| Welcome, Guest |
You have to register before you can post on our site.
|
| Forum Statistics |
» Members: 8,982
» Latest member: lucilegr4
» Forum threads: 9,058
» Forum posts: 83,244
Full Statistics
|
| Online Users |
There are currently 524 online users. » 0 Member(s) | 522 Guest(s) Bing, Google
|
| Latest Threads |
±ôÀÊ ÀÈ¢ì¸Ä¡õ
Forum: நகைச்சுவை
Last Post: UsArgum
01-10-2026, 09:07 AM
» Replies: 28
» Views: 10,326
|
Mrs.Sirimao Bandaranayake
Forum: நகைச்சுவை
Last Post: GeraTep
11-14-2025, 10:46 AM
» Replies: 14
» Views: 3,234
|
Farty time
Forum: நகைச்சுவை
Last Post: ㄹㅈㄷㄹㅈ
08-26-2025, 03:48 PM
» Replies: 11
» Views: 5,608
|
கனவே கலைகிறதே
Forum: பொழுதுபோக்கு
Last Post: KULAKADDAN
04-30-2006, 06:37 PM
» Replies: 0
» Views: 6,300
|
Karuna Cadres were captur...
Forum: பிறமொழி ஆக்கங்கள்
Last Post: ஜெயதேவன்
04-30-2006, 06:17 PM
» Replies: 4
» Views: 8,648
|
என்ன நடந்தது யாழிற்கு?
Forum: உங்கள் கருத்துக்கள்
Last Post: ஜெயதேவன்
04-30-2006, 06:03 PM
» Replies: 42
» Views: 31,082
|
முடியுமானால் முயற்ச்சியுங...
Forum: போட்டிகள்
Last Post: Subiththiran
04-30-2006, 05:00 PM
» Replies: 15
» Views: 14,471
|
**சுடேக்கு** புதிர் விளைய...
Forum: போட்டிகள்
Last Post: kavithaa
04-30-2006, 04:30 PM
» Replies: 63
» Views: 38,508
|
புல்மோட்டையில் தாக்குதல்
Forum: செய்திகள் : தமிழீழம்
Last Post: Sriramanan
04-30-2006, 04:10 PM
» Replies: 2
» Views: 8,043
|
போதனை வேண்டாம்! பு...
Forum: செய்திகள் : தமிழீழம்
Last Post: alika
04-30-2006, 03:13 PM
» Replies: 4
» Views: 6,243
|
|
|
| கனாமி - அரபு நாடுகள் ஏன் உதவவில்லை? |
|
Posted by: Mathan - 01-06-2005, 11:44 PM - Forum: செய்திகள்: உலகம்
- Replies (9)
|
 |
<span style='font-size:30pt;line-height:100%'>கனாமி - அரபு நாடுகள் ஏன் உதவவில்லை?
கனாமியால் பாதிக்கப்பட்ட நாடுகளுக்கு அரபு நாடுகள் எவ்விதமான உதவியும் செய்யவில்லை என்று குற்றம் சாட்டப்படுகின்றது. செல்வம் கொழிக்கும் இந்நாடுகள் ஏன் உதவவில்லை?</span>
|
|
|
| உள்விவகாரத்தில் அந்நிய படையின் தலையீட்டை அனுமதிக்க முடியாது |
|
Posted by: Vaanampaadi - 01-06-2005, 08:44 PM - Forum: செய்திகள் : தமிழீழம்
- Replies (1)
|
 |
நிலைமை மாறினால் ஐ.தே.க. எதிர்க்குமென ரணில் கூறுகிறார்
கடற்கோள் அனர்த்தத்தால் பாதிக்கப்பட்டுள்ள எமது நாட்டில் மனிதாபிமானப் பணிகளுக்காக வந்துள்ள அந்நியப் படைகள் தங்கள் பணிகளைத் தவிர உள்நாட்டு பாதுகாப்பு மற்றும் வேறு விடயங்களில் தலையீடு செய்ய அனுமதிக்க முடியாது. அப்படியொரு நிலையேற்பட்டால் உரிய நேரத்தில் தங்கள் கட்சி நடவடிக்கை எடுக்கத் தயங்கமாட்டாதென எதிர்க் கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
யாழ். குடாநாட்டில் கடற்கோள் அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளைப் பார்வையிடச் சென்ற ரணில் விக்கிரமசிங்க நெல்லியடியிலுள்ள ஹகடற்கோள் அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான புனர்வாழ்வு கூட்டுறவுச் செயலணி'யில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே இவ்வாறு தெரிவித்தார்.
அங்கு அவர் செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்குப் பதிலளித்தார்.
கேள்வி :- இயற்கை அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுவதாகக் கூறிக் கொண்டு இலங்கைக்கு பெருமளவான வெளிநாட்டுப் படையினர் வந்துள்ளார்கள். குறிப்பாக அமெரிக்கா இந்தியா பாகிஸ்தான் போன்ற பல்வேறு நாடுகளும் தமது படைகளுடன் இலங்கைக்கு வந்துள்ளன. அந்நிய நாடுகளின் இராணுவத்தினரின் வருகையால் இலங்கையின் இறைமைக்கு பாதிப்பு வரும் என நீங்கள் கருதவில்லையா?
பதில் :- ஆம் வெளிநாடுகளில் இருந்து பெருமளவு துருப்புகள் இலங்கைக்கு வந்துள்ளன. ஆனால் இவர்கள் அனைவரும் அவசர மனிதாபிமானப் பணிகளுக்காகவே இங்கு வந்துள்ளனர். இதன் மூலம் இலங்கையின் பாதுகாப்பிற்கு எந்தவிதமான அச்சுறுத்தலும் ஏற்படும் என நான் கருதவில்லை. வெளிநாட்டுப் படைகள் உள்நாட்டு பாதுகாப்பு மற்றும் வேறு விடயங்களில் தலையீடு செய்தால் அதுபற்றி உரிய நேரத்தில் ஆலோசித்து உரிய நடவடிக்கைகளை எமது கட்சி மேற்கொள்ளும். அத்தகைய நேரத்தில் தேவையான உரிய நடவடிக்கைகளை நான் எடுப்பேன்.
உண்மையில் மீட்புப் பணிகளுக்கு உதவக்கூடிய வகையில் இலங்கையில் பெரிய ஹெலிகொப்டர்கள் இல்லை. அதற்காக வெளிநாடுகளில் இருந்து அப்பணிகளுக்கு உதவக் கூடிய வகையில் பெரிய ஹெலிகொப்டர்கள் மீட்புப் பணிகளுக்கான விசேட ஹெலிகொப்டர்கள் என்பன எடுத்துவரப்பட்டிருக்கின்றன.
கேள்வி :- இலங்கையில் இருக்கும் துருப்புகளைக் கொண்டு மீட்புப் பணிகளை மேற்கொள்ள முடியாதெனக் கருதுகிறீர்களா?
