| Welcome, Guest |
You have to register before you can post on our site.
|
| Forum Statistics |
» Members: 8,982
» Latest member: lucilegr4
» Forum threads: 9,058
» Forum posts: 83,244
Full Statistics
|
| Online Users |
There are currently 544 online users. » 0 Member(s) | 542 Guest(s) Bing, Google
|
| Latest Threads |
±ôÀÊ ÀÈ¢ì¸Ä¡õ
Forum: நகைச்சுவை
Last Post: UsArgum
01-10-2026, 09:07 AM
» Replies: 28
» Views: 10,326
|
Mrs.Sirimao Bandaranayake
Forum: நகைச்சுவை
Last Post: GeraTep
11-14-2025, 10:46 AM
» Replies: 14
» Views: 3,234
|
Farty time
Forum: நகைச்சுவை
Last Post: ㄹㅈㄷㄹㅈ
08-26-2025, 03:48 PM
» Replies: 11
» Views: 5,608
|
கனவே கலைகிறதே
Forum: பொழுதுபோக்கு
Last Post: KULAKADDAN
04-30-2006, 06:37 PM
» Replies: 0
» Views: 6,300
|
Karuna Cadres were captur...
Forum: பிறமொழி ஆக்கங்கள்
Last Post: ஜெயதேவன்
04-30-2006, 06:17 PM
» Replies: 4
» Views: 8,648
|
என்ன நடந்தது யாழிற்கு?
Forum: உங்கள் கருத்துக்கள்
Last Post: ஜெயதேவன்
04-30-2006, 06:03 PM
» Replies: 42
» Views: 31,082
|
முடியுமானால் முயற்ச்சியுங...
Forum: போட்டிகள்
Last Post: Subiththiran
04-30-2006, 05:00 PM
» Replies: 15
» Views: 14,471
|
**சுடேக்கு** புதிர் விளைய...
Forum: போட்டிகள்
Last Post: kavithaa
04-30-2006, 04:30 PM
» Replies: 63
» Views: 38,508
|
புல்மோட்டையில் தாக்குதல்
Forum: செய்திகள் : தமிழீழம்
Last Post: Sriramanan
04-30-2006, 04:10 PM
» Replies: 2
» Views: 8,043
|
போதனை வேண்டாம்! பு...
Forum: செய்திகள் : தமிழீழம்
Last Post: alika
04-30-2006, 03:13 PM
» Replies: 4
» Views: 6,243
|
|
|
| பிரான்சில் உள்ள நண்பர்களுக்காக ! |
|
Posted by: anpagam - 01-07-2005, 03:56 PM - Forum: செய்திகள் : தமிழீழம்
- Replies (1)
|
 |
பிரான்சில் உள்ள நண்பர்களுக்காக
பேரலையால் பாதிக்க பட்ட நாட்டுகளுக்காக (குறிப்பாக இலைங்கைக்கு)பிரான்ஸ் ரெலிகொம் (France telecom) 24 மணிநேர இலவசமாக கதைக்க விட்டுள்ளார்கள் விரும்பியோர் பயனடைக :wink: <!--emo&:o--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/ohmy.gif' border='0' valign='absmiddle' alt='ohmy.gif'><!--endemo--> அக்காட்டுபெயர் TICKET TELEPHONE (Price 5Euros 7.50Euros)
அவசரப்படாதீர்கள் 21ம் தகதி அல்லது 31ம் திகதி மட்டும் உள்ளது
|
|
|
| ஜீமெயில் |
|
Posted by: Nada - 01-07-2005, 11:16 AM - Forum: இணையம்
- Replies (19)
|
 |
ஜீமெயில் மூன்று கைவசம் உள்ளது. 1000 mb உடைய ஜீமெயிலை தேவைப்படுகிறவர்கள் தனிமடல்மூலம் உங்கள் பெயர்கள் மின்னஞ்சல் முகவரி ஆகியவற்றை தனிமடல்மூலம் என்னிடம் தந்தால் உங்களுக்கு வழங்கமுடியும்.
|
|
|
| அம்மா நீ எங்கே? |
|
Posted by: தமிழரசன் - 01-07-2005, 09:33 AM - Forum: கவிதை/பாடல்
- Replies (18)
|
 |
அம்மா நீ எங்கே
உலகிலே சிறந்தது
உயிரினும் மேலாலனது
உன் பாசம்; உன் நேசம்; உன் அன்பு; உன் அரவணைப்பு
எல்லாமே தேவையே எனக்கின்று
அம்மா நீ இன்று
எவ்வூரில் ஓடுகின்றாய்?
