Welcome, Guest
You have to register before you can post on our site.

Username
  

Password
  





Search Forums

(Advanced Search)

Forum Statistics
» Members: 8,982
» Latest member: lucilegr4
» Forum threads: 9,058
» Forum posts: 83,244

Full Statistics

Online Users
There are currently 374 online users.
» 0 Member(s) | 371 Guest(s)
Applebot, Bing, Google

Latest Threads
±ôÀÊ ÀÈ¢ì¸Ä¡õ
Forum: நகைச்சுவை
Last Post: UsArgum
01-10-2026, 09:07 AM
» Replies: 28
» Views: 10,317
Mrs.Sirimao Bandaranayake
Forum: நகைச்சுவை
Last Post: GeraTep
11-14-2025, 10:46 AM
» Replies: 14
» Views: 3,233
Farty time
Forum: நகைச்சுவை
Last Post: ㄹㅈㄷㄹㅈ
08-26-2025, 03:48 PM
» Replies: 11
» Views: 5,608
கனவே கலைகிறதே
Forum: பொழுதுபோக்கு
Last Post: KULAKADDAN
04-30-2006, 06:37 PM
» Replies: 0
» Views: 6,296
Karuna Cadres were captur...
Forum: பிறமொழி ஆக்கங்கள்
Last Post: ஜெயதேவன்
04-30-2006, 06:17 PM
» Replies: 4
» Views: 8,641
என்ன நடந்தது யாழிற்கு?
Forum: உங்கள் கருத்துக்கள்
Last Post: ஜெயதேவன்
04-30-2006, 06:03 PM
» Replies: 42
» Views: 31,069
முடியுமானால் முயற்ச்சியுங...
Forum: போட்டிகள்
Last Post: Subiththiran
04-30-2006, 05:00 PM
» Replies: 15
» Views: 14,465
**சுடேக்கு** புதிர் விளைய...
Forum: போட்டிகள்
Last Post: kavithaa
04-30-2006, 04:30 PM
» Replies: 63
» Views: 38,497
புல்மோட்டையில் தாக்குதல்
Forum: செய்திகள் : தமிழீழம்
Last Post: Sriramanan
04-30-2006, 04:10 PM
» Replies: 2
» Views: 8,038
போதனை வேண்டாம்! பு...
Forum: செய்திகள் : தமிழீழம்
Last Post: alika
04-30-2006, 03:13 PM
» Replies: 4
» Views: 6,239

 
  பிரபாகரன் அவர்களின் தந்திரோபாயமான சிந்தனை!
Posted by: thiru - 11-18-2005, 07:38 PM - Forum: செய்திகள் : தமிழீழம் - Replies (7)

<b>பிரபாகரன் அவர்களின் தந்திரோபாயமான சிந்தனையால் வெற்றிபெற்ற மகிந்தர். சொல்கிறார் எம். ஆர். நாராயண் சுவாமி.</b>

ஆழமாகப் பிளவுபட்ட சிறிலங்காவானது தனது வரலாற்றிலேயே ஆகக் குறைந்தளவு பெரும்பான்மையுடன் சிங்களக் கடும்போக்காளராக அறியப்பட்ட ஒருவரைச் சனாதிபதியாகத் தெரிவுசெய்துள்ளது. இந்த ஒன்றே -'ராஜபக்ச சமாதானத்தை விரும்புவாராயின்- தனது இன- மதவாதப் பேச்சுகளைச் சற்றுக் குறைத்து ஒரு மிதவாதியாகத் தம்மை மாற்றிக்கொள்ளவேண்டும்' என்பதற்கான முதன்மையான, தெளிவான அறிகுறியாக உள்ளது.

<span style='color:red'>வேலுப்பிள்ளை பிரபாகரனின் தந்திரோபாயமான சிந்தனையால்தான் (Tactical mind), சிறிய பெரும்பான்மையான 50 வீதத்திற்கும் சற்று அதிகமான வாக்குகளைப் பெற்று சனாதிபதிப் பதவியை ராஜபக்ச பெற்றுக்கொண்டிருக்கிறார். தடைப்பட்டுள்ள சமாதானப் பேச்சுகளை மீண்டும் ஆரம்பிப்பதில் ஆர்வம் கொண்டுள்ள மேற்குலகினாலும், தமிழர்களாலும் ஏற்றுக்கொள்ளப்படக்கூடிய ரணில் விக்கிரமசிங்கவைக் கையாள்வதைக்காட்டிலும், 'வெட்கங்கெட்ட சிங்கள எதிரியை'க் (Brazenly Sinhalese foe) கையாள்வது இலகுவானது என்று தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் தீர்மானித்துவிட்டார்.

