Welcome, Guest
You have to register before you can post on our site.

Username
  

Password
  





Search Forums

(Advanced Search)

Forum Statistics
» Members: 8,982
» Latest member: lucilegr4
» Forum threads: 9,058
» Forum posts: 83,244

Full Statistics

Online Users
There are currently 370 online users.
» 0 Member(s) | 368 Guest(s)
Bing, Google

Latest Threads
±ôÀÊ ÀÈ¢ì¸Ä¡õ
Forum: நகைச்சுவை
Last Post: UsArgum
01-10-2026, 09:07 AM
» Replies: 28
» Views: 10,317
Mrs.Sirimao Bandaranayake
Forum: நகைச்சுவை
Last Post: GeraTep
11-14-2025, 10:46 AM
» Replies: 14
» Views: 3,233
Farty time
Forum: நகைச்சுவை
Last Post: ㄹㅈㄷㄹㅈ
08-26-2025, 03:48 PM
» Replies: 11
» Views: 5,608
கனவே கலைகிறதே
Forum: பொழுதுபோக்கு
Last Post: KULAKADDAN
04-30-2006, 06:37 PM
» Replies: 0
» Views: 6,296
Karuna Cadres were captur...
Forum: பிறமொழி ஆக்கங்கள்
Last Post: ஜெயதேவன்
04-30-2006, 06:17 PM
» Replies: 4
» Views: 8,641
என்ன நடந்தது யாழிற்கு?
Forum: உங்கள் கருத்துக்கள்
Last Post: ஜெயதேவன்
04-30-2006, 06:03 PM
» Replies: 42
» Views: 31,070
முடியுமானால் முயற்ச்சியுங...
Forum: போட்டிகள்
Last Post: Subiththiran
04-30-2006, 05:00 PM
» Replies: 15
» Views: 14,465
**சுடேக்கு** புதிர் விளைய...
Forum: போட்டிகள்
Last Post: kavithaa
04-30-2006, 04:30 PM
» Replies: 63
» Views: 38,497
புல்மோட்டையில் தாக்குதல்
Forum: செய்திகள் : தமிழீழம்
Last Post: Sriramanan
04-30-2006, 04:10 PM
» Replies: 2
» Views: 8,038
போதனை வேண்டாம்! பு...
Forum: செய்திகள் : தமிழீழம்
Last Post: alika
04-30-2006, 03:13 PM
» Replies: 4
» Views: 6,239

 
  நல்ல யோசனைங்கோ
Posted by: Vaanampaadi - 11-18-2005, 10:16 AM - Forum: பிறமொழி ஆக்கங்கள் - No Replies

சீனப்பல்கலைக்கழகத்தில் படிக்கும் மாணவர்கள் தங்கள் கோபத்தை வெளிப்படுத்துவதற்காக தனி அறை ஒன்று உருவாக்கப்பட்டு உள்ளது. அதில் வரிசையாக மணல் மூட்டைகள் அடுக்கப்பட்டு உள்ளன. அந்த மூட்டைகளில் தங்கள் கோபத்தை வெளிப்படுத்திக்கொள்ள அனுமதிக்கப்படுகிறது.

சீனாவில் சிச்சுவான் (Sichuan) மாநிலத்தில் உள்ள ஜியாஓடொங் (Jiaotong) பல்கலைக்கழகத்தில் தான் இந்த ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. தனி அறை ஒதுக்கப்பட்டு 8 நாட்கள் ஆகிறது.இந்த அறையைப் பயன்படுத்த மாணவர்கள் பெரும் அளவில் முன்வந்து உள்ளனர். நூற்றுக்கணக்கான மாணவர்கள் இந்த அறைக்காக முன்பதிவுசெய்துவிட்டு காத்து இருக்கிறார்கள்.இதன் மூலம் மாணவர்கள் தங்களுக்கு வேலை கிடைக்காததால் அல்லது தாங்கள் காதலிப்பவர்கள் தங்களை கைவிடுவதால் ஏற்படும் மனவிரக்தியை கையாள இது ஒரு நல்ல வழி என்று சைக்காலஜி professor நிங் வைவை (Ning Weiwei) தெரிவிக்கிறார்ங்கோ...................................

BEIJING (Reuters) -

A Chinese university has set up a special "anger management" room for students to let off steam, apparently to avoid students taking to the streets in protest or taking their own lives.


Southwest Jiaotong University, in Chengdu in southwestern Sichuan province, has fitted a room out with sandbags lining the walls waiting to be pummelled by students venting their frustrations, the China Daily said Wednesday.

"Students have flocked to the room since it opened eight days ago and hundreds more have booked in, presumably in anticipation of upcoming bouts of fury," the newspaper said.

Ning Weiwei, a professor of psychology at the college, said the room was a good way for students to deal with failing to find a job or being jilted by a mate.

"We want to help students let out their intense animosity or hostility without storing up such hatred," he said.

Chinese students, for centuries influenced by Confucianism and submissive to authority, became increasingly assertive in the early 1900s. But there have been no large-scale student protests since the 1989 army crackdown on the Tiananmen pro-democracy demonstrations.

China is obsessed with keeping a lid on unrest, with the ranks of unemployed graduates a growing threat.

In recent years, some professors and students have broken free of the strict ideology of the Communist Party thanks in part to the influx of Western culture and economic reforms. The Internet has become a popular outlet for students to vent their frustrations.

Many students have killed themselves in recent years because of problems ranging from academic pressure to emotional problems.

Experts say the anger management room is a quick fix, failing to address the root problems of a student's unease.

"Using it to help students with mental problems is totally senseless," said Chen Xin, a psychologist with the Institute of Sociology under the Chinese Academy of Social Sciences.

"China's elite education system and rapid economic development have misled young students" who lacked the tolerance long espoused by traditional Chinese philosophy, he said.

