Welcome, Guest
You have to register before you can post on our site.

Username
  

Password
  





Search Forums

(Advanced Search)

Forum Statistics
» Members: 8,982
» Latest member: lucilegr4
» Forum threads: 9,058
» Forum posts: 83,244

Full Statistics

Online Users
There are currently 117 online users.
» 0 Member(s) | 115 Guest(s)
Bing, Google

Latest Threads
±ôÀÊ ÀÈ¢ì¸Ä¡õ
Forum: நகைச்சுவை
Last Post: UsArgum
01-10-2026, 09:07 AM
» Replies: 28
» Views: 10,327
Mrs.Sirimao Bandaranayake
Forum: நகைச்சுவை
Last Post: GeraTep
11-14-2025, 10:46 AM
» Replies: 14
» Views: 3,235
Farty time
Forum: நகைச்சுவை
Last Post: ㄹㅈㄷㄹㅈ
08-26-2025, 03:48 PM
» Replies: 11
» Views: 5,608
கனவே கலைகிறதே
Forum: பொழுதுபோக்கு
Last Post: KULAKADDAN
04-30-2006, 06:37 PM
» Replies: 0
» Views: 6,301
Karuna Cadres were captur...
Forum: பிறமொழி ஆக்கங்கள்
Last Post: ஜெயதேவன்
04-30-2006, 06:17 PM
» Replies: 4
» Views: 8,649
என்ன நடந்தது யாழிற்கு?
Forum: உங்கள் கருத்துக்கள்
Last Post: ஜெயதேவன்
04-30-2006, 06:03 PM
» Replies: 42
» Views: 31,083
முடியுமானால் முயற்ச்சியுங...
Forum: போட்டிகள்
Last Post: Subiththiran
04-30-2006, 05:00 PM
» Replies: 15
» Views: 14,472
**சுடேக்கு** புதிர் விளைய...
Forum: போட்டிகள்
Last Post: kavithaa
04-30-2006, 04:30 PM
» Replies: 63
» Views: 38,512
புல்மோட்டையில் தாக்குதல்
Forum: செய்திகள் : தமிழீழம்
Last Post: Sriramanan
04-30-2006, 04:10 PM
» Replies: 2
» Views: 8,044
போதனை வேண்டாம்! பு...
Forum: செய்திகள் : தமிழீழம்
Last Post: alika
04-30-2006, 03:13 PM
» Replies: 4
» Views: 6,243

 
  திரு.மயில்வாகனன் சர்வானந்தா-இலங்கை தமிழ் வானொலி
Posted by: adithadi - 10-21-2005, 11:19 PM - Forum: தமிழ் /தமிழர் - Replies (2)

இலங்கை தமிழ் வானொலி பிரசித்தி பெற்ற அறிவிப்பாளர் திரு.மயில்வாகனன் சர்வானந்தா பற்றி யாராவது கூறமுடியுமா?

Print this item

  உங்கள் இணைய தளத்தினைச் சிறப்பாக அமைத்திட
Posted by: Rasikai - 10-21-2005, 10:50 PM - Forum: இணையம் - Replies (7)

<b>உங்கள் இணைய தளத்தினைச் சிறப்பாக அமைத்திடும் வழிகள் சில. </b>

தங்கள் செயல்பாடுகளை அறிவிக்க நிறுவனங்கள் மட்டுமே இணைய தளம் உருவாக்கி இன்டர்நெட்டில் பதிப்பது என்ற நிலை மாறி தற்போது தனி நபர்களும் மற்றும் அனைத்து வகையான அமைப்புகளும் இணைய தளங்களை உருவாக்கி வருகின்றன. இணைய தளங்களை உருவாக்குவதற்கென்றே பல வெப் மாஸ்டர்கள் உள்ளனர். ஒரு சிலர் இன்டர்நெட்டில் கிடைக்கும் உதவி தகவல்களைக் கொண்டு தாங்களே தளங்களை உருவாக்கி பதிந்து வருகின்றனர். எப்படி இருந்தாலும் ஓர் இணைய தளம் ஒரு சில வரையறைகளுடன் அமைக்கப்படுவது நல்லது. அவை என்னவென்று இங்கு பார்ப்போம்.

<b>1. முகப்பு பக்க அளவு:</b>

உங்கள் இணைய தளம் பதிக்கப்பட்டு சில வாரங்கள் ஏன் சில மாதங்கள் வரையில் அல்லது ஓராண்டு காலத்தில் உங்கள் தளத்தின் முகப்பு பக்கம் வழியாகத்தான் அனைவரும் நுழைவார்கள். (பொதுவாக இந்த முகப்பு பக்கத்தினை index.htm அல்லது default.htm என்று அழைப்பார்கள்.) எனவே இதனை அமைப்பதில் அதிகக் கவனம் செலுத்த வேண்டும். முகப்பு பக்கம் லோட் ஆக அதிக நேரம் எடுத்துக் கொண்டால் நிச்சயமாக அதனைக் காண விரும்புபவர்கள் எரிச்சல் அடைந்து ஆர்வம் குறைந்து தளத்தைக் காணும் முயற்சியைக் கைவிடுவார்கள். உங்களுடைய தளத்தினைப் பெரும்பாலும் வெளிநாட்டினர்தான் காண விரும்புவார்கள் எனில் இந்த முகப்பு பக்கத்தின் அளவு 90 கேபிக்குள் இருப்பது நல்லது. இதுவே இந்திய மக்கள் தான் காண்பார்கள் என்றால் 50 கேபி என்ற அளவிற்குள் இருப்பது நல்லது. இந்த அளவு எச்.டி.எம்.எல். வழி தகவல், பிளாஷ் மற்றும் அனிமேஷன் ஆகிய அனைத்தும் சேர்ந்திருக்க வேண்டும்.