குறைபாடுகள் உள்ளபோதிலும் தடைகளைத் தகர்த்த -2002 ஆம் ஆண்டின் சமாதான ஒப்பந்தத்தை மேற்கொண்ட- முன்னாள் பிரதமரான ரணில் விக்கிரமசிங்கவின் கருத்திற்கு நேரெதிராக, இந்தச் சமாதான நடவடிக்கைகள் விடுதலைப் புலிகளைப் பலப்படுத்துவதிலேயே வந்து முடிந்திருப்பதாக ராஜபக்ச உணருகிறார். அதேவேளை அவர் அனுசரணையாளரான நோர்வேக்கு எதிரான நிலைப்பாட்டையும் எடுத்திருக்கிறார்.

ஜே.வி.பி எனப்படும் சிங்கள- மாக்ஸியக் கட்சியினரும், ஜாதிக ஹெல உறுமய எனப்படும் பௌத்த பிக்குகளின் கட்சியினருமே ராஜபக்சவின் தீவிர ஆதரவாளர்கள். இந்த ஜே.வி.பி மற்றும் ஜாதிக ஹெல உறுமய இரண்டுமே, சிங்களப் பெரும்பான்மையினரின் கண்ணோட்டத்தையே பிரதிபலிக்கின்றன. சிறிலங்காவின் சிறுபான்மைத் தமிழர்கள் பாரம்பரியமாகவே பாரபட்சத்திற்குத் தாம் உள்ளாகிவருவதாக முறையிட்டு வருகின்றனர்.

இவை அனைத்தும் ராஜபக்ச, விக்கிரமசிங்க இருவருமே சிங்கள நாணயத்தின் இரண்டு பக்கங்கள். எனவே 'சனாதிபதித் தேர்தலில் தமிழ்மக்கள் அக்கறை கொள்ளத் தேவையில்லை' என்று பிரகடனம் செய்த விடுதலைப் புலிகளது இலக்கிற்குள் ராஜபக்சவைத் தள்ளியுள்ளன.

வாக்களித்தால் ரணிலுக்கே ஆதரவளிக்கக் கூடும் என்று எதிர்பார்க்கப்பட்ட சிறிலங்காவின் வடக்குக் கிழக்குத் தமிழ் மக்கள் தேர்தலைப் புறக்கணிப்பதை உறுதிப்படுத்திய விடுதலைப் புலிகளின் நிலைப்பாடு ரணில் விக்கிரமசிங்கவின் வெற்றியை உறுதியாகக் கொன்றொழித்துவிட்டது.

அனேக தமிழர்களின் உண்மையான -காரணகாரியத்துடன் கூடிய- புறக்கணிப்பிற்கு மத்தியில், ராஜபக்ச மிகவும் குறைவான வித்தியாசத்தில் ரணிலை முந்தியிருக்கிறார்.

பிரபாகரன் ஒன்றே ஒன்றை மட்டும் தமது மனதில் கொண்டே இந்த நிலையை உறுதிப்படுத்தியிருக்கக்கூடும்: அதாவது ராஜபக்சவின் வெற்றியானது சிங்களக் கடும்போக்காளரின் கரங்களைப் பலப்படுத்தும் அதேவேளை இந்த நடைமுறை யாதார்த்தமானது சுதந்திர தமிழீழ தேசத்திற்கான போராட்டத்திற்கு உரமளிக்கும்.

கார்த்திகை 27ம் திகதி மாவீரர் வாரத்தின் ஒரு அங்கமாக அமையும் தமது வருடாந்த மாவீரர் தின உரையை ஆற்றவுள்ள பிரபாகரனால், சிங்கள-பௌத்த கடும்போக்காளருடன் சேர்ந்து சமாதானத்தைக் கொண்டுவருவது என்பது சாத்தியமில்லை. இந்தக் கொள்கையின் அடிப்படையிலேயே கடந்த மூன்று தசாப்தங்களுக்கு மேலாக அவர் போராடிவருகிறார்.

ஏப்ரல் 2003 இலிருந்து தடைப்பட்டுப்போயுள்ள சமாதான நடவடிக்கைகளை மீள ஆரம்பிக்கக் கொழும்பு விரும்புமாயின் முக்கிய உரிமைகளைத் தமக்குத் தருமாறு விடுதலைப் புலிகளின் தலைவர் வலியுறுத்துவார். இது ராஜபக்சவைத் தர்மசங்கடமான ஒரு நிலைப்பாட்டிற்குள் தள்ளிவிடும்.

