Yarl Forum
பிரபாகரன் அவர்களின் தந்திரோபாயமான சிந்தனை! - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: தகவற் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=3)
+--- Forum: செய்திகள் : தமிழீழம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=12)
+--- Thread: பிரபாகரன் அவர்களின் தந்திரோபாயமான சிந்தனை! (/showthread.php?tid=2401)



பிரபாகரன் அவர்களின் தந்திரோபாயமான சிந்தனை! - thiru - 11-18-2005

<b>பிரபாகரன் அவர்களின் தந்திரோபாயமான சிந்தனையால் வெற்றிபெற்ற மகிந்தர். சொல்கிறார் எம். ஆர். நாராயண் சுவாமி.</b>

ஆழமாகப் பிளவுபட்ட சிறிலங்காவானது தனது வரலாற்றிலேயே ஆகக் குறைந்தளவு பெரும்பான்மையுடன் சிங்களக் கடும்போக்காளராக அறியப்பட்ட ஒருவரைச் சனாதிபதியாகத் தெரிவுசெய்துள்ளது. இந்த ஒன்றே -'ராஜபக்ச சமாதானத்தை விரும்புவாராயின்- தனது இன- மதவாதப் பேச்சுகளைச் சற்றுக் குறைத்து ஒரு மிதவாதியாகத் தம்மை மாற்றிக்கொள்ளவேண்டும்' என்பதற்கான முதன்மையான, தெளிவான அறிகுறியாக உள்ளது.

<span style='color:red'>வேலுப்பிள்ளை பிரபாகரனின் தந்திரோபாயமான சிந்தனையால்தான் (Tactical mind), சிறிய பெரும்பான்மையான 50 வீதத்திற்கும் சற்று அதிகமான வாக்குகளைப் பெற்று சனாதிபதிப் பதவியை ராஜபக்ச பெற்றுக்கொண்டிருக்கிறார். தடைப்பட்டுள்ள சமாதானப் பேச்சுகளை மீண்டும் ஆரம்பிப்பதில் ஆர்வம் கொண்டுள்ள மேற்குலகினாலும், தமிழர்களாலும் ஏற்றுக்கொள்ளப்படக்கூடிய ரணில் விக்கிரமசிங்கவைக் கையாள்வதைக்காட்டிலும், 'வெட்கங்கெட்ட சிங்கள எதிரியை'க் (Brazenly Sinhalese foe) கையாள்வது இலகுவானது என்று தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் தீர்மானித்துவிட்டார்.

குறைபாடுகள் உள்ளபோதிலும் தடைகளைத் தகர்த்த -2002 ஆம் ஆண்டின் சமாதான ஒப்பந்தத்தை மேற்கொண்ட- முன்னாள் பிரதமரான ரணில் விக்கிரமசிங்கவின் கருத்திற்கு நேரெதிராக, இந்தச் சமாதான நடவடிக்கைகள் விடுதலைப் புலிகளைப் பலப்படுத்துவதிலேயே வந்து முடிந்திருப்பதாக ராஜபக்ச உணருகிறார். அதேவேளை அவர் அனுசரணையாளரான நோர்வேக்கு எதிரான நிலைப்பாட்டையும் எடுத்திருக்கிறார்.

ஜே.வி.பி எனப்படும் சிங்கள- மாக்ஸியக் கட்சியினரும், ஜாதிக ஹெல உறுமய எனப்படும் பௌத்த பிக்குகளின் கட்சியினருமே ராஜபக்சவின் தீவிர ஆதரவாளர்கள். இந்த ஜே.வி.பி மற்றும் ஜாதிக ஹெல உறுமய இரண்டுமே, சிங்களப் பெரும்பான்மையினரின் கண்ணோட்டத்தையே பிரதிபலிக்கின்றன. சிறிலங்காவின் சிறுபான்மைத் தமிழர்கள் பாரம்பரியமாகவே பாரபட்சத்திற்குத் தாம் உள்ளாகிவருவதாக முறையிட்டு வருகின்றனர்.

இவை அனைத்தும் ராஜபக்ச, விக்கிரமசிங்க இருவருமே சிங்கள நாணயத்தின் இரண்டு பக்கங்கள். எனவே 'சனாதிபதித் தேர்தலில் தமிழ்மக்கள் அக்கறை கொள்ளத் தேவையில்லை' என்று பிரகடனம் செய்த விடுதலைப் புலிகளது இலக்கிற்குள் ராஜபக்சவைத் தள்ளியுள்ளன.