<b>2. முதல் ஈர்ப்பு:</b>
எந்த பொருளும் மக்களை முதல் பார்வையிலேயே கவர வேண்டும் என்பது பொதுவான ஒரு விஷயமாகும். இன்டர்நெட் தளத்தின் முகப்பு பக்கமும் அப்படித்தான் இருக்க வேண்டும். எனவே உங்களைப் பற்றிய தகவல்கள் நச் என்ற வகையில் மக்களின் கவனத்தை ஈர்க்கும் வகையில் எளிமையாக அதே சமயத்தில் தளத்தின் உள்ளே சென்று பார்க்கும் வகையில் அமைய வேண்டும்.

<b>3. நேரம்:</b>

இப்போது பிளாஷ் தொகுப்பு உபயோகிப்பது சர்வ சாதாரணமாகிவிட்டது. ஆனால் இதனைப் பார்ப்பவர்களிடம் வலுக்கட்டாயமாகத் திணிப்பது நல்லதல்ல. இது அதிக நேரம் எடுக்கும். கட்டாயம் பிளாஷ் காட்சி ஒன்று தேவை என்றால் அதனை பார்வையாளர்கள் வேண்டாம் என்று விரும்பினால் ஒதுக்கும் வசதியும் தரப்பட்டிருக்க வேண்டும். வெறும் டெக்ஸ்ட் மட்டும் கூட அழகாக அமைக்கப்படலாம் என்பதனையும் கவனத்தில் கொள்ள வேண்டும். தளத்தைக் காண வருபவர்களின் எண்ணிக்கையைத் தெரிவிக்கும் வசதி இருப்பது பலரின் கவனத்தை ஈர்க்கும். உங்கள் தளத்திற்கும் பெருமை சேர்க்கும்.

<b>4. தொடர்பு:</b>

நீங்கள் தரும் தகவல்கள் மிகவும் பயனுள்ளதாக இருக்கலாம். அதனைக் காண்பவர்கள் உங்களிடம் சில விளக்கங்கள் வேண்டி உங்களைத் தொடர்பு கொள்ள எண்ணலாம். எனவே எப்படி தொடர்பு கொள்ள வேண்டும் என முகப்பு பக்கத்திலேயே குறிப்பிட வேண்டும். உங்கள் மின்னஞ்சல் முகவரி அளிக்கலாம். அல்லது பார்ப்பவரின் கம்ப்யூட்டரில் உள்ள இமெயில் கிளையண்ட் புரோகிராமை இயக்கி நேரடியாக மின்னஞ்சல் அனுப்பும் வசதியையும் ஏற்படுத்தலாம்.

<b>5. புதுமை</b>

ஆம் அதைத்தான் அனைவரும் விரும்புகின்றனர். அடிக்கடி புதிய தகவல்களைக் கொண்டு உங்கள் இணைய தளத்தை புதுப்பித்துக் கொண்டிருங்கள். அதற்காக அடியோடு அதனை மாற்ற வேண்டியதில்லை. சிறிய மாற்றங்கள் அவ்வப்போது இருப்பது உங்கள் தளத்திற்கு வருபவர்களின் எண்ணிக்கையை கூடுதலாக்கும்.

<b>6. சரக்கு</b>

ஆம் உங்கள் நிறுவனம் அல்லது அமைப்பு அல்லது உங்களின் தனிப்பட்ட தளங்களில் தகவல் சரக்கு நிறைய இருக்க வேண்டும். உங்கள் நிறுவனம் எந்தப் பொருளையேனும் தயாரிப்பதாக இருந்தால் அந்த பொருளைப் பற்றி மட்டுமின்றி உங்கள் நிறுவனம் அதன் நிர்வாகம் மற்றும் கட்டமைப்பு பற்றியும் நிறைய தகவல்களை நீங்கள் தரலாம்.

<b>7. மேம்பாடு</b>

உங்கள் நிறுவனம் போல, உங்கள் அமைப்பு போல இயங்கும் மற்றவற்றின் இணைய தளங்களையும் நீங்கள் அடிக்கடி சென்று பார்த்து அவர்கள் செய்திடும் மாற்றங்கள், மேம்படுத்தும் தகவல்கள் ஆகியவற்றையும் கண்டறிந்து ஆய்வு செய்து உங்கள் தளத்தையும் அதே போல இல்லாமல் அதைவிடச் செறிவாக மேம்படுத்துங்கள்.

<b>8. சோதனை</b>

உங்கள் இணைய தளம் உங்களுக்குப் பிடித்த பிரவுசரில் மட்டும் சரியாக இயங்கக் கூடாது; மற்ற பிரவுசர்களிலும் மிகச் சரியாக இயங்க வேண்டும். அப்போது தான் அனைத்து தரப்பினரையும் உங்களால் கவர முடியும். அத்துடன் பல்வேறு ரெசல்யூசன் அமைப்பிலும் உங்கள் இணைய தளத்தைச் சோதனை செய்து பார்த்திட வேண்டும். வெவ்வேறு ஆப்பரேட்டிங் சிஸ்டத்திலும் இயக்கிப் பார்த்திட வேண்டும்.
<b>
9. படங்கள்</b>

நீங்கள் பதித்துள்ள படங்கள் சரியாக இறங்குகின்றனவா, நீங்கள் எதிர்பார்க்கும் தோற்றத்தைத் தருகின்றனவா என்பதை அடிக்கடி நீங்கள் சோதித்து அறிய வேண்டும். வெவ்வேறு வேகத்தில் இயங்கும் இணைய இணைப்புகளில் இந்த படங்கள் எப்படி இறங்கி இயங்குகின்றன என்று சோதித்துப் பார்க்க வேண்டும்.

