Yarl Forum
வில்லன் வேடத்தில் ரஜினி நடிப்பாரா? - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: இளைப்பாறுங் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=8)
+--- Forum: சினிமா (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=39)
+--- Thread: வில்லன் வேடத்தில் ரஜினி நடிப்பாரா? (/showthread.php?tid=2825)



வில்லன் வேடத்தில் ரஜினி நடிப்பாரா? - vasisutha - 10-21-2005

<b>வில்லன் வேடத்தில் ரஜினி நடிப்பாரா?
-சத்யராஜ் எரிச்சல்!</b>


இப்போதும் ஹீரோவாக கலக்கிக் கொண்டிருக்கும் இவரை பார்த்து வில்லன் வேடத்தில் நடிக்க அழைத்தால் யாருக்குதான் கோபம் வராது

<img src='http://www.tamilcinema.com/CINENEWS/Hotnews/2005/oct/sathyaraj.jpg' border='0' alt='user posted image'>

ரஜினி நடிக்கும் சிவாஜி படம் ஒவ்வொரு அடியாக முன்னேறி வருகிறது. முதலில் டெக்னீஷியன்கள் பட்டியலை தயாரித்த அப்படத்தின் இயக்குனர் ஷங்கர், அடுத்து ஆர்டிஸ்டுகள் பக்கம் வந்திருக்கிறார். ஹீரோயின் விஷயத்தில் அவரா? இவரா? என்ற எதிர்பார்ப்புகளுக்கு முடிவு கட்டுகிற மாதிரி ஸ்ரேயாவை ஒப்பந்தம் செய்தவுடன் பத்திரிகைகளுக்கு அந்த செய்தியை தெரியப்படுத்தியதும் ஷங்கரே.

ஆனால் அவர் பத்திரிகைகளுக்கு தெரியப்படுத்த விரும்பாத இன்னொரு விஷயம் மெல்ல கசிய ஆரம்பித்திருக்கிறது. இப்படத்தில் வில்லனாக நடிக்க சத்யராஜை அணுகினாராம் ஷங்கர். அவர் அலுவலகத்தில் இருந்து போனில் விஷயத்தை சொன்னதும் எரிச்சலடைந்த சத்யராஜ், வேணும்னா என் படத்தில் வில்லன் வேஷம் ஒன்ணு இருக்கு. ரஜினி நடிக்கிறாரா கேளுங்க என்றாராம் அவர்களிடம்.

இப்போதும் ஹீரோவாக கலக்கிக் கொண்டிருக்கும் இவரை பார்த்து வில்லன் வேடத்தில் நடிக்க அழைத்தால் யாருக்குதான் கோபம் வராது என்கிறார்கள் சத்யராஜ் தரப்பில்.

சத்யராஜின் இந்த பதிலை தொடர்ந்து வழக்கம் போல் பிரகாஷ்ராஜை ஒப்பந்தம் செய்துவிட்டார்கள் அந்த வில்லன் வேடத்திற்கு.

tamilcinema.com


- kurukaalapoovan - 10-21-2005

வில்லனை விடுங்கோ வயதுக்கும் நரைச்சு அரை குறை மொட்டந்தலைக்கும் ஏற்ற மாதிரி சோடி நடிகளை பிடிச்சு நடிப்பரோ எண்டு கேளுங்கோ.


- Rasikai - 10-21-2005

kurukaalapoovan Wrote:வில்லனை விடுங்கோ வயதுக்கும் நரைச்சு அரை குறை மொட்டந்தலைக்கும் ஏற்ற மாதிரி சோடி நடிகளை பிடிச்சு நடிப்பரோ எண்டு கேளுங்கோ.

<!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->


- nallavan - 10-22-2005

அட ரெண்டு பேருமே பழைய வில்லன்கள் தானே?