Yarl Forum
ஈழத்தமிழரை நோக்கி நீழும் சில திரையுலக உதவிக் கரங்கள்...! - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: இளைப்பாறுங் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=8)
+--- Forum: சினிமா (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=39)
+--- Thread: ஈழத்தமிழரை நோக்கி நீழும் சில திரையுலக உதவிக் கரங்கள்...! (/showthread.php?tid=5948)

Pages: 1 2 3


ஈழத்தமிழரை நோக்கி நீழும் சில திரையுலக உதவிக் கரங்கள்...! - kuruvikal - 01-04-2005

<img src='http://www.thatstamil.com/images25/lankaa-289.jpg' border='0' alt='user posted image'>

சுனாமியால் பாதிக்கப்பட்ட இலங்கைத் தமிழர்களுக்கு நிவாரணம் வழங்க ரூ. 6 லட்சம் அளித்துள்ளார் நடிகர் விஜய்காந்த். இதே போல நடிகர் விஜய்யும் ரூ. 1 லட்சம் நிதியுதவி வழங்கியுள்ளதோடு பொது மக்களிடம் நிவாரண நிதி வசூலும் செய்தார்.

விஜய்காந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

சுனாமியால் பாதிக்கப்பட்ட பகுதிகளை நேரில் பார்வையிட்டு கலங்கிப் போய்விட்டேன். என் மன்றத்தின் மூலம் ஆயிரம் மூட்டை அரிசி, குடங்கள், பாத்திரங்கள், பாய், போர்வை வழங்கியுள்ளோம். மேலும் முதல்வரின் நிவாரண நிதிக்கும் ரூ. 10 லட்சம் வழங்கினேன்.

தமிழகத்தை மட்டுமல்ல, இலங்கையில் வாழும் நம் சக தமிழர்களையும் சுனாமி தாக்கி பேரழிவை ஏற்படுத்துவிட்டது. அந்த மக்களுக்கு ரூ. 6 லட்சத்தை அங்குள்ள செஞ்சிலுவைச் சங்கம் மூலம் வழங்கியிருக்கிறேன்.

இது மிகச் சிறிய உதவி தான். ஆனாலும் இந்த நேரத்தில கை கொடுத்து அந்த மக்களின் சோகத்தில் பங்கேற்கிறேன் என்று கூறியுள்ளார்.

விஜய் உதவி:

அதே போல நடிகர் விஜய்யும் இலங்கை தமிழர் பகுதி நிவாரணத்துக்கு ரூ. 1 லட்சம் வழங்கியதோடு 200 மூட்டை அரிசியும் அனுப்பி வைத்துள்ளார்.

தமிழக நிவாரணத்துக்கு ரூ. 5 லட்சம் வழங்கியுள்ள அவர் இன்று சென்னையில் கடை வீதியில் பொது மக்களிடம் நிவாரண நிதி திரட்டினார். நிருபர்களிடம் பேசுகையில், தமிழக நிவாரணப் பணிக்கு மேலும் ரூ. 10 லட்சம் வழங்க இருக்கிறோம்.

இலங்கையிலும் ஏற்பட்டுள்ள பெரும் சேதத்தில் நம் சக தமிழர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கும் நாம் உதவ வேண்டும் எனறார்.

thatstamil.com


- tamilini - 01-04-2005

நல்ல விடையம் தான்.. செஞ்சிலுவை தமிழ் பகுதிக்கு கொண்டு சேர்த்தால் சந்தோசம்...!


- Mathuran - 01-04-2005

உண்மயாக துக்கத்தில் இருக்கும் எமக்கு கொஞ்சம் உற்சாகம் அளிக்கின்றது. விஜயகாந்தையும் விஜையயும் தருணம் அறிந்து செய்த இந்த உதவி வரவேற்க தக்கவை. முடிந்தவரை தமிழ்நாட்டு உறவுகளுக்கும் உதவுங்கள் நடிகர்களே. இன் நேரத்தில் அவர்களுக்கு எங்களால் உதவ முடியல்லயே என்கின்ற வருத்தம் அங்களை பாடாய் படுத்துது. நாங்கள் என்ன செய்ய எங்களுக்கு தான் அவலமே வாழ்க்கையாகி விட்டதே.


