Yarl Forum
குதிரை செலக்ஷன் - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: தகவற் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=3)
+--- Forum: செய்திகள் : தமிழீழம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=12)
+--- Thread: குதிரை செலக்ஷன் (/showthread.php?tid=2826)



குதிரை செலக்ஷன் - SUNDHAL - 10-21-2005

குதிரை செலக்ஷன்

அரபு நாடுகளில் அரசருக்கான குதிரையை தேர்ந்தெடுக்கும் முறையே அலாதிதான். முதலில் உயர் ஜhதிக் குதிரைகள் ஐம்பதில் ஐந்து சிறந்த குதிரைகளைத் தேர்ந்தெடுப்பர். அந்த ஐந்திற்கும் விசில் சத்தத்தைப் புரிந்து கீழ்ப்படியும்படி பயிற்சி கொடுப்பார்கள். அதன்பின்பு ஐந்து குதிரைகளுக்கும் கொழுத்த உணவு கொடுப் பார்கள். ஆனால் குடிக்கத் தண்ணீர் தராமல் பல நாட்கள் தவிக்க விடுவர். பின்னர் அந்த ஐந்து குதிரை களையும் நீர்த்த பாகத்தின் அருகே அழைத்துச் சென்று குதிரையின் கட்டுகளை அவிழ்த்து விடுவர். குதிரைகள் பாய்ந்தடித்து நீர் பருக ஓடும். அப்போது குதிரையின் நடத்துனர் விசில் அடிப்பார். அந்த நிலையிலும் விசிலுக்குக் கீழ்ப்படிந்து எந்தக் குதிரை அவரிடம் வருகிறதோ, அதுவே மன்னரின் குதிரையாகத் தேர்ந்தெடுக்கப்படுமாம்.
- குட்டி பிரசன்னா


- kurukaalapoovan - 10-21-2005

உப்படியோ இராணி(களை)யையும் தெரிவு செய்யாட்டி முன்னேற்றம் தான்.