Welcome, Guest
You have to register before you can post on our site.

Username
  

Password
  





Search Forums

(Advanced Search)

Forum Statistics
» Members: 8,982
» Latest member: lucilegr4
» Forum threads: 9,058
» Forum posts: 83,244

Full Statistics

Online Users
There are currently 336 online users.
» 0 Member(s) | 334 Guest(s)
Bing, Google

Latest Threads
±ôÀÊ ÀÈ¢ì¸Ä¡õ
Forum: நகைச்சுவை
Last Post: UsArgum
01-10-2026, 09:07 AM
» Replies: 28
» Views: 10,327
Mrs.Sirimao Bandaranayake
Forum: நகைச்சுவை
Last Post: GeraTep
11-14-2025, 10:46 AM
» Replies: 14
» Views: 3,234
Farty time
Forum: நகைச்சுவை
Last Post: ㄹㅈㄷㄹㅈ
08-26-2025, 03:48 PM
» Replies: 11
» Views: 5,608
கனவே கலைகிறதே
Forum: பொழுதுபோக்கு
Last Post: KULAKADDAN
04-30-2006, 06:37 PM
» Replies: 0
» Views: 6,301
Karuna Cadres were captur...
Forum: பிறமொழி ஆக்கங்கள்
Last Post: ஜெயதேவன்
04-30-2006, 06:17 PM
» Replies: 4
» Views: 8,649
என்ன நடந்தது யாழிற்கு?
Forum: உங்கள் கருத்துக்கள்
Last Post: ஜெயதேவன்
04-30-2006, 06:03 PM
» Replies: 42
» Views: 31,083
முடியுமானால் முயற்ச்சியுங...
Forum: போட்டிகள்
Last Post: Subiththiran
04-30-2006, 05:00 PM
» Replies: 15
» Views: 14,472
**சுடேக்கு** புதிர் விளைய...
Forum: போட்டிகள்
Last Post: kavithaa
04-30-2006, 04:30 PM
» Replies: 63
» Views: 38,510
புல்மோட்டையில் தாக்குதல்
Forum: செய்திகள் : தமிழீழம்
Last Post: Sriramanan
04-30-2006, 04:10 PM
» Replies: 2
» Views: 8,044
போதனை வேண்டாம்! பு...
Forum: செய்திகள் : தமிழீழம்
Last Post: alika
04-30-2006, 03:13 PM
» Replies: 4
» Views: 6,243

 
  காசி ஆனந்தனுடன் ஒரு சந்திப்பு
Posted by: Birundan - 10-24-2005, 05:51 PM - Forum: தமிழீழம் - Replies (10)

"ஈழத்தின் ஒவ்வொரு பறவையும், விடுதலையின் பாடலைத் தன் இறக்கைகளில் சுமந்து உலகெங்கும் பறந்து செல்கிறது!" என்கிறார் ஈழக் கவிஞர் காசி ஆனந்தன். தாய் மண்ணைத் தொலைத்து, ஈழத்தின் நினைவுகளுடன் உலகெங்கும் அலையும் ஒவ்வொரு ஈழத் தமிழனும், இந்த உணர்ச்சிக் கவிஞரின் கவிதை களுடன்தான் வாழ்கிறான். விடுதலைப் போராளி இயக்கங்களின் துப்பாக்கி முனைகளுக்கு நிகராக, காசி ஆனந்தனின் பேனா முனையும் தங்களை பலவீனப்படுத்துவதாக என்றென்றும் ஒரு கொதிப்பு இலங்கை ராணுவத்துக்கு உண்டு. அதனாலோ என்னவோ... துப்பாக்கிப் பயிற்சிக்கு இலக்காக இவரது கட்அவுட்களை நிற்க வைத்து, சிங்கள ராணுவத்தினர் சுட்டுப் பழகியதாகவும் ஒருகாலத்தில் சொல்வார்கள். இன்றும், உலகெங்கும் தன் உணர்ச்சிக் கவிதைகளால் ஈழத் தமிழர்களுக்கான விடுதலை விளக்கை எடுத்துச் செல்லும் இந்தக் கவிஞர், இப்போது தமிழகத்தில் முடக்கப்பட்ட அகதி வாழ்வு வாழ்கிறார். மிக நீண்ட இடைவேளைக்குப் பிறகு, விகடனுக்காக தன் மௌனம் கலைக்கிறார் காசி ஆனந்தன்.

உண்ணாவிரதம் இருந்து உயிர் துறந்த விடுதலைப் புலி திலீபன் பற்றிப் பேச்சு வந்ததும், நொடிப் பொழுதில் கவிஞரின் கண்கள் குளமாகின்றன... "திலீபனின் தியாக மரணம் என் வாழ்வில் என்றும் மறக்க முடியாத தருணம். ஈழத்தின் விடுதலை உணர்வு தமிழகத்திலும் தீயாகக் கொந்தளித்த நேரம் அது. அங்கே நல்லூர் முருகன் கோயிலில் திலீபன் சாகும் வரை உண்ணாவிரதத்தைத் தொடங்கினார். நான்தான்
அந்தத் தம்பியை அழைத்துப் போய், விரத மேடையில் அமர வைத்தேன். 12 நாட்கள், சொட்டுத் தண்ணீர்கூட அருந்தாமல் வீர மரணம் அடைந்தான் தம்பி. உடல் துவண்டு, உயிர் அடங்கும் நேரத்திலும் கண்களில் ஒளி குன்றாத அந்தத் தம்பி, "என் கடைசித் தறுவாயில் காசி அண்ணாவின் கவிதை வரிகள் என் இதயத்தை நிரப்ப வேண்டும்" என்று ஆசைப்பட்டான். நம்புங்கள் தமிழ் ஈழம் நாளை பிறக்கும்... நாட்டின் அடிமை விலங்கு தெறிக்கும்! என்ற எனது வரிகளைக் கேட்டபடியே திலீபனின் மூச்சு அடங்கியது. மரணத்தைத் தன் பக்கத்திலேயே வைத்து நேசித்தவன் திலீபன். அவனுடைய தியாகத்தை நினைக்கும்போது, ஈழத்துக்குள் காலடி எடுத்துவைக்க முடியாமல் இங்கே அகதி வாழ்க்கை வாழ்கிற எனது துயரம் ஒரு பொருட்டாக எனக்குத் தோன்றுவதில்லை" என்கிறார் காசி ஆனந்தன்.

