Yarl Forum
மண்ணைக்கவ்வியது இந்தியா,, - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: இளைப்பாறுங் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=8)
+--- Forum: விளையாட்டு (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=41)
+--- Thread: மண்ணைக்கவ்வியது இந்தியா,, (/showthread.php?tid=453)



மண்ணைக்கவ்வியது இந்தியா,, - Danklas - 03-23-2006

இந்தியா சென்று சுற்றுப்பயணத்தில் ஈடுபட்டுவரும் அனுபவம் குறைந்த இங்கிலாந்து அணி அனுபவம் நிறைந்த (நினைப்பு) இந்திய அணியை அவர்களின் மண்ணில் வைத்து டெஸ்ட் தொடரை சமன் செய்தது,

முதலாவது ரெஸ்ட் போட்டி வெற்றி தோல்வி இன்றிமுடிவடைந்தது, இரண்டாவது ரெஸ்டில் இந்திய அணி வெற்றிபெற்றது, 3வது இறுதியுமான ரெஸ்ட் போட்டியில் இந்திய அணி 213 என்ற மிகப்பெரும் ஓட்டங்களால் தோல்வி அடைந்தது,

இந்த தோல்விக்கு அணிபயிற்சியாளர் சப்பலின் தவறான கண்ணோட்டமும், இந்திய துடுப்பாட்ட வீரர்களின் மோசமான ஆட்டமும், இங்கிலாந்து பந்துவீச்சாளர்களின் துள்ளியமான பந்துவீச்சுமே காரணம்,

<b>ஆட்ட நிலவரம்..</b>

1வது இன்னிங்க்ஸ்
இங்கிலாந்து 400
இந்தியா 279

2வது இன்னிங்க்ஸ்.
இங்கிலாந்த் 191
இந்தியா 100.

இங்கிலாந்த் 212 ஓட்டங்களால் வெற்றி பெற்றது.

Man of the Match & Series: A Flintoff


இந்தியா தோல்வி அடைந்தது எப்படி
நாணயச்சுழச்சியில் வெற்றி பெற்ற இந்திய அணி, தங்கள் ஆட்டகளத்தின் தன்மை புரியாமல், முதலில் களத்தடுப்பாட்டத்தை தேர்வுசெய்தது, மும்பை ஆட்டகளம் பற்றி கூறவேண்டுமாயின் முதல் 2,3 நாட்களுக்கு துடுப்பாட்டத்துக்கு ஏற்ற களமாகவும், பின் பந்துவீச்சாளர்களுக்கு சாதகமான களமாகவும் இருக்கும், இதை கவனத்தில் எடுக்காத இந்திய பயிற்சியாளரும், அணித்தலைவரும் முதலில் களத்தடுப்பை தேர்வு செய்தது, டெஸ்ட் தொடரை இழப்பதற்கு வழி வகுத்தது, :oops: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->

புதிய, டெஸ்ட் போட்டியில் அனுபமற்ற வீரர்களுடன் களம் இறங்கி இந்தியாவில் வைத்தே அவர்களை திணறடித்து தொடரை சமன் செய்ததும் இல்லாமல், சிறந்த வீரர், சிறந்த தொடர் வீரர் என விருதைபெற்ற இங்கிலாந்து அணிக்கு வாழ்த்துக்கள்... <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->


- Niththila - 03-23-2006

நல்ல நியுஸ் தகவலுக்கு நன்றிஅங்கிள்


- putthan - 03-25-2006

வெல்டன் இங்கிலன்ட்


- Thala - 03-25-2006

நானே என்னோட வேலை செய்யிறதுகளோட இந்தியா வெல்லும் எண்டு பந்தயம் கட்டி தோத்து வெறுத்துப்போய் இருக்கன் சும்மா கடுப்பாக்காமல் இருங்கப்பா... :evil: :evil: :evil:


- putthan - 03-25-2006

இங்கிலாந்து அணி என்று சொல்லும்போது ஸ்கொட்லாந்து,அயர்லாந்து,போன்ற மாநிலங்கலில் இருந்து விளையாட்டு வீரர்கள் பங்குபற்றுவதில்லையா?

இதை கேட்பதற்கு காரணம் கொமன்வெல்த் போட்டியின் போது இவ்விரு மாநிலங்களும் தனி கொடியுடன் தனி அணியுடன் ஏனைய நாடுகளுடன் பங்குபற்றூகிறது இதற்கு விளக்கம் தர முடியுமா?


- Thala - 03-25-2006

putthan Wrote:<b>இங்கிலாந்து அணி என்று சொல்லும்போது ஸ்கொட்லாந்து,அயர்லாந்து,போன்ற மாநிலங்கலில் இருந்து விளையாட்டு வீரர்கள் பங்குபற்றுவதில்லையா?</b>

இதை கேட்பதற்கு காரணம் கொமன்வெல்த் போட்டியின் போது இவ்விரு மாநிலங்களும் தனி கொடியுடன் தனி அணியுடன் ஏனைய நாடுகளுடன் பங்குபற்றூகிறது இதற்கு விளக்கம் தர முடியுமா?

