Welcome, Guest
You have to register before you can post on our site.

Username
  

Password
  





Search Forums

(Advanced Search)

Forum Statistics
» Members: 8,982
» Latest member: lucilegr4
» Forum threads: 9,058
» Forum posts: 83,243

Full Statistics

Online Users
There are currently 1820 online users.
» 0 Member(s) | 1816 Guest(s)
Applebot, Baidu, Bing, Google

Latest Threads
Mrs.Sirimao Bandaranayake
Forum: நகைச்சுவை
Last Post: GeraTep
11-14-2025, 10:46 AM
» Replies: 14
» Views: 3,143
±ôÀÊ ÀÈ¢ì¸Ä¡õ
Forum: நகைச்சுவை
Last Post: SMPXrArgum
10-23-2025, 05:42 AM
» Replies: 27
» Views: 10,125
Farty time
Forum: நகைச்சுவை
Last Post: ㄹㅈㄷㄹㅈ
08-26-2025, 03:48 PM
» Replies: 11
» Views: 5,567
கனவே கலைகிறதே
Forum: பொழுதுபோக்கு
Last Post: KULAKADDAN
04-30-2006, 06:37 PM
» Replies: 0
» Views: 6,266
Karuna Cadres were captur...
Forum: பிறமொழி ஆக்கங்கள்
Last Post: ஜெயதேவன்
04-30-2006, 06:17 PM
» Replies: 4
» Views: 8,559
என்ன நடந்தது யாழிற்கு?
Forum: உங்கள் கருத்துக்கள்
Last Post: ஜெயதேவன்
04-30-2006, 06:03 PM
» Replies: 42
» Views: 30,982
முடியுமானால் முயற்ச்சியுங...
Forum: போட்டிகள்
Last Post: Subiththiran
04-30-2006, 05:00 PM
» Replies: 15
» Views: 14,366
**சுடேக்கு** புதிர் விளைய...
Forum: போட்டிகள்
Last Post: kavithaa
04-30-2006, 04:30 PM
» Replies: 63
» Views: 38,038
புல்மோட்டையில் தாக்குதல்
Forum: செய்திகள் : தமிழீழம்
Last Post: Sriramanan
04-30-2006, 04:10 PM
» Replies: 2
» Views: 7,962
போதனை வேண்டாம்! பு...
Forum: செய்திகள் : தமிழீழம்
Last Post: alika
04-30-2006, 03:13 PM
» Replies: 4
» Views: 6,228

 
  யாழ் இணையம் - 8ஆவது அகவை
Posted by: இளைஞன் - 03-23-2006, 12:55 AM - Forum: களம் பற்றி - No Replies

<span style='color:red'>யாழ் இணையம் - 8ஆவது அகவை

யாழ் கள உறவுகள் அனைவருக்கும் வணக்கங்கள்...

வருகிற 30ம் நாள் மார்ச் மாதம் அன்று யாழ் இணையம் தனது 8 ஆவது அகவையில் காலடி எடுத்து வைக்கிறது. 1999ம் ஆண்டு மார்ச் மாதம் 30ம் திகதி அன்று யாழ் இணையம் தொடங்கப்பட்டது. இன்று அது வளர்ந்து ஒரு பெரும் தளமாக - பல பார்வையாளர்களைக் கொண்ட தளமாக உயர்ந்து நிற்கிறது.

தொழில்நுட்ப வளர்ச்சியின் வேகமான மாற்றங்களுக்கு ஈடுகொடுத்தும், தமிழ் சமூகத்தின் தேவைகளுக்கு முகம்கொடுத்தும் "யாழ் இணையம்" தன்னை வளப்படுத்திக்கொண்டுள்ளது. அந்த வகையில் பல்வேறு முயற்சிகளை யாழ் இணையம் முன்னெடுத்தது: யாழ் முற்றம் இணைய சஞ்சிகை, விம்பகம், மின்னஞ்சல் சேவை, வாழ்த்து அட்டை, ஒலிபரப்பு, ஒளிபரப்பு, கருத்துக்களம், அரட்டை அறை, வலைப்பதிவு என பல்வேறு முயற்சிகளை முன்னெடுத்தது. CGI Script, Javascript, PHP Script, ASP Script என பல்வேறு இணையமொழிகளையும் பரீட்சித்துப் பார்த்தது. பாமினி எழுத்துரு, tscii எழுத்துரு, dynamic எழுத்துரு, Unicode எழுத்துரு என தமிழ் எழுத்துருக்களின் தொழில்நுட்பங்களோடும் கைகோர்த்துக்கொண்டது.

பல்வேறு தரப்பினரையும் தன் வசம் ஈர்த்துக்கொண்டு தனக்கே உரிய தனித்துவத்துடன் யாழ் இணையம் வளர்ச்சி கொண்டது. இணையத்தில் நீண்டு பல காலம் தொடர்கிற/இயங்குகிற இணையத்தளங்களில் யாழ் இணையமும் ஒன்று என்பதை யாராலும் மறுக்க முடியாது. தமிழிலே எழுதி விவாதிக்கக் கூடிய - பலர் பங்குகொள்கிற - பலர் பார்வையிடுகிற - ஈழத் தமிழ் இணையத்தளம் எது என்று கேள்வி எழுப்பினால், யாழ் இணையம் என்கிற பெயரைத் தவிர வேறு ஒரு பெயரை யாரால் கூற முடியும்?

யாழ் கருத்துக்களம்: யாழ் இணையத்தின் முயற்சிகளில் ஒன்று தான் இந்த யாழ் கருத்துக்களம். புலம்பெயர்ந்த மூத்த தலைமுறை, இன்றைய தலைமுறை என கைகோர்க்கிற இடம் இது. எழுத்தாளர்கள், கலைஞர்கள் சங்கமிக்கிற இடமும் இதுதான். மாணவர்கள், தொழில்நுட்பவியலாளர்கள், பல்வேறு துறைசார்ந்தவர்களும் கூடுகிற இடமும் இதுதான். புதியவர்கள் நம்பிக்கையோடு எழுதப் பழகுகிற பயிற்சிக் கூடமும் இதுதான். தமிழில் மூர்க்கமாக விவாதிக்கவும், நட்போடு பழகிடவும், செல்லமாகச் சண்டைகள் போடவும், ஊடல் கொள்ளவும், தேடல் கொள்ளவும், பாடல் போடவும், கவிதை படிக்கவும், தொழில்நுட்ப உதவி கேட்கவும் ஒரு இடம் உண்டென்றால் - அது யாழ் கருத்துக்களம் தான்.

பல நண்பர்களை உள்வாங்கியது யாழ் இணையம். அதேபோல் சிலரின் எதிர்ப்புகளுக்கும் உள்ளானது. சிலநேரங்கள் ஊடுருவல் செய்யப்பட்டு தளம் செயலிழக்கச் செய்யப்பட்டது. இவற்றையெல்லாம் தாண்டி ஒளிர்கிறது இன்றும் உங்கள் முன்.

