![]() |
|
52 கோடி சொந்தப் பணத்தில் வழங்கும் தமிழர் ! - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: தமிழ்க் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=4) +--- Forum: புலம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=21) +--- Thread: 52 கோடி சொந்தப் பணத்தில் வழங்கும் தமிழர் ! (/showthread.php?tid=5913) |
52 கோடி சொந்தப் பணத்தில் வழங்கும் தமிழர் ! - anpagam - 01-07-2005 கடற்கோள் நிவாரணமாக 52 கோடி ரூபா சொந்தப் பணத்தில் வழங்கும் தமிழர் அமெரிக்காவில் வாழும் இலங்கையரான தொழிலதிபர் ராஜ் ராஜரட்ணம் கடற்கோளினால் பாதிக்கப்பட்ட தமது நாட்டு மக்களுக்கு உதவுவதற்கு தனது சொந்தப் பணத்தில் 52 கோடி ரூபாவை ( 50 இலட்சம் அமெரிக்க டொலர்கள்) வழங்கியுள்ளார். கடற்கோள் பாதித்த வேளை அவர் இலங்கையில் விடுமுறையைக் கழிப்பதற்காக தனது குடும்பத்தினருடன் வந்திருந்தார். இலங்கையின் கரையோரத்தில் படுமோசமாகப் பாதிக்கப்பட்ட பகுதிகளில் வீடுகளை நிர்மாணிப்பதற்காகவே தனது உதவி செலவிடப்பட வேண்டுமென அக்கறை காட்டியிருக்கும் ராஜ் ராஜரட்ணம் இந்த உதவி செலவிடப்படுகின்ற முறையைப் பொறுத்து மேலும் தனது சொந்தப் பணத்தில் பங்களிப்புச் செய்யத் தயாராக இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். அமெரிக்காவிலும் ஐரோப்பாவிலும் உள்ள தனது நண்பர்கள் மற்றும் வர்த்தகப் பங்காளிகள் மத்தியில் இலங்கைக்கு உதவுமாறு வேண்டுகோள் விடுத்திருக்கும் அவர் அவசர நிவாரண உதவிகளில் மாத்திரம் அக்கறை காட்டாமல் பாதிக்கப்பட்ட மக்களின் எதிர்கால நல்வாழ்வில் அக்கறை கொண்டவராக காணப்படுகின்றார். கொழும்புப் பங்குச் சந்தையில் முதலீடுகளைச் செய்யும் ராஜரட்ணத்தின் மூன்று நிதியங்களை மேற்பார்வை செய்யும் கம்பனியான ்நேரிக் கேற்றர் மனேஜ்மென்ற் பிறைவேட் லிமிட்டெட்ீ பணிப்பாளர் சபையின் கூட்டத்தில் கடந்த திங்கட்கிழமை ராஜரட்ணத்தின் நிதியுதவி பயன்படுத்தப்படுவதற்கான வழிவகைகள் குறித்துத் தீர்மானிக்கப்பட்டது. கடந்த சில வருடங்களாக கொழும்புப் பங்குச்சந்தையில் பெருமளவு முதலீடுகளைச் செய்தவர்களில் ஒருவராக ராஜரட்ணம் திகழ்கின்றார் என்பது குறிப்பிடத்தக்கது. நன்றி: தினக்குரல் - anpagam - 01-07-2005 வடக்கு-கிழக்கு 90 வீதமான உதவிகளை புலம்பெயர் மக்களே வழங்கி வருகின்றனர் கிழக்கில் தங்கள் முயற்சி -பாதிக்கப்படுகிறதென்கிறது ரி.ஆர்.ஓ. கிழக்கு மாகாணத்தில் அரச கட்டுப்பாட்டு பகுதிகளில் கடந்த சில தினங்களாக நடைபெற்றுள்ள சம்பவங்கள் இயற்கை அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு நிவாரணங்களை வழங்கும் தமது முயற்சிகளை பாதித்துள்ளதாக தமிழர் புனர்வாழ்வுக் கழகம் (ரி.