- kuruvikal - 01-04-2005

எமக்கும் இந்த வருத்தம் இருந்தது... தாயக உறவுகள் போலத்தான் தமிழக உறவுகளும்...அவர்கள் இந்த நிலையிலாவது இந்த அளவில் தங்கள் உதவிக்கரங்களை நீட்டி இருப்பதை வரவேற்பதுடன் தமிழக உறவுகளுக்கும் உதவ வாய்ப்பிருந்தால் புலத்து ஈழத்து உறவுகள் அவர்களுக்கும் உதவப் பின்னிற்கக் கூடாது...அதுமட்டுமன்றி பாதிக்கப்பட்ட அனைத்து மக்களுக்கும் இயன்றதைச் செய்ய வேண்டும்...பாதிக்கப்பட்ட எல்லா மக்களும் இன்று நாடி நிற்பது ஒன்றைத்தான்...அது... தம்மை பற்ற வரும் உதவிக் கரங்களை...அதில் எந்த வேற்றுமைக்கும் இடமளிக்கக்கூடாது....முன்னுரிமை அளியுங்கள் ஆனால் வேற்றுமை காட்டாதீர்கள்...! Idea :!:


- KULAKADDAN - 01-04-2005

நிச்சயமாக பாராட்டலாம்.....


- KaviPriyan - 01-05-2005

அவர்கள் எமக்கு உதவி செய்து எம்மை காப்பாற்றினால்தானே... அவர்களுடை பிழைப்பு நன்றாக ஓடும்.....

நான் சும்மா சொன்னாங்க... தமிழ்... ஈழத்தமிழர்கள் நம் உறவுகள் என்று புலுடா விடுறவங்கள விட இவங்களதாங்க நாம வாழ்த்தனும்....

உங்கள் உதவிக்கி நன்றி....


- aathipan - 01-05-2005

தான் ஆடாவிட்டாலும் தன் தசை ஆடும் என்பார்கள்.

பெரியஅளவில் இல்லையென்றாலும் ஜெயா ஆட்சியில் பயமின்றி எமக்கு உதிவிசெய்த திரையுலக நெஞ்சங்களுக்கு நன்றிகள்.


- ஊமை - 01-05-2005

KaviPriyan Wrote:அவர்கள் எமக்கு உதவி செய்து எம்மை காப்பாற்றினால்தானே... அவர்களுடை பிழைப்பு நன்றாக ஓடும்.....

நான் சும்மா சொன்னாங்க... தமிழ்... ஈழத்தமிழர்கள் நம் உறவுகள் என்று புலுடா விடுறவங்கள விட இவங்களதாங்க நாம வாழ்த்தனும்....

உங்கள் உதவிக்கி நன்றி....

அண்ணா கவிப்பிரியன் சிறு உவியோ எதோ எம்மையும் நினைத்துதான் செய்திருக்கிறார்கள். அத்தோடு நடிகர் விஜயகாந் முன்னரும் எமக்கு (தலலைவருக்கு) மிகவும் வேண்டப்பட்டவரும், தமிழகத்தில் இருந்து உதவி + குரல் கொடுப்பவர்களில் அவரும் ஒருவர். எனவே நிலையறிந்து உங்கள் கருத்துக்களை முவையுங்கள். இந்தியர்கள் அனைவரும் எமக்கு எதிரிகள் அல்லர்.


- Mathan - 01-05-2005

உயிரை தவிர நீங்கள் இழந்த அனைத்தையும் தருவேன் - விவேக் ஓபராய்

ஆணழகன், ஐஸ்வர்யாராயின் காதலர்... இது தவிர விவேக் ஓபராயை பற்றி என்ன தெரியும்?

சுனாமியால் பாதிக்கப்பட்ட கடலூர் தேவனாம்பட்டின கிராம மக்களுக்கு விவேக் ஓபராய்தான் கடவுள், காப்பான் எல்லாம்.

தேவனாம்பட்டினம் பகுதியில் ரிஷிகேஷை சேர்ந்த சித்தானந்தா சரஸ்வதி சுவாமிகள் தனது தொண்டு நிறுவனம் மூலம் மீட்பு பணிகளை செய்து வருகிறார்.