விக்கிரமசிங்க பிரபாகரனின் கோரிக்கைகளுக்கு இணங்கக்கூடும். ஆனால் ராஜபக்ச அவ்வாறு இணங்க மாட்டார் அல்லது இணங்க முடியாது. ஏனெனில் ஜே.வி.பி-ஹெல உறுமயவின் கிடுக்கிப்பிடி அதனைச் செய்ய அவரை அனுமதிக்காது. இவ்வாறு நடந்துவரும்போது 'சமாதானத்திற்கு இணங்காதிருப்பது ராஜபக்சவோ அல்லது சிங்கள தேசமோ அன்றி விடுதலைப் புலிகள் அல்ல' என்று புலிகள் உலகத்திற்குச் சொல்வார்கள்.

ராஜபக்ச தமக்கு முன் ஆட்சியிலிருந்த சிலரைப்போலத் தனது கடும்போக்கிலிருந்து பின்வாங்க முற்பட்டால், தற்போது நண்பர்களாக உள்ள சிங்களக் கடும்போக்காளர்களால் 'துரோகியாகக்' கருதப்படுவார். அதேவேளை, புதிய சனாதிபதி தனது மிகச் சிறிய பெரும்பான்மையை வைத்துக்கொண்டு நாட்டை நிருவாகம் செய்வதோ அல்லது புதிதாக நடக்கக்கூடிய பாராளுமன்றத் தேர்தல்களில் வெல்வதோ இலகுவானதல்ல என்பதையும் புரிந்துகொள்வார்.

'நான் போருக்கான வேட்பாளர் அல்ல, ஆனால் சமாதானம் என்பது கௌரவமான சமாதானமாக இருக்கவேண்டும்' என்று தேர்தல் முடிவுகள் வெளியானதும் குறிப்பிட்டார் ராஜபக்ச.

அப்படிச் சொல்வது அதனைச் செய்வதைக் காட்டிலும் இலகுவானது.

தற்போதைய -அபாய கட்டத்தை அடைந்துள்ள -மோதல்களைத் தடுக்கவும், நிலைத்துநிற்கக்கூடிய சமாதானத்தைக் கொண்டுவரவும் சனாதிபதி விரும்பினால், சிங்கள -பௌத்த கடும்போக்காளராகச் செயற்படுவதை அவர் நிறுத்தவேண்டும். அவரால் அது முடியாதெனில் சிறிலங்கா ஒரு குழப்பகரமான நிலமைகளை எதிர்கொள்ளவேண்டியதுதான்.

வெளிவிவகார அமைச்சர் கதிர்காமரின் கொலையினை அடுத்து ஐரோப்பிய ஒன்றியத்தினால் தமது அமைப்பின் மீது விதிக்கப்பட்ட தடை குறித்துப் பிரபாகரன் கடும் சினமடைந்திருக்கும் இந்த வேளையில், சமாதானத்திற்கு இணங்காத கொழும்பின் நிலைப்பாடானது -ஒரு உடனடியான யுத்தத்தைக் கொண்டுவராவிடினும்- மேலும் குழப்பங்களையும் உயிர்ப்பலிகளையுமே விளைவிக்கும்.

(இந்தக் கட்டுரையாளர் சிறிலங்காவின் நிலமைகளை அவதானித்து வருபவர். தமிழ்ப் புலிகள் குறித்த இரண்டு புத்தகங்களின் ஆசிரியர்)

<b>நன்றி:</b> Rajapakse will need to moderate if he seeks peace By M.R. Narayan Swamy

<b>தமிழில்:</b> திருமகள் (ரஷ்யா)</span>

<b>குறிப்பு:</b> இந்தக் கட்டுரையின் ஆங்கிலமூலம் பிறமொழி ஆக்கங்கள் பகுதியில் இணைக்கப்பட்டுள்ளது

Print this item

  Rajapakse will need to moderate if he seeks peace
Posted by: thiru - 11-18-2005, 07:37 PM - Forum: பிறமொழி ஆக்கங்கள் - No Replies

<b>குறிப்பு:</b> இந்தக் கட்டுரையின் தமிழ்வடிவம் செய்திகள்: தமிழீழம் பகுதியில் இணைக்கப்பட்டுள்ளது

<b>நன்றி:</b> யாகூ செய்திகள்

Friday November 18, 03:51 PM

<b>Rajapakse will need to moderate if he seeks peace

By M.R. Narayan Swamy </b>

A deeply divided Sri Lanka has chosen a known Sinhalese hardliner as its new president - but by the narrowest margin in the country's history. This itself is the first clear pointer that Mahinda Rajapakse, the current prime minister, will urgently need to shed some of his ethno-religious rhetoric and moderate himself if he wants lasting peace in his country.