பதில் :- இல்லை மீட்புப் பணிகளுக்காக வந்துள்ள வெளிநாட்டுப் படையினர் மீட்புப் பணிகளில் விசேட பயிற்சி பெற்றவர்கள். அதுமட்டுமன்றி மீட்புப் பணிகளைத் துரித கதியில் மேற்கொள்ளக் கூடிய வகையில் தொழில்நுட்ப நிபுணர்கள் மற்றும் சக்தி வாய்ந்த தொழில்நுட்ப இயந்திரங்களையும் இவர்கள் கைவசம் வைத்துள்ளதால் மீட்புப் பணிகளைத் துரித கதியில் மேற்கொள்ள வசதியாக இருக்கும். அத்துடன் பொலிஸார் மற்றும் இராணுவத்தினர் வௌ;வேறு பணிகளில் ஈடுபட்டுள்ளதால் குறைந்தளவு துருப்புகளையே இப்பணிகளில் ஈடுபடுத்த முடியும். இந்த எண்ணிக்கை மீட்புப் பணிகளுக்கு போதாது எனக் கருதுகிறேன்.
கேள்வி :- இலங்கைக்கு வெளிநாட்டுப் படையினர் வருவதால் இலங்கை அரசிற்கும் விடுதலைப்புலிகளுக்கும் இடையே செய்து கொள்ளப்பட்ட போர் நிறுத்த உடன்படிக்கைக்குப் பாதிப்புகள் எதுவும் ஏற்படாதா?
பதில் :- இங்கு வந்துள்ள வெளிநாட்டுப் படையினர் மனிதாபிமானப் பணிகளை அடிப்படையாகக் கொண்டே வந்துள்ளார்கள். அவர்களினால் இந்த நாட்டின் சமாதான முயற்சிகளுக்கும் புரிந்துணர்வு உடன்படிக்கைக்கும் எந்த வகையிலும் பாதிப்பு ஏற்படாத வகையில் நடந்து கொள்வார்கள் என்றே கருதுகிறேன். அப்படி இப்படைகள் மூலம் ஏதாவது பாதிப்புகள் ஏற்படுமாக இருந்தால் அதை அரசின் கவனத்திற்கு உடனடியாகக் கொண்டு வருவதுடன் எமது எதிர்ப்பையும் வெளிப்படுத்துவோம்.
கேள்வி :- வெளிநாடுகளில் இருந்து பெருமளவு நிதி இலங்கையில் இயற்கை அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கென ஒதுக்கப்பட்டுள்ளது. ஆனால் எதுவிதமான உதவிகளும் இதுவரை வடக்குஇ கிழக்கு பகுதிகளுக்கு வந்து சேரவில்லை. இது குறித்து தங்களது கருத்து என்ன?
பதில் :- துறைமுகங்கள் மற்றும் போக்குவரத்து வசதிகள் உள்ள பகுதிகளுக்கு நிவாரண உதவிப் பொருட்கள் விரைவில் சென்று சேர்ந்துள்ளன. ஆனால் நிவாரண உதவிப் பொருட்கள் அனைத்துப் பகுதிகளுக்கும் சம அளவில் சென்றடைய வேண்டும். இத்தகைய உதவிகள் வடக்கு கிழக்கு பகுதிகளுக்கு வந்து சேராதது குறித்து நாம் அரசிற்கு அறிவுறுத்துவோம்.
கேள்வி :- விடுதலைப் புலிகளது கட்டுப்பாட்டுப் பிரதேசங்களில் ஏற்பட்ட அழிவுகளைச் சென்று பார்வையிடும் எண்ணம் உண்டா?
பதில் :- உடனடியாக அப்படி திட்டம் எதுவும் இல்லை.
கேள்வி :- வெளிநாடுகளில் இருந்து வந்துள்ள பெருமளவான உதவிப் பொருட்கள் கட்டுநாயக்கா விமானத் தளத்தில் தேக்கமடைந்துள்ளன. அத்தகைய உதவிப் பொருட்களை பலாலி விமான நிலையம் ஊடாக எடுத்து வந்து விநியோகிப்பதற்கான நடவடிக்கைகள் ஏன் எடுக்கப்படவில்லை? இந்த விடயத்தை அரசிற்கு நீங்கள் எடுத்துச் சொல்ல முடியாதா?
பதில் :- ஆம்இ அது மிகவும் சிறந்த யோசனை. இது குறித்து நாம் அரசிற்கு தெரிவிப்போம்.
கேள்வி :- இந்த அனர்த்தத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு விடுதலைப் புலிகள் சிறப்பான பணியை ஆற்றியிருக்கிறார்கள். சிறந்த நிர்வாகக் கட்டமைப்புகள் மூலம் அவர்களால் சிறப்பான பணியை ஆற்ற முடிந்துள்ளது குறித்து பாராட்டியிருக்கிறீர்கள். இந்த வகையில் அவர்களது நிர்வாக கட்டமைப்பு சிறப்பானது என ஒத்துக் கொண்டிருக்கிறீர்கள். ஆகவே அவர்களிடம் இடைக்கால நிர்வாக சபையை வழங்கலாம். அவர்கள் அதனை சிறப்பாக நிர்வகிப்பார்கள் என நினைக்கவில்லையா?
பதில்:- நாங்கள் இந்த விடயத்தில் ஆரம்பகால பேச்சுவார்த்தையின் போது இருந்த அதே நிலைப்பாட்டில் தான் உள்ளோம். பேச்சுவார்த்தைகள் விரைவில் ஆரம்பிக்கப்படவேண்டும். அதன் பின் நியாயமான அவர்களது கோரிக்கைகள் நிறைவேற்றப்பட வேண்டும் என்பதுதான் எமது நிலைப்பாடு.
கேள்வி:- இயற்கை அனர்த்தம் ஏற்பட்ட நாள்முதல் விடுதலைப்புலிகளும் உள்ளூர் அரசசார்பற்ற நிறுவனங்களும் தான் அவசர மனிதாபிமானப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த வேளையில் ஜனாதிபதி இராணுவத் தளபதிகளை நிவாரணப் பணிக்கான இணைப்பாளர்களாக நியமித்துள்ளார். இது தொடர்பாக உங்களது கருத்து என்ன?
பதில்:- இங்குள்ள நிலைமைகளை இங்கு மேற்கொள்ளப்படும் மனிதாபிமான நிர்மாணப் பணிகளை நாங்கள் நேரில் பார்வையிட்டுள்ளோம். இங்குள்ள நிலைகளை நாங்கள் அரசிற்கு தெளிவுபடுத்துவோம் என்றார்.
|
|
|
| Microsoft debuts security tools |
|
Posted by: Vaanampaadi - 01-06-2005, 08:33 PM - Forum: கணினி
- Replies (31)
|
 |
Microsoft is releasing tools that clean up PCs harbouring viruses and spyware.
The virus-fighting program will be updated monthly and is a precursor to Microsoft releasing dedicated anti-virus software.
Also being released is a software utility that will help users find and remove any spyware on their home computer.
Although initially free it is thought that soon Microsoft will be charging users for the anti-spyware tool.
Paid protection
Both tools can be downloaded from the Microsoft website.
Microsoft's Windows operating system has long been a favourite of people who write computer viruses because it is so ubiquitous and has many loopholes that can be exploited.
It has proved such a tempting target that there are now thought to be more than 100,000 viruses and other malicious programs in existence. Latest research suggests that new variants of viruses are being cranked out at a rate of up to 200 per week.