<b>10. சொல்லும் மொழி</b>

உங்கள் மொழி நடையை ஸ்டைலாக அமைப்பதற்கு முன் அதில் எழுத்து மற்றும் இலக்கணப் பிழை இல்லாமல் இருப்பதனை ஒன்றுக்குப் பல முறை உறுதி செய்து கொள்ளுங்கள். தமிழ் மொழியில் உங்கள் தளத்தில் தகவல்கள் தரப்பட்டால் அந்த எழுத்துருவினை டவுண் லோட் செய்து கொள்ள வசதி செய்து தர வேண்டும். அந்த வசதி உள்ளது என்பதனை ஒரு ஜேபெக் பட பைலாகவோ அல்லது ஆங்கிலத்திலோ அமைக்கலாம்.
<b>
11. எழுத்துரு</b>

அனைவருக்கும் தெரிந்த எழுத்துருக்களில் உங்கள் தகவல் தளத்தை அமைப்பது நல்லது. அப்போது தான் பார்ப்பவர்களுக்குத் தாங்கள் பழக்கப்பட்ட தளம் போல உங்கள் தளம் காட்சியளிக்கும்.
<b>
12. எளிதான தாவல்</b>

உங்கள் தளத்தின் முகப்பு பக்கத்திலிருந்து தகவல்களுக்காக நேயரை மற்ற தளத்திற்கு இழுப்பது மிக எளிதான ஒன்றாக இருக்க வேண்டும். அவை உடனடியாக இறக்கம் செய்யப்படும் வகையில் தரப்பட வேண்டும். எந்த பக்கத்தில் இருந்தாலும் பிற பக்கங்களுக்குச் செல்வதற்கு எளிதான வழி அமைத்துத் தரப்பட வேண்டும்.

<b>13. விளம்பரம்</b>

உங்கள் இணைய தளம் மூலம் பணம் சம்பாதிப்பதற்காக விளம்பரங்களுக்கு இடம் தருவது தவறில்லை. ஆனால் அவை அளவுக்கு மீறி இடம் பெறக் கூடாது. இரண்டு விளம்பரங்களுக்கு மேல் இருப்பது சகித்துக் கொள்ள முடியாததாக இருக்கும்.
<b>
14. பாதுகாப்பு</b>

இணைய தளத்தின் மிக முக்கியமான ஓர் அம்சம் அதன் பாதுகாப்பு. உங்கள் இணைய தளத்தினுள் யாரும் நுழைய முடியாதபடி பாதுகாப்பு வளையங்களை அமைத்து அவற்றை அடிக்கடி மாற்றி மாற்றி அமைத்துவிட வேண்டும்.


உங்கள் இணைய தளப் படங்களை பிறர் திருடாமலிருக்க செய்ய வேண்டியவை

பலரும் தங்களிடம் உள்ள தகவல்கள் மற்றும் அவை சார்ந்த படங்களை இணைத்து இணைய தளங்களை அமைக்கிறார்கள். ஆனால் இந்த தளங்களைப் பார்க்கும் நேயர்கள் இவற்றில் உள்ள படங்களை அப்படியே காப்பி செய்து தங்களுடைய விருப்பப்படிப் பயன்படுத்துகிறார்கள். சிலர் அவற்றை மற்றவர்களுக்கு விற்று விடுகிறார்கள். சிலரோ அவற்றைக் கீழ்த் தரமாகவும் பயன்படுத்துகின்றனர். இந்த திருட்டை எப்படித் தடுப்பது? இது குறித்த சில தகவல்களை இங்கு பார்ப்போம். இணைய தளங்களில் பொருத்தப்பட்டு காட்சியளிக்கிற படங்களை காப்பி செய்ய முடியாதவாறு தடுக்க சில வழிகள் உள்ளன. உங்கள் வழிகளை மீறி படங்களைச் சாதாரண பயனாளர்களால் காப்பி செய்ய முடியாது. ஆனால் கம்ப்யூட்டர் விற்பன்னர்களால் காப்பி செய்ய முடியும்.
<b>
ரைட்கிளிக் செய்வதை தடுக்க:</b>

பொதுவாக ஓர் இணைய தளத்தில் உள்ள படத்தால் ஈர்க்கப்பட்டவர் அதை காப்பி செய்ய அதை ரைட்கிளிக் செய்வார். மெனு கிடைக்கும். அதில் Save Image As என்பதைப் போன்ற கட்டளை தெரியும். அதை கிளிக் செய்தால், அந்தப் படம் அவர் கம்ப்யூட்டரில் சேமிக்கப்படும். எனவே ஜாவாஸ்கிரிப்டை பயன்படுத்தி, ரைட்கிளிக் செய்தால் மெனு கிடைக்காதவாறு செய்து விட வேண்டும். மெனு கிடைக்காததால் Save Image As கட்டளையை அவரால் செயல்படுத்த முடியாது. ரைட்கிளிக் செய்யும் பொழுது கிடைக்கிற மெனுவில் வேறு நல்ல பயனுள்ள கட்டளைகளும் உள்ளன. எனவே ரைட்கிளிக்கால் கிடைக்கிற மெனுவைத் தடுத்துவிட்டால், அந்த நல்ல கட்டளைகளை உங்கள் இணைய தளத்துக்கு வருபவர்களால், உங்கள் வெப் தளத்தில் பயன்படுத்த முடியாமல் போய்விடும். எனவே அவர்களுக்கு எரிச்சல் ஏற்படும். மீண்டும் உங்கள் தளத்துக்கு வரமாட்டார்கள்.