Print this item

  யாழ் பருத்துறையில் ஈ.பி.டீ.பி யினர்மீது குண்டுத்தாக்குதல்
Posted by: mayooran - 11-18-2005, 07:56 AM - Forum: செய்திகள் : தமிழீழம் - No Replies

யாழ்ப்பாணம் பருத்துறையில் ஈ.பி.டீ.பி யினர்மீது இன்று காலை 10 மணியளவில் கைக்குண்டுத்தாக்குதல் ஒன்றுநைடைபெற்றுள்ளது.இதில் படையினர்ஒருவர் காயமடைந்து தற்போதுமந்திகை மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகிறார்.
www.autham.com

Print this item

  பழப் பாயசம்
Posted by: RaMa - 11-18-2005, 07:07 AM - Forum: சமையல் - Replies (3)

தேவையானவை:-

ஆப்பிள் - பாதி
வாழைப்பழம் - 1
ஆரஞ்சு - 1
திராட்சை - அரை கப்
பேரிக்காய் - 1
முந்திரி - 6
காய்ந்த திராட்சை - 1
பால் - 5 கப்
வெனிலா கஸ்டர்ட் பவுடர் - 2 டீஸ்பூன்
சர்க்கரை - ஒன்றரை கப்





செய்முறை:-

4 கப் பாலை பொங்கக் காய்ச்சுங்கள். மீதியிருக்கும் 1 கப் காய்ச்சாத பாலில் கஸ்டர்ட் பவுடரைக் கரைத்து, காய்ச்சிய பாலில் சேருங்கள். அத்துடன் சர்க்கரையும் சேர்த்து நன்கு கொதிக்கவிட்டு இறக்கி, ஆறவிட்டு குளிரவையுங்கள். பழங்களை தோல் சீவி, விதை நீக்கி பொடியாக
நறுக்குங்கள். முந்திரியையும் பொடியாக நறுக்குங்கள். எல்லாவற்றையும் ஒன்றாக குளிர வைத்த பாலில் சேர்த்துப் பரிமாறுங்கள். திருமண விருந்துகளுக்கான ஸ்பெஷல் பாயசம் இது.

Print this item

  தமிழீழ அபிவிருத்தியில் யாழ்ப்பாண கொலைகள்
Posted by: Jude - 11-18-2005, 06:40 AM - Forum: தமிழீழம் - Replies (15)

தமிழீழ அபிவிருத்தியில் அக்கறை கொண்ட பேராசிரியர்கள் சிலர், அண்மையில் சுனாமி அனர்த்தத்தின் போது, கனேடிய மருத்துவர்களையும் தொலைக்காட்சி நிகழ்ச்சி தயாரிப்பாளர்களையும் தம்முடன் முல்லைத்தீவு கிளிநொச்சி ஆகிய பிரதேசங்களுக்கு அழைத்து சென்று, தமிழீழம் பற்றிய அறிவை இவர்கள் மூலம் தாம் சார்ந்த கனேடிய பல்கலைக்கழக சமுதாயத்துக்கு வளர்த்தெடுத்தார்கள்.

இவர்களது பெரு முயற்சியின் பயனாக அரச மட்டத்தில் பல்கலைக்கழகங்களுக்கு ஆய்வுகளுக்காக ஒதுக்கப்படும் பணத்தில், அநர்த்த நிவாரண தீர்வுத்திட்டங்களை செயற்படுத்தி பார்க்கும் ஆய்வுகளுக்கும் பங்கு வழங்கப்பட்டு, குறிப்பாக சிறிலங்காவுக்கு என பெரும் தொகைகள் ஒதுக்கப்பட்டிருந்தன. ஆய்வுகளின் பெயரால் நிவாரண திட்டங்களை தமிழீழத்தில் செயற்படுத்துவதும், ஒதுக்கபட்ட பணத்தில் பெறுமதிமிக்க இயந்திரங்களை தமிழீழத்துக்கு கொண்டு சென்று செயற்பட வைப்பதுமே இவர்களது திட்டமாகும்.

ஆய்வுகளுக்கு அரசு பகிரங்கமாக விண்ணப்பங்கள் கோரி, ஒரு குழுவை கொண்டு விண்ணப்பங்களை தெரிவு செய்வதுதான் அவர்களது முறையாகும். இவர்களும் திட்டமிட்டபடி விண்ணப்பங்கள் கோரப்பட்டவுடன் விண்ணப்பித்தார்கள். முதலாவது ஆய்வு மண்வள அபிவிருத்தி பற்றியது. அது பற்றிய அறிஞரான, அண்மையில் வன்னி சென்று ஒரு செயற்திட்டத்தை நிறைவேற்றிவிட்டு வந்த பேராசிரியர் ஒருவர், தனது விண்ணப்பத்தை சமர்ப்பிந்திருந்தார். அவருக்கு போட்டியாக, தென்பகுதியில் ஆய்வு செய்ய விரும்புவதாக வேறு ஒரு பேராசிரியரும் விண்ணப்பிந்திருந்தார். தென்பகுதி விண்ணப்பமே ஏற்றுக்கொள்ளப்பட்டு, பணம் இயந்திரங்கள் எல்லாம் சிறிலங்காவின் தென்பகுதிக்கு செல்ல இருக்கின்றன.

முற்றிலும் தமிழீழ ஆதரவாளரின் முயற்சியால் ஒதுக்கப்பட்ட பணம், சிறிலங்காவின் தென்பகுதிக்கு அனுப்படுகிறது. இவரது விண்ணப்பம் மறுக்கப்பட்டதற்கு காரணம், வட கிழக்கில் தொடரும் கொலைகளாகும். சிறிலங்காவினதோ அல்லது தமிழீழத்தினதோ, அல்லது இவர்களது கூட்டு நிர்வாகத்தினதோ பாதுகாப்பு, இந்த பிரதேசங்களில் போதுமானதாக இல்லை என்றும், கிளிநொச்சியில் பாதுகாப்பு இருந்தாலும், யாழ்ப்பாணத்தில் போதுமான பாதுகாப்பு இல்லாமல் ஆய்வு முயற்சியில் வடக்கில் பணத்தை செலவிட தயாராக இல்லை என்றும், இந்த கனேடிய அரசு அறிவித்து விட்டது.

அடுத்த சிறிலங்காவிற்கான ஒதுக்கீடு 5 மில்லியன் டொலர்கள். பாதிக்கப்பட்ட பெண்களுக்கு மறுவாழ்வு நிவாரணம் வழங்கும் திட்டம். அது குறித்த துறையில் ஆய்வாளாராக இருக்கும் ஒருவரை விரைவாக கண்டுபிடித்து தான் விண்ணப்பிக்க வேண்டும். ஆனால் இதையும் மேற்படி காரணம் காட்டி தென்பகுதிக்கே அனுப்பி விடுவார்கள் போல தெரிகிறது.

யாழ்ப்பாணத்தில் கொலைகள் தொடரும்வரை, தமிழீழ ஆர்வலர்கள் தமது நிறுவனங்களில் சிறிலங்காவுக்கு பணஉதவி கோரினால், அது தென்பகுதிக்கு போவதை தடுக்க முடியாது போலவே தெரிகிறது.