கோரப்புயல் போல
கொடுமைகள் புரிந்துநிற்கும்
கொடியவர் துரத்தினரா?
கொண்டதே கோலமாக
கொடுந்துயர் கொண்டு நீயும்
கலங்கியே ஓடினாயோ?
கணவனே துணை என்றாய்
கடல் கடந்து வந்து விட்டேன்
கண்காணா ஊரிலின்று
கண்கலங்கி நிற்கின்றேன்
அம்மா உனை என்று காண்பேன்
உன் கையால் சோறு உண்ண ஆசை
என் பிள்ளையை நீ அள்ளி
அணைத்து மகிழ்வதைக்காண ஆசை
ஆயிரம்பேர் இருந்தென்ன
ஆயிரமாய் பணம் வந்தென்ன
ஆளாக்கி வளர்த்த உன்
அன்பு மனம் தவிக்கின்றதே
தத்தித் தத்தி நடக்கையிலே
தள்ளாடி விழுமென்னை
தாவியே ஓடிவந்து
தாங்கியே நீ பிடித்தாய்
தளர் நடை போட்டு நீ
தள்ளாடி நடக்கையிலே
தள்ளியே நானிருந்து
தவிக்கின்ற தவிப்புக்களை
என்னென்று உரைத்திடுவேன்
உனைப் பிரிந்த பின்தானே
உனை எண்ணிப்பார்க்கின்றேன்
தாயான பின்தானே
தாய்ப்பாசம் உணர்ந்திட்டேன்
என்செய்வேன் ஏதுசெய்வேன்
என்றேங்கி வாடுகின்றேன்
அம்மா நீ எங்கே?
|
|
|
| தெற்காசியாவும் 'அரசியல் சுனாமியும்' |
|
Posted by: Vaanampaadi - 01-07-2005, 09:07 AM - Forum: செய்திகள் : தமிழீழம்
- No Replies
|
 |
ஜனவரி 06, 2005
தெற்காசியாவும் 'அரசியல் சுனாமியும்'
ஏ.கே. கான்
சுனாமியால் தாக்கப்பட்ட நாடுகளுக்கு நிதியுதவி என்ற பெயரில் தெற்காசியாவில் தங்களது ஆளுமை மற்றும் அரசியல் அதிகாரத்தை நிலை நாட்டுவதில் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளுக்கு இடையே கடும் போட்டி ஏற்பட்டுள்ளது.
சுனாமி தாக்குதல் நடந்த மறுதினம் அமெரிக்கா அறிவித்த நிதியுதவி எவ்வளவு தெரியுமா?. வெறும் 15 மில்லியன் டாலர்.
ஆனால், தெற்காசியாவின் கடலோரப் பகுதிகள் கடலில் கரைந்து போய்விட்டதை, ஆயிரக்கணக்கான உயிர்கள் பறிபோய்விட்டதை சிஎன்என், பிபிசி உள்ளிட்ட தொலைக் காட்சிகள் தொடர்ந்து ஓளிபரப்ப ஆரம்பிக்க, நிலைமையின் விபரீதம் புரிந்து அமெரிக்கர்கள் அதிர, மக்களின் மன ஓட்டத்தை உணர்ந்த அமெரிக்க அரசு தனது உதவி நிதியை 35 மில்லியனாக உயர்த்தியது.
தெற்காசியாவில் ஏற்பட்ட இந்த பேரழிவைக் காரணமாக வைத்து இந்தப் பகுதியில் ஊடுருவிவிட ஆரவம் காட்டும் அமெரிக்கா தனது உதவி நிதியை ஐ.நாவிடம் தராமல் போட்டியாக ஜப்பான், ஆஸ்திரேலியா எனது தனது கூட்டாளிகளைச் சேர்த்துக் கொண்டு சுனாமி நிவாரணத்துக்கு தனி அமைப்பை ("ஞிணிணூஞு ஞ்ணூணிதணீ") ஏற்படுத்தியது.