<b>வேறு படத்தை காப்பி செய்யும்படி ஏமாற்ற:</b>

ரைட்கிளிக் செயலை ஜாவாஸ்கிரிப்ட் மூலம் தடுக்கக் கூடாது என்பதை ஒப்புக் கொள்வீர்கள் அல்லவா? Rollover என்ற ஜாவாஸ்கிரிப்ட் அம்சத்தை பயன்படுத்த வேண்டும். யாரும் காப்பி செய்யக் கூடாது என நீங்கள் நினைக்கிற படத்தை வெப் பக்கத்தில் காட்டுங்கள். மவுஸை அந்த படத்தின் மேல் கொண்டு சென்றால் வேறு படம் தெரியும்படி, ஜாவாஸ்கிரிப்டில் Rollover கட்டளையில் கூறிவிடுங்கள். எனவே உங்கள் வெப் பக்கத்தை பார்வையிடுபவருக்கு அந்த படம் தெரியும். ஆனால் அதை காப்பி செய்ய மவுஸை அதன் மேல் கொண்டு போனால் அந்த படம் மறைந்து வேறுபடம் காட்சியளிக்கும். எனவே ரைட் கிளிக் மூலம் காப்பி செய்தால் அந்த புதிய படம்தான் அவர் கம்ப்யூட்டரில் காப்பியாகும். எப்போதும் உங்கள் படம்தான் தெரிய வேண்டும் மவுஸைக் கொண்டு போனவுடன் வேறு படம் தெரியக் கூடாது என நினைத்தால் அதற்கும் வழி உள்ளது. Transparent Gif படத்தை உருவாக்கி கொள்ளுங்கள். பிறகு Embedded style sheet மூலம் அந்த Transparent Gif படத்தின் கீழே உங்கள் படத்தை வைத்து விடுங்கள். உங்கள் படத்தின் மேலே கண்ணாடி காகிதம்போல் Transparent Gif வீற்றிருப்பதால் யாருக்கும் எந்த சந்தேகமும் ஏற்படாது. ரைட்கிளிக் செய்து படத்தை காப்பி செய்கிறவர்களுக்கு கண்ணாடி காகிதமான Transparent Gif படமே காப்பியாகும். அதன் கீழேயுள்ள உங்கள் படம் காப்பியாகாது.

<b>படத்தைத் துண்டுகளாக மாற்றி வெப் தளத்தில் போட:</b>

ஒரு படத்தை அப்படியே உங்களது இணையப் பக்கத்தில் வைக்காதீர்கள். அதைப் பல துண்டுகளாகப் பிரித்து அந்த துண்டுகளை வெப் பக்கத்தில் அமைத்திடுங்கள். எனவே உங்கள் படத்தை காப்பி செய்ய விரும்புகிறவர் அந்த துண்டுகளையெல்லாம் காப்பி செய்து பின்பு ஏதாவது இமேஜ் எடிட்டிங் புரோகிராம் கொண்டு அவற்றை ஒட்ட வைக்க வேண்டும். இந்த எரிச்சல் பிடித்த வேலைக்கு பயந்து அந்த துண்டுகளை காப்பி செய்யாமல் விட்டுவிடுவார்கள்.

<b>படத்தினுள் வாட்டர் மார்க்கை நுழைக்க:</b>

படத்தை அப்படியே வெப் பக்கத்தினுள் கொண்டு வரக்கூடாது. அந்த படத்தின் உள்ளே உங்கள் பெயர் அல்லது வேறு ஏதாவது எச்சரிக்கைச் செய்தியை வாட்டர் மார்க்காக நுழைத்து விட வேண்டும். படத்துக்கு இடையூறு இல்லாமல் ஆனால் படத்தை காப்பி செய்பவர்களுக்கு அது பயன்படாதவாறுவாட்டர் மார்க் இருக்க வேண்டும். ஏதாவது இமேஜ் எடிட்டிங் சாப்ட்வேர் கொண்டு வாட்டர் மார்க்கை உருவாக்கலாம். யார் கண்களுக்கும் தெரியாத வாட்டர் மார்க்கை உருவாக்கலாம். இதற்கெனவே சில சாப்ட்வேர்கள் உள்ளன. எடுத்துக்காட்டாக Digimare (www.digimare.com) என்ற சாப்ட்வேர் மூலம் கண்ணிற்கு தெரியாத வாட்டர் மார்க்கை உங்கள் படத்தினுள் உருவாக்கலாம். வாட்டர் மார்க் தெரியாததால் எல்லாரும் உங்கள் படத்தை காப்பி செய்யலாம். ஆனால் அப்படி காப்பி செய்தவர்கள் மீது சட்டப்படி நீங்கள் நடவடிக்கை எடுக்க முடியும்.

நன்றி: கம்யூட்டர் மலர் (www.dinamalar.com)

Print this item

  தமிழரின் சுனாமி பணத்தை திருடி...
Posted by: Danklas - 10-21-2005, 06:23 PM - Forum: செய்திகள் : தமிழீழம் - No Replies

