Yarl Forum
ÓÕí¨¸ Áà §Å¾Çõ..... - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: சிந்தனைக் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=7)
+--- Forum: அரசியல் / பொருளாதாரம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=36)
+--- Thread: ÓÕí¨¸ Áà §Å¾Çõ..... (/showthread.php?tid=5955)



ÓÕí¨¸ Áà §Å¾Çõ..... - KULAKADDAN - 01-04-2005

இலங்கையின் வடக்கே நிவாரண உதவிகள் போதவில்லை என்கின்றனர் விடுதலைப் புலிகள்

இலங்கையில் விடுதலைப் புலிகள் கட்டுப்பாட்டில் அரசாங்கம் போதுமான நிவாரணப் பணிகளைச் செய்யவில்லை என விடுதலைப் புலிகளின் அரசியற் துறை பொறுப்பாளர் சுப தமிழ்ச்செல்வன் தெரிவித்துள்ளார். விடுதலைப் புலிகளின் செயலணிக் குழுக்கள்தான் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகளையும், மறு வாழ்வுப் பணிகளையும் மேற்கொண்டு வருகிறது, இந் நிலையில் இப் பகுதிகளில் உதவிகள் செய்கிறோம் என்று அரசாங்கம் பிரச்சாரம்தான் செய்து வருகிறது என்று அவர் தெரிவித்துள்ளார்.
விடுதலைப் புலிகளின் தமிழ்ச்செல்வன்

ஆனால், இலங்கையின் வடக்கே விடுதலைப் புலிகள் கட்டுப்பாட்டு பகுதிக்கு போதுமான நிவாரணப் பொருட்கள் வழங்கப்படவில்லை என்கின்ற குற்றச்சாட்டினை இலங்கை ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்கா அவர்கள் மறுத்துள்ளார்.

இப்பிரச்சனை தொடர்பாக பி பி சிக்கு செவ்வியளித்த சந்திரிகா குமாரதுங்கா அவர்கள், இரண்டு நாட்களுக்கு முன்னர் வரை நாங்கள் இரண்டாயிரம் மெட்ரிக் டன்கள் எடையுள்ள அடிப்படை உணவுப் பொருட்களை அனுப்பி இருக்கிறோம். இதில் நாங்கள் அனுப்பியுள்ள மருந்துகள், மருத்துவ உபகரணங்கள், மருத்துவர்கள் ஆகியவற்றை இந்தக் கணக்கில் சேர்க்கவில்லை என்றார்.


இலங்கை ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்கா

ஆனால், இலங்கையின் தெற்குப் புறத்தில் மூன்று மாவட்டங்கள் கூட மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளன. வடக்கே யாழ்ப்பாணம், முல்லைத்தீவு, கிளிநொச்சி ஆகிய பகுதிகளில் இறந்ததாகக் தெரிவிக்கப்படும் எண்ணிக்கையை விட தெற்கில் ஐந்து அல்லது ஆறு மடங்கு அதிகமாக மக்கள் இறந்திருக்கின்றனர். ஆனால், தெற்குப் பகுதிக்கு நாங்கள் வெறும் 180 மெட்ரிக் டன் அளவிலான உணவுப் பொருட்களையே அனுப்பியுள்ளோம் என்று சந்திரிகா அவர்கள் கூறினார்.
From BBC tamil


- Mathuran - 01-04-2005

உந்த சனாதுபதிய வேதாளம் எண்டு நீங்கள் வேணுமென்றால் சொல்லிக்கொள்ளுங்கோ. நான் சொல்லுறன் அந்த சனியன் புடிச்ச சனாதுபது பூதமெண்டு. சுனாமியெட்ட இருந்து தப்பிவந்ததுகள சந்திரிக்கா எங்கிற பூதம் விடாது போல கிடக்குது. பாவம் அந்த அப்பாவிகளை படுகிற கஸ்ரத்த பார்து உலக நாடுகள் கொடுக்கிறத, இந்த சந்திரிக்கா பூதம் தன்ர வீட்டில கொண்டுபோய் பதுக்கி வைக்குது போல. ஊரார் பணத்த கொள்ளை அடிக்கிறதே பிழைப்பாய் போச்சுது இந்த உருப்படாத சந்திரிக்காவுக்கு.


- thamizh.nila - 01-04-2005

முன்னர் போல, இவ நினைச்சதெல்லாம் செய்ய முடியாது தானே... பார்க்கலாம் என்ன தான் இவட முடிவென்று...வந்த சுனாமி இவவ கொண்டு போய் இருக்கலாமே... :evil: