| Welcome, Guest |
You have to register before you can post on our site.
|
| Forum Statistics |
» Members: 8,982
» Latest member: lucilegr4
» Forum threads: 9,058
» Forum posts: 83,243
Full Statistics
|
| Online Users |
There are currently 1677 online users. » 0 Member(s) | 1673 Guest(s) Applebot, Baidu, Bing, Google
|
| Latest Threads |
Mrs.Sirimao Bandaranayake
Forum: நகைச்சுவை
Last Post: GeraTep
11-14-2025, 10:46 AM
» Replies: 14
» Views: 3,136
|
±ôÀÊ ÀÈ¢ì¸Ä¡õ
Forum: நகைச்சுவை
Last Post: SMPXrArgum
10-23-2025, 05:42 AM
» Replies: 27
» Views: 10,122
|
Farty time
Forum: நகைச்சுவை
Last Post: ㄹㅈㄷㄹㅈ
08-26-2025, 03:48 PM
» Replies: 11
» Views: 5,566
|
கனவே கலைகிறதே
Forum: பொழுதுபோக்கு
Last Post: KULAKADDAN
04-30-2006, 06:37 PM
» Replies: 0
» Views: 6,266
|
Karuna Cadres were captur...
Forum: பிறமொழி ஆக்கங்கள்
Last Post: ஜெயதேவன்
04-30-2006, 06:17 PM
» Replies: 4
» Views: 8,559
|
என்ன நடந்தது யாழிற்கு?
Forum: உங்கள் கருத்துக்கள்
Last Post: ஜெயதேவன்
04-30-2006, 06:03 PM
» Replies: 42
» Views: 30,973
|
முடியுமானால் முயற்ச்சியுங...
Forum: போட்டிகள்
Last Post: Subiththiran
04-30-2006, 05:00 PM
» Replies: 15
» Views: 14,364
|
**சுடேக்கு** புதிர் விளைய...
Forum: போட்டிகள்
Last Post: kavithaa
04-30-2006, 04:30 PM
» Replies: 63
» Views: 38,033
|
புல்மோட்டையில் தாக்குதல்
Forum: செய்திகள் : தமிழீழம்
Last Post: Sriramanan
04-30-2006, 04:10 PM
» Replies: 2
» Views: 7,961
|
போதனை வேண்டாம்! பு...
Forum: செய்திகள் : தமிழீழம்
Last Post: alika
04-30-2006, 03:13 PM
» Replies: 4
» Views: 6,228
|
|
|
| நான் வாழும் சுவிஸ் - அஜீவன் |
|
Posted by: AJeevan - 03-23-2006, 08:08 PM - Forum: புலம்
- Replies (33)
|
 |
<span style='font-size:30pt;line-height:100%'><b>நான் வாழும் சுவிஸ்</b></span>
<span style='color:brown'>- அஜீவன்
<img src='http://photos1.blogger.com/blogger/7006/435/320/swiss.1.1.jpg' border='0' alt='user posted image'>
எதிரிகள் புகா வண்ணம் காவல் தெய்வங்கள் காவல் காத்து நிற்பது போல் நாட்டை சுற்றி நிற்கும் அழகிய அல்ப்ஸ் மலை மட்டுமல்ல மனதின் இனிமைக்காய் இசை எழுப்புவது போல சல சலத்து ஓடி பவனி வரும் ஆறுகளாலும் புடை சூழ்ந்து நின்று ரம்மிய காட்சியாய் எம் மனங்களை கொள்ளை கொள்ளும் குளங்களும் இயற்கை வனமும் நாடு தழுவிய சுத்தமும் நிறைந்து யுத்த மேகமே மூளாமல் சிலிர்த்து காட்சி தரும் நாடு என்று உலகில் ஒன்று உண்டு என்றால் அது சுவிஸ் நாடாகத்தான் இருக்கும்.
நாட்டுப் பற்றுக் கொண்ட இனிய மக்கள் எளிமை போல் நாட்டின் முதுகெலும்பாய் காட்சி தரும் கிராமங்கள். நேரம் தவறாமல் பவனிக்க உதவியாய் இருக்கும் போக்கு வரத்து துறை இப்படி இந் நாட்டின் புகழ் பாடிக் கொண்டே போகலாம்........
இனி நாம் இந் நாட்டைப் பற்றி சிறிது தெரிந்து கொள்ள முயல்வோம்.
<b>மக்கள் தொகை:</b>
மூன்றாம் உலக நாடுகள் போல் அல்லாமல் சுவிஸின் முக்கிய பிரச்சனையாக ஆரம்பத்தில் இருந்து வந்திருப்பது குறைந்த வீதத்திலான குழந்தை பிறப்பேயாகும்.
