![]() |
|
இளம்பெண்கள் அமைதி குணம் போச்சு - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: தகவற் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=3) +--- Forum: செய்திகள்: உலகம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=14) +--- Thread: இளம்பெண்கள் அமைதி குணம் போச்சு (/showthread.php?tid=2819) |
இளம்பெண்கள் அமைதி குணம் போச்சு - SUNDHAL - 10-22-2005 வளர் இளம்பெண்கள், அதாவது 12 முதல் 21 வயது வரை உள்ள டீன்ஏஜ் பெண்களிடம் அமைதி குணம் குடிகொண்டிருக்கும் என்பது காலம் காலமாக சொல்லப்படும் கருத்து. இப்போது, வளர் இளம்பெண்களிடம் அந்த குணமெல்லாம் போயே போச்சு. பள்ளி, கல்லுõரி மாணவ, மாணவிகளில் பார்த்தால், மாணவிகளுக்கு தான் அதிக கோபம் வருகிறது. உங்கள் வீட்டில் உள்ள வளர் இளம்பெண், அமைதியாக இருப்பாரானால், அது உங்கள் அதிர்ஷ்டமே. பெரும்பாலான டீன்ஏஜ் பெண்களுக்கு இப்போதெல்லாம் "சுள்" என கோபம் பொத்துக்கொண்டு வருகிறது. இதை நீங்களே கண்டுபிடித்திருப்பீர்கள். இவை மருத்துவ ரீதியாகவும் சமீபத்திய ஆய்வில் தெரிய வந்துள்ளது. இந்தியாவில் மட்டுமின்றி, உலகம் தழுவிய நிலையில், டீன்ஏஜ் பெண்களிடம் அமைதி குணம் குறைந்து வருகிறது என்று மருத்துவ நிபுணர்கள் கூறுகின்றனர். அமெரிக்காவில் புளோரிடா மாநிலத்தில் உள்ள மருத்துவ ஆய்வு மையத்தின் மனோதத்துவ ஆராய்ச்சியாளர் ஜுலியா கிராபர் தலைமையில் இதுபற்றி ஒரு சர்வே சமீபத்தில் எடுக்கப்பட்டது. அமெரிக்காவில் உள்ள சில வளர் இளம்பெண்கள் மூலம் இந்த மனோதத்துவ சர்வே எடுக்கப்பட்டது. சர்வேக்கு பின்னர் மேற்கொண்ட ஆய்வில் தெரிந்த விவரம் பற்றி நிபுணர் கிராபர் கூறும்போது, "இப்போது பள்ளி, கல்லுõரி மாணவ, மாணவிகளில், மாணவர்கள் அதிக பொறுமையும், அமைதி குணமும் கொண்டவர்களாக உள்ளனர். வளர் இளம் பருவத்தில் இருக்க வேண்டிய பொறுமை, அமைதி குணம், இப்போது பல பெண்களிடம் இருப்பதில்லை. இதற்கு காரணம், குடும்பத்தினர் அணுகுமுறை, பள்ளியில் பாடச்சுமை, சமூகத்தில் உள்ள அந்தஸ்து நிலை ஆகியவை எல்லாம் சேர்ந்து பள்ளிப் பருவத்திலேயே, ஒரு மாணவியின் மனநிலையை மாற்றி விடுகிறது. சிலர் மட்டுமே அமைதி குணத்துடன் உள்ளனர். அவர்களும் பின்னாளில் ஏற்படும் மாற்றங்களுக்கு ஏற்ப, அமைதி குணத்தை இழக்கின்றனர்' என்றார். மேலும் கூறுகையில், "பள்ளிப் பருவத்திலேயே மாணவிகள், மனதளவில் பெரிதும் அழுத்தம் காண்கின்றனர். பல விஷயங்களில் அவர்களாக முடிவெடுக்க வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது. நியூயார்க்கில் ஆயிரத்து 440 மாணவிகளிடம் எடுக்கப்பட்ட ஆய்வில், பெரும்பாலோருக்கு, கோபம், பல