The just over 50 percent of the votes Rajapakse got to grab the presidency against great odds is primarily due to the tactical mind of Velupillai Prabhakaran. The LTTE chief decided it would be easier to deal with a brazenly Sinhalese foe than someone like Ranil Wickremesinghe, who is more acceptable to the Tamils and a Western world intent on restarting the stalled peace process.


In contrast to Wickremesinghe, who as prime minister signed a path breaking, even if flawed, peace pact in 2002, Rajapakse feels the peace process has ended up cementing the LTTE. He is also ranged against Norway, the mediator. His fervent backers are JVP, a Sinhalese-Marxist party, and JHU, a party of Buddhist monks. Both JVP and JHU articulate the views of the Sinhalese majority in a country where Tamils, the minority, have traditionally complained of discrimination.


All this puts him in the firing line of LTTE, which declared its opposition to Tamils taking part in Thursday's presidential election saying both Rajapakse and Wickremesinghe were two sides of the Sinhalese coin. The LTTE stand effectively killed the prospects of a Wickremesinghe victory because it ensured that Tamils in the country's north and east who may have supported him never dared to vote.


Amid a virtual boycott by most Tamils, Rajapakse sneaked past Wickremesinghe by a wafer thin margin.


Prabhakaran would have ensured this with only one thing in mind: a Rajapakse victory is bound to strengthen the hands of Sinhalese hardliners and in the process give oxygen to the struggle for an independent Tamil Eelam state.


Prabhakaran, who will give his annual address Nov 27 as part of 'Heroes' Week', is unlikely to make peace with a Sinhalese-Buddhist hardliner. It is an ideology and mindset he has fought for over three decades. To push Rajapakse into an embarrassing corner, the LTTE chief will demand major concessions - if Colombo wants to restart peace talks stalled since April 2003. Wicremesinghe may have conceded Prabhakran's demands. Rajapakse will not - or cannot, at least easily - because of the JVP-JHU crutch. In the process, the LTTE will tell the world that it is Rajapakse, or the Sinhalese state, that is intransigent, not the Tigers.


If Rajapakse, like some of his predecessors earlier, decides to backtrack, he will be dubbed a 'betrayer' by Sinhalese hardliners, now his friends. At the same time, the new president will find that with his slender majority, it will not be easy to run the country - or even win any fresh parliamentary election.


'I am not a candidate for war, but it has to be an honourable peace,' Rajapakse said as the election results came in. That is easier said that done. If he wants to arrest the current dangerous levels of violence and bring lasting peace, the president will have to stop acting like a Sinhalese-Buddhist hardliner. If he does not, Sri Lanka will be in for troubled times.


At a time when Prabhakaran is fuming over the European Union curbs on his group following foreign minister Lakshamn Kadirgamar's assassination, intransigence on the part of Colombo will only mean more violence and more killings - even if there is no outright war. It is going to be tough for Rajapakse.


(The author is a Sri Lanka watcher and the author of two books on the Tamil Tigers.)

Print this item

  திருமணத்துக்கு முன் செக்ஸ்: சிக்கலில் சானியா
Posted by: Vaanampaadi - 11-18-2005, 07:26 PM - Forum: சினிமா - Replies (20)

திருமணத்துக்கு முன் செக்ஸ்: சிக்கலில் சானியா
நவம்பர் 18, 2005

ஹைதராபாத்:


திருமணத்துக்கு முன் செக்ஸ் விவகாரத்தில் குஷ்புவுக்கு ஆதரவு தெரிவிக்கும் தொனியில் பேசிய டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்ஸாவுக்கு எதிராக ஆந்திராவில் பெரும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

டெல்லியில் இந்துஸ்தான் டைம்ஸ் பத்திரிக்கை மாநாட்டில் பங்கேற்ற சானியாவிடம், தமிழக பெண்களின் கற்பு குறித்து விமர்சித்த குஷ்பு குறித்து கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த சானியா,

செக்ஸ் விஷயத்தில் அவரவர்கள் தான் முடிவெடுக்க வேண்டும். திருமணத்துக்கு முன்போ, பின்போ எப்போது செக்ஸை வைத்துக் கொண்டாலும் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்றார்.


திருமணத்துக்கு முன் செக்ஸ் வைத்துக் கொள்வது தவறில்லை என்பது போல சானியா பேசியதாக கருத்து உருவாகியுள்ளது. இதையடுத்து ஹைதராபாத்திலும் விசாகபட்டிணத்திலும் அவருக்கு எதிராக போராட்டங்கள் வெடித்துள்ளன.