Spyware is surreptitious software that sneaks on to home computers, often without users' knowledge. In its most benign form it just bombards users with pop-up adverts or hijacks web browser settings.
The most malicious forms steal confidential information or log every keystroke that users make.
Surveys have shown that most PCs are infested with spyware.
Research by technology firms Earthlink and Webroot revealed that 90% of Windows machine have the malicious software on board and, on average, each one harbours 28 separate spyware programs.
Before now Microsoft has left the market for PC security software to specialist firms such as Symantec, McAfee, Trend Micro and many others.
It said that its virus cleaning program would not stop machines being infected nor remove the need for other anti-virus programs.
On spyware freely available programs such as Ad-Aware and Spybot have become widely used by people keen to keep the latest variants at bay.
Microsoft's two security tools have emerged as a result of acquisitions the company has made over the last two years.
In 2003 it bought Romanian firm GeCAD Software to get hold of its anti-virus technology. In December 2004 it bought New York-based anti-spyware firm Giant Company Software.
Last year Microsoft also released the SP2 upgrade for Windows XP that closed many security loopholes in the software and made it easier for people to manage their anti-virus and firewall programs.
Source: BBC
|
|
|
| அமெரிக்க வீரர்கள் ஈராக் போவதைவிட இந்தோனேஷியா செல்லவே........ |
|
Posted by: Vaanampaadi - 01-06-2005, 08:12 PM - Forum: செய்திகள் : தமிழீழம்
- Replies (5)
|
 |
அமெரிக்க வீரர்கள்
ஈராக் போவதைவிட இந்தோனேஷியா செல்லவே விருப்பம்
ஜகர்த்தா, ஜன. 6_
இந்தோனேஷியாவில் உள்ள ஏச்சே மாநிலத்தில் சுனாமியால் பாதிக் கப்பட்டவர்களுக்கு உணவுப் பொருட்கள், தண்ணீர், மருந்து ஆகியவற்றை ஏற்றிக்கொண்டு நாள் ஒன்றுக்கு 100_க்கு மேற் பட்ட அமெரிக்க ஹெலிகாப்டர் கள் சென்று திரும்புகின்றன.
ஈராக் செல்வதைவிட, இந்தோ னேஷியா செல்வது சந்தோஷ மாக இருக்கிறது. இங்கு மக்க ளுக்கு நாங்கள் உதவுகிறோம். அங்கு நாங்கள் அழிக்கிறோம்" என்கிறார் விமானி ராக்செல் பிரெய்னார்ட்.
"உதவி பெற்ற மக்களின் சிரித்த முகத்தைப் பார்க்கும்போது சந்தோஷமாக இருக்கிறது" என்கிறார் இன்னொரு விமானி எமிலி அலிவே.
உதவிகளைப் பெற்றுக் கொண்டு, மக்கள் நன்றி தெரிவிக் கிறார்கள். இதை ஈராக்கில் பார்க்க முடியவில்லை. இங்கு நாங்கள் நல்ல நோக்கத்துக்காக பாடுபடுகிறோம். அங்கே யாரு டைய நன்மைக்காக சண்டை போடுகிறோம்" என்பதே தெரிய வில்லை என்றார் விமானப் படை வீரர் கிம்பர்லி கோலார்.
|
|
|
| மீன் சாப்பிடுவதால் நோய் வர வாய்ப்பு இல்லை |
|
Posted by: Vaanampaadi - 01-06-2005, 08:03 PM - Forum: செய்திகள் : தமிழீழம்
- Replies (2)
|
 |
<img src='http://www.dailythanthi.com/images/news/20050106/Ph1.jpg' border='0' alt='user posted image'>
சுனாமி அலை தாக்குதலால் பலர் சாவு
``மீன் சாப்பிடுவதால் நோய் வர வாய்ப்பு இல்லை"
டாக்டர்கள் விளக்கம்
சென்னை, ஜன. 6-
``சுனாமி அலை தாக்குதலால் பலர் பலியாகி உள்ள நிலையில் மீன் சாப்பிடுவதால் நோய் எதுவும் பரவ வாய்ப்பு இல்லை" என்று டாக்டர்கள் விளக்கம் அளித்துள்ளனர்.
உயிரியல் துறை நிபுணர்கள் டேனியல் ராஜேஷ் பாலாஜி சுப்பிரமணியன் ஆகியோர் சென்னையில் நேற்று நிருபர் களுக்கு பேட்டி அளித்தனர். அவர்கள் கூறியதாவது:-
வைரஸ் நோய்
சுனாமி அலையால் பலர் பலியானதால் மீன்களின் மூலம் சீலிகான் வைரஸ் பரவி உள்ளது என்று வதந்தி பரவி உள்ளது. சீலிகான் என்ற பெயர் கொண்ட ``வைரஸ்" உலகில் எந்த பகுதியிலும் கிடையாது. கடலின் அடியில் உள்ள தண்ணீர் பூகம்பம் காரணமாக மேலே வந்ததால் அங்கிருந்து இந்த வைரஸ் வந்து விட்டது என்று கூறப்படுகிறது.
கடலின் ஒவ்வொரு மட்டத்திலும் ஒவ்வொரு விதமான உயிரினங்கள் வாழ்கின்றன. அது அந்த பகுதியை விட்டு மேலே வந்தால் அழிந்துவிடும். இதுதான் உயிரியல் உண்மை.
நோய் பரவாது
எந்த ஒரு இறந்த உடலும் கடலுக்குள் 24 மணி நேரத்திற்கு மேல் தங்காது. அவை அலை மூலம் கடற்கரைக்கு ஒதுக்கப்பட்டுவிடும். மேலும் இறந்த மனித உடலை கடல் மீன்கள் சாப்பிடாது. பிண வாடையை அறிந்ததும் மீன் ஓடிவிடும். மீன் குஞ்சுகள் தெரியாமல் பிணத்தை தின்றுவிடும். சுறா மீன்கள் மட்டும் பிணத்தை சாப்பிடும்.
கடல் மீன்களை சாப்பிடுவதால் எந்த நோயும் பரவ வாய்ப்பு இல்லை. எனவே பொதுமக்கள் தாராளமாக மீன் சாப்பிடலாம். பயப்பட தேவை இல்லை.
இவ்வாறு அவர்கள் கூறி னார்கள்.
அகில இந்திய மீனவர் சங்க பொதுச்செயலாளர் ராஜா நிருபர்களிடம் கூறியதாவது:-
வியாபாரம் பாதிப்பு
மீன் சாப்பிடுவதால் நோய் பரவுகிறது என்ற வதந்தியால் தமிழகத்தின் முக்கிய மீன் மார்க்கெட்டாகிய சென்னை, வேலூர், திருச்சி, விழுப்புரம், கும்பகோணம், திருவள்ளூர், திருப்பத்தூர், அரக்கோணம், கோயம்புத்தூர், ஈரோடு, சேலம், மதுரை, திண்டுக்கல், திருப்பூர், களியக்காவிளை, நெல்லை மற்றும் சிறுமார்க்கெட் அனைத் தும் மீன் வியாபாரம் அடியோடு நிறுத்தப்பட்டுள்ளது.