அன்று முதல் இன்று வரையிலான தனது வாழ்க்கையின் ஓட்டத்தையும் மெதுவாக நினைவு கூர்கிறார்...

‘‘ஈழம் இன்று உலகின் முற்றத் தில் நிமிர்ந்து நிற்கிறதென்றால், அதற்குப் புலிகளும் ஈழ மக்களும் கொடுத்த விலை கொஞ்சநஞ்சம் அல்ல. தமிழர்களுக்கு எதிரான வெறுப்பை விதைக்கிற வேலையை காலங்காலமாகச் செய்து வருகிறது சிங்கள அரசு. சிங்களக் குழந்தைகளின் பாடப் புத்தகங்களில்கூட வெறுப்பைக் கக்கி, பிஞ்சு உள்ளங்களிலும் தமிழர் களுக்கு எதிரான நஞ்சை விதைக்கும் அரசு அது. நான் சிறுவனாக இருந்தபோது தமிழர்களை ‘தமிழ் பள்ளோ’ என்று தான் சிங்களர்கள் அழைப்பார்கள். ‘பள்ளோ’ என்றால் ‘நாயே’ என்று சிங்களத்தில் பொருள். பள்ளோ என்று அழைத்தவர்களை ‘கொட்டியா’ என்று அழைக்க வைத்தோம். கொட்டியா என்றால், ‘புலி’ என்று பொருள்! எழுபதுகளின் துவக்கத்தில் என்னைக் கைது செய்து
சிறையில் அடைத்தது சிங்கள ராணுவம். என் தம்பிகள் சிவஜெயம், சுதர்சனையும் (பின்னர் சயனைட் அருந்தி இறந்தார்) என் தங்கை சிவமலரையும் சிறையில் அடைத்தார்கள். நான் ஐந்து ஆண்டுகள் சிறையில் இருந்தேன். ‘பத்துத் தடவை பாடை வராது. பதுங்கிக் கிடக்கும் புலியே தமிழா... செத்து மடிதல் ஒரே ஒரு முறைதான்... சிரித்துக்கொண்டே செருக்களம் வாடா!’ என்று ஒரு கவிதை எழுதினேன். அந்தக் கவிதைதான் என்னையே இலக்காக வைத்து அவர்கள் சுட்டுப் பழகும் அளவுக்கு அவர்களின் கோபத்தைப் பெரிதாக மூட்டிவிட்டது! என்னோடு சேர்ந்து என் மனைவி சரோஜினிதேவியும் தொடர்ந்து துன்புறுத்தப்பட்டாள். அப்போதுதான் நாங்கள் அங்கிருந்து அகதியாக இன்னும் சிலருடன் தமிழ்நாட்டுக்கு வந்தோம். மீண்டும் நான் அங்கே போனபோது, மிகப் பெரிய பொறுப்புகள் ஒப்படைக்கப்பட்டன. அவற்றை நிறைவேற்றிக் கொண்டிருந்தபோது, அங்கு நிலைமை மோசமடைய, மீண்டும் இந்தியாவுக்கு வந்தேன். இதோ, இப்போது பதினைந்து வருடங்களாக சென்னையில்தான் இருக்கிறேன். இப்போது நான் ஈழம் செல்ல விரும்பினால்கூட அரசு அனுமதிக்காது. நான் கண் காணிக்கப்பட்டு, முடக்கப்பட்டு இருக் கிறேன்’’ என்கிற காசிஆனந்தனின் சிரிப்பில் சிலிர்ப்பு வழிகிறது.

‘‘இந்திய அரசு ஏன் உங்களை முடக்கி வைத்துள்ளது?’’
‘‘அது ஏன் என்றுதான் எனக்கும் தெரியவில்லை. இரண்டு ஆண்டுகளுக்கு முன் என்னுடைய தாயார் சுகவீன மாகி ஈழத்தில் இறந்தபோது, ஈமக் காரியங்கள் செய்யக்கூட எனக்கு அனுமதி மறுக்கப்பட்டது. என் மீது சுமத்தப்பட்ட எந்த குற்றச்சாட்டுகளும் நிரூபிக்கப்படவில்லை. தனிப்பட்ட முறையில் எந்தத் தவறுகளும் நான் செய்யவில்லை. இந்தியாவும் ஈழமும் நட்புடன் இருக்க வேண்டும் என்று எவ்வளவோ முயன்றோம். எங்களுடையநோக்கம் ஒன்றுதான்... இந்தியா & ஈழத்தின் உறவை வலுப்படுத்துவதும், ஈழத்தில் இந்தியாவின் உதவியுடன் அமைதியைக் கொண்டுவருவதும், அமைதிப்படை ஏற்படுத்திய காயங்களைத் துடைப் பதும்தான் எங்கள் நோக்கம். நல்லெண்ணத்துடன் செயல்பட்ட என்னை மீண்டும் மீண்டும் விசாரணைக்கு உட்படுத்துவது மிகப் பெரிய துன்பமாக இருக்கிறது. என்னுடைய கடவுச்சீட்டு (பாஸ்போர்ட்) முடக்கப் பட்டுள்ளது. ‘ஈழம் எங்கள் தாய் நாடு... இந்தியா எங்கள் தந்தை நாடு’ என்று ஆன்டன் பாலசிங்கம் சொன்னதைத்தான் நினைவுகூர்கிறேன். தந்தையின் மடியில்தான் என் உயிர் போக வேண்டும் என்றிருந்தால், அதை யாரால் மாற்ற முடியும்?"