ஆர்.ஓ.) தெரிவித்துள்ளது. தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தின் வாகனங்களை இராணுவம் வழிமறித்து தடுத்து வருவதாகவும் தமிழர் புனர்வாழ்வுக் கழகம் தெரிவித்துள்ளது. கொழும்பில் நேற்று புதன்கிழமை இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டிலேயே இது குறித்து தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தின் நிறைவேற்று இயக்குநர் கே.பி.ரெஜிஇ கொழும்புக் கிளையின் தலைவர் சந்துரு பரராஜசிங்கம்இ சுனாமி அனர்த்த முகாமைத்துவப் பிரிவிற்குப் பொறுப்பான நரேன் நரேந்திரன் ஆகியோர் கலந்து கொண்ட செய்தியாளர் மாநாட்டில் மேலும் தெரிவிக்கப்பட்டதாவது; கிளிநொச்சியில் அனைத்து நிவாரணங்களும் முடிவடைந்து விட்டதாக எமக்கு தகவல் வந்துள்ளது. அரசாங்கத்துடனான மாவட்ட மட்ட செயற்பாடுகளில் பிரச்சினை எதுவும் இல்லை. தேசிய மட்டத்திலேயே சில பிரச்சினைகள் உள்ளன. அரசாங்கம் மாவையும் பருப்பையும் அரிசியையும் அனுப்புகின்றது. எனினும்இ அகதி முகாம்களில் பல குழந்தைகளும் தாய்மார்களும் அவர்களுக்கான தேவை வேறு விதமானது. அரசாங்கத்தின் அமைப்பு முறை மக்களின் தேவைகளை நிறைவேற்றும் விதத்தில் செயற்பட முடியாமல் திணறுகின்றது. எங்களது வாகனங்கள் போக முடியாமல் உள்ளன. இராணுவ வாகனங்கள் தடுத்து நிறுத்துகின்றன. அரச கட்டுப்பாட்டுப் பகுதிகளில் விடுதலைப் புலிகளுடன் நாங்கள் இணைந்து பணியாற்றி வருகின்றோம். இயற்கை அனர்த்தம் நிகழ்ந்த நாள் தொடக்கம் நாங்கள் இரண்டு பகுதிகளிலும் முக்கிய கடமைகளை ஆற்றி வந்தோம். எமக்கு நிறைய ஒத்துழைப்பு கிடைத்தது. எனினும்இ கடந்த சில தினங்களாக அரச கட்டுப்பாட்டுப் பகுதியில் சில இடையூறுகள் வந்துள்ளன. இது ஒரு மனிதாபிமான பிரச்சினையாகும். அரசியல் நோக்கில் இதனை பார்க்கக் கூடாது. எங்களுடன் ஒத்துழைக்க வேண்டும். ஏனெனில் நாங்களே பெரும்பாலான பணிகளைச் செய்கிறோம் என 28 ஆம் திகதி சுட்டிக் காட்டியிருந்தோம். 28 ஆம் திகதியே சிறிய சிறிய தடங்கல்கள் வர ஆரம்பித்தன. எனினும்இ கடந்த இரு தினங்களாக எமது பணியை முற்றுமுழுதாக பாதிக்கக்கூடிய செயல்கள் இடம்பெற்றுள்ளன. நாங்கள் ஏனைய அமைப்புகளை பணியாற்ற விடுவதில்லை என சொல்லப்படுகின்றது. இது தவறான கருத்தாகும். நாங்கள் ஏனைய தரப்பினர் எங்களுடன் ஒத்துழைப்பதை வரவேற்கிறோம். வடஇகிழக்கு பகுதிகளில் நிவாரணப் பணிகளை விரைவாகச் செய்யவே இந்த அலுவலகம் கொழும்பில் திறக்கப்பட்டுள்ளது. இயற்கை அனர்த்தம் நிகழ்ந்த ஆரம்ப