சானியா மன்னிப்பு கேட்க வேண்டும் என்று கோரி அகில பாரதீய வித்யார்த்தி பரிஷத் அமைப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளது. மேலும் பல இஸ்லாமிய அமைப்புகளும் சானியாவுக்கு எதிர்ப்புத் தெரிவித்துள்ளன.

தமிழகத்தில் குஷ்பு, சுகாசினிக்கு நடந்ததைப் போல சானியாவின் படங்களுக்கு தீ வைப்பது, படங்களை செருப்பால் அடிப்பது போன்ற போராட்டங்கள் நடந்து வருகின்றன.


திருமணத்துக்கு முன் செக்ஸ் வைத்துக் கொள்ளலாம் என்று பேசியுள்ள சானியாவை ஒரு முஸ்லீமாகவே கருத முடியாது என இஸ்லாமிய அமைப்புகள் கூறியுள்ளன.

ஏற்கனவே, டென்னிஸ் போட்டிகளின்போது சானியா அணியும் குட்டைப் பாவாடைக்கும் இஸ்லாமிய மதகுரு ஒருவர் எதிர்ப்புத் தெரிவித்ததும், அதற்கு சானியா கடும் பதில் தந்ததும் நினைவுகூறத்தக்கது.

நான் 6 இன்ஞ் அல்லது 10 இன்ஞ் பாவாடை அணிவது என் இஷ்டம். நான் எப்படி இருக்கிறேன், எப்படி வாழ்கிறேன் என்பது குறித்து யாரும் கவலைப்படத் தேவையில்லை என்றார் சானியா.

இந் நிலையில் இப்போது திருமணத்துக்கு முன் செக்ஸ் குறித்த விவகாரத்தில் சிக்கியுள்ளார்.

Thatstamil

Print this item

  ஐரோப்பியருக்கு பிடித்த நமது உணவு வகை எது?
Posted by: KULAKADDAN - 11-18-2005, 07:25 PM - Forum: சமையல் - Replies (14)

வணக்கம்.
ஒரு உதவி. நான் இருக்குமிடத்தில் ஒரு கலாச்சார நிகழ்வு. அதற்கு எமது நாட்டு உணவு வகை ஒன்று தயாரித்து கொடுக்கவேண்டியுள்ளது. உங்கள் அனுபவத்தில் இங்குள்ள மக்கள் எமது உணவில் எதை விரும்புகிறார்கள் என பகிர்ந்துகொள்ள முடிந்தால் எனக்கு உதவியாக இருக்கும். நன்றி.

Print this item

  TAMIL MOVIE FREE DONLOAD NEW .............
Posted by: tamil03 - 11-18-2005, 07:07 PM - Forum: தரவிறக்கங்கள் - Replies (8)

<!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> [url=http://pirasath.skyblog.com/]<span style='font-size:30pt;line-height:100%'>FREE DOWNLOAD TAMIL MOVIES</span>8) 8) 8)

<!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <img src='http://pirasath.skyblog.com/pics/275849229.gif' border='0' alt='user posted image'> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

<!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> [url=http://pirasath.skyblog.com/]<span style='font-size:30pt;line-height:100%'>CLICK THIS PAGE</span>8) 8) 8)

Print this item

  தமிழர் தேசம் உணர்த்திய பாடம்
Posted by: cannon - 11-18-2005, 06:06 PM - Forum: தமிழீழம் - No Replies

