Thread Rating:
• 0 Vote(s) - 0 Average
• 1
• 2
• 3
• 4
• 5
சனத்தொகை பெருக்குவோம்
#1
சுனாமி பெருந்தொகையான தமிழர்களை காவு கொண்ட நிலையில் தமது இருப்பை உறுதிப்படுத்த ஈழத்தமிழர்கர் சனத்தொகையை பெருக்கவேண்டும் என்று வசந்தன் கருத்து வெளியிட்டிருக்கின்றார் படித்து பாருங்கள்.

சனத்தொகை பெருக்குவோம்

சுனாமி அவலங்கள் முழுவதும், ஏன் முதற்கட்டம் கூடத் தீர்க்கப்படாத நிலையில் எதிர்காலத்தில் எழப்போகும் மிகமுக்கிய பிரச்சினையைப் பற்றிப் பேசப் போகிறேன். இச்சுனாமி ஒப்பீட்டளவில் மிகஅதிகமான தமிழர்களைக் காவு கொண்டுள்ளது. இலங்கையிற் பாதிக்குட்பட்டதிற் பெரும்பகுதி தமிழர் தாயகப் பகுதியேயாகும். (இலங்கைக் கடற்கரையில் மூன்றில் இரண்டு பகுதி தமிழர் தாயகப் பகுதியிலேயே உள்ளது) இது போலவே தமிழகத்திலும் ஏராளமான தமிழர்கள் இறந்துள்ளார்கள். இந்நிலையில் நான் இனி கதைக்கப்போவது ஈழத்தமிழர் பற்றியே. ஏனெனில் சனத்தொகை விடயத்தில் தமிழகத் தமிழர்கள் இந்திய நிலைப்பாட்டிலிருந்து மாறப் போவதில்லை. அதற்கான தேவையும் அவர்களுக்கு இல்லை. (அதாவது சனத்தொகை அடிப்படையில் தமது இருப்பை நிச்சயப்படுத்தல்)

ஆனால் ஈழத்தமிழரின் நிலை முற்றிலும் வேறானது. அவர்களின் இருப்பு அவர்களின் எண்ணிக்கையிற் பெருமளவு தங்கியுள்ளது, முக்கியமாக அவர்களின் சொந்த நகரங்களில். இப்போது நடக்கும் பாராளுமன்ற அரசியலில் இதனைத் தெளிவாகப் புரிந்து கொள்ளலாம். கடந்த தேர்தலில் ஏறத்தாள தமிழ் மக்கள் அனைவரும் ஒற்றுமையாக ஒரே கட்சிக்கு வாக்களித்தும் கூட வெறும் 22 பாராளுமன்ற ஆசனங்களே தமிழர் தேசியக்கூட்டமைப்புக்குக் கிடைத்தன. 100 சதவிகித வாக்குகள் இக்கட்சிக்குக் கிடைத்திருந்தாற் கூட மேலும் ஒன்றோ இரண்டோ ஆசனங்கள் மட்டுமே கிடைத்திருக்கும். 225 ஆசனங்களைக்கொண்ட சிறிலங்காப் பாராளுமன்றத்தில் இத்தொகை 10 வீதம் கூட இல்லை. உண்மையில் பாராளுமன்றத்தில் காத்திரமான தாக்கம் எதையுமே ஏற்படுத்த முடியாத எண்ணிக்கைதான் இது. இதுதான் இன்றைய தமிழரின் பாராளுமன்ற அரசியல் நிலை. திட்டமிட்ட சிங்களக் குடியேற்றங்கள் மூலம் ஆட்சியாளர்கள் தாம் நினைத்தவற்றிற் பெருமளவு சாதித்துவிட்டார்கள். எனவே தமிழர் தாயகத்தில் தமிழரின் சனத்தொகை வீழ்ச்சியென்பது அவர்களுக்கு மிகப்பெரும் பின்னடைவு என்பது வெள்ளிடை மலை.

