Welcome, Guest
You have to register before you can post on our site.

Username
  

Password
  





Search Forums

(Advanced Search)

Forum Statistics
» Members: 8,982
» Latest member: lucilegr4
» Forum threads: 9,058
» Forum posts: 83,244

Full Statistics

Online Users
There are currently 488 online users.
» 0 Member(s) | 485 Guest(s)
Applebot, Bing, Google

Latest Threads
±ôÀÊ ÀÈ¢ì¸Ä¡õ
Forum: நகைச்சுவை
Last Post: UsArgum
01-10-2026, 09:07 AM
» Replies: 28
» Views: 10,325
Mrs.Sirimao Bandaranayake
Forum: நகைச்சுவை
Last Post: GeraTep
11-14-2025, 10:46 AM
» Replies: 14
» Views: 3,234
Farty time
Forum: நகைச்சுவை
Last Post: ㄹㅈㄷㄹㅈ
08-26-2025, 03:48 PM
» Replies: 11
» Views: 5,608
கனவே கலைகிறதே
Forum: பொழுதுபோக்கு
Last Post: KULAKADDAN
04-30-2006, 06:37 PM
» Replies: 0
» Views: 6,300
Karuna Cadres were captur...
Forum: பிறமொழி ஆக்கங்கள்
Last Post: ஜெயதேவன்
04-30-2006, 06:17 PM
» Replies: 4
» Views: 8,646
என்ன நடந்தது யாழிற்கு?
Forum: உங்கள் கருத்துக்கள்
Last Post: ஜெயதேவன்
04-30-2006, 06:03 PM
» Replies: 42
» Views: 31,081
முடியுமானால் முயற்ச்சியுங...
Forum: போட்டிகள்
Last Post: Subiththiran
04-30-2006, 05:00 PM
» Replies: 15
» Views: 14,469
**சுடேக்கு** புதிர் விளைய...
Forum: போட்டிகள்
Last Post: kavithaa
04-30-2006, 04:30 PM
» Replies: 63
» Views: 38,506
புல்மோட்டையில் தாக்குதல்
Forum: செய்திகள் : தமிழீழம்
Last Post: Sriramanan
04-30-2006, 04:10 PM
» Replies: 2
» Views: 8,042
போதனை வேண்டாம்! பு...
Forum: செய்திகள் : தமிழீழம்
Last Post: alika
04-30-2006, 03:13 PM
» Replies: 4
» Views: 6,241

 
  இன்ரநெற் பெருந்தெருவில் பேய்பிசாசு..
Posted by: Rasikai - 10-31-2005, 09:39 PM - Forum: சுமுதாயம் (வாழ்வியல்) - Replies (9)

<b>இன்ரநெற் பெருந்தெருவில்
பேய்பிசாசு உலாவுதென்று
பெற்றோர் அறிவாரோ!</b>

<b>-க. நவம்-

பிரபஞ்சம் பற்றிய நீண்டகாலக் கற்பனைகள் பல, இப்போது உண்மைகளென நிரூபணமாகி வருகின்றன. சூரியத் தொகுதியில் மனித சஞ்சார முயற்சிகள் இப்போதெல்லாம் சர்வ சாதாரண செய்திகளாகிவிட்டன. மனிதனது மூளைக்குள் ஒருகால் அகப்பட மறுத்த பூமிப்பந்து இன்று அவனது உள்ளங்கையில் உட்கார்ந்திருக்கின்றது. புரியாதிருந்த ஏராளம் புதிர்களின் முடிச்சுக்களை விஞ்ஞானம் ஒவ்வொன்றாக அவிழ்த்து வருகின்றது. மனித வாழ்வின் சகல பரிமாணங்களையும் விஞ்ஞானம் படிப்படியாக மாற்றி வருகின்றது. மாற்றங்கள் நிகழும் என்பது மட்டுமே மாறாது' என்ற உண்மையை நவீன விஞ்ஞானம் மென்மேலும் நிரூபித்து வருகின்றது. பழையன கழிதலும் புதியன புகுதலும் வழுவில' என்பதற்கமைய தினம் தினம் வாழ்வில் புதுமைகளை விஞ்ஞானம் புகுத்தி வருகின்றது.
இந்த விஞ்ஞானத்தின் வல்லமையினால் அளப்பரிய நன்மைகளை நாம் அனுபவித்து வருகின்றோம். அடுத்த தலைமுறையினைச் சேர்ந்த எங்கள் குழந்தைகளோ, நவீன விஞ்ஞானத்தின் பலாபலன்களை மேலும் பன்மடங்கு அனுபவிக்கத் தொடங்கிவிட்டனர். அவர்களது வாழ்வை விஞ்ஞானம் முற்றிலும் மாறுபட்ட தளத்துக்கு இட்டுச் செல்ல இருக்கின்றது. இருப்பினும், நவீன தொழில் நுட்ப வெற்றிகள் நாம் நினைத்தது போன்று சகல பிரச்சினைகளுக்கும் தீர்வு வழங்கத் தவறிவிட்டன. புதிலாக நாம் சற்றேனும் எதிர்பாராத பல புதிய பிரச்சினைகளை அவை கொண்டுவந்து சேர்த்திருக்கின்றன' என்று ஹென்றி ஃபோர்ட் ஒருமுறை கூறியிருந்தமையும் இச்சந்தர்ப்பத்தில் நினைவு கூரத்தக்கது.
நவீன விஞ்ஞான உலகில் இன்ரநெற் எனப்படும் இந்த இணையம் ஓர் அற்புதமான கண்டுபிடிப்பு. தொடர்பு ஊடகங்களில் இன்ரநெற் ஈடு இணையற்ற ஒரு சாதனை! மனித இனத்தின் வளர்ச்சிப் பாதையில் ஒரு முன்னோக்கிய பாய்ச்சலை நிகழ்த்தியுள்ள இத்துறையானது தொடர்ந்து இன்னமும் வளர்ந்து வருகின்றது. உலகின் மூலை முடுக்கெங்கும் கண்மூடித் திறக்கமுன் தொடர்புகொள்ள உதவக்கூடியது. உலகின் எல்லாப் பக்க வாசல்களையும் எங்களுக்காகத் திறந்து வைத்துள்ள தகவற் களஞ்சியம், இது. மனித நாகரிக வரலாற்றின் ஒரு மைல் கல்லாக அமைந்திருக்கும் இன்ரநெற் தொழில் நுட்பம், முழு உலகையும் எமது கைவீச்சுக்குக்கள் கொண்டுவந்துள்ளது. கைக்கெட்டாத் தூரங்களில் இருக்கும் வாய்ப்புக்களை அருகே கொண்டுவந்து சேர்த்துள்ளது. விஞ்ஞானம், தொழில்நுட்பம் என்பவற்றடன் புதிய கலை கலாசாரங்கள், வாழ்க்கைமுறைகள், அரசியல், சமூக, பொருளாதாரம் போன்ற பல துறைகள் சார்ந்த அறிவுகளின் தோற்றுவாயாக இன்ரநெற் எம்மை வந்தடைந்துள்ளது. எட்டுத் திக்கும் சென்று கலைச் செல்வங்கள் யாவும் கொணர்ந்திங்கு சேர்த்திடுவீர்' என்று கூறிய கவிஞனின் கனவை நனவாக்கும் கருவிகளில் ஒன்றாக இன்ரநெற் எமது கைகளை வந்தடைந்துள்ளது.

அளப்பரிய நன்மைகளை எமக்குத் தேடித்தந்துள்ள இந்த விஞ்ஞான விந்தை, சில தீமைகளையும் தன்னகத்தே கொண்டிருக்கத் தவறவில்லை. குறிப்பாக குழந்தைகளுக்குப் பயன் மிக்க ஒரு கல்விச் சாதனமாக இருப்பதுடன், சமயங்களில் சில குழந்தைகளைப் படுகுழியில் வீழ்த்துவதற்கும் இது காரணமாக இருந்து வருகின்றது. இதே இன்ரநெற் வழியாகத்தான் குழந்தைகளின் மனங்களில் நஞ்சை விதைக்கக்கூடிய படங்களும் காட்சிகளும் காண்பிக்கப்படுகின்றன என்பதை மட்டும் பெரும்பாலான பெற்றார் வெறுமனே தெரிந்து வைத்திருக்கின்றார்கள். ஆனாலும் எமது குழந்தைகள் முகம் தெரியாதோருடன் தொடர்புகொள்ளும் வாய்ப்புக்களும் இதன் வழியாகவே கிடைக்கப்பெறகின்றன என்பதையும் குழந்தைகளுடன் தகாத முறையில் தொடர்புகளை ஏற்படுத்திக் கொள்ளும் வாய்ப்புக்களைத் தேடி இன்ரநெற் பெருந் தெருக்களில் பலர் பேயாக அலைந்து திரிகின்றார்கள் என்பதையும் பெற்றோரில் பெரும்பாலானோர் உணர்ந்துகொள்ளத் தவறிவிடுகின்றனர்.