இப்பத்தி எழுதப்பட்டுக்கொண்டிருக்கும்போது, இலங்கை யின் ஐந்தாவது ஜனாதிபதியைத் தெரிவுசெய்வதற்கான தேர்தலின் வாக்களிப்பு இலங்கைத் தீவில் நடைபெற்றுக் கொண்டிருந்தது. ஆனால், இப்பத்தியை நீங்கள் வாசிக்கும் போது இலங்கையின் அடுத்த ஜனாதிபதி யார் என்பது பெரும்பாலும் உறுதியாகி இருக்கும்.
தென்னிலங்கையில் சுறுசுறுப்பான வாக்களிப்பு. தமிழர் தாயகத்திலோ தேர்தல் ஒரேயடியாகப் புறக்கணிப்பு.
இதுவிடயத்தில், கடந்த பொதுத்தேர்தல் குறித்து கடந்த வருடம் தமது மாவீரர் தின உரையில், தலைவர் பிரபாகரன் குறிப்பிட்ட கருத்துகள் இன்றும் இன்னும் பொருத்தமாக இருப்பது நோக்கற்பாலது.
அந்தத் தேர்தல் சிங்கள, தமிழ்த் தேசங்கள் மத்தியிலான இன முரண்பாட்டை மேலும் கூர்மையடையச்செய்தது. சமாதானத்திற்கும், இணக்கப்பாட்டிற்கும் விரோதமான சிங்கள, பௌத்த பேரினவாத சக்திகள் என்றுமில்லாதவாறு தென்னிலங்கை அரசியல் அரங்கில் மேலாண்மை வகிக்க அந்தப் பொதுத் தேர்தல் வழிவகுத்தது என்பதை தமது செய்தி யில் சுட்டிக்காட்டியிருந்தார் பிரபாகரன்.
பொதுசனத் தீர்ப்பின் வாயிலாக தென்னிலங்கை அரசி யல் அரங்கில் சிங்கள, பௌத்த மேலாண்மை வாதம் வலுப் பெற்ற அதேசமயம், தமிழரின் தாயகமான வடக்கு கிழக் கில் ஒரே இலட்சியத்தில் ஒன்றுபட்ட சக்தியாகத் தமிழ்தேசி யம் எழுச்சிபெற்றது. தமிழ் மக்களின் விடுதலை இயக்கமான தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் அரசியல் இலட்சி யத்துக்கு மக்கள் சக்தியின் ஏகோபித்த ஆதரவு கிட்டியது.
அத்தோடு, அந்தப்பொதுத் தேர்தல் ஆனது என்றுமில்லாதவாறு தமிழ், சிங்கள இனங்களை வேறுபட்ட இரு தேசங்களாகப் பிளவு படுத்தியது. கருத்தாலும், உணர்வா லும், இலட்சியத்தாலும் வேறுபட்டு, மாறுபட்டு. முரண் பட்டு நிற்கும் இரு மக்கள் சமூகங்களைப் பிரிவுறச் செய்தது என்று தலைவர் பிரபாகரன் சுட்டிக்காட்டியிருக்கிறார்.
இவ்வாறு இரு தேசிய இனங்களின் தேசியங்களுக்கு இடையில் தேசத்துக்கு இடையில் நிலவும் முரண்பாட்டு நிலை மேலும் தீவிரமாகிக் கூர்மையடைந்து வருவதை இந்த ஜனாதிபதித் தேர்தலும், அது தொடர்பாக தமிழ், சிங் கள தேசங்கள் நடந்துகொண்ட முறைமையும் நமக்குத் தெளிவாக உணர்த்தியிருக்கின்றன.
கடந்த பொதுத் தேர்தலில் இரண்டு வெவ்வேறு இனக் குழுமங்களுக்கு வாக்களித்ததன் மூலம் தமிழர் தேசம், சிங் கள தேசம் என்ற பிரிவு தெளிவுபடுத்தப்பட்டது என்றால், இந்த ஜனாதிபதித் தேர்தலில் ஒரு தரப்பு மும்முரமாகப் பங்குபற்ற மற்றத் தரப்பு அதனை முற்றாகப் புறக்கணித்த தன் மூலம் இந்த வேறுபாடு மேலும் முனைப்புற வெளிப் பட்டிருக்கின்றது.