இணையம் பயன்படுத்துகிற பெரும்பாலான ஈழத்தமிழர்களுக்கு "யாழ் இணையம்" கேள்விப்பட்ட தளமாக இருக்கிறது. இவர்களில் பலருடைய கணினிகளில் தொடக்கப்பக்கமாக உள்ளது. இவர்களில் பலர் ஒவ்வொருநாளும் பலதடவைகள் யாழ் இணையத்தை பார்வையிடுபவர்களாக இருக்கிறார்கள். குறைந்தது ஒரு நாளைக்கு ஒரு தடவையாவது பார்ப்பவர்களும் இவர்களில் உண்டு. பல இணையத்தளங்களது முயற்சிகளுக்கு யாழ் இணையம் தனது பங்களிப்பை தாராளமாகச் செய்துள்ளது. பல தமிழ் ஊடகங்களும் யாழ் இணையத்தை பார்வையிடுகின்றன. அவற்றோடு யாழ் இணையம் ஏதோ ஒரு வகையில் தொடர்புடையாகவும் இருக்கிறது. தாயகத்திலிருந்தும் யாழ் இணையம் பார்வையிடப்படுகிறது.

தமிழீழ விடுதலைப் போராட்டத்துக்கும், தமிழ்த் தேசியத்துக்கும் துணைநிற்பதோடு அதுசார்ந்த கருத்துக்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து வரவேற்கிறது. அந்தவகையில் விடுதலைக்காய் விதையான மாவீரர்க்கும், மக்களுக்கும் தனது வீரவணக்கத்தை தெரிவித்துக் கொள்கிறது.

யாழ் இணையம் என்கிற இந்த மிகச் சிறப்பான இணையத்தளத்தை உருவாக்கி, அதை நெறிப்படுத்தி வருகிறவர் யார்? மோகன் என்கிற ஒரு தனிமனிதன். எந்தவித எதிர்பார்ப்புகளும் இல்லாமல், விளம்பரங்களும் இல்லாமல் - எவருடைய பணஉதவியும் இல்லாமல் - தனது பணத்தை செலவிட்டு இந்தத் தளத்தை நிர்வகிக்கிறார். தனது குடும்பம், வேலை, பிற வேலைகள் என பலவற்றுக்கு மத்தியிலும், நேர நெருக்குவாரங்களுக்கு மத்தியிலும் தொடர்ந்தும் இத்தளத்தை முன்னெடுத்துச் செல்கிறார்.

இன்னும் இன்னும் நிறையவே சொல்லிக் கொண்டே போகலாம். ஆனால் இனி நான் சொல்வதைக் காட்டிலும், யாழ் இணையம் பற்றி ஏனைய கள உறுப்பினர்கள் தமது கருத்துக்களை தெரிவிப்பது சிறப்பாக இருக்கும்.

யாழ் இணையத்தின் 8 அகவையை முன்னிட்டு யாழில் பல சிறப்புத் தலைப்புக்கள் தொடங்கப்படவுள்ளன - போட்டிகள் இடம்பெற உள்ளன. எனவே அனைவரும் பங்குகொள்ளுங்கள்.

<b>தலைப்புகள்:</b>

<b>[size=18]யாழ் இணையத்துக்கு உங்கள் வாழ்த்துக்களைத் தெரிவிக்க</span></b>

<b>யாழ் இணையம் உங்களுக்கு எப்படி அறிமுகமானது?</b>

<b>யாழ் இணையம் - 8ஆவது அகவை - வாழ்த்துக்கவிதைகள்</b>

Print this item

  என் காதலனே!!
Posted by: Thinava - 03-22-2006, 05:46 PM - Forum: கவிதை/பாடல் - Replies (3)

<b>என் காதலனே!!</b>
கவிதை வரைந்தேன் உண்மை மூடி
காதல் கொண்டேன் கண்ணை மூடி
படிக்கச் சென்றேன் பையை மூடி
பட்டம் பெற்றேன் பைத்தியம் என்று

<b>என் காதலனே!!</b>

உன்னையே உலகமென நினைத்தேன் - ஆகையால்
உன்மீது பாசத்தைப் பொழிந்தேன்
உன்னையே வாழ்க்கையையென நினைத்தேன் - ஆகையால்
உன்மீது ஆதரவாக நடந்தேன்

<b>என் காதலனே!! </b>[/b]

காதலிக்கும் போது உன் வயதை மறைத்தாய் - என்னைக்
காண வரும் போது உன் நரையை மறைத்தாய்
கதைக்க வரும்; போது உண்மையை மறைத்தாய் - என்னைக்
காரில் ஏற்றும் போது கண்ணாடியை மறைத்தாய்

<b>என் காதலனே!!</b>

காதல் து}ய்மையானதென்று அடிக்கடி கூறுவாய்
காதல் இனிமையானதென்று அடிக்கடி சொல்வாய்
காதல் சுகமானதென்று அடிக்கடி அறிவாய்
காதல் பலமானதென்று அடிக்கடி விளக்கினாய்

<b>என் காதலனே!!</b>

நீ உள்ளென்று வைத்து வெளியொன்று சொல்வாயென்று நானறியேன்
நீ உண்மையை மறைத்து பொய்யை சொல்வாயென்று நானறியேன்
நீ அன்பு இல்லாமல் என் பணத்திற்காக காதலிப்பாயென்று நானறியேன்
நீ என் அனுமதியில்லாமல் கற்பைப் பறிப்பாயென்று நானறியேன்

<b>என் காதலனே!!</b>

என்னிடம் சுளை சுளையாய் பணம் வேண்டி பறந்து சென்றாய்
உன் கைத்தொலைபேசிக்கு அடிக்கடடிக்க பெண்ணொருத்தி பதில் தந்தால்
காதலனே அப்பாவிப் பெண்ணை என்னைப் போல ஏமாற்றாதே
காதலனே நீ ஏமாற்றினால் கூண்டில் நிற்பாயென உறுதிசெய்கின்றேன் <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->

Print this item

  அறிமுகம்
Posted by: sudaroli - 03-22-2006, 04:35 PM - Forum: அறிமுகம் - Replies (17)

<b>வண்ணத் தமிழ் வணக்கங்களுடன்......உங்கள் தோழி</b>

Print this item

  தமிழகத்தில் தீவிரவாதிகளுக்கு புலிகள் உதவி: ஜெயலலிதா
Posted by: ¾õÀ¢Ô¨¼Â¡ý - 03-22-2006, 03:26 PM - Forum: செய்திகள்: உலகம் - Replies (14)

ஜூலை 12, 2002



தமிழகத்தில் தீவிரவாதிகளுக்கு புலிகள் உதவி: ஜெயலலிதா

சென்னை:

தடை செய்யப்பட்ட விடுதலைப் புலிகள் இயக்கத்தை ஆதரித்து வரும் மதிமுகவை தடை செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என முதல்வர் ஜெயலலிதா கூறியுள்ளார்.


வைகோ மீதான பொடா வழக்கை விசாரிக்க சிறப்பு நீதிமன்றம் அமைக்கப்படும் என்றார். மேலும் தமிழகத்தில் இயங்கி வரும் தமிழ் தீவிரவாத அமைப்புகளுக்கு விடுதலைப் புலிகள் உதவி செய்து வருவதாகவும் ஜெயலலிதா குற்றம் சாட்டினார்.

சென்னையில் நிருபர்களிடம் பேசிய ஜெயலலிதா, வைகோவைக் கைது செய்ததில் அரசியல் காரணங்கள் ஏதும் இலலை. கொடூரமான இயக்கமான விடுதலைப் புலிகளை வைகோ ஆதரித்ததால் தான் கைது செய்யப்பட்டார்.