Print this item

  அறிமுகம்
Posted by: மேகநாதன் - 11-18-2005, 05:22 AM - Forum: அறிமுகம் - Replies (87)

வணக்கம்.
யாழ் இணையத்தின் வாசகரான நான் உறுப்பினர் ஆவதில் மகிழ்ச்சி.பயனுறுதி வாய்ந்த விடயங்களின் உங்களது கருதுப்பகிர்வுகள் கவனிப்புக்குரியதும் பாராடத்தக்கதும்....பூவோடு சேர்ந்த நாரும் ஆக உங்களோடு .....புலம் பெயர்ந்த இன்னுமொரு உறவாக துரை-மேகநாதன்

Print this item

  இந்த மரத்தை தெரியுமா?
Posted by: vasisutha - 11-17-2005, 07:12 PM - Forum: மருத்துவம் - Replies (1)

<b>இந்த மரத்தை தெரியுமா?</b>

<img src='http://img272.imageshack.us/img272/3936/p94a8dz.jpg' border='0' alt='user posted image'>

<img src='http://img272.imageshack.us/img272/1647/p943as.jpg' border='0' alt='user posted image'>

<span style='color:blue'>அவள் விகடனில் மருத்துவ குணம் நிறைந்த
மரத்தை பற்றிய கட்டுரை படித்தேன்..
இந்த மரம் எங்கள் நாட்டில் உண்டா? யாராவது
கண்டிருக்கிறீர்களா?

கட்டுரை Arrow

<b>உதிரப் போக்குக்கு அருமருந்தான மூலிகை மரம்!</b>

சாதாரணமாக கிராமப்புறங்களில் வளர்ந்து கிடக்கும் நாவல் மரம் மாதிரிதான் இருக்கிறது, அந்த உதிரவேங்கை மரம்! பனை போன்ற உயரமோ, ஆல் போன்ற கட்டுமஸ்தோ இல்லாமல், கொஞ்சம் பெண்மை ஏந்தி, சுற்றிலும் ஏழெட்டு மரங்கள் தோழிப் பெண்கள் போல காவலுக்கு வீற்றிருக்க, ஒயிலாக நிற்கிற இந்த மரம்... அபூர்வமான ஒரு மூலிகை மரம்!

'அதிக உதிரப்போக்கால் அவதிப்படும் பெண்களுக்கு இந்த மரத்தின் பட்டை அருமருந்தாக இருக்கிறது. பட்டுக்கோட்டைக்கு அருகே, கீழக்காடு கிராமத்தில் உள்ள இந்த மரத்தை அந்த கிராமமே கட்டிக் காக்கிறது' என்கிற தகவல் கேட்டுத்தான், அடாத மழையையும் பொருட்படுத்தாமல் அங்கே போயிருந்தோம்.

ஊருக்குள் அடியெடுத்து வைத்ததும் எதிர்ப்பட்ட தாளமை என்கிற பாட்டியிடம் நாம் விசாரிக்கவும், உற்சாகமாக 'உதிரவேங்கை'யின் புகழ் பாடினார்.

''வயசுப் புள்ளைகளை இந்த உதிரப்போக்கு ரொம்ப வாதிச்சுடும். போக்கு அதிகமாகுறதால கை, காலெல்லாம் சடசடத்துப் போயி, உசுரைக்கூட எடுத்துரும். அதுக்குத் தான் இந்த உதிரவேங்கையோட பட்டை, கண்கண்ட மருந்து! இந்தப் பட்டையைக் கஷாயம் வச்சுக் குடிச்சா அடுத்த நிமிஷமே அணை கட்டிப் போட்ட மாதிரி போக்கு அடங்கிடும். பொண்ணுங்க கஷ்டத்தைப் போக்கறதால இதுக்கு 'அம்மாத்தா மரம்'னும் ஒரு பேர் இருக்கு!'' என்ற தாளமைப் பாட்டிதான் நம்மை அந்த மரம் இருக்கும் இடத்துக்கும் அழைத்துச் சென்றவர்.

இந்த மரத்துக்கு எந்த பாதிப்பும் வந்துவிடக் கூடாது என்பதற்காக 'ஊரில் யாரும் கால்நடை வளர்க்கக் கூடாது' என்று தடைகூடப் போட்டிருந்தார்களாம்.

''நான் இந்த ஊருக்கு வாக்கப்பட்டு வந்தப்ப, ஆட்டுக் குட்டிகளையும் ஓட்டிக்கிட்டு வந்தேன். ஆனா, இங்கே ஆடு, மாடு வளக்க தடை போட்டிருக்கிறதா சொன்னாங்க. 'கிராமத்தோட உசுரே விவசாயமும், ஆடு, மாடு வளக்குறதும்தானே. அதுக்கே தடையா?'னு விசாரிச்சப்பதான், 'முருகர் சாமி, மரமா மாறி நின்ன மண்ணு இது... இங்கே இருக்கிற உதிரவேங்கை மரம் தான் முருக மரம். அதை ஆடு, மாடு மேஞ்சிறக் கூடாதுனுதான் தடை போட்டதா' சொன்னாங்க!'' என்ற தாளமைப் பாட்டியிடம், ''அந்த மரத்தை மட்டும் வேலி போட்டு காப்பாற்றி இருக்கலாமே. ஆடு, மாடு வளர்க்க ஏன் தடை போடணும்?'' என்றோம்.

''அட, புரியாத புள்ளையா இருக்கியே. அது தன்னால வளர்ற மரம். விதை போட்டு, கன்னு வெச்செல்லாம் அதை வளர்க்க முடியாது. அது எங்கே வளரும்னு யாராலயும் கண்டுபிடிக்கவும் முடியாது. செடியா இருக்கறப்ப
எதுனு தெரியாம ஆடு, மாடுக மேய்ஞ்சிடக் கூடாதேனுதான் அந்தத் தடை!'' என்று பாட்டி விளக்கி முடிக்கவும், நம்மைச் சுற்றிக் கொண்டது ஒரு கூட்டம்.

''இந்த மரத்தை அரிவாளால லேசா கீறினோம்னா சிவப்பு கலர்ல அடர்த்தியா ரத்தம் கொப்புளிச்சு வரும்...'' என்று கூறிய சிதம்பரம் என்பவரை நாம் நம்பாமல் பார்க்கவும், கையில் இருந்த அரிவாளால் நம் கண் முன்னாலேயே மரத்தைக் கீறினார். அடுத்த விநாடி, துளித் துளியாக ரத்தம் போல் ஒரு திரவம் மரத் தில் இருந்து பெருக்கெடுக்கவும், அரண்டு போனோம்.

''சாணம் பூசினாத் தான் இந்தச் சாறு அடங்கும்'' என்றபடி, கீறப்பட்ட இடத்தில் சித்ரா என்ற பெண்மணி மாட்டுச் சாணத்தை வைக்கவும் மந்திரத்துக்குக் கட்டுப்பட்ட மாதிரி ரத்தம்(?) நின்றுவிட்டது.

உதிரவேங்கையின் பெருமை தெரிந்து, தேடி வருகிற வெளியூர் ஆட்களுக்கு, மரப்பட்டையை இலவசமாகவே தருகிறார்கள் இந்த மக்கள்.