எனவே அரசு உடனடியாக இந்த விஷயத்தில் தலையிட்டு ஆங்காங்கே உரிய விழிப்புணர்வு பிரசாரத்தை செய்யவேண்டும். பொதுமக்கள் மத்தியில் உள்ள இந்த அச்சம் நீங்க வேண்டும். ஏற்கனவே சுனாமியினால் பாதிக் கப்பட்ட மீனவர்கள் மீன் வியா பாரிகள் ஆகியோருக்கு மறு வாழ்வு அளிக்க வேண்டும்.
போராட்டம்
வதந்தியினால் மீன் வியாபாரி கள் சுமார் ரூ.150 கோடி வரை நஷ்டம் ஏற்பட்டுள்ளது. இந்த நஷ்டத்தை ஈடு செய்ய வேண்டும் என்றால் குறைந்தது 2 ஆண்டு கள் ஆகும். ரூ.150 கோடி மதிப் புள்ள மீன்களை ஆங்காங்கே வியாபாரிகள் மண்ணில் குழி தோண்டி புதைத்துள்ளனர். தமிழக அரசு வதந்திகளை பரப்புபவர்கள் மீது நடவடிக்கை எடுக்காவிட்டால் மீனவர்களை ஒன்று திரட்டி போராட்டம் நடத்துவோம்.
இவ்வாறு ராஜா கூறினார்.
ருசித்து சாப்பிட்டனர்
மீன் சாப்பிடுவதால் நோய் பரவாது என்பதை பொதுமக்களுக்கு எடுத்து கூறும் வகையில் மீனவர்கள் பொறித்த மீன்களை டாக்டர்கள் ருசித்து சாப்பிட்டார்கள்.
|
|
|
| புலிகளின் மீட்பு பணி நடவடிக்கைகள் |
|
Posted by: Mathan - 01-06-2005, 03:12 PM - Forum: செய்திகள் : தமிழீழம்
- Replies (14)
|
 |
தமிழீழ விடுதலைப் புலிகளின் மீட்பு பணி நடவடிக்கைகள் ஒரு தனிநாட்டிற்கான நிர்வாக கட்டமைப்பின் எடுத்துக்காட்டு: வோசிங்டன் ரைம்ஸ் பாராட்டு!!
க.நித்தியா வியாழக்கிழமை 06 சனவரி 2005 17:02 ஈழம்
தமிழீழத்தை ஆழிப்பேரலை தாக்கிய சில நிமிட நேரத்திலேயே தமிழீழ விடுதலைப் புலிகளின் படையணிகள் பாதிக்கப்பட்ட இடங்களுக்கு விரைந்து மீட்புப் பணிகளில் ஈடுபட்டதை வியந்தும்ää பாராட்டியும் ஆதர் மக்ஸ் எனும் ஏ.பி. ஊடக நிறுவன செய்தியாளர் கிளிநொச்;சியில் இருந்து வோசிங்டன் ரைம்ஸ் என்ற அமெரிக்க பத்திரிகையில் கட்டுரை எழுதியுள்ளார்.
இக்கட்டுரையில் அவர் மேலும் குறிப்பிடுகையில்
போராளிகளின் ஒருபகுதியினர் வீதித் தடைகளை ஏற்படுத்தி காயப்பட்டவர்களை உடனுக்குடன் வைத்தியசாலைகளுக்கு விரைவாக அனுப்புவதற்கான வாகன வசதிகளை ஏற்படுத்திக் கொண்டிருக்கää இன்னொரு பகுதியினர் காயம்பட்டவர்களுக்கு தேவையான இரத்ததானம் பெறுவதற்கான ஒழுங்குகளையும் மேற்கொண்டனர்.
வேறொரு பகுதியினர்ää இறந்தவர்களை அடையாளம் காண்பதற்கு வசதியாக உடனுக்குடன் புகைப்படம் எடுத்ததுடன்ää அவர்களை அடக்கம் செய்வதற்கான ஒழுங்குகளையும் மேற்கொண்டனர்.
இவ் அனர்த்தங்களின் முதல்நாள் அன்றே அகதி முகாம்கள் மற்றும் நிவாரணப் பணிகளை மேற்கொள்வதற்கு பொறுப்பாக பல குழுக்களையும் விடுதலைப் புலிகள் உருவாக்கியிருந்தனர்.
விடுதலைப் புலிகளினது மீட்புப் பணி நடவடிக்கைகள்ää அவர்களது கட்டுக்கோப்பான நிர்வாகத் திறமையை எடுத்துக் காட்டியது மட்டுமல்லாமல்ää இவ்வாறான சிரமமிக்க ஒரு பணியினை மிகவும் நேர்த்தியாகவும் நிதானமாகவும் கையாண்ட முறைகள் அவர்களது தனிநாட்டு கோரிக்கைக்கு முன்னோடியாக ஓர் நிர்வாக கட்டமைப்பு இருப்பதனை உலகிற்கு நிருபித்துள்ளதாகவும் அந்த கட்டுரையில் குறிப்பிட்டுள்ளார்.
இது மட்டுமன்றிää ஆழிப்பேரலை ஓயும் முன்னரேää கடற்புலிகளின் படகுகள் மீட்பு பணிகளில் ஈடுபட்டதை ஆச்;சரியத்துடன் குறிப்பிட்ட அவர்ää அதேவேளை சிறிலங்கா அரசின் பரிதாப நிலையையும் மிகவும் துல்லியமாக விவரிக்கத் தவறவில்லை.
மீட்புப் பணிகள் ஆரம்பிக்க முன்னரேää இப் பணிகளை யார் முன்னின்று செயற்படுத்துவது என்பதில் சிறிலங்கா அரசியல்வாதிகளுக்கு இடையில் முரன்பாடுகள் ஏற்பட்டது மட்டுமன்றிää மீட்பு பணிகள் ஆரம்பிக்கப்பட்ட சில மணித்தியாலங்களிலேயே ஊழல் குற்றச்;சாட்டுகளும்ää நிவாரணப் பொருட்களுடன் வந்த வாகனங்கள் கடத்தப்பட்ட சம்பவங்களும் செய்திகளாக வெளிவரத் தொடங்கியிருந்தன.