எங்கள் குடும்பம் எனும் பூங்காவில் வீசும் புதுத் தென்றல், குழந்தைகள். பலரது வரண்டுபோன வாழ்க்கையில் வசந்தத்தைத் தோற்றவிப்பவர்கள், குழந்தைகள். இவர்கள் எமது எதிர்கால சமூகத்தின் நம்பிக்கைக்கும் எதிர்பார்ப்புக்கும் காரணமாக விளங்கும் விலை மதிப்பற்ற சொத்துக்கள். இத்தகைய குழந்தைச் செல்வங்களை விஞ்ஞானத்தின் புதுவரவான இன்ரநெற், சேதப்படுத்திச் செயலிழக்கச் செய்யவும்கூடும் என்ற செய்தியைப் பெற்றோரும் அறிந்திருப்பது இன்றைய காலத்தின் கட்டாய தேவையாகும்.
இத்தகைய ஈனச் செயல்கள் என்ன எண்ணிக்கையில் இடம்பெற்று வருகின்றன என்பதைத் தெரிந்துகொள்வது இவற்றினால் ஏற்படக் கூடிய பாதிப்புக்களின் ஆழ நீள அகலங்களைத் தெரிந்து கொள்ள உதவும்.
அமெரிக்காவில் அண்மையில்; மேற்கொள்ளப்பட்ட புள்ளிவிபரக் கணக்கெடுப்பு ஒன்றின்படி 6-17 வயதுகளுக்கு இடைப்பட்ட பிள்ளைகள் உள்ள 70 சதவீதமான வீடுகளில் கொம்பியூட்டரும் இன்ரநெற்றும் உபயோகிக்கப்பட்டு வருகின்றன. 2000ஆம் ஆண்டு சுமார் 25 மில்லியன் சிறுவர்கள் இன்ரநெற்றை உபயோகித்துள்ளனர். இத்தொகை 2005ல் 42.5 மில்லியனாக அதிகரிக்கும் எனக் கணிப்பிடப்பட்டுள்ளது. இன்ரநெற்றை உபயோகிக்கும் சிறுவர்களுள் 20 சதவீதமானோர் பாலியல் ரீதியான நோக்கங்களுடன் அணுகப்பட்டுள்ளனர். இவர்களுள் 22 சதவீதமான சிறுவர்கள் தமது நண்பர்கள், உறவினர்கள் உட்பட, பிறரது வீடுகளில் இன்ரநெற்றை உபயோகிக்கும்போதே இவ்வாறு அணுகப்பட்டுள்ளார்கள். 25 சதவீதமான சிறுவர்களுக்கு நிர்வாணப் படங்களும் உடலுறவு கொள்ளும் காட்சிகளும் இன்ரநெற் வழியாகக் காண்பிக்கப்பட்டுள்ளன. 17 குழந்தைகளுக்கு ஒரு குழந்தை என்ற விகிதாசாரத்தில் இன்ரநெற் மூலமாக அச்சுறுத்தல்கள், தெந்தரவுசெய்தல் போன்றன இடம்பெற்றுள்ளன. இன்ரநெற்றில் பாலியல் ரீதியான படங்களையும் காட்சிகளையும் கண்ட சிறுவர்களுள் சுமார் 23 சதவீதமானோர் தாம் மிக மோசமாக மனம் குழம்பிக் கலக்கம் அடைந்ததாக ஒப்புக்கொண்டுள்ளனர். பாலியல் துஷ்பிரயோகத்துக்கான 89 சதவீத முயற்சிகள் Chat Room களிலும்,Instant Message மூலமாகவும் மேற்கொள்ளப்பட்டுள்ளன. தகாத இணையத்தளங்களைப் பார்வையிட்ட சிறுவர்களுள் சுமார் 40 சதவீதமானோர் இத் தகவலை இரகசியமாகவே தமக்குள் மூடி மறைத்து வைத்திருந்துள்ளார்கள். இவ்வாறான இணையத் தளங்களைப் பார்வையிட்ட பின்னர் இச்சிறுவர்களுள் 19 சதவீதமானோர் மன உளைச்சலுக்கான ஆக்க குறைந்தது ஒரு அறிகுறியையாவது கொண்டிருந்ததாக ஒப்புக் கொண்டிருக்கின்றார்கள். இன்ரநெற் வழியாக இடம்பெற்றவரும் குற்றச் செயல்களை எங்கே முறைப்பாடு செய்யலாம் என்ற விபரங்களை முறையே 17, 11 சதவீதமான சிறுவர்களும் பெற்றோரும் மட்டுமே தெரிந்து வைத்துள்ளனர். பெற்றோரை விட பிள்ளைகளுக்கே இன்ரநெற் பற்றிய அறிவு கூடுதலாக உண்டு என்ற உண்மையை 66 சதவீதமான இளைஞர்களும் பெற்றோரும் ஒப்புக் கொள்கின்றனர். இன்ரநெற் ஊடாகச் சிறுவர்களுக்கு பொருத்தமற்ற பாலியல் தொடர்பான பொருட்கள், காட்சிகள், படங்கள் என்பன காண்பிக்கப்படுதல் பற்றி 80 சதவீதமான பெற்றார் மிகுந்த கவலை கொண்டுள்ளனர். இத்தகவல்களை ஆழமாக நோக்கும்போது இன்ரநெற் பாவனை மூலமாக ஏற்படக்கூடிய பாரதூரமான விளைவுகளின் தீவிரம், அச்சம் தரக்கூடியதாக இருக்கக் காண்கின்றோம்.

உங்கள் குழந்தைகள் இவ்வாறான இன்ரநெற் அபாயங்களுக்குள் அகப்பட்டிருக்கின்றார்களா எனக் கண்காணிப்பது பொறுப்புமிக்க பெற்றோரது கடைமையாகும். இதன் பொருட்டு குழந்தைகள் இவ்வாறான அபாயங்களுக்குள் அகப்பட்டிருப்பதற்கான சில அறிகுறிகளைத் தெரிந்துகொள்வது அவசியம்.

உதாரணங்களாக ஒரு சில-
1) உங்கள் குழந்தைகள் மாலை அல்லது இரவு வேளைகளில் இன்ரநெற்றில் அதிலும் குறிப்பாக Chat Room ல் அதிக நேரத்தைச் செலவு செய்தல்
2) பாலியல் தொடர்பான படங்கள் அவர்களது கொம்பியூட்டரில் இருத்தல்
3) உங்கள் குழந்தைகளருகே நீங்கள் போகும்போது அவர்கள் கொம்பியூட்டரை மூடுதல் அல்லது கொம்பியூட்டர் திரையை மாற்றுதல்
4) முன்பின் தெரியாதவர்களுக்கு உங்கள் பிள்ளைகள் தெலைபேசி அழைப்புக்களை விடுத்தல் அல்லது அவர்கள் உங்கள் பிள்ளைகளுக்கு அழைப்பு விடுத்தல்
5) முன்பின் தெரியாதவர்களிடமிருந்து கடிதங்கள், பரிசுப் பொருட்கள், பார்சல்கள் போன்றவை உங்கள் பிள்ளைகளுக்கு வருதல்
6) குடும்பத்தவர்களிடமிருந்து பிள்ளைகள் விலகிப் போதல்
7) பிறருடைய Online A/C உங்கள் பிள்ளைகளிடம் இருத்தல்

நோயறிகுறிகள் போன்ற இவ்வாறான நடத்தைகள் உங்கள் குழந்தைகளிடம் காணப்படுமாயின் அவர்களது கொம்பியூட்டர் மற்றும் இன்ரநெற் உபயோகம் பற்றி நீங்கள் விழிப்பாக இருப்பது நல்லது.

சிறுவர்களைப் பாலியல் ரீதியாகத் தாக்குபவர்கள் ஒரு முதியவராகவோ அல்லது ஒழுங்கற்ற முறையில் அழுக்கான உடையுடன் ஒரு மழைக்கோட்டு அணிந்தவராக மட்டுமோ இருக்கவேண்டுமென்றில்லை. பதிலாக அவர் போலிப் பெயர் கொண்ட ஓர் ஆணாகவோ அல்லது ஒரு பெண்ணாகவோ இருக்கலாம். அத்துடன் எந்த அந்தஸ்த்தினைக் கொண்ட எந்த வயதினராகவோ, எந்தத் தொழிலைச் செய்பவராகவோ இருக்கலாம். மணம் முடித்தவராகவும் இருக்கலாம். இவர்கள் சிறுவர்களைத் தமது ஆசைகளுக்கு அடிபணிய வைப்பதற்கு வேண்டிய தந்திரங்கள் அனைத்திலும் கைதேர்ந்தவர்களாக இருப்பர். இவர்களுள் பெரும்பாலானோர் புத்திசாலித்தனமான வழிமுறைகளைக் கையாண்டு சிறுவர்களைத் தமது வலைக்குள் வீழ்த்திக் கொள்வர். நன்கு பழக்கப்பட்டவர்களது பாலியல் இச்சைகளுக்கே சிறுவர்கள் அனுமதிக்கின்றார்கள் என்பதை இவர்கள் அனுபவ ரீதியாகவும் புள்ளிவிபரக் கணிப்பீடுகள் வழியாகவும் தெரிந்து வைத்துக்கொண்டுள்ளார்கள். இதனால் பல நாட்கள், பல வாரங்கள், பல மாதங்கள் - ஏன் பல வருடங்கள்கூடக் காத்திருந்து சிறுவர்களின் நட்பைப் பெற்று தமது காரியத்தைச் சாதித்துக் கொள்கின்றனர்.