<b>எனக்கோ அல்லது அதிமுகவுக்கோ மதிமுக ஒரு அரசியல் எதிரியே அல்ல. சட்டமன்றத் தேர்தலில் ஒரு இடத்தில் கூட ஜெயிக்காத கட்சி மதிமுக. சமீபத்திய இடைத் தேர்தலில் அனைத்து இடங்களிலும் டெபாசிட் இழந்த கட்சி அது. அந்தக் கட்சி எப்படி எங்களுக்கு போட்டிக் கட்சியாக முடியும். இதனால், அரசியல் காரணங்களுக்காக வைகோவை நான் கைது செய்ததாகக் கூறுவது தவறு</b>.

சமீபத்தில் நடந்த மதிமுகவின் செயற்குழுக் கூட்டத்தில் கூட இலங்கைத் தமிழர்களுக்காகத் தான் மதிமுகவே இயங்கிக் கொண்டிருக்கிறது. இதற்காகத் தான் மத்திய அரசில் கூட மதிமுக இடம் பெற்றுள்ளது என்று பேசப்பட்டுள்ளது. மேலும் புலிகளக்கு முழு ஆதரவு தரவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

தமிழ்நாடு குறித்தோ, இந்திய நலன் குறித்தோ மதிமுகவுக்குக் கவலையில்லை. இந்தியாவுக்காக எதையும் செய்ய அவர்கள் தயாராக இல்லை. மதிமுகவால் மிக மோசமான விளைவுகள் ஏற்படலாம். அது நாட்டுக்கு நல்லதல்ல. எனவே மதிமுகவை தடை செய்ய அரசு அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கும்.

வைகோ அவராகத் தான் இந்த நிலையை ஏற்படுத்திக் கொண்டார். திருமங்கலம் பொதுக் கூட்டத்தில் அவர் ஏன் அப்படிப் பேசினார்?. அவருக்கு எதிரான அனைத்து ஆவணங்களையும் விரைவில் அமைக்கப்படவுள்ள சிறப்பு நீதிமன்றத்தில் தாக்கல் செய்வோம் என்றார்.

பின்னர் ஜெயலலிதாவிடம் நிருபர்கள் பல கேள்விகளைக் கேட்டனர். அதன் விவரம்:

நிருபர்: வைகோ கைது செய்யப்பட்டதைக் கண்டித்து அறிக்கை வெளியிட்டுள்ள பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் ராமதாஸ், விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன் ஆகியோர் கைது செய்யப்படுவார்களா?

ஜெயலலிதா: அவர்கள் இருவரும் மிக ஜாக்கிரதையாக வார்த்தைகளைத் தேர்வு செய்து அறிக்கை வெளியிட்டுள்ளனர். பொடா சட்டத்தில் சிக்கிவிடாத மாதிரி அறிக்கை விட்டுள்ளார்கள். அதனால், அந்த அறிக்கையை வைத்து கைது செய்ய முடியாது. ஆனால்,வைகோ மாதிரி யார் பேசினாலும் இந்த அரசு இரும்புக் கரம் கொண்டு அடக்கும்.

நிருபர்: வைகோ கைது செய்யப்பட்டது தேவையில்லாதது என பா.ஜ.க. செய்தித் தொடர்பாளர் அருண் ஜேட்லி கூறியுள்ளாரே?

ஜெயலலிதா: அவர் ஒரு மிகச் சிறந்த வழக்கறிஞர். முன்னாள் சட்ட அமைச்சர். ஆனால், அரசியல் நெருக்குதல்கள் காரணமாக அவர் இப்படி பேச வேண்டிய அவசியத்தில் உள்ளார்.

நிருபர்: இந்த விஷயத்தில் மத்திய அரசு ஏதும் எதிர்ப்பு தெரிவித்ததா?

ஜெயலலிதா: வைகோ மீது எடுக்கப்பட இருந்த நடவடிக்கைகள் குறித்து முன்பே உள்துறை அமைச்சர் அத்வானிக்கு விளக்கமாக கடிதம் எழுதிவிட்டேன். திருமங்கலத்தில் வைகோ பேசிய பேச்சின் வீடியோவை அனுப்பி வைத்துவிட்டேன். அந்தக் கடிதமும் வீடியோவும் கிடைத்ததாக அத்வானி எனக்கு பதில் அனுப்பினார். வீடியோவை தனது அமைச்சக அதிகாரிகளிடம் தந்திருப்பதாகக் கூறினார்.

நிருபர்: வைகோவைக் கைது செய்ய மத்திய அரசு உங்களுக்கு போதிய அளவு ஒத்துழைத்ததா?

ஜெயலலிதா: மத்திய அரசின் உதவியை நாங்கள் கேட்கவில்லை.

நிருபர்: தமிழகத்தில் புலிகள் எந்த வன்முறையிலும் ஈடுபடவில்லை என்று வைகோ கூறியுள்ளாரே?

ஜெயலலிதா: <b>இது மிகத் தவறான வாதம். புலிகளுக்கும் தமிழகத்தில் இயங்கி வரும் தமிழ் தேசிய விடுதலை அமைப்பு, தமிழ் தேசிய எழுச்சிப் படை, நக்சல் அமைப்பான மக்கள் போர்ப் படை ஆகியவற்றும் இடையே உள்ள தொடர்பு நிரூபிக்கப்பட்டுள்ளது. தமிழ் தேசிய விடுதலை அமைப்பு, தமிழ் தேசிய எழுச்சிப் படை போன்ற செத்துப் போன இயக்கங்களுக்கு புலிகளின் உதவி தான் மீண்டும் உயிர் தந்திருக்கிறது.

சமீபத்தில் இலங்கைப் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கேயை நான் சந்தித்தபோது கூட புலிகள் விஷயத்தில் மிகவும் ஜாக்கிரதையாக இருக்குமாறு எச்சரித்தேன். கொடுத்த வாக்குறுதியை மீறுவதில் புலிகளை மிச்ச ஆள் கிடையாது என்றார் ஜெயலலிதா.
</b>



[b]<span style='font-size:30pt;line-height:100%'>þÅ÷ ¿øÄÅ÷ ±ýÚ «Å÷ ¦º¡ø¸¢È¡÷ </span>








!

Print this item

  துரியோதனன் கதிதான் ஜெ.க்கு ஏற்படும்&quot;: வைகோ ஆவேசம்
Posted by: ¾õÀ¢Ô¨¼Â¡ý - 03-22-2006, 02:49 PM - Forum: செய்திகள்: உலகம் - Replies (15)

துரியோதனன் கதிதான் ஜெ.க்கு ஏற்படும்": வைகோ ஆவேசம்

நாகப்பட்டினம்:

மதிமுகவின் கொள்கை பரப்புச் செயலாளரான நாஞ்சில் சம்பத்தின் வீடு இடிக்கப்பட்டதற்கு அக்கட்சியின் பொதுச் செயலாளரான வைகோ கடும் கண்டனம் தெரிவித்தார்.