‘‘இப்போது இலங்கை யில் நிலவும் அமைதி நிலை யானதா, நிஜமானதா?’’
‘‘சிங்களர்களுக்கும் தமிழர் களுக்குமான மோதல் என்பது இன்று நேற்றல்ல... 1500 ஆண்டு காலமாக நடந்து வரும் மோதல். சிங்களர்களின் நோக்கம், சிக்கலைத் தீர்ப்பதல்ல... தமிழர்களைத் தீர்ப்பதாக இருக்கிறது. சமாதானம் பேச வந்த நார்வேயைக்கூட சிங்கள அரசால் சகித்துக்கொள்ள முடியவில்லை. நார்வே அரசுக்கு எதிரான போராட்டங்களை சிங்கள பிக்குகளைத் தூண்டிவிட்டு சந்திரிகா செய்கிறார். ஒரு பக்கம் அமைதிப் பேச்சுவார்த்தை என்று சொல்லிவிட்டு, இன்னொரு பக்கம் விடுதலைப்புலிகளை தடை செய்யக் கோரி உலக நாடுகளுக்குக் கடிதம் எழுதுகிறார் சந்திரிகா. ஒன்று தெரியுமா... வியட்நாம் தன்னுடைய வி டு த ¬ லக் கு ப் போராடியபோது சீனாவும் ரஷ்யாவும் வியட்நாமுக்கு உதவின. பாலஸ் தீனத்துக்கு அரபு நாடுகளின் ஆதரவு இருந்தது. பங்களாதேஷ் ஆக்கிரமிக்கப்பட்ட போது இந்தியா தன் கைகளில் தாங்கிப் பிடித்தது. ஆனால், 28 ஆண்டு காலமாக விடுதலைப்புலிகள்எந்த நாட்டின் தயவும் இல்லா மல் வீரம் செறிந்த ஒரு போராட்டத்தை நடத்திக்கொண்டு இருக் கிறார்கள். அமைதிப் பேச்சு வார்த்தைக் காலத்தைப் பயன்படுத்தி, நூற்றுக்கணக்கான புலிகளைச் சிங்கள ராணுவம் கொன்று குவித்துள்ளது. இதனால், நிலவுவது அமைதியா போரா என்ற ஐயம் தமிழர்கள் மத்தியில் எழுந் துள்ளது. சுனாமிக்குப் பிறகு, உயிரையும் உடைமைகளையும் வீட்டையும் இழந்த தமிழர்களுக்கு, உலக நாடுகள் வழங்கிய உதவிப் பொருட்களைக்கூட கொடுக்காமல் நீதிமன்றத்தின் மூலம் தடுத்து வைத்திருக்கிறது சிங்கள அரசு. ஆழிப் பேரலையின் கோர தாண்டவத்தைப் பார்க்க வந்த கிளிண்டனைக்கூட ஈழப் பகுதிகளுக்குச் செல்ல, பாதுகாப்பு காரணங்களைக் காட்டி மறுத்திருக்கிறது. மீண்டும் மீண்டும் தமிழர்களை யுத்த முனைக்குக் கொண்டு செல்வதே சிங்கள அரசின் விருப்பமாக இருப்பதுதான் வேதனை!’’

‘‘விடுதலைப்புலிகள் தங்கள் பெயரை சர்வதேச சமூகத்திடம் கெடுத்து
வைத்திருக்கிறார்களே?’’
‘‘புலிகளை ஒரு போராளி அமைப்பாகப் புரிந்துகொண்டால் இந்த அவப்பெயரின் மீது இருக்கும் அரசியல் புரியும். உலகெங்கிலும் தேசிய இன விடுதலைக்காகப் போராடும் போராளிக் குழுக்கள் மீது சுமத்தப்படும் குற்றச்சாட்டுதான் இது. ஈழ மக்கள் நிராயுதபாணிகளாக நின்றபோது, எமது மக்களைப் பாதுகாக்க ஆயுதம் எடுத்தவர்கள் புலிகள். புலிகள் இல்லையென்றால், இலங்கையில் தமிழர்களின் கதி என்னவாகியிருக்கும் என்பதை நினைத்துப் பாருங்கள். அமைதிப் படையுடனான மோதல்கூட தங்களைத் தற்காத்துக்கொள்ள நடத் தப்பட்டதுதானே தவிர, இந்தியாவை எதிர்த்து அல்ல! ஈழ மக்கள் கேட்பதெல்லாம் ஒன்று தான்...பாலஸ்தீனப் போராட்டத்தைப் புரிந்துகொண்டதைப்போல, ஈழப் போராட்டத்தையும் சர்வதேச சமூகம் அங்கீகரிக்கட்டும். புலிகள் தங்கள் மீது சுமத்தப்படுகிற எல்லா களங்கத்தையும் துடைத்தெறிவார்கள். எம் மண்ணின் விடுதலையை நாங்கள் மீட்டெடுப்போம். ஏனெனில், சுதந்திரம் என்பது சலுகை அல்ல... உரிமை!’’

