Yarl Forum
இதுவும் ஒரு சுனாமியா ? இல்லை பினாமியா ? அமெரிக்கா ! இந்தியா - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: சிந்தனைக் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=7)
+--- Forum: அரசியல் / பொருளாதாரம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=36)
+--- Thread: இதுவும் ஒரு சுனாமியா ? இல்லை பினாமியா ? அமெரிக்கா ! இந்தியா (/showthread.php?tid=5956)



இதுவும் ஒரு சுனாமியா ? இல்லை பினாமியா ? அமெரிக்கா ! இந்தியா - ravi_dk - 01-04-2005

அலைகள் இரவுச் செய்தியின் சிந்தனைகள் 03.01.2005 இரவு 23.00 மணி.

இதுவும் ஒரு சுனாமியா ? இல்லை பினாமியா ? அமெரிக்கா ! இந்தியா ! பாகிஸ்தான் ! பிரிட்டன் ! இலங்கைத் தீவில் புதிய அரசியல் சூழல்?

முன்னாள் ஜனாதிபதிகளான கிளின்டன் ää புஸ் இருவரும் புதிதாக நியமனம்.

சுனாமி என்றால் ஜப்பானிய சொல் என்று கூறுகிறார்கள். சு - என்றால் துறைமுகம்ää னாமி - என்றால் அலை என்கிறார்கள். ஆக சுனாமி என்றால் துறைமுக அலை என்பது பொருளாகும். சுமார் 12 நாடுகளில் சுமனாமி தாக்குதலை நடாத்தினாலும் இலங்கையில்தான் துறைமுக அலை என்ற பொருள் அழகாக விழுந்திருக்கிறது. ஆமாம் ! இலங்கையின் துறை முகங்களில் இனி இந்தியää அமெரிக்கää பாகிஸ்தானியää வங்காள தேசää பிரிட்டன் கப்பல்கள் அலையலையாக வரப்போகின்றன. இதுதான் சுனாமி என்னும் துறைமுக அலை ஏற்படுத்தப் போகும் தாக்கமாகும். சுனாமியை விடுங்கள் இப்போது வரும் வெளிநாட்டு யுத்தக் கப்பல்கள் யாருக்கு பினாமியாக வருகின்றன என்பதுதான் முக்கிய கேள்வி.

சற்று முன்னர் அமெரிக்காவின் இராட்சத விமானம் ஜலக்சி ஜப்பானில் இருந்து கொழும்பு போய் இறங்கியுள்ளது. இதில் சுமார் 200 க்கும் மேற்பட்ட துருப்புக்களும்ää 20 உலங்குவானூர்திகளும் வந்துவிட்டன. அடுத்து இரத்மலானையில் இரண்டு விமானங்கள் மருந்துப் பொருட்களுடன் வந்திருக்கின்றன. இவற்றில் 30 பேர் வந்திருக்கிறார்கள். அமெரிக்காவின் நவீன உபகரணங்களை பொருத்தும் பணியாளர்களே முதலில் வந்திருக்கும் 150 பேர் என்று சற்று முன் வெளியான செய்திகள் கூறுகின்றன.

அமெரிக்கா புறப்பட்ட சொற்ப நேரத்தில் துடித்தெழுந்தது இந்தியா. அந்தத் துடிப்பிற்குள் டீக்சித்தின் மரணச் செய்திகூட அடிபட்டுப் போனது இன்னொரு விடயம். தற்போது காலியில் இருக்கும் இந்தியத் துருப்புக்கள் மட்டுமல்லää மேலும் பல கப்பல்களில் இந்தியத் துருப்புக்கள் இலங்கை வரவிருப்பதாக பிந்திய செய்திகள் கூறுகின்றன.