குடும்பங்களில் அன்பு, அரவணைப்பு, கவனிப்பு என்பன கிடைக்கப் பெறாத பிள்ளைகள்தான் பெரும்பாலும் பாலியல் குற்றவாளிகளின் மென் இலக்குகள் ஆகிவிடுகின்றனர். காணாமற்போன, கற்பழிக்கப்பட்ட, கொலை செய்யப்பட்ட சிறுவர்களுள் பெரும்பாலானோர் இந்த வகையைச் சார்ந்தவர்களே எனச் சான்றுகள் கூறுகின்றன. இவ்வாறான குழந்தைகளின் அன்பையும் அனுதாபத்தையும் பெறும்பொருட்டு பெருமளவிலான நேரத்தையும் பணத்தையும் சக்தியையும் இவர்கள் செலவு செய்கின்றனர்;. நவீன இசை, திரைப் படங்கள், விளையாட்டுக்கள் போன்ற பொழுது போக்குக்களுடன் கொம்பியூட்டர் தொடர்பான தொழில் நுட்பம் என்பன பற்றியும் இவர்கள் நன்கு தெரிந்து வைத்திருக்கின்றார்கள். சிலர் எடுத்த எடுப்பில் உடனடியாக நேருக்குநேர் சிறுவர்களைச் சந்திக்க முயற்சி எடுப்பர். அநேகமானோர் மிக நீண்ட நேரம் - மிக நீண்ட காலம் சிறுவர்களுடன் மின் சம்பாஷணைகளில் (Chat) ஈடுபடுவர். சிறுவர்களின் பிரச்சினைகளுக்கு பொறுமையோடு செவி மடுப்பர். அவர்களுக்காக இரக்கப்படுவதாகப் பாவனை செய்வர். பின்னர் ஆலோசனை கூறுவர்;. அன்பளிப்புப் பொருட்களை அனுப்பி வைப்பர். தேவைப்படுமிடத்து பண உதவியையும் செய்யத் தயங்கமாட்டார்கள். இவ்வாறாக உறவினைக் கட்டியெழுப்பிய பின்னர், தமது பேச்சுக்களை மிகவும் சாதுரியமாகப் பாலியல் விடயங்களை நோக்கித் திசைதிருப்புவர். பாலியல் தொடர்பான அந்தரங்கங்களை அறிவதில் சிறுவர்களுக்கு இருக்கும் ஆவலைத் தூண்டி, மென்மேலும் அவை தொடர்பான படங்களையும் காட்சிகளையும் பொருட்களையும் பார்ப்பதற்கும் உற்சாகப் படுத்திவிடுகின்றனர். பாலியல் முறைகேட்டாளர்கள் விரசமான படங்களைப் பிள்ளைகளோடு பகிர்ந்து கொள்வதை கொம்பியூட்டரும் இன்ரநெற்றும் சுலபமாக்கிவிடுகின்றன. இவர்களிடம் ஸ்கானர்கள், டிஜிற்றரல் கமராக்கள் போன்ற நவீன கருவிகள் உண்டு. இவற்றை உபயோகித்து தமது படங்களையும் ஆபாசமான வேறு படங்களையும் தயாரித்து மின்னஞ்சல் வழியாகச் சிறுவர்களுக்கு அனுப்பி வைத்துவிடுகிறார்கள். முடிவாக, தவறு என்பதை உணர்ந்துகொள்ள முடிந்தும் அதிலிருந்து விடுபட முடியாமல் ஏராளமான சிறுவர்கள் பாலியல் விலங்குகளின் வஞ்சக வலையில் வீழ்ந்துவிடுகின்றனர்.

கொஞ்சிக் கொஞ்சிப் பேசி மதிமயக்கும் - வஞ்சகரின் உலகம் வலை விரிக்கும் என்ற உண்மையை உணராத குழந்தைச் செல்வங்கள் இவ்வாறு கெட்டழிந்து போவதைப் பெற்றோர் எவ்வாறு கண்காணித்துக் கட்டுப்படுத்தலாம்?

ஆலோசனைகளாக ஒரு சில
1) உங்கள் குழந்தைகளுடன் மனம் திறந்து பேசுங்கள். கொம்பியூட்டர் வழியாகப் பாலியற் கெடுதிகள் விளைவிப்போரைப் பற்றியும் அவர்களால் விளைவிக்கப்படும் ஆபத்துக்கள் பற்றியும் கலந்துரையாடுங்கள். பின்வருவன போன்ற அறிவுரைகளைச் சொல்லிக் கொடுங்கள்.
- இன்ரநெற் மூலம் அறிமுகமானவர்களை ஒருபோதும் நேரில் சந்திக்கக்கூடாது
- இன்ரநெற் மூலம் அறிமுகமானவர்களுக்குத் தமது படங்களை அனுப்பக்கூடாது
- முன்பின் தெரியாதவர்களுக்கு பெயர், முகவரி, பாடசாலைப் பெயர், தொலைபேசி இலக்கம் என்பவற்றைக் கொடுக்கக் கூடாது
- முன்பின் தெரியாதவர்கள் அனுப்பும் படங்களை download பண்ணக் கூடாது
- இன்ரநெற் மூலமாக வற்புறுத்தும் அல்லது தொந்தரவுபடுத்தும் அறிவுறுத்தல்களுக்குப் பதிலளிக்கக்கூடாது
- இன்ரநெற்றில்; சொல்லப்பட்டவை எல்லாம் உண்மை என நம்பத்தேவையில்லை என்று கூறிவையுங்கள்.
2) உங்கள் பிள்ளைகளின் கொம்பியூட்டரை அடிக்கடி கண்காணித்துக் கொள்ளுங்கள். மின் சம்பாஷணை, இன்ரநெற், மின்னஞ்சல் என்பவற்றைக் கவனித்துக்கொள்ளுங்கள். இவை பற்றிய போதிய அறிவு உங்களுக்கு இல்லையாயின் நம்பிக்கைக்குரிய நண்பர்கள், உறவினர்கள், சகவேலையாட்களிடம் கேட்டறிந்துகொள்ளுங்கள்
3) வீட்டிற்கு வரும் தொலைபேசி அழைப்புக்களின் இலக்கங்களையும் ஏற்கனவே வந்த அழைப்புக்களின் இலக்கங்களையும் கடைசியாக வந்த இலக்கத்தையும் காண்பிக்கக்கூடிய தொலைபேசிச் சேவைகளை உபயோகியுங்கள்
4) உங்கள் பிள்ளைகளோடு இணைந்து இன்ரநெற்றில் நேரத்தைச் செலவிடுங்கள்
5) வீட்டில் ஒரு பொது இடத்தில் கொம்பியூட்டரை வையுங்கள்
6)தேவையற்ற புரோகிராம்களைத் தடை செய்யக்கூடிய சேவைகளை கொம்பியூட்டரில் இணைத்துக்கொள்ளுங்கள்
7) பாடசாலையில், நூலகத்தில், நண்பர்கள்-உறவினர்களது வீடுகளில் என்ன வகையான இன்ரநெற் பாதுகாப்பு உண்டு எனத் தெரிந்து வைத்துக்கொள்ளுங்கள்
8) உங்கள் பிள்ளைகளின் இன்ரநெற் நண்பர்கள் யார் என்பதைக் கேட்டு வைத்துக்கொள்ளுங்கள்
9) இன்ரநெற் வழியாக யாராவது உங்கள் குழந்தை மீது பாலியற் குற்றச் செயல்களைச் செய்வதாக அல்லது செய்ய முயற்சிப்பதாக நீங்கள் கண்டுபிடித்தால் அவற்றிற்கான ஆதாரங்களை அழிய விடாமல் பாதுகாத்து வைத்து, பின்னர் பொலீசாரிடம் அறிவியுங்கள்;.

சிறுவர்களுக்குப் பாலியல் உணர்வைத் தூண்டக்கூடிய படங்களை இன்ரநெற்றில் அனுப்பித் தீங்கிழைக்க முற்படுவோர் தொடர்பாக முறைப்பாடுகள் செய்வதற்கென ரொறன்ரோ பெரும்பாகப் பொலீஸ் இலாகாவில்
The Child Pornography Section எனப்படும் விசேட பிரிவு ஒன்று நிறுவப்பட்டுள்ளது. இது இன்ரநெற் பாவனையாளர்களுள் சந்தேகத்துக்கு உரியவர்களை இரகசியமாக அவதானித்து வருகின்றது. இன்ரநெற் வாயிலாக இடம்பெறும் பாலியல் சுரண்டல்கள் பற்றிக் கிடைக்கப் பெறும் தகவல்கள், துப்புக்களின் அடிப்படையில் இப்பிரிவு விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றது. விசாரணைகளின் போது சட்டங்களை அமுல் படுத்தும் ஏனைய துறையினருடனும் இன்ரநெற் சேவை வழங்குவோருடனும் இணைந்து இப்பாலியல் குற்றத் தடுப்புப் பிரிவு செயற்பட்டு வருகின்றது. பல மில்லியன் கணக்கான இன்ரநெற் பாவனையாளர்களுள் குற்றவாளிகளைக் கண்டுபிடித்தல் இலகுவான காரியமல்ல. பொது மக்களிடமிருந்து தகவல்களும் முறைப்பாடுகளும் இப்பிரிவினர்க்கு வந்துசேர்வது இப்பணியைச் சுலபமாக்கும்.
இன்ரநெற் வழியான மின்சம்பாஷணைகளின் போது பாலியல் நோயாளிகளினால் கௌவிக் கொள்ளப்படும் பல சிறுவர்கள், தமது பெற்றோருக்குத் தெரியாதவாறு இவர்களுடன் நேரடியாகச் சந்திப்பதற்கும் துணிந்துவிடுகிறார்கள் எனக் கூறும் இப் பொலீஸ் பிரிவினர்,
பிள்ளைகள் இன்ரநெற்றில் எவற்றைப் பார்க்கின்றார்கள் என்பதைப் பெற்றோர் அவதானிக்க வேண்டும் என்று ஆலோசனை கூறுகின்றனர்.