நன்றி:விகடன் -தமிழ் நாதம்

Print this item

  மருத்துவர்களின் கவனக்குறைவால் அதிகரிக்கும் மனித இறப்புக்கள்
Posted by: கரிகாலன் - 10-24-2005, 02:06 PM - Forum: மருத்துவம் - No Replies

மேலைநாடுகளில் மருத்துவம் துரித வளர்ச்சி கண்டுவரும் அதேவேளையில் மருத்துவ கவனக்குறைவால் ஏற்பட்டு வரும் இறப்புகளின் எண்ணிக்கையும் நாளுக்குநாள் அதிகரித்து வருகின்றன. உதாரணத்திற்கு 1999இல் தேசிய அறிவியல் கல்விக்கழகம் (National Academy of Science (USA)) வெளியிட்ட அறிக்கையின் படி மருத்துவ கவனக்குறைவால் அமெரிக்காவில் ஏற்பட்ட இறப்புகளின் எண்ணிக்கை சுமார் 44,000க்கும் 98,000க்கும் குறையாமல் இருப்பதைக் காட்டுகிறது. உலகப் பணக்கார நாடுகளின் முன்னோடியான அமெரிக்காவில் மருத்துவ சேவையை எதிர்பார்ப்பது இயல்பே. ஆனால் அங்கே மருத்துவக் கவனக்குறைவால் ஏற்பட்டுவரும் இறப்புகளின் எண்ணிக்கையானது அந்நம்பிக்கையை முறியடிக்கச் செய்துள்ளது.
மருத்துவர் பலர் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படலாம் என்ற உண்மை தெரியாமல் இருக்கவும் வாய்ப்புகள் உண்டு. இதற்கு முக்கிய காரணம் மருத்துவர்கள் மீதுள்ள நம்பிக்கையாலும் அவர்களின் திறமையின்பால் உள்ள உறுதிப்பாட்டிலும்தான். நாம் அனைவரும் அறிய வேண்டிய உண்மை என்னவென்றால் மருத்துவரோ, தாதியரோ அல்லது மருத்துவ நிபுணரோ எல்லாரும் சாதாரண மனிதர்களே என்பதால் தவறு செய்வதற்கான சாத்தியம் உண்டு.

மருத்துவர்கள் புரியும் ஒவ்வொரு கவனக்குறைவான காரியத்திற்கும் தீங்கியல் சட்டத்தின் கீழ் சட்ட நடவடிக்கை எடுக்க முடியும். மருத்துவர்கள் அனைவரும் தங்கள் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக வரும் நோயாளிகளின் நலனைப் பாதுகாக்கும் கடமையைக் கொண்டுள்ளனர். மருத்துவர்கள் அக்கடமையை முறையே செய்யத் தவறும்போதும் அதனால் ஏற்படும் இழப்புகளுக்கு மருத்துவர்களே பொறுப்பேற்க வேண்டும். தீங்கியல் சட்டத்தின் கீழ் ஒரு மருத்துவர் அறிவிற்கு ஏற்புடைய கடமையை ஆற்றும் பணியில் ஈடுபட்டிருக்க வேண்டும்.

ஆங்கிலேயர் சட்டத்தின்கீழ் ஒவ்வொரு மருத்துவரும் தங்களின் நோயாளிகளின் நலனை பாதுகாக்கும் கடமையில் ஈடுபடும்போது அம்மருத்துவர் மேற்கொண்ட அதே சிகிச்சை முறையை அவரைப்போன்றே மற்றொரு தேர்ச்சி பெற்ற மருத்துவர் மேற்கொண்டிருந்தார் என்றால் அம்மருத்துவர் தனது கடமையிலிருந்து தவறவில்லை எனப்பொருள்படும் என்று எம்.சி நாயர் ஜே (MC Nair J Bolam V Frien Hospital Management Committee (1957) வழக்கொன்றில் தீர்ப்பளித்துள்ளார். அவரின் கூற்றின்படி நோயாளியைக் காப்பாற்றும் கடமையை மேற்கொண்டுள்ள அம்மருத்துவர் அவரைப் போன்ற தகுதி பெற்ற எல்லா மருத்துவர்களும் ஏற்றுக்கொள்ளும் வகையில் சிகிச்சை முறையை மேற்கொண்டிருத்தல் வேண்டும். எடுத்துக்காட்டிற்கு மருத்துவமனைக்கு வரும் அனைத்து நோயாளிகளின் உடல்நிலை எவ்வாறு உள்ளது என்பதை மருத்துவர் பரிசோதனை செய்த பின்புதான் அதற்கான சிகிச்சையை மேற்கொள்ள வேண்டும். அவ்வாறு செய்யாமல் நோயாளியின் பேச்சைகேட்டு சிகிச்சை மேற்கொள்ள அந்த மருத்துவர் முயலும்போது அவர் கவனக்குறைவாகச் செயல்படுகிறார் என்று பொருள்படும். சில மருத்துவர்கள் இதை சரி என்பர். இன்னும் சிலர் இச்செய்கை பிழையெனக் கூறலாம். ஆனால் எம்.சி நாயர் (MC Nair) அவர்களின் கருத்துபடி தவறு செய்த அம்மருத்துவர் செய்த சிகிச்சைமுறை வழக்கமாக எல்லா மருத்துவரும் செய்யும் செயல்களாக இருத்தல் வேண்டும் என்பதுதான்.