19ம் நூற்றாண்டுகளில் நாட்டில் ஏற்பட்ட யந்திரமயமாக்கல் கால கட்டங்களில் மக்கள் தொகை அதிகரிப்பை முதன் முதலில் இங்கு பார்க்கக் கூடியதாக இருந்திருக்கிறது.
அதற்கு பின்னர் 1950லிருந்து 1970களுக்கான காலப் பகுதியில் மக்கள் தொகை பெருக்கத்தை காண முடிந்தது.
அதன் பின்னர் முதன் முறையாக 1970களில் மக்கள் தொகை 1/3 க அதிகரித்திருந்தது.
1970 களில் மக்கள் தொகை பெருக்கத்தின் வேகம் 1.5 அளவு அதிகரிக்கத் தொடங்கி 1980 முதல் 1990 காலப்பகுதிகளில் அது 8 விழுக்காடாக உயர்ந்து காணப்பட்டது.
இக் கால கட்ட குடிசன மதிப்பீட்டின் படி 1990 களில்தான் என்றுமேயில்லாத அளவு மக்கள் தொகை அதிகரிப்பை காணக் கூடியதாக இருந்தது.
1980-1990 களில் ஏற்பட்ட வெளிநாட்டவரது அளவு மீறிய வருகையே இந்த மாற்றத்துக்கான காரணமாகயிருந்து.
இதற்கு முன் காலங்களில் பிறப்பின் விழுக்காட்டை விட இறப்பின் விழுக்காடு அதிகரித்து காணப்பட்டது.
1990 களில் ஏற்பட்ட மாற்றமானது இறப்பின் விகிதாசாரத்தை பின் தள்ளிக் கொண்டு போக வழி வகுத்தது.
<b>சுவிஸின் முக்கிய மொழிகள்: </b>
அடிப்படையில் 4 மொழிகள் அடையாளப் படுத்தப்பட்டுள்ளன.
1. ஜேர்மன்
2. பிரென்ஞ்
3. இத்தாலி
4. ரேட்டோ ரொமானிஸ்
இருப்பினும் இம் மொழிகள் ஒரே விதமான வளர்ச்சிக் கோட்டை நோக்கி வளர்ந்ததாக காண முடியவில்லை.
இருப்பினும் சுவிஸ் நாட்டில் பெரும்பாலானோரால் பேசப்படும் மொழி ஜேர்மன் மொழியேயாகும்.
<b>மனம் கவரும் கண் கொள்ளா இயற்கை:</b>
<img src='http://switzerland.isyours.com/images/big/glacier-arnensee.jpg' border='0' alt='user posted image'>
சுவிஸ் நாடு பற்றி ஒரு வார்த்தையில் சொன்னால் மாறுபட்ட இயற்கை குணாம்சம் கொண்ட நாடு எனலாம். வருடம் முழுவதும் பனி பாறைகளால் நிறைந்து நிற்கும் மலைகள்.வற்றாமல் ஒரே மாதிரி சல சலத்து ஓடும் நீரலைகள் கொண்ட ஆறுகள். நகரங்கள் கிராமங்கள் தோறும் பார்வைக்கு மென் தன்மை தரும் குளங்கள். பசுமையோடு காட்சி தரும் வனம். இப்படி அடுக்கிக் கொண்டே போகலாம்.
<b>விஞ்ஞான ரீதியாக:</b>
1. Alps & Pre-Alps (60%)
2. Central Plateaul (30%)
3. Jura (30%)
இருப்பினும் சுவிற்சர்லாந்தின் வலப்புறத்தே இத்தாலிய நீர் ஓடையும் வடக்கே ரெயின் ஆற்றைக் கடந்து கண்ணுக்கு எட்டும் தூரத்தே தெரியும் பிளாக் பொரஸ்ட் காடும் வனாந்தரமும் எல்லைக் கோடுகளாய் காணப்படுகின்றன.
வேறுபட்ட பூகோள வினோதங்களை கொண்ட இந் நாட்டின் மலைகள் ஓடைகள் ஆறுகள் குளங்கள் கிளசியஸ் நிறைந்தே நிற்பது கண் கொள்ளா காட்சிதான்..........
தொடரும்.............. </span>
|
|
|
| கைப்பர் ஜெட்-லண்டனில் இருந்து சிட்னி 2 மணி நேரத்தில். |
|
Posted by: narathar - 03-23-2006, 04:26 PM - Forum: விஞ்ஞானம் - தொழில்நுட்பம்
- Replies (10)
|
 |
கிழே இணைப்பப் பட்டிருக்கும் கட்டுரை கைப்பர் ஜெட் பற்றிய அண்மைய பரிசோதனைகளைச் சொல்கிறது.கைப்பர் ஜெட் என்பது ஒலியின் வேகத்தைவிட ஏழுமுதல் பத்துவரையான வேகத்தில் இயங்கும் விமானங்களைக் குறிக்கும்.இவற்றை உந்தித் தள்ளுவது சுபர்சோனிக் ராம் ஜெட் என்னும் எஞ்சின்.
