![]() |
|
தன் மரணத்தை கணித்த ஜோதிடருக்கு `சாவு' வரவில்லை; - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: தகவற் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=3) +--- Forum: செய்திகள்: உலகம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=14) +--- Thread: தன் மரணத்தை கணித்த ஜோதிடருக்கு `சாவு' வரவில்லை; (/showthread.php?tid=2829) |
தன் மரணத்தை கணித்த ஜோதிடருக்கு `சாவு' வரவில்லை; - SUNDHAL - 10-21-2005 மத்திய பிரதேச மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத் திய இந்த சம்பவம் பற்றிய விபரம் வருமாறு மத்திய பிரதேசமாநிலம் தெற்கு போபால் பகுதியில் வசித்து வருபவர் குஞ்சிலால் மால்வியா. 75வயதாகும் இவர் பிரபல ஜோதிடராவார். இவர் கணித்து சொன்ன பல சம்பவங்கள் நடந்துள்ளன. சமீபத்தில் இவர் தன் மரணம் பற்றிய கணிப்பை வெளியிட்டார். 2005ம் ஆண்டு அக்டோபர் மாதம் 20-ந்தேதி மதியம் 3 மணியில் இருந்து மாலை 5 மணிக்குள் தன் உடம்பில் இருந்து தனது உயிர் பிரிந்து விடும் என்று கூறி இருந்தார். ஜோதிடர் குஞ்சிலால் குறிப்பிட்ட தினமான நேற்று தெற்கு போபாலில் பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டது. அவரது மரணத்தை காண ஆயிரக்கணக்கான மக்கள் ஜோதிடர் வீடு அருகில் திரண்டனர். ஆனால் சொன்னபடி ஜோதிடர் சாகவில்லை. அவர் நல்ல உடல்நலத்துடன் இருப்பதாக டாக்டர்கள் அறிவித்தனர் அவர் தற்கொலை செய்து விடக்கூடாது என்பதற்காக போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர். ஜோதிடரின் கணிப்பு பலிக்காததால் மக்கள் அதிருப்தி அடைந்தனர். இது பற்றி ஜோதிடர்குஞ்சிலால் கூறுகையில் நான் சாகக்கூடாது என்று நிறைய பேர் திரண்டு கடவுளிடம் பிரார்த்தனை செய்துவிட்டனர். அதனால்தான் என் உயிர் போகவில்லை என்றார். Thanks:malar......... - tamilini - 10-21-2005 அடப்பாவிகளா. அந்த மனிசன் வேறை வேலையில்லாமல் புரளியைக்கிழப்பிவிட. அதை பாக்கவேறை சனம் குவிஞ்சு. காலம் இப்படியாப்போச்சு. இந்த நேரத்தை அந்த நிலநடுக்கத்தில சிக்கி தவிக்கிற சனங்களுக்காக பயண்படுத்தியிருந்தா எவ்வளவு நல்லது. :evil: :evil: - suddykgirl - 10-21-2005 ஜஙரழவநசிறீ"வயஅடைini"ஸஅடப்பாவிகளா. அந்த மனிசன் வேறை வேலையில்லாமல் புரளியைக்கிழப்பிவிட. அதை பாக்கவேறை சனம் குவிஞ்சு. காலம் இப்படியாப்போச்சு. இந்த நேரத்தை அந்த நிலநடுக்கத்தில சிக்கி தவிக்கிற சனங்களுக்காக பயண்படுத்தியிருந்தா எவ்வளவு நல்லது. :நஎடை: :நஎடை:ஜஃஙரழவநஸ அக்கா அது நீஙகள் சொல்லவில்லையென்று அப்படி வீணாக்கி விட்டார்கள் இப்ப நீங்கள் சொல்லிவிட்டீங்கள் அல்லவா இனி பாருங்கள் - vasisutha - 10-21-2005 முந்தியும் ஒரு லூசு இப்படி செய்தது.. :evil: இதோ இணைப்பு.. http://www.yarl.com/forum/viewtopic.php?t=3079&start=0 - tamilini - 10-21-2005 Quote:அக்கா அது நீஙகள் சொல்லவில்லையென்று அப்படி வீணாக்கி விட்டார்கள் இப்ப நீங்கள் சொல்லிவிட்டீங்கள் அல்லவா இனி பாருங்கள்நான் சொன்னது ஒரு ஜீவன்ர காதில ஆவது விழுந்திச்சே அப்பாடா. றொம்ப சந்தோசம். :wink: - tamilini - 10-21-2005 Quote:"Don't walk in front of me, I may not follow.அப்படிப்போடுங்க. இங்கின நடத்திறவை கூடித்தான் நடக்க ஆக்கள் இல்லாமல் பிரச்சனையே! தடிச்ச எழுத்தில போடுங்கோ. :wink: (அடிக்கவராதிங்கள் ) :wink: - tamilini - 10-21-2005 vasisutha Wrote:முந்தியும் ஒரு லூசு இப்படி செய்தது.. :evil: இதுகளை செய்தியாக எடுத்து பத்திரிக்கையில போடவும் நிருபர்கள் தயாராக நிக்கினம் தானே பின்ன என்னத்தை செய்வினம். :wink: - kurukaalapoovan - 10-21-2005 உவை தரவளியை ஓட ஓட கலைச்சு தடி பொல்லாலை அடிச்சு கொஞ்சம் கொஞ்சமாக சித்திரவதை அனுபவிக்க வைச்சு சாகடிக்க வேணும். தலை முதுகெலும் பக்கம் அடிச்சு உணர்வில்லாமல் மயங்க பண்ணிப்போடக்கூடாது கடைசிவரை. மிச்ச சாத்திரி பூசாரிமாரை சுத்திவர நிப்பாட்டி வச்சு பாக்கவைக்க வேணும். - விது - 10-21-2005 இந்தியாவில் உள்ள மத்திய பிரதேசத்தில் போபால் நகருக்கு 200 கி.மீ தொலைவில் சிறிய நகரத்தில் வாழ்ந்து வந்த குஞ்சிலால் மாளவியா என்ற 75 வயதுடைய சோதிடர் இன்று தான் இறக்கப் போவதாக குறித்து வைத்திருந்தார். அவர் குறித்தபடியே இன்று இறந்து அனைவரையும் ஆச்சரியத்திற்கு உள்ளாக்கி மரணித்துள்ளார். இது போல தன்னுடைய பாட்டன் இறக்கும் திகதியை இந்தச் சோதிடர் 15 வருடங்களுக்கு முன்னரே கூறிவிட்டதாக இறந்த சோதிடருடைய மகன் தெரிவித்தார். http://www.alaikal.com/net/index.php?optio...id=167&Itemid=2 - Rasikai - 10-21-2005 அடடா நல்லவிடயம் :evil: |