| Welcome, Guest |
You have to register before you can post on our site.
|
| Forum Statistics |
» Members: 8,982
» Latest member: lucilegr4
» Forum threads: 9,058
» Forum posts: 83,244
Full Statistics
|
| Online Users |
There are currently 487 online users. » 0 Member(s) | 484 Guest(s) Bing, Facebook, Google
|
| Latest Threads |
±ôÀÊ ÀÈ¢ì¸Ä¡õ
Forum: நகைச்சுவை
Last Post: UsArgum
01-10-2026, 09:07 AM
» Replies: 28
» Views: 10,327
|
Mrs.Sirimao Bandaranayake
Forum: நகைச்சுவை
Last Post: GeraTep
11-14-2025, 10:46 AM
» Replies: 14
» Views: 3,235
|
Farty time
Forum: நகைச்சுவை
Last Post: ㄹㅈㄷㄹㅈ
08-26-2025, 03:48 PM
» Replies: 11
» Views: 5,608
|
கனவே கலைகிறதே
Forum: பொழுதுபோக்கு
Last Post: KULAKADDAN
04-30-2006, 06:37 PM
» Replies: 0
» Views: 6,301
|
Karuna Cadres were captur...
Forum: பிறமொழி ஆக்கங்கள்
Last Post: ஜெயதேவன்
04-30-2006, 06:17 PM
» Replies: 4
» Views: 8,649
|
என்ன நடந்தது யாழிற்கு?
Forum: உங்கள் கருத்துக்கள்
Last Post: ஜெயதேவன்
04-30-2006, 06:03 PM
» Replies: 42
» Views: 31,083
|
முடியுமானால் முயற்ச்சியுங...
Forum: போட்டிகள்
Last Post: Subiththiran
04-30-2006, 05:00 PM
» Replies: 15
» Views: 14,472
|
**சுடேக்கு** புதிர் விளைய...
Forum: போட்டிகள்
Last Post: kavithaa
04-30-2006, 04:30 PM
» Replies: 63
» Views: 38,511
|
புல்மோட்டையில் தாக்குதல்
Forum: செய்திகள் : தமிழீழம்
Last Post: Sriramanan
04-30-2006, 04:10 PM
» Replies: 2
» Views: 8,044
|
போதனை வேண்டாம்! பு...
Forum: செய்திகள் : தமிழீழம்
Last Post: alika
04-30-2006, 03:13 PM
» Replies: 4
» Views: 6,243
|
|
|
| கிளிநொச்சி மீட்பு எவ்வாறு நிகழ்ந்தது பாகம் 6 |
|
Posted by: வியாசன் - 10-23-2005, 08:58 AM - Forum: செய்திகள் : தமிழீழம்
- Replies (5)
|
 |
கிளிநொச்சி மீட்பு எவ்வாறு நிகழ்ந்தது பாகம் 6
ஓயாத அலைகள் இரண்டின் வெற்றிக்குப் பின்னணியில் பல மாவீரர்களின் தியாகங்களும், போராளிகளின் தீவிர முயற்சியும் மனவுறுதியும் அவர்களின் மனதில் ஆழமாகப் பதிந்துள்ள விடுதலை வேட்கையுமே அமைந்துள்ளன. இவற்றோடு உலகின் எந்தவொரு இராணுவ விற்பன்னர்களாலும் உணரப்பட முடியாத அளவு போரியல் தந்திரோபாயங்களைக் கொண்ட தமிழீழ தேசியத் தலைவரின் திட்டமிட்ட தாக்குதல் வியுூகங்களும். அவரின் மிக நேர்த்தியான படை நகர்த்தல் தந்திரோபாயங்களுமே இவ் வெற்றிக்கு காரணங்களாக அமைந்தன.
சிறிலங்கா இராணுவத்தால் தமிழர் பிரதேசங்களை ஆக்கிரமிப்பதற்கான மிகப் பெரும் படை நடவடிக்கையான ஜெயசிக்குறு களத்தினை எதிர்கொண்டு வந்த சமகாலத்தில் பல இராணுவ ஆய்வாளர்களாலும் உலகின் பிரசித்திபெற்ற இராணுவத் தளபதிகளாலும் அசைக்க முடியாத அதியுயர் பாதுகாப்பு நிலையிலுள்ள படைத்தளம் இதுவென வர்ணிக்கப்பட்ட இத் தளத்தினை, அவர்கள் குறிப்பிட்டதைப் போன்றே பாதுகாப்பு அரண்கள், நிலைகள் விநியோகங்கள் படை எண்ணிக்கை எறிகணைச்சூட்டு ஆதரவுகள் என்பனவற்றோடு, நிலையெடுத்திருப்பவர்களுக்கு மிகமிக சாதகமான நிலவமைப்பும் கொண்ட இத்தளத்தினை ஒரு சில நாட்களுக்குள் துடைத்தழித்ததன் மூலம் உலகின் இராணுவ வரலாற்றில் புதிய அத்தியாயத்தை உருவாக்கினார் தமிழீழ தேசியத்தலைவா.;
எண்ணிக்கையில் மிகக்குறைந்த போராளிகளை மட்டும் வைத்துக் கொண்டு ஜெயசிக்குறு பெரும் சமர் நடந்த சம நேரத்தில் இந்தப் பெரும் வலிந்த தாக்குதலை நடத்தி வெற்றிகொண்ட சந்தர்ப்பத்தில் இரு களங்களையும் சாதகமான நிலையில் வைத்திருந்த தந்திரோபாயம் பின்னய காலங்களில் எதிரிக்கு மட்டுமன்றி இராணுவ வல்லுனர்களுக்குமே பெரும் அதிர்ச்சியையும் அதிசயத்தையும் ஏற்படுத்தியிருந்தது.