''எந்தெந்த ஆபீசரெல்லாமோ இங்கே வந்து இந்த மரத்தை டெஸ்ட் பண்ணிப் பார்த்துட்டு, 'அற்புதமான மரம் இது. காவந்து பண்ணி வையுங்க'னு சொல்லிட்டுப் போறாங்க!'' என்ற சிதம்பரம், இந்த மரப்பட்டையால் குணமானவர்கள் பற்றிக் கதை கதையாகச் சொன்னார். ''போன வாரம்கூட ஒருத்தர் வந்து இந்தப் பட்டைகளை எடுத்துக்கிட்டுப் போனாரு. மறுநாளே போன் பண்ணி, 'எவ்வளவோ மருத்துவம் செஞ்சும் தீராத என் பொண்டாட்டியோட வேதனை, ஒரே நாள்ல தீர்ந்துடுச்சுய்யா'னு நா தழுதழுத்துச் சொன்னார்!'' என்றார், சிதம்பரம்.

ரத்தம் கொடுக்கும் வள்ளல்களைத் தெரியும்.. ரத்தப்போக்கைத் தடுக்கும் வள்ளலாகத் தெரிந்தது கீழக்காடு கிராமம்!

<b>''பெண்களுக்கு ஒரு வரப்பிரசாதம்!''</b>

தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவரும், மூலிகை மருத்துவங்கள் பற்றி பல ஆராய்ச்சிக் கட்டுரைகளை வெளியிட்டவருமான டாக்டர் மோகன்தாஸை சந்தித்து உதிரவேங்கையின் மருத்துவக் குணம் குறித்துக் கேட்டோம்.

''உதிரவேங்கையை தாவரவியலாளர்கள் 'பீரோகார்பஸ் இண்டிகஸ்' என்கிறார்கள். உண்மை யிலேயே பெண்களுக்கு வரப்பிரசாதமான குணங்களைக் கொண்டதுதான் அந்த மரம். அதில் இருக்கும் 'ரெட் கிரிஸ்டல்'கள்தான் ரத்தம்போல் வரும் சாறுக்கு காரணம். அதோடு, டானிக் ஆசிட், அமினோ ஆசிட் என பல்வேறு சத்துப் பொருட்கள் அந்த மரத்தில் இருக்கின்றன. உதிரப்போக்குக்கு மட்டுமல்லாது, பெண்களுக்கு ஏற்படும் அடிவயிற்று வலி, தொண்டை வலி, வயிற்றுப்போக்கு போன்றவற்றுக்கும் இது அற்புதமான மருந்து!'' என்றார், டாக்டர். மோகன்தாஸ்,

''ஜப்பானில் இதன் இலைகளைப் பயன்படுத்தி கேன்சரைத் தடுக்கும் ஆன்ட்டி ட்யூமரை தயாரிக்கிறார்கள். பிலிப்பைன்ஸின் தேசிய மரம் இதுதான். சிங்கப்பூரில் இந்த மரத்தைப் பயன்படுத்தித்தான் முடி கொட்டும் பிரச் னைக்கான மருந்துகள் தயாரிக்கப்படுகின்றனவாம். இதில் நார்ச்சத்தும், செரிமான தூண்டுதலும் அதிகமிருப்பதால் சர்க்கரை வியாதியைத் தடுக்கும் சக்தி இதற்கு உண்டு.

இது உதிரத்தை உறைய வைப்பதால் மன்னர்கள் காலத்தில் வெட்டுக் காயங்களுக்கு இதைத்தான் மருந்தாகப் பயன்படுத்தி இருக்கிறார்கள். இந்த மரம் காலப்போக்கில் நம் மாநிலத்தில் எங்குமே இல்லாமல் போய் விட்டதாக சில மருத்துவ நூல்கள் சொல் கின்றன!'' என்று தகவல்களை கொட்டிய டாக்டர், ''எனக்கே கீழக்காடு போய் அந்த மரத்தைப் பார்க்கவேண்டும் போலிருக்கிறது'' என்றார், ஆவலோடு.</span>

vikatan.com

Print this item

  ஒரு புலியின் கதை!
Posted by: SUNDHAL - 11-17-2005, 05:51 PM - Forum: நகைச்சுவை - Replies (11)

ஒரு புலியின் கதை!

கற்பனை : முகில்

"உனக்கு முட்டை தெரியும்! நூறுக்கு எத்தனை முட்டை வரும்னு தெரியுமா' என்று கேட்டபடி பச்சைக் குழந்தை ஒன்று தொட்டிலிலிருந்து சிரிக்கிறது.

"இனி சதுரமான பந்தை வைச்சு விளையாண்டாதான் நீ மேட்சுக்கு மேட்ச் பிப்டியாவது அடிக்க முடியும். உடனே ஐ.சி.சி.ரூலை மாத்து....' என ஒரு சாமியார் முகத்தில் குங்குமத்தை அள்ளி வீசுகிறார்.

"அதிகமா வாய் பேசுற கேப்டனும் அதிகமா சிங்கிள் டிஜிட்ல அவுட் ஆகுற பேட்ஸ்மேனும் டீம்ல நிலைச்சதா சரித்திரமே இல்லை' என அசரீரியாக ஒலிக்கிறது ரஜினியின் குரல்.

"லெக் ஸ்டெம்புக்கும் , மிடில் ஸ்டெம்புக்கும் நடுவுல எத்தனை ஸ்டெம்ப்ஸ் இருக்கும்? பதில் சொல்லப் போறீயா இல்லையா?' என்று கேட்டபடி ஒரு பேட்டை கிரெக் சாப்பல் சுழட்டி எறிய, அலறி அடித்து எழுந்திருக்கிறார் முன்ன்ன்னாள் கேப்டன் கங்குலி.

""அடச் சீ கனவா! ரொம்ப டார்ச்சர் பண்ணிட்டாங்கப்பா! நிம்மதியா அஞ்சு நிமிஷம் தூங்கக் கூட முடியல, தூங்குனா நிரந்தரமா வீட்டுல படுத்து தூங்கச் சொல்லிருவாங்களோன்னு பயமா இருக்குது. பேசாம வேறு ஏதாவது நாட்டு டீம்ல இடம் கிடைக்குதான்னு ச்சும்மா ட்ரை பண்ணிப் பாப்போமா! என கங்குலி கடுமையாய் யோசித்துக் கொண்டிருக்கும் போதே எஸ்.எம்.எஸ். ஒன்று செல்லை வந்தடைகிறது. அதில்...

""தேசிய கீதம் பாட , நூடுல்ஸ் பண்ண , பல் தேய்க்க, பத்து வரி பார்த்து எழுத , ஒரு பலூனை ஊதி வெடிக்க வைக்க இதுக்கெல்லாம் எவ்வளவு நேரம் ஆகுமோ அவ்வளவுதான் ஆகும் கங்குலி பெவிலியன்ல இருந்து பேட்டோட வந்துட்டுப் போறதுக்கும் . கங்குலி- எதிரணியினர் விரும்பும் இணையற்ற கேப்டன்.. ப்டன்.. டன்..ன்!''

