![]() |
|
உண்மையான உதவியளை கொடுங்கோ! - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: தமிழ்க் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=4) +--- Forum: தமிழீழம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=19) +--- Thread: உண்மையான உதவியளை கொடுங்கோ! (/showthread.php?tid=5912) |
உண்மையான உதவியளை கொடுங்கோ! - patiyaatiyaar - 01-07-2005 பாருங்கோ விளையாட்டை. காலம் கடந்த சாமானுகளையும் சில சனம் கட்டி அடிக்குதுஅவலப்படுற சனத்திற்கு உதவுறதெண்டு காட்டி 10 வருசத்திற்கு முந்தியே கெட்டுப்போன மருந்துகளை தமிழீழத்துக்கு அனுப்பியிருக்கினம். கொஞ்ச சாமானுக்கு பயன்பாட்டு அறிவுறுத்தல் ஆங்கிலம் இல்லாத வேற வெளிநாட்டு மொழியில மட்டும்தான் இருக்காம். கிழிஞ்சுபோன எறியவேண்டிய உடுப்புகளையும் கூட. இப்பிடியும் சனம் இன்னும். விவரமாக:- http://edition.cnn.com/2005/WORLD/asiapcf/...sc.tamil.grant/ :oops: - patiyaatiyaar - 01-07-2005 <img src='http://i.a.cnn.net/cnn/2005/WORLD/asiapcf/01/03/otsc.tamil.grant/vstory.lanka.victims.aid.ap.jpg' border='0' alt='user posted image'> - Mathuran - 01-07-2005 என்ன செய்யிறதப்பு உப்புடிதான் நடக்குது சில நெரங்கள்ள. கறுப்பாட்டு மந்தயில் சில வெள்ளாடு. கொட்டுற குப்பய கொண்டுபோய் குடுக்க எப்படிதான் மனம் வருகுதோ. முடிஞ்சா செஇயவேணும் இல்லாட்டி பெசாமல் ஒதுங்கி இருக்கலாம். அதுக்காக உப்படி செய்ய கூடாது. - patiyaatiyaar - 01-07-2005 சில விசயங்கள் வெளிநாட்டுக்காரன் சொன்னாத்தான் சனம் நம்புது. வசதியிருந்தா 01.27 நிமிச படம் இது. பாருங்கோ பிள்ளையள். http://rds.yahoo.com/S=53720272/K=sri+lank...52&f=53746348", - Mathuran - 01-07-2005 அன்பு வணக்கங்கள் பரியாரியார் அப்பு, அப்பு வெளிநாட்டு ஊடகங்கள் சொல்லுறத நம்பாதைங்கோ. வாழப்பழ்த்தில ஊசி ஏத்துற ஆக்கள் பாருங்கோ. எதோ அப்பப்போ அவங்களின் தேவைகள் கருதி தமிழன பற்றி வருகிற தமிழரால் ஏற்கக்கூடிய செய்திகள் எடுத்துப்போட்டு. மற்ற செய்திகள கொண்டு பொய் குப்பய்ல போடவேண்டியதுதான். தமிழ்ன் பார்க்க வேண்டிய தழங்கள் எது தெரியுமோ? (தமிழீழம் சமாதான செயலகம், தமிழ்நெற், தமிழ்நாதம், புதினம், உதயன், யாழ், தினக்குரல், வீரகேசரி, சூரியன், தென்சைட்) இவயள் தரும் செய்திகளயும் கவனத்தோடு ஆராயவேணும். கண்டதையும் பாத்து நீங்களும் குளம்பி மற்றவரையும் குளப்பாதயுங்கோ. நான் தப்பாக ஏதும் சொல்லி இருப்பின், பெரியவர்கள் பெரும்தன்மையோடு மறந்துவிடுங்கள். அன்புடன் விதுரன் - thamizh.nila - 01-08-2005 இத சொல்லுறிங்கள்...இங்க வெளி நாட்டில இருக்கிற சில ஆக்கள் என்ன தான் நினைக்கினமோ தெரியாது? சைக்கிள் துடைக்க கூட முடியாத துணி எல்லாம் இலங்கைக்கு அனுப்ப தருவினம்...சரியான கஞ்ச.... :evil: - john - 01-08-2005 என்ன தம்பி இப்பிடி நடக்கஇல்லையே எண்டு சொல்லுறியளோ தம்பி விதுரன். - john - 01-08-2005 உற்றுப்பாருங்கோ விதுரன் நல்லதையையும் கெட்டதையும். - patiyaatiyaar - 01-08-2005 இஞ்சபாருங்கோ. <img src='http://us.news2.yimg.com/us.yimg.com/p/ap/20050108/capt.xvt10501080954.sri_lanka_quake_tsunami_us_marines_xvt105.jpg' border='0' alt='user posted image'> - kirubans - 01-09-2005 கனபேர் விடுப்புப் பார்க்கிறமாதிரி தெரியுது. இதுகள் விடுப்புப் பார்க்கிறதை விட்டிட்டு மீட்புப்பணியைச் செய்தால் ஏன் வெளிநாட்டு ராணுவம் வருது? |