ஏற்கெனவே தமிழரின் இனப்பரம்பல் போரினால் மிகப்பெரும் பாதிப்புக்குள்ளாகியுள்ளது. ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளார்கள். இதிற் பெரும்பங்கு இளைய சமுதாயமேயாகும். யுத்த வன்முறையிற் கொல்லப்பட்டவர்களும் போராட்டத்தில் ஈடுபட்டு மடிந்தோரும் பெருமளவில் இளையோரே. இக்காரணத்தாற் சனத்தொகைப் பெருக்கத்தில் ஏற்பட்ட பெரும் வீழ்ச்சி, தற்போது ஏற்பட்ட இச்சுனாமி அனர்த்தத்தால் மேலும் வீழ்ச்சியடைந்துள்ளது. இறந்த மக்களின் தொகை ஒருபுறமிருக்க இறந்த இளந்தலைமுறையைப் பற்றி யோசிக்கையில் மிகப்பெரும் சவாலொன்று எம்முன் எழுந்து நிற்கிறது. ஏராளமான குழந்தைகளும் சிறுவர்களும் இறந்துள்ளார்கள். சிலவருடங்களின் பின் ஏற்படப்போகும் வெற்றிடமொன்று பயமுறுத்துகிறது. இப்போதுள்ள பிறப்புவீதம் சில வருடங்களில் இன்னும் சடுதியாக வீழும் என்றே தோன்றுகிறது.

இந்நிலையில் ஈழத்தமிழினம் என்ன செய்யப் போகின்றது? அவர்களுக்கு நாம் என்ன செய்யப்போகின்றோம்? இந்நேரத்தில் வெறும் பொருளுதவியால் மட்டும் அங்குள்ளவர்களுக்கு உதவிசெய்தாற் போதாது. (இனி நான் சொல்லப்போவது முட்டாள்தனமாகவும் நகைப்புக்கிடமாகவும் சிலருக்குத் தோன்றலாம்) இயன்றவரை சனத்தொகைப் பெருக்கத்தை ஊக்குவிக்க வேண்டும். ஈழத்தில் எவ்வளவு தூரம் இது சாத்தியமென்று தெரியவில்லை. வசதி படைத்தவர்கள் இதிற் கவனமெடுக்க வேண்டும். குறிப்பாகப் புலம் பெயர்ந்த குடும்பங்கள், ஆழிப்பேரலையாற் கொல்லப்பட்ட மக்களின் பேரால் ஒரு குழந்தையாவது பெற்றுக்கொள்ள முன்வர வேண்டும். (ஏற்கெனவே நீங்கள் திட்டமிட்டிருந்ததை விட). இன்றைய நிலையில் ஈழம் வெறும் பொருளை மட்டுமன்று, ஒரு நேரத்தில் திரும்பிவரும் பெரும் மக்கட்கூட்டத்தையும் புலம் பெயர்ந்தவர்களிடம் எதிர்பார்த்திருக்கிறது.
இக்கருத்து பல மட்டங்களிலும் முன்னெடுக்கப்பட வேண்டும்.

பலருக்கு இதில் உடன்பாடின்மை இருக்கலாம். எப்படியாயினும் உங்கள் கருத்தை இதிற் பதியவும். அல்லது உங்கள் வலைப்பக்கத்திலாவது பதியவும். தமிழகத்தைப் பற்றிக் கூறாமைக்கு ஏற்கெனவே காரணம் கூறி விட்டேன். ஆறு கோடிப் பேரில் இறந்தவர்களின் வீதம் மிகச்சொற்பமே. ஆனால் சில இலட்சங்களே உள்ள ஈழத்தவர்களில் இத்தொகை பெரும் விழுக்காடாகும். முல்லைத்தீவில் இறந்தவர்களின் தொகை அம்மாவட்ட சனத்தொகையில் 3.5 வீதம் எனக்கூறப்படுகிறது.

என்னடா இவன் இந்தச் சோகத்தில் வெறும் எண்ணிக்கையையும் வீதத்தையும் பற்றிக் கதைத்துக்கொண்டிருக்கிறானென்று யாரும் சண்டைக்கு வராதீர்கள். நான் சொல்ல எடுத்துக்கொண்ட விடயம் அப்படி.