தருணங்களில் அரசாங்கத் தரப்பாலும் சர்வதேச சமூகத்தாலும் பாதிக்கப்பட்ட இடத்திற்கு வர முடியவில்லை. அவர்களுக்கு பல பிரச்சினைகள் இருந்தன. அரசாங்கத்திற்கு அங்கு செயற்படக் கூடிய கட்டமைப்பு இல்லை. சர்வதேச அமைப்புகள் நிலக் கண்ணி வெடிகள் போன்றவற்றை காரணம் காட்டி அங்கு வரவில்லை. நாங்கள் ஒவ்வொரு நாளும் வேண்டுகோள் விடுத்தோம். எனினும்இ உதவிகள் வரவில்லை. அதற்குப் பிறகுதான் சர்வதேச நிறுவனங்கள் உதவத் தொடங்கின. எங்களுடன் இணைந்தும் நேரடியாகவும் உதவி செய்தன. வடஇகிழக்கில் நாங்கள் மாத்திரம் 8இ000 தொண்டர்களையும் 3இ500 பணியாளர்களையும் இணைத்து பாரிய மனித சக்தியைப் பயன்படுத்தி களத்தில் இறங்கியுள்ளோம். எல்லா இடங்களிலும் எல்லா வகைகளிலும் நாங்கள் பணி புரிகின்றோம். இதனால் நாங்கள் தான் தலைமை தாங்குகின்றோம் என்ற கருத்து காணப்படுகின்றது. உண்மை இதுவல்ல. வடஇகிழக்கில் ஏற்படுத்தப்பட்டுள்ள செயலணிகளுடன் இணைந்தே செயற்படுகின்றோம். இந்தச் செயலணியில் அரச அதிபர்இ வெளிநாட்டுஇ உள்நாட்டு அரச சார்பற்ற அமைப்புகள்இ விடுதலைப் புலிகள் என பலர் இடம்பெற்றுள்ளனர். இந்தச் செயலணியே எங்கு பிரச்சினை இருக்கின்றதுஇ எங்கு தேவை இருக்கின்றது என்பதை தெரிவிக்கின்றது. இதனை அடிப்படையாக வைத்தே நாம் செயற்படுகின்றோம். அரசாங்கம் இயற்கை அனர்த்தத்தினால் இடம்பெயர்ந்த மக்கள் வாழும் முகாம்களை பராமரிக்கும் நிலையில் இல்லை. அதற்கான ஆளணியோஇ நிதி வளமோ அதனிடம் இல்லை. தற்போதே அரசாங்கத்தின் நிதி வருகின்றது. 10 மில்லியன் அனுப்பப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அது எமது ஒரு நாள் செலவிற்கான பணம். உண்மையில் கொஞ்சம் கொஞ்சமாகவே வழங்குகின்றார்கள். நாங்கள் ஒட்டுமொத்த மக்களுக்கு சேவை வழங்குங்கள் என கேட்கிறோம். நாமும் அதனையே செய்கிறோம். நூற்றிற்கு தொண்ணூறு வீதம் புலம்பெயர்ந்த மக்களின் (தமிழர்கள்) உதவியை வைத்தே சமாளிக்கின்றோம். ஆனாலும்இ வடஇகிழக்கில் சிங்களஇ முஸ்லிம் மக்களுக்கும் உதவியுள்ளோம். எங்களுக்கு உள்நோக்கம்இ மறைமுக செயற்திட்டம் எதுவும் இல்லை. நாங்கள் மனிதாபிமான பிரச்சினையை கையாள்கின்றோம். இது ஒரு அவசர நிலைமை. கட்டமைப்பு தடங்கல்களை மறந்து உதவுங்கள்இ செயற்படுங்கள். எமது உணவு வாகனங்களைஇ திருக்கோவில் விசேட அதிரடிப் படையினர் வழிமறித்துஇ பெயர்ப்பலகையை அகற்றிவிட்டு அவர்கள் உணவுப் பொருட்களை எடுத்து விநியோகம் செய்தனர். மட்டக்களப்பில் எமது வாகனம் பலமணி நேரம் தடுத்து வைக்கப்பட்டது. திருகோணமலையில் உணவுப் பொருட்களை விநியோகிக்கச் சென்ற போது நம்மிடம் தருமாறு கேட்டனர். இந்த