மயிலாடுதுறையில் கடந்த 1984ல் ஸ்ரீவில்லிபுத்துõர் முன்னாள் எம்.எல்.ஏ. தாமரைக்கனி உள்ளிட்ட அதிமுகவினர் தாக்கப்பட்டது தொடர்பான வழக்கு தொடர்பாக நாகப்பட்டினம் நீதிமன்றத்தில் வைகோ நேற்று ஆஜர்படுத்தப்பட்டார்.

இவ்வழக்கில் தொடர்புடைய அனைவரும் வரும் 28ம் தேதி மீண்டும் ஆஜராகும்படி உத்தரவிட்ட நீதிபதி மீனாட்சி சுந்தரம் வழக்கை ஒத்திவைத்தார். இதன்பின் நீதிமன்றத்தை விட்டு வெளியே வந்த வைகோ நிருபர்களிடம் பேசுகையில்,

ஆக்கிரமிப்புகளை அகற்றுகிறோம் என்ற பெயரில் பண்பாடு மிக்க நாஞ்சில் சம்பத்தின் குடும்பத்தினர் கதறக் கதற இரக்கமின்றி அவருடைய வீட்டை இடித்து மண்மேடாக்கியுள்ளது தமிழக அரசு. வீட்டிலிருந்த பொருட்களைக் கூட எடுக்க விடவில்லை.

இப்படி ஆக்கிரமிப்பு என்று கூறும் ஜெயலலிதாதான் கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள அரசு சொத்துக்களை அடிமாட்டு விலைக்கு வாங்கி, பகல் கொள்ளையடித்தார். நீதிமன்றத்திலேயும் அந்தக் குற்றம் நிரூபணமாகிவிட்டது.

ஆனால் தற்போது சங்கடத்தில் சிக்கிக் கொண்டதைத் தொடர்ந்து கொள்ளையடித்த பொருட்களை மீண்டும் அரசிடமே ஒப்படைக்கிறோம் என்று கூறுகிறார் ஜெயலலிதா.

<b>சிறைக்குள் இருக்க வேண்டியவர்கள் எல்லாம் ஆட்சிப் பீடத்தில் அமர்ந்திருக்கும் கொடுமையை தமிழகம் பார்த்துக் கொண்டிருக்கிறது.

மகாபாரதத்தில் அரக்கு மாளிகைக்குத் தீ வைத்த துரியோதனனுக்கு ஏற்பட்ட கதிதான் ஜெயலலிதாவுக்கு ஏற்படும்</b>.
தமிழக அரசின் அலட்சியப் போக்கு காரணமாகத்தான் காவிரி டெல்டா விவசாயிகள் அல்லல் பட்டு வருகின்றனர். காவிரி விவகாரம் தொடர்பாக வரும் 9ம் தேதி கம்யூனிஸ்ட் கட்சிகள் நடத்தும் பந்த் போராட்டத்தில் மதிமுகவும் கலந்து கொள்ளும்.

எதிர்க் கட்சிகளை ஒடுக்க நினைத்து பாசிஸ வெறி பிடித்து ஆடுகிறது ஜெயலலிதா அரசு என்று வைகோ ஆவேசத்துடன் கூறினார்.

மதிமுக கண்டன அறிக்கை:

ஆக்கிரமிப்புகளை அகற்றுவதாக கூறி நாஞ்சில் சம்பத்தின் வீடு இடிக்கப்பட்டதற்கு அக்கட்சி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

நாஞ்சில் சம்பத்தின் வீடு நாகர்கோவில் அருகே உள்ள மனகாவிளை என்ற இடத்தில் உள்ளது. சமீபத்தில் இங்கு ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன. அப்போது நாஞ்சில் சம்பத்தின் வீடும் இடித்துத் தள்ளப்பட்டது.

போலீஸார் வேண்டும் என்றே நாஞ்சில் சம்பத்தின் வீட்டை இடித்துத் தள்ளியுள்ளதாக மதிமு¬க அவைத் தலைவர் எல். கணேசன் குற்றம் சாட்டியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

மதிமுக பொதுச் செயலாளர் வைகோ பொடா சட்டத்தின் கீழ் அநியாயமாக கைது செய்யப்பட்டுள்ளதை கண்டித்து கையெழுத்து இயக்கம் நடத்தி வருகிறோம்.

இதில் நாஞ்சில் சம்பத் முனைப்புடன் செயல்பட்டு வருகிறார். இதனால்தான் அதிமுகவினரும், ஆட்சியாளர்களும் அவர் மீது காட்டம் கொண்டுள்ளனர்.

இந்த நிலையில் விதி¬றைப்படி கட்டப்பட்டிருந்த நாஞ்சில் சம்பத்தின் வீட்டை, ஆக்கிரமித்து கட்டியுள்ளதாக கூறி அதிகாரிகள் இடித்துத் தரைமட்டமாக்கியுள்ளனர். இது அரசியல் ரீதியான பழி வாங்கும் செயலாகும்.

ஜெயலலிதா ஆட்சிக்கும், ஜனநாயகத்திற்கும் சம்பந்தமே இல்லை என்பதையே இது காட்டுகிறது என்று கூறியுள்ளார் எல்.கணேசன்.


¿ýÈ¢-¾ðоÁ¢ú- ƒÉÅâ 8 /2003
<b>
±ýÉ¡ò¨¾ ¦º¡øÅÐí¸ !</b>

Print this item

  வைகோவுக்காக நாடாளுமன்றத்தில் திமுக குரல் தர வேண்டும்: மதிமுக
Posted by: ¾õÀ¢Ô¨¼Â¡ý - 03-22-2006, 02:44 PM - Forum: செய்திகள்: உலகம் - Replies (15)

வைகோவுக்காக நாடாளுமன்றத்தில் திமுக குரல் தர வேண்டும்: மதிமுக

சென்னை:

மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கைதைக் கண்டித்து திமுக எம்.பிக்கள் நாடாளுமன்றத்தில் பிரச்சினை எழுப்புவார்கள் என்று மதிமுக அவைத் தலைவரான எல். கணேசன் நம்பிக்கை தெரிவித்தார்.


வைகோவை பொடா சட்டத்தின் கீழ் கைது செய்ததைக் கண்டித்து மதிமுக சார்பில் சென்னையில் இன்று பேரணி நடத்தப்பட்டது.

கிண்டி கத்திப்பாரா சந்திப்பில் துவங்கிய இந்தப் பேரணி மாலையில் பூந்தமல்லியில் முடிவடைகிறது. அங்கு கண்டனப் பொதுக்கூட்டம் நடக்கிறது. பொதுக்கூட்டத்தில், எல். கணேசன், மத்திய அமைச்சர்கள் கண்ணப்பன், செஞ்சி ராமச்சந்திரன் உள்ளிட்டோர் பேசுகிறார்கள்.

முன்னதாக பேரணியைத் துவக்கி வைத்த பிறகு நிருபர்களிடம் கணேசன் பேசுகையில்,

வைகோ விவகாரம் குறித்து மதிமுக சார்பில் நாடாளுமன்றத்தில் பேசுவதற்கு கிருஷ்ணன் எம்.பி மட்டுமே உள்ளார். மற்ற இருவரும் அமைச்சர்களாக உள்ளதால் அவர்களால் பேச முடியாது.

திமுகவே கூட இந்தப் பிரச்சினை குறித்து நாடாளுமன்றத்தில் விவாதம் நடத்தும். பொடா சட்டத்தை திமுகவைச் சேர்ந்த அமைச்சர் முரசொலி மாறன் கடுமையாக எதிர்த்து வந்தார் என்பதை மறந்து விடக் கூடாது என்றார் கணேசன்.