எம்.சி நாயர் (MC Nair) அவர்களின் கூற்று ஆங்கில சட்டத்தின்கீழ் போலம் ஆய்வு (Bolam Test) என்ற அழைக்கப்பட்டது. இந்த ஆய்வின் முக்கியமான நோக்கம் என்னவென்றால் தவறு செய்த மருத்துவரின் செயல் பற்றிய கருத்தை மற்றொரு மருத்துவர் முடிவு செய்வாரேயன்றி வழக்கறிஞர்கள் முடிவு செய்ய முடியாது. இந்த ஆய்வு பல வழக்குகளில் பயன்படுத்தப்பட்டது. ஒரு மருத்துவரின் தவற்றை மற்றுமொரு மருத்துவர் சுட்டிக்காட்டுவது என்பது சுலபமான காரியமன்று. கண்டிப்பாக தன் சக தொழிலில் உள்ளவரை காப்பாற்றும் நோக்கில் சாட்சி கூறும் மருத்துவராக இருப்பார். இதனால் அநீதிக்கு தள்ளப்படுவது நோயாளிகளே என சர் டொனால்சன் ஒரு வழக்கில் கூறியுள்ளார்.

(Sir Donaldson Vidaway V Bethtem (1985) என்னும் வழக்கில் கூறிய கருத்துப்படி ஒரு மருத்துவர் நோயாளியைப் பாதுகாக்கும் கடமையை விவரித்து கூறும் உரிமை சட்டத்திற்கும் நீதிமன்றத்திற்கு மட்டும்தான் உள்ளது. இந்த உரிமையைச் சட்டம் ஒருபோதும் இன்னொரு மருத்துவருக்கு விட்டுக்கொடுக்காது. ஏனெனில் மருத்துவரும் சாதாரண மனிதரேயன்றி கடவுள் அல்லர் எனக் கூறியுள்ளார்.

ஆக மொத்தத்தில் போலம் (Bolam) ஆய்வு பலவிதமான குறைபாடுகள் கொண்ட ஆய்வாகத்தான் பல நீதிபதிகளாலும் வழக்கறிஞர்களாலும் கருதப்பட்டது.

ஆங்கிலேயர் நாட்டின் உச்சநீதிமன்றம் (House Of Lords) இந்த போலம் ஆய்வை மீண்டும் ஆய்வு செய்ய முனைந்தது. பொலித்தோ சிட்டி எக்னி நலவாரியம் (Bolitho V City and Hackney Health Authority) என்னும் வழக்கில்தான் இந்த வழக்கில் போலம் Bolam ஆய்வு பயன்படுத்தப்பட்டது ஆனால் இவ்வழக்கின் சிறப்பு என்னவென்றால் மருத்துவ சோதனையிலோ அல்லது சிகிச்சை முறையிலோ தவறு விளைவிக்கும் மருத்துவர் தீங்கியல் சட்டத்தின் கீழ் தண்டிக்கப்படலாம். அவர் (மருத்துவர்) மேற்கொண்ட சிகிச்சை முறை சரியானது என்று மருத்துவர் குழுக்கள் கருத்துத் தெரிவித்தாலும் அக்கருத்து ஏற்றுக்கொள்ளக்
கூடியதா என்பதை நீதிபதிதான் முடி
வெடுக்க வேண்டும் என்பது புரொவுன்
வில்கின்சன் (Browne Wilkinson) அவர்களின் கருத்து. போலம் ஆய்வின்படி ஒரு மருத்துவர் தவறு விளைவித்துள்ளாரா என்பதை அதே துறையைச் சார்ந்த மற்றொரு மருத்துவக்குழு முடிவெடுக்கப்பட்ட பின்னரே நீதி வழங்கப்படும். ஆனால் போலிதோ (Bolitho) ஆய்வை பொறுத்தமட்டில் மருத்துவரின் சிகிச்சை முறை சரியா பிழையா என்பதை மருத்துவக்குழு ஆராய்ந்து முடிவெடுத்த பின்பு நீதிபதி அவர்கள்தான் அம்மருத்துவர் தவறு செய்துள்ளாரா இல்லையா என்பதை நிருணயம் செய்வார்.

இவ்வழக்கு ஆங்கிலேய சட்டத்தில் ஒரு மாற்றத்தைக் கொண்டு வந்துள்ளது என்றால் அது மிகையாகாது.

நமது நாட்டிலும் நம் நீதிமன்றம் போலம் (Bolam) ஆய்வைக் கொண்டு மருத்துவர்களின் தவறை நிருணயித்து வருகிறது. நமதுநாட்டு மருத்துவர் செய்யவேண்டியதெல்லாம் மருத்துவத்துறை வழக்கத்தில் இருக்கும் ஏற்புடைய சிகிச்சைமுறைகளைக் கையாளுவதுதான். இந்த வழக்கிலுள்ள சிகிச்சைமுறையை கையாள தவறும்போது நமது நாட்டு மருத்துவர்கள் நீதிமன்றத்தால் தண்டிக்கப்படலாம். சட்டத்துறையின் கீழ் மருத்துவர்களுக்கென ஏற்படுத்தப்பட்ட சட்ட விதிமுறைகள் சிலவற்றை இங்கே தருகின்றோம்.

(1) தன் திறமைக்கு அப்பாற்பட்டு சிகிச்சை முறையை ஒருபோதும் மேற்கொள்ளக் கூடாது. சந்தேகம் எழும்போது அனுபவம்பெற்ற மருத்துவரிடம் உதவியை நாட வேண்டும்.

(2) எந்தவித சிகிச்சையை மேற்கொண்டாலும் அதற்கு தேவையான உதவிகளும் மருத்துவக் கருவிகளும் தயாராக இருத்தல் வேண்டும். எதிர்பாராது எதிர்நோக்கும் எல்லாவித பிரச்சனைகளையும் சந்திக்கும் ஆற்றல் இருத்தல் வேண்டும்.