அதில் தெற்காசியாவின் சூப்பர் பவர் என்று கொம்பு சீவிவிடப்பட்ட இந்தியாவையும் சேர்த்துக் கொண்டது. முதலில் யோசிக்காமல் இதில் சேர தலையாட்டிவிட்ட இந்தியா பின்னர் அமெரிக்காவின் நோக்கத்தைப் புரிந்து கொண்டு மெதுவாக பின் வாங்க ஆரம்பித்தது.
இதற்கிடையே சுனாமியால் பல முறை பாதிக்கப்பட்ட ஜப்பான் 500 மில்லியன் டாலர்கள் அளிப்பதாக அறிவிக்க, சீனாவும் 40 மில்லியன் டாலர் உதவியை அறிவிக்க, இதையடுத்து அமெரிக்கா தனது உதவியை 350 மில்லியன் டாலராக அதிகரித்தது.
அல்கொய்தா மற்றும் தலிபான்களுடன் சண்டை போட பாகிஸ்தானுக்கு கடந்த 2 ஆண்டுகளில் அமெரிக்கா வழங்கியுள்ள நிதி 1.6 பில்லியன் டாலர்களைத் தாண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆனால், 1.5 லட்சம் மக்கள் பலியான, சுமார் 20 லட்சம் மக்கள் பாதிக்கப்பட்ட பேரழிவுக்கு அமெரிக்கா அளித்துள்ள உதவி வெறும் 350 மில்லியன் டாலர் தான். தெற்காசியாவுக்குள் நிரந்தர கூடாரம் போட தனக்கு உதவினால் மட்டுமே கூடுதல் நிதி வழங்கப்படும் என்பதை சொல்லாமல் சொல்கிறது அமெரிக்கா.
அமெரிக்காவின் இந்த நோக்கத்தை உணர்ந்து கொண்ட ஜெர்மனி படாரென களத்தில் குதித்துள்ளது. நிதியுதவிக்காக எந்த நாடும் அமெரிக்காவுக்கு கதவைத் திறந்துவிட்டுவிடக் கூடாது என்பதில் கவனமாக உள்ள ஜெர்மனி பாதிக்கப்பட்ட நாடுகளுக்கு 674 மில்லியன் டாலரை உதவித் தொகையாக வழங்குவதாக ஐ.நாவிடம் தெரிவித்துள்ளது.
இது ஜப்பான் அறிவித்த 500 மில்லியன் டாலர்களை விட 174 மில்லியன் டாலர் அதிகம். மேலும் ஏராளமான நிவாரணப் பொருட்கள், ஏர் ஆம்புலன்ஸ்கள் என பல வகைப்பட்ட உதவிகளையும் பாதிக்கப்பட்ட நாடுகளுக்கு உடனடியாக அனுப்பி வைத்தது ஜெர்மனி.
இதைத் தொடர்ந்து பசிபிக் பகுதியில் தனது கடல் அதிகார எல்லைக்குள் வரும் தாய்லாந்து, இந்தோனேஷியா ஆகிய நாடுகளை திருப்திப்படுத்த வேண்டிய நிலைக்கு ஆஸ்திரேலியா தள்ளப்பட்டது.
இதனால் அமெரிக்கக் கட்டுப்பாட்டில் இருந்து வெளியேறி சுனாமியால் பாதிக்கப்பட்ட நாடுகளுக்கு 1 பில்லியன் டாலர் உதவியை அறிவித்துள்ளது ஆஸ்திரேலியா.
ஜெர்மனியின் வேகம் கண்டு திணறிய அமெரிக்க அதிபர் புஷ் உடனே முன்னாள் அதிபர்களான தனது தந்தை புஷ் சீனியர் மற்றும் பில் கிளின்டனை அழைத்துக் கொண்டு பாதிக்கப்பட்ட நாடுகளின் தூதரகங்களுக்கு ஒரு ரவுண்டு போய் வந்தார். வேண்டிய உதவிகளைச் செய்வோம் என்றதோடு இந்தியாவையும் பாராட்டித் தள்ளினார்.