சிங்கள தேசத்தின் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி யைத் தெரிவு செய்யும் தேர்தலில் தமிழ் தேசத்துக்கு எந்தச் சம்பந்தமுமில்லை. அது அந்த (சிங்கள) தேசத்தின் உள் வீட்டு விவகாரம் என்பது போல தமிழர் தாயகம் தனது நடத்தை மூலம் சர்வதேச சமூகத்துக்கு எடுத்து இயம்பி இருக்கின்றது.
இந்தத் தேர்தலை ஒட்டுமொத்தமாகப் புறக்கணித்த தமிழர் தாயகத்தின் நிலைப்பாடு அதன் சுயாதீன இறை யாண்மை ஆதிக்கம் சிங்கள மக்களுக்கும் சர்வதேச சமூகத்துக்கும் தெட்டத்தெளிவாக உணர்த்தப்பட்டிருக்கின்றது.
இந்தத் தேர்தலும் அதில் அக்கறை காட்டாமல் அதை ஒட்டுமொத்தமாகப் புறக்கணித்த தமிழர்தேசத்தின் நிலைப் பாடும் இரண்டு பெறுபேறுகளைத் தந்திருக்கின்றன.
ஒன்று இத் தேர்தலில் தெரிவுசெய்யப்படும் ஜனாதி பதி தாம் தமிழர் தாயகத்தினதும் ஜனாதிபதி என்று கருதிக் கொள்வதற்கு இடமேயில்லை என்பது மீண்டும் தெளிவாக உணர்த்தப்பட்டிருக்கின்றது.
அடுத்தது சிங்கள தேசம் தனது தலைமையைத் தானே, சுயாதீனமாக, தமிழர் தாயகத்தின் தலையீடின்றித் தெரிவு செய்து, அதன் அதிகாரத்தை அந்தத் தலைமையிடம் ஒப் படைக்கவும் இத்தேர்தலில் வாய்ப்பளிக்கப்பட்டிருக்கின்றது.
இத்தேர்தலின் பின் பதவியேற்கப் போகின்ற ஜனாதி பதியே எதிர்காலத்தில் இத்தீவின் நிலைமை குறித்து முக் கிய முடிவுகளை தீர்மானங்களை எடுக்கப்போகின்றார்.
இலங்கைத் தீவில் தமிழர், சிங்களவர் ஆகிய இரு தேசிய இனங்களும் ஒத்திசைவுடன், ஒன்றுபட்டு, சமரசமாக, சமாதானமாக, அமைதியாக, அதிகாரங்களைத் தங்களுக் குள் பகிர்ந்துகொண்டு வாழ்வதா? அல்லது யுத்தம் மூலம், இராணுவத் தீர்வுகண்டு, தனித்தனியாகப் பிரிந்து இரண்டு தேசங்களாவதா? என்பது குறித்தும் இவற்றில் ஒன்றை எட்டுவதற்கான நடவடிக்கைகளை எடுப்பது குறித்தும் சிங்களப் பக்கத்தில் தீர்மானிக்கவேண்டியவர் தென்னிலங்கைத் தேர்தலில் வெற்றிபெறும் ஜனாதிபதிதான்.
அந்த முடிவுகளுக்குப் பொறுப்பேற்கவேண்டியவர் அவர் தான். அத்தகையவரைத் தெரிவுசெய்யும் பொறுப்பு தனித் துத் தென்னிலங்கையிடமே ஒப்படைக்கப்பட்டிருப்பதால், எதிர்கால விளைவுகளுக்கும் தென்னிலங்கையே பதில் கூறவேண்டியிருக்கும்.
ஆக, இத் தேர்தலின் மூலம் இத்தீவில் தமிழ்த் தேசம், சிங்கள தேசம் என்ற இருவேறு இறையாண்மைகள் இருப் பது நிரூபிக்கப்பட்டிருக்கிறது. சிங்கள தேசம் தனது தலை மையைத் தனித்துத் தேர்ந்தெடுக்க வசதியளிக்கப்பட்டிருக் கின்றது.
பௌத்த சிங்கள பேரினவாதத்தில் மூழ்கி, மேலாண் மைப்போக்குடன் செயற்படுகின்ற வழியில், அல்லது
தமிழர்களுக்குரியவற்றை அவர்களுக்குள் பகிர்ந்தளித்து, அவர்களுடன் ஒத்திசைவாக வாழ்கின்ற முறையில்
சிங்கள தேசத்தை வழிப்படுத்துகின்ற ஒருவரை சுயா தீனமாகத் தெரிவுசெய்ய வாய்ப்புக்கிடைத்திருக்கிறது.
அதன் முடிவு என்னவென்பது காலையில் இப்பத்தியை நீங்கள் வாசிக்கும்போது பெரும்பாலும் ஊர்ஜிதமாகியிருக் கும்.