(3) மருத்துவ சிகிச்சைக்காகப் பயன்படும் கருவிகளின் பயன்பாட்டை நன்கு அறிந்திருத்தல் வேண்டும். அக்கருவிகள் நன்றாகச் செயல் படுகிறதா என்பதை சிகிச்சை ஆரம்பிப்பதற்கு முன்பே சோதனை செய்து கொள்ளல் வேண்டும்.

(4) எந்தவித சிகிச்சையை மேற்கொள்வதற்கு முன்பு நோயாளிக்குச் சிகிச்சை முறையை பற்றிய விளக்கமும் அதன் பின்விளைவுகள் பற்றியும் விளக்கிக்கூற வேண்டும்.

(5) மருத்துவ முடிவுகளைப் பதிவேட்டில் எழுதிய பின்பு அதனைப் பாதுகாப்பான இடத்தில் வைக்க வேண்டும். அப்பதிவேட்டில் தேவையான விவரங்களைக் குறித்துவைக்க வேண்டும். இது மற்ற மருத்துவர்கள் தொடர்ந்து சிகிச்சை முறையைப் பின்பற்றுவதற்கு எளிதாக இருக்கும்.

இந்த விதிமுறைகளைச் சரிவர செய்வதன்வழி மருத்துவர்கள் கவனக்குறைவுடன் செயல்படுவதை தவிர்க்கலாம் என்றாலும் பலர் இன்னும் மருத்துவ கவனக்குறைவால் அவதியுற்றுக் கொண்டுதான் இருக் கின்றனர். மருத்துவத்துறை என்பது பலவிதமான சவால்களைக் கொண்ட ஒரு துறை என்பதை பலராலும் மறுக்க முடியாது. ஒரு மருத்துவரை நாம் கடவுளுக்குச் சமமாகப் போற்றுவதில் தவறேதுமில்லை. தவறு செய்பவர் யாராக இருந்தாலும் சட்டம் அவர்களைத் தண்டிக்கலாம். மருத்துவரின் கவனக்குறைவால் பலர் பல்வேறு இன்னல்களுக்கு ஆளாகி உள்ளனர். யாரிடம் போய் இந்த இழப்புக்கு நீதி கேட்பது என்று தெரியாமல் தத்தளித்துக் கொண்டிருக்கின்றனர். சட்டப்படி தீங்கியல் சட்டத்தின்கீழ் நடவடிக்கை எடுக்க கூடும்?.


நன்றி செம்பருத்தி

Print this item

  ஜெயரட்னத்தை 6 மாதமாக தேடும் சிறிலங்கா படை
Posted by: வினித் - 10-24-2005, 10:35 AM - Forum: செய்திகள் : தமிழீழம் - Replies (2)

[b]ஜெயரட்னத்தை 6 மாதமாக தேடும் சிறிலங்கா படை
[திங்கட்கிழமை, 24 ஒக்ரொபர் 2005, 15:34 ஈழம்] [கொழும்பு நிருபர்]
கல்கிசை சிறிலங்கா காவல்துறையின் பயங்கரவாதத் தடுப்புப் பிரிவின் இரண்டாவது அதிகாரியாகப் பணியாற்றிய ரி.ஜெயரட்னம் கடத்தப்பட்டு 6 மாதங்கள் கடந்துள்ள போதிலும் அவரைப் பற்றியத் தகவல்களை இதுவரை கண்டறிய பாதுகாப்புப் படையினால் முடியாது போயுள்ளது.


கடத்தப்பட்ட ஜெயரட்னம் கல்கிசை பயங்கரவாதத் தடுப்புப் பிரிவு பொறுப்பதிகாரி மொகமட் நீலாப்தீனுக்கு அடுத்த நிலை அதிகாரியாக கடமையாற்றி வந்தார். பின்னர் அங்கிருந்து வனாத்தவில்லுப் பிரதேசத்திற்கு இடமாற்றம் பெற்றுச் சென்று மீண்டும் பம்பலப்பிட்டி காவல் நிலையத்தில் சேவையாற்றி வந்தார்.

இந்த நிலையில் கடந்த ஏப்ரல் மாதம் 21 ஆம் திகதி அதிகாலை கல்கிசை உணவு விடுதிக்கு அருகில் ஜெயரட்ணம் கடத்தப்பட்டார்.

ஜெயரட்ணம் கடத்தலையடுத்து கல்கிசை பயங்கரவாத தடுப்புப் பிரிவு பொறுப்பதிகாரி நீலாப்தீன் நாட்டைவிட்டு வெளியேறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
www.puthinam.com

Print this item

  வன்னி ரெக்கின் வருடாந்த அறிக்கை.
Posted by: narathar - 10-24-2005, 10:27 AM - Forum: செய்திகள் : தமிழீழம் - Replies (2)

வன்னி ரெக்கின் வருடாந்த அறிக்கையைப் படிப்பதற்கு கிழே அளுத்தவும்.

தமிழில் ஒரு சில வரிகள்.
IITPO என்கின்ற புலம் பெயர் தொழில் நுட்பவியலாளர்களால் கிளி நொச்சியில் நடாத்தப்படும் வன்னிரெக்கின் இன்றய நிலவரத்தையும் எதிர்காலத் திட்டங்களையும் இந்த அறிக்கை தருகிறது.

முக்கியமான விடயங்கள்,

வன்னி ரெக் சுனாமி உதவி வழங்கும் நிறுவனக்களுக்கு வழங்கிய பங்களிப்பு.