இங்கிலாந்து, ஸ்கொட்லாண், தென் அயர்லாந்து (south Irarland) , ஜேர்சி(Jersy)(Gersey), வேலஸ் ( Walsh), இவை எல்லாம் தனித் தனி நாடுகள்...

இதில் இங்கிலாந்து மட்டுமே பலமானது... ஐக்கிய ராட்ச்சியம் என்பது எல்லா நாடுகளும் இணைந்த சாம்ராட்சியம்...

ஆனாலும் வேல்ஸ் கிறிகற்சபை ஒப்பந்தம்போட்டு உள்ளதால் வீரர்கள் இங்கிலாந்துக்காக விளையாடுவர்.....


- Aravinthan - 03-26-2006

தல நீங்கள் இன்னும் இரண்டு இடங்களினை விட்டு விட்டீர்கள். 1)Isle of wight, 2)Isle of Man


- Aravinthan - 03-26-2006

தல தென் அயர்லாந்து சுதந்திரம் பெற்று சுதந்திர அயர்லாந்தாக(Republic of Ireland) தனி நாடாக உள்ளது. இது பிரித்தானியாவுக்குள் வராது. வட அயர்லாந்து பிரித்தானியாவுக்குள் அடங்கும்.வட அயர்லாந்து, வெல்ஸ் ஸ்கொட்லண் மாதிரி தனி அணியாக கொமன்வெல்த் போட்டிகளில் கலந்து கொள்கிறது. உலகக் கிண்ண உதைப்பந்தாட்டப்போட்டிகளில் இங்கிலாந்து, ஸ்கோட்லண்ட்,வெல்ஸ், வட அயர்லாந்து,சுதந்திர அயர்லாந்து என தனித்தனி அணிகளாக விளையாடுகிறது. 2007 உலகக்கிண்ண துடுப்பாட்டப்போட்டிகளில் இங்கிலாந்து, ஸ்கோட்லண்ட் சுதந்திர அயர்லாந்து ஆகிய 3அணிகளும் விளையாடுகின்றன. ஒலிம்பிக்போட்டிலளில் மட்டும் இங்கிலாந்து,ஸ்கோட்லண்ட்,வேல்ஸ், வட அயர்லாந்து,ஜேர்ஸி,கேன்ஸி, ஐலவ் வைட், ஐலவ் மான் ஆகியவை ஒரு அணியில் பிரித்தானியா அணியாக விளையாடுகிறது.


- Thala - 03-26-2006

Aravinthan Wrote:தல நீங்கள் இன்னும் இரண்டு இடங்களினை விட்டு விட்டீர்கள். 1) 2)Isle of Man

இப்போதும் அங்கு பிரப்புக்கள் ஆட்ச்சி நடப்பதாலும் அது இங்கிலாந்து பாராளுமண்றத்தில்தான் உறுபுரிமை உள்ள நாடுகள்.... இதில் Isle of wight(IOW) - Portsmouth கவுண்டிக்குட்பட்டு இங்கிலாந்தில் உள்ளது.. Post cord :- PO40 இருந்து PO49 வரை இருக்கும்..

அதில் Isle of Man (IOM) lancashier கவுண்டிக்கு உட்பட்டு இருக்கும் ஒரு தீவு.... !


- Thala - 03-26-2006

Aravinthan Wrote:தல தென் அயர்லாந்து சுதந்திரம் பெற்று சுதந்திர அயர்லாந்தாக(Republic of Ireland) தனி நாடாக உள்ளது. இது பிரித்தானியாவுக்குள் வராது. வட அயர்லாந்து பிரித்தானியாவுக்குள் அடங்கும்.வட அயர்லாந்து, .

அதில் தென் அயர்லாந்து தான் சுதந்திரம் பெற்ற தீவவான EIRE அல்லது Republic of Ireland நாந்தான் தவறாக சொல்லி விட்டேன்.... <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->


- Aravinthan - 03-27-2006

கொமன்வெல்த் போட்டியில் ஐலவ் வைட், ஐலவ் மான் தனி அணிகளாகவே பங்குகொண்டு விளையாடினது. நான் ஜலவ் வைட், ஜேர்சி தீவுகளுக்கு முன்பு லண்டனில் வசிக்கும் போது சுற்றுலா சென்றிருந்தேன்.
ஜேர்ஸி நாட்டில் கார்களின் நம்பர் J என்ற எழுத்துக்களின் பின்பு இலக்கங்கள் அமையும். இங்கு வரிகள் வசூலிக்காததினால் பிரித்தானியாவில் குறைந்த விலைக்கு பொருட்கள் வாங்கலாம். அழகிய இடம். கிட்லரின் படைகளினால் கட்டப்பட்ட கைவிடப்பட்ட பாதாள வைத்தியசாலையினை இங்கே பார்க்கலாம். பிரான்ஸ் நாட்டுக்கு மிக அருகில் இருக்கும் இத்தீவில் விதிகளின் பெயர்கள், அறிவுப்புக்களில் ஆங்கிலத்தோடு பிரேன்ஜிலும் காணலாம்.


- putthan - 03-27-2006

விளகங்கள் கொடுத்தற்கு நன்றிகள் அரவிந்தன்,தலை