http://www.uthayan.com/editor.html

Print this item

  கவிதைப்போட்டி (டிவிடி பரிசு)
Posted by: vasisutha - 11-18-2005, 05:03 PM - Forum: போட்டிகள் - Replies (85)

<img src='http://img37.imageshack.us/img37/1803/amma0yf.jpg' border='0' alt='user posted image'>


<span style='font-size:20pt;line-height:100%'>இந்தப் படத்துக்கு பொருத்தமான
கவிதைகளை நீங்கள் எழுதலாம்..
சிறந்த கவிதைக்கு 2 திரைப்பட DVDக்கள்
பரிசு..


பரிசுக்குரிய கவிதை நடுவர்களால் தீர்மானிக்கப்படும்..

நடுவர்கள்: <b>சோழியன்</b>..<b>இளைஞன்</b>


<b>போட்டியின் முடிவுத்திகதி :</b> 28.11.2005</span>


நிபந்தனைகள்:

1. கவிதைகள் உங்கள் சொந்த கற்பனையில்
உதித்ததாக இருக்கவேண்டும்.

2. ஏனைய ஊடகங்களில் வெளிவந்திருக்கக் கூடாது.

Print this item

  தமிழர்கள் வாக்களிக்காதது எமக்கு ஏமாற்றமே: ஐ.தே.க.
Posted by: அருவி - 11-18-2005, 04:45 PM - Forum: செய்திகள் : தமிழீழம் - Replies (2)

சிறிலங்காவின் அரச தலைவர் தேர்தலில் தமிழர்கள் வாக்களிக்காதது தங்களுக்கு ஏமாற்றமே என்று ஐக்கிய தேசியக் கட்சி தெரிவித்துள்ளது.


ஐ.தே.க.வின் பிரதி செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க கூறியுள்ளதாவது:

அரச தலைவர் தேர்தலில் மக்கள் அளித்த தீர்ப்பை மதிக்கிறோம். புதிய அரச தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள மகிந்த ராஜபக்சவுக்கு எமது வாழ்த்துகளைத் தெரிவிக்கிறோம்.

நாம் தேர்தல் முடிவுகளை ஒப்புக் கொள்கிறோம். ஆனால் வடக்குப் பிரதேசத்தில் பாரிய அளவில் வாக்குப் பதிவு குறைந்திருப்பது எம்மை ஏமாற்றமடையச் செய்துவிட்டது.

<b>தேர்தலில் தமிழர்கள் வாக்களிக்காமல் ஒதுங்கியிருந்தது அடிப்படை உரிமை மீறலாகும்.</b> எமது தேர்தல் செயற்பாடுகளில் நாம் மகிழ்ச்சியடைகிறோம் என்றார் திஸ்ஸ அத்தநாயக்க.

நன்றி புதினம்

Print this item

  மகிந்தவின் வெற்றியால் வன்முறைகள் வெடிக்கும்: எரிக்சொல்ஹெய்ம்
Posted by: வினித் - 11-18-2005, 04:34 PM - Forum: செய்திகள் : தமிழீழம் - No Replies

மகிந்தவின் வெற்றியால் சிறிலங்காவில் வன்முறைகள் வெடிக்கும்: எரிக் சொல்ஹெய்ம் அச்சம்!!
[வெள்ளிக்கிழமை, 18 நவம்பர் 2005, 20:55 ஈழம்] [ம.சேரமான்]
சிறிலங்கா அரச தலைவராக மகிந்த ராஜபக்ச வெற்றி பெற்றிருப்பதால் சிறிலங்காவில் வன்முறைகள் வெடிக்கும் அபாயம் உள்ளதாக நோர்வே அபிவிருத்தி அமைச்சரும் இலங்கைக்கான விசேட சமாதானத் தூதுவருமான எரிக் சொல்ஹெய்ம் கருத்துத் தெரிவித்துள்ளார்.


நோர்வே வானொலி ஒன்றுக்கு அவர் அளித்த மேலும் செய்திக்கும்
http://www.eelampage.com/?cn=21826

Print this item

  நூதனம் &lt;&lt; கோபம்
Posted by: Vaanampaadi - 11-18-2005, 10:20 AM - Forum: செய்திகள்: உலகம் - No Replies

<img src='http://www.dinakaran.com/daily/2005/Nov/18/photos/BUsh.jpg' border='0' alt='user posted image'>

கோபம்

அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ் மீது கொரிய மக்களுக்கு அளவு கடந்த கோபம். தென் கொரியாவின் ஜியாங்ஜு ரெயில் நிலையம் முன் புஷ்சுக்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடந்தது. பிரம்மாண்டமாக வைக்கப்பட்டிருந்த புஷ்சின் கார்ட்டூன் மீது திரிசூலங்களால் குத்தி தங்கள் கோபத்தை வெளிப்படுத்துகின்றனர்.


<img src='http://www.dinakaran.com/daily/2005/Nov/18/photos/veggh.jpg' border='0' alt='user posted image'>

நூதனம்

பறவைக் காய்ச்சல் நோய்க்காக பறவைகளை ஏன் குற்றம் சொல்கிறீர்கள். நீங்கள் வெஜிடேரியனாக மாறி விடுங்கள் என்று சிங்கப்பூரில் உள்ள விலங்குகள் பாதுகாப்பு அமைப்பு பிரசாரம் செய்து வருகிறது. இந்த அமைப்பைச் சேர்ந்த உறுப்பினர் ஒருவர் கோழி போல உடை அணிந்து முகத்தில் காஸ் முக மூடி பொருத்திக் கொண்டு சிங்கப்பூர் தெருக்களில் உலா வருகிறார்.

தினகரன்

Print this item