இவ்வாறு வெற்றி கொள்ளப்பட்ட தளத்தின் தாக்குதலுக்கு இடப்பட்ட இரண்டு திட்டங்களில் ஒன்று ஆனையிறவிலிருந்து வரும் விநியோகத்தை தடை செய்யும் ஊடறுப்பு சமரும் அடுத்து படைத் தளத்தை தாக்கியழிக்கும் திட்டமும் என வகுக்கப்பட்டிருந்தது. இதன்படி படைமுகாமின் முன்னரங்க காவலரண்களும், இராணுவ வேலிகள் உயர்பாதுகாப்பு நிலைகள் என்பவற்றோடு நான்கு பற்றாலியன் துருப்புக்களின் கடும் எதிர்ப்பையும் விமானத்தாக்குதல், ஆனையிறவு தளத்திலிருந்து ஏவப்பட்ட எறிகணை சூட்டா தரவுகள், டாங்கிகளின் தீவிர தாக்குதல் என்பவற்றை வெற்றிகரமாக முறியடித்து முகாமைத் தாக்கியழிக்கும் திட்டத்திற்கு தலைமை வகித்தவரும் தற்போதைய வடபோர் முனைக் கட்டளைத் தளபதியுமாகிய கேணல் தீபன் அன்றைய கள நிலவரங்களையும் தமது தாக்குதல் வியுூகங்களையும் மாவீரர்களின் தியாகங்களையும் போராளிகளின் தீரமிகு தாக்குதல் வெற்றிக்கான அவர்களின் கடும் உழைப்பு என்பவற்றை இன்று இவ்வாறு நினைவுபடுத்துகிறார்.
ஓயாத அலைகள் - 01 இன் மூலம் முல்லைத்தீவு படைத்தளம் எம்மால் அழிக்கப்பட்டபின் அதன் வீழ்ச்சியை சிங்கள மக்களிடம் மறைப்பதற்காக சிறிலங்கா அரசாங்கம் மிகப் பெரும் நகர்வொன்றைச் செய்ய வேண்டிய அவசியமேற்பட்டது.
இதன்படி ஆனையிறவுத்தளத்திலிருந்து கிளிநொச்சியை கைப்பற்றுவதற்குரிய நகர்வை சிறிலங்கா இராணுவம் செய்யத் தொடங்கியது அதிலே சத்ஜெய 1,2,3 என்ற நடவடிக்கையை செய்து 1996 ஆம் ஆண்டு யுூலை மாதத்தில் கிளிநொச்சி நகரை ஆக்கிரமித்து நிலைகொண்டார்கள்.
இந்தப் பிரதேசத்தை பொறுத்த வரையில் எதிரியினுடைய பாதுகாப்பிற்கு சாதகமான புவியியல் அமைப்பை கொண்டதாகத்தான் இந்த கிளிநொச்சி பிரதேசம் உள்ளது. ஏனெனில் வயல் சார்ந்த ஒரு பிரதேசமாக இருப்பதாலும் பெரும் வெளியான பிரதேசமாகவும் சிறிய, சிறிய பற்றைகளைக் கொண்ட பகுதியாகவும் இருப்பதனால் இது ஒரு பிரதேசத்தைக் கைப்பற்றி பாதுகாக்கக் கூடிய புவியியல் அமைப்பைக் கொண்டதாக இருப்பதனால் எதிரி நிலை கொள்வதற்கு சாதகமாக அமைந்திருந்தது.
இந்தப் பகுதியைப் பிடித்தபின் பலாலியிலிருந்து விநியோக மையத்தைக் கொண்ட நீண்ட ஒரு விநியோக மார்க்கத்தையும், ஆதரவுகளையும் கொண்ட பலம் வாய்ந்த தளமாக கிளிநொச்சியை மாற்றியதோடு ஆனையிறவின் பாதுகாப்பையும் உறுதிப்படுத்தக் கூடிய வகையில்தான் இந்த கிளிநொச்சித் தளம் அமைந்திருந்தது. இத்தளத்தினுடைய அமைவு எவ்வாறிருந்ததெனில் மிகவும் இறுக்கமானதொரு பாதுகாப்பு முன்னரண்களைக் கொண்ட ஒரு பெரிய படைத்;தளமாகத்தான் இத்தளம் இருந்தது. அவர்கள் நிலை கொண்ட 1996 ஆம் ஆண்டு தொடக்கம் பலப்படுத்தி இத்தளத்தை விடுதலைப் புலிகளால் வெற்றி கொள்ள முடியாதென்ற அளவுக்கு சர்வதேச இராணுவ ஆலோசகர்களின் ஆலோசனைகளோடும் இராணுவ நிபுணர்களின் வழிகாட்;டலோடும்தான் ஆனையிறவு கிளிநொச்சி ஆகிய தளங்களைப் பலப்படுத்தி வைத்திருந்தார்கள் இத்தளத்தினுள் ஒரு பிரிகேட் துருப்புக்கள் நிலை கொண்டிருந்தன. அதாவது 54-3 பிரிகேட் இத்தளத்தினிலிருந்தது. அதற்கு ஒரு பிரிகேடியர் பொறுப்பாக இருந்தார். இவருக்குக் கீழ் கிட்டத்தட்ட நான்கு பற்றாலியன்களைக் கொண்ட இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட துருப்புக்கள் நிலை கொண்டிருந்தார்கள்.