<b>தமிழரின் சுனாமி பணத்தை திருட மகிந்த பயன்படுத்தம் புதிய முறை</b>

வடக்கு கிழக்கு பிரதேசங்களுக்கு என்று சுனாமிக்கு கிடைத்த பணம் இதுவரை காலமும் பயன்படுத்தப்படாமல் இலங்கை அரசாங்கத்தால் முடக்கபட்டு, தற்போது ஒரு வருடத்தை தொட்டு நிற்கிறது. இதன் ஒரு நாடகம்தான் அமெரிக்காவில் அரசாங்க பிச்சை பணத்தில் கடைசி காலத்தை கழித்தவரை இலங்கைக்கு அழைத்து அவருடைய பெயருக்கு பணம் மாற்றப்படும் விதம். <i>மங்கள சமரவிர நிதர்சனத்தில் பாய்வதற்கு</i> பல காரணங்கள் இருக்கிறது. அதற்கு அப்பால் இவரால் பிரதமந்திரி என்று அழைக்கப்படும் மகிந்த றாஜபக்ச தனது விசேட பாதுகாப்பு பிரிவின் ஆலோசகராக முன்னைநாள் இராணுவ அதிகாரியான தனது சகோதன் லெப்.கேணல் கொத்தபய றாஜபக்சவை நியமித்திருக்கிறார். <span style='color:green'>இலங்கையில் இருக்கும் ஜனாதிபதிக்கு 50 ஆயிரம் ரூபாய்கள் சம்பளம் ஆனால் மகிந்தவின் சகோதரனுக்கு அடிப்படை சம்பளம் ஒரு இலட்சம் அதற்கு அப்பால் 35 ஆயிரம் அமைச்சு சம்பளம், அரசவாகனம், எரிபொருட் செலவு உட்பட 80 ஆயிரம் ரூபாய் இதர செலவுகளான தனது நிர்வாக கட்டமைப்பை மாதம் மாதம் நடாத்துவதற்கான செலவீனம். பொதுவாக பார்த்தால் மாத வருமானம் சுமார் 2 இலட்சத்து 50 ஆயிரம் இலங்கை ரூபாய்கள்

கேல்பிங் அம்பாந்தோட்டை என்று சுனாமி பணத்தை பிற்பொக்கட் அடித்தவர் தற்போது பிரதான கட்சியினர் பிரதமர் வேட்பாளராக நிக்கின்றார். வாழ்க கம்பாந்தோட்டை றாஜபக்ச குடும்பம்...</span>

நன்றி நிதர்சனம்.கொம்... Idea

சா... அப்ப நாம தான் கொஞ்சமா சுருட்டிட்டமா??இருந்தாலும் இப்பவும் ஒண்டும் கெட்டுபோகல்லை, அடுத்த ஜனாதிபதி ராஜபக்ஸதான்,, இப்பவே நா** மாதிரி நாக்கை தொங்கபோட்டுக்கொண்டு சேவை செய்யவெளிக்கிட்டன்,, வெற்றி நமதே.. 8)

<img src='http://img475.imageshack.us/img475/1430/front26yl.jpg' border='0' alt='user posted image'> Arrow <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->

Print this item

  சீறிக் கடிக்கின்ற நாக பாம்பும் மறைந்திருந்து கடிக்கின்ற புடை
Posted by: kurukaalapoovan - 10-21-2005, 05:07 PM - Forum: செய்திகள் : தமிழீழம் - No Replies

<i>நன்றி பதிவு இணையத்தளம், வெள்ளி 21-10-2005 17:27 மணி தமிழீழம் வன்னி நிருபர்</i>

தமிழீழ மக்களைப் பொறுத்தவரையில் சிறீலங்கா சுதந்திரக்கட்சி சீறிக் கடிக்கின்ற நாக பாம்பு என்றால் ஐக்கிய தேசியக் கட்சி மறைந்திருந்து கடிக்கின்ற புடையன் பாம்பு என தமிழ்த் தேசிய நாடாளுமன்ற உறுப்பினர்

பாராளுமன்றத்தில் அவசரகாலச் சட்டம் தொடர்பான விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

எங்களைப் பொறுத்தவரையில் இந்த சிறீலங்கா சுதந்திரக் கட்சியை மக்களின் தமிழில் சொல்லவேண்டும் என்றால் சீறிக் கடிக்கின்ற நாகபாம்பு ஐக்கிய தேசியக் கட்சி என்றால் மறைந்திருந்து கடிக்கின்ற புடையன் பாம்பு இதில் எந்தப் பாம்பு நல்லது என்று கேள்வி கேட்டால் அவருக்கு அறிவில்லை என்பது தான் பொருள்.

சீறிக் கடிக்கின்ற பாம்பினால் ஒரே ஒரு நன்மை பாம்பு கடிக்க முன்னர் தெரியும். புடையன் பாம்பு எங்கே எப்படிக் கடிக்கும் என்று தெரியாது. இரண்டு பாம்புகளின் கடிப்பும் தமிழினத்தை அழிக்கும் ஆகவே தமிழன் வாழ வேண்டின் தமிழன் தன்னை ஆளவேண்டும் என்ற முடிவிற்கு நாம் வந்திருக்கின்றோம்.

எதுவித சலசலப்போ எதுவித மயக்கமோ எதுவித திகைப்போ இல்லை.ஒரு காலத்தில் இனப்பிரச்சினையைத் தீர்ப்பதற்கு இணைப்பாட்சி, மாநில சுயாட்சி, பிரதேசபை, மாவட்ட சபை, அதிகார சபை, இடைக்கால அரசு என்று பல்வேறு வகையில் பேசினோம். பின்பு பொதுக்கட்டமைப்புக்கு பேசினேம். எதற்கும் இணங்காத அரசாங்கம் இனிமேல் சிங்கள தலைவர்களோடு சிங்கள மக்களோடு கொலையாளிகளுடன் கூடி வாழ முடியாது என்ற முடிவுக்கு நாம் வந்திருக்கின்றோம் என்று தெரிவித்துள்ளார்.

http://www.pathivu.com/news/main.php?subac...t_from=&ucat=1&

Print this item

  வில்லன் வேடத்தில் ரஜினி நடிப்பாரா?
Posted by: vasisutha - 10-21-2005, 04:02 PM - Forum: சினிமா - Replies (3)

<b>வில்லன் வேடத்தில் ரஜினி நடிப்பாரா?
-சத்யராஜ் எரிச்சல்!</b>


இப்போதும் ஹீரோவாக கலக்கிக் கொண்டிருக்கும் இவரை பார்த்து வில்லன் வேடத்தில் நடிக்க அழைத்தால் யாருக்குதான் கோபம் வராது

<img src='http://www.tamilcinema.com/CINENEWS/Hotnews/2005/oct/sathyaraj.jpg' border='0' alt='user posted image'>

ரஜினி நடிக்கும் சிவாஜி படம் ஒவ்வொரு அடியாக முன்னேறி வருகிறது. முதலில் டெக்னீஷியன்கள் பட்டியலை தயாரித்த அப்படத்தின் இயக்குனர் ஷங்கர், அடுத்து ஆர்டிஸ்டுகள் பக்கம் வந்திருக்கிறார். ஹீரோயின் விஷயத்தில் அவரா? இவரா? என்ற எதிர்பார்ப்புகளுக்கு முடிவு கட்டுகிற மாதிரி ஸ்ரேயாவை ஒப்பந்தம் செய்தவுடன் பத்திரிகைகளுக்கு அந்த செய்தியை தெரியப்படுத்தியதும் ஷங்கரே.

