![]() |
|
ஆறுமா எம் துயர்? - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: படைப்புக் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=11) +--- Forum: கவிதை/பாடல் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=52) +--- Thread: ஆறுமா எம் துயர்? (/showthread.php?tid=5957) |
ஆறுமா எம் துயர்? - Thusi - 01-03-2005 கடல்தாயே! நேற்றுவரை உன்னைத்தானே தாயென்றோம். தாய் மடியென்றோம் எமையெல்லாம் உறங்கவைக்கும் தாலாட்டென்றோம். எந்தையும் தாயும் உன்மடியில்தானே தவழ்ந்தார்கள். நானும் தம்பி தங்கையரும் உன் அலையில் தானே கால் நனைத்து கரையில் மணல்வீடு கட்டிமகிழ்ந்தோம். கற்பனை வானில் சிறகடிக்கும் காதலர்கள் கூட உன்கரையில் தானே கதைபேசி மகிழ்ந்தார்கள். இன்று – என்ன நடந்தது உனக்கு? ஏணிப்படியாய் இருந்த நீ இன்று ஏனிப்படி பேயாட்டம் ஆடி ஓய்ந்தாய்? எம்மவரின் மீது உனக்கு என்ன கோபம்? பூவாகப் பிஞ்சாக காயாகக் கனியாக ஏனிப்படி உதிர்த்துக் கொட்டினாய்? ஒன்றல்ல இரண்டல்ல பூக்கள்ää கொத்துக் கொத்தாக ஏன் கொய்துதள்ளியாய்? ஒரு பாவமும் அறிய பிஞ்சுப் பாலகர்களை எதற்காய் மூச்சடைத்துக் கொன்றாய்? பாவைப் பிள்ளைகள் கொண்டு விளையாடிக்கொண்டிருந்த தளிர்களை ஏன் தின்றாய்? தாய்மடியே இன்று சிதையாகிவிட்டது. நீ கொன்றொழித்த உன் பிள்ளைகளை உன் மடியிலேயே புதைக்கின்றோம். அப்போது தான் உனக்கு எம்மவர் துயரம் புரியும். தாயின் கண்ணீர் தெரியும். பொங்கிவந்த கடலலை போய்முடிந்துவிட்டது. அது விட்டுச்சென்ற - இட்டுச்சென்ற துயரலை பெருக்கெடுத்து எம் நெஞ்சங்களில் அறைகிறது. மறப்போமா நாம்? ஜென்மங்கள் சென்றாலும் ஆறுமா எம் துயர்? - sinnappu - 01-04-2005 அப்பு புலம்பெயர்ந்த நாம் நினைத்தால் முடியும் <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> எம்முறவுகள் அல்லவோ அவர்கள்!!!!! உதவுவோமே!!! <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
|