இத்தளத்தில் இராணுவத்தினர் நிலை கொண்ட ஆரம்பகால கட்டத்தில் ஜெயசிக்குறு படையெடுப்பும் இடம்பெற்றிருந்ததனால், எமது பாதுகாப்பு வலயங்கள் பெரிய அளவில் இங்கு இருக்கவில்லை. கண்காணிப்பு நடவடிக்கைகளும் வேவு hPதியான நடவடிக்கைக்குரிய அணிகள் மட்டுமே இங்கு இருந்தார்கள். இதனால் இந்தத் தளத்திலிருந்த இராணுவத்தினர் தமது கட்டுப்பாட்டு எல்லைக்குரிய அரண்கள் தவிர்ந்த ஏனைய குறிப்பிட்ட பிரதேசத்திலும் தமது நடமாட்டத்தைக் கொண்டு ஆதிக்கம் செலுத்தி வந்தனர். இந்த வேளைதான் இராணுவம் ஆக்கிரமித்த பகுதிக்கு வெளியே உள்ள பகுதிகளில் மக்கள் தமது உடமைகளை எடுப்பதற்காகவும் பாதுகாப்பதற்காகவும் சென்றவேளை சிறுவர்கள் உள்ளிட்ட நு}ற்றுக்கும் மேற்பட்டோரை இராணுவத்தினர் கொலை செய்திருந்தார்கள்.
அதற்குப் பிற்பாடுதான் ஜெயசிக்குறு சமர் நடந்து கொண்டிருந்தபோதும் தேசியத் தலைவர் ஒரு திட்டத்தை வகுத்தார். அதாவது ஜெயசிக்குறு நடவடிக்கை நடைபெற்று மாங்குளம் கரிப்பட்டமுறிப்புப் பகுதியை அண்மித்துக் கொண்டிருக்கையில் நாங்கள் கிளிநொச்சிக்குப் பாதுகாப்பு வலயமொன்றை அமைத்து இத்தளத்தினையும் ஒரு முற்றுகைக்குள் முதற்கட்டமாக கொண்டு வந்தோம். இதன் மூலம் வெளிப்பகுதியில் ஆதிக்கம் செலுத்திய படையினரின் நடவடிக்கைகளை உள்ளே நகர்த்திக் கொண்டு சென்றபின் கிளிநொச்சி முகாமைத் தாக்குவதற்கான திட்டத்தை வகுத்து 1998 ஆம் ஆண்டு இரண்டாம் மாதம் முதலாம் திகதியளவில் தளத்தைக் கைப்பற்றுவதற்கான முதலாவது தாக்குதலை செய்தோம். அந்த தாக்குதலை செய்த போதும் திட்டத்தை முழுமையாக வெற்றிகொள்ள முடியவில்லை ஏனெனில் எமது திட்டத்தின்படி தளத்தின் மையப்பகுதியில் கரும்புலித் தாக்குதலை நடத்துவதற்காக வெடிமருந்தை ஏற்றிக்கொண்டு சென்ற வாகனம் தடம்புரண்டு வெடிக்காது போனதால் திட்டம் முழுமையாக வெற்றியளிக்கவில்லை ஆனால் குறிப்பிட்ட பகுதியை நாங்கள் கைப்பற்றினோம். அதன் பின்னர் கைப்பற்றிய பகுதியில் எமது பாதுகாப்பு அரண்களை போட்டு ஒரு இறுக்கமான முற்றுகைக்குள் கொண்டு வந்தோம். இதன் பின்னர் நாங்கள் கைப்பற்றிய பகுதியை மீள ஆக்கிரமிக்கும் நோக்கில் 1998 ஆம் ஆண்டு 4 ஆம் மாதம் 4 ஆம் திகதியும்ஃ1998 ஆம் ஆண்டு 4 ஆம் மாதம் 8 ஆம் திகதியும் பெருமெடுப்பிலான இரு நகர்வை இராணுவத்தினர் மேற்கொண்டார்கள். இதனை நாங்கள் முறியடித்தோம். இதில் 500 வரையான இராணுவத்தினர் கொல்லப்பட்டனர். 1,000 இற்கு மேற்பட்டோர் காயமடைந்தனர். ஆயுதங்களையும் கைப்பற்றினோம்.
இதற்குப் பிறகு கிளிநொச்சித் தளத்தின் நகர்வுகள் எல்லாம் கடுமையாக முடக்கப்பட்டு விட, பின்னர் அவர்கள் நகர்வை மேற்கொள்ளாமல் தாம் ஆக்கிரமித்திருக்கும் பிரதேசத்தை பாதுகாத்துக் கொண்டிருந்தார்கள்.
இந்தக் கட்டத்தில்தான் அடுத்த கட்ட தாக்குதலுக்கான தயார்ப்படுத்தல்களை தலைவர் மேற்கொண்டார். அதன்படி நாங்கள் படிப்படியாக வேவு நடவடிக்கைகளை செய்யத் தொடங்கினோம். அதில் உள்வேவினையும் முக்கியப்படுத்தியிருந்தோம்.
இதேவேளை தலைவர் ஒரு திட்டத்தை தந்திருந்தார். அதாவது கிளிநொச்சித் தளத்தை தாக்குகின்ற சந்தர்ப்பத்தில் கிளிநொச்சி தளத்தையும் பரந்தன் தளத்தையும் இடையில் துண்டாடி இத்தளத்தை தனிமைப்படுத்தித் தாக்குதலை மேற்கொள்வது தான் அடிப்படையான திட்டம். அதற்கேற்றவாறு வேவு அணிகளை நகர்த்தி உள்வேவுகளை பார்த்தோம். இதற்கு முதல் பரந்தன், ஆனையிறவு, கிளிநொச்சி ஆகிய பகுதிகள் வேவு பார்க்கப்பட்டு தகவல்கள் பெறப்பட்டன. அவற்றை உறுதிப்படுத்துவதற்காகவும் வேவு அணிகளை அனுப்பினோம். அத்தோடு முகாமை துண்டாடுவதற்கான இடத்தையும் வேவின் மூலம் தெரிவு செய்தோம் இதன்படி தலைவர் திட்டத்தினை வகுத்தார். அதில் ஆனையிறவையும் கிளிநொச்சியையும் பிரிக்கின்ற திட்டத்தையும்; பின்னர் கிளிநொச்சி தளத்தை தாக்கியழிப்பதற்கான திட்டத்தையும் வகுத்தார்.