இதேபோன்றுää இலங்கையில் இருந்து வெளிவரும் டெய்லி மிரர் பத்திரிகையும் விடுதலைப் புலிகளினதும்ää தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தினதும் நிர்வாகத் திறமையினை பாராட்டியும் சிறிலங்கா அரசின் நிவாரணப்பணிகள் மிகவும் கட்டுக்கோப்பற்ற முறையில் கையாளப்பட்டும் வருவதாக கண்டனம் தெரிவித்தும் கடந்த 5ம் திகதி தனது ஆசரியர் தலையங்கத்தில் சுட்டிக்காட்டியுள்ளதும் இங்கு குறிப்பிடத்தக்கது.
http://www.eelampage.com/index.shtml?id=20...61702318868&in=
|
|
|
| சனத்தொகை பெருக்குவோம் |
|
Posted by: Mathan - 01-06-2005, 01:58 PM - Forum: சுமுதாயம் (வாழ்வியல்)
- Replies (41)
|
 |
<span style='font-size:23pt;line-height:100%'>சுனாமி பெருந்தொகையான தமிழர்களை காவு கொண்ட நிலையில் தமது இருப்பை உறுதிப்படுத்த ஈழத்தமிழர்கர் சனத்தொகையை பெருக்கவேண்டும் என்று வசந்தன் கருத்து வெளியிட்டிருக்கின்றார் படித்து பாருங்கள்.</span>
சனத்தொகை பெருக்குவோம்
சுனாமி அவலங்கள் முழுவதும், ஏன் முதற்கட்டம் கூடத் தீர்க்கப்படாத நிலையில் எதிர்காலத்தில் எழப்போகும் மிகமுக்கிய பிரச்சினையைப் பற்றிப் பேசப் போகிறேன். இச்சுனாமி ஒப்பீட்டளவில் மிகஅதிகமான தமிழர்களைக் காவு கொண்டுள்ளது. இலங்கையிற் பாதிக்குட்பட்டதிற் பெரும்பகுதி தமிழர் தாயகப் பகுதியேயாகும். (இலங்கைக் கடற்கரையில் மூன்றில் இரண்டு பகுதி தமிழர் தாயகப் பகுதியிலேயே உள்ளது) இது போலவே தமிழகத்திலும் ஏராளமான தமிழர்கள் இறந்துள்ளார்கள். இந்நிலையில் நான் இனி கதைக்கப்போவது ஈழத்தமிழர் பற்றியே. ஏனெனில் சனத்தொகை விடயத்தில் தமிழகத் தமிழர்கள் இந்திய நிலைப்பாட்டிலிருந்து மாறப் போவதில்லை. அதற்கான தேவையும் அவர்களுக்கு இல்லை. (அதாவது சனத்தொகை அடிப்படையில் தமது இருப்பை நிச்சயப்படுத்தல்)
ஆனால் ஈழத்தமிழரின் நிலை முற்றிலும் வேறானது. அவர்களின் இருப்பு அவர்களின் எண்ணிக்கையிற் பெருமளவு தங்கியுள்ளது, முக்கியமாக அவர்களின் சொந்த நகரங்களில். இப்போது நடக்கும் பாராளுமன்ற அரசியலில் இதனைத் தெளிவாகப் புரிந்து கொள்ளலாம். கடந்த தேர்தலில் ஏறத்தாள தமிழ் மக்கள் அனைவரும் ஒற்றுமையாக ஒரே கட்சிக்கு வாக்களித்தும் கூட வெறும் 22 பாராளுமன்ற ஆசனங்களே தமிழர் தேசியக்கூட்டமைப்புக்குக் கிடைத்தன. 100 சதவிகித வாக்குகள் இக்கட்சிக்குக் கிடைத்திருந்தாற் கூட மேலும் ஒன்றோ இரண்டோ ஆசனங்கள் மட்டுமே கிடைத்திருக்கும். 225 ஆசனங்களைக்கொண்ட சிறிலங்காப் பாராளுமன்றத்தில் இத்தொகை 10 வீதம் கூட இல்லை. உண்மையில் பாராளுமன்றத்தில் காத்திரமான தாக்கம் எதையுமே ஏற்படுத்த முடியாத எண்ணிக்கைதான் இது. இதுதான் இன்றைய தமிழரின் பாராளுமன்ற அரசியல் நிலை. திட்டமிட்ட சிங்களக் குடியேற்றங்கள் மூலம் ஆட்சியாளர்கள் தாம் நினைத்தவற்றிற் பெருமளவு சாதித்துவிட்டார்கள். எனவே தமிழர் தாயகத்தில் தமிழரின் சனத்தொகை வீழ்ச்சியென்பது அவர்களுக்கு மிகப்பெரும் பின்னடைவு என்பது வெள்ளிடை மலை.
ஏற்கெனவே தமிழரின் இனப்பரம்பல் போரினால் மிகப்பெரும் பாதிப்புக்குள்ளாகியுள்ளது. ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளார்கள். இதிற் பெரும்பங்கு இளைய சமுதாயமேயாகும். யுத்த வன்முறையிற் கொல்லப்பட்டவர்களும் போராட்டத்தில் ஈடுபட்டு மடிந்தோரும் பெருமளவில் இளையோரே. இக்காரணத்தாற் சனத்தொகைப் பெருக்கத்தில் ஏற்பட்ட பெரும் வீழ்ச்சி, தற்போது ஏற்பட்ட இச்சுனாமி அனர்த்தத்தால் மேலும் வீழ்ச்சியடைந்துள்ளது. இறந்த மக்களின் தொகை ஒருபுறமிருக்க இறந்த இளந்தலைமுறையைப் பற்றி யோசிக்கையில் மிகப்பெரும் சவாலொன்று எம்முன் எழுந்து நிற்கிறது. ஏராளமான குழந்தைகளும் சிறுவர்களும் இறந்துள்ளார்கள். சிலவருடங்களின் பின் ஏற்படப்போகும் வெற்றிடமொன்று பயமுறுத்துகிறது. இப்போதுள்ள பிறப்புவீதம் சில வருடங்களில் இன்னும் சடுதியாக வீழும் என்றே தோன்றுகிறது.
இந்நிலையில் ஈழத்தமிழினம் என்ன செய்யப் போகின்றது? அவர்களுக்கு நாம் என்ன செய்யப்போகின்றோம்? இந்நேரத்தில் வெறும் பொருளுதவியால் மட்டும் அங்குள்ளவர்களுக்கு உதவிசெய்தாற் போதாது. (இனி நான் சொல்லப்போவது முட்டாள்தனமாகவும் நகைப்புக்கிடமாகவும் சிலருக்குத் தோன்றலாம்) இயன்றவரை சனத்தொகைப் பெருக்கத்தை ஊக்குவிக்க வேண்டும். ஈழத்தில் எவ்வளவு தூரம் இது சாத்தியமென்று தெரியவில்லை. வசதி படைத்தவர்கள் இதிற் கவனமெடுக்க வேண்டும். குறிப்பாகப் புலம் பெயர்ந்த குடும்பங்கள், ஆழிப்பேரலையாற் கொல்லப்பட்ட மக்களின் பேரால் ஒரு குழந்தையாவது பெற்றுக்கொள்ள முன்வர வேண்டும். (ஏற்கெனவே நீங்கள் திட்டமிட்டிருந்ததை விட). இன்றைய நிலையில் ஈழம் வெறும் பொருளை மட்டுமன்று, ஒரு நேரத்தில் திரும்பிவரும் பெரும் மக்கட்கூட்டத்தையும் புலம் பெயர்ந்தவர்களிடம் எதிர்பார்த்திருக்கிறது.
இக்கருத்து பல மட்டங்களிலும் முன்னெடுக்கப்பட வேண்டும்.