டென்சனாகி எஸ்.எம்.எûஸ காலி பண்ணுகிறார்.

போன் அடிக்கிறது. எடுக்கிறார்.

"" சார், எல்லாரும் ரெடி ஆகிட்டோம். நீங்க வந்தா ஷாட் எடுத்துரலாம். ஒரு அரை மணி நேர வேலைதான். வந்துட்டீங்கன்னா, இன்னும் ரெண்டு நாள்ல விளம்பரம் டீவியில வர ஆரம்பிச்சுரும்!'' என எதிர்முனையில் ஒலிக்க , வழக்கமான கெத்துடன் கங்குலி, ""ஓ.. என்ன மேன் இது.. ரொம்ப தொல்லையாய்ப் போச்சு... ஓ.கே. வந்து நடிச்சுத் தொலைக்கிறேன்!''என போனை வைக்கிறார்.

"ஆஹா நமக்கு இன்னும் மாஸ் இருக்கு டோய்! விளம்பர வருமானம் குறையவே இல்ல. இதை எப்படியாவது தக்க வைச்சுக்கணும் ' என நினைத்துக் கொண்டே ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு கிளம்புகிறார்.

அங்கே....

கங்குலி: என்ன மேன், கோக்கா, பெப்ஸியா என்ன ப்ராடக்ட்?

டைரக்டர்: டிரிங்ஸ் இல்லீங்க!

கங்குலி: அப்ப என்ன புது கார், பைக்..இல்ல ஏதாவது பிஸ்கட் விளம்பரமா?

டைரக்டர்: இல்லீங்க சார், இது சேர் விளம்பரங்க ! நான் ஸீனைச் சொல்லுறேன் கவனமாக் கேளுங்க ! அதுக்கு முன்னாடி மேக் அப் போட்டுக்கிட்டு வந்துருங்க ! இந்த விளம்பரத்துல உங்க கூட டோனியும் நடிக்கிறாரு.

கங்குலி: ஓ அப்படியா.. ரொம்ப ஜூனியர் அவன் ...அவன் கூடல்லாம் நடிக்க வேண்டியிருக்கு. சரி என்ன செய்ய அட்ஜஸ்ட் பண்ணிக்கிறேன். ஆமா எப்பவும் ஒரிஜினல் கெட்-அப்ல பண்ணுறதுதான வழக்கம், எதுக்கயா மேக் அப்?

டைரக்டர்: உங்களை வைச்சுத்தான் ப்ராடெக்ட் பிக்-அப் ஆகப் போகுது. அதுக்கு கெட்-அப் முக்கியம். அப்பத்தான் ரியலா இருக்குங்க! ப்ளீஸ் போட்டுக்கிட்டு வாங்க! (பத்து நிமிடம் கழித்து, மேக்-அப் அறையிலிருந்து டென்சனாக கத்தியபடி ஓடி வருகிறார் கங்குலி)

கங்குலி: யோவ் டைரக்டர்..என்னையா இது.. தலையில் நரைச்ச முடி விக் வைச்சு, வெள்ளை மீசை வைச்சு கிழவன் மாதிரி ஆக்கச் சொல்லியிருக்க... என்ன ஸீன் எடுக்கப் போற..சொல்லு!

டைரக்டர் : டோனி உங்ககிட்ட ஓடி வந்து, "தாத்தா அந்தக் காலத்துல நீங்க கிரிக்கெட் விளையாண்ட கதையைச் சொல்லுங்களேன்'னு கேட்பாரு! நீங்களும் பழைய நினைவுகளில மூழ்குவீங்க ! அப்ப ப்ளாஷ்பேக்ல நீங்க ஒரு காலத்துல அடிச்ச சூப்பர் ஷாட்டையெல்லாம் காட்டுறோம் . கண்களின் ஓரத்துல நினைவுகள் ஆனந்தக் கண்ணீரா கசிய நீங்க அப்படியே அந்த ஈஸி சேர்ல சாயறீங்க...உடனே பின்னணில "எடக் மடக் ஈஸி சேர்! நினைவுகள் என்றும் உங்கள்

வசம் !'னு குரல் ஒலிக்கும்!

கங்குலி: முடிவே பண்ணிட்டீங்களா..ஆளாளுக்கு அலம்பல் பண்ணுறீங்க! நான் என்ன கேணையனா..இந்த விளம்பரத்துல நடிக்க முடியாது. வேற ஆளைப் பார்த்துக்கோ! எனச் சொல்லி விட்டு அங்கிருந்து படு கோபமாகக் கிளம்புகிறார் கங்குலி.

மைதானத்திற்குள் நுழைகிறார்.

அங்கே சச்சின், டிராவிட், பதான் நெட் பிராக்டீஸ் பண்ணிக் கொண்டிருக்க , உடன் கோச் சாப்பலும் நிற்கிறார்.

கங்குலி: என்ன பாய்ஸ் ..எப்படி இருக்கீங்க ?

சாப்பல் : ஹே மேன், ஹூ ஆர் யூ?

கங்குலி<!--emo&Sad--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->மனதிற்குள் ) மவனே ரொம்பத்தான் ரவுசு. நக்கல் பண்ணுறியாடி. இருடி . உன்னை பின்னால் கவனிச்சுக்கிறேன். ஏதாவது பேசுனா நீ அதையே பெரிசு பண்ணிருவே !(குழைவாக) ஹலோ சார்! எப்படி இருக்கீங்க?

சாப்பல்: யார் நீ? கிரவுண்ட்ல பால் பொறுக்கிப் போடுற பையனா..

கங்குலி: (பல்லைக்கடித்துக் கொண்டு) என்ன சச்சின், சார் செம ஜோக் அடிக்காருல்ல!

சச்சின்: உங்களை நான் எங்கேயோ பார்த்த நியாபகம் இருக்கு . இப்ப ப்ராக்டீஸ் பண்ணிக்கிட்டிருக்கேன். டிஸ்டர்ப் பண்ணாதீங்க !

பதான்: சார், கொஞ்சம் ஓரமா நிக்கறீங்களா...பந்து போடணும்.

டிராவிட்: தம்பி, கொஞ்சம் ஓரமா நில்லுப்பா! பந்து படாத இடத்துல பட்டுடப் போகுது! இந்தப் பந்து பட்டா வலி உயிர் போகும்.ஓரமாப் போப்பா!

கங்குலி: (மனதிற்குள்) அடப்பாவிகளா டோட்டலா நம்ம யாருன்னே மறந்துட்டாங்களே.. இதை இப்படியே விடக்கூடாது.(சத்தமாக சிரித்தபடி) ஹை..கைஸ்! என்னைத் தெரியலையா..நான் தான் ..சவுரவ்..கேப்டன்..