இந்தியா வந்தால் நான் சும்மா இருப்பேனா என்பது போல 400 படை வீரர்களுடன் பாகிஸ்தானிய போர்க்கப்பல்கள் புறப்படவிருப்பதாக செய்திகள் சற்றுமுன் வெளியாகின. அத்தோடு இத்தாலியில் இருந்து கடல் விமானங்கள் இரண்டும் வருகின்றன. பிரிட்டனின் யுத்தக்கப்பல் இன்று மாலை கொழும்பு வந்துள்ளது. முக்கிய இராஜதந்திர குழுவினர் அடுத்து வரவுள்ளனர். இவர்களுடன் ரஸ்யர்கள் வேறு விட்டேனா பார் என்று வந்துவிட்டார்கள். இன்னும் பின்லாடன் கப்பலோடு வருகிறார் என்ற செய்திதான் பாக்கி என்று நினைக்காதீர்கள். சில வாரங்களுக்கு முன்னரே பின்லாடனின் ஆட்கள் மட்டக்களப்பு பக்கமாக வந்து போனதாக இலங்கை ஊடகங்கள் செய்தி வெளியிட்டு முடிந்துவிட்டன.

இவர்கள் எல்லாம் ஏன் வந்திருக்கிறார்கள்? சுனாமியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி நிவாரணங்களை செய்ய வந்திருக்கிறார்கள் என்று கூறப்படுகிறது. இந்தச் செய்திகள் அனைத்தும் உதவிகளுக்கு அப்பால் உருவாக்கும் கேள்விகள் இவை - சுனாமி ஒன்று வருமா என்ற கேள்வியே இல்லாமல் வாழ்ந்த நாம் இனிமேலாவது பல பக்கங்களிலும் சிந்திக்க வேண்டியது அவசியமாயிருக்கிறது. முதலில் எல்லாம் நலமாக நடக்க வேண்டும் என்று எண்ணும் அதேவேளை எதிர்ப்பக்கமாகவும் சிந்திப்பது நமது கடமை. ஆகவேதான் நமது அறிவுக்கு எட்டிய கேள்விகளை கேட்டுப் பார்க்கிறோம்.

01. முஸ்லீம்களின் பகுதியில் அமெரிக்க இராணுவமும்ää இந்திய இராணுவமும் பணியாற்ற இயலாத காரணத்தினாலா பாகிஸ்தான் இராணுவம் வருகிறது ? அல்லது இந்தியா வருவதால் அதற்கு ஏட்டிக்குப் போட்டியாக அது வருகிறதா ?

02. பங்களாதேஸ் இராணுவக்கப்பல் ஏன் வருகிறது ? சியா முஸ்லீம் சன்னி முஸ்லீம் பிரிவுகளைக் கருத்தில் கொண்டு இவர்கள் வருகிறார்களா ?

03. சுனாமியின் பாதிப்புக்கு உதவ இவ்வளவு பெரிய இயந்திரங்களுடன் வரும் அமெரிக்காää சுனாமி வர முன்னர் ஏன் உரிய தகவல்களை வழங்கவில்லை ? சுனாமி வருவதற்கு முந்திய படங்களையும் அதற்குப் பிந்திய படங்களையும் அமெரிக்க செய்மதிகள் படம் பிடித்துள்ளன. ஆனால் தகவல் மட்டும் கொடுக்காதது ஏன் ?

04. இவ்வளவு அக்கறை கொண்ட அமெரிக்க அதிபர் சுனாமி வந்ததும் உடனடியாக செயற்படாமலிருந்து தாமதமாகச் செயற்படுவது ஏன் ?

05. விடுதலைப் புலிகளுக்கு தடை விதித்துள்ள இந்தியாவும்ää அமெரிக்காவும் புலிகளுடைய கட்டுப்பாட்டுப் பகுதியில் பணியாற்றுவது எப்படி ?

06. வரும் படையினர் எவருமே போகும் திகதி அறிவிப்பதில்லை இவர்கள் எப்போது திரும்புவார்கள் ? அல்லது பணி முடிந்ததும் திரும்புவோமென ஒரு வார்ததைகூட பேசாமல் இருப்பது ஏன் ?

07. நிவாரணப் பணிகளில் புலிகளும்ää அரசும் இணைந்து செயற்படுவதால் பேச்சுவார்த்தை நடாத்த நல்ல சூழல் உருவாகும் என்று சிங்கள அமைச்சர் ஒருவரும்ää ஜனாதிபதியும் கூறியிருப்பதன் பொருள் என்ன ?