ஆனால் அவர் பத்திரிகைகளுக்கு தெரியப்படுத்த விரும்பாத இன்னொரு விஷயம் மெல்ல கசிய ஆரம்பித்திருக்கிறது. இப்படத்தில் வில்லனாக நடிக்க சத்யராஜை அணுகினாராம் ஷங்கர். அவர் அலுவலகத்தில் இருந்து போனில் விஷயத்தை சொன்னதும் எரிச்சலடைந்த சத்யராஜ், வேணும்னா என் படத்தில் வில்லன் வேஷம் ஒன்ணு இருக்கு. ரஜினி நடிக்கிறாரா கேளுங்க என்றாராம் அவர்களிடம்.

இப்போதும் ஹீரோவாக கலக்கிக் கொண்டிருக்கும் இவரை பார்த்து வில்லன் வேடத்தில் நடிக்க அழைத்தால் யாருக்குதான் கோபம் வராது என்கிறார்கள் சத்யராஜ் தரப்பில்.

சத்யராஜின் இந்த பதிலை தொடர்ந்து வழக்கம் போல் பிரகாஷ்ராஜை ஒப்பந்தம் செய்துவிட்டார்கள் அந்த வில்லன் வேடத்திற்கு.

tamilcinema.com

Print this item

  குதிரை செலக்ஷன்
Posted by: SUNDHAL - 10-21-2005, 03:53 PM - Forum: செய்திகள் : தமிழீழம் - Replies (1)

குதிரை செலக்ஷன்

அரபு நாடுகளில் அரசருக்கான குதிரையை தேர்ந்தெடுக்கும் முறையே அலாதிதான். முதலில் உயர் ஜhதிக் குதிரைகள் ஐம்பதில் ஐந்து சிறந்த குதிரைகளைத் தேர்ந்தெடுப்பர். அந்த ஐந்திற்கும் விசில் சத்தத்தைப் புரிந்து கீழ்ப்படியும்படி பயிற்சி கொடுப்பார்கள். அதன்பின்பு ஐந்து குதிரைகளுக்கும் கொழுத்த உணவு கொடுப் பார்கள். ஆனால் குடிக்கத் தண்ணீர் தராமல் பல நாட்கள் தவிக்க விடுவர். பின்னர் அந்த ஐந்து குதிரை களையும் நீர்த்த பாகத்தின் அருகே அழைத்துச் சென்று குதிரையின் கட்டுகளை அவிழ்த்து விடுவர். குதிரைகள் பாய்ந்தடித்து நீர் பருக ஓடும். அப்போது குதிரையின் நடத்துனர் விசில் அடிப்பார். அந்த நிலையிலும் விசிலுக்குக் கீழ்ப்படிந்து எந்தக் குதிரை அவரிடம் வருகிறதோ, அதுவே மன்னரின் குதிரையாகத் தேர்ந்தெடுக்கப்படுமாம்.
- குட்டி பிரசன்னா

Print this item

  162 பெண்களை திருமணம் செய்தவர்
Posted by: SUNDHAL - 10-21-2005, 03:18 PM - Forum: செய்திகள்: உலகம் - Replies (29)

162 பெண்களை திருமணம் செய்தவர்

162 பெண்களை திருமணம் செய்த 75 வயது பெரியவர் மேலும் 100 பெண்களை மணக்க விரும்புவதாக தெரிவித்து இருக்கிறார். போஸ்னியா நாட்டைச் சேர்ந்த அவர் பெயர் நெடில்ஜ்கோ இலின்சிக். என் 15 வயதில் எனக்கு முதல் திருமணம் நடந்தது. அதைத்தொடர்ந்து ஒன்றன்பின் ஒன்றாக 162 பெண்களை திருமணம் செய்து கொண்டேன் என்று அவர் கூறினார்

ஓட்டல் சர்வராக வேலை செய்த அவருக்கு பல மனைவிகள் மூலமாக 15 குழந்தைகள் உள்ளன.

என்னைவிட 20 வயது மூத்த ஜோகா என்ற பெண்ணை, அவர் வசதியான குடும்பத்தைச்சேர்ந்தவர் என்பதால் திருமணம் செய்து கொள்ளும்படி என் பெற்றோர் வற்புறுத்தினர் என்கிறார் இலின்சிக். அவர் தான் முதல் மனைவி.அவரை எனக்குப்பிடிக்கவில்லை. அதனால் விவாகரத்து செய்துவிட்டேன். அதன்பிறகு திருமணம் செய்வது அல்லது விவாகரத்து செய்வது என்று என்வாழ்க்கை கழிந்தது என்கிறார்.

162 முறை திருமணம் செய்து கொண்டபிறகும் இப்போது அவர் தனிமையில் இருக்கிறார். மேலும் 100 பெண்களை திருமணம் செய்து கொள்ளும் ஆசையும் அவருக்கு இருக்கிறது. பெண்கள் மத்தியில் நான் இப்போதும் பிரபலமாகத்தான் இருக்கிறேன் என்றும் அவர் கூறினார்
Thanks:Thanthi...


:twisted: :twisted: :twisted:

Print this item

  ஜனாதிபதி தேர்தல் 2005
Posted by: cannon - 10-21-2005, 03:01 PM - Forum: செய்திகள் : தமிழீழம் - Replies (155)

ஜனாதிபதித் தேர்தலை ஒட்டி ஐக்கிய தேசியக் கட்சியின் வேட்பாளரான ரணில் விக்கிரமசிங்கவின் " மக்கள் நிகழ்ச்சி நிரல்' என்ற தேர்தல் விஞ்ஞாபனமும், ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் வேட்பாளரான பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் " மஹிந்தவின் சிந்தனை' என்ற தேர்தல் விஞ்ஞாபனமும் வெளியாகி விட்டன.
இரண்டிலுமே மோசமான ஒரு விடயம் சுட்டிக்காட்டப்பட்டிருப்பதை தொக்கி நிற்பதை நாம் அவதானிக்க வேண்டும்.
பெரும்பான்மையினரின் விருப்பம்தான் நீதியும், நியாயமும் என்ற தோரணையில் அந்தத் தவறான கொள்கையை அடிப்படையாக வைத்தே இந்த விஞ்ஞாபனங்கள் இரண்டும் கட்டப்பட்டிருப்பதை நாம் அவதானிக்கலாம்.
அதனால்தான், இந்த இரண்டு தலைவர்களாலுமே தங்களுக்கு நீதி செய்யப்படமாட்டாது என்ற முடிவுக்கு வர வேண்டியவர்களாகத் தமிழர்கள் இருக்கின்றார்கள்.
இரண்டு பிரதான கட்சிகளின் வேட்பாளர்களுமே தாங் கள் தேர்தலில் வென்று அதிகாரத்துக்கு வந்தால் இரண்டு சர்வஜன வாக்கெடுப்புகளைத் தாங்கள் நடத்துவார்கள் என்று கூறுகின்றார்கள்.
விடுதலைப் புலிகளுடன் பேசி, இனப்பிரச்சினைக்குத் தீர்வு ஒன்றைக் கண்ட பின்னர், அது குறித்து மக்களின் அனு மதி பெற ஒரு சர்வஜன வாக்கெடுப்பையும்
அதைப் பெற்ற பின்னர், அந்தத் தீர்வை உள்ளடக்கிய புதிய அரசமைப்பை உருவாக்குவதற்கு மற்றொரு சர்வஜன வாக்கெடுப்பையும்.
தாம் நடத்துவார் என்கின்றார் ஐக்கிய தேசியக் கட்சி வேட்பாளர் ரணில் விக்கிரமசிங்க.
ஆனால், பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவோ, தாம் புலிகளுடன் பேச முன்னரே தேசிய கருத்தொருமைப்பாடு ஒன்றை உறுதிப்படுத்துவதற்காக சர்வஜன வாக்கெடுப்பு ஒன்றை நடத்துவார் என்றும், பின்னர் புலிகளுடன் பேசி இணக்கத் தீர்வு ஒன்று எட்டப்பட்டதும் அதனை நடைமுறைப் படுத்தும் புதிய அரசமைப்பைக் கொண்டுவருவதற்கு மக் களின் அனுமதியைப் பெறுவதற்காக அடுத்த சர்வஜன வாக் கெடுப்பைத் தாம் நடத்துவார் என்றும் கூறுகிறார்.
அது மட்டுமல்ல, "" பெரும்பான்மையினரின் கொள்கை யுடன் நான் உடன்படுகிறேன். எனது தனியான கருத்துக் குப் பதிலாகப் பெரும்பான்மையினரின் கருத்தை நான் ஏற் கிறேன்.'' என்று திட்டவட்டமாகத் தெரிவித்திருக்கிறார் பிர தமர் மஹிந்த.
அதாவது, எந்தத் தீர்வும் சகலருக்கும் நீதி, நியாயமாக இருப்பதை விட, பெரும்பான்மையினரின் அதாவது, தென் னிலங்கைச் சிங்களவரின் விருப்பத்தை நிறைவு செய் வதாக இருக்க வேண்டும் என்பதே முக்கியமானது என்ற கருத்தியலில்தான் இரண்டு பிரதான கட்சிகளினதும் வேட் பாளர்கள் உறுதியாக நிற்கிறார்கள். அந்தக் கொள்கை நிலைப்பாட்டைத்தான் அவர்கள் பிரதிபலிக்கின்றார்கள். அதிலிருந்து வெளியே வரப்போகின்றவர்களாக அவர்களின் கருத்து நிலைப்பாடோ, போக்கோ இல்லை.
பெரும்பான்மையினரின் தீர்மானத்தைச் சிறுபான்மை யினர் மீது திணிக்கும் அடாத்துச் செயலே காலங்காலமாக அரங்கேறியது. அதன் மூலமே சிறுபான்மையினர் இலங் கைத் தீவில் அடக்கி, ஒடுக்கி உரிமைகள் பறிக்கப்பட்டனர். அதுவே இனப்பிரச்சினையாக இந்த நாட்டில் பேயுருக் கொண் டது.
நாட்டின் இன்றைய தேசியப்பிரச்சினைக்கு அடிப் படையே பெரும்பான்மையினரின் ஆதிக்கத்தைச் சிறுபான்மை யினர் மீது வலிந்து புகுத்தியது ஆகும். மீண்டும் அதே வழி யில் தீர்வு காண்பார்கள் என்று தென்னிலங்கைத் தலைவர் கூறுவது சாத்தியப்படப் போவதில்லை.
இலங்கையில் பெரும்பான்மையினர் என்ற வாக்குப் பலத்தை வைத்துக் கொண்டு, சிறுபான்மையினர் மீது அவர் களை அடக்கி, ஒடுக்கும் சட்டங்களைத் திணித்த சிங்களத் தலைமைக்கு அந்த வாக்குப்பலம் மூலம் சரியான பதிலைத் தர முடியாத நிலைமை காரணமாகத்தானே ஆயுதங்களைத் தூக்கும் நிலைமை தமிழர்களுக்கு ஏற்பட்டது?
பெரும்பான்மையினரான சிங்கள மக்களை பௌத்த சிங்கள பேரினவாத சகதிக்குள் தூண்டி விழுத்திவிட்டு, அதில் இன்று வரை வெளிவராமல் தொடர்ந்து புதைந்து, அழுந்திப் போய்க் கிடக்கும் சிங்கள சமூகத்தின் இணக்கத் துடன் கிடைக்கும் தீர்வுதான் உங்களுக்குத் தரப்படும் எனத் தமிழர்களைப் பார்த்துக் கூறினால் அதை அப்படியே ஏற் பதற்குத் தமிழர்கள் ஒன்றும் முட்டாள்கள் அல்லர்.
பெரும்பான்மையினரின் கருத்து என்பது ஜனநாயகத் துக்கும், தேர்தலுக்கும் பொருத்தமான தீர்வாக இருக்கலாம். ஆனால், நீதி செய்யும் விடயத்தில் பெரும்பான்மையினரின் கருத்து அல்ல, நீதி நியாயத்துக்கே முன்னுரிமையும், தனி யுரிமையும் அளிக்கப்பட வேண்டும். அதுதான் ஒழுங்கு முறையாக இருக்கும்.
தங்களது நியாயமான அபிலாஷைகளை நிறைவு செய் யும்படியே உரிமையுடன் கேட்கிறார்கள் தமிழர்கள். பெரும் பான்மைச் சிங்களவரின் விருப்புக்குரிய "பிச்சையை' அல்ல அவர்கள் எதிர்பார்ப்பது.
எனவே, இன்று இலங்கையில் ஜனாதிபதிப் பதவிக்கு வரு வதற்கு பொருத்தமானவர் பெரும்பான்மையினரின் விருப்பத் தீர்வை நடைமுறைப்படுத்துவேன் என்று வாக்குறுதி கொடுப்பவர் அல்லர். சகல சமூகங்களுக்கும் தமிழர்கள், முஸ் லிம்கள், மலையகத் தமிழர்கள் உட்பட அனைத்து இனங் களுக்கும் நீதியான, நியாயமான தீர்வை எந்த எதிர்ப்பு வந் தாலும் நடைமுறைப்படுத்தியே தீருவேன் என்ற உறுதியும், திடமும் கொண்ட தலைவர்தான் இன்று தேவைப்படு கின்றார்.பெரும்பான்மைக்கு "சலாம்' வைத்து, "சல்யூட்' அடிக்கும் தலைவரால் நியாயம், நீதி நிலைநாட்டப்படுவது சாத்தியமானதல்ல.
இன்று ஜனாதிபதித் தேர்லில் நிற்கும் பெரும்பான்மை யினரின் இரண்டு பிரதான கட்சிகளினதும் இரு வேட்பாளர் களுமே இந்த நேர்மைத் திறத்துக்குள் தேறுபவர்கள் போல நமக்குத் தோற்றவில்லை.