அளவுகளில் வருவது கண்டுபிடிக்கப்பட்டது. மாணவிகளில் கோபம் வரும் தன்மை, ஓரளவு குறையலாம், கூடலாம். ஆனால், முழு அமைதி என்பது இல்லாமல் போய்க் கொண்டிருக்கிறது. நாட்டுக்குநாடு, வளர் இளம்பெண்களிடம் இந்த மாற்றங்கள் காண முடிகிறது' என்றும் கூறினார். "இத்தகைய பெண்கள், சமுதாயத்திலும் உழல வேண்டியிருப்பதால், பல விஷயங்களில் பல உண்மைகளை காண வேண்டியிருக்கிறது. அதனால், அமைதி குணம், மனதில் சிறிது சிறிதாக குறையத் துவங்குகிறது. போர்க்குணம் நிரம்பி விடுகிறது. குடும்பத்தினர் தான், அவர்களின் சூழ்நிலை அறிந்து நடந்து கொண்டு, போர்க்குணத்தை குறைக்க வேண்டும்' என்றும் கிராபர் தெளிவுபடுத்தினார். என்ன, உங்கள் வீட்டில் இப்படி ஒரு நிலைமை இருக்கிறதா? விட்டுக் கொடுத்துப் போங்கள், உங்கள் பெண், சாதிக்கும் குணத்தையும் பெற்றிருக்க சாத்தியம் உண்டே. சாதிக்கும் எவருக்கும் அமைதி குணம் முழுமையாக இருக்க வாய்ப்பே இல்லை என்பதும் மருத்துவ நிபுணர்கள் கருத்து. thanks:dinamalar - tamilini - 10-22-2005 Quote:மாணவர்கள் அதிக பொறுமையும், அமைதி குணமும் கொண்டவர்களாக உள்ளனர்.கேக்கவே எவ்வளவு சந்தோசம். இனி அப்ப குடும்பத்தில பிரச்சனைகள் குறைஞ்சிடும். இவைக்கு சுள் என்டு கோவம் வாறது தானே பிரச்சனையே. :evil: :twisted: - Eswar - 10-22-2005 நான் இருக்கும் தேசத்தில் காவல்துறையின் சமீபத்திய அறிக்கைகளும் இதைத்தான் சொல்கின்றன. கோபம் மட்டுமல்ல, வன்முறையிலும் (கைகலப்பு) இளம்பெண்களே சம வயதையொத்த ஆண்களை விட முன்னணியில் நிற்கிறார்கள். - tamilini - 10-22-2005 எங்க இமயமலையிலையோ..?? பின்ன நடக்கிற அட்டூழியங்களைக்கண்டு கொதிச்சு பொங்கி எழுகிறாங்க போல. - Eswar - 10-24-2005 அந்தக் காலத்திலையும் பொங்கி எழுந்தவங்கதான். அப்ப இடைக்கிடை... இப்ப அடிக்கடி.... புவி நடுக்கம் போல - Vasampu - 10-25-2005 எனி என்ன கதை கவிதைகளில் ஆணுக்கு அச்சம் மடம் நாணம் பயிர்ப்பு போன்றவை உதாரணமாக்கப்படும். அங்கங்கே ஆண்விடுதலை இயக்கங்கள் எங்காவது அதள பாதாளத்தில் இரகசியமாக கூட்டங்கள் போடுவார்கள். தீர்மானங்கள் வாசிக்கப்பட்டு அங்கேயே பலத்த கரகோசத்துடன் நிறைவேற்றப்பட்டு :roll: :roll:
- tamilini - 10-25-2005 அந்த ஆண்கள் விடுதலை இயக்கத்திற்கு தலைவர் வசம்பண்ணா. வீட்டை போக அண்ணி 2 நாள் சாப்பாட்டை கட்பண்ண. பாவம் கேக்கவே எத்தனை அழகாகிடக்கு. நடந்திச்சென்டா. (பெண்களுக்கு என்ன மனவியாதியா. ஆண்களைக்கட்டுப்படுத்த எத்தனை பேர் கிளம்பியிருக்கீங்க. - Vasampu - 10-25-2005 ஆஆஆஆஆஆஆஆ எனக்கெதிராக சதிபண்ண இப்பவே ஆரம்பிச்சிட்டாங்கோகோகோகோகோ...................................... :roll: :roll: :roll: :roll: - MUGATHTHAR - 10-25-2005 tamilini Wrote:அந்த ஆண்கள் விடுதலை இயக்கத்திற்கு தலைவர் வசம்பண்ணா. வீட்டை போக அண்ணி 2 நாள் சாப்பாட்டை கட்பண்ண. பாவம் கேக்கவே எத்தனை அழகாகிடக்கு. நடந்திச்சென்டா. என்ன எடுத்தம் கவுத்தம் எண்டு என்னதுக்கும் சாப்பாட்டை கட் பண்ணுறது அந்தக்காலம் எல்லாம் மலைஏறியிட்டுதம்மா இப்ப எல்லாம் நாங்க வீட்டை வந்து சமைச்சாத்தான் மனிசிமாருக்கு சாப்பாடு .......(தம்பி வசம்பு ஒரு துணிவிலை சொல்லிட்டன் அப்பிடித்தானே) - தூயா - 10-25-2005 சரி ஒரு மாற்றத்துக்கு எல்லாம் தலை கீழாக மாறட்டுமே? <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/wink.gif' border='0' valign='absmiddle' alt='wink.gif'><!--endemo--> கனவிலும் நடக்கிற காரியமா கதையுங்கோவன் <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- Rasikai - 10-25-2005 Vasampu Wrote:ஆஆஆஆஆஆஆஆ எனக்கெதிராக சதிபண்ண இப்பவே ஆரம்பிச்சிட்டாங்கோகோகோகோகோ....... ஆஅ தமிழினி உது நல்லாஇல்லை பாவம் நம்ம வம்பண்ணா
- Rasikai - 10-25-2005 தூயா Wrote:சரி ஒரு மாற்றத்துக்கு எல்லாம் தலை கீழாக மாறட்டுமே? <!--emo& ஆஅ தாங்களும் முன்னேற மாட்டினம் முன்னேறுவரையும் முன்னேற விட மாட்டினம் <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- Eswar - 10-25-2005 விட்டா களத்துப் பொண்ணுங்களே அடிப்பாங்க போல கிடக்கு. ம்ம்ம்.... என்னத்த சொல்ல..... - விது - 10-25-2005 [size=18]எல்லாம் கலிகாலம் தென்நாடுடைய சிவனேபோற்றி என்னாட்டவர்க்கும் இறைவா....... - Rasikai - 10-26-2005 Eswar Wrote:விட்டா களத்துப் பொண்ணுங்களே அடிப்பாங்க போல கிடக்கு. ம்ம்ம்.... என்னத்த சொல்ல..... சாச்சா ஈஸ்வர் அண்ணா நான் நல்ல பெண்ணு அப்படி எல்லாம் செய்யமாட்டன் :wink: - Vasampu - 10-26-2005 ஆமா ஈஸ்வர் இரசிகை அப்படியொன்றும் செய்யமாட்டா. ஆனால் ஒரேயடியாகப் போட்டுத் தள்ளிடுவா :roll: :roll: - Rasikai - 10-26-2005 வம்பண்ணா நான் உங்களுக்கு சப்போர்ட் பண்ணினான் நீங்கள் இப்படி எல்லாம் கட்சி மாறக்கூடாது. நான் நல்லவர்களுக்கு நல்லவள். <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- Vasampu - 10-26-2005 இரசிகை நானும் இப்ப உங்களுக்கு சப்போர்ட் பண்ணித்தானே கருத்தெழுதினான். எனிப்பாரும் இரசிகை என்றால் ஒரு பயம் கலந்த மரியாதையிருக்கும். :roll: <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :wink: அப்பாடி ஒருமாதிரி சமாளிச்சிட்டன். - Rasikai - 10-26-2005 ஆகா இதைத்தான் கூட இருந்து குழி பறிக்கிற என்று சொல்லுறதோ? |