ராம் ஜெட் என்பது காற்றை உள்வாங்கி அதனை அமுக்கத்திற்கு உள்ளாக்கி, பின்னர் எரியூட்டி விரிவடயவைத்து ,பின்னர் வெளியேற்றியினால் உந்தித் தள்ளும் ஜெட் இயந்திரம்.இதற்கும் இன்றய ஜெட் எஞ்சின்களுக்கும் இருக்கும் அடிப்படை வித்தியாசம் காற்று அழுத்தத்தை உருவாக்குவதற்கு கொம்ப்ரசர் என்னும் சுழலும் பாகம் பாவிக்கப் படுவதில்லை.முன் நோக்கிச் செல்லும் இயந்திரத்தினுள் காற்றானது அறயப்பட்டு அமுக்கத்திற்கு ஆளாகிறது.இதனாலயே அதி கூடிய அழுத்த வித்தியாசம் உருவாக்கப் பட்டு ,அதி வேகமுடய வெளியேற்றத்திற்கு உள்ளாகிறது.இந்த அதி கூடிய வேகமே ,விமானத்தை அதி கூடிய வேகத்தில் உந்தித் தள்ளுகிறது.சுழலும் பாகங்களை உடய இயந்திரத்தினால் இத்தினை கூடிய வேகத்தைப் பெற முடியாது.
சரி இதனால் எமக்கு என்ன பயன் என்றால் வருங் காலத்தில் அதி வேகம் கூடிய இந்த விமானங்களினால் இரண்டு மணித்தியாலங்களில் சிட்னியில் இருந்து லண்டனுக்கு வரலாம்,செயற்கைக் கோள்களை மிகக் குறைந்த விலையில் விண்ணில் ஏவலாம்.அத்தோடு அதிக தூரம் செல்லும் அதி கூடிய வேக முடைய ஏவுகணைகளை வடிவமைக்கலாம்.இவ்வாறான காரணங்களாலயே பல நாடுகளும் இதற்கான ஆராச்சிகளில் ஈடுபட்டு வருகின்றன.
Hypersonic jet ready for launch
Jonathan Fildes
BBC News science and technology reporter
The launch will be the third for the Hyshot consortium
A new jet engine design able to fly seven times the speed of sound is to be test fired over Australia on Friday.
The scramjet engine, known as Hyshot III, has been designed by British defence firm Qinetiq.
If successful, it could pave the way for ultrafast, intercontinental air travel, and substantially cut the cost of putting small payloads into space.
The engine will launch on a rocket owned and operated by the University of Queensland.
It is the first of three test flights planned for this year by the international Hyshot consortium.
The first Hyshot engine was launched in 2001 but the test flight failed when the rocket carrying the engine flew off course.
Simple engines
A supersonic combustion ramjet, or scramjet, is mechanically very simple. It has no moving parts and takes all of the oxygen it needs to burn hydrogen fuel from the air.
This makes it more efficient than conventional rocket engines as they do not need to carry their own oxygen supply, meaning that any vehicle could potentially carry a larger payload.
However scramjets do not begin to work until they reach five times the speed of sound.
You're dealing with extremes of conditions. You've got to expect things to go wrong
Dr Allan Paull, University of Queensland
At this speed the air passing through the engine is compressed and hot enough for ignition to occur. Rapid expansion of the exhaust gases creates the forward thrust.
To reach the critical speed, Hyshot III will be strapped to the front of a conventional rocket and blasted to an altitude of 330km before being allowed to plummet back to Earth.
On its descent the engine is expected to reach a top speed of Mach 7.6 or over 9,000km/ hour.
Making sure the flight happens correctly is incredibly difficult, according to Dr Allan Paull, project leader of the Hyshot programme at the University of Queensland.
See the scramjet experiment in detail
"You are dealing with extremes of conditions. You're working out on the edge and with a lot of the stuff no one has ever tried [it] before," he told the BBC News website. "You've got to expect things to go wrong".
If everything goes to plan, the experiment will begin at a height of 35km. As the engine continues its downward path the fuel in the scramjet is expected to automatically ignite.
The scientists will then have just six seconds to monitor its performance before the £1m engine eventually crashes into the ground.
New design
The scramjet will not provide forward thrust during the flight, necessary if the engine is ever to power a vehicle. But the test will be enough to show that burning starts automatically and to verify trials already done in a wind tunnel.
Nasa's X-43A holds the current speed record
"The wind tunnels operate for milliseconds," Dr Paull explained. "The difficulty is whether or not you can even see the supersonic combustion in this period of time."