அமெரிக்க நிதியுதவியை ஏற்றாலும் படை உதவிகளை பாதிக்கப்பட்ட நாடுகள் ஏற்கவில்லை. இதில் விதி விலக்கு இலங்கை மட்டுமே. அமெரிக்கப் படையினர் 1,500 பேரை நிவாரணப் பணிகளுக்காக உள்ளே அனுமதித்துள்ளது இலங்கை.
இது நடக்கும் என்று தெரிந்தது தான், சுனாமி தாக்கியவுடன் இலங்கைக்கு ரூ. 100 கோடி உதவியையும் கூடவே இரண்டு போர்க் கப்பல்களில் மீட்பு உபகரணங்களையும், ராணுவ சரக்கு விமானங்களில் ஏராளமான நிவாரணப் பொருட்களையும் அனுப்பியது இந்தியா.
அமெரிக்கப் படைகள் இலங்கைக்குள் நுழைவதைத் தடுக்க இந்தியா எவ்வளவோ முயன்றது. எல்லா உதவிகளும் செய்வதாக அதிபர் சந்திரிகாவிடம் பலமுறை தொலைபேசியில் பேசிய பிரதமர் மன்மோகன் சிங் தெரிவித்தார்.
ஆனாலும் அமெரிக்கப் படைகளை இலங்கைக்குள் அனுமதித்துவிட்டார் சந்திரிகா.
இதையடுத்து அமெரிக்கா தலைமையிலான நிவாரண உதவிக்கான 4 நாடுகள் அமைப்பில் இருந்து இந்தியா வேகமாகவே பின் வாங்க ஆரம்பிக்க, இன்று அந்த அமைப்பே கலைக்கப்படுவதாக அறிவித்துவிட்டார் அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் காலின் பாவல்.
இதற்கிடையே ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் வீடோ அதிகாரத்துடன் நிரந்தர இடம் பிடிக்கும் தீவிரத்தில் இருக்கும் இந்தியா, இந்தப் பேரழிவையடுத்து தனக்கு எந்த நாட்டின் உதவியும் தேவையில்லை என்று அறிவித்துவிட்டது.
பாதுகாப்பு சபையில் நிரந்தர உறுப்பினராக விரும்பும் ஒரு நாடு இயற்கைப் பேரழிவைத் தானே சமாளித்துக் கொள்ள முடியாவிட்டால் எப்படி என்ற கேள்வி எழுந்துவிடக் கூடாது என்ற ஜாக்கிரதை உணர்வும், இந்தப் பேரழிவைக் காரணமாக வைத்து நிதியுதவி செய்துவிட்டு பின்னர் தன்னை எந்த நாடும் கட்டுப்படுத்த முயலக் கூடாது என்ற காரணத்தாலும் வெளிநாட்டு நிதியுதவிகளுக்கு கும்பிடு போட்டுவிட்டது இந்தியா.
மேலும் தான் பாதிப்புக்குள்ளாகி இருந்தாலும் தன்னால் பிற நாடுகளுக்கும் உதவிக் கரம் நீட்ட ராணுவ பலமும் பண வசதியும் இருக்கிறது என்பதை மாலத்தீவு, இலங்கை, இந்தோனேஷியா ஆகிய நாடுகளுக்கு ராணுவ கப்பல்களையும் ராணுவ சரக்கு விமானங்களில் நிவாரணப் பொருட்களை அனுப்பி உதவி நிரூபித்துவிட்டது இந்தியா.
இந்த பேரழிவு விஷயத்தில் வளைகுடா நாடுகள் நடந்து கொண்ட முறை தான் மிக மட்டமானது.
கறுப்புத் தங்கமான எண்ணெயில் மிதக்கும் இந்த நாடுகள் போதிய அளவில் சுனாமி பாதித்த நாடுகளுக்கு உதவ முன் வரவில்லை. சௌதி அரேபிய மன்னர் ஆட்சியாளர்கள் பிசாத்து காசு உதவியை அறிவித்துள்ளனர்.
இந்த மன்னர் குடும்ப வாரிசுகள் சார்ட்டட் விமானங்களில் உலகின் முன்னணி ரிசார்ட்டுகளுக்குச் சென்று ஒரு வாரத்தில் தண்ணியடித்துச் செலவழிக்கும் நிதி தான் இது.