சாப்பல்: (மற்றவர்களிடம்) பாய்ஸ்...மழை வர்ற மாதிரி இருக்கு ..பிராக்டிஸ் ஓவர் போகலாம்!

கங்குலி: பாய்ஸ்..நில்லுங்க ...நான்தான் சவுரவ்..லெப்ட் ஹேண்ட் பேட்ஸ்மேன் உங்க பழைய கேப்டன்...நில்லுங்க..

யாரும் கவனிக்காமல் செல்ல , கங்குலி அவர்கள் முன் ஓடிச் சென்று , கைகளில் ஒரு பேட்டை எடுத்து அதை தலைக்கு மேல் தூக்கிக் கொண்டு , வாயில் ஒரு பந்தைக் கவ்விக் கொண்டு , "மூன்றாம்பிறை' கமல் மாதிரி ஆடி, ஓடிக் காண்பிக்கிறார். "அய்யோ பாவம்' என பரிதாபப்பட்ட டிராவிட் அந்த பேட்டில் தன் ஆட்டோகிராஃபை போட்டுவிட்டுச் செல்கிறார்.

அழும் நிலைக்கு வந்துவிடுகிறார் கங்குலி.

அப்போது எங்கேயோ ஒரு குரல் பாடுகிறது...

""ஞாபகம் வருதே! ஞாபகம் வருதே!

பொலபொலவென குறைந்து போன ஸ்ட்ரைக் ரேட், ரன் ரேட் ஞாபகம் வருதே!

ஏதோ ஒன்றைத் தொலைத்ததைப் போல

ஏதோ ஒன்றை இழந்ததைப் போல

காமெண்டேட்டர் வேலை கிடைத்தது போல

உதடுகள் ஓரம் வர்ணனை வருதே!''

எனப் பாடல் ஒலிக்க..

""டேய் எவண்டா அவன்..தைரியம் இருந்தா மூஞ்சிக்கு நேர வந்து பாடுடா! சிங்கம்டா! என கர்ஜிக்கிறார் கங்குலி.

""இல்லீங்கண்ணே! நீங்க பெங்கால் டைகர்! அதையும் மறந்துட்டீங்களா! என எங்கிருந்தோ ஒரு குரல் ஒலிக்க , பதிலேதும் பேசாமல் இடத்தைக் காலி பண்ணுகிறார் கங்குலி.

கங்குலி வீட்டிற்கு வருகிறார்.

கூரியர் ஒன்று வருகிறது.

அதில்..

"டியர் சவுரவ்..

நாங்கள் சங்கம் ஒன்றை நடத்தி வருகிறோம். அதில் இணைவதற்கான முழுத் தகுதியும் தற்போது உங்களுக்கு இருக்கிறது. சங்கத்தில் சேர ஆரம்பக்கட்டணம் ஏதுமில்லை. வருடக்கட்டணம் ரூ.100 மட்டும். விரைவில் சங்க உறுப்பினர்களுக்கென பென்சன் திட்டமொன்றையும் ஆரம்பிக்கப் போகிறோம். சங்கத்தில் சேர அணுக வேண்டிய முகவரி : கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்றோர் & ஒடுக்கப்பட்டோர் சங்கம்,007,சைபர் ரோடு, புதுதில்லி.

இப்படிக்கு,

தலைவர்: முகமது அசாரூதின்

ஆலோசகர்: அஜய் ஜடேஜா

பொருளாளர்: வினோத் காம்ப்ளி

படித்து முடித்து விட்டு உச்ச கட்ட டென்சனில் அந்தப் பேப்பரை சுக்கு நூறாக்குகிறார் கங்குலி.

(ஹலோ..போதும் நிறுத்துங்க..சின்னபுள்ளத்தனமால்ல இருக்கு! ஒருத்தர் மாட்டுனாப் போதும். ரொம்பத்தான் ஓவரா நக்கலடிச்சே ஓய்ச்சுருவீங்களே! இனி கங்குலி பத்தி பேசப்படாது சொல்லிட்டேன்.)

Print this item

  பெண்கள் கழிவறைக்குள் நுழைந்த மைக்கேல் ஜாக்சன்
Posted by: Vaanampaadi - 11-17-2005, 04:46 PM - Forum: செய்திகள்: உலகம் - Replies (1)

முக அலங்காரம் செய்ய பெண்கள் கழிவறைக்குள் நுழைந்த மைக்கேல் ஜாக்சன்

துபாய், நவ. 17-

பிரபல `பாப்' பாடகர் மைக்கேல் ஜாக்சனும், சர்ச்சையும் உடன் பிறந்த ஒன்றாக இருக்கிறது. இதனால் அவர் எங்கு சென்றாலும் அங்கு ஒரு பரபரப்பு ஏற்பட்டு வருகிறது.

செக்ஸ் குற்றச்சாட்டுகளில் இருந்து விடுதலையான அவர் கார் பந்தயத்தை ஊக்குவிக்கவும், சொத்து வாங்கவும் அரபு நாடுகளுக்கு சுற்றுப்பயணம் சென்றார்.

துபாய் நாட்டிற்கு சென்ற அவர் முக அலங்காரம் செய்வதற்காக ஷாப்பிங் மாலில் உள்ள அறையை தேடினார். அங்கு அரபு மொழியில் ஆண், பெண் அறை என்று எழுதப்பட்டு இருந்தது. அரபு மொழி தெரியாத மைக்கேல் ஜாக்சன் பெண்கள் கழிவறைக்குள் நுழைந்து விட்டார். அங்கு அமர்ந்து முக அலங்காரம் செய்துவிட்டு திரும்பி வந்தார். இதை வெளியே நின்றவர்கள் பார்த்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. அங்கு கூட்டம் கூடியது. இதையடுத்து போலீசார் அவரை மீட்டு அழைத்து சென்றனர்.

இந்த சம்பவத்தை ஜாக்சன் மறுத்து இருக்கிறார். இது தொடர்பாக அவர் கூறும் போது, "அரபு மொழி தெரியாததால் பெண்கள் கழிவறைக்குள் சென்றது உண்மைதான். ஆனால் உடனடியாக வெளியே வந்து விட்டேன்'' என்று தெரிவித்து இருக்கிறார்.

Maalaimalar

Print this item

  காட்டுமிராண்டிக் கலாச்சாரம்
Posted by: nallavan - 11-17-2005, 01:59 PM - Forum: செய்திகள் : தமிழீழம் - Replies (52)

யாழ்ப்பாணத்தில் பொதுமக்களே கூடி ஒருவனை அடித்துக் கொன்றிருக்கிறார்கள்.
இது தொடர்பாகப் பலதரப்பட்ட கருத்துக்கள், செய்திகள், வதந்திகள் வெளிவந்தவண்ணமுள்ளன.
என்வரையில் இதுதொடர்பான எனது காட்டமான கண்டனத்தைத் தெரிவித்துக்கொள்ள இப்பதிவு.