Although the Qinetiq engine has never left the ground it is more realistic than previous Hyshot experiments.
It has a more efficient air intake on the front and can operate over a greater range of speeds. It also scoops air into the combustion chamber at a lower temperature, closer to that needed in a commercially useful engine.
If the test flight is successful, it will be followed four days later by the test flight of another Hyshot engine designed by the Japanese Aerospace Exploration Agency (Jaxa). This will be followed in June by the launch of an engine that will fly at Mach 10, designed by the Australian Defence Science and Technology Organisation (DSTO).
Commercial reality
The Hyshot tests will bring the idea of a commercial scramjet one step closer to reality.
In the first instance these would probably be used to launch satellites into low earth orbit but many have speculated that they could also allow passenger airlines to fly between London and Sydney in just 2 hours.
Although this vision maybe many years off, it was given a huge boost when Nasa successfully flew its X-43A plane over the Pacific Ocean in 2004. The unmanned aircraft flew at 10 times the speed of sound, a new world speed record.
The team at the University of Queensland is also currently designing a vehicle that can fly under its own power.
If the plane works, it could be flying over the Australian desert within the next two years
<img src='http://img126.imageshack.us/img126/376/41476224hyperxnasa203b9wo.jpg' border='0' alt='user posted image'>
<img src='http://img226.imageshack.us/img226/3812/41471208scramjetuq2033006bb.jpg' border='0' alt='user posted image'>
<img src='http://img126.imageshack.us/img126/400/41476306hyshottestinf4160am.gif' border='0' alt='user posted image'>
http://news.bbc.co.uk/1/hi/sci/tech/483225...254.stm#graphic
|
|
|
| விஜயகாந் அ.தி.மு.க கூட்டு, தி.மு.க விற்கு வேட்டு. |
|
Posted by: Birundan - 03-23-2006, 03:42 PM - Forum: செய்திகள்: உலகம்
- Replies (45)
|
 |
வேலூர் மாவட்ட பிரசாரத்தில் ஈடுபட்டுள்ள விஜயகாந்த், தனது கூட்டத்துக்கு மக்கள் கூட்டம் வராததால் அப்செட் ஆகியுள்ளார். வழக்கமாக விஜய்காந்த் கூட்டங்களுக்கு மக்கள் கூட்டம் கூடி வந்த நிலையில் சில நாட்களாகவே அதில் பெரிய மாற்றம் ஏற்படத் தொடங்கியுள்ளது. பாமக பெல்ட் எனப்படும் வேலூர் மாவட்டத்தில் 3 நாள் பிரசாரத்தை விஜயகாந்த் புதன்கிழமை காலை தொடங்கினார். முதலில் ஓச்சேரி என்ற இடத்தில் அவர் பேசினார்.
ஆனால் அவருக்கு பெரும் அதிர்ச்சி அளிக்கும் வகையில் அங்கு பெரிய அளவில் கூட்டம் சேரவில்லை. ரசிகர்கள் மட்டுமே அதிக அளவில் திரண்டிருந்தனர். பொது மக்களில் யாரையும் காணவில்லை. இதனால் விஜயகாந்த் அதிர்ச்சி அடைந்துள்ளார். இருந்தாலும் அதை மறைத்துக் கொண்ட அவர் மிக வேகமாக பேசி முடித்து விட்டு அங்கிருந்து கிளம்பிவிட்டார்.
விஜயகாந்த் பேசிக் கொண்டிருக்கையில் அவர் என்ன பேசுகிறார் என்பதை விட அவர் பேசுவதை போட்டோ பிடிப்பதிலேயே பாதிப் பேர் தீவிர கவனம் செலுத்தினர். ஓச்சேரி பிரசாரத்தை முடித்துக் கொண்ட கேப்டன், தொடர்ந்து நெமிலி, அரக்கோணம், சோளிங்கர், கலவை, வாலாஜாபேட்டை, ராணிப்பேட்டை ஆகிய இடங்களில் பிரசாரம் செய்தார்.
நிதிப் பிரச்சனையில் கேப்டன்:
இதற்கிடையே விஜய்காந்தின் கட்சி கடும் நிதிப் பிரச்சனையில் சிக்கியுள்ளதாகக் கூறப்படுகிறது. மதுரையில் மாநாட்டை சில கோடிகள் செலவில் நடத்திய இதுவரை தேர்தல் பிரச்சாரம் உள்ளிட்ட செலவுகளுக்காகவும் சில கோடிகளை இழந்துவிட்டார். இதையடுத்து தேர்தலில் போட்டியிட விரும்பி மனு செய்தவர்களிடமும் மாவட்டச் செயலாளர்களிடமும் தேர்தல் செலவுக்கு பணம் திரட்டிக் கொள்ளுமாறு அவர் கூறியிருப்பதாகத் தெரிகிறது.