நடவடிக்கைகளால் மக்களின் தேவைகள் ஒட்டுமொத்தமாக பாதிக்கப்படுகின்றன. உதவிகள் செல்ல முடியாத அளவிற்கு மக்கள் பாதிக்கப்படுகின்றார்கள். அரசாங்கம் எமது பணிகளைச் செய்வதற்கு எமக்கு அனுமதி தந்துள்ளது. அதனைக் காட்டிகூட இடையூறுகள் ஏற்படுத்தப்படுகின்றன. நாங்கள் எங்கள் சமாதான செயலகத்திற்கு கொண்டு போகின்றோம். அது பின்னர் ஒவ்வொரு பிரிவாகப் போய் இறுதியில் அரச அதிபரை தொடர்பு கொண்ட பிறகே தீர்வு கிடைக்கின்றது. ஒவ்வொரு லொறியை அனுப்பும் போதும் இவ்வாறு செயற்பட முடியாது. நிவாரணப் பணிகளை சுதந்திரமாக செய்வதற்கு வழி ஏற்பட வேண்டும். நாங்கள் குறிப்பிட்ட பகுதி அரசாங்க அதிபர் ஊடாகவே செயற்படுகின்றோம். மக்களுக்கு நிறையத் தேவை உள்ளது. மக்களின் தேவைகளை அரசாங்கமும் அரச அதிகாரிகளும் புரிந்து கொள்ளவில்லை. செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற அரச கூட்டத்தில் கிளிநொச்சிஇ முல்லைத்தீவுஇ யாழ்ப்பாணம் போன்ற பகுதிகளில் காணப்படும் சுகாதாரப் பிரச்சினை குறித்தோ இது சம்பந்தமான புள்ளிவிபரங்களோ காணப்படவில்லை. கிளிநொச்சிஇ முல்லைத்தீவு மாவட்ட புள்ளி விபரங்களை அரசால் எடுக்க முடியாது. யாழ்.மாவட்டம் அரச கட்டுப்பாட்டில் உள்ளது. அந்தப் பகுதி புள்ளி விபரங்களைக் கூடவா எடுக்க முடியாது? இதனாலேயே இங்கு அலுவலகத்தை அமைத்தோம். சர்வதேச சமூகத்திடம் இதனைச் சொல்லி உதவிபெற்று எமது மக்களுக்கு விரைவாக உதவுவதே எமது நோக்கம். நாடுகளுடன்இ எமது பகுதிக்கு என்ன உதவி தேவை எனச் சொல்லி நாங்கள் செயற்படுகின்றோம். எங்களுடைய மக்களுக்கு விரைவாக உதவி தேவை. இதனை செய்யக் கூடியவர்கள் நாங்கள் மாத்திரமே. நாங்கள் நிர்வாகங்களை குழப்ப விரும்பவில்லை. வடஇகிழக்கில் இன்னமும் உணவுஇ மருந்து போன்றவற்றிற்கு பிரச்சினை காணப்படுகின்றது. காயப்பட்டவர்களுக்கு மருந்துகள் கூட இல்லை. கொழும்பிலோ வீதி கட்டுவது தொடர்பாகவும் வீடு கட்டுவது தொடர்பாகவும் கதைக்கப்படுகின்றது. சர்வதேச நிறுவனங்கள் எமது வேலைத்திட்டங்களை பார்வையிடுகின்றன. எந்தக் குறையும் சொல்லவில்லை. 90 வீதம் புலம்பெயர்ந்த மக்களிடம் உதவி பெற்றே செயற்படுகின்றோம். நன்றி: தினக்குரல் - anpagam - 01-07-2005 <img src='http://www.thinakural.com/New%20web%20site/web/2005/January/06/moorthy.gif' border='0' alt='user posted image'> - anpagam - 01-07-2005 இப்படியும் துரோகமா? மன்னிக்கவே முடியாது என்கிறார்கள். கனேடிய தமிழர்கள். கனடாவில் பணியாற்றிவரும் தமிழர் புனர்வாழ்வுக்கழகத்தின் மீது கனடா ஊடகங்களினதும் கனேடிய பல்கலாச்சார மக்களினதும் நற்பார்வை விழுந்ததன் பயனாக