08. அரசின் கடற்படைப் பிரிவுகள் பாரிய அழிவைச் சந்தித்துள்ளதால் அதை நிரவுவதற்கு வெளிநாட்டுப் படைகளை அவசரமாக சிறீலங்கா அரசு வரவழைத்து தன்னை பாதுகாக்க முற்படுகிறதா ? விடுதலைப் புலிகளின் கடற்படை அழிவடைந்துள்ளதாக சந்திரிகா கதையளந்து புலிகளின் வாயைக் கிளறி உண்மையை எடுக்க முயன்றாரா ?

09. நோர்வேயையும்ää மேற்கு நாடுகளையும் எதிர்க்கும் ஜே.வி.பியும் nஉறல உறுமயவும் இப்போது ஏன் வாலைச் சுருட்டி மௌனம் காக்கிறார்கள் ?

10. உலக வல்லரசுகள் தங்களுடைய பினாமிகளாகவே ஆசிய வட்டகையில் அரசுகளை வைத்திருப்பதாக சிலர் கூறுவார்கள். எல்லாருமே இங்கு மக்களின் வேண்டுதலின்றி திடீரென வருவதால் இவர்களுடைய பினாமியாக இருக்கிறதா சிறீலங்கா அரசு ?

11. ஊடகங்கள் எல்லாமே எதைச் சொல்வது ? எங்கிருந்து ஆரம்பிப்பது என்று தெரியாமல் திணறுவதன் நோக்கம் என்ன ?

12. எல்லா நாடுகளும் படைக்கப்பல்களுடன் வந்திருப்பது அமைதி முயற்சிக்கான கண்காணிப்பு வேலைக்குத்தான் என்று யாராவது கூறினால் அதற்கு என்ன பதில் கூறலாம் ?

13. இஸ்ரேல் பாணியல் பாதிக்கப்பட்டோர் தங்கியிருந்த அகதி முகாமை எரித்தது இந்த படைகளின் வரவு பற்றிய எண்ணங்களை திசை திருப்பவா ?

14. இவர்கள் அனைவருமே உதவும் உள்ளங்கள் என்று சொல்வதுதான் சரியா ? அப்படியானால் வந்த விமானங்கள் என்னென்ன கொண்டு வந்தன ?

15. வந்திருக்கும் எல்லா முகங்களையும் ஒரு வரிசையில் அடுக்குங்கள்ää இவர்கள் அனைவரும் என்றாவது ஒரு கருத்துடன் இருந்ததாக வரலாறு இருக்கிறதா? என்று ஒரு பாமரன் கேட்டால் என்ன பதில் சொல்வது?

16. நாம் வீணாக அலட்டத் தேவையில்லைää பாதிக்கப்பட்டவருக்கு உதவ வந்தவர்கள் பற்றி நாம் அவசரமாக சிந்திப்பது தவறு என்று கூறலாமா ?

17. இது குறித்த விரிவான செய்திகளின்றி ஊடகங்கள் கிடப்பது ஏன் ?

18. பில் கிளின்டன்ää முதலாவது புஸ் இருவரும் சேவை புரிய வருவதால் இது உண்மையான மனிதாபிமானப் பணியென அமெரிக்கா காட்ட முற்படுகிறதா ? அல்லது உண்மையாகவே மனிதாபிமானப் பணிதானா ?

19. இதனால் சிறிலங்கா அரசுக்கோ அல்லது தமிழருக்கோ தனித்தனியாக பாதிப்பு உண்டா ? அல்லது இரு தரப்பிற்குமே பாதிப்பா ? அல்லது இரு தரப்பிற்குமே நன்மை உண்டா ?

20. இதுவரை பல இலட்சம்பேர் மடிந்தபோது மௌனமாக இருந்த இவர்கள் இப்போது ஏன் வந்தார்கள் ?

21. சுனாமி வருவதற்கு முன்னரே அமெரிக்கா அதிகாரிகள் இராணுவ முகாம்களை கண்காணித்தது ஏன் ?

இப்படிப் பல கேள்விகள் எழுகின்றன. செய்திகளின்படி பார்த்தால் எல்லோருமே நல்லவர்கள்ää நல்லதிற்காகவே வருவது போலவே செய்திகள் வெளியாகின்றன. வெளிப்பார்வைக்கு பாலும் தேனும் ஆறாக ஓடப்போவது போல காட்சியை உண்டு பண்ணுகிறது. ஆனால் அரசியல் வானில் எல்லோரும் நல்லவர்களாக ஒரு போதும் இருக்க முடியுமா? இதுவும் ஒரு சுனாமியா ? இல்லை பினாமியா ? அமெரிக்கா ! இந்தியா ! பாகிஸ்தான் ! பிரிட்டன் ! இலங்கைத் தீவில் புதிய அரசியல் சூழல் என்ன? காலம்தான் பதில் சொல்ல வேண்டும்.