இன்னொரு முக்கிய விஷயத்தையும் நாம் மறந்திட முடியாது. ஈரானில் மாபெரும் பூகம்பம் ஏற்பட்டபோது பல நாடுகளும் போட்டி போட்டுக் கொண்டு நிதியுதவியை அறிவித்தன. உறுதியளித்தபடி அந்த நாடுகள் பணம் கொடுத்திருந்தால் 1 பில்லியன் டாலர் வந்திருக்க வேண்டும். ஆனால், ஈரானுக்கு கையில் வந்து சேர்ந்தது வெறும் 17 மில்லியன் மட்டுமே.
இதே போலத்தான் இப்போது 100க்கும் அதிகமான நாடுகள் 4.5 பில்லியன் வரை சுனாமி பாதித்த நாடுகளுக்கு நிதியுதவியை அறிவித்திருக்கின்றன. இதில் உண்மையிலேயே எவ்வளவு உதவி போய்ச் சேரப் போகிறது என்று தெரியவில்லை.
source: Thatstamil
|
|
|
| நடிகை சிந்து மரணம் |
|
Posted by: Vaanampaadi - 01-07-2005, 09:01 AM - Forum: துயர்பகிர்வு / நினைவுகூரல்
- Replies (9)
|
 |
ஜனவரி 07, 2005
சுனாமிக்காக நிதி திரட்டிய நடிகை சிந்து மரணம்
சென்னை:
இணைந்த கைகள் உள்ளிட்ட சில திரைப் படங்களிலும், ஏராளமான தொலைக் காட்சித் தொடர்களிலும் நடித்துள்ள நடிகை சிந்து மூச்சுத் திணறல் காரணமாக மரணமடைந்தார்.
இவர் நடிகை மஞ்சுளாவின் சகோதரி மகளாவார். இணைந்த கைகள் படம் மூலம் திரையுலகில் அறிமுகமானவர். அந்தப் படத்தில் ராம்கிக்கு ஜோடியாக நடித்திருந்தார். அதன் பிறகு பட்டிக்காட்டுத் தம்பி, பரம்பரை, சின்னத்தம்பி உள்பட பல படங்களில் நடித்துள்ளார்.
திரைப் படங்களில் வாய்ப்புகள் குறைந்த பின்னர் டிவி தொடர்களில் நடிக்க ஆரம்பித்தார். கோகுலம் வீடு, எங்க குடும்பம்,தோழிகள், ஆனந்தம், மெட்டி ஒலி உள்ளிட்ட தொடர்களில் நடித்து வந்தார்.
இந் நிலையில், கடந்த ஞாயிற்றுக்கிழமை சுனாமி நிதிக்காக சின்னத்திரை நடிக, நடிகையர் வீதி வீதியாகச் சென்று நிதி வசூல் செய்தனர். ஆஸ்துமாவால் பாதிக்கப்பட்டுள்ள சிந்துவும் இதில் கலந்து கொண்டு நிதி சேகரித்தார். நீண்ட தூரம் நடந்ததால் அவருக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டது.
இதைத் தொடர்ந்து அவர் தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் நேற்றிரவு சிகிச்சை பலனளிக்காமல் இறந்தார்.
சிந்துவுக்கு வயது 33. கன்னடத் திரைப்பட இயக்குனர் ஒருவரை 10 ஆண்டுகளுக்கு முன் திருமணம் செய்த சிந்து அவரை பின்னர் விவாகரத்து செய்து விட்டார். அவர் மூலம் சிந்துவுக்கு 9 வயதில் மகள் உள்ளார்.
இந் நிலையில் 2 ஆண்டுகளுக்கு முன் டிவி நடிகர் ரிஷியை திருமணம் செய்து கொண்டு அவருடன் நுங்கம்பாக்கத்தில் வசித்து வந்தார்.
மறைந்த சிந்துவுக்கு ஏராளமான தொøக்காட்சி நடிகர், நடிகையர்கள் அஞ்சலி செலுத்தினர். மருத்துவமனையில் அவரது உடலை மஞ்சுளாவின் கணவரான நடிகர் விஜய்குமார் குடும்பத்தினர் வந்திருந்தார்.