2003 ஜூன் மாதம் 25ஆம் திகதி இரகசிய அதிரடி நடவடிக்கை ஒன்றின் மூலம், இன்ரநெற்றில் சிறுவர்களைத் தன் பாலியல் இச்சைக்குப் பலியாக்குவதற்கு வலைவிரித்து வந்த நபர் ஒருவரை முதன்முறையாக இப்பிரிவினர் கைது செய்திருந்தனர். றிச்மன்ட் ஹில்லைச் சேர்ந்த இவரிடம் இரகசிய பொலிசார் ஒருவர் தன்னை 12 வயதுச் சிறுமியாகப் பாவனை செய்து, இன்ரநெற்றில் நட்புறவை ஏற்படுத்தியிருந்தார். தனது பாலியல் இச்சையைத் தீர்த்துக் கொள்ளும் நோக்குடன், ரொறொன்ரோ நகரில் இரகசியமாகத் தன் இன்ரநெற் சிநேகிதியை சந்திப்பதற்கு அவர் சென்ற சமயம் பொலீசாரிடம் வகையாக மாட்டிக்கொண்டார். இவ்வாறான சம்பவங்கள் உங்கள் பிள்ளைகளுக்கும் நடக்கக்கூடும் என்று பெற்றோர் எப்போதும் விழிப்பாக இருத்தல் வேண்டும். ஹோலி ஜோன்ஸ் என்ற குழந்தைக்கு நடந்த சோகத்தை இந்த நாடறியும். ஷாமினி அனந்தவேல் என்ற எங்கள் இனத்துப் பெண்பிள்ளைக்கு என்ன நேர்ந்தது என்ற வினாவுக்கு இதுவரை விடை கிடையாது. சிஸீலியா ஸாங் என்ற சீன இனத்துச் சிறுமி எங்கே என்று எவருக்கும் இற்றைவரை தெரியாது. எங்கள் குழந்தைச் செல்வங்களைக் காமுகர்களிடம் காவு கொடுத்தலை விட மோசமான சோகம் வேறு என்ன இருக்க முடியும்? எனவே ரொறொன்ரோவில் உள்ள பெற்றோரும், பிள்ளைகளில் கரிசனை உடையோரும் தேவை ஏற்படும்போது இன்ரநெற்றில் சிறுவர்கள் மீதான பாலயற் குற்றத் தடுப்புப் பிரிவினரின் சேவையைப் பயன்படுத்திக்கொள்ளத் தயங்கக் கூடாது.

தொடர்புகளுக்கு
தொலைபேசி இலக்கம் 416 808 8500
மின் அஞ்சல் childpornography@torontopolice.on.ca

குழந்தைகள் எமது குடும்பங்களின் புத்தம் புதுத் தளிர்கள். பெற்றோராகிய எங்கள் அறியாமையாலும் அசிரத்தையாலும் அவற்றைக் காமக் கால்நடைகள் கடித்துக் குதறிவிட நாம் அனுமதித்தல் ஆகாது. குழந்தைகளை இழப்பதென்பது எமது வாழ்வின் வேர்களை இழப்பதற்குச் சமானமல்லவா? நவீன விஞ்ஞான தொழில் நுட்பத் துறைகளின் வேகமான வளர்ச்சி காரணமாக எம்மைவிட எமது பிள்ளைகளுக்கு வாய்ப்பும் வசதிகளும் இந்நாட்களில் மலிந்து கிடக்கின்றன. இன்ரநெற் என்பது இப்புதிய தலைமுறைகளுக்குக் கிடைத்துள்ள ஒரு வரப்பிரசாதம். இன்ரநெற் பெருந்தெருக்களில் பேய் பிசாசுகள் நடமாடுகின்றன என்பது உண்மைதான். பாலியல் குற்றவாளிகளால் விளையக்கூடிய ஆபத்துக்களைக் கருத்தில் கொண்டு இந்த உன்னதமான தகவற் தொடர்புச் சாதனத்தினால் எமது பிள்ளைகள் பயன் பெறும் வாய்ப்பினைத் தடுத்துவிட நினைப்பது புத்திசாலித்தனமல்ல. சமூகத் தெருக்களிலும் ஆங்காங்கே ஆபத்துக்கள் பல்வேறு உருவங்களில் பொறிவைத்துக் காத்துக் கிடக்கத்தான் செய்கின்றன. அவற்றுள் அகப்பட்டுழலாமல் அவதானமாக எமது பயணங்களை நாம் மேற்கொள்வதில்லையா? அவ்வாறாகவே இணையத் தொடர்புச் சாதனங்களின் நன்மை, தீமை பற்றி பெற்றோர் தமது குழந்தைகளுக்கு ஆழமான கல்வியைப் புகட்ட வேண்டும். இன்ரநெற் பாவனை தொடர்பாகப் பெற்றோர் சில கட்டுப்பாடுகளைக் கடைப்பிடிக்க வேண்டும். வேண்டப்படாதவற்றை தடைசெய்யும் புரோகிராம்களை பயன்படுத்த வேண்டும். பெற்றோரின் கண்காணிப்பு இல்லாத சமயங்களிலும் அவை பிள்ளைகளுக்கு பாதுகாப்பை வழங்கக்கூடியன. தவிர்க்கக்கூடிய தீமைகளிலிருந்து பிள்ளைகளைப் பாதுகாப்பதற்கான வழிவகைகளைப் பெற்றோர் மேற்கொள்வதே பொருத்தமான தீர்வாகும்.

அறியாப் பருவத்துக் குழந்தைகள் பாலியல் வக்கிர புத்தியாளர்களின் வலைக்குள் வீழ்தல் ஆபத்து விளைவிக்கக்கூடியது என்று பொறுமையோடு சொல்லிக் கொடுங்கள். அவ்வாறு தவறி வீழ்ந்த குழந்தைகளைக் குற்றவாளிகள் ஆக்காதீர்கள். உண்மைக் குற்றவாளிகள் யார் என்று குழந்தைகளுக்கு உணர்த்துங்கள். குற்றவாளிகளைக் கண்டுபிடித்து சட்டத்தின் காவலர்களிடம் கையளித்துவிடுங்கள். எங்கள் புதிய வாழிடத்தில் ஒரேயொரு போல் பேர்னாடோவும் ஒரேயொரு காலா ஹமோக்காவும்தான் உண்டு என நம்பி ஏமாந்து போய்விடாதீர்கள். கொம்பியூட்டர் கருவிக்குள்ளேயும் கொலைகாரர்களும் காமப்பேய்களும் உண்டு என்பதை உங்கள் குழந்தைகளுக்குச் சொல்லிக் கொடுங்கள்.

பிள்ளைகள் மழலைகளாகவும் சிறுவர்களாகவும் இருக்கும்போது அவர்களை உங்கள் மடியிலும் மார்பிலும் தோளிலும் சுமந்து கொள்வீர்கள். அவர்கள் சற்றே வளர்ந்துவிட்டால் அது சாத்தியமில்லை. உங்கள் இதயத்தில் மட்டுமே அவர்களை உங்களால் சுமந்துகொள்ள முடியும்! அத்தகைய உங்கள் பிள்ளைகளோடு கொம்பியூட்டரின் நன்மைகள் தீமைகள் பற்றிக் கலந்துரையாடுங்கள். மனந்திறந்து அளவளாவுங்கள். அன்பாக இருங்கள். அது ஏராளம் பிரச்சினைகளுக்கு ஏற்ற தீர்வாகும். அதுவே எப்போதும் சாத்தியப்படக்கூடிய, பயன்மிக்க தீர்வுமாகும்!