கட்சி ஆரம்பித்தது முதல் சில சொத்துக்களையும் விற்றுள்ளார் விஜய்காந்த். மேலும் சில சொத்துக்களையும் விலை பேசி வருவதாக செய்திகள் வருகின்றன.
சினிமா மூலம் இனியும் எந்த அளவுக்கு வருமானம் பார்க்க முடியும் என்பது சந்தேகமாக உள்ள நிலையில், சொத்துபணத்தை விற்க வேண்டுமா என்ற கேள்வி விஜய்காந்த் குடும்பத்தாரின் மனதில் எழுந்துள்ளதாகத் தெரிகிறது.
இதனால் அதிமுக அழைக்கிறதே.. அங்கு போய்விடலாம் என்று விஜய்காந்துக்கு அவர்கள் அட்வைஸ் தந்து வருகின்றனர். இதற்கிடையே விஜய்காந்தின் மனைவி பிரேமலதாவை சசிகலா நேரிலேயே சந்தித்துப் பேசியதாகவும், அப்போது 15 முதல் 18 தொகுதிகள் வரை தர அதிமுக தயார் என்று கூறியதாகவும் தெரிகிறது. ஆனால், வைகோவை விட ஒரு தொகுதியாவது அதிகம் வேண்டும் என கேப்டன் தரப்பு கூறியுள்ளது. ஆனால், 20 தொகுதிகள் வரை தந்தாலே அதிமுக கூட்டணிக்குப் போய்விடுவார் விஜய்காந்த் என்கிறார்கள். அதிமுகவுடன் கூட்டணி இல்லை என்று விஜய்காந்த் தரப்பு மறுத்தாலும் திரைமறைவில் ஏகப்பட்ட விஷயங்கள் நடந்து கொண்டுள்ளன.
நன்றி>தற்ஸ்தமிழ்
|
|
|
| மண்ணைக்கவ்வியது இந்தியா,, |
|
Posted by: Danklas - 03-23-2006, 01:13 PM - Forum: விளையாட்டு
- Replies (11)
|
 |
இந்தியா சென்று சுற்றுப்பயணத்தில் ஈடுபட்டுவரும் அனுபவம் குறைந்த இங்கிலாந்து அணி அனுபவம் நிறைந்த (நினைப்பு) இந்திய அணியை அவர்களின் மண்ணில் வைத்து டெஸ்ட் தொடரை சமன் செய்தது,
முதலாவது ரெஸ்ட் போட்டி வெற்றி தோல்வி இன்றிமுடிவடைந்தது, இரண்டாவது ரெஸ்டில் இந்திய அணி வெற்றிபெற்றது, 3வது இறுதியுமான ரெஸ்ட் போட்டியில் இந்திய அணி 213 என்ற மிகப்பெரும் ஓட்டங்களால் தோல்வி அடைந்தது,
இந்த தோல்விக்கு அணிபயிற்சியாளர் சப்பலின் தவறான கண்ணோட்டமும், இந்திய துடுப்பாட்ட வீரர்களின் மோசமான ஆட்டமும், இங்கிலாந்து பந்துவீச்சாளர்களின் துள்ளியமான பந்துவீச்சுமே காரணம்,
<b>ஆட்ட நிலவரம்..</b>
1வது இன்னிங்க்ஸ்
இங்கிலாந்து 400
இந்தியா 279
2வது இன்னிங்க்ஸ்.
இங்கிலாந்த் 191
இந்தியா 100.
இங்கிலாந்த் 212 ஓட்டங்களால் வெற்றி பெற்றது.
Man of the Match & Series: A Flintoff
இந்தியா தோல்வி அடைந்தது எப்படி
நாணயச்சுழச்சியில் வெற்றி பெற்ற இந்திய அணி, தங்கள் ஆட்டகளத்தின் தன்மை புரியாமல், முதலில் களத்தடுப்பாட்டத்தை தேர்வுசெய்தது, மும்பை ஆட்டகளம் பற்றி கூறவேண்டுமாயின் முதல் 2,3 நாட்களுக்கு துடுப்பாட்டத்துக்கு ஏற்ற களமாகவும், பின் பந்துவீச்சாளர்களுக்கு சாதகமான களமாகவும் இருக்கும், இதை கவனத்தில் எடுக்காத இந்திய பயிற்சியாளரும், அணித்தலைவரும் முதலில் களத்தடுப்பை தேர்வு செய்தது, டெஸ்ட் தொடரை இழப்பதற்கு வழி வகுத்தது, :oops: <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
புதிய, டெஸ்ட் போட்டியில் அனுபமற்ற வீரர்களுடன் களம் இறங்கி இந்தியாவில் வைத்தே அவர்களை திணறடித்து தொடரை சமன் செய்ததும் இல்லாமல், சிறந்த வீரர், சிறந்த தொடர் வீரர் என விருதைபெற்ற இங்கிலாந்து அணிக்கு வாழ்த்துக்கள்... <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
|
|
|
| அரசாங்கத்தின் ஆதரவுடன் கிழக்கில் துணை இராணுவக் குழுக்கள்: நி |
|
Posted by: பிறேம் - 03-23-2006, 11:08 AM - Forum: செய்திகள் : தமிழீழம்
- No Replies
|
 |
சிறிலங்கா அரசாங்கத்தின் ஆதரவுடன் கிழக்கில் துணை இராணுவக் குழுக்கள் இயங்குவதாக அனைத்து வகை இன ஒதுக்கல்கள் மற்றும் ஒடுக்குமுறைகளுக்கு எதிரான சர்வதேச அமைப்பின் தலைவர் நிமல்கா பெர்னாண்டோ குற்றம்சாட்டியுள்ளார்.