http://www.uthayan.com/editor.html

Print this item

  தன் மரணத்தை கணித்த ஜோதிடருக்கு `சாவு' வரவில்லை;
Posted by: SUNDHAL - 10-21-2005, 02:58 PM - Forum: செய்திகள்: உலகம் - Replies (9)

மத்திய பிரதேச மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத் திய இந்த சம்பவம் பற்றிய விபரம் வருமாறு

மத்திய பிரதேசமாநிலம் தெற்கு போபால் பகுதியில் வசித்து வருபவர் குஞ்சிலால் மால்வியா. 75வயதாகும் இவர் பிரபல ஜோதிடராவார். இவர் கணித்து சொன்ன பல சம்பவங்கள் நடந்துள்ளன.

சமீபத்தில் இவர் தன் மரணம் பற்றிய கணிப்பை வெளியிட்டார். 2005ம் ஆண்டு அக்டோபர் மாதம் 20-ந்தேதி மதியம் 3 மணியில் இருந்து மாலை 5 மணிக்குள் தன் உடம்பில் இருந்து தனது உயிர் பிரிந்து விடும் என்று கூறி இருந்தார்.

ஜோதிடர் குஞ்சிலால் குறிப்பிட்ட தினமான நேற்று தெற்கு போபாலில் பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டது. அவரது மரணத்தை காண ஆயிரக்கணக்கான மக்கள் ஜோதிடர் வீடு அருகில் திரண்டனர்.

ஆனால் சொன்னபடி ஜோதிடர் சாகவில்லை. அவர் நல்ல உடல்நலத்துடன் இருப்பதாக டாக்டர்கள் அறிவித்தனர் அவர் தற்கொலை செய்து விடக்கூடாது என்பதற்காக போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர்.

ஜோதிடரின் கணிப்பு பலிக்காததால் மக்கள் அதிருப்தி அடைந்தனர். இது பற்றி ஜோதிடர்குஞ்சிலால் கூறுகையில் நான் சாகக்கூடாது என்று நிறைய பேர் திரண்டு கடவுளிடம் பிரார்த்தனை செய்துவிட்டனர். அதனால்தான் என் உயிர் போகவில்லை என்றார்.
Thanks:malar.........

Print this item

  Road map to war &amp; open door to extremism
Posted by: kurukaalapoovan - 10-21-2005, 02:11 PM - Forum: செய்திகள் : தமிழீழம் - No Replies

Road map to war
http://www.tamilguardian.com/beta/news_det....asp?newsid=287
Open door to extremism
http://www.tamilguardian.com/beta/news_det....asp?newsid=293

Print this item