நன்றி: ஆசீர்வாதம் ஏப்ரல் 2004 ,எழில்நிலா
</b>

Print this item

  ஜனாதிபதித் தேர்தலில் வெல்லப் போவது யார்?
Posted by: Rasikai - 10-31-2005, 09:26 PM - Forum: அரசியல் / பொருளாதாரம் - Replies (2)

<b>ஜனாதிபதித் தேர்தலில் வெல்லப் போவது யார்?சீன - ஜப்பானிய சோதிடத்தில் ஓர் ஆராய்ச்சிக் கண்ணோட்டம் </b>
-திக்கவயல் சி.தர்மகுலசிங்கம்-

ஜனாதிபதித் தேர்தல் சூடு பிடிக்கத் தொடங்கியுள்ளது. ரணிலா,மஹிந்த ராஜபக்ஷவா ஜனாதிபதியாக வருவார்கள் என்பதையிட்டு ஊகங்கள் பல்வேறு தரத்தனவாக இருக்கின்றன. இருவரும் பல்வேறு கட்சிகளின் துணையுடன் போட்டியிடுவதால் யாருக்கு அதிக வெற்றி வாய்ப்பு இருக்கின்றது என்பதை எவரும் அறுதியிட்டுக் கூறவும் முடியாது உள்ளது. இந்நிலையில் ரணிலா, மகிந்த ராஜபக்ஷவா வெல்வார்கள் என்பது குறித்து சீன- ஜப்பானிய ஜோதிடக் கணிப்புகளின் ஊடாக யார் ஜனாதிபதியாக வருவார்கள் எனக் கணக்கிட்டுக் காட்டும் ஒரு சுவாரஸ்யமான குறிப்பே இது.

எமக்குக் கிடைத்த தரவுகளின்படி ரணில் விக்கிரமசிங்க அவர்கள் 1949 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 24 ஆம் திகதி கொழும்பில் பிறந்தார். (பிறந்த நேரம் தெரியவில்லை) இருப்பினும் சீன - ஜப்பானிய சோதிடத்தின் படி ரணில் விக்கிரமசிங்க அவர்கள், நரி (0து) இலக்கினத்தில் ஜனனம் ஆனார். ( எமது இந்து ஜோதிடத்தின் படி 12 ராசிகள் இருப்பது போன்று சீன, ஜப்பானிய ஜோதிடத்தில் 12 மிருகங்கள் இருக்கின்றன). நரி இலக்கினத்தில் பிறந்தவர்களின் பலன்களை மூன்றாக வகுத்திருக்கும் சீன- ஜப்பானிய ஜோதிடம் ரணில் விக்கிரம சிங்கவின் வாழ்க்கைப் பாதையைப் பின் வருமாறு கூறுகின்றது.

குணாதிசயங்கள்

ஓர் அமைதியான மனிதர்; சமாதானத்தில் நாட்டம் கொண்டவர். ஸ்திரம் அற்ற மனப்பான்மை கொண்டவர்; ஆயினும் உள்ளத்தில் ஆழமானவர். எவரும் கண்டுபிடிக்க முடியாத ஆழ்மனம் கொண்டவர். இவரின் சிரிப்பு என்பது ஒரு பாதுகாப்பு வளையம் போன்றன. ஒன்றை உருவாக்கும் மனம் உள்ளவர்.(crtative hand).

வாழ்க்கையின் முதற் படி: மிகவும் சந்தோசம்

இரண்டாம் படி :- பொருள் இழப்பு

மூன்றாம் படி :- வாழ்க்கையில் பெறும் வெற்றிகளைக் காணும் வாய்ப்பு.

ஐம்பத்தாறாம் வயதினை அடைந்திருக்கும் ரணில் விக்கிரம சிங்க தனது வாழ்க்கையின் மூன்றாம் கட்டத்தில் உள்ளார். மூன்றாம் கட்டம் பெரும் வெற்றிகளைக் கோடிட்டுக் காட்டுவதால் இவரை வெல்லும் முயற்சிகளில் இறங்கியிருக்கும் மகிந்த ராஜபக்ஷ ஜாதகம் ரணிலை விடவும் உறுதியாக இருக்கின்றதா என ஆராய்ந்து பார்ப்போம்!

மகிந்த ராஜபக்‌ஷவின் ஜோதிடம்

சுதந்திரக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் மகிந்த ஏற்கனவே பிரதமராக உள்ளவர். அவர் ரணிலை விடவும் நாலு வயது மூத்தவர். இவர் 1945 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 18 ஆம் திகதி வீரகெட்டியாவில் பிறந்தார்.

1945 ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தில் பிறந்த பிரதமர் மகிந்த ராஜபக்‌ஷ, சீன - ஜப்பானிய ஜோதிடத்தின் படி ஒரு கோழி இலக்கினத்தில் பிறந்தவராகும். கோழி இலக்கினத்தில் பிறந்தவருடைய பலன்கள் இச் சோதிடத்தின் கீழ் பின்வருமாறு அமைந்து உள்ளது. உயர்ந்த இலட்சியங்களைக் கொண்டிருப்பவர்; பகற் கனவு காண்பவர், நண்பர்களைத் தனது முடிவுகளால் இழப்பவர். உட்பக்கம் தனிமையில் வாழ்பவர், சுறுசுறுப்பானவர். இவர் வாழும் காலத்தில் பொதுவான குணாம்சங்கள் இவைகளாகும்.

மகிந்த ராஜபக்ஷவின் ஜோதிடப் படி இவரின் முதற் கட்ட வாழ்க்கை சாதாரணமானது என்றும், இரண்டாம் கட்டம் நண்பர்கள் இழப்பு என்றும் மூன்றாம் கட்டம் அதிர்ஷ்டம் என்றும் கூறப்படுகின்றது. 1945 ஆம் ஆண்டில் பிறந்த மகிந்த ராஜபக்ஷவுக்கு இப்போது 59 வயது முடிவடையும் தறுவாயில் இருக்கிறது.

இவ்வயது அவர் வாழ்க்கையின் மூன்றாவது கட்டத்தில் இருப்பதையே காட்டுகின்றது. அவர் பிரதமராகியது இந்த மூன்றாவது கட்டத்தில் தான்! இந்த அதிர்ஷ்டத்துக்கு மேல் வேறு அதிர்ஷ்டங்களை இவரின் ஜோதிடம் எடுத்துக் காட்டாமை துரதிர்ஷ்டமே! இதனால் ஜனாதிபதித் தேர்தல் பலப் பரீட்சையில் மகிந்த ராஜபக்‌ஷவுக்கு இருக்கும் இடம் கேள்விக்குறியாகவுள்ளது.

ஈர்ப்புச் சக்தி

சீன, ஜப்பானிய ஜோதிடத்தின் படி அவர்கள் பிறந்த ஆண்டுக் கணக்கின் படி ஈர்ப்புச் சக்திகள் Vibration Table கணக்கு எடுக்கப்பட்டு எதிர்காலப் பலன்கள் கணிக்கப்படுகின்றன. ரணில் விக்கிரமசிங்க, 1949 ஆம் ஆண்டில் பிறந்தவர் என்பதால் அவரின் ஈர்ப்புச் சக்தி 5 என்றும் அவர் புதனின் ஆதிக்கத்தில் உள்ளவர் என்றும் அவரை எதிரிகள் வீழ்த்துவது கஷ்டம் என்றும் சீன - ஜப்பானிய ஜோதிடம் கூறுகின்றது.

மகிந்த ராஜபக்‌ஷ, 1945 ஆம் ஆண்டில் பிறந்தவர் என்பதால் இவரின் ஈழ்ப்புச் சக்தி1 என்றும் இந்த இலக்கிம் தனிப்பட்ட அவரின் சந்தோசத்துக்கு உரிய இலக்கிமே என்றும் சோதிடம் குறிப்பிடுகின்றது. இவையாவும் ஜனாதிபதி தேர்தலில் ரணிலுக்கே சாதகமாக அமைந்து உள்ளது.

அபூர்வ ஒற்றுமை

சீன- ஜப்பானிய ஜோதிடத்தின் கீழ் ரணிலின் ஈர்ப்புச் சக்தி 5, மகிந்த ராஜபக்ஷ அவர்களின் ஈர்ப்புச் சக்தி1 இந்த இரண்டு ஈர்ப்புச் சக்திகளும் காந்தமும் இருப்பும் போன்றவை. தேர்தலில் இவர்கள் முரண்பட்டாலும் தேர்தலின் பின்பு இவர்கள் முரண்படாது இயங்கும் ஈர்ப்புச் சக்தியைக் கொண்டிருக்கிறார்கள்.

நான் ஜனாதிபதியானால் பாராளுமன்றம் கலைக்கப்படும் என்று ரணில் விக்கிரமசிங்க கூறி வருகிறார். அவர் ஜனாதிபதியானால் பிரதமர் மகிந்த ராஜபக்‌ஷ பாராளுமன்றத்தைக் கலைக்காமலே ஜனாதிபதியுடன் ஒத்துழைக்கும் வண்ணம் மாறி வரவும் கூடும்.இந்த மாற்றத்துக்குக் காரணம் இவர்களின் ஈர்ப்புச் சக்தி ஏற்றுமையே!

இதன் மூலம் இவர் கொண்டிருக்கும் ஜே.வி.பி., ஹெல உறுமய போன்ற கட்சிகளின் கூட்டினைக் கூட இவர் கைவிடும் சாத்தியம் கூட ஏற்படும்! இந்த உண்மைகள் எவ்வளவு தூரம் சாத்தியப்படப் போகின்ற என்பது சில நாட்களில் தெரியவரும்.