புனர்வாழ்வுக்கழகத்தை ஒரு இலாப நோக்கற்ற சேவை நிறுவனமாக கனேடிய அரசின் வருமான வரிகள் திணைக்களத்தின்கீழ் பதிவு செய்வதற்காக பல சமுதாய முன்னோடிகளும்ää கல்விமான்களும் சட்டவல்லுனர்களும் ஒன்றுகூhடி நன்முயற்சி செய்துவரும் வேளையில் அம்முயற்சியை சீர்குலைப்பதற்காக மக்களின் வெறுப்பிற்கும் சீற்றத்திற்கும் கடந்த காலங்களில் உள்ளாகியிருந்த இலங்கை அரச கைக்குhலிகளான சட்டவல்லுனர் ஒருவரும் கனடா தமிழ்காங்கிரசில் முக்கியபதவியில் இருக்கும் ஒருவரும் தமிழ்வானொலி இயக்குனர் ஒருவரும் கூhட்டுசேர்ந்து அந்த அங்கீகாரத்தை குழப்பும் முயற்சியில் தீவிரமாக இடுபட்டு வருவதாக கனடிய தமிழ்மக்கள் மத்தியில் பரவலாக பேசப்டபடுகிறது. இவ்வாறு இன நலன்களுக்கு எதிராக செயற்படும் சுயநலவாதிகளுக்கு தமிழர்கள் சரியான பாடம் கற்பிக்க வேண்டும் என்று ஒய்வு பெற்ற பேராசிரியர் ஒருவர் நிதர்சனத்திற்கு தெரிவித்துள்ளார். - anpagam - 01-07-2005 தனது சேவையில் தன்னிறைவுகானும் தமிழர் புனர்வாழ்வுக்கழகம். 06-01-05 வியாழக்கிழமை கனடா தமிழர் புனர்வாழ்வுக்கழகம் ஊடகங்களுக்கு தெரிவித்த தகவலின்படி இதுவரை கொழும்பிலுள்ள தமிழர் புனர்வாழ்வுக்கழக அலுவலகமுhடாக கிளிநொச்சியிலுள்ள புனர்வாழ்வுக்கழக தலைமை அலுவலகத்துக்கு 575000 கனடியடாலர்களை அனுப்பிவைத்திருப்பதாகவும் இந்நிதி வடகிழக்கில் வாழும் அனைத்து மக்களுக்கும் நிவாரண உதவி;க்காக பாவிக்கப்படுமென அறிவித்துள்ளதோடு சுனாமி நிதிக்காக பிற இனமக்கள் பெரிதும் உதவிவருவதாகவும் கனடா புனர்வாழ்வுகழகம் அறிவித்துள்ளது. டிசெம்பர் 20ம் திகதி 60000 டொலர்கள் வெள்ள நிவாரண நிதியாகவும் டிசெம்பர் 31ம் திகதி 275000 டொலர்களும் ஐனவரி 5ம் திகதி 240000 டொலர்களும் அனுப்பப்பட்டதாக தலைவர் திரு.குணநாதன் ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார். தொடர்ந்தும் சுணாமி நிதிதிரட்டலில் பாடசாலை மாணவர்களும் தொண்டர்களும் ஆர்வலர்களும் அயராது ஈடுபட்டு வருவதையும் அவதானிக்கமுடிகிறது. சில ஆலயங்கள் பெருமளவு நிதிப்பங்கை செய்துவருவதும் குறிப்பிடத்தக்கது. இலங்கை அரசு நிவாரண முன்னெடுப்புகளுக்காக இராணுவ அதிகாரிகளை நியமித்திருப்பது மக்கள்மத்தியில் கனடாவில் பெரிதும் விசனத்தை ஏற்ப்படுததியுள்ளது. சுனாமி நிதிக்காக ஐனவரி 11ம் திகதிவரை சகலவளிகளிலும்(புனர்வாழ்வுக்கழகம் உட்பட)நிதிப்பங்களிப்பு செய்தவர்கள் அந்த பற்றுச்சீட்டுக்களை இவ்வருட வருமான வரிப்பத்திரங்களோடு இணைத்துக்கொள்ளலாம் என கனேடிய அரசு அறிவித்திருப்பதாகவும் அறியப்படுகிறது. கனடாவிலிருந்து ஆனந்தன் நன்றி: நிதர்சனம் |