அதிலே ஆனையிறவையும் கிளிநொச்சியையும் துண்டிப்பதற்கான திட்டத்தை தளபதி கேணல் பால்ராஜிடம் கொடுத்தார். அடுத்து முகாமை தாக்கியழிப்பதற்கான திட்டத்தை என்னிடம் தந்தார்.
இதிலே முகாமை தாக்கியழிப்பதற்கான திட்டத்தின் படி ஒன்பது பாதைகளால் முகாமுக்குள் இறங்கினோம். இதைவிட ஊடறுப்பதற்கான திட்டத்தின் படி நான்கு பாதைகளால் இறங்கும் திட்டம் ஒரு தனி நடவடிக்கையாக நடைபெற்றது. இதன்படி 1998-09-26 அதிகாலை 1.20 இற்கு சண்டை ஆரம்பிக்கப்பட்டது. சண்டைக்கான நகர்வுத் திட்டங்களில் எந்தவித சிக்கல்களும் ஏற்படவில்லை எமது திட்டத்தின் படி குறித்த நேரத்தில் சண்டையை ஆரம்பித்தோம். அதன்படி எல்லா முன்அரண்களும் கைப்பற்றப்பட்டன.
அதன் பின் அன்று காலையில் எம்மால் கைப்பற்றப்பட்ட நான்கு பகுதியாலும் இராணுவத்தினர் முறியடிப்பு நடவடிக்கையை மேற்கொள்ளத் தொடங்கினார்கள். இந்தப்பகுதிகள் எல்லாம் வெளியான பகுதியாக இருந்தன. இராணுவத்தை பொறுத்தவரையில் டாங்கிகள், விமானப்படையின் ஆதரவுகள், ஆட்லறி சூட்டாதரவுகள் எனப் பல ஆதரவுகளோடு நாங்கள் கைப்பற்றி நுளைந்த பகுதிகள் எல்லாவற்றையும் முறியடித்து எமது அணிகளை அகற்றுவதற்கான நடவடிக்கையை காலை 5.30 தொடக்கம் மிகத் தீவிரமாக மேற்கொள்ளத் தொடங்கினர்;. அந்தத் தீவிர நடவடிக்கையால் நாங்கள் பிடித்த கணிசமான நகர்வுப் பாதைகள் எங்களிடமிருந்து விடுபட்டுப் போய் விட்டன.
அத்தோடு எதிரி விமானப்படை ஆட்லறிகளாலும் தொடர்ந்து எங்கள் மீது தாக்குதலை நடத்தி நெருக்கடியை ஏற்படுத்தத் தொடங்கினான். இந்த வேளையில் கிளிநொச்சித் தளத்தை மீட்டே தீரவேண்டுமென்ற நோக்கத்தோடு எமது அணிகளும் மூர்க்கமாக சண்டையில் ஈடுபட்டன. அதேநேரம் எதிரியும் மூர்க்கமாகத் தான் சண்டையிட்டான். 27 ஆம் திகதி பகல் முழுவதும் நடைபெற்ற சண்டை நாங்கள் பிடித்த பகுதியை எதிரி கைப்பற்றுவதும் எதிரி பிடித்த பகுதியை நாங்கள் கைப்பற்றுவதுமாகத்தான் அன்று முழுவதும் நாங்கள் நுழைந்த பகுதிக்குள் சண்டை நடைபெற்றுக் கொண்டிருந்தது. நாங்கள் 27 ஆம் திகதி எதிரியின் முகாம் பகுதிக்குள் முழுமையாக நுழையவில்லை. முன்னரங்க நிலைகளை உடைத்துத்தான் சண்டையிட்டுக் கொண்டிருந்தோமே தவிர மையப்பகுதியை நோக்கிய நகர்வை எதிரி முடக்கியிருந்தான்.
இதேவேளை கிளிநொச்சிக்குளத்துப் பகுதியால் இறங்கி ஒரு இரகசிய நகர்வை மேற்கொண்ட அணியின் தொடர்பு 27 ஆம் திகதி 12 மணியோடு அற்றுப் போனது. அதேநேரத்தில் கேணல் விதுசாவின் அணிகள் இறங்கிய பாதைகளில் ஒரு சில பாதைகளின் தொடர்பு துண்டிக்கப்பட்டுவிட்டன. அதே போன்று தளபதி ராமின் பகுதியால் இறங்கிய பாதைகளில் ஓடுபாதை தான் தக்கவைக்கப்பட்டிருந்தது. அவ்வளவு கடும் இறுக்கமாக உக்கிர சண்டை நடந்தது. 27 ஆம் திகதி சண்டை முழுவதும் நாங்கள் உள்நுழைந்த பாதைகளை தக்க வைப்பதற்காகத்தான் சண்டையிட்டுக் கொண்டிருந்தோம் இதிலே நாங்கள் விழவிழ அந்த இடத்தை பிடிப்பதும் தக்க வைப்பதுமாக வர்ணிக்கக்கூட முடியாத அளவு இறுக்கமான சண்டை நடந்தது.