நன்றி http://www.newstamilnet.com/artical.php?su...t_from=&ucat=3&

Print this item

  இன்று உலக சிக்கன தினம்
Posted by: Rasikai - 10-31-2005, 09:21 PM - Forum: செய்திகள்: உலகம் - Replies (4)

<b>சிக்கனமும் சேமிப்பும் பொருளாதார அபிவிருத்தியின் ஊற்றுக் கண்கள் உலக சிக்கன தினம் </b>
இன்று உலக சிக்கன தினம்

கே.ஏ.அலீம்

தொன்மைக் காலத்திலிருந்து எமது நாகரிகமும்,பண்பாட்டுக் கோலங்களும் சிக்கனம் சேமிப்பு என்பவற்றின் பயன்களை ஏற்று வந்துள்ளன. இதனால் எம்நாட்டு மக்கள் மத்தியில் சிக்கனமும், சேமிப்பும் நிலவியுள்ளதை வரலாறும் கோடிட்டுக் காட்டுகின்றன. மழைக்காலங்களில் நீரைச் சேமித்து வந்துள்ளனர். விளைச்சல் காலங்களில் பெறும் உற்பத்திகளை சிக்கனமாக உபயோகித்து மீதியைச் சேமித்து வைத்து பின்னர் தேவைக்கேற்ப அதனைப் பயன்படுத்தி வந்துள்ளனர். தேசிய பொருளாதாரத்தைப் பொறுத்தவரை சேமிப்பானது பொருளாதார அபிவிருத்திக்கும், பொருளாதார சுதந்திரத்திற்கும் அடிப்படைக் காரணிகளிலொன்றாகவுள்ளது. சிக்கனத்தில் இருந்தே சேமிப்பு உருவாகின்றது. சிக்கனம் தனிநபர் வாழ்க்கை மட்டத்திலிருந்து சர்வதேச மட்டம்வரையான ஒரு தர்ம நெறியாகும். சிக்கனமும் சேமிப்பும் பொருளாதார அபிவிருத்தியின் ஊற்றுக் கண்களெனலாம்.

இன்று உலகளாவிய ரீதியில் 81 ஆவது உலக சிக்கன தினம் அனுஷ்டிக்கப்படுகிது. சிக்கனமும் சேமிப்பும் பொருளாதார சமநிலையைப் பேணுகின்றன என்பதே இத்தினத்தின் கருப்பொருளாகும். இத்தினம் பொருளாதார வளர்ச்சியை அடைவதற்காக சிக்கனத்தினதும் சேமிப்பினதும் அவசியத்தை உணர்த்தி நிற்கின்றது. உலக நாடுகள் இத்தினத்தில் சேமிப்புத் தொடர்பான பல நிகழ்ச்சித் திட்டங்களை நடாத்தி சிக்கனத்தின் மூலம் சேமிப்பை அதிகரிக்க முடியும் என்பதைப் போதிக்கின்றன. மக்கள் வங்கி உட்பட அநேக வங்கிகள் அக்டோபரை சேமிப்பு மாதமாகப் பிரகடனப்படுத்தி பல்வேறு சேமிப்புத் திட்டங்களை அறிமுகம் செய்கின்றன.

மனிதனால் முன்வைக்கப்பட்ட தூரநோக்குமிகு அறிவுசார் பண்டமாக பணம் கருதப்படுகிறது. பணக் கருவியின் அறிமுகத்தோடு மனிதன் தனது சேமிப்பைப் பணமாக மேற்கொள்ளலானான். சேமிப்பானது நாட்டின் முதலீட்டைப் பெருக்கி, உற்பத்தியைப் பெருக்கி வேலை வாய்ப்புகளை வழங்குகின்றது. இதன் மூலம் தனிநபர் வருமானம் பெருக வாழ்க்கைத் தரம், ஆள்வீத வருமானம் என்பனவும் உயர்கின்றன. உற்பத்தி பெருகும்போது ஏற்றுமதி வாய்ப்புகளும் செலாவணி உட்பாய்ச்சல்களும் நிலையான சந்தை வாய்ப்புகளும் ஏற்படுகின்றன. உண்ணாட்டில் பொருட்களின் விலை குறைவடையும். வட்டி இலாபங்கள் போன்றவற்றை சேமிப்பும் முதலீடுகளும் ஈட்டிக் கொள்கின்றன. எமது பொருளாதார வளர்ச்சி வேகம் 5.4 சதவீதத்திலேயேயுள்ளது. இதனால் தொடர்ந்தும் அபிவிருத்தியடைந்துவரும் நாடெனும் நிலையிலேயே இருக்கின்றோம். இந்நிலையிலிருந்து மாறி அபிவிருத்தி அடைந்த நாடு எனும் இலக்கை நோக்கி நாம் நகர எமது பொருளாதார வளர்ச்சி வேகத்தை 8 சதவீதத்திலிருந்து 10 சதவீதமாக அதிகரிக்க வேண்டும். உள்நாட்டு சேமிப்பு வீதமும், முதலீட்டு வீதமும் சாதகமான நிலையில் காணப்பட்டால் மட்டுமே எமது பொருளாதார வளர்ச்சியை 10 சதவீதம்வரை நகர்த்த முடியும்.

ஒரு நாட்டின் பொருளாதார அபிவிருத்தியில் தேசிய சேமிப்பானது பெரும் பணிபுரிகின்றது. எனவேதான் அந்நாட்டுத் தேறிய தேசிய உற்பத்தியில் தேசிய சேமிப்பு வீதம் ஒரு குறிகாட்டியாகக் கொள்ளப்படுகிறது. இலங்கை மத்திய வங்கியின் அறிக்கைப்படி இலங்கையின் சேமிப்பு வீதம் 15.9 சதவீதமாகவுள்ளது. இது ஏனைய நாடுகளோடு ஒப்பிடுகையில் மிகக் குறைவானதாகும். எனவே சேமிப்பு வீதத்தை உயர்த்த நாட்டு மக்களிடையே நிறுவன ரீதியான சேமிப்புப் பழக்கத்தை ஏற்படுத்த வேண்டும்.

பூகோளரீதியில் அனைத்துச் சேமிப்பு வங்கிகளாலும் அனுஷ்டிக்கப்படும் உலக சிக்கன தினம் 1924 ஆம் ஆண்டு இத்தாலியில் நிகழ்ந்த சேமிப்பு வங்கியாளர் மகாநாட்டில் பிரதியாண்டும் அக்டோபர் மாதம் 31 ஆம் திகதியை உலக சிக்கன தினமாக அஷ்டிக்க தீர்மானிக்கப்பட்டது. சிக்கனமாக வாழ்தல் மீதான கவனத்தை ஈர்ப்பதோடல்லாது உலகினரிடையே சேமிப்புப் பழக்கத்தை ஊக்குவிப்பதும் இத்தினத்தின் இலட்சிய நோக்குகளில் ஒன்றாகும். 1810 ஆம் ஆண்டு சங்கைமிகு ஹென்றிடங்கன் என்பவரால் ஸ்கொட்லாந்தில் முதலாவது சேமிப்பு நிறுவனம் உலகில் தோற்றுவிக்கப்பட்டது. சமூகத்தில் நிலவிய வறுமை, நிதிமுடக்குகள் போன்றவற்றிலிருந்து சமூகத்தினர் நிவாரணம் பெறவே இச்சேமிப்பகம் நிறுவப்பட்டது. காலவோட்டத்தில் சேமிப்பு நிறுவனம் உலகின் பற்றிசையும் பரவியது. பிரித்தானியரின் குடியேற்றப் பொருளாதார அபிவிருத்திக்கு முதலீட்டாக்கம் அவசியம் எனும் எண்ணக்கரு வலுப்பெற்று 19 ஆம் நூற்றாண்டில் இலங்கையில் சேமிப்பு நிறுவனங்கள் உருவாகின. ஆங்கிலத் தேசாதிபதி சேர்.ஹபார்ட் ஹோட்டனினால் 1832 ஆம் ஆண்டு ஆகஸ்ட் ஆறாம் திகதியன்று இலங்கை சேமிப்பு வங்கி அங்குரார்ப்பணஞ் செய்யப்பட்டது. நிறுவன ரீதியாக இலங்கையில் சேமிப்பகம் நிறுவி 172 ஆண்டுகள் நிறைவுற்றுள்ளன. இச்சேமிப்பகத்தின் முதலாவது தலைவராக கலாநிதி வில்ஸ்பேர்ட் நியமனம் பெற்றார்.

1885 ஏப்ரல் 16 ஆம் திகதி அஞ்சலக சேமிப்பகம் எனும் மற்றுமொரு சேமிப்பு வங்கி அறிமுகமானது. இரண்டாம் உலகப் போரின்போது தபால் திணைக்களத்தினால் சேமிப்புச் சான்றிதழ் நிதியம் அமைக்கப்பட்டது. மறைந்த நிதியமைச்சர் யூ.பி.வன்னிநாயக்கவினால் 1969.08.31 ஆம் திகதியன்று பாராளுமன்றத்தில் தேசிய சேமிப்பு வங்கி பற்றிய மசோதாவென்று முன்வைக்கப்பட்டது. எனினும் அமரர் கலாநிதி என்.எம்.பெரேராவின் திட்டப்படி 1971 ஆம் ஆண்டின் 3 ஆம் இலக்க தேசிய சேமிப்பு வங்கிச் சட்டத்திற்கு அமைய ஏலவே இயங்கிய மூன்று சேமிப்பு நிறுவனங்களும் ஒன்றிணைக்கப்பட்டு 1972 ஆம் ஆண்டு மார்ச் 16 ம் திகதி முதல் தேசிய சேமிப்பு வங்கியாக மாற்றப்பட்டது.

