Yarl Forum
மெழுகுதிரியாய்...மெல்ல உருகு.... - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: படைப்புக் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=11)
+--- Forum: கவிதை/பாடல் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=52)
+--- Thread: மெழுகுதிரியாய்...மெல்ல உருகு.... (/showthread.php?tid=2818)



மெழுகுதிரியாய்...மெல்ல உருகு.... - vikadakavi - 10-22-2005

வலிகளோடு தந்த ஒளி..
வண்ணமடி...
நீ வார்த்தைகளில் வந்திராத
வானமடி..
இரவுகளை உன்னால் துயில்விக்க
எண்ணமடி...
இறப்பினிலும் இருவருமாகிவிடல்
திண்ணமடி..
பனிக்கட்டி கரையக் கரைய
குளிருமடி..
கற்பு ஊரம்.. எரிய எரியக்
கரையுமடி...
கரைந்தபின்னும் உரம்
நீயடி..
எரிந்தபின்னும் வளம்
நீயடி....- என்னன்பே
காலமெல்லாம்.. இருண்டு
போன என் வாழ்க்கைக்காக
மெழுகுதிரியாய்...மெல்ல உருகு....


- இளைஞன் - 10-22-2005

Quote:பனிக்கட்டி கரையக் கரைய
குளிருமடி..
கற்பு ஊரம்.. எரிய எரியக்
கரையுமடி...

என்ன தத்துவங்கள் அள்ளித் தெளிக்கிறீர்கள். அது என்ன கற்பு ஊரமா? கற்பூரமா? உங்கள் இருண்டுபோன வாழ்க்கைக்காக அவளை உருகச் சொல்லி வேண்டுவது நியாயமா?

கவிதை வரிகள் நன்றாக இருக்கின்றன.


- கீதா - 10-22-2005

நல்ல கவிதை வாழ்த்துக்கள் <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->