இவருடன் இளம் நடிகர் விவேக் ஓபராயும் இணைந்து உதவிகள் செய்கிறார். கடந்த 31-ம் தேதி இங்கு வந்த ஓபராயின் முழுநேர வேலை பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதலும், உதவிகளும் செய்வதுதான். எல்லோரையும் போல பணம் கொடுப்பதுடன் பணி முடிந்ததென்று கைகழுவ இவருக்கு மனமில்லை. அதனால் தன் தாயாரான யசோதரா பெயரில் இயங்கும் அறக்கட்டளை மூலம் மொத்த கிராமத்தையும் தத்தெடுத்திருக்கிறார்.

"உயிரை தவிர நீங்கள் எதையெல்லாம் இழந்தீர்களோ அவை அனைத்தையும் உங்களுக்கு நான் தருவேன்"

விவேக் ஓபராயின் இந்த வார்த்தைகள் பாதிக்கப்பட்டவர்களின் நம்பிக்கையை மீட்டெடுத்துள்ளது. தனது வாக்கை காப்பாற்ற சுறுசுறுப்பாக இயங்கி வருகிறார் விவேக் ஓபராய்.

முதல்கட்டமாக வீடு இழந்தவர்களுக்காக 600 வீடுகள் கட்டிக்கொடுக்கயிருக்கிறார். அதுவரை மக்கள் வசிக்க 170 குடில்கள் தலா 4,500 ரூபாய் செலவில் அமைக்கப்படுகிறது. இதற்கான பூமி பூஜையில் சித்தானந்தா சரஸ்வதியுடன் விவேக் ஓபராயும் கலந்துகொண்டார். முன்னதாக பலியானவர்களின் ஆத்மா சாந்தி அடைய நாலு திசைகளிலும் நின்று பிரார்த்தனை நடத்தினர்.

திரையில் கூட தாங்கள் பார்த்தறியாத ஒரு நடிகர், தங்களுக்காக இத்தனை தூரம் உதவ முன் வந்தது தேவனாம்பட்டினம் மக்களை வெகுவாக நெகிழச் செய்திருக்கிறது.

அழிவுக்கு நடுவில் சுனாமி கண்டெடுத்த ஆரமுது விவேக் ஓபராய்!

ஐஸ்வர்யாராய்க்கு முகம் அழகு. அவர் காதலருக்கு மனமும் அழகு

சினிசவுத்


- tamilini - 01-05-2005

ஆகா நல்ல உள்ளம் வாழ்க வாழ்க....!


- kavithan - 01-05-2005

:|


- vasisutha - 01-07-2005

Mathan Wrote:அழிவுக்கு நடுவில் சுனாமி கண்டெடுத்த ஆரமுது விவேக் ஓபராய்!

ஐஸ்வர்யாராய்க்கு முகம் அழகு. அவர் காதலருக்கு மனமும் அழகு
ஐஸ்வர்யாவும் 50 லட்சம் நிவாரணத்திற்கு கொடுத்ததாக
செய்தி ஒன்றில் படித்தேன்.

பாதிக்கப்பட்டது தமிழ்நாடு தமிழ் நடிகர்கள் இதைவிட கூடுதல் உதவிசெய்திருக்கலாம். ஆளுக்கு 5 லட்சம் 10 லட்சம் கொடுத்ததோடு
சரியா? :roll:


- Mathan - 01-07-2005

<span style='font-size:21pt;line-height:100%'>சுனாமி நிவாரணத்திற்கு நிதி உதவி அளிக்க கோரி நடிகர் நடிகைகள் வேண்டுகோள் விடுப்பதை சன் டிவியில் ஒளிபரப்பினார்கள். அதில் விஜய் கூட சிரிப்பு வருவதை கஷ்டப்பட்டு அடக்கி சோகமாக முகத்தை வைத்து கொண்டு நிதி உதவி கேட்டு வேண்டுகோள் விடுத்திருந்தார். </span>


- vasisutha - 01-07-2005

ஆம் நானும் பார்த்தேன்.இந்த நடிகர்கள் இருக்கிறார்களே அவர்கள் உண்மையிலேயே
மகாநடிகர்கள்.