¿ýÈ¢-¾ðоÁ¢ú- ¿ÅõÀ÷21/2002


<!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

Print this item

  ஜெயலலிதா - வைகோ கும்பலை தூங்கவிடாமல் செய்யும் சர்வே.....
Posted by: Luckyluke - 03-22-2006, 12:18 PM - Forum: செய்திகள்: உலகம் - Replies (44)

உளவுத்துறை எடுத்த சர்வேயில் அதிமுக படுதோல்வி அடையும் என ரிசல்ட் வந்ததை கண்டு எரிச்சல் அடைந்த ஜெ. தனியார் நிறுவனம் மூலம் ஒரு சர்வே எடுத்திருக்கிறார்....

இந்த சர்வே தமிழக முதல்வர் கேட்டுக்கொண்டதன் படி இந்தியாவின் நெ. 2 சர்வே நிறுவனத்தால் செய்யப்பட்ட சர்வே.... தமிழகத்தின் எல்லா மாவட்டங்களிலுமே திமுக கூட்டணி முன்னிலையில் இருப்பதாக வந்த சர்வே ரிசல்ட்டால் ஜெ. வெறுத்துப் போயிருக்கிறார்......

உளவுத்துறை கொடுத்த ரிசல்ட்டும், இந்த தனியார் நிறுவனம் கொடுத்த ரிசல்ட்டும் துல்லியமாக இருக்கிறதாம்.....

<img src='http://img107.imageshack.us/img107/1506/survey012aa.jpg' border='0' alt='user posted image'>

<img src='http://img148.imageshack.us/img148/5813/survey028lc.jpg' border='0' alt='user posted image'>

Print this item

  தாய்லாந்தில் இந்துக் கோவில் சிலையை
Posted by: aathipan - 03-22-2006, 12:02 PM - Forum: செய்திகள்: உலகம் - No Replies

தாய்லாந்தில்
இந்துக் கோவில் சிலையை சேதப்படுத்தியவர் அடித்துக் கொலை


பாங்காக், மார்ச்.22-

தாய்லாந்து நாட்டுத் தலைநகர் பாங்காக்கில் இந்து மதக் கோவில் ஒன்று உள்ளது. இறவான் கோவில் என்ற இந்த வழிபாட்டுத் தலத்தில் 50 ஆண்டு பழமையான பிரம்மதேவனின் சிலை உள்ளது. இந்தக் கோவிலுக்கு பல்வேறு மதத்தினரும் சென்று வழிபடுவது வழக்கம்.

இந்தக் கோவிலுக்குள் நள்ளிரவு ஒரு மணிக்கு 27 வயது தனகோர்ன் பக்டீபோல் என்ற முஸ்லிம் வாலிபர் நுழைந்தார். அவர் தன் கையில் வைத்து இருந்த சுத்தியலால், சிலையை உடைத்து சேதப்படுத்தினார்.

இதைப் பார்த்த சாலையோர வியாபாரி ஒருவர் சத்தம் போட்டு அருகில் தூங்கியவர்களை எழுப்பினார். அவர்கள் அந்த வாலிபரை அடித்துக் கொன்றனர். இது தொடர்பாக 2 சுத்திகரிப்பு தொழிலாளர்கள் கைது செய்யப்பட்டனர்.

அநëத வாலிபரின் தந்தை சயான் கூறுகையில், என் மகன் ஒரு மனநோயாளி. பல ஆண்டுகள் மனநோய் மருத்துவமனையில் வைக்கப்பட்டு இருந்தான். சம்பவ நாள் அன்று அவன் நிலை மோசமானது. அவன் இரவு வீட்டை விட்டு ஓடிப் போய் விட்டான் என்று கூறினார்.

கோவில் சிலை சேதப்படுத்தப்பட்டது குறித்து பிரதமர் தக்சின் சினாவத்ரா அதிர்ச்சி தெரிவித்து உள்ளார்.

<img src='http://www.dailythanthi.com/images/news/20060322/for.jpg' border='0' alt='user posted image'>

Print this item

  கலைஞரை டென்ஷன் படுத்திய குமுதம் தேர்தல் கணிப்பு
Posted by: Birundan - 03-22-2006, 11:28 AM - Forum: செய்திகள்: உலகம் - No Replies

குமுதம் தேர்தல் கணிப்பு - முதல் ரவுண்ட் - Wednesday, March 22, 2006



கலைஞரை டென்ஷன் படுத்திய குமுதம் தேர்தல் கணிப்பு

இது சட்டமன்றத் தேர்தல் நேரம். முதல் கட்டமாக காஞ்சிபுரம், விழுப்புரம், கடலூர் மாவட்டங்களில் சாம்பிளுக்காக சில முக்கியமான தொகுதிகளில் குமுதம் டீம் சர்வே நடத்தியது. மாதிரி வாக்குச் சீட்டில் வாக்காளர்கள் முன் நாம் வைத்த கேள்வி, யாருக்கு உங்கள் ஓட்டு? அ.தி.மு.க. கூட்டணி தி.மு.க. கூட்டணி விஜயகாந்தின் தே.மு.தி.க. கட்சி மற்றவர்கள் இப்படி ஒரே ஒரு கேள்விதான். பதிலைக் கட்டத்துக்குள் சிம்பிளாக டிக் அடித்தால் போதும்.

கடந்த பாராளுமன்றத் தேர்தல் சர்வேயில், தி.மு.க. கூட்டணிக்கு பெரும்பான்மை வாக்களித்த மக்கள், இந்தமுறை சர்வேயின் முதல் ரவுண்டில் அ.தி.மு.க. கூட்டணியை முன்னிறுத்துகிறார்கள். சென்ற வருட ஜூலை மாத கருத்துக்கணிப்புக்கும் இப்போதைய கருத்துக் கணிப்புக்கும் இடைப்பட்ட காலத்தில் மக்களின் மனது நிறையவே மாறியிருப்பது தெரிகிறது. இதோ, சர்வே டீமின் நேரடி அனுபவங்கள்.

காஞ்சிபுரம் மாவட்டம்

சென்னையிலிருந்து கிளம்பிய டீம் முதலில் நுழைந்த மாவட்டம் காஞ்சிபுரம் தொகுதி. ராமானுஜர் அவதரித்த தலமான ஸ்ரீபெரும்புதூர். இப்போதைய எம்.எல்.ஏ., காங்கிரஸைச் சேர்ந்த யசோதா.

கடந்த சர்வேயில் காய்ந்து போயிருந்த தொகுதியில் இப்போது எங்கும் பசுமை !‘தண்ணீர் பிரச்னை இருக்கா?’ என்று கேட்டால், ‘‘இல்லீங்க!... ஆனா டிரைனேஜ் பிரச்னை இருக்கு. அஞ்சு வருஷத்துல கிட்டத்தட்ட நூறு பெட்டிஷன் போட்டாச்சு. எம்.எல்.ஏ. வையும் பார்த்தாச்சு. எதுவும் வேலைக்கு ஆகலே...’’ என்று ஆதங்கத்துடன் கூறினார், பத்தாவது வார்டு சுயேச்சை உறுப்பினர் அருள்ராஜ்.

