![]() |
|
பெண்கள் கழிவறைக்குள் நுழைந்த மைக்கேல் ஜாக்சன் - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: தகவற் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=3) +--- Forum: செய்திகள்: உலகம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=14) +--- Thread: பெண்கள் கழிவறைக்குள் நுழைந்த மைக்கேல் ஜாக்சன் (/showthread.php?tid=2419) |
பெண்கள் கழிவறைக்குள் நுழைந்த மைக்கேல் ஜாக்சன் - Vaanampaadi - 11-17-2005 முக அலங்காரம் செய்ய பெண்கள் கழிவறைக்குள் நுழைந்த மைக்கேல் ஜாக்சன் துபாய், நவ. 17- பிரபல `பாப்' பாடகர் மைக்கேல் ஜாக்சனும், சர்ச்சையும் உடன் பிறந்த ஒன்றாக இருக்கிறது. இதனால் அவர் எங்கு சென்றாலும் அங்கு ஒரு பரபரப்பு ஏற்பட்டு வருகிறது. செக்ஸ் குற்றச்சாட்டுகளில் இருந்து விடுதலையான அவர் கார் பந்தயத்தை ஊக்குவிக்கவும், சொத்து வாங்கவும் அரபு நாடுகளுக்கு சுற்றுப்பயணம் சென்றார். துபாய் நாட்டிற்கு சென்ற அவர் முக அலங்காரம் செய்வதற்காக ஷாப்பிங் மாலில் உள்ள அறையை தேடினார். அங்கு அரபு மொழியில் ஆண், பெண் அறை என்று எழுதப்பட்டு இருந்தது. அரபு மொழி தெரியாத மைக்கேல் ஜாக்சன் பெண்கள் கழிவறைக்குள் நுழைந்து விட்டார். அங்கு அமர்ந்து முக அலங்காரம் செய்துவிட்டு திரும்பி வந்தார். இதை வெளியே நின்றவர்கள் பார்த்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. அங்கு கூட்டம் கூடியது. இதையடுத்து போலீசார் அவரை மீட்டு அழைத்து சென்றனர். இந்த சம்பவத்தை ஜாக்சன் மறுத்து இருக்கிறார். இது தொடர்பாக அவர் கூறும் போது, "அரபு மொழி தெரியாததால் பெண்கள் கழிவறைக்குள் சென்றது உண்மைதான். ஆனால் உடனடியாக வெளியே வந்து விட்டேன்'' என்று தெரிவித்து இருக்கிறார். Maalaimalar - Danklas - 11-17-2005 அடங்கொக்காமக்கா... ஜோவ்வ் யாரப்பா இப்படிபட்ட செய்திகளை அவிட்டு விட்டது?? மைக்கல் ஜக்சன் என்ன நம்மட சின்னா மாதிரி மப்பில அதுவும் தனியவா சொப்பிங்க் போறா ஆளா??? அருகில் இருந்த (எப்படியும் அவர்கூட குறைந்தது 2 பேராவது திரிவாங்க) ஒருத்தரும் செல்லவில்லையா? hock: :?
|