வட-கிழக்கில் வெளி நாட்டு செலவாணியைப் பெற்றுத் தரக் கூடிய மனித வளப் பயன்பாட்டை அபிவிருத்தி செய்யும் நோக்குடன் அமைக்கப் பட்ட ரெக் ஷாக் இனால் பெறப்பட்ட வெளி நாட்டு நிறுவங்களின் வெளி வழங்கல் முயற்ச்சிகள்,அதனால் வேலை வாய்பைப்பெற்றவர்கள் பற்றிய விபரம்.

புதிய கற்கை நெறியில் இணைந்தவர் விபரம்.
அரச சார்பற்ற நிறுவனக்கள்,யாழ் பல்கலைக் கழகம் உடனான இனைப்புக்கள்.

புலம் பெயர்ந்தவரின் வருகை பங்கழிப்பு விபரம்.

அடுத்த கட்ட நடவடிக்கைத் திட்டம்.

உங்கள் பங்கழிப்பை வழங்குவதற்கான விபரங்கள் தொடர்பாடலுக்கான மின் அஞ்ஞல் முகவரிகள்.

http://www.megaupload.com/?d=04K73HFD

Print this item

  திருவாளர் குகதாசன் இயற்கை எய்தினார்
Posted by: VERNON - 10-24-2005, 08:59 AM - Forum: துயர்பகிர்வு / நினைவுகூரல் - Replies (22)

யாழ் இந்துக் கல்லுhரி முந்நாள் அதிபரும் தாவரவியல் ஆசிரியருமான திருவாளர் குகதாசன் இயற்கை எய்தினார்
எனும் துயரத்தை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்
http://jaffnahindu.org/php/forum/viewtopic.php?t=79

Print this item

  "பெல்ஜியத்தில் எழுக தமிழ்"
Posted by: cannon - 10-24-2005, 06:10 AM - Forum: தமிழ் /தமிழர் - Replies (17)

தமிழீழ விடுதலைப் புலிகள் மீதான பயண ஐரோப்பிய ஒன்றியத்தின் தடையை நீக்க வலியுறுத்தி பெல்ஜியத்தில் இன்று திங்கட்கிழமை 'எழுக தமிழ்' எனும் முழக்கத்தோடு பாரிய தமிழர் உரிமைப் பேரணி நடைபெற உள்ளது.


பெல்ஜியத்தின் பிரெசெல்ஸ் நகரில் அமைந்துள்ள ஐரோப்பிய ஒன்றியத்தின் தலைமைச் செயலகம் முன்பாக இந்த பேரணி நடைபெற உள்ளது.

இந்தப் பேரணியில் பங்கேற்பதற்காக அனைத்து நாடுகளிலிருந்தும் புகலிடத் தமிழர்கள் வானூர்திகளிலும் தங்களது வாகனங்களிலும் பேரூந்துகளிலும் அலை அலையாக பெல்ஜியம் நோக்கி திரண்டு வருகிறார்கள்.

புகலிட நாடுகளில் இயங்கி வரும் அனைத்து சமூக, கலாச்சார, அரசியல், மகளிர், இளையோர் மற்றும் விளையாட்டுக் கழகத்தினரும் முதல் முறையாக இப்பேரணிக்காக ஒன்று திரண்டுள்ளனர். யேர்மன், பிரான்ஸ், சுவிஸ், நெதர்லாந்து நாடுகளிலிருந்து பத்தாயிரத்துக்கும் அதிகமானோர் இப்பேரணியில் கலந்து கொள்வதற்கான போக்குவரத்து ஒழுங்குகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளில் தமிழர் அமைப்புகளுடன் இணைந்து பணியாற்றும் சர்வதேச மனித உரிமைச் செயற்பாட்டாளர்களும் இந்த பேரணியில் உரையாற்றுகின்றனர்.

தமிழீழத்திலிருந்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சிறிலங்கா நாடாளுமன்ற உறுப்பினர்களும் இன்றைய பேரணியில் பங்கேற்கின்றனர்.

பேரணியின் முடிவில் பிரகடனமும் வெளியிடப்பட உள்ளது.

- இலங்கைத்தீவின் இணக்க முயற்சிகளில் ஐரோப்பிய சமூகம் நீதியானதும், பாரபட்சமற்றதுமான பங்கை வகித்தல் வேண்டும்.

- இலங்கைத்தீவின் சமாதானப் பேச்சுக்களிலும், போர்நிறுத்த உடன்பாட்டிலும் சம தரப்பாகப் பங்கேற்கும் தமிழர்களின் தேசியத் தலைமையான தமிழீழ விடுதலைப் புலிகளை அங்கீகரித்து கௌரவமாக நடாத்துதல் வேண்டும்.

- இலங்கைத்தீவின் வடக்கு கிழக்கினை தாயகமாகக் கொண்ட தமிழ் மக்களின் தாயகம், தேசியம், சுயநிர்ணயம் என்பனவற்றைக் தளமாகக் கொண்ட அரசியல் நிலைப்பாட்டை ஐரோப்பிய சமூகம் ஆதரித்து - மதித்து சமாதான முயற்சிக்கு ஆதரவு தரல் வேண்டும்.

- விடுதலைப் புலிகளுக்கும், தமிழ் ஊடகவியலாளர்களுக்கும், புத்திஜீவிகளுக்கும் எதிராக சிறிலங்கா இராணுவ உளவுத்துறையினால் நடாத்தப்படும் நிழல் போரைப் பயங்கரவாதம் என ஐரோப்பிய சமூகம் பகிரங்கமாக பிரகடனப்படுத்தல் வேண்டும்.