வாக்களித்தால் ரணிலுக்கே ஆதரவளிக்கக் கூடும் என்று எதிர்பார்க்கப்பட்ட சிறிலங்காவின் வடக்குக் கிழக்குத் தமிழ் மக்கள் தேர்தலைப் புறக்கணிப்பதை உறுதிப்படுத்திய விடுதலைப் புலிகளின் நிலைப்பாடு ரணில் விக்கிரமசிங்கவின் வெற்றியை உறுதியாகக் கொன்றொழித்துவிட்டது.

அனேக தமிழர்களின் உண்மையான -காரணகாரியத்துடன் கூடிய- புறக்கணிப்பிற்கு மத்தியில், ராஜபக்ச மிகவும் குறைவான வித்தியாசத்தில் ரணிலை முந்தியிருக்கிறார்.

பிரபாகரன் ஒன்றே ஒன்றை மட்டும் தமது மனதில் கொண்டே இந்த நிலையை உறுதிப்படுத்தியிருக்கக்கூடும்: அதாவது ராஜபக்சவின் வெற்றியானது சிங்களக் கடும்போக்காளரின் கரங்களைப் பலப்படுத்தும் அதேவேளை இந்த நடைமுறை யாதார்த்தமானது சுதந்திர தமிழீழ தேசத்திற்கான போராட்டத்திற்கு உரமளிக்கும்.

கார்த்திகை 27ம் திகதி மாவீரர் வாரத்தின் ஒரு அங்கமாக அமையும் தமது வருடாந்த மாவீரர் தின உரையை ஆற்றவுள்ள பிரபாகரனால், சிங்கள-பௌத்த கடும்போக்காளருடன் சேர்ந்து சமாதானத்தைக் கொண்டுவருவது என்பது சாத்தியமில்லை. இந்தக் கொள்கையின் அடிப்படையிலேயே கடந்த மூன்று தசாப்தங்களுக்கு மேலாக அவர் போராடிவருகிறார்.

ஏப்ரல் 2003 இலிருந்து தடைப்பட்டுப்போயுள்ள சமாதான நடவடிக்கைகளை மீள ஆரம்பிக்கக் கொழும்பு விரும்புமாயின் முக்கிய உரிமைகளைத் தமக்குத் தருமாறு விடுதலைப் புலிகளின் தலைவர் வலியுறுத்துவார். இது ராஜபக்சவைத் தர்மசங்கடமான ஒரு நிலைப்பாட்டிற்குள் தள்ளிவிடும்.

விக்கிரமசிங்க பிரபாகரனின் கோரிக்கைகளுக்கு இணங்கக்கூடும். ஆனால் ராஜபக்ச அவ்வாறு இணங்க மாட்டார் அல்லது இணங்க முடியாது. ஏனெனில் ஜே.வி.பி-ஹெல உறுமயவின் கிடுக்கிப்பிடி அதனைச் செய்ய அவரை அனுமதிக்காது. இவ்வாறு நடந்துவரும்போது 'சமாதானத்திற்கு இணங்காதிருப்பது ராஜபக்சவோ அல்லது சிங்கள தேசமோ அன்றி விடுதலைப் புலிகள் அல்ல' என்று புலிகள் உலகத்திற்குச் சொல்வார்கள்.

ராஜபக்ச தமக்கு முன் ஆட்சியிலிருந்த சிலரைப்போலத் தனது கடும்போக்கிலிருந்து பின்வாங்க முற்பட்டால், தற்போது நண்பர்களாக உள்ள சிங்களக் கடும்போக்காளர்களால் 'துரோகியாகக்' கருதப்படுவார். அதேவேளை, புதிய சனாதிபதி தனது மிகச் சிறிய பெரும்பான்மையை வைத்துக்கொண்டு நாட்டை நிருவாகம் செய்வதோ அல்லது புதிதாக நடக்கக்கூடிய பாராளுமன்றத் தேர்தல்களில் வெல்வதோ இலகுவானதல்ல என்பதையும் புரிந்துகொள்வார்.

'நான் போருக்கான வேட்பாளர் அல்ல, ஆனால் சமாதானம் என்பது கௌரவமான சமாதானமாக இருக்கவேண்டும்' என்று தேர்தல் முடிவுகள் வெளியானதும் குறிப்பிட்டார் ராஜபக்ச.

அப்படிச் சொல்வது அதனைச் செய்வதைக் காட்டிலும் இலகுவானது.

தற்போதைய -அபாய கட்டத்தை அடைந்துள்ள -மோதல்களைத் தடுக்கவும், நிலைத்துநிற்கக்கூடிய சமாதானத்தைக் கொண்டுவரவும் சனாதிபதி விரும்பினால், சிங்கள -பௌத்த கடும்போக்காளராகச் செயற்படுவதை அவர் நிறுத்தவேண்டும். அவரால் