது தளத்தில் அமைக்கப்பட்டுள்ளது.கோபுரத்துக்கு அருகில் 6 மாடிகளைக்கொண்ட அங்காடியொன்றும் உள்ளது.
2003 ஜூலை 1 ஆம் திகதி, 448 மீட்டர் உயரத்தில், கோபுரத்துக்குக் கூரையிடப்பட்டது. 2003, அக்டோபர் 17 ல், நகர் மேயர் மா யிங் ஜூ அவர்களின் தலைமையில் நடைபெற்ற விழாவொன்றுடன், அதன் உச்சி அமைப்புப் (pinnacle) பொருத்தப்பட்டது. இதன்மூலம், இக்கட்டிடம், பெட்ரோனாஸ் கோபுரத்திலும் 50 மீட்டர் (165 அடி) கூடுதலாக உயர்ந்து உலகின் உயர்ந்த கட்டிடமாகியது. [1] (http://news.bbc.co.uk/1/hi/world/asia-pa...200160.stm)
ஆற் மாடிகளைக்கொண்ட அங்காடிக்கட்டிடம் 2003 நவம்பரிலும், மிகுதி அலுவலகக் கட்டிடம் 2004ன் மூன்றாம் காலாண்டிலும் திறந்து வைக்கப்படவுள்ளது.
சிலர் இக்கட்டிடம் தாய்வானில் சகஜமான பூமியதிர்ச்சிக்குத் தாக்குப்பிடியாது என்று கருதினர். 2002, மார்ச் 31ஆம் திகதி ரிச்சர் அளவையில் 6.8 ஆகப் பதிவாகிய புவியதிர்வு ஒன்றினால், அந்த நேரத்தில் அதியுயர்ந்த தளமாக இருந்த இக்கட்டிடத்தின் 56 ஆவது மாடியிலிருந்து, பாரந்தூக்கியொன்று (crane) விழுந்து, 5 பேர் இறந்தபோதிலும், கட்டிடம் பாதிப்புக்குள்ளாகவில்லை. இக்கோபுரம் ரிச்சர் அளவையில் 7 அலகு வரை புவியதிர்வைத் தாங்கக் கூடியதாகவும், நூற்றாண்டுக்கு ஒருமுறை நிகழக்கூடிய பெருஞ் சூறவளியைத் தாங்கக் கூடியதாகவும் வடிவமைக்கப் பட்டுள்ளது.
|
|
|
| விரைவு உணவால் சர்க்கரை நோய் பாதிப்பு அபாயம் |
|
Posted by: ஊமை - 01-03-2005, 07:41 PM - Forum: மருத்துவம்
- No Replies
|
 |
<img src='http://img159.exs.cx/img159/1355/burger6hx.jpg' border='0' alt='user posted image'>
உலக மக்கள் வாழ்வு முறையில் ஏராளமான மாற்றங்கள் நிகழ்ந்து வருகின்றன. அதிவிரைவாக உணவு அயிட்டங்களை தயாரித்து சாப்பிட்டுவிட்டு பணிகளை தொடரும் வாழ்க்கை முறை அதிகரித்து வருகிறது. இதற்காக அதிவேக உணவு தயாரிப்பு ஓட்டல்கள் மேலைநாடுகளிலும் சரி, நமது நாடுகளிலும் சரி வெகு அதிகமாக முளைத்து வருகின்றன. ஆனால் இவ்வாறு பாஸ்ட் புட்ஸ் சாப்பிடும் பழக்கம் ஒருவருக்கு வாரத்தில் 2 நாளே அதற்கு மேலோ இருந்தால் அவர் உடல் எடை அதிகரித்தல் கொழுப்புசத்து கூடுதல் சர்க்கரை நோய் பாதிப்பு போன்ற அவலங்கள் ஏற்படும் ஆபத்து உள்ளதாக புதிய ஆய்வு எச்சரித்து உள்ளது.
|
|
|
| ஜே.என்.தீட்சித் மரணம் |
|
Posted by: yarl - 01-03-2005, 11:33 AM - Forum: செய்திகள் : தமிழீழம்
- Replies (43)
|
 |
திலீபன் மரணத்திற்கும் இந்திய இலங்கை யுத்தத்திற்கும் இராஜீவ் காந்தியின் மரணத்திற்கும் இன்னமும் பல தவறான வழிநடாத்தல்களுகஇகும் காரணமான தீட்சித் காலமானார்
இனி தற்ஸ்ரமில் கொம் செய்தி
ஜே.என்.தீட்சித் மரணம்
டெல்லி:
பிரதமரின் பாதுகாப்பு ஆலோசகரான ஜே.என். தீட்சித் இன்று திடீரென மாரடைப்பால் காலமானார். அவருக்கு வயது 68.
