![]() |
|
வணக்கம் அன்புக்கியவர்களே,வேண்டாம் எனியும் இந்தத் தவறு! - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: இளைப்பாறுங் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=8) +--- Forum: பொழுதுபோக்கு (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=37) +--- Thread: வணக்கம் அன்புக்கியவர்களே,வேண்டாம் எனியும் இந்தத் தவறு! (/showthread.php?tid=5952) |
வணக்கம் அன்புக்கியவர்களே,வேண்டாம் எனியும் இந்தத் தவறு! - Thaven - 01-04-2005 வணக்கம் அன்புக்கியவர்களே நான் இந்தக்களத்திற்குப் புதியவன் எனவே மீண்டும் எனது முதல் வணக்கம். நான் உங்கள் யாழ் இணையம் களத்தினை அவுஸ்திரேலியாவில் இருந்து பார்க்கும் போது பூரிப்படைவேன். ஆனால் எனது மனதை தாக்கிய சம்பவத்தை உங்களுடன் பகிரவேண்டும் என்ற ஆசை. சிலவருடங்களின் முன்பு நான் எனது வெள்ளைக்கார நண்பனுடன் பேசிக்கொண்டிருக்கும் போது இங்கு இயங்கும் தமிழர் ஒருங்கிணைப்புக்குழு தொடர்பாக பேசவேண்டிய சந்தர்ப்பம் வந்து அவர்களின் ஒரு ஆங்கிலத்தில் தயாரிக்கப்பட்ட கடித்தத்தையும் காட்ட வேண்டிய தேவை எற்பட்டதுää அன்றை சம்பாசனை அத்துடன் நிறைவடைந்து நாம் எம்வழியில் பிரிந்தோம். மீண்டும் சிலமாதங்களின் பின்னர் என்னை அந்த நண்பன் மீண்டும் சந்திக்கும் போது கேட்டார் hi Thaven how is your Kuzh going? ஏன்று, இதில் என்ன இருக்கிறது என நினைகிறீர்களா அவர் கேட்டது தேவன் உங்களின் "குசு" எப்படி போகின்றது என்று? சில நிமிடம் அப்படியே ஆடிப்போய் விட்டேன் ஆகா! இவனுக்கு என்ன இதைப்பற்றி அக்கறை என! ஆனால் சில நிமிடங்கில் நான் சுதாரித்துக்கொண்டேன் ஓ! அவன் கேட்டது எனது குசு வைப்பற்றியில்லை (Thamilar Orungkinnaipu kuzh) தமிழர் ஒருங்கிணைப்பு குசு (மன்னிக்கவேண்டும் குழு) வைப்பற்றி என்று. பார்த்தீர்களா தமிழின் பரிதாப நிலையை வேண்டாம் இந்த மொழிக் கொலை ஆங்கிலம் ஆங்கிலேயரின் மொழி எனவே அவர்கள் எதை எப்படி செல்வார்களோ அதற்கேற்றாற்போல் நாமும் மாறுவோம். தமிழை நயம்பட எழுதுவதாக நினைத்துக்கொண்டு கழுத்தை நெரித்துக்கொல்லவேண்டாம். நான் ஏன் இதை ஏழுதுகின்றேன் என்றால் இந்தக்களத்தில் சிலர் தங்களின் பெயரை மேற்குறியவாறு ZH போட்டு எழுதுகின்றனர். மாற்றுங்கள்! வேண்டாம் எனியும் இந்தத் தவறு!. - sri - 01-04-2005 தேவன் அல்லது தாவன் Žì¸õ வாருங்கள் - KULAKADDAN - 01-04-2005 வணக்கம் தவீன்..... - nallavan - 01-04-2005 'தாவன்' என்ற உங்கள் பெயரை ஆங்கிலத்தில்; மிகச்சரியாய் எழுதத் தெரிந்த உங்களுக்குத்தான் இப்படி எழுத முழு யோக்கியதை உண்டு. சில எழுத்துப்பிழைகளை யும் புள்ளிப் பிழைகளையும் (காற் புள்ளிää முற்றுப்புள்ளி) தவிர்த்து எழுத முனையவும். அது சரி 'எனியும்' எந்த ஊர் பாசை? உங்கள் வரவுக்கு நன்றி. தொடர்ந்து எழுத முமையவும். - sinnappu - 01-04-2005 Quote:Thaven என்ர ராசா எனக்கு ஒரு சந்தேகம் உன்ர பேரென்னப்பு <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
- வியாசன் - 01-04-2005 வணக்கம் வாருங்கள் உங்கள் பெயரை சரியாகத் தெரிந்துகொள்ள முடியவில்லை - ஊமை - 01-04-2005 வணக்கம் வாருங்கள் உங்களை நாங்கள் வரவேற்கிறோம் உங்கள் பெயர்................என்ன........ தேவனா ? (Thevan) அல்லது தாவனா ? (Thavan) அல்லது தாவெனா ? (Thaven) விளக்கமாக கூறுங்கள். - Thaven - 01-05-2005 வணக்கம் ஆலோசனைக்கும் வரவேற்ப்பிற்கும் நன்றி எனது பெயரில் ஏன்? சர்ச்சை அது சில பெயர்களின்; தொகுப்பு உங்களுக்கு எப்படி அழைக்க விருப்பமோ அப்படியே அழைக்கலாம் உங்கள் தெரிவு நல்லவன் "எனியும்" எந்த ஊர் சொல்வழக்கு என கேட்டுள்ளீர் யாழ்ப்பாணச் சொல் மன்னிக்க வேண்டும் போச்சு வழக்குச் சொல் எழுத்தில் வந்துவிட்டது முன்னர் ஏற்பட்ட எழுத்துப்பிழைகளுக்கும் இனி ஏற்படப்போகும் எழுத்துப்பிழைகளுக்கும் தாழ்மையான மன்னிப்பு வேண்டுகின்றேன் - glad - 01-05-2005 Thaven எங்களுடைய சோகங்களிடையே உங்கள் குழு (குசு) பிரச்சினை சிறிது நகைச்சுவையையும் தந்தது.ஒரு மொழியில் பிறிதொரு மொழியை உச்சரிக்கும்போது ஏற்படும் சிக்கல். உங்கள் நண்பரை மன்னிப்போம் glad - thamizh.nila - 01-06-2005 வணக்கம் தவேன் [சரியா?]... - Thaya Jibbrahn - 02-06-2005 ஒருவன் மொழியை தப்பாக உச்சரித்தால் உடனே மொழியை மாற்ற வேண்டுமா? அவனுக்கு எங்கள் மொழியிலுள்ள ல ள ழ சிறப்பு உச்சரிப்பு அம்சங்களை அறிமுகப்படுத்தியிருக்கலாமே? வெள்ளையனுக்கு எற்றதாய் மாறி மாறித் தானே நாம் மொத்தமாய் கொள்ளை போனோம். இனியுமா இந்தத் தவறு??? புரியவில்லை எனது இந்த சின்ன மூளைக்கு - seelan - 02-06-2005 நாங்கள் மாற வேண்டியதில்லை. மற்றவர்களுக்கு எங்கள் மொழியை விளக்கமாக விளங்கப் படுத்துவோம் |