அன்று நாங்கள் குறிப்பிட்ட பாதைகளை தக்க வைத்துக் கொண்டு 27 ஆம் திகதி அதிகாலையில் நாங்கள் ஒரு அதிரடியான முன்னேற்ற முயற்சியையும் மேற்கொண்டவாறு கிழக்குப் பகுதியில் கனரக ஆயுதங்களையும் பாவித்துக் கொண்டு தெற்குப் பகுதியில் கட்டடங்கள் ஓரளவு அமைந்திருந்ததனால் நகர்விற்கு ஓரளவு சாதகமாக இருந்தது. அந்தப் பகுதியால் நகர்வு மேற்கொண்டோம். அந்தப் பகுதியாலும் நான்கு பாதைகளை எடுத்திருந்தோம். அதிலும் இரண்டு பாதைகள் முடக்கப்பட்;டதோடு ஒருபாதை கடும் எதிர்ப்பு வருகின்ற பாதையாக இருந்தது. ஆதனால் இடையில் உள்ள ஒரு பாதையால் திடீர்த் தாக்குதல் ஒன்றை மேற்கொள்ளத் தொடங்கினோம். அந்தப்பகுதி ஓரளவு சாகமாக அமைந்தது. அதனு}டாக முன்னேறி கனகபுரம் ஊடாக ஏழாம் வாய்க்கால் பதைக்கு ஓர் அணிசென்றுவிட்டது.
இந்த அணி தொடர்ந்து கரடிப்போக்குப் பாதையால் நகர்வை மேற்கொள்ளும்போது எமது அணிகள் மையப்பகுதியை நோக்கி நகரத்தொடங்கின. இதனால் எல்லாப் பகுதியிலும் எதிரியின் பாதுகாப்பு அரண்கள் கைப்பற்றப்பட்டன. இதேவேளை விநியோகமும் முழுமையாக முடக்கப்பட்டதோடு விநியோகத்திற்கு வந்த ரி-55 ரக துருப்புக்காவி ஒன்றும் ஊடறுப்பு அணிகளால் தகர்க்கப்பட்டதோடு அவர்கள் பின்வாங்க கிளிநொச்சித்தளத்தினுள் படுகாயமடைந்தவர்கள் இறந்த உடல்கள் என்பன தேங்கத்தொடங்கின. அத்தோடு இராணுவக் கட்டமைப்புக்களும் சீர்குலைந்து போனது இதனால் தலைமை வகித்திருந்த பிரிகேடியர் உபாலி எதிரிசிங்க உடனடி முடிவெடுத்து காயப்பட்டவர்கள் ஆயுதங்கள் எல்லாவற்றையும் கைவிட்டு இருந்த படைகளைத்திரட்டிக் கொண்டு 28 ஆம் திகதி மாலையளவில் ஓடத்தொடங்கினர். ஓடும்போது அங்குநின்ற எமது மறிப்பு அணிகள் மேற்கொண்ட தீவிர தாக்குதலில் பெருமளவு இராணுவத்தினர் கொல்லப்பட்டனர்.
இந்தச்சமரின் வெற்றியென்பது ஒவ்வொரு போராளியும் ஒருமனிதனால் செய்யக்கூடிய செயற்பாட்டை விட அதிகமாக தம்மை அர்ப்பணித்து செய்த கடும் உழைப்பும் சண்டையில் தம்மைமாய்த்துக் கொண்ட ஒவ்வொரு மாவீரனின் தியாகத்தின் விளைவாகவும் தான் பெறப்பட்டது. அத்தோடு தேசியத்தலைவரின் சரியான திட்டமிடலும் திடமான வழிகாட்டலும் முக்கிய பங்கினை வகித்தன எனக் கூறினார்.
சுட்டது புதினத்திலிருந்து
|
|
|
| யாழில் படையினரின் ஊர்தி மோதி சிறுவன் படுகாயம் |
|
Posted by: mayooran - 10-23-2005, 04:40 AM - Forum: செய்திகள் : தமிழீழம்
- Replies (1)
|
 |
பாடசாலை முடித்து பலாலி வீதியினு}டாக வீடு திரும்பிக் கொண்டிருந்த சிறுவன் ஒருவன் மீது சிறீலங்கா படையினரின் பிக்கப் ரக ஊர்தி மோதியுள்ளது. இதனால் பலத்த காயங்களுக்கு உள்ளாகிய அச்சிறுவன் மயக்கமடைந்த நிலையில் யாழ். அரசினர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளான்.
வசாவிளான் மத்திய மகாவித்தியாலயத்தில் ஆண்டு இரண்டில் கல்வி கற்கும் ரஐPந்திரன் ரஐPவன் என்ற ஏழு அகவைச் சிறுவனே படையினரின் ஊர்தி மோதி படுகாயமடைந்துள்ளான்.
இச்சிறுவனின் குடும்பத்தினர் ஏற்கனவே இராணுவ உயர் பாதுகாப்பு வலயம் காரணமாக பலாலியில் இருந்து இடம் பெயர்ந்து வந்து ஊரெழு என்னும் இடத்தில் வாழ்ந்து வருகின்றார்கள்.
விபத்து இடம் பெற்றதும் இப் பகுதியில் கூடிய மக்கள் ஆத்திரம் அடைந்த போதிலும் சமூகப் பெரியோர்களின் அறிவுறுத்தல்களிற்கு அமைய பொறுமை காத்தனர்.
sankathi
|
|
|
| சுவிற்சர்லாந்து வாழ் வட்டக்கச்சி பிரதேச மக்கள் ஒன்றுகூடல் |
|
Posted by: வினித் - 10-22-2005, 08:04 PM - Forum: நிகழ்வுகள்
- Replies (2)
|
 |
சுவிற்சர்லாந்து வாழ் வட்டக்கச்சி பிரதேச மக்கள் ஒன்றுகூடல்
வட்டக்கச்சி வாழ் மக்கள் அனைவருக்குமான ஒன்றுகூடலும்
கலந்துரையாடலும் நடைபெறஇருப்பதால் அனைவரும் தவறாது
கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்
<b>இடம்- Föhrlibuck Str 10, 8304 Wallisellen (ZH
காலம்- 29 Oktober 2005 சனிக்கிழமை
நேரம்- பிற்பகல் 16.00 மணிக்கு
தொடர்புகட்கு- விக்கி- 031ஃ9219849 கண்ணன்-031ஃ3312085
சுதா061ஃ3321495 உதயன்- 078ஃ6756594
நேசன்-079ஃ6637968</b>
|
|
|
| நீயே தான்....! |
|
Posted by: அனிதா - 10-22-2005, 06:44 PM - Forum: கவிதை/பாடல்
- Replies (28)
|
 |
<img src='http://img404.imageshack.us/img404/4483/sneha7sy.jpg' border='0' alt='user posted image'>
[size=15]நீயே தான்....!
