Yarl Forum
தாய்லாந்தில் இந்துக் கோவில் சிலையை - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: தகவற் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=3)
+--- Forum: செய்திகள்: உலகம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=14)
+--- Thread: தாய்லாந்தில் இந்துக் கோவில் சிலையை (/showthread.php?tid=467)



தாய்லாந்தில் இந்துக் கோவில் சிலையை - aathipan - 03-22-2006

தாய்லாந்தில்
இந்துக் கோவில் சிலையை சேதப்படுத்தியவர் அடித்துக் கொலை


பாங்காக், மார்ச்.22-

தாய்லாந்து நாட்டுத் தலைநகர் பாங்காக்கில் இந்து மதக் கோவில் ஒன்று உள்ளது. இறவான் கோவில் என்ற இந்த வழிபாட்டுத் தலத்தில் 50 ஆண்டு பழமையான பிரம்மதேவனின் சிலை உள்ளது. இந்தக் கோவிலுக்கு பல்வேறு மதத்தினரும் சென்று வழிபடுவது வழக்கம்.

இந்தக் கோவிலுக்குள் நள்ளிரவு ஒரு மணிக்கு 27 வயது தனகோர்ன் பக்டீபோல் என்ற முஸ்லிம் வாலிபர் நுழைந்தார். அவர் தன் கையில் வைத்து இருந்த சுத்தியலால், சிலையை உடைத்து சேதப்படுத்தினார்.

இதைப் பார்த்த சாலையோர வியாபாரி ஒருவர் சத்தம் போட்டு அருகில் தூங்கியவர்களை எழுப்பினார். அவர்கள் அந்த வாலிபரை அடித்துக் கொன்றனர். இது தொடர்பாக 2 சுத்திகரிப்பு தொழிலாளர்கள் கைது செய்யப்பட்டனர்.

அநëத வாலிபரின் தந்தை சயான் கூறுகையில், என் மகன் ஒரு மனநோயாளி. பல ஆண்டுகள் மனநோய் மருத்துவமனையில் வைக்கப்பட்டு இருந்தான். சம்பவ நாள் அன்று அவன் நிலை மோசமானது. அவன் இரவு வீட்டை விட்டு ஓடிப் போய் விட்டான் என்று கூறினார்.

கோவில் சிலை சேதப்படுத்தப்பட்டது குறித்து பிரதமர் தக்சின் சினாவத்ரா அதிர்ச்சி தெரிவித்து உள்ளார்.

<img src='http://www.dailythanthi.com/images/news/20060322/for.jpg' border='0' alt='user posted image'>