யாரோ கலாச்சாரக் காவலர்களாம். ஒருவனைக் கட்டி வைத்து அவனருகில் ஒரு பட்டியலையும் அறிவிப்பையும் வைத்துவிட்டுப் போவார்களாம். அதைப்பார்த்த எங்கள் "செம்மறியாட்டு மந்தைக் கூட்டம்" எல்லாரும் கூடி அவனை அடித்துக் கொல்வார்களாம்.
என்ன நடக்கிறது? யார் அந்த கலாச்சாரக் காவலர்கள்? அவர்கள் எழுதிவைத்த அறிவிப்பினதும் பட்டியலினதும் உண்மைத்தன்மை என்ன? எப்படி அவர்கள் அவ்வளவு விவரங்களையும் சேகரித்தார்கள்? அதுவொரு குழுவா? அல்லது தனிப்பட்ட சிலர் சேர்ந்த கும்பலா? யாழ்ப்பாணத்தில் இப்படி கலாச்சாரம் பேணும் குழுவென்று ஒன்றேயொன்றுதான் இருக்கிறதா? அல்லது யாரும் நினைத்தால் இப்படியொரு குழுவைக்கூட்ட முடியுமா? இந்த முடிவு பலரின் ஏகோபித்த முடிவா? அல்லது இரண்டொருவரின் முடிவு மட்டுமா?

கலாச்சாரம் பேணும் குழுவென்ற பெயரில் சில நல்லதுகள் யாழ்ப்பாணத்தில் நடந்தன. அதை மறுப்பதற்கில்லை. சட்டத்தைத் தங்கள் கையில் எடுத்தாலும் சமூகத்துக்குப் பயன்தரத்தக்க வகையில் அவர்களின் பல செயற்பாடுகள் அமைந்தன.
ஆனால் இப்போது நடந்தது சுத்த அயோக்கியத்தனமான செயல். வெட்கப்பட வேண்டிய செயல்.
தெரிவிக்கப்பட்ட குற்றங்களில் திருட்டுக்கள் தான் இருப்பதாகத் தெரிகிறது. (யாரும் முழு விவரமும் வெளியிடவில்லை)
அதுவும் 20 வயது இளைஞன் ஒருவன்தான் இதிற் சம்பந்தப்பட்டுள்ளான்.

நீதிசெய்வதற்கென்று தார்மீக அடிப்படையில் சில வரையறைகள் இருக்கின்றன. ஒருவனுக்கு இன்ன தண்டனை என்றாற்கூட அதை யார் கொடுப்பது என்பதுகூட வரையறைக்குட்பட்டது. ஒருவனுக்குத் தூக்குத்தண்டனை விதித்தால் அதை யாரும் நிறைவேற்றிவிட முடியாது. தூக்குத்தண்டனை பெற்ற ஒருவனை தூக்குத்தண்டனை நிறைவேற்றுபவனல்லாத வேறுயாரும் கொன்றாற்கூட அது தண்டனைக்குரிய குற்றம்தான்.
புலிகள் ஒரு நீதியமைப்பை வைத்திருக்கிறார்கள். சமூகம் சார்ந்த வழக்குகளில் இதுவரை (ஏறத்தாள 13 வருட வரலாற்றில்) வெறும் நான்கு மரணதண்டனைகள் மட்டுமே நிறைவேற்றப்பட்டுள்ளன. மேலும் விதிக்கப்பட்ட மரணதண்டனையொன்று தேசியத்தலைவருக்குக் கருணை மனு சமர்ப்பிக்கப்பட்டு பதிலுக்காகப் பிற்போடப்பட்டுள்ளது.
அவையனைத்தும் பாலியல் வல்லுறவு வழக்குகள். (தகவல்:ஒப்பிலான், முதன்மை நீதியாளர், தமிழீழ உச்சநீதிமன்றம்).
ஆக புலிகளே தம் நீதியமைப்பில் மரணதண்டனையை இயன்றவரை தவிர்க்கவே முயல்கிறார்கள். மரணதண்டனை நீக்கம் பற்றி ஆலோசித்து, வாதித்து வருகிறார்கள். திருட்டுக்கெல்லாம் மரணத்தைப்பற்றி அவர்கள் யோசித்ததேயில்லை. பாலியல் வல்லுறவு வழக்கில்கூட மரணதண்டனை இல்லாமல் ஆயுள்தண்டனையோடு பல வழக்குகள் புலிகளால் முடிக்கப்பட்டிருக்கின்றன.


இங்கே கலாச்சாரக் காவலர்கள் அவனைக் கொல்லவேண்டுமென்று முடிவெடுத்திருந்தாற்கூட அதைத் தாமே செய்திருக்க வேண்டும். பொறுப்புணர்ச்சியற்று பொதுமக்களிடத்தில் அவ்வேலையைக் கொடுத்திருக்கக்கூடாது. (இங்கே கலாச்சாரக் காவலாளிகளுக்குக் கொலை செய்யும் உரிமையை நான் கொடுக்கவில்லை.)
இது பற்றி ஒருவருடன் உரையாடியபோது, "சனம் அடிச்சுக் கொல்லுமெண்டு அவங்கள் நினைச்சிருக்க மாட்டாங்கள். ஆனா பிசகிப்போட்டுது" என்றார். இது சுத்த கயமைத்தனமான பதில்.
வேறெப்படி நடக்குமென்று எதிர்பார்த்து இவர்கள் இதைச்செய்தார்கள்? மக்கள் மன்னித்துவிடுவார்கள் என்று நினைத்தா இதைச் செய்தார்கள். சரி அவனைச் சாகடிப்பது அக்குழுவின் நோக்கமல்ல என்றால், அதை உறுதிப்படுத்த என்ன நடவடிக்கை எடுத்தார்கள்? 3 மணிநேரம் கொடூரமாகத் தாக்கிக் கொலைசெய்யும்வரை வாய்பார்த்து நின்றார்களோ?
என் உறுதியான நம்பிக்கைப்படி, அக்குழுவைச் சேர்ந்தவர்கள் அவன் சாகும்வரை அங்கே நின்றிருப்பார்கள். சனம் சோர்ந்து போனாலும் உசுப்பேற்றிக்கொண்டு நின்றிருப்பார்கள்.