வரும் போதும்.. போகும் போதும்
வந்தென்னைத் தொட்டுச் செல்கிறாய்...!
சிரிக்கும் போதும்.. பேசும் போதும்..
சில்லென்று நீ வருகிறாய்...!
மழைவரும் முன்னே நீ வருவாய் என..
மகிழ்வுடன் காத்திருக்கிறேன்..!
நான் வைத்திருந்த பூவை
நீ பறித்துக் கொண்டு போன போது..
நானோ வாடி நின்றேன்..!
அந்த பூவையே நீ திருப்பி தந்த பிறகு..
அப்படியே பூரித்து நின்றேன்...!
நீ இல்லாத நாட்களில்..
உன்னைத் தேடித் தேடி திரிந்த
நாட்களைத்தான் மறக்கமுடியுமா..
நான் உன்னைத் தேடாத நாளிலும்,
நீ என்னைத் தேடி வந்ததைதான்
மறக்கமுடியுமா...
நீ தான் யாரோ..
அந்த தென்றல் காற்றோ..
நீயே தான்....!
|
|
|
| புலம்பெயர்ந்துள்ள தமிழ் மக்களுக்கான முக்கிய செய்தி |
|
Posted by: kurukaalapoovan - 10-22-2005, 11:41 AM - Forum: புலம்
- No Replies
|
 |
புலம்பெயர் வாழ் மக்களின் ஒற்றுமையையும் பலத்தையும் சர்வதேசத்திற்கு நிரூபிக்கும் காலம் கனிந்து விட்டது. உங்களது பணி தியாகம் ஒற்றமை என்பனவற்றை உலகம் அறிவதற்கான வாய்ப்பு உங்கள் வாயில் கதவைத்தேடி வந்துள்ளது. என விடுதலைப் புலிகளின் முக்கிய உறுப்பினர் திரு. க.வே.பாலகுமாரன் அவர்கள் புலம்பெயர் வாழ் மக்களிற்கு வழங்கியுள்ள செய்தியில் தெரிவித்துள்ளார். எதிர்வரும் 24ம் நாள் பிரசெல்ஸில் தமிழீழ விடுதலைப் புலிகள் மீதான ஐரோப்பிய ஒன்றியத்தின் பயணத் தடையை எதிர்த்து புலம்பெயர் வாழ் தமிழ் மக்கள் பேரணி ஒன்றை நடாத்துவதற்காக ஒழுங்கமைப்புக்களை செய்துள்ளனர்.
இதனையொட்டி விடுதலைப் புலிகளின் முக்கிய உறுப்பினரான திரு. க.வே.பாலகுமாரன் அவர்கள் புலம்பெயர் வாழ் மக்களுக்கு வழங்கியுள்ள செய்தியில் தெரிவித்திருப்பதாவது, புலம்பெயர் வாழ் மக்களின் ஒற்றுமையையும் பலத்தையும் சர்வதேசத்திற்கு நிரூபிக்கம் காலம் கனிந்து விட்டது.உங்களது பணி தியாகம் ஒற்றமை என்பனவற்றை உலகம் அறிவதற்கான வாய்ப்பு உங்கள் வாயில் கதவைத்தேடி வந்துள்ளது. இந்த வேளையில் தான் உங்களுக்கு ஒரு செய்தியை சொல்ல விரும்புகிறேன். நாம் இன்று புலத்திலே களம் காண்கின்றோம் அதற்கமைய எதிர்வரும் 24ம் நாள் பிரசெல்ஸில் உங்களுக்கென ஒரு பெரும் பணி காத்திருக்கிறது. அதில் நீங்கள் சொல்லப்போகும் செய்தி ஜரோப்பிய ஒன்றியத்தினால் எங்கள் மீது விதிக்கப்பட்டுள்ள தடையானது ஒட்டுமொத்த தமிழினத்தையும் சினமடைய வைத்துள்ளது என்பதனை ஐரோப்பிய ஒன்றியத்திற்கு உணர்த்தப்போகிறது.
எந்தவொரு தடையை விதிப்பதன் மூலமும் புலிகளை நசுக்கி பலமிழக்க செய்து பேச்சு வார்த்தை நடத்துவதென்பது முட்டாள் தனமானது என்பதையும் இது ஒர் எதிர்மாறான விளைவை எற்படுத்தப்போகின்றது என்றும் உணர்த்தப் போகின்றது.
அதுமட்டுமின்றி சிங்களப் பேரினவாதம் தனது இனவாதப் போக்கால் தமிழ் மக்களின் ஆன்மாவை தட்டியெழுப்பியுள்ளது. அது வரும் 24ம் நாள் ஒன்றாக சங்கமித்து உரத்து ஒலிக்கும். அதுவே இன்று தனியாக தமிழர்களின் கையில் பறந்து கொண்டிருக்கும் தேசியக் கொடியை சர்வதேச அரங்கில் பறக்கச் செய்யப்போகின்றது.