அலைகள் நள்ளிரவு 03.01.2005


- Nada - 01-04-2005

அமெரிக்கா இலங்கைக்கு உதவிசெய்யும்போது அதற்கு முதல் செல்லமாக ஒரு தட்டு தட்டும். அப்படித்தான் சிலநாட்களுக்கு முன் சந்திரிகாவை செல்லமாக ஒரு அதட்டு அதட்டியது. கடந்தகாலங்களிலும்
இப்படித்தான் நடந்தது. இலங்கைக்கு போர்க்கப்பல் வழங்கமுன்னரும் இப்படித்தான் நடந்தது. இது முன்னரே திட்டமிடப்பட்ட செயல்தான்.இதில் இந்தியா உளவுப்படைதான் மிகவும் மூக்கு உடைபட்டுள்ளது. புலிகளின்கப்பல்களைகாட்டிக்கொடுத்து இலங்கையிடம் நல்ல பெயர் வாங்கமுயன்று இப்ப மூக்குடைப்ட்டுள்ளது.
துயரச்சம்பவம் நடந்தபோது சந்திhகா இலண்டனிலிருந்தது உடனடியாக அமெரிக்கா உதவிசெய்யாமல் இராணுவத்தை அனுப்பியது எல்லாவற்றையும் பார்க்கும்போது சுனாமியும் செயற்கையானதோ என்ற சந்தேகம் எழுகிறது.


- Mathuran - 01-04-2005

டீ. கே ரவீ அவர்களே, விடயம் என்னமோ உற்று நோக்க வேண்டியதுதான். ஆனால் உங்கள் தகவலினை பார்க்கும் பொழுது இது பயங்கரமானதுமாக இருக்கின்றது. என்க்கென்னமோ வரும் காலங்களில் அரசியல் களம் படு சூடாக இருக்கும் போலத்தான் தெரிகின்றது. அது சரி சீனாவை தவிர்த்து ஏனய வல்லரசுகள் யாவும் சின்னஞ்சிறிய இலங்கை தீவிலா? என்னமோ நடக்குது? நல்லதா நடந்தால் சரி.


- தமிழரசன் - 01-04-2005

:evil: :evil: :evil: :evil: :evil: :evil: :evil:


- sinnappu - 01-04-2005

இப்ப தெரியுதா உண்மை 2 உம் குரங்குக்குட்டங்கள் மாறு வேசத்தில வந்த நரியள்!!!! :twisted: :twisted: :twisted: :evil: :evil: :evil:


- tharma - 01-04-2005

அடிபட்டுப் போனது இன்னொரு விடயம். தற்போது காலியில் இருக்கும் இந்தியத் துருப்புக்கள் மட்டுமல்லää மேலும் பல கப்பல்களில் இந்தியத் துருப்புக்கள் இலங்கை வரவிருப்பதாக பிந்திய செய்திகள் கூறுகின்றன.

இந்தியா வந்தால் நான் சும்மா இருப்பேனா என்பது போல 400 படை வீரர்களுடன் பாகிஸ்தானிய போர்க்கப்பல்கள் புறப்படவிருப்பதாக செய்திகள் சற்றுமுன் வெளியாகின. அத்தோடு இத்தாலியில் இருந்து கடல் விமானங்கள் இரண்டும் வருகின்றன. பிரிட்டனின் யுத்தக்கப்பல் இன்று மாலை கொழும்பு வந்துள்ளது. முக்கிய இராஜதந்திர குழுவினர் அடுத்து வரவுள்ளனர். இவர்களுடன் ரஸ்யர்கள் வேறு விட்டேனா பார் என்று வந்துவிட்டார்கள். இன்னும் பின்லாடன் கப்பலோடு வருகிறார் என்ற செய்திதான் பாக்கி என்று நினைக்காதீர்கள். சில வாரங்களுக்கு முன்னரே பின்லாடனின் ஆட்கள் மட்டக்களப்பு <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->


- thamizh.nila - 01-04-2005

வருகிற விமானங்களையும், கப்பல்களையும் நிறுத்த இலங்கையில இடம் இருந்தால் சரிதான்.....