குண்ணம் கிராமத்தில் வீடு வீடாகச் சென்று சர்வே நடத்தியபோது, நமக்கு ஆச்சரியம்! நூற்றுக்கணக்கான வீடுகளில் ஆரி என்கிற எம்ப்ராய்டரி வேலையை மக்கள் உற்சாகத்துடன் செய்து வருகிறார்கள். ‘அம்மா புண்ணியத்தில் குறையன்றும் இல்லை’’ என்கிறார்கள்.

அடுத்த தொகுதி உத்திரமேரூர். எம்.எல்.ஏ. ஜவுளித்துறை அமைச்சர் சோமசுந்தரம்.

5 கோடி செலவில் அய்யம்பேட்டை _ முத்தியால்பேட்டை கூட்டுக் குடிநீர்த் திட்டம், உத்திரமேரூலிருந்து 4 கோடி செலவில் செய்யாறு குடிநீர்த் திட்டம் என்று சோமசுந்தரம் சில வளர்ச்சித் திட்டங்களை நிறைவேற்றியிருந்தபோதும், தொகுதியில் குறைகளும் உண்டு. தென்னேரி பகுதியிலுள்ளவர்கள் தண்டுக்கரை தரைப்பாலம் கேட்டு முப்பது வருடமாகப் போராடியும் நோ ரெஸ்பான்ஸ் என்கிறார்கள்.

உத்திரமேரூரில் வாக்களித்த சீனிவாசன் என்பவர் கூறும்போது, ‘‘Êதொகுதியில் வீரராகவ நூற்பாலை 1995_ல் மூடப்பட்டது. இதனால், நானூறு தொழிலாளர்கள் வாழ்க்கை கேள்விக் குறியாக நிற்கிறது. இதைத் திறப்பதற்கு எந்த முயற்சியும் எடுக்கப்படவில்லை.’’ என்றார்.

அடுத்த தொகுதி காஞ்சிபுரம். எம்.எல்.ஏ. மைதிலி திருநாவுக்கரசு (அ.தி.மு.க.). இடைத்தேர்தலில் ஜெயித்து வந்தவர். ஒரு வருடத்தில் தொகுதிக்குப் பெரிதாக ஒன்றும் செய்துவிடவில்லை என்ற குறை தொகுதியில் பரவலாகக் காணப்படுகிறது. ஆற்பாக்கம், களக்காட்டூர், குருவிமலை போன்ற பகுதிகளில் சரசரவென்று சர்வே சுறுசுறுப்பாய் நடந்தது.

அடுத்து காஞ்சிபுரம், சின்னகாஞ்சிபுரம் பகுதிகளில் வாக்குகளைச் சேகரித்துக் கொண்டு செங்கல்பட்டு தொகுதிக்குள் நுழைந்தோம். எம்.எல்.ஏ. ஆறுமுகம் (பா.ம.க.).

மகாபலிபுரத்தைச் சேர்ந்த சுந்தர் என்ற இளைஞர், ‘‘நான் தி.மு.க., போன தேர்தல்ல பா.ம.க.வுக்குத்தான் ஓட்டுப்போட்டேன். தொகுதிக்கு எதுவும் செய்யலை. இந்தத் தடவை கேப்டனுக்குத்தான் எங்க வீட்ல எல்லோரும் ஓட்டுப் போடப்போறோம். இந்த ரெண்டு கழகங்களையும் பார்த்து வெறுப்பாயிடுச்சி.... கேப்டன் பேசுறப்போ, எம்.ஜி.ஆர்.கிட்டே இருந்த துணிச்சலைப் பார்க்க முடியுது. அவரு கறுப்பு எம்.ஜி.ஆர்...’’ என்று விஜயகாந்த்தைப் புகழ்ந்து தள்ளினார்.

அடுத்ததாகக் கருத்துக் கணிப்புக் குழு விழுப்புரம் மாவட்டத்தில் நுழைந்தது.

விழுப்புரம் மாவட்டம்

விழுப்புரம் மாவட்டத்தில் முதல் தொகுதி திண்டிவனம். எம்.எல்.ஏ. கல்வி மற்றும் வணிக வரித்துறை அமைச்சர் சி.வி.சண்முகம்.

பண்ருட்டி கந்தர்வக் கோட்டையிலிருந்து 15 கோடி ரூபாய் செலவில் திண்டிவனத்துக்குக் குடிநீர்த் திட்டம், பல ஆண்டுகளாக தூர் வாராமல் இருந்த 1200 வருடம் பழமை வாய்ந்த ராஜாங்குளம் தூர் வாரப்பட்டது, 36 ஆண்டுகளாக ஓடாமல் இருந்த திண்டிவனம் இந்திராணீஸ்வரர் கோயில் தேர் 22 லட்சரூபாய் செலவில் சீரமைக்கப்பட்டு தேரோட்டம் விடப்பட்டது என்றெல்லாம் அமைச்சரின் சாதனைகளாக அ.தி.மு.க.வினர் பட்டியல் வாசிக்கிறார்கள்.

கூட்டேரிப்பட்டு _ டிரங்க் ரோட்டில் அமைந்திருக்கும் முக்கியமான ஊர். அங்கு வாக்கெடுப்பு நடத்திக் கொண்டிருந்த போது, சுமார் 60 வயதுள்ள பாட்டி கண்கலங்கச் சொன்ன வார்த்தைகள்... ‘‘ஐந்நூறு ரூபாய் நோட்டை இதுவரை நான் கண்ணால கூட பார்த்ததில்லே. அம்மா புண்ணியத்தால பார்த்துட்டேன். அந்த மவராசி நல்லா இருக்கணும்...’’ என்றார் நெகிழ்ச்சியாக. திண்டிவனம் தொகுதியை முடித்துக் கொண்டு, தேசிங்கு ராஜனின் ஊரான செஞ்சி தொகுதிக்குப் பறந்தது சர்வே வண்டி.

தொகுதியில் பெரிய தொழிற்சாலைகளோ, வளர்ச்சிப் பணிகளோ எதுவும் நடைபெறவில்லை என்று குமுறுகிறார்கள் மக்கள். முக்கியமாக இவர்களின் ஏக்கம், ஊரில் ஒரு கல்லூரி வேண்டும் என்பதே. எம்.எல்.ஏ. அதி.மு.க.வைச் சேர்ந்த ஏழுமலை. ம.தி.மு.க. தங்களுடன் கூட்டணி சேர்ந்ததால் மிக உற்சாகமாக இருக்கிறார்கள் அ.தி.மு.க.வினர்.

வல்லம், நாட்டார்மங்கலம், சேர்விளாகம், செஞ்சி பகுதிகளில் வாக்கெடுப்பை முடித்துக் கொண்டு, அடுத்து சர்வே டீம் சென்ற தொகுதி _ விழுப்புரம்.

தற்போதைய எம்.எல்.ஏ. பொன்முடி. அமைச்சராக இருந்தபோது, தொகுதியில் நடந்த வளர்ச்சிப் பணிகள் இப்போது இல்லை என்கிறார்கள் மக்கள்.