நான் அறிந்ததன்படி யாழ். பல்கலைக்கழக மாணவர்களின் தயவுடன்தான் இந்த கலாச்சாரம் பேணும் குழு செயற்படுவதாக ஒரு கேள்வி. உண்மையென்றால், இன்னார் என்று குறிப்பிட்டுச் சொல்ல முடியாத பட்சத்தில் அனைவரின் மீதும் எனக்கு விசனம்தான் வருகிறது.
இன்றுள்ள நிலையில் யார் வேண்டுமானாலும் ஒரு கும்பலாகக்கூடி எதுவும் செய்ய முடியுமென்ற நிலைவந்துவிட்டது.
தனிப்பட்ட காழ்ப்புணர்விற்கூட இப்படி யாரையும் பிடித்துவிட்டு ஒரு அறிவிப்புப் பலகையை மாட்டிவிட்டால் சரி.

இச்சம்பவத்தில் புலிகளுக்குத் தொடர்பிருக்கிறதா?
அறிவிப்பில் வழமைபோலவே புலிகளையும் சம்பந்தப்படுத்தியிருக்கிறார்கள். இச்சம்பவம் தொடர்பில் புலிகளின் நிலையென்ன?
அவர்களுக்குச் சம்பந்தம் இருக்கிறதா? ஏற்றுக்கொள்கிறார்களா? இதுதொடர்பில் எந்த விமர்சனமுமில்லையா?
இக்கொலை புலிகளுக்கு ஏற்படுத்தப்போகும் அபகீர்த்திக்கு யார் பொறுப்பு? அப்படி எதுவும் நடந்துவிடாதா?

நிற்க, இச்சம்பவத்தைப் பெருமையாகப் பேசுவோரும் உளர். இது கட்டாயம் செய்தே தீரவேண்டியதென்ற ரீதியிற் கருத்துச் சொல்வோருமுளர்.
யாரும் எக்கருத்தையும் சொல்லலாம். அவரவர்க்கென்று சொந்தக் கருத்துக்கள் உள்ளன. அவ்வகையில் என் சொந்தக்கருத்தைப் பதிவு செய்கிறேன்.
இச்சம்பவம் காட்டுமிராண்டிச் சம்பவம் என்று சொல்வதில் எனக்குக் கொஞ்சமும் தயக்கமில்லை. "கலாச்சாரம் பேணும் குழு" பேணும் கலாச்சாரம் இதுதானென்றால் இதைக் "காட்டுமிராண்டிக் கலாச்சாரம்" என்று சொல்வதற்கும் நான் வெட்கப்படப்போவதில்லை. நான் வெட்கப்படுவது, யாழ்ப்பாணத்தில் வாழ்ந்தவன் என்ற வகையில் அங்கு அம்மக்களால் நடத்தப்பட்ட இக்காட்டுமிராண்டித்தனத்துக்குத்தான்.
(நான் தான் வெட்கப்படுகிறேன். எங்களுக்காக நீ எப்படி வெட்கப்படலாம் என்று அறிவுஜீவித்தனமான கேள்விகள் கேட்க வேண்டாம்)

[b]இது தொடர்பான என் சிபாரிசு இதுதான். அக்கும்பல் உண்மையிலேயே சமூகம் மீது அக்கறையுடன் செயற்படும் குழுவாயிருக்கும் பட்சத்தில், அவர்கள் செய்திருக்க வேண்டியது என்னவென்றால், எந்த நடவடிக்கையாக இருந்தாலும் தாங்களே அதைச் செய்திருப்பது. மாறாக மக்களிடத்தில் பொறுப்புக் கொடுத்தது, அயோக்கியத்தனம், காட்டுமிராண்டித்தனம். அதைவிட சாகும்வரை ஒருவனை அடித்துக் கொல்வது, அதுவும் கதறியழுத தாயையும் தமக்கையையும் அடித்துத் துரத்திவிட்டு தொடர்ந்து தாக்கிக் கொல்வது என்பது கடைந்தெடுத்தக் காட்டுமிராண்டித்தனம் தான்

Print this item

  பாறாத்தை ஆய்சி தேர்தல் ஒப்பாரி
Posted by: ravi_dk - 11-17-2005, 10:57 AM - Forum: கவிதை/பாடல் - Replies (5)

<b>பாறாத்தை ஆய்சி தேர்தல் ஒப்பாரி</b>

மறுபடியம் தேர்தல் ஐயோ
மகிழ்வோடு வந்ததையோ !
சாரயப் போத்திலெல்லாம்
ஆறாக ஓடுதையா.
கை நாட்டைப் போட்டுவிட்டு
கவலையின்றி நானிருந்தேன்.
புள்ளடியை போட்டதாலே
புரியனையே பறிகொடுத்தேன்...

தூத்தேறி வே...

ஆர்வந்தா எனக்கென்ன
ஆளைவிடடா மூதேவி
நீ வெண்டு எனக்கென்ன
என் புரியன் வருவானோ?
அவன் வெண்டு எனக்கென்ன
ஆறுதலோ தரப்போறான்..
போய் சேர்ந்த புரியனையோ
புடிச்சுவந்து தரப்போறான்..

தூத்தேறி வே....

சந்திரிகா அக்காத்தே
அறிவுரைகள் சொல்லுறாவே
அதிகாரம் போறதாலே
அக்காத்த அழுகிறாவாம்
தம்பிக்காற தறுதலைதான்
தலைகரணம் போடுறானே.
ராசபக்ச ரணிலெல்லாம்
ரோசங்கெட்ட பயலுகளாம்...

தூத்தேறி வே...

குடும்பமெல்லாம் செத்துப்போச்சு
கொட்டிலில நானிருக்கேன்...
காசு பணம் வேண்டிக்கொண்டு
காலை நேரம் வந்துவிட்டான்
தெருநாயின் ஆண்குறிபோல்
ஆயுதத்தை நீட்டுறானே!
ஆர் வெண்டா எனக்கென்ன
ஐயோ அரைப்போத்தல் எடுக்கிறானே!


தூத்தேறி வே...


ஊத்தையா ஊத்து நல்ல
உலக்கையடிச் சாராயம்
உள்ளபடி சொல்லிப் போட்டன்
உனக்குத்தான் என்வோட்டு
கள்ளடிச்ச பிறகெண்டால்
கள்ள வோட்டும் போட்டிடுவேன்.
வெள்ளை வேட்டி திருடருக்கு
வேறென்ன செய்ய வேணும்.. ?


தூத்தேறி வே...


குறுக்கால போவாருக்கு
குழுப்பத்தி போச்சுதையா
போட்டுப் போட்ட பின்னாலே
போக்கத்து போவானையா
காசு பணம் உழைத்திடவே
கபடமாகப் பேசிறானே
மூதேவி வெண்டென்ன
குழுமாடு வெண்டென்ன

தூத்தேறி வே...

<img src='http://www.tamilnet.dk/net/para1.jpg' border='0' alt='user posted image'>

http://www.alaikal.com

Print this item