நூற்றுக்கு மேற்பட்ட கிளைகளையும், நாலாயிரத்திற்கு மேற்பட்ட தபாலகச் சேமிப்புப் பீடங்களையும் கொண்டுள்ள தேசிய சேமிப்பு வங்கி, இந்நாட்டின் சேமிப்பில் பெரும்பகுதியைத் தன்பால் ஈர்த்து வைத்துள்ளது. சிறு சிறு சேமிப்பாளரின் சேமிப்பாற்றலை விருத்தியுறச் செய்து சேமிக்கும் ஆற்றலைத் தூண்டும் இவ்வங்கி நாட்டின் நிதிச்சந்தையில் ஒரு சிறப்புறு நிறுவனமாகப் பரிணமிக்கின்றது. எந்தவொரு நாட்டிற்கும் அதனது மூலதனச் செழிப்புக்கு. சிக்கனமும் சேமிப்பும் முன்னறிகுறிகளாகும். அபிவிருத்தியடைந்த நாடுகள் போதியளவு மூலதனத்தைக் கட்டியெழுப்பும்வேளை அபிவிருத்தியடைந்து வரும் நாடுகள் இந்நிலையை அடையாது மந்தநிலையில் காணப்படுகின்றன. இத்தகைய நாடுகளின் முதலீட்டினைப் பெருக்குமுகமாக பிறநாட்டு நிதியுதவிகளும் உள்ளூர் மூலதனங்களும் ஏதுவாக அமைகின்றன. அண்மைக் காலமாக பிறநாட்டுதவி பெறுவதில் இடர்கள் மிகுந்துள்ளதால் மாற்று வழிகளில் முதலீடுகளைப் பெருக்குவதற்கு போதிய சூழ்நிலைகள் தோன்றின.

நவீன பொருளாதார முறைமை சேமிப்பைத் தூண்டுகின்றது. கவர்ச்சிகரமான வட்டி, பாதுகாப்பு ஸ்திரத்தன்மை போன்றவற்றை வங்கிகள் உறுதியளிப்பதன் மூலம் சேமிப்பின்பால் மக்களின் ஆர்வத்தை அதிகரிக்கச் செய்கின்றன. அரச அங்கீகாரம், பாதுகாப்பு, சலுகைகள் என்பனவும் மக்களிடையே சேமிப்பு பற்றிய நம்பிக்கையை வளர்த்துள்ளன. பொருளாதாரத்தை விருத்தி செய்யவேண்டும் எனும் மனப்பாங்கைத் தோற்றுவித்துள்ளன. சேமிப்பை ஊக்குவிக்க தேசிய சேமிப்பு வங்கியும் நாட்டில் தொழிற்படும் வர்த்தக வங்கிகளும் நிதிக் கம்பனிகளும் பலவகையான கவர்ச்சிகரமான வட்டி வீதம், காப்புறுதி வசதி மற்றும் வெகுமதிப் பொருள் அடங்கலான சிறுவர், மகளிர், முதியோர் போன்றோருக்கான சேமிப்புக் கணக்குகளை அறிமுகஞ் செய்துள்ளதோடு, நாட்டிலுள்ள பெருமளவு பாடசாலைகளில் பாடசாலை வங்கிக்கிளைகளை நிறுவி மாணவரிடையே சேமிப்பாற்றலை வளர்த்து வருகின்றன. சிக்கனத் தன்மை மூலம் சேமிப்பைக் கட்டியெழுப்பி சுபிட்ச வாழ்வினைப் பெற்றிடுவோம்.
thinakural.com

Print this item

  யாழ் இணைய வாசகர்களுக்கு
Posted by: tamilfriend - 10-31-2005, 08:14 PM - Forum: அறிமுகம் - Replies (9)

வணக்கம் யாழ் இணைய வாசகர்களுக்கு! என்னுடைய திபாவளி வழ்த்துக்களுடன் என்னை வரவேற்ற உங்கள் அனைவருக்கும் நன்றிகள்;. யாழ் இணைய மட்டுறுத்தினருக்கு என்னிடம் சில பாடல்கள் உண்டு எழுக தமிழ் நிகழ்வுக்காக பதிவு செய்தவைகள் அவைகளை இணைப்பதற்கு முயற்சி செய்தேன் அனால் அதில் விசேட உறுப்பினர்கள் மட்டும் தான் இணைக்கமுடியும்என்று வருகிறது அதற்கு என்ன செய்யவேண்டும் என்று தெரியப்படுத்தினால் மற்றநேயர்களுக்கு இந்த பாடலை கேட்கவைக்கமுடியும் என்று நினைக்கிறேன்.உங்கள் பதிலுக்காக ....
நன்றி வணக்கம் மீண்டும் சந்திப்போம்

Print this item

  மாவீரர் தினம் 2005
Posted by: iruvizhi - 10-31-2005, 07:31 PM - Forum: தமிழீழம் - Replies (4)

<img src='http://sooriyan.com/images/stories/vannitech/MV2005.jpg' border='0' alt='user posted image'>

நன்றிhttp://sooriyan.com/index.php?option=content&task=view&id=2476&Itemid=

படத்தினை இணைக்கப்பட்டுள்ளது. - yalini

Print this item

  சிரி,,சிரி,,சிந்தி
Posted by: Vaanampaadi - 10-31-2005, 06:41 PM - Forum: நகைச்சுவை - Replies (4)

சிரி,,சிரி,,சிந்தி

<span style='color:blue'>ஆடு, சிந்தனை செய்கிறது

மனிதா,,,,,
உன் பிள்ளைக்கு தோசமென்று
என்னை வெட்டுகிறாய் சரி இப்ப என்
பிள்ளைக்கு தோசமிருக்கிறதே நான்
யாரை வெட்டுவ்து
-----------------------------------------------------

<span style='font-size:25pt;line-height:100%'>கெளதம புத்தர் நடுநிசி 12 மணிக்கு வீட்டை
விட்டு வெளிக்கிட்டுபோதி மரத்தடியில்
இருந்து ஞானம் பெற்றார் இது வரலாறு

இப்பொழுது

அதே நேரம் ஒரு இளம் பெண் போகன்விலா
மரத்தடியில் போய் இருந்தால் என்ன பெறுவாள்

சிந்தியுங்கள் </span>
-----------------------------------------------------
<span style='font-size:25pt;line-height:100%'>வீட்...அம்மா,... நேற்று ராத்திரி ஏன் சாப்பாடு வாங்க வரலை..

பிச்சைக்காரர்....அமெரிக்காவில் இருக்கிறஎன் பொண்டாட்டி
கூட கம்பியூட்டர்ல சாட்டிங் பண்ணிக்கிட்டிருந்தேன்
நேரம் போனதே தெரியவில்லை </span>
[size=12]</span>

Print this item

  எமது பலவீனம்
Posted by: kurukaalapoovan - 10-31-2005, 04:00 PM - Forum: உங்கள் கருத்துக்கள் - Replies (114)

Michael Palin தனது பயண அனுபவத்தில் கவனித்ததாக கூறிய ஒன்று: சீனாவில் தனது படப்பிடிப்புக் குழுவோடு நடமாடிய பொழுது தங்களைச்சுற்றி விடுப்புப் பாக்கிற கூட்டம் கூடவில்லை. எல்லோரும் தத்தமது வேலைகளை தொடர்ந்து செய்து கொண்டிருந்தனர். ஆனால் இந்தியாவில் போகுமிடமெல்லாம் விடுப்புப்பாக்கிற கூட்டம் மொய்த்துக் கொண்டிருந்ததாம்.

இந்தியாவில் செய்வதற்கு ஒன்றும் இல்லாமல் இருக்கவில்லை. எமது பலவீனம் அது. விடுப்புப் பாக்கிறது தெருக்கூத்தை ரசிக்கிறது விசிலடிச்சு குசுகுசுத்துப்போட்டு போறது எங்களுக்கு அபிமானப் பொழுது போக்கு.

பலவீனத்தை (பொறுப்பற்ற நடத்தையை) நிவர்த்தி செய்ய விதிமுறைகள் சட்டங்கள் கொண்டுவரப்படவேண்டும். சிறுவருக்கு உகந்த களமாக பயனுள்ள தளமாக இருக்க விரும்பிற இடத்தில் ஆபாசம் கவர்ச்சி மாத்திரம் தான்தடை செய்யப்படவேண்டியதல்ல.