அடுத்து ரிஷிவந்தியம் தொகுதிக்குப் பயணமானது சர்வே டீம். காங்கிரஸைச் சேர்ந்த சிவராஜ் எம்.எல்.ஏ., இவர் மீது பெரிதாக புகார்களும் இல்லை; பாராட்டுகளும் இல்லை. தொகுதியில் பல பகுதிகளில், இவரைப் பார்க்கவே முடிவதில்லை என்கிறார்கள்... தொகுதியைச் சுற்றி வந்தபோது, மேடு பள்ள ரோடுகள் _ எம்.எல்.ஏ. வராதது இந்தச் சாலைகளில் பயணம் செய்வதைத் தவிர்க்கத்தானோ என்னவோ?

ரிஷிவந்தியம் தொகுதியைச் சுற்றிலும் முன்னேற்றம் அடையாத கிராமங்கள் ஏராளம். அம்மா ப்ளஸ்டூ மாணவிகளுக்கு சைக்கிள் கொடுத்ததை நன்றியுடன் சொல்கிறார்கள்.

கடலூர் மாவட்டம்

பண்ருட்டி தொகுதி. எம்.எல்.ஏ. பா.ம.க.வைச் சேர்ந்த வேல்முருகன்.

லட்சுமிநாராயணபுரம் பகுதியில் வாக்கெடுப்பு நடத்தியபோது, ஒரு தம்பதி. மனைவி அ.தி.மு.க.வுக்கு வாக்களிக்க... கணவர் தி.மு.க.வுக்கு டிக் செய்யப் போனார். ‘‘வாங்கிய நிவாரணப் பணம் செரிமானம் ஆகலே... அதுக்குள்ளே அங்கே போடறியா? அம்மாவுக்குப் போடுய்யா...’’ என்று செல்லமாய் அதட்ட கணவரும் பவ்யமாய் அப்படியே செய்தார்.

அங்கிருந்து அடுத்த தொகுதி நெல்லிக்குப்பம். எம்.எல்.ஏ., அ.தி.மு.க.வைச் சேர்ந்த எம்.சி.சம்பத். மந்திரியாக நியமிக்கப்பட்டு புதிய வீராணம் குடிநீர்த் திட்ட குளறுபடி காரணமாக பதவி பறிக்கப்பட்டவர்.

மந்திரியாக இருந்து நீக்கப்பட்டவர் என்பதால், மக்களிடம் எம்.எல்.ஏ.வுக்கு ஒரு பேட் இமேஜ்.

கடலூர் எம்.எல்.ஏ. இள.புகழேந்தி. இவர் மீது எந்தப் புகாரும் இல்லை. அதே நேரம் சுறுசுறுப்பு போதாது என்கிறார்கள். கடலூர் பழைய நகரம், மஞ்சக்குப்பம் பகுதிகளில் கருத்துக்கணிப்பு நடத்திவிட்டு, அங்கிருந்து தேவனாம்பட்டினம் சென்றோம். சுனாமி பாதிக்கப்பட்ட சுவடுகளே தெரியாத அளவுக்கு மீண்டிருக்கிறது ஊர். சபாஷ்!

குறிஞ்சிப்பாடி தொகுதியின் எம்.எல்.ஏ. முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம், தி.மு.க. மாவட்டச் செயலாளர்.

பன்னீர்செல்வம் அமைச்சராக இருந்த போது, தொகுதிக்கு இவர் செய்த பணிகள்தான் கடந்த தேர்தலில் இவரைக் காப்பாற்றியது எனலாம். விஜயகாந்த் கட்சி தி.மு.க. வாக்குகளைப் பிரிப்பதால், தேர்தலில் தி.மு.க. போராடவே வேண்டியிருக்கும்.

விருத்தாசலம் தொகுதியின் எம்.எல்.ஏ. டாக்டர் கோவிந்தசாமி. டாக்டர் ராமதாஸின் நம்பிக்கைக்குரியவர். தொகுதி மக்களின் பெரிய பிரச்னை மணிமுத்தாறு பாலம். பாலம் இருந்தபோது, பொதுப்பணித்துறை அதிகாரிகள் அதைச் சரியாகப் பராமரிக்கவில்லை. பாலம் இடிந்த பிறகோ, இரண்டாண்டுகளுக்கு மேலாகியும் புதிய பாலம் கட்ட அவசரம் காட்டப்படவில்லை என்று புலம்புகிறார்கள்.

அடுத்து புவனகிரி தொகுதிக்குள் நுழைந்தோம். எம்.எல்.ஏ. அருள். சுயேச்சையாக வேட்புமனு தாக்கல் செய்தவர், இந்தத் தொகுதியில் ஜெயலலிதாவின் வேட்புமனு நிராகரிக்கப்பட்டபோது, அ.தி.மு.க.வால் ஆதரிக்கப்பட்டு ஜெயித்தவர்.

வளையமாதேவி, எறும்பூர், சேத்தியா தோப்பு பகுதிகளில் நமது சர்வே தொடர்ந்த போது, மழையால் கடுமையாகப் பாதிக்கப்பட்ட இந்தப் பகுதிகளில் வெள்ள நிவாரண உதவித் தொகை உடனடியாக வழங்கப்பட்டதாகக் கூறினார்கள் மக்கள்.

அடுத்து சிதம்பரம்.... தற்போதைய எம்.எல்.ஏ., தி.மு.க.வைச் சேர்ந்த சரவணன். கீரப்பாளையம், அண்ணாமலை நகர், கண்ணங்குடி போன்ற பகுதிகளில் வாக்கெடுப்பை முடித்துக் கொண்டு, கீழ்நத்தம் என்ற கிராமத்துக்குச் சென்றோம். பஸ் ஸ்டாப்பில் பஸ்ஸ§க்குள்ளேயும் நம் சர்வே நடந்தது.

ஒரு பெரியவர் கூறும்போது, ‘‘ஜெயிச்சவர்தான், அதுக்கப்புறம் எங்க ஊர்ப்பக்கம் எம்.எல்.ஏ. வரவேயில்லீங்க. நீங்க வந்தீங்களே ரோடு, அதுல மனுஷங்க வர முடியுமா? இந்த ஊர்ல 750 ஓட்டு இருக்கு. எல்லாம் ஜெயலலிதாம்மாவுக்குத்தான். வெள்ளத்துல எங்க பயிர்லாம் முழுகினப்போ அவங்க கொடுத்த இழப்பீட்டுத் தொகை கரெக்ட் டைமுக்கு வந்துச்சி. அப்புறம், மகளிர் சுய உதவிக்குழு இங்க ரொம்ப ஸ்ட்ராங். ஆறு குழு இருக்கு... ஒவ்வொண்ணுலேயும் இருபது பேர். கணக்குப் போட்டுக்குங்க...’’ என்ற பெரிசு, பேருந்து கிளம்பவே எகிறிப் பாய்ந்து ஃபுட்போர்டில் தொங்கினார். பார்த்து.... பெரீசு!

சுருக்கமாகச் சொன்னால், இந்த சர்வேயில் ஆட்சியின் சாதனைகள், வேதனைகள், வளர்ச்சித் திட்டங்கள், தற்போதைய எம்.எல்.ஏ.க்களின் சாதக, பாதகங்கள் என்று எதையும் மக்கள் கணக்கில் எடுத்துக் கொள்ளவில்லை. ‘அம்மா வெள்ள நிவாரணம் கொடுத்தாங்க... புள்ளைக்கு சைக்கிள் கொடுத்தாங்க.... பயிர் இழப்பீடு கொடுத்தாங்க...’ என்ற நன்றியும் நெகிழ்ச்சியும் கலந்த பாமரக் குரல்களைப் பலமாகக் கேட்க முடிந்தது.