பலருக்கு இதில் உடன்பாடின்மை இருக்கலாம். எப்படியாயினும் உங்கள் கருத்தை இதிற் பதியவும். அல்லது உங்கள் வலைப்பக்கத்திலாவது பதியவும். தமிழகத்தைப் பற்றிக் கூறாமைக்கு ஏற்கெனவே காரணம் கூறி விட்டேன். ஆறு கோடிப் பேரில் இறந்தவர்களின் வீதம் மிகச்சொற்பமே. ஆனால் சில இலட்சங்களே உள்ள ஈழத்தவர்களில் இத்தொகை பெரும் விழுக்காடாகும். முல்லைத்தீவில் இறந்தவர்களின் தொகை அம்மாவட்ட சனத்தொகையில் 3.5 வீதம் எனக்கூறப்படுகிறது.
என்னடா இவன் இந்தச் சோகத்தில் வெறும் எண்ணிக்கையையும் வீதத்தையும் பற்றிக் கதைத்துக்கொண்டிருக்கிறானென்று யாரும் சண்டைக்கு வராதீர்கள். நான் சொல்ல எடுத்துக்கொண்ட விடயம் அப்படி.
ஆ.வசந்தன்.
|
|
|
| TROக்கு மருந்து அனுப்ப தடை? |
|
Posted by: Mathan - 01-06-2005, 01:38 PM - Forum: செய்திகள் : தமிழீழம்
- No Replies
|
 |
<span style='font-size:30pt;line-height:100%'>TROக்கு மருந்து அனுப்ப தடை?
சில இந்திய நண்பர்கள் இந்தியாவில் இருந்து TROக்கு மருந்து அனுப்ப முயலும் போது எத்தனை தடைகளை எதிர்ப்புக்களை எதிர்நோக்க வேண்டி இருக்கின்றது. படித்து பாருங்கள் ..........</span>
TRO-வுக்கு மருந்துகள்
சென்ற வாரம் ஈழநாதன் வலைப்பதிவிலும், பின்னர் என் பதிவில் ரோஸாவசந்த் எழுதியதையும் பார்த்து, TRO அமைப்புக்கு சென்னையிலிருந்து சில மருந்துப் பொருட்களை வாங்கி அனுப்ப முடிவு செய்தேன். வெள்ளிக்கிழமைக்குள் (31.12.2004) கிட்டத்தட்ட இந்திய ரூபாய் 25,000 மதிப்புள்ள சில மருந்துகளை வாங்கி பெட்டியில் கட்டி ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் அலுவலகத்துக்கு அனுப்பினோம்.
ஸ்ரீலங்கன் விமானச் சேவை, சுனாமி உதவிப்பொருட்களை இலவசமாக எடுத்துச் செல்லும் என்று சொல்லியிருந்தது.
வெள்ளிக்கிழமைக்குள் அனுப்பினாலும் ஏதோ காரணங்களுக்காக இந்த மருந்துகள் ஏற்றிச் செல்லப்படவில்லை. முதலில் சென்னை சுங்கத்துறைப் பரிசோதனைக்காக (மருந்துகள்தானா என்று...) சனி, ஞாயிறு செலவானது. திங்கள் அன்று அதைத் தாண்டி, கிளம்பலாம் என்றால், இலங்கை தூதரக அனுமதியில்லாமல் பொருட்களை எடுத்துச் செல்லமுடியாது என்று ஸ்ரீலங்கன் சொல்லிவிட்டது.
இலங்கைத் தூதரகத்தார், TRO அனுமதிக்கப்பட்ட நிவாரண உதவிக்குழு அல்ல என்று சொன்னார்கள். அவர்களிடம் இரண்டு நாள்கள் போராடி, கடைசியாக நேற்று அனுமதி பெற்று பெட்டியை அனுப்பினோம். அனுமதி பெற, மருந்துகளை "சுகாதார அமைச்சரகம், கொழும்பு-10" க்கு அனுப்ப வேண்டுமென்றும், அங்கிருந்துதான் TRO மருந்துகளைப் பெற்றுக்கொள்ள முடியும் என்று இலங்கைத் தூதரகம் சொன்னதால் அப்படியே செய்தோம். வேறு வழி தெரியவில்லை.
அனுப்பிய பொருளுக்கான Airway Bill-இல் மருந்துப் பொருட்கள் யாருக்கு (TRO) என்பதனை விளக்கி, சுகாதார அமைச்சரகத்தைச் போய்ச்சேர்ந்ததும் TRO-வுக்குத் தகவல் சொல்லச் சொல்லி எழுதியுள்ளோம். நேற்று இரவு இந்த பில் பிரதியினை தோலைநகல் மூலம் TRO கொழும்பு அலுவலகத்துக்கு அனுப்பி, அங்கிருந்த ஒருவரிடம் பேசினோம். அவர்கள் இன்று பொருட்களை எடுத்தபின் (எடுக்க முடிந்தால்!) எங்களுக்குத் தகவல் சொல்வதாகச் சொல்லியுள்ளனர்.
மேற்கொண்டு இன்னமும் சில மருந்துப் பொருட்கள் (கிட்டத்தட்ட ரூ. 20,000) என் அலுவலகத்தில் இருக்கிறது.
இன்று TRO-வுக்கு சரியான முறையில் கிடைத்த செய்தி தெரிந்தால் அதை அனுப்ப வேண்டும்.
இதற்கிடையே ஸ்ரீலங்கன் விமானச்சேவை இனி பொருட்களை இலவசமாக எடுத்துச் செல்லப்போவதில்லை என்றும் அதற்கென கட்டணம் வசூலிக்கப்போவதாகவும் சொல்லியுள்ளனர். அதுபற்றிய விவரங்கள் இன்றுதான் எனக்குத் தெரியவரும்.
இன்று காலை 9.05 வானொலிச் செய்தியில் கேட்டது: "விடுதலைப் புலிகள் கீழிருக்கும் பகுதிகளுக்கு இந்திய அரசு நேரிடையாக எந்த உதவிப்பொருளையும் அனுப்பாது."
<b>பத்ரி, 10:31, தனிச்சுட்டி, 8 மறுமொழிகள்
8 மறுமொழிகள்:</b>
பத்ரி,
உங்கள் முயற்சி பாராட்டிற்குரியது.
இந்திய அரசு, குறைந்தபட்சம் இலங்கை அரசை வடக்கு பகுட்திகளுக்கு சரியான நிவாரணம் வழங்க நிர்ப்பந்திக்க வேண்டும்.
<b>நம்பி.
By: Nambi, at 10:45</b>
பத்ரி, இவ்விடத்திலே நான் எதைப் பாராட்டாக எழுதினாலும், வெறும்வாய்மொழியாகவே தோன்றலாமென்பதாலே, "நன்றி" என்ற தனி வார்த்தையோடு நிறுத்திவிடுகிறேன்.
/"விடுதலைப் புலிகள் கீழிருக்கும் பகுதிகளுக்கு இந்திய அரசு நேரிடையாக எந்த உதவிப்பொருளையும் அனுப்பாது."/
இது விடுதலைப்புலிகளின் அமெரிக்க இராணுவம் இந்திய உதவிக்கடற்படை ஆகியவை வடகிழக்குக்குச் செல்வதன் பின்னாலான கருத்தாக இருக்கலாம்.