இது தொடர்பாக ஊடகம் ஒன்றுக்கு அவர் அளித்துள்ள நேர்காணல்:
கேள்வி: உங்கள் நாட்டில் இன ஒடுக்குமுறை உள்ளதா?
பதில்: ஆமாம். இன ரீதியான ஒடுக்குமுறை உள்ளது. சிங்கள தீவிரவாதிகள் அரசாங்கத்தில் இடம்பெற்றுக் கொண்டு தன்னாட்சிக்கும் சனநாயக உரிமைகளுக்காகவும் பல ஆண்டுகளாக போராடுகிற தமிழர் தலைமைப்பீடத்துக்கு எதிராக பரப்புரைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
கேள்வி: ஒட்டுமொத்தமான நிலையை விளக்க முடியுமா?
பதில்: ஒரு தோல்வியடைந்த நாடு என்பதற்கு மிகச் சிறந்த உதாரணம் சிறிலங்கா. காலனி ஆதிக்கத்துக்குப் பின்னர் பல்லின, பல் கலாச்சார, பல் மத அரசியல் நெறிகளை கடைபிடிக்காத ஒரு நாடு.
கேள்வி: இதனது விளைவு?
பதில்: இனப் பிரச்சனையால் இரு தசாப்தகாலத்துக்கும் மேலான யுத்தத்தை எதிர்கொள்ள வேண்டியதானது.
ஆயிரக்கணக்கான மக்கள் உயிரிழந்தனர். காணாமல் போயினர்.
இந்தப் பெருமளவிலான உயிரிழப்புகளை தமிழினமே சந்தித்தது. பல இலட்சக்கணக்கான மக்கள் உள்நாட்டிலும் வெளிநாட்டிலுமாக இடம்பெயர்ந்தனர். அந்த இனத்தையே ஒட்டுமொத்தமாக அழித்துவிட்டது.
கேள்வி: இதற்கு தீர்வு இல்லையா?
பதில்: கடந்த 2002 ஆம் ஆண்டு யுத்த நிறுத்த ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டிருந்த போதும் சிறிலங்காவின் புதிய அரச தலைவராக மகிந்த ராஜபக்ச நவம்பர் 19 ஆம் நாள் பதவியேற்ற பின்பு போர்ச் சூழல் உருவாகி உள்ளது. வடக்கு - கிழக்கில் வன்முறைகள் வெடித்தன. நூற்றுக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டனர். இவர்களில் பெரும்பாலானோர் நிராயுதபாணிகளாக பொதுமக்களே.
கேள்வி: இனப்பிரச்சனையில் தொடர்புடையவர்கள் பற்றி?
பதில்: அரசியல் படுகொலைகள் தொடர்பாக அரசாங்கம் எதுவித விசாரணையையும் நடத்துவதில்லை. அரசாங்கத்தின் ஆதரவுடன் துணை இராணுவக் குழுக்கள் இயக்கப்பட்டு கிழக்குப் பகுதியில் வன்முறைகளையும் கொலைகளையும் கட்டவிழ்த்துவிட்டுள்ளனர். தமிழீழ விடுதலைப் புலிகள் கூட அவர்கள் மீதான வன்முறைக் குற்றச்சாட்டுகளை மறுத்துள்ளனர்.
கேள்வி: ஆழிப்பேரலையால் பாதிக்கப்பட்ட ஆசிய நாடுகளில் ஒன்று இலங்கை. 17,500 பேர் முதல் 41 ஆயிரம் பேர் வரை உயிரிழந்திருப்பதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. இதை எப்படிப் பார்க்கிறீர்கள்?