எனவே என் அன்பிற்குரிய மக்களே உங்கள் பலம் சர்வதேச சமூகத்தின் ஆன்மாவை தட்டியெழுப்பட்டும் எதிர்வரும் இந்த நாள் உங்கள் வெற்றி நாளாக அமையட்டும் அதற்காக எல்லோரும் அணி திரள்வோம் எனத் தெரிவித்துள்ளார்.
<i>நன்றி நிதர்சனம் இணையத்தளம்</i>
http://www.nitharsanam.com/?art=12494
|
|
|
| கருப்பட்டி அவ்லா.. சீ.. சீ.. அல்வா |
|
Posted by: Vishnu - 10-22-2005, 10:25 AM - Forum: சமையல்
- Replies (17)
|
 |
இன்னும் ஒரு பேத்தை :roll:
<b>¸ÕôÀðÊ ¼¡ø «øÅ¡ </b>
§¾¨ÅÂ¡É ¦À¡Õû¸û :
Ð. ÀÕôÒ - 50 ¸¢Ã¡õ,
¸. ÀÕôÒ - 50 ¸¢Ã¡õ,
À¡º¢ô ÀÕôÒ - 50 ¸¢Ã¡õ,
ºõÀ¡ §¸¡Ð¨Á Á¡× - 100 ¸¢Ã¡õ,
§¸¡Å¡ - 100 ¸¢Ã¡õ,
¯Õ츢 ¦¿ö - 100 ¸¢Ã¡õ,
¸ÕôÀðÊ - 1/2 ¸¢§Ä¡,
Óó¾¢Ã¢ - ´Õ §¼À¢û Šâý,
²Äòàû - º¢È¢¾Ç×.
¦ºöÓ¨È :
ݼ¡É ¦ÅÚõ Å¡½Ä¢Â¢ø, ÀÕôÒ¸û ãý¨ÈÔõ ¾É¢ò¾É¢Â¡¸ô §À¡ðÎ ¦À¡ýÉ¢ÈÁ¡¸ ÅÚò¦¾ÎòÐ, ¾É¢ò¾É¢Â¡¸ ´Õ À¡ò¾¢Ãò¾¢ø §À¡ðÎì ¦¸¡¾¢ìÌõ ¿£÷ °üÈ¢ ãÊ ¨ÅòÐ Å¢ð¼¡ø, º¢È¢Ð §¿Ãò¾¢ø «ó¾î Ýðʧħ ¿ýÌ ¦ÅóРŢÎõ. À¢ÈÌ ¿£¨Ã ÅÊòРŢðÎ º¢È¢Ð §¿Ãõ ¬È Å¢ðÎ Á¢ì…¢ ƒ¡Ã¢ø À¢§ÇÎ ãúÌõ Ũà §À¡ðÎ, ´Õ ÀÕôÒ Ü¼ ÓØ¾¡¸ இøÄ¡Áø ¿ýÌ Áº¢ò¦¾ÎòÐ Áº¢ò¾ ãýÚ ÀÕô¨ÀÔõ ´ýÈ¡¸ì ¸ÄóÐ ¦¸¡ûÇ×õ.
Óó¾¢Ã¢¨Â º¢È¢Ð §¿Ãõ ®Ãò н¢Â¢ø ÓÊóÐ ¨ÅòÐ, ¦ÁøÄ¢Â¾¡¸ º£Å¢ì ¦¸¡ûÇ×õ. Å¡½Ä¢Â¢ø ´Õ §¼À¢û Šâý ¦¿ö Å¢ðÎ, §¸¡Ð¨Á Á¡¨Åô §À¡ðÎ ¦À¡ýÉ¢ÈÁ¡¸ ÅÚì¸×õ. ÁÚÀì¸ Š¼ùÅ¢ø, àǡ츢 ¸ÕôÀðʨÂô §À¡ðÎ º¢È¢Ð ¿£÷ இÇõÀ¡¸¡ì ¸¡öîº×õ. §¸¡Ð¨Á Á¡× º¢Åó¾×¼ý ´Õ ¸ô ¦¸¡¾¢ ¿£÷ Å¢ðÎ ¸ðÊ ¾ð¼¡Áø ¸¢ÇÈ×õ. §¸¡Ð¨Á Á¡× ¿ýÌ ¦Åó¾×¼ý ¸ÕôÀðÊô À¡¨¸ °üÈ×õ. Áº¢ò¾ ãýÚ ÀÕôÒ¸¨ÇÔõ §º÷òÐ ¿Î¿ÎÅ¢ø º¢È¢Ð º¢È¢¾¡¸ ¯Õ츢 ¦¿ö Å¢ðÎì ¸¢ÇÈ×õ.
¸¨¼º¢Â¢ø §¸¡Å¡¨ÅÔõ, Á£¾¢ இÕìÌõ ¦¿ö¨ÂÔõ Å¢ðÎ «øÅ¡ À¾õ ÅÕõ Ũâø ¿ýÌ ¸¢ÇÈ¢ ²Äòàû §º÷òÐ இÈì¸×õ. ¸¨¼º¢Â¢ø º£Å¢Â Óó¾¢Ã¢Â¡ø «Äí¸Ã¢ì¸×õ.
நன்றி - மங்கைமலர்
|
|
|
| மெழுகுதிரியாய்...மெல்ல உருகு.... |
|
Posted by: vikadakavi - 10-22-2005, 09:20 AM - Forum: கவிதை/பாடல்
- Replies (2)
|
 |
வலிகளோடு தந்த ஒளி..
வண்ணமடி...
நீ வார்த்தைகளில் வந்திராத
வானமடி..
இரவுகளை உன்னால் துயில்விக்க
எண்ணமடி...
இறப்பினிலும் இருவருமாகிவிடல்
திண்ணமடி..
பனிக்கட்டி கரையக் கரைய
குளிருமடி..
கற்பு ஊரம்.. எரிய எரியக்
கரையுமடி...
கரைந்தபின்னும் உரம்
நீயடி..