<b>பழம்பெரும் நடிகர் டி.கே.எஸ். கருப்பையா மரணம்:</b>
பழம் பெரும் நடிகரான டி.கே.எஸ். கருப்பையா மரணடைந்தார்.
எம்ஜிஆரின் பல படங்களில் நடித்த கருப்பையா சமீபத்திய எஜமான், முதல்வன் உள்பட 600க்கும் அதிகமான படங்களில் நடித்துள்ளார்.
கலைமாமணி பட்டம் பெற்ற அவர் நேற்று மரணமடைந்தார். அவருக்கு மனைவி, 4 மகன்கள், ஒரு மகள் உள்ளனர்.
|
|
|
| எத்துயர் வரினும் |
|
Posted by: lakpora - 01-07-2005, 07:39 AM - Forum: அறிமுகம்
- Replies (60)
|
 |
இலநு;கைத் தாயகத்திலிருந்து " லக்பொர " என்ற பெயரில் இணையம் வரும் இக்களத்தில் இணையவந்திருக்கிறேன்.
இலநு;கையர்களின் சோகம் என்னையும் துயரத்தில் ஆழ்த்தியுள்ளது.
எத்துயர் வரினும் ஒரிலநு;கையே :!: இது என் நலைப்பாடு
|
|
|
| 52 கோடி சொந்தப் பணத்தில் வழங்கும் தமிழர் ! |
|
Posted by: anpagam - 01-07-2005, 01:29 AM - Forum: புலம்
- Replies (4)
|
 |
கடற்கோள் நிவாரணமாக 52 கோடி ரூபா சொந்தப் பணத்தில் வழங்கும் தமிழர்
அமெரிக்காவில் வாழும் இலங்கையரான தொழிலதிபர் ராஜ் ராஜரட்ணம் கடற்கோளினால் பாதிக்கப்பட்ட தமது நாட்டு மக்களுக்கு உதவுவதற்கு தனது சொந்தப் பணத்தில் 52 கோடி ரூபாவை ( 50 இலட்சம் அமெரிக்க டொலர்கள்) வழங்கியுள்ளார்.
கடற்கோள் பாதித்த வேளை அவர் இலங்கையில் விடுமுறையைக் கழிப்பதற்காக தனது குடும்பத்தினருடன் வந்திருந்தார். இலங்கையின் கரையோரத்தில் படுமோசமாகப் பாதிக்கப்பட்ட பகுதிகளில் வீடுகளை நிர்மாணிப்பதற்காகவே தனது உதவி செலவிடப்பட வேண்டுமென அக்கறை காட்டியிருக்கும் ராஜ் ராஜரட்ணம் இந்த உதவி செலவிடப்படுகின்ற முறையைப் பொறுத்து மேலும் தனது சொந்தப் பணத்தில் பங்களிப்புச் செய்யத் தயாராக இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவிலும் ஐரோப்பாவிலும் உள்ள தனது நண்பர்கள் மற்றும் வர்த்தகப் பங்காளிகள் மத்தியில் இலங்கைக்கு உதவுமாறு வேண்டுகோள் விடுத்திருக்கும் அவர் அவசர நிவாரண உதவிகளில் மாத்திரம் அக்கறை காட்டாமல் பாதிக்கப்பட்ட மக்களின் எதிர்கால நல்வாழ்வில் அக்கறை கொண்டவராக காணப்படுகின்றார்.
கொழும்புப் பங்குச் சந்தையில் முதலீடுகளைச் செய்யும் ராஜரட்ணத்தின் மூன்று நிதியங்களை மேற்பார்வை செய்யும் கம்பனியான ்நேரிக் கேற்றர் மனேஜ்மென்ற் பிறைவேட் லிமிட்டெட்ீ பணிப்பாளர் சபையின் கூட்டத்தில் கடந்த திங்கட்கிழமை ராஜரட்ணத்தின் நிதியுதவி பயன்படுத்தப்படுவதற்கான வழிவகைகள் குறித்துத் தீர்மானிக்கப்பட்டது.
கடந்த சில வருடங்களாக கொழும்புப் பங்குச்சந்தையில் பெருமளவு முதலீடுகளைச் செய்தவர்களில் ஒருவராக ராஜரட்ணம் திகழ்கின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
நன்றி: தினக்குரல்
|
|
|
|