Yarl Forum
பாறாத்தை ஆய்சி தேர்தல் ஒப்பாரி - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: படைப்புக் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=11)
+--- Forum: கவிதை/பாடல் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=52)
+--- Thread: பாறாத்தை ஆய்சி தேர்தல் ஒப்பாரி (/showthread.php?tid=2421)



பாறாத்தை ஆய்சி தேர்தல் ஒப்பாரி - ravi_dk - 11-17-2005

<b>பாறாத்தை ஆய்சி தேர்தல் ஒப்பாரி</b>

மறுபடியம் தேர்தல் ஐயோ
மகிழ்வோடு வந்ததையோ !
சாரயப் போத்திலெல்லாம்
ஆறாக ஓடுதையா.
கை நாட்டைப் போட்டுவிட்டு
கவலையின்றி நானிருந்தேன்.
புள்ளடியை போட்டதாலே
புரியனையே பறிகொடுத்தேன்...

தூத்தேறி வே...

ஆர்வந்தா எனக்கென்ன
ஆளைவிடடா மூதேவி
நீ வெண்டு எனக்கென்ன
என் புரியன் வருவானோ?
அவன் வெண்டு எனக்கென்ன
ஆறுதலோ தரப்போறான்..
போய் சேர்ந்த புரியனையோ
புடிச்சுவந்து தரப்போறான்..

தூத்தேறி வே....

சந்திரிகா அக்காத்தே
அறிவுரைகள் சொல்லுறாவே
அதிகாரம் போறதாலே
அக்காத்த அழுகிறாவாம்
தம்பிக்காற தறுதலைதான்
தலைகரணம் போடுறானே.
ராசபக்ச ரணிலெல்லாம்
ரோசங்கெட்ட பயலுகளாம்...

தூத்தேறி வே...

குடும்பமெல்லாம் செத்துப்போச்சு
கொட்டிலில நானிருக்கேன்...
காசு பணம் வேண்டிக்கொண்டு
காலை நேரம் வந்துவிட்டான்
தெருநாயின் ஆண்குறிபோல்
ஆயுதத்தை நீட்டுறானே!
ஆர் வெண்டா எனக்கென்ன
ஐயோ அரைப்போத்தல் எடுக்கிறானே!


தூத்தேறி வே...


ஊத்தையா ஊத்து நல்ல
உலக்கையடிச் சாராயம்
உள்ளபடி சொல்லிப் போட்டன்
உனக்குத்தான் என்வோட்டு
கள்ளடிச்ச பிறகெண்டால்
கள்ள வோட்டும் போட்டிடுவேன்.
வெள்ளை வேட்டி திருடருக்கு
வேறென்ன செய்ய வேணும்.. ?


தூத்தேறி வே...


குறுக்கால போவாருக்கு
குழுப்பத்தி போச்சுதையா
போட்டுப் போட்ட பின்னாலே
போக்கத்து போவானையா
காசு பணம் உழைத்திடவே
கபடமாகப் பேசிறானே
மூதேவி வெண்டென்ன
குழுமாடு வெண்டென்ன

தூத்தேறி வே...

<img src='http://www.tamilnet.dk/net/para1.jpg' border='0' alt='user posted image'>

http://www.alaikal.com


- வியாசன் - 11-17-2005

சரியாகச் சொன்னாயணை பாறத்தை பாழ்படுவார் உன்னவனையா கொண்டுசென்றனர் உன்போல விதவைகள் ஆயிரக்கணக்கில்.
தேவையில்லை இந்த தேர்தல்


- tamilini - 11-17-2005

சமகால அரசியலை. அனுபவித்த கொடுமையோடு சொல்லிய கவிக்கு நன்றிகள். அது சரி இப்படி வசனம் நம்மாக்கள் பேசிறவர்களா..?? தென்னிந்திய சினிமாவில தான் கேட்டிருக்கிறன து}த்தேறி என்று.

<!--QuoteBegin-->QUOTE<!--QuoteEBegin-->
சந்திரிகா அக்காத்தே  
அறிவுரைகள் சொல்லுறாவே  
அதிகாரம் போறதாலே  
அக்காத்த அழுகிறாவாம்  
தம்பிக்காற தறுதலைதான்  
தலைகரணம் போடுறானே.  
ராசபக்ச ரணிலெல்லாம்  
ரோசங்கெட்ட பயலுகளாம்...  
<!--QuoteEnd--><!--QuoteEEnd-->
<!--QuoteBegin-->QUOTE<!--QuoteEBegin-->
தூத்தேறி வே...  
<!--QuoteEnd--><!--QuoteEEnd-->


- Rasikai - 11-17-2005

தற்போதைய அரசியலை சொல்லும் கவிதை நன்றாக உள்ளது


பாறாத்தை ஆய்சி தேர்தல் ஒப்பாரி ஒலி வடிவில் - ravi_dk - 11-17-2005

<b>பாறாத்தை ஆய்சி தேர்தல் ஒப்பாரி ஒலி வடிவில் :: Real Player</b>
http://www.alaikal.com/Paratthai.rm

பாறாத்தை ஆய்சி தேர்தல் ஒப்பாரி ஒலி வடிவில் ::: Windows Media Player
http://www.alaikal.com/Paratthai.wma


- RaMa - 11-18-2005

தேர்தல் ஒப்பாரி கவிதை நல்லாயிருக்கு நன்றிகள்.....