எரிந்தபின்னும் வளம்
நீயடி....- என்னன்பே
காலமெல்லாம்.. இருண்டு
போன என் வாழ்க்கைக்காக
மெழுகுதிரியாய்...மெல்ல உருகு....
|
|
|
| இளம்பெண்கள் அமைதி குணம் போச்சு |
|
Posted by: SUNDHAL - 10-22-2005, 07:55 AM - Forum: செய்திகள்: உலகம்
- Replies (18)
|
 |
வளர் இளம்பெண்கள், அதாவது 12 முதல் 21 வயது வரை உள்ள டீன்ஏஜ் பெண்களிடம் அமைதி குணம் குடிகொண்டிருக்கும் என்பது காலம் காலமாக சொல்லப்படும் கருத்து. இப்போது, வளர் இளம்பெண்களிடம் அந்த குணமெல்லாம் போயே போச்சு. பள்ளி, கல்லுõரி மாணவ, மாணவிகளில் பார்த்தால், மாணவிகளுக்கு தான் அதிக கோபம் வருகிறது.
உங்கள் வீட்டில் உள்ள வளர் இளம்பெண், அமைதியாக இருப்பாரானால், அது உங்கள் அதிர்ஷ்டமே. பெரும்பாலான டீன்ஏஜ் பெண்களுக்கு இப்போதெல்லாம் "சுள்" என கோபம் பொத்துக்கொண்டு வருகிறது. இதை நீங்களே கண்டுபிடித்திருப்பீர்கள். இவை மருத்துவ ரீதியாகவும் சமீபத்திய ஆய்வில் தெரிய வந்துள்ளது. இந்தியாவில் மட்டுமின்றி, உலகம் தழுவிய நிலையில், டீன்ஏஜ் பெண்களிடம் அமைதி குணம் குறைந்து வருகிறது என்று மருத்துவ நிபுணர்கள் கூறுகின்றனர்.
அமெரிக்காவில் புளோரிடா மாநிலத்தில் உள்ள மருத்துவ ஆய்வு மையத்தின் மனோதத்துவ ஆராய்ச்சியாளர் ஜுலியா கிராபர் தலைமையில் இதுபற்றி ஒரு சர்வே சமீபத்தில் எடுக்கப்பட்டது. அமெரிக்காவில் உள்ள சில வளர் இளம்பெண்கள் மூலம் இந்த மனோதத்துவ சர்வே எடுக்கப்பட்டது.
சர்வேக்கு பின்னர் மேற்கொண்ட ஆய்வில் தெரிந்த விவரம் பற்றி நிபுணர் கிராபர் கூறும்போது, "இப்போது பள்ளி, கல்லுõரி மாணவ, மாணவிகளில், மாணவர்கள் அதிக பொறுமையும், அமைதி குணமும் கொண்டவர்களாக உள்ளனர். வளர் இளம் பருவத்தில் இருக்க வேண்டிய பொறுமை, அமைதி குணம், இப்போது பல பெண்களிடம் இருப்பதில்லை. இதற்கு காரணம், குடும்பத்தினர் அணுகுமுறை, பள்ளியில் பாடச்சுமை, சமூகத்தில் உள்ள அந்தஸ்து நிலை ஆகியவை எல்லாம் சேர்ந்து பள்ளிப் பருவத்திலேயே, ஒரு மாணவியின் மனநிலையை மாற்றி விடுகிறது. சிலர் மட்டுமே அமைதி குணத்துடன் உள்ளனர். அவர்களும் பின்னாளில் ஏற்படும் மாற்றங்களுக்கு ஏற்ப, அமைதி குணத்தை இழக்கின்றனர்' என்றார். மேலும் கூறுகையில், "பள்ளிப் பருவத்திலேயே மாணவிகள், மனதளவில் பெரிதும் அழுத்தம் காண்கின்றனர். பல விஷயங்களில் அவர்களாக முடிவெடுக்க வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது. நியூயார்க்கில் ஆயிரத்து 440 மாணவிகளிடம் எடுக்கப்பட்ட ஆய்வில், பெரும்பாலோருக்கு, கோபம், பல அளவுகளில் வருவது கண்டுபிடிக்கப்பட்டது. மாணவிகளில் கோபம் வரும் தன்மை, ஓரளவு குறையலாம், கூடலாம். ஆனால், முழு அமைதி என்பது இல்லாமல் போய்க் கொண்டிருக்கிறது. நாட்டுக்குநாடு, வளர் இளம்பெண்களிடம் இந்த மாற்றங்கள் காண முடிகிறது' என்றும் கூறினார்.
"இத்தகைய பெண்கள், சமுதாயத்திலும் உழல வேண்டியிருப்பதால், பல விஷயங்களில் பல உண்மைகளை காண வேண்டியிருக்கிறது. அதனால், அமைதி குணம், மனதில் சிறிது சிறிதாக குறையத் துவங்குகிறது. போர்க்குணம் நிரம்பி விடுகிறது. குடும்பத்தினர் தான், அவர்களின் சூழ்நிலை அறிந்து நடந்து கொண்டு, போர்க்குணத்தை குறைக்க வேண்டும்' என்றும் கிராபர் தெளிவுபடுத்தினார்.
என்ன, உங்கள் வீட்டில் இப்படி ஒரு நிலைமை இருக்கிறதா? விட்டுக் கொடுத்துப் போங்கள், உங்கள் பெண், சாதிக்கும் குணத்தையும் பெற்றிருக்க சாத்தியம் உண்டே. சாதிக்கும் எவருக்கும் அமைதி குணம் முழுமையாக இருக்க வாய்ப்பே இல்லை என்பதும் மருத்துவ நிபுணர்கள் கருத்து.
thanks:dinamalar
|
|
|
|