இன்று காலை 6 மணியளவில் வீட்டில் அவருக்கு கடும் நெஞ்சு வலி ஏற்பட்டதையடுத்து அவர் டெல்லி அகில இந்திய மருத்துவக் கழக மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். ஆனால், வரும் வழியிலேயே அவர் இறந்துவிட்டார்.
அவரது உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக டெல்லி சப்தர்ஜங் சாலையில் உள்ள அவரது வீட்டில் வைக்கப்பட்டுள்ளது. இறுதிச் சடங்கு புதன்கிழமை நடைபெறுகிறது.
ஜோதிந்திர நாத் தீட்சித் என்ற முழுப் பெயர் கொண்ட ஜே.என். தீட்சித்துக்கு மனைவி, இரு மகள்கள் உள்ளனர்.
இந்திய வெளியுறவுத்துறையின் பல கொள்கை முடிவுகளை இறுதி செய்தவர் தீட்சித். 1936ம் ஆண்டு சென்னையில் பிறந்த தீட்சித் 36 வருடம் இந்திய வெளியுறவுத்துறையில் பணியாற்றினார்.
இந்திய வெளியுறவுத்துறைச் செயலாளராக இருந்து 10 ஆண்டுகளுக்கு முன் ஓய்வு பெற்ற தீட்சித், முன்னதாக இலங்கையில் தூதராகப் பணியாற்றியுள்ளார்.
அப்போது தான் ஜெயவர்த்தனேராஜிவ் காந்தி ஒப்பந்தம் ஏற்பட்டது. இந்திய அமைதிப் படை அங்கு அனுப்பப்பட்டது. இலங்கை விஷயத்தில் மறைந்த முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்திக்கு தவறான ஆலோசனைகள் தந்தவர் என்ற குற்றச்சாட்டுக்கு இலக்கானவர் தீட்சித் என்பது குறிப்பிடத்தக்கது.
1971ம் ஆண்டில் வங்கதேசம் உருவானபோது அந் நாட்டில் முதல் இந்தியத் தூதராக நியமிக்கப்பட்டவர் தீட்சித். மாலத்தீவுகள் தவிர்த்து அனைத்து தெற்காசிய நாடுகளிலும் இந்தியத் தூதராக இருந்தவர். ஆப்கானில்தானின் முதல் இந்தியத் தூதராகப் பணியாற்றியவர். பாகிஸ்தான் தூதராகவும் பணியாற்றியுள்ளார்.
மேலும் சிலி, மெக்சிக்கோ, ஜப்பான், ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளிலும் தூதரக அதிகாரியாகப் பணியாற்றியுள்ளார்.
ஐஎப்எஸ் பணியில் இருந்து 10 ஆண்டுகளுக்கு முன் ஓய்வு பெற்ற பின் காங்கிரஸ் கட்சியின் வெளியுறவுத்துறை பிரிவில் இணைந்து பணியாற்றினார். இதனால் பா.ஜ.க. ஆட்சியில் ஒதுக்கியே வைக்கப்பட்டிருந்த தீட்சித், காங்கிரஸ் கூட்டணி ஆட்சி பதவியேற்றவுடன் பிரதமரின் பாதுகாப்பு ஆலோசகராக நியமிக்கப்பட்டார்.
சீனாவுடனான எல்லைப் பிரச்சனை, பாகிஸ்தானுடன் காஷ்மீர் விவகாரங்கள் குறித்து தொடர் ஆலோசனைகளில் தீட்சித் ஈடுபட்டு வந்தார். பல்வேறு புத்தகங்களையும் தீட்சித் எழுதியுள்ளார். சீன, பாகிஸ்தான் விவகாரங்களில் இவர் நிபுணராக விளங்கினார். ஆனால், இலங்கை விஷயத்தில் இவர் எடுத்த முடிவுகள் பெரும் தவறாகவே போய் முடிந்தன.
மன்மோகன் இரங்கல்:
தீட்சித் மறைவுக்கு பிரதமர் மன்மோகன் சிங் இரங்கல் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில்,
நெருங்கிய நண்பரை நான் இழந்து விட்டேன். மதிப்பு மிக்க சக ஊழியராகவும், சிறந்த ஆலோசகராகவும் அவர் விளங்கினார். நாடு ஒரு உண்மையான தொண்டரையும், சிறந்த மனிதரையும் இழந்துவிட்டது என்று கூறியுள்ளார்.
|
|
|
|