என் ஒரு துளி வியர்வைக்கு ஒரு பவுண் தங்கங்காசு
கொடுத்தது தமிழல்லவா?
என் உடல் பொருள் ஆவியை தமிழுக்கும் தமிழர்க்கும்
கொடுப்பது முறையல்லவா?
இப்படி திரைப்படங்களில் பாட்டுப்பாடியவர் 21 லட்சம் கொடுத்ததோடு
சரி. :roll: :roll:


- kuruvikal - 01-07-2005

vasisutha Wrote:
Mathan Wrote:அழிவுக்கு நடுவில் சுனாமி கண்டெடுத்த ஆரமுது விவேக் ஓபராய்!

ஐஸ்வர்யாராய்க்கு முகம் அழகு. அவர் காதலருக்கு மனமும் அழகு

ஐஸ்வர்யாவும் 50 லட்சம் நிவாரணத்திற்கு கொடுத்ததாக
செய்தி ஒன்றில் படித்தேன்.

பாதிக்கப்பட்டது தமிழ்நாடு தமிழ் நடிகர்கள் இதைவிட கூடுதல் உதவிசெய்திருக்கலாம். ஆளுக்கு 5 லட்சம் 10 லட்சம் கொடுத்ததோடு
சரியா? :roll:

அக்கா ஐஸ்வரியமானவா ஐம்பது இலட்சம் கொடுத்திருக்கா... நன்றி அக்கா உங்க பெருந்தன்மைக்கு...விளம்பரம் கூட இல்லாமல்...! ஐஸ் அக்கா நைஸ் அக்கா...! <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :wink:


- vasisutha - 01-07-2005

kuruvikal Wrote:
vasisutha Wrote:
Mathan Wrote:அழிவுக்கு நடுவில் சுனாமி கண்டெடுத்த ஆரமுது விவேக் ஓபராய்!

ஐஸ்வர்யாராய்க்கு முகம் அழகு. அவர் காதலருக்கு மனமும் அழகு

ஐஸ்வர்யாவும் 50 லட்சம் நிவாரணத்திற்கு கொடுத்ததாக
செய்தி ஒன்றில் படித்தேன்.

பாதிக்கப்பட்டது தமிழ்நாடு தமிழ் நடிகர்கள் இதைவிட கூடுதல் உதவிசெய்திருக்கலாம். ஆளுக்கு 5 லட்சம் 10 லட்சம் கொடுத்ததோடு
சரியா? :roll:

அக்கா ஐஸ்வரியமானவா ஐம்பது இலட்சம் கொடுத்திருக்கா... நன்றி அக்கா உங்க பெருந்தன்மைக்கு...விளம்பரம் கூட இல்லாமல்...! ஐஸ் அக்கா நைஸ் அக்கா...! <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :wink:

ஆகா குருவி ஐசு ஜெபம் தொடங்கிட்டார். <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->


- kavithan - 01-07-2005

Quote:ஆகா குருவி ஐசு ஜெபம் தொடங்கிட்டார்.

<!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->


- tamilini - 01-07-2005

இல்லை ஐஸ் அக்காவின் காதலர் கிராமத்தையே தத்தெடுத்திருக்காராம்... அதை காணல.. Idea :mrgreen:


- kavithan - 01-07-2005

ஜஸ் அக்காவின் காதலர் என்ன செய்தால் என்ன ஜஸ் அக்கா செய்தால் தான் மவுசு <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> அது தெரியது


- வெண்ணிலா - 01-07-2005

tamilini Wrote:இல்லை ஐஸ் அக்காவின் காதலர் கிராமத்தையே தத்தெடுத்திருக்காராம்... அதை காணல.. Idea :mrgreen:


தத்தெடுக்கிறதும் நிதியுதவி வழங்கியதும் அது அவர்களது நல்லெண்ணம். ஆனால் தற்போது இங்கு யார் காதலனைப் பார்த்தது? தத்தெடுத்ததை பார்த்தது. இங்கு முக்கிய கருத்தாடல் ஐஸ் தான். <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->