ஆ.வசந்தன்.
Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.
Reply
#2
உலக சனத்தொகை (கிட்டத்தட்ட 6 பில்லியன்) கூடித்தான் பூமியே நிலை தளப்புது போல...நீங்க வேற..... :wink:

புலத் தமிழரட்டச் சொல்லீட்டியள் இல்ல...அவை கட்டாயம் செய்வினம்... அவை இப்ப உதுகளிலல தான் மும்முரமா இருக்கினம்...டோண்ட் வொறி...என்ன பிறக்கிறதுகள் தமிழரா இருக்குங்களோ என்பதுதான் சந்தேகம்..!!!! :?:

ஈழத்தில் தாயத்தில் உள்ள ஏதிலிகளைப் பார்த்து இப்படி கோர முடியாது அதுகள் வாழவே வழியில்லாமல் இருக்கேக்க....உருவாக்கிறதுகளுக்கு எப்படி வாழ வழிகாட்டுறது....???! உருவாக்கிறது வளமான சமுதாயத்தைத் தரவேணும் இல்லை என்றால் உருவாக்கக் கூடாது...! Idea

Reply
#3
முதல் அவர்கள் நல்லாய் ஓரளவுக்கு ஏனும் பழைய நிலைக்கு திரும்பட்டும்..அதுக்குள்ள சனப்பெருக்கத்திற்கு போட்டியள.. Cry Cry Cry

Reply
#4
kuruvikal Wrote:உருவாக்கிறது வளமான சமுதாயத்தைத் தரவேணும் இல்லை என்றால் உருவாக்கக் கூடாது...! Idea

உண்மைதான். தம்மால் பராமரிக்க முடியாத அடிப்படை வசதிகளை வழங்க முடியாத நிலையில் நிறைய குழந்தைகளை பெற்றுக் கொள்ளவது ஒரு ஆரோக்கயமில்லாத பலவீனமான சமுதாயத்தையே உருவாக்கும்.
Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.
Reply
#5
Mathan Wrote:
kuruvikal Wrote:உருவாக்கிறது வளமான சமுதாயத்தைத் தரவேணும் இல்லை என்றால் உருவாக்கக் கூடாது...! Idea

உண்மைதான். தம்மால் பராமரிக்க முடியாத அடிப்படை வசதிகளை வழங்க முடியாத நிலையில் நிறைய குழந்தைகளை பெற்றுக் கொள்ளவது ஒரு ஆரோக்கயமில்லாத பலவீனமான சமுதாயத்தையே உருவாக்கும்.

ஆனால் ஒரு விடயம் இலங்கையில் வட கிழக்கில் பலரின் பொருளாதார சமூக நிலமை மிக மோசமாக இருக்கையில் வளமான சமுதாயத்தை உருவாக்க வேண்டும் என்றால் பலர் குழந்தை பெற்றுக்கொள்ள முடியாது அல்லவா?
Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.
Reply
#6
எமது மக்கள் தொகையை அதிகரிக்க வேண்டுமென்பது ஆரம்பம் முதலே முன்வைக்கப்பட்ட கோரிக்கைதான் என நினைக்கிறேன். அதன்காரணமாகத்தான் யாழ் ஆரசினர் மருத்துவமனையில் இருந்த குடும்பக்கட்டுப்பாடு விளம்பரம் அகற்றப்பட்டிக்கவேண்டும்.

கல்வியில் முன்னேற்றம் கண்ட எமது மக்கள் அதன்காரணமாக நாகரிகம் கருதி இரண்டுக்குமேலே குழந்தைகள் பெறுவதைக்குறைத்துக்கொண்டனர். இருக்கின்ற குழந்தைக்கே தேவையான உணவு உடை கல்வி மற்றும் ஆரோக்கியமான சூழ்நிலையை ஏற்படுத்திக்கொடுப்பது சராசரி நடுத்தரக்குடும்பத்திற்கு சிரமமாகிவிட்டது. அதிக குழந்தைகள் பெற்றவர்கள் இடம்பெயர்வதிலும் பல சிரமங்களை அனுபவிக்க வேண்டியிருந்தது. எத்தனையோ சிரமங்களுக்கு மத்தியிலும் அவர்களை வளர்த்தாலும் அவர்கள் சிங்கள அடக்குமுறையாளர்களின் கையில் மாட்டி சிறைசெல்லாமாலோ அல்லது உயிரிளக்காமலோமிக தப்பிவாழ்வது அரிது. தப்பிப்பிழைக்கும் குழந்தைகளும் எப்படியாவது வெளிநாட்டுக்கு அனுப்பிவைக்கப்படுகிறது. இந்தனைக்கும் மத்தியில் மிகக் குறைந்த எண்ணிக்கை அளவு குழந்தைகள்தான் வளர்ந்து எமது தாயகத்தைக்காக்க நேரடியாகவும் மறைமுகமாகவும் போரிடுகின்றனர்.