பதில்: போருக்குப் பின்னைய இலங்கையில் தமிழ் மற்றும் முஸ்லிம்கள் மீது மற்றொரு தாக்குதலாக நிகழ்ந்தது ஆழிப்பேரலை. தென்னிலங்கையில் மீளமைப்பும் புனரமைப்பும் பெரும் கவனமெடுத்துச் செய்யப்பட்டன. வடக்கு - கிழக்குப் பிரதேசம் புறக்கணிக்கப்பட்டது. அரச தலைவர் மகிந்தவின் அம்பாந்தோட்டை தொகுதியில் ஆழிப்பேரலையால் பாதிக்கப்பட்டோரின் தேவைக்கும் அதிகமாக 500 வீடுகள் கட்டிக் கொடுக்கப்பட்டன. ஆனால் வடக்கு - கிழக்கில் நூற்றுக்கணக்கானோர் இன்னமும் இடைத்தங்கல் முகாம்களிலேயே வாழ்ந்து வருகின்றனர்.
இது விடயத்தில் ஐக்கிய நாடுகள் சபை கூட உரிய முறையில் கவனமெடுக்கவில்லை. அக்சன் எய்ட் என்ற அமைப்பு ஆழிப்பேரலையால் பாதிக்கப்பட்டோரின் மனித உரிமை மீறல் தொடர்பான அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
கேள்வி: சிறுபான்மை இனம் தொடர்பாக?
பதில்: இலங்கையின் முஸ்லிம் சிறுபான்மையினரும் பாதிக்கப்படுகின்றனர். அரசாங்கச் செயற்பாட்டின் தோல்வியினால் ஒருபுறமும் தமிழ் மற்றும் முஸ்லிம் மக்களிடையேயான முறுகல் நிலையில் மறுபுறமும் அவர்கள் பிரச்சனகளை எதிர்கொள்கின்றனர். கடந்த ஆண்டு பல முஸ்லிம் மக்கள் கொல்லப்பட்டனர். உரிய காரணங்களின்றி கைது செய்யப்பட்டனர்.
கேள்வி: தமிழர் நிலைமை?
பதில்: இலங்கையில் தமிழர்கள் தொடர்ந்து மொழி ரீதியாக ஒடுக்குமுறைக்குள்ளாக்கி வருகின்றனர். சிறிலங்காவின் உத்தியோகபூர்வ மொழியாக தமிழ் இருந்தபோதும் அதை நடைமுறைப்படுத்த அரசாங்கம் தவறிவிட்டது. தமிழர்கள் கைது செய்யப்பட்டு ஒப்புதல் வாக்குமூலங்களை சிங்களத்தில் கட்டாயப்படுத்தி வாங்குகின்றனர். அவர்களுக்கு அதில் என்ன இருக்கிறது என்றே தெரியாது. வடக்கு - கிழக்கில் அரசாங்கக் கட்டுப்பாட்டு பகுதி காவல்நிலையங்களில் நன்கு தமிழ் தெரிந்த அதிகாரிகள் நியமிக்கப்படுவதில்லை. அஞ்சல் நிலையங்களில் தமிழில் தந்தி அனுப்பும் வசதிகூட இல்லை.
கேள்வி: பெண்களுக்கு என்ன விளைவுகள் ஏற்பட்டிருக்கின்றன?
பதில்: பல மடங்கு பெண்கள்தான் ஒடுக்குமுறைகளுக்கு முகம் கொடுக்கின்றனர். போர்க் காலம் முழுமைக்கும் தமிழ்ப் பெண்கள் மீதான ஒடுக்குமுறைகள் கட்டவிழ்த்துவிடப்பட்டன. யுத்த நிறுத்த ஒப்பந்த காலத்திலும் அது நீடித்தது.
கடந்த டிசம்பர் மாதம் முதல் வடக்கு கிழக்கில் அரச படைகளின் அட்டூழியங்களும் சித்திரவதைகளும் பெண்களுக்கு எதிராக அதிகரித்திருப்பதாக தகவல்கள் கிடைத்துள்ளன.
யாழ்ப்பாணம் புங்குடுதீவில் பாலியல் வல்லுறவுக்குள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட தர்சினி என்ற இளம் பெண்ணின் மரணம் தொடர்பான விசாரணை அறிக்கையை இன்னமும் அரசாங்கம் தாக்கல் செய்யப்படவில்லை. அப்பெண்ணின் சடலம் சிறிலங்கா கடற்படை முகாமுக்கு அருகில் இருந்த பாழடைந்த கிணற்றில் இருந்து மீட்கப்பட்டது.
கேள்வி: இந்த சமூகங்களின் எதிர்காலம்?
பதில்: சிறுபான்மை இனங்களும் தேசிய இனங்களும் உலகம் முழுமைக்கும் உரிமைக்காக, அரசுக்காக போராடி வருகின்றன. அமெரிக்க அதிபர் புஸ் எண்ணெய் தாகம் கொண்டுள்ளார். இன ஒதுக்கல் என்பது எந்த நிலையில் நிகழ்த்தப்பட்டாலும் அதை எல்லா நிலைகளிலும் எதிர்த்துப் போராட வேண்டியது அவசியம்.