கடந்த ஐந்தாண்டு ஆட்சிச் சாதனைக்காக அல்ல _ கடந்த ஒரே ஓர் ஆண்டு அணுகுமுறைக்காக நமது கருத்துக் கணிப்பில் கட்சி, ஜாதிகளை மறந்து மக்கள் ஜெயலலிதாவுக்கு வாக்களித்திருக்கிறார்கள் என்பதே நிஜம்!

இந்தக் கருத்துக் கணிப்பில் நீங்கள் கவனித்திருப்பீர்கள். சில தொகுதிகளில் வெற்றி வித்தியாசம் மிகக் குறைவாகவே இருக்கிறது. தி.மு.க.வின் வேட்பாளர் தேர்வு, பிரச்சார யுக்திகள் ஒருவேளை இந்த வித்தியாசத்தை மாற்றலாம்.

இன்னொரு விஷயம். ஜூலை மாத கருத்துக் கணிப்புகளில் கிடைத்ததை விட இந்த மாவட்டங்களில் விஜயகாந்துக்கு அதிக வாக்குகள் கிடைத்திருக்கின்றன. இந்த வாக்குகள் தி.மு.க. கூட்டணியிலிருந்துதான் பிரிந்திருக்கின்றன. எனவே இந்தத் தேர்தலில் விஜயகாந்தின் ஓட்டுப் பிரிப்பு ஒரு முக்கிய சக்தியாக இருக்கப் போகிறது.

நாகை, தஞ்சை, திருவாரூர், திருச்சி. மாவட்ட மக்களின் நாடித் துடிப்பென்ன? அடுத்த வாரம்...

‘குமுதம்’ சர்வே முடிவுகள் குறித்து
அமைச்சர் சோமசுந்தரத்திடம் கேட்டோம்.

‘‘உழவர் பாதுகாப்பு திட்டத்தில் விவசாயிகள் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள். நெசவாளர்களுக்கு ஆண்டு முழுக்க வேலை வாய்ப்பு ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறார்கள். விவசாயி, நெசவாளர், மீனவர், அரசு ஊழியர்கள், பள்ளி மாணவ மாணவிகள். இப்படி அனைவருக்கும் அம்மா வாரி வழங்கி இருக்கிறார்கள். இதுபோன்ற இன்னும் பல காரணங்களால், அம்மாவே தொடர்ந்து முதல்வராக வேண்டும் என்ற எண்ணம் மக்களிடம் வந்துவிட்டதையே குமுதம் கருத்துக் கணிப்பு முடிவுகள் பிரதிபலிக்கிறது!’’

சந்தோஷம் நன்றி!

சில தொகுதிகளில் கணிசமாக வாக்குகள் பெற்றது குறித்து விஜயகாந்திடம் பேசியபோது, ‘‘நடுத்தர, ஏழை, எளிய பாமர மக்கள் என் மீது வைத்திருக்கும் நம்பிக்கைக்கு சந்தோஷம்.... அவங்களுக்கெல்லாம் என் நன்றி! அவங்க என் மேல வச்சிருக்கிற நம்பிக்கையை பொய்யாக்க மாட்டேன். ஏப்ரலில் வெளியிடப் போகும் எங்கள் தேர்தல் அறிக்கையில் ஏழை, எளிய மக்களுக்குப் பல ஆச்சரியங்கள் காத்திருக்கும்...’’ என்றார்.

‘குமுதம்’ சர்வே ரிசல்ட் பற்றி ஜி.கே.மணி (தலைவர், பா.ம.க.)

‘‘எங்கேயும் பா.ம.க.வின் வாக்குகள் குறையவில்லை. கூடுதலாகிதான் இருக்கிறது. முன்பு எங்களுக்கு ஷாதிக் கட்சி என்ற முத்திரை இருந்தது. இப்போது மக்கள் பிரச்னைகளைக் கையிலெடுத்துப் போராடுவதால், மற்ற ஷாதியினரின் ஆதரவும் எங்களுக்கு அதிகரித்துள்ளது.

இன்னும் ரெண்டு மாசத்தில் மாம்பழ சீஸன். இப்போ இன்னும் பூப்பூத்து பிஞ்சே விடலை. அதுக்குள் எவ்வளவு காய்க்கும்னு கணக்குச் சொல்றீங்க. கொஞ்சம் பொறுங்க. தேர்தல் வரட்டும். அப்போ, மாம்பழத்தின் விளைச்சலைப் பார்த்து உங்களுக்கே மலைப்பா இருக்கும்.’’ என்று சிரித்தவாறே கூறினார் மணி.
<img src='http://img238.imageshack.us/img238/9760/pg3a5vx.jpg' border='0' alt='user posted image'>
<img src='http://img238.imageshack.us/img238/2412/pg3c4tf.jpg' border='0' alt='user posted image'>
<img src='http://img74.imageshack.us/img74/5631/pg3e7rj.jpg' border='0' alt='user posted image'>
<img src='http://img74.imageshack.us/img74/7601/pg3f1ad.jpg' border='0' alt='user posted image'>
<img src='http://img74.imageshack.us/img74/8941/pg3g7dq.jpg' border='0' alt='user posted image'>
<img src='http://img238.imageshack.us/img238/8292/pg3i0te.jpg' border='0' alt='user posted image'>
<img src='http://img74.imageshack.us/img74/1345/pg3j5bb.jpg' border='0' alt='user posted image'>
<img src='http://img238.imageshack.us/img238/3806/pg3k3lg.jpg' border='0' alt='user posted image'>
<img src='http://img238.imageshack.us/img238/1083/pg3q2ua.jpg' border='0' alt='user posted image'>
<img src='http://img74.imageshack.us/img74/1047/pg3o5zp.jpg' border='0' alt='user posted image'>
<img src='http://img74.imageshack.us/img74/8906/pg3p9uv.jpg' border='0' alt='user posted image'>

<img src='http://img238.imageshack.us/img238/4043/pg3s3ha.jpg' border='0' alt='user posted image'>
<img src='http://img224.imageshack.us/img224/5699/pg3t3mu.jpg' border='0' alt='user posted image'>
<img src='http://img238.imageshack.us/img238/6629/pg3u2en.jpg' border='0' alt='user posted image'>
<img src='http://img229.imageshack.us/img229/5861/pg3m3wl.jpg' border='0' alt='user posted image'>
<img src='http://img224.imageshack.us/img224/4008/pg3v1fx.jpg' border='0' alt='user posted image'>

நன்றி<குமுதம்

Print this item

  புலிகளும் தமிழீழமும் சர்வதேச அங்கீகாரத்தை நோக்கி நிதானமாக
Posted by: kurukaalapoovan - 03-22-2006, 09:55 AM - Forum: பிறமொழி ஆக்கங்கள் - No Replies

புலிகளும் தமிழீழமும் சர்வதேச அங்கீகாரத்தை நோக்கி நிதானமாக முன்னேறுகிறார்கள்.

http://today.reuters.co.uk/news/newsArticl...&archived=False

Print this item