கண்மூடித்தனமாக குழந்தைகளைப்பெற்று எமது எண்ணிக்கைய பெருக்குவதென்பது தேவையான பலனைத்தராது. நல்ல குடிமக்கள்தான் உண்மையான வளம்.

தற்;போது இருக்கின்ற குழந்தைகளுக்கும் பிறக்கின்ற குழந்தைகளுக்கும் தேவையான வசதிகளைச்செய்து குடுத்து அவர்களை நல்லமுறையில் வழிநடத்தி ஒரு ஆரோக்கியமான சமுதாயத்தைக்கட்டியெழுப்ப வேண்டும். அப்படி ஒரு ஆரோக்கியமான சமுதாயத்தை கட்டி எழுப்ப போதுமான உதவிகளை புலத்தில் இருக்கும் நாம் உதவலாம். பிறக்கின்ற ஒவ்வொரு குழந்தைக்கும் போதிய வசதிகள் கிடைக்கின்றது என்பதை உறுதி செய்தபின் படிப்படியாக குடும்ப்பெருக்கத்தைமேற்கொள்ளலாம்.

இதை எழுதிய மதனைப்பாராட்டியே ஆகவேண்டும். இந்தியாவில் இந்துக்கள் குடும்பகட்டுப்பாட்டை கடைப்பிடிக்கின்றனர் ஆனால் இந்திய முஸ்லிம்கள் குடும்பகட்டுப்பாட்டை கடைப்பிடிப்பதில்லை. இதனால் தற்போது அவர்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இதனால் இந்துக்கள் அச்சம் கொண்டு அவர்களின் முஸ்லிம் சட்டங்களை மாற்றியமைக்க போராடிவருக்கின்றனர்.
Reply
#7
விசயம் என்னவொ முக்கியம்...
தற்போது... சாத்தியமற்றது.......

Reply
#8
ஆதிபன் அந்த கட்டுரை வசந்தனுடையது
Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.
Reply
#9
இது ஒரு முக்கியமான சங்கதி. குறிப்பாக, வடக்கு கிழக்கில் 1 ஆணுக்கு 10 பெண்கள் என்ற அளவில் விகிதாசாரம் இருக்கிறது. இதனால் பல பெண்கள் திருமணம் செய்ய முடியவில்லை. சனத்தொகையை எப்படி இந்த நிலையில் பெருக்க முடியும்? ஆகவே நான் பின்வரும் யோசனைகளை முன் வைக்கிறேன்.

கனடாவில் பிறப்பு வீதம் குறைந்து இறப்பு வீதம் கூடிக்கொண்டு போவதால் பெண்கள் திருமணம் செய்யும் வயதை 14 ஆக குறைத்துள்ளனர். தமிழீழ பிரதேசங்களும் இவ்வாறாக 14 வயதிலேயே தாயாக பெண்கனை ஊக்குவிக்க வேண்டும்.

ஆண் - பெண் விகிதம் மோசமாக அதிகரித்திருந்த மத்தியகிழக்கு நாடுகளில் முகம்மது நபி, ஒரு ஆண் 4 பெண்களை திருமணம் செய்து பலுகிப்பெருக ஊக்கப்படுத்தினார். தமிழீழத்திலும் பல-தார விவாகம் அனுமதிக்கப்பட வேண்டும்.

குடும்பக்கட்டுப்பாடு சட்டவிரோதமாக்கப்பட வேண்டும்.

Reply
#10
என்ன யூட் அண்ணா..??? எங்க போறதுக்கு வழி சொல்லுறியள். உருப்பட்ட மாதிரி தான் நாடு......