<b>By: -/பெயரிலி., at 10:55</b>
badri, please clarify me. ±ó¾ ¿¡ðÎ «ÃͧÁ, §ÅÈ ¿¡ðÎ ´Õ ¿¢ÚÅÉòÐìÌ («Ð ¾ý þɧÁ ¬É¡Öõ) «ó¾ ¿¡ð§¼¡¼ «ÃÍ «ÛÁ¾¢ þøÄ¡Á §¿Ã¢¨¼Â¡ ¦À¡Õû¸¨Ç «ÛôÀÓÊÔÁ¡? «Ð ¦¾Ã¢ïº¡¾¡ý þó¾¢Â¡ ¦ºöÂÈÐ ºÃ¢Â¡ þø¨Ä¡ýÛ ¦º¡øÄÓÊÔõ. I repeat, I asking not about Jsri, an individual but a Government.
<b>By: Jsri, at 10:58</b>
நன்றி பத்ரி,நேற்று சரியான தகவல் கிடைக்காமையினால் குழம்பிப்போயிருந்தேன்.உங்கள் பதிவின் மூலம் நேற்றுத்தான் அனுப்பப்பட்டதைத் தெரிந்துகொண்டேன்.
உங்கள் பதிவும் முக்கியமானது TRO நிறுவனம் இலங்கை நிர்வாக சேவைகளின் கீழ் பதிவு செய்யப்பட்ட அரசு சாரா தொண்டு நிறுவனம்,அவர்களிடம் முறையான அனுமதிப்பத்திரம் உள்ளது அப்படியிருக்க அவர்களுக்கு அனுமதியில்லை என்ற கூற்று துவேஷத்தின் எல்லையைச் சுட்டிக்காட்டுகின்றது.அதனை இங்கே சுட்டிக்காட்டியதற்கு நன்றி
<b>By: Eelanathan, at 11:09</b>
மிக்க நன்றி பத்ரி.
சரியான நேரத்தில் உதவியுள்ளீர்கள்.
<b>By: வசந்தன், at 12:36</b>
பத்ரியின் இடைவிடாத முயற்சிக்கு, தளராமைக்கு பாராட்டுக்கள்.
எனக்கு இன்னும் ஒழுங்கான இடத்திற்கு போய் சேர்ந்ததா என்பது சரியாய் புரியவில்லை. அப்படியே TROக்கு கொழும்பில் போய் சேர்ந்தாலும் (அதுவும் இன்னும் நிச்சயமாகவில்லை என்றே நினைக்கிறேன்), பாதிக்கபட்ட மக்களிடம் போய் சேருமா என்று ஒரு பிரச்சனை இருக்கிறது. பத்ரியின் முயற்சிகள் வீணாகாது என்று நம்புவோம். ஈழநாதன் urgent என்று சொல்லி அந்த மருந்துகளை கேட்டிருந்தார். பணம் கூட இல்லை, வெறும் அவசர தேவையான மருந்துகளுக்கு இத்தனை பாடா!
இந்தியா வேறு ஏதாவது சொல்லியிருந்தால்தான் ஆச்சரிய படவேண்டும்.கனடா, நார்வே, இன்னும் அமேரிக்கா வேறு நிலை எடுத்தாலும் இந்தியா இதைத்தான் சொல்லும். இன்னும் புரியாதது மத்திய அரசை வற்புறுத்த கூடிய(அதற்கு முய்டற்சியாவது செய்ய கூடிய) ராமதாஸும் வைகோவும் என்ன செய்து கொண்டிருக்கிறார்கள் என்பதுதான். அவர்களின் இந்த துரோகத்தை மன்னிககவே முடியாது.
<b>By: ROSAVASANTH, at 13:39</b>
ஜெயஸ்ரீ: உங்கள் கேள்விக்கான பதில் எளிது. இலங்கை அரசு ஆரம்பம் முதலே உதவிப்பொருட்கள் நேரிடையாக தங்களிடம் வந்துசேரவேண்டும் என்றும் யாராவது பொருட்களை நேரிடையாக விடுதலைப்புலிகள் பகுதிக்கு அனுப்பினால் அது சரியானதாக இருக்காது என்றும் சொல்லிவந்துள்ளனர்.
அதே நேரம், விடுதலைப்புலிகள் அமைப்பும், அது சார்ந்த சில தொண்டார்வ நிறுவனங்களும் இலங்கை அரசிடமிருந்து சரியான உதவிகள் தம்மிடம் வந்துசேர்வதில்லை என்று குற்றம் சாட்டியுள்ளனர்.
கனடாவைச் சேர்ந்த தமிழர்கள், உதவிகளில் பாதியாவது நேரிடையாக தமிழர் வாழும் பகுதிகளுக்குச் சென்று சேர வேண்டும் என்று சொல்லியுள்ளனர். கனடா அரசும், அவ்வாறே செய்துள்ளது.
ஆகவே கொடுக்கவேண்டும் என்ற மனநிலை இருந்தால், இலங்கை அரசை வற்புறுத்தி, நேரிடையாக உதவிகளை இந்தியா தமிழர் பகுதிகளில் செய்திருக்க முடியும். கனடாவால் முடிந்தது, இந்தியாவால் எளிதாகவே முடிந்திருக்கும். ஆனால் இந்திய அரசுக்கு அந்த மனநிலை இல்லை.
எனக்கு விடுதலைப் புலிகள் அமைப்பின் மீது நல்ல அபிப்ராயம் கிடையாது. ஆனால் இந்த நேரத்தில் அது முக்கியமே அல்ல. இப்பொழுது செத்துக் கொண்டிருப்பவர்கள் உயிர்தான் முக்கியம். இந்த நேரத்தில் அரசியல் பிரச்னைகள் வெளியே வரவே கூடாது.
இந்தியா-பாகிஸ்தான் இடையே பெரும் சண்டையே நடந்து கொண்டிருந்தாலும், பாகிஸ்தானில் ஒரு நிலநடுக்கம் வந்தால் இந்தியா உடனடியாக உதவிகளை அந்நாட்டு மக்களுக்குச் செய்தாக வேண்டும். அதைப்போலத்தான் இங்கும்.
இந்தியா, இலங்கை அரசு வழியாகத்தான் உதவிகளைச் செய்வேன் என்கிறது. ஆனால் இங்கு உதவி என்பது பல்வேறு வகைப்பட்டது. பல இடங்களில் இந்திய ராணுவம் மருத்துவக் கப்பல்களை அனுப்பியுள்ளது. ஆனால் இவை யாவும் திருகோணமலை தவிர்த்து பிற தமிழர் பகுதிகளில் அல்ல. பல்வேறு தொழில்நுட்ப உதவிகள் தேவைப்படுகின்றன. ஹெலிகாப்டர்கள் தேவைப்படுகின்றன. இதையெல்லாம் இந்திய அரசு நேரிடையாகவே செய்யவேண்டும். இலங்கை அரசின் மூலமாக எப்படிச் செய்வது? உதவிப் பொருட்களை இலங்கை அரசிடம் கொடுத்தாலும் கூட, இலங்கை அரசு நல்லபடியேதான் நடக்கிறது என்றாலும் கூட, பொருள்கள் பாதிக்கப்பட்டவர்களைச் சென்று சேர்வதற்கு வெகு நாள்களாகி விடும்.
