![]() |
|
பழப் பாயசம் - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: இளைப்பாறுங் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=8) +--- Forum: சமையல் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=40) +--- Thread: பழப் பாயசம் (/showthread.php?tid=2413) |
பழப் பாயசம் - RaMa - 11-18-2005 தேவையானவை:- ஆப்பிள் - பாதி வாழைப்பழம் - 1 ஆரஞ்சு - 1 திராட்சை - அரை கப் பேரிக்காய் - 1 முந்திரி - 6 காய்ந்த திராட்சை - 1 பால் - 5 கப் வெனிலா கஸ்டர்ட் பவுடர் - 2 டீஸ்பூன் சர்க்கரை - ஒன்றரை கப் செய்முறை:- 4 கப் பாலை பொங்கக் காய்ச்சுங்கள். மீதியிருக்கும் 1 கப் காய்ச்சாத பாலில் கஸ்டர்ட் பவுடரைக் கரைத்து, காய்ச்சிய பாலில் சேருங்கள். அத்துடன் சர்க்கரையும் சேர்த்து நன்கு கொதிக்கவிட்டு இறக்கி, ஆறவிட்டு குளிரவையுங்கள். பழங்களை தோல் சீவி, விதை நீக்கி பொடியாக நறுக்குங்கள். முந்திரியையும் பொடியாக நறுக்குங்கள். எல்லாவற்றையும் ஒன்றாக குளிர வைத்த பாலில் சேர்த்துப் பரிமாறுங்கள். திருமண விருந்துகளுக்கான ஸ்பெஷல் பாயசம் இது. - அனிதா - 11-18-2005 ஆஹா பழங்களிலும் பாயாசமா... செய்முறைக்கு நன்றி ரமா அக்கா... <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- கீதா - 11-18-2005 அடடா நல்ல செய் முறையெல்லாம் ரமா தாறிங்கள் பழத்தில் பாயாசமா ? இதையும் ஒருக்கா செய்து பார்ப்போம் எப்படி இருக்கு என்று ? ரமா செய் முறைக்கு மிக்க நன்றி <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> - Rasikai - 11-19-2005 ம்ம்ம் எனது அம்மா இப்படி பாயாசம் செய்யுறவர் றமா செய்முறைக்கு நன்றி |