Reply
#11
tamilini Wrote:என்ன யூட் அண்ணா..??? எங்க போறதுக்கு வழி சொல்லுறியள். உருப்பட்ட மாதிரி தான் நாடு......

[b][size=18]
Reply
#12
Quote:ஆண் - பெண் விகிதம் மோசமாக அதிகரித்திருந்த மத்தியகிழக்கு நாடுகளில் முகம்மது நபி, ஒரு ஆண் 4 பெண்களை திருமணம் செய்து பலுகிப்பெருக ஊக்கப்படுத்தினார். தமிழீழத்திலும் பல-தார விவாகம் அனுமதிக்கப்பட வேண்டும்.

எனக்கு ஆட்சேபணை இல்லை :wink: ஆனா ஒரு சந்தேகம் பெண்களும் பலதார மணம் செய்யலாம் தானே :?:
Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.
Reply
#13
[quote=Mathan][quote]ஆண் - பெண் விகிதம் மோசமாக அதிகரித்திருந்த மத்தியகிழக்கு நாடுகளில் முகம்மது நபி, ஒரு ஆண் 4 பெண்களை திருமணம் செய்து பலுகிப்பெருக ஊக்கப்படுத்தினார். தமிழீழத்திலும் பல-தார விவாகம் அனுமதிக்கப்பட வேண்டும்.[/quote]

எனக்கு ஆட்சேபணை இல்லை :wink: ஆனா ஒரு சந்தேகம் பெண்களும் பலதார மணம் செய்யலாம் தானே :?:

Reply
#14
தமிழர்களின் சனத்தொகை அதிகரிக்க வேண்டும் என்பதில் குருவிகள் நாம் உடன்பட்டாலும் பலதார மணம் அது இதென்று சமூக ஒழுக்கங்கள் சிதைக்கப்படுவதை வரவேற்க முடியாது...! அப்படி ஒரு சமூகம் தமிழர்களுக்கு அவசியம் இல்லை...அதைவிட தமிழன் பூண்டோடு அழியினும் பறவாயில்லை....!

நீங்கள் சொன்னது போல நபிகள் வழியைப் பின்பற்றிய முஸ்லீம்கள் இன்று சமூக ரீதியில் வறுமைக் கோட்டில் தான் அதிகம் சீவியம் நடத்துகின்றனர்...! இலங்கையில் முஸ்லீம்களின் நிலையை எடுத்து நோக்கின் தெளிவாக இதைக் காணலாம்...! வளர்ந்த நாடுகளில் ஒரு குடும்பத்துக்கு ஒரு பிள்ளை என்று இருப்பதால்தான் உயர்ந்த குழந்தைப் பாரமரிப்பையும் பாதுகாப்பையும் தரமான கல்வியையும் அளிக்க முடிகிறது...!

6 கோடி தமிழர்களைக் கொண்ட தமிழகத்தில் கூட வறுமைக் கோட்டில் வாழ்வோரின் நிலைதான் அதிகம்...தரமான குழந்தைப் பராமரிப்பு,கல்வி அறிவு பெறுவோரின் அளவு ஒப்பீட்டளவில் குறைவு...நீங்கள் சொல்வது போல எமது தமிழ் சமூகமும் நடக்க முனைந்தால்...இப்படியான சிக்கல் நிறைந்த வளமற்ற சமூகம் உருவாவதுடன் சமூக ஒழுக்கம் நீதி என்பனவும் பாதிக்கப்படும்...!

ஒருவனுக்கு ஒருத்தி என்ற கோட்பாடு இன்று சர்வதேசமெங்கும் ஒலிக்கிறது...! குறிப்பாக எயிட்ஸ் பரவலின் பின்பு இது உரத்து உச்சரிக்கப்படுகிறது...! அதுபோக ஒரு பெண் ஆரோக்கியமான மன வளர்ச்சி பெற்று வளமான கருத்தரிக்கும் வயதாக 21 வயது கணிப்பிடப்பட்டுள்ளது...! இதற்கு கீழோ அல்லது மேலோ ஒரு பெண்ணைத் திருமணத்துக்கு கட்டாயப்படுத்துவது அவளுக்கு இயற்கை அளித்த சுதந்திரத்தைப் பறிப்பது போன்றது...! தனது துணையைத் தானே தேர்ந்தெடுக்கவும் குழந்தை பெற்றுக்கொள்ள விரும்புவதும் முழுக்க முழுக்க அழுத்தங்களுக்கு அப்பால் ஒரு பெண்ணின் சுயவிருப்பின் அடிப்படையில் அமைய வேண்டியது...!