கேள்வி: ஜெனீவாவில் கடந்த பெப்ரவரியில் நடந்த பேச்சுக்கள் மற்றும் ஏப்ரலில் நடைபெற உள்ள பேச்சுக்கள் குறித்து?
பதில்: ஜெனீவாவில் சிறிலங்கா அரசாங்கத்துக்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இடையே நடைபெற்ற பேச்சுக்களை நாம் வரவேற்கிறோம். ஏனெனில் இலங்கை மீண்டும் யுத்தத்துக்குப் போக முடியாது. மக்கள் ஆழிப்பேரலையாலும் போரினாலும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
ஆகையால் பேச்சுக்கள் மூலமாக இனப்பிரச்சனைக்குத் தீர்வு காணப்பட வேண்டியது அவசியமாகும். இப்பேச்சுக்களில் நாம் நேரடியாக பங்கேற்காவிட்டாலும் பொதுமக்கள் அமைப்பு என்கிற வகையில் அமைதி முயற்சிகளை ஆதரிக்கிறோம்.
அரசாங்கத்திடமும் தமிழீழ விடுதலைப் புலிகளும் பேசுகிறோம். இருதரப்பு நம்பிக்கையையும் அமைதியையும் கட்டியெழுப்ப முயலுகிறோம்.
இந்தப் பிரச்சனைக்கு யுத்தம் மூலம் இல்லாமல் பேச்சுக்கள் மூலமான தீர்வு காண்பதற்கான மனநிலையை சிங்களவர் மத்தியில் உருவாக்க முயற்சித்து வருகிறோம் என்றார் நிமல்கா பெர்னாண்டோ.
தகவல் மூலம் புதினம்.கொம்
|
|
|
| தென்றல் தொலைக்காட்சி (Thendral TV) |
|
Posted by: Vaanampaadi - 03-23-2006, 10:14 AM - Forum: பொழுதுபோக்கு
- No Replies
|
 |
Thendral TV from Dubai has started transmissions on Eutelsat Hotbird (13 degree East): 12.692, Horizontal, SR 27.500 and fec 3/4 - in timeshare with DAN Ceylon TV. You can watch Thendral TV from 18.00-19.00 CET.
Pavana TV from Dubai has started transmissions on Eutelsat Hotbird (13 degree East): 12.692, Horizontal, SR 27.500 and fec 3/4 - in timeshare with DAN Ceylon TV. You can watch Pavana TV from 19.00-20.00 CET. This is a channel in Sinhala.
|
|
|
| யாழ் இணையம் உங்களுக்கு எப்படி அறிமுகமானது? |
|
Posted by: இளைஞன் - 03-23-2006, 01:05 AM - Forum: உங்கள் கருத்துக்கள்
- Replies (77)
|
 |
<span style='font-size:30pt;line-height:100%'><b>யாழ் இணையம் உங்களுக்கு எப்படி அறிமுகமானது?</b></span>
<b>யாழ் இணையம் என்கிற ஒரு இணையத்தளம் இருப்பது உங்களுக்கு எப்படித் தெரிய வந்தது? நண்பர்கள் மூலமா அல்லது கூகிள் தளமூடாகவா? அல்லது வேறு தமிழ் தளங்களூடாகவா?
யாழ் கருத்துக்களத்தில் இணைய வேண்டும் என்கிற ஆர்வம் எப்படி வந்தது? யாழில் நடந்த விவாதங்களா? கவிதை கதை போன்ற ஆக்கங்களா? அல்லது வேறு ஏதுமா?</b>
|
|
|
| யாழ் இணையம் - 8ஆவது அகவை - வாழ்த்துக்கள் |
|
Posted by: இளைஞன் - 03-23-2006, 12:59 AM - Forum: வாழ்த்துக்கள் பாராட்டுக்கள்
- Replies (46)
|
 |
<span style='font-size:30pt;line-height:100%'><b>யாழ் இணையம் - 8ஆவது அகவை - வாழ்த்துக்கள்</b></span>
<b>30 மார்ச் 2006 அன்று தனது 8 ஆவது அகவையில் காலடியை எடுத்து வைக்க இருக்கும் யாழ் இணையத்துக்கு வாழ்த்துக்கள். அதனை நெறிப்படுத்தி முன்னெடுத்துச் செல்லும் மோகன் அண்ணாவுக்கும் வாழ்த்துக்கள். இன்னும் பல காலம் இணையத்தில் தடம் பதிக்க மீண்டும் மீண்டும் வாழ்த்துக்கள். </b>
|
|
|
|