இணையத்திற்கு முன்னர் கிடைத்த தொழில் நுட்பமான தொலைக்காட்சியை எடுத்தால் என்ன சாதித்துள்ளோம்? திரைப்படங்கள் நாடகங்கள் என்ற குப்பைகளை எம்மீது கொட்டத்தான் பயன்படுத்தியுள்ளோம். எத்தனை அறிவியல் தொழில்நுட்பம் விஞ்ஞானம் சம்பந்தமான நிகழ்ச்சிகளை ஒளிபரப்புகிறார்கள் தமிழ் தொலைக்காட்சிகளில்? சொந்தமாக தயாரிக்காவிட்டாலும் எத்தனை ஆக்கபூர்வமான நிகழ்ச்சிகளை குறைந்த பட்ச்சம் மொழிப்பெயர்பாவது செய்து தன்னும் போடுகிறார்கள்? ஒரு நாளின் அல்லது ஒருவாரத்திற்கான வான் அலை நேரங்களில் ஒவ்வொரு தமிழ் வானொலி தொலைக்காட்ச்சி நிலையத்தாரும் எத்தனை வீதத்தை திரை, சின்னத்திரை குப்பைகள் அற்ற சிகழ்ச்சிகளிற்கு ஒதுக்குகிறார்கள்.

இன்று தமிழ் இணையத்தளங்களை எடுத்தால் பொரும்பாலானவை என்ன வழங்குகிறார்கள்?
திரைப்பாடல்கள், திரை நடிகர் நடிகைகளின் படங்கள், அவர்கள் சார்ந்த செய்திகள், கவிதை, நகச்சுவை, அரட்டை. ஏதோ பொறுப்புள்ள தளமாக காட்டிக் கொள்ள 100...200 தளங்கள் 2..3 மூலத்தில் இருந்து கிடைக்கும் செய்திகளை வெட்டி ஒட்டிக் கொள்கின்றன.
சொந்தமாக ஆக்கபூர்வமாக என்ன பயன்தரக்கூடிய வகையில் என்ன content அய் உருவாக்கியிருக்கிறார்கள் தமிழ் இணையத்தளப் பயன் பாட்டில்?

இணையத் தொழில்நுட்பத்தினூடாக தகவல்களை இலகுவாகவும் துரிதமாகவும் பரிமாறிக்கொள்ள கிடைத்த சந்தர்ப்பத்தை நாம் எவ்வாறு யாழ்களத்தில் பெரும்பாலும் செலவிடும் நேரத்தில் பயன்படுத்திக் கொள்கிறோம்?

எல்லோருக்கும் படிப்பு வேலை குடும்பம் என பல பொறுப்புக்கள் மத்தியில் இணையத்திற்கு, யாழிற்கு வரக் கிடைக்கும் நேரம் மட்டுப்படுத்தப்பட்டது. இந்த நேரத்தை எவ்வாறு செலவிடுகிறோம் என்பது எமது மேல் கூறிய பலவீனம் காரணமாக எம்மை இணைக்கும் களவிதிகளாலும் கட்டுப்படுத்தப்படவேண்டும். பொதுவாக தெருக்கூத்தை ரசித்து விசிலடித்துவிட்டு போவதற்கு ஊக்குவிப்பு தேவையில்லை. சிறுவர்களும் குளந்தைகளுக்கும் 24 மணத்தியாலங்களும் 7 நாளும் அனுமதித்தால் அதைத்தான் செய்யவிரும்புவார்கள்.

யாழ்களத்தில் தெருக்கூத்தை அனுமதிப்பது மனித உரிமை அடிப்படையில் நியாமாக இருக்கலாம் ஆனால் எமது பலவீனத்தின் நோக்கில் பார்க்கும் போது அது ஆரோக்கியமானதா?

Print this item

  தாகம்
Posted by: kpriyan - 10-31-2005, 01:38 PM - Forum: கவிதை/பாடல் - Replies (3)

விதிவந்தால் செத்து விடும்
வீணர்கள் அல்ல நாங்கள்..
கயவனின்.......
குரல் வளை கடித்து
உயிரினைக் குடித்து,
மார்பினைப் பிழந்து..
தொடையினைக் கிழித்தெறியும்
வேங்கைகளடா நாம்....

Print this item

  விசிறிவிடு! வேர்த்திருக்கு
Posted by: காவடி - 10-31-2005, 12:14 PM - Forum: கவிதை/பாடல் - Replies (2)

காத்திருக்கு மனசு . நெஞ்சில் நீறு
பூத்திருக்கு.. இதயம்
வேர்த்திருக்கு நீ வந்து
விசிறிவிட்டு போ..

Print this item

  The LTTE’s New Concept- Confederation: Taraki
Posted by: kurukaalapoovan - 10-31-2005, 09:05 AM - Forum: பிறமொழி ஆக்கங்கள் - No Replies

<b>In the 31st July 1991 issue of Sri Lanka's English daily, Island International, popular journalist and military analyst, late Dharmeratnam Sivaram, portrays the 1991 battle of Elephant Pass as demonatrating the LTTE's capability as a conventional army and predicts how this emergent force will dictate the trajectory of Sri Lanka's war.
Sri Lanka is a nation with two armies. The two weeks of fierce fighting to reach the besieged camp to Elephant Pass makes it an inescapable fact: a fact that might slowly impress itself upon the national psyche as the war drags on. The strapline in the state run English daily said yesterday.</b>

<i>Both sides call in reinforcements</i>, reducing the nation's army in one fell swoop of a phrase to equality. State Secretary of Defence, Air Chief Marshal Walter Fernando told the press on Thursday: Neither side is now in a position to pull out. It's not only a matter of prestige but of having to maintain what so far has been the biggest build-up of troops in an operation.

Whether the army would ultimately thrust through the three miles or so (according to official reports) to reach the Elephant Pass camp is not the question now. Having committed almost eight thousand troops to the effort, there is no other option. The question however is that once the battle ends, will not the LTTE be able to gain more credence for its political claim that it is the Tamil national army capable of defending what it calls its homeland?

<i>It should be understood that the LTTE is as much interested in pushing this claim among the Tamil people and the Western countries it may hope to woo, as it is interested in securing the arms and ammunition of the 800-strong Elephant pass camp. Battles such as these in the future will inescapably establish that Sri Lanka is a nation with two armies. It is not a problem of semantics or technicality as to whether the LTTE is a conventional army or not; there are many who are ready to split hairs over that. It is the political implication of this emergent fact that poses the problem to the idea of Sri Lanka's political unity, while its physical unity may still be intact.</i>

It would certainly be a major mistake to call this a final battle. At the end of it to suppose that the LTTE will be a spent force would be again foolish. In January, it was claimed that the LTTE declared a unilateral ceasefire because it was exhausted. But some of the fierce battles took place in Mannar and Vavuniya after the government unilaterally called off the ceasefire (Latterly the theory of exhausting the supplies of the Tigers- both men and material- has found currency.

This theory has to be reviewed if one takes into account the fact that even a lone guerilla would count the number of cartridges in his rifle magazine before he decides on how to engage the enemy.

Therefore to see the battle for Elephant Pass as a final one will be a gross underestimation of the LTTE.

The arms that the LTTE would recover from the army camp were it to fall will definitely bring about a qualitative change in the war. The artillery pieces that the LTTE may capture there will introduce a new dimension into the war no doubt. This is why the army I presume is throwing in almost eight thousand soldiers and a vast quantity of resources into the thrust to save the camp.

Contrary to the expectations of the "exhaustion theorists" the LTTE most probably will emerge as a conventional army using guerilla methods in the south western part of Mannar and the Eastern Province. Only a fool would have us believe that it will not be so. Irresponsible psychophants might insist and pretend to the country's political leadership that it would be only a matter of time before the LTTE was finished off having critically exhausted of its men and material.

Who has paused to look beyond a Pyrrhic victory at Elephant Pass into the political horizon? If the fact that there are two armies in this nation almost equal in power is taken for granted in the long run as a result of battles such as these, then the Tigers would find it easier to establish and push their claim that there are two nations in this island; and that one nation has a state and the other nation- the Tamils- need a nation state. An official publication of the LTTE has said in an editorial that <i>the territorial divide, the traditional homeland, should become an accomplished fact. Even if the Homeland does not become an accomplished fact the presence of two armies in the island can make it a politically established fact</i>.

This is what the LTTE aims at; and this is what they might have even if they lose the Elephant Pass camp. Then they will come for talks and negotiate for confederation. <i>The objective of the Tiger in its ambition of building up a massive conventional force is not a U.D.I- only an India inspired sucker may dream of it- but to negotiate a confederation which would include the right of self-determination. This is a post-1989 concept that the Tigers have come up with as a result of their new connections with the west. The concept is to keep India at bay and to muster the blessings of interested Western countries.</i>

The two-army situation and its political implications as briefly outlined here are the result of the government's refusal to secularize when they had the opportunity in the form of Perumal.

The two-army situation can confound India's options as well; <i>already the Sri Lankan problem has become one where officials come and go talking of Michael Angelo</i>. Unless a bold step is taken to secularize the political framework of the country and, thereby, pre-empt the political implications of the two-army situation, the escalation of the war will only serve the LTTE's political objective.

Thanks: TamilNet
http://www.tamilnet.com/art.html?catid=79&artid=16224

A true genious & irreplaceable lose to Tamil nation.

Print this item