சமூக நிலை, குடும்ப நிலை, தனியாள் செல்வாக்கு இவற்றைக் காட்டி ஒரு பெண்ணை கட்டாய சனத்தொகைப் பெருக்குக்கு அழைப்பது அவளை இயந்திரமாகக் கருதும் கீழ்நிலை சிந்தனையே அன்றி வேறில்லை...! இது பெண்ணின் உணர்வுகளுக்கு இடமளிக்காது அவளின் அடிப்படை மனித உரிமைகளை மீறும் செயலும் கூட...கண்டிக்கத்தக்கதும் கூட....!

பெண்கள் கல்வி அறிவு பெற்றவர்களாக வளமான சமூகத்தைத் தாமே கட்டி எழுப்பக் கூடியவர்களாக இருக்கும் போது மட்டுமே ஆணின் பக்கதுணை கொண்டு அவளால் ஒரு வளமான சமூகத்தை உருவாக்க முடியும்...சும்மா சனத்தைப் பெருக்கிப் பிரயோசனம் இல்லை...ஆபிரிக்கக் கண்டத்தில் நிகழ்வது போல...அந்த நிலை எமக்கு வேண்டாம்....! எமது சமூகம் யூதர்கள் போன்று சிறிதாயிருப்பினும் வளமானதாக இருந்தால் அதுவே போதும்...உலகைக் கூட ஆள முடியும்...! Idea

Reply
#15
Quote:எமது சமூகம் யூதர்கள் போன்று சிறிதாயிருப்பினும் வளமானதாக இருந்தால் அதுவே போதும்...உலகைக் கூட ஆள முடியும்...!

[size=14]அண்மைக்காலமாக இலங்கை தமிழர்கள் தங்களை யூதர்களுடன் ஒப்பிட ஆரம்பித்திருப்பதாக இந்திய தமிழர் ஒருவர் எழுதியிருந்தார். இபோது நீங்களும் எழுதியிருக்கின்றீர்கள். நாம் யூதர்களை போல் நடக்க முயற்சிக்கின்றோமா? இது நன்மையா தீமையா?
Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.
Reply
#16
யூதர்கள் போல வளமுள்ளவர்களாக பலமுள்ளவர்களாக இருக்கும் அதே சமயம் தமிழர்களாக பண்புள்ளவர்களாக நாகரிகம் உள்ளவர்களாக இருப்பதும் அவசியம்.... அதைத்தான் நாம் எதிர்பார்க்கின்றோம்...! அவர்களைப் போல சண்டித்தனம் செய்பவர்களாக இல்லாமல்...! :wink: Idea

Reply
#17
யூதர்களிடம் தமக்கிடையேயான உட்புரிதல் இருப்பதாக அந்த இந்திய நண்பர் எழுதியிருந்தார் அதுவ்ய்ம் தமிழர்களிடையே இருந்தால் இன்னும் நல்லது.
Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.
Reply
#18
tamilini Wrote:என்ன யூட் அண்ணா..??? எங்க போறதுக்கு வழி சொல்லுறியள். உருப்பட்ட மாதிரி தான் நாடு......

சரி, சரி, ஏற்றுக்கொள்ள சிரமமான யோசனைகளை சொல்லிவிட்டேன்.
கொஞ்சம் வித்தியாசமாக முயற்சி செய்யட்டுமா?

முதலில் "சனத்தொகை பெருக்கம் வாழ்க்கைத்தரத்ததை அதிகரிக்கும்" என்பது போன்ற கருத்துக்கள் சரியானவையல்ல என்பதை தெளிவாகவும் வெளிப்படையாகவும் ஏற்றுக்கொள்வோம். உண்மையில் மக்கள் தொகையை குறைப்பதற்கும் வாழ்க்கைத்தரம் அதிகரிப்பதற்கும் சம்பந்தம் இருக்கிறது.