ஆனால், இந்தியா நேரிடையாக இதை அனுப்பினால் வேகமாக, போகவேண்டிய இடத்துக்குச் சென்று சேர்ந்துவிடும்.
தமிழர் பகுதிகளுக்குத் தேவையான மருந்துகள் இந்தியாவில் எளிதாகக் கிடைக்கின்றன. இந்திய அரசு மனது வைத்தால் நாளைக் காலைக்குள் அத்தனையையும் - அதிகமாகப் போனால் ரூ. 10 கோடி ஆகுமா? அவ்வளவுதான் இருக்கும் - சேர வேண்டிய இடத்துக்குக் கொண்டு சேர்த்துவிடலாம்.
அதை விடுத்து, தாம் விடுதலைப் புலிகள் பகுதிகளுக்கு உதவிகளை நேரிடையாக அனுப்பினால், அதன்மூலம் ஒரு வகையில் விடுதலைப் புலிகளை அங்கீகரித்ததாகி விடும் என்பதால் அவர்களை முழுதாக நிராகரிப்பது போல இந்தியா நடந்து கொள்வது மிகவும் மோசமான, அநாகரிகமான செயல். அதைக் கண்டிக்க வேண்டியது நியாயமான இந்தியக் குடிமக்கள் அனைவரின் கடமை. அவ்வாறு செய்வதால் நாம் விடுதலைப் புலிகளை ஆதரிக்கிறோம் என்று ஆகாது.
<b>எங்கோ, ஐரோப்பாவில் தெருவில் போகிறவர்கள் எல்லோரும் மூன்று நிமிட மவுன அஞ்சலி செலுத்துகிறார்கள். அடுத்த வீட்டில் இருந்துகொண்டு, "உன் துக்கம் என் கண்ணில் படவில்லை, உன் இருப்பையே நான் அங்கீகரிக்கவில்லை" என்பது போல நாம் நடந்து கொள்வது மிகக் கேவலமான செயல்.</b>
<b>By: Badri, at 14:45</b>
பத்ரி, மிக அற்புதமாய் எழுதியுள்ளீர்கள். இதைவிட தெளிவான வார்த்தைகளால் சொல்லமுடியாது. இதை அப்படியே ஒரு தனி பதிவாக எழுதுங்கள்.
<b>By: ROSAVASANTH, at 15:15</b>
|
|
|
| சாயி பாபாவையும் கிறிஸ்துவின் போதகர்களையும் கண்டீர்களா? |
|
Posted by: Jude - 01-06-2005, 10:30 AM - Forum: சுமுதாயம் (வாழ்வியல்)
- Replies (35)
|
 |
சாயி பாபாவையும், இறந்தவர்களை உயிர்ப்பிக்கும், நோய்களை குணமாக்கும் கிறிஸ்துவின் போதகர்களையும் கண்டீர்களா? சுனாமியில் இவர்கள் எல்லாம் அடிபட்டு காணாமல் போனார்களா? அல்லது இதெல்லாம் முடிந்து, மறந்து போனபிறகு மீண்டும் வந்து, விரல் இடுக்கில் விபூதியும், தள்ளிவிட்டால் தடுக்கி விழுந்து குணமாகிவிட்டதாக பாவனை செய்யும் நோயாளிகளையும் காட்டி மீண்டும் பேய்க்காட்டுவார்களா?
|
|
|
| மழலைப் பாஷை எப்போது சரியாகும்? |
|
Posted by: ஊமை - 01-06-2005, 10:15 AM - Forum: மருத்துவம்
- Replies (2)
|
 |
குழந்தைகளைப் பொறுத்தவரை சிலர் வெகு சீக்கிரத்திலேயே பேச ஆரம்பித்து விடுவார்கள். சில குழந்தைகளுக்கு பேச்சு வர இன்னும் கொஞ்சம் காலம் பிடிக்கும். அதுபோல குழந்தைகள் பேச ஆரம்பித்ததும் அட்சர சுத்தமாக வார்த்தைகள் வந்து விடாது. ம்மா... ப்பா, மா, என்று தான் அழைக்க தொடங்கும். சில குழந்தைகளுக்கு இந்த வார்த்தைகள் கூட வராமல் ங்கா... ங்கா என்று மழலை பாஷையிலேயே சில காலத்துக்கு பேசிக் கொண்டிருப்பார்கள். இது இயற்கையானது. ஆனால் சில பெற்றோர் இது குறித்து அதிகமாகவே கவலைப்படுகிறார்கள். இந்த வயசிலே உள்ள குழந்தைகள் எல்லாம் தெளிவாக பேசுகிறதே, நமது குழந்தை மட்டும் ஏன்? இப்படி இருக்கிறது என்று நினைக்கிறீர்கள். இது தேவையற்ற ஒன்று.
பொதுவாக குழந்தைகளின் முதல் வார்த்தைகள் மிக சுருக்கமாக இருக்கும். அது ஓரளவுக்கு அர்த்தம் உள்ளதாகவும் இருக்கலாம். அர்த்தமே இல்லாமலும் இருக்கலாம். குழந்தைகள் குறைந்த பட்சம் 9 மாதத்தில் இருந்து, அதிகபட்சம் 18 மாதங்கள் வரையில் பேச ஆரம்பித்து விடுவார்கள். இதில் கூடுதல், குறைதல் இருக்கலாம். அதற்காக குழந்தை எப்படி பேசுகிறது என்பதை வைத்து அதனுடைய ஆரோக்கியத்தை சொல்ல முடியாது. இருந்தாலும் குழந்தைகளின் பேசும் தன்மை, திறன் எந்தளவுக்கு இருக்கிறது? ஏதாவது பாதிப்பு இருக்கிறதா? என்பதை கண்டறிய உங்களை நீங்களே கீழ்க்கண்டவாறு கேட்டுக் கொள்ளுங்கள்.
1. உங்கள் குழந்தை பேசும் தனி வார்த்தையை உங்களால் புரிந்து கொள்ள முடிகிறதா?
2. வெவ்வேறு விதமான உணர்வுகளில் குழந்தைகள் வெளிப்படுத்தும் வெவ்வேறு விதமான ஒலிகளை பிரித்தறிய முடிகிறதா?
3. குழந்தையின் கேட்கும் திறனில் ஏதாவது பாதிப்பு இருக்கும் என சந்தேகப் படுகிறீர்களா?
4. குழந்தையிடம் நிறைய பேசுகிறீர்களா? அல்லது கொஞ்சமாக பேசுகிறீர்களா?
5. குடும்பத்தில் இதற்கு முன்பு யாராவது தாமதமாக பேசியதாக தெரிய வருகிறதா?
இந்த கேள்விக்கெல்லாம் முதலில் விடை தேடிக் கொள்ளுங்கள். அப்படியும் குழந்தைக்கு பிரச்சினை இருப்பதாக நினைத்தால் மேலும் ஒரு 5 மாதத்துக்கு பொறுத்து இருங்கள். அதன்பிறகும் குழந்தை பேசவில்லை என்றால் உடனடியாக ஒரு குழந்தை மருத்துவரை சென்று பார்ப்பது நல்லது.
|
|
|
|