- ஐரோப்பாவில் வாழும் தமிழ் மக்கள் இலங்கைத்தீவில் ஒடுக்கப்பட்டு, துன்புறும் தமிழ் மக்களிற்கு ஆதரவு தருவதற்கும், அவர்கள் மீதான சிறிலங்கா பேரினவாத பயங்கரவாதத்தை எதிர்த்துக் குரல் கொடுப்பதற்கும் உரிமை கொண்டவர்கள் என்பதை ஐரோப்பிய சமூகம் ஏற்றுக் கொள்ளல் வேண்டும்

ஆகிய கோரிக்கைகள் அந்தப் பிரகடனத்தில் இடம்பெறக் கூடும் என்று ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.

http://www.eelampage.com/?cn=21102

Print this item

  நான் சுப்பிரமணி
Posted by: supramani - 10-24-2005, 04:06 AM - Forum: அறிமுகம் - Replies (30)

எல்லோக்கும் என் வணக்கங்கள். என் பெயர் சுப்பிரமணியம். எல்லோரும் என்னை சுப்பிரமணி, சுப்பிரமணி என்று கூப்பிடுவினம்.

Print this item

  மாங்காய் சட்னி செய்வோமா
Posted by: RaMa - 10-24-2005, 02:54 AM - Forum: சமையல் - Replies (11)

தேவையான பொருட்கள்

மாங்காய் 450கிறாம்
கடுகு 1 தேக்கரண்டி
பூடு 8 பல்லு
இஞ்சித் துண்டு சிறிதளவு
சீனி 2 தேக்கரண்டி
மிளகாய்த்தூள் 2 தேக்கரண்டி
கறுவாத்தூள் அரை தேக்கரண்டி
உப்புத்தூள் தேவைக்கு
வினாகிரி 2 கப்
பிளம்ஸ் 100 கிறாம்


செய்முறை

மாங்காயின் தோலை நீக்கி மெல்லிய சீவலாக வெட்டி உப்புப்பிரட்டி 8-10 மணிநேரம் வெயிலில் உலர்த்தவும். பின்னார் மசியத்தட்டி எடுக்கவும்
கடுகு, பூடு, இஞ்சி அகியவற்றை சிறிது வினாகிரி விட்டு அரைத்தெடுக்கவும்....
மிகுதி வினாகிரியை ஒரு பாத்திரத்தில் சீனி தேர்த்து காய்ச்சவும்..
சீனி கதைந்து தடித்ததும் மசித்து வைத்த மாங்காய் மிளகாய்த்தூள் கறுவாப்பொடி என்பவற்றையும் உப்பையும் அளவாய் போட்டு காய்ச்சி அதிக தளர்வாகவோ இறுக்கமாகவே தடித்த பாகு போன்ற பதத்தில் இறக்கி அறவிட்டு பிலாம்சை போடவும்.


நன்றி: துளசி

Print this item

  எந்த பொருளாதாரம் சிறந்தது
Posted by: adithadi - 10-23-2005, 11:42 PM - Forum: சுமுதாயம் (வாழ்வியல்) - Replies (1)

முதலாளித்துவ அமெரிக்காவின் பொருளாதாரம்மா அல்லது சீனாவின் பொருளாதாரமா? விளக்கம் தாருங்கள்.

Print this item

  மீண்டும் லண்டனில் ஒளிக்கீற்று!
Posted by: cannon - 10-23-2005, 10:15 PM - Forum: புலம் - Replies (2)

இன்று லண்டன் வோல்தம்ஸ்ரோ பகுதியுள்ள அசெம்பிளி மண்டபத்தில் "விடுதலைப்பேரொளி" நூல் வெளியீட்டுவிழா மிக உணர்வுபூர்வமாக நடைபெற்றது. மண்டபம் நிறைந்த தேசிய உணர்வாளர்கள் மத்தியில், ஈழ்த்திலிருந்து வருகை தந்திருந்த பாராளுமன்ற உறுப்பினர் திரு.கஜேந்திரன் அவர்களும், தமிழகத்திலிருந்து வருகை தந்திருந்த விடுதலைச் சிறுத்தைகள் அமைப்பின் தலைவரும், எங்களில் ஒருவனுமாகிய திரு.திருமாவளவனும் மண்டபம் நிறைந்த கரவொலி மத்தியில் உணர்ச்சிப் பேருரையாற்றினார்கள். எழுச்சிப்பாடல்கள், நடனங்கள் என இனிதே நிறைவுற்ற நிகழ்ச்சியை லண்டனில் இன உணர்வாளர்களினால் பல அச்சுறுத்தல்களுக்கு மத்தியில் நடாத்தப்பட்டுள்ளது.

பல வருடங்களாக தேசிய செயற்பாடுகள் பெருமளவில் முடக்கப்பட்டிருந்த லண்டனில் இப்படியான தேசியத்திற்கான செயற்பாடுகள் ஆரம்பிக்கப்பட்டிருப்பது, அங்கு வந்த மக்கள் பலராலேயே பாராட்டப்பட்டது இங்கு குறிப்பிடத்தக்கது. முதல் முறையாக இப்படியான தேசியத்திற்காதரவான செயற்பாடுகள் உணர்வாளர்களினால் ஆரம்பிக்கப்பட்டுள்ளானது, எத்தடைகள் வரினும், இந்த நாட்டு சட்டங்களிற்குட்பட்டு, எமது உணர்வுகளை/குரல்களை ஒலிக்க நாங்கள் தயங்கமாட்டோம் என்பதையே கோடிட்டுக் காட்டுகிறது. மீண்டும் பழையபடி ஒளிக்கீற்றுக்கள்........

Print this item