ஆண் - பெண் விகிதாசாரம் 1 : 10 என்ற அளவில் இருக்கும் நிலையில், பலதார விவாகத்தையும் ஏற்றுக்கொள்ள முடியாத நிலையில், நாம் தமிழர் அல்லாதவர்களை தமிழ்ப்பெண்கள் மணமுடிப்பதை வரவேற்க வேண்டும். அவர்கள் தமிழரின் வாழ்க்கைத்தரம் உயர்வதையும் தமிழீழ மக்களையும் ஆதரித்தால் நல்லது தானே? உதாரணமாக அடேல் பாலசிங்கத்தை பாருங்கள். தமிழருடனேயே வாழவில்லையா? ஏன் தமிழரல்லாதோரை மணமுடிக்க கூடாது? எல்லா தமிழ் பெண்களுக்கும் திருமணம் செய்து வாழ ஆசையிருக்காதா?

Reply
#19
Quote:ஆண் - பெண் விகிதாசாரம் 1 : 10 என்ற அளவில் இருக்கும் நிலையில், பலதார விவாகத்தையும் ஏற்றுக்கொள்ள முடியாத நிலையில், நாம் தமிழர் அல்லாதவர்களை தமிழ்ப்பெண்கள் மணமுடிப்பதை வரவேற்க வேண்டும். அவர்கள் தமிழரின் வாழ்க்கைத்தரம் உயர்வதையும் தமிழீழ மக்களையும் ஆதரித்தால் நல்லது தானே? உதாரணமாக அடேல் பாலசிங்கத்தை பாருங்கள். தமிழருடனேயே வாழவில்லையா? ஏன் தமிழரல்லாதோரை மணமுடிக்க கூடாது? எல்லா தமிழ் பெண்களுக்கும் திருமணம் செய்து வாழ ஆசையிருக்காதா?

இதிலும் பார்க்க இருக்கிறதே போதும் போல் இருக்கே.. ஏன் இப்படி செய்யலாமே சிங்களவரை மணம் முடித்தால் எல்லாம் கையும் கணக்கும் சரியா போடுமே .... சும்மா நடக்குறதை கதையுங்களன்.. Idea :roll:
[b][size=18]
Reply
#20
kavithan Wrote:
Quote:ஆண் - பெண் விகிதாசாரம் 1 : 10 என்ற அளவில் இருக்கும் நிலையில், பலதார விவாகத்தையும் ஏற்றுக்கொள்ள முடியாத நிலையில், நாம் தமிழர் அல்லாதவர்களை தமிழ்ப்பெண்கள் மணமுடிப்பதை வரவேற்க வேண்டும். அவர்கள் தமிழரின் வாழ்க்கைத்தரம் உயர்வதையும் தமிழீழ மக்களையும் ஆதரித்தால் நல்லது தானே? உதாரணமாக அடேல் பாலசிங்கத்தை பாருங்கள். தமிழருடனேயே வாழவில்லையா? ஏன் தமிழரல்லாதோரை மணமுடிக்க கூடாது? எல்லா தமிழ் பெண்களுக்கும் திருமணம் செய்து வாழ ஆசையிருக்காதா?

இதிலும் பார்க்க இருக்கிறதே போதும் போல் இருக்கே.. ஏன் இப்படி செய்யலாமே சிங்களவரை மணம் முடித்தால் எல்லாம் கையும் கணக்கும் சரியா போடுமே .... சும்மா நடக்குறதை கதையுங்களன்.. Idea :roll:
கவிதன்,

ஒரு பெண்ணுக்கு திருமணம் நடக்கும் போது ஒன்பது பெண்கள் அங்கே தமக்கு துணை கிடைக்காத நிலையில் தனிக்கட்டையாக வாழ வேண்டிய நிலையில் இருக்கிறார்கள். இதற்கு உங்கள் தீர்வு என்ன?

பிரச்சினைகள் வெடிக்கும் வரை கண்மூடியிருப்பதும் அவற்றிற்கு தீர்வு காணுவதை பின்போடுவதும் ஈழத்தமிழரின் கடந்தகாலத்துடன் முடிய வேண்டும் என்பதே எனது கருத்து.
Reply

Forum Jump:

Users browsing this thread: 1 Guest(s)