- KULAKADDAN - 01-04-2005

thamizh.nila Wrote:வருகிற விமானங்களையும், கப்பல்களையும் நிறுத்த இலங்கையில இடம் இருந்தால் சரிதான்.....
:roll: :roll: :roll:


- KULAKADDAN - 01-04-2005

sinnappu Wrote:இப்ப தெரியுதா உண்மை 2 உம் குரங்குக்குட்டங்கள் மாறு வேசத்தில வந்த நரியள்!!!! :twisted: :twisted: :twisted: :evil: :evil: :evil:

எனனப்பு இப்படி சொல்லிறியள் ......
எல்லாரும் பரரரந்ந்த மணொதொட ஊதவீஇஇஇஇஇ செய்ய வந்தவையாம்................ :wink:


- anpagam - 01-04-2005

thamizh.nila Wrote:வருகிற விமானங்களையும், கப்பல்களையும் நிறுத்த இலங்கையில இடம் இருந்தால் சரிதான்.....
<!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> :mrgreen:


- tamilini - 01-04-2005

இதுக்க அவியப்போறது யார்....??? இலங்கை அரசா..?? இந்திய அரசா..?? தமிழீழ அரசா..?? என்ன தான் நடக்கிறது உலகத்தில.. உலகம் அழியப்போகிது என்று சொன்னது இனி தான் நடக்கப்போகுதோ..?? Cry Cry Cry Cry


- KULAKADDAN - 01-04-2005

tamilini Wrote:இதுக்க அவியப்போறது யார்....??? இலங்கை அரசா..?? இந்திய அரசா..?? தமிழீழ அரசா..?? என்ன தான் நடக்கிறது உலகத்தில.. உலகம் அழியப்போகிது என்று சொன்னது இனி தான் நடக்கப்போகுதோ..?? Cry Cry Cry Cry
எனக்க அழுறியள் உதவிககெல்லொ வரீனம்


- anpagam - 01-04-2005

tamilini Wrote:இதுக்க அவியப்போறது யார்....??? இலங்கை அரசா..?? இந்திய அரசா..?? தமிழீழ அரசா..?? என்ன தான் நடக்கிறது உலகத்தில.. உலகம் அழியப்போகிது என்று சொன்னது இனி தான் நடக்கப்போகுதோ..?? Cry Cry Cry Cry
அவியப்போவது இந்தியா மட்டும்தான் அதுவும் முழுஅவியலாக...
இலங்கை அரசியல் சர்சையில் ஆப்பிழுத்த குரங்கு கதையாகிறது...
தமிழர் (புலிகள்) மேலும் அரசியலில் ராஜதந்திரமாக பூந்து விளையாடப்போகிறார்கள்
<!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> :mrgreen: Idea


- KULAKADDAN - 01-04-2005

[quote=anpagam]
அவியப்போவது இந்தியா மட்டும்தான் அதுவும் முழுஅவியலாக...
இலங்கை அரசியல் சர்சையில் ஆப்பிழுத்த குரங்கு கதையாகிறது...
தமிழர் (புலிகள்) மேலும் அரசியலில் ராஜதந்திரமாக பூந்து விளையாடப்போகிறார்கள்
<!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> :mrgreen: Idea

இந்தியா...... எப்ப சரியா.. சிந்திச்சது.....
கனவு கணுறதொட சரி....
வறவங்கள் ஆரையும் அவிக்கட்டும்....
எம்மை... கடிக்காட்டில் பெரிய காரியம்


- tamilini - 01-05-2005

KULAKADDAN Wrote:
tamilini Wrote:இதுக்க அவியப்போறது யார்....??? இலங்கை அரசா..?? இந்திய அரசா..?? தமிழீழ அரசா..?? என்ன தான் நடக்கிறது உலகத்தில.. உலகம் அழியப்போகிது என்று சொன்னது இனி தான் நடக்கப்போகுதோ..?? Cry Cry Cry Cry
எனக்க அழுறியள் உதவிககெல்லொ வரீனம்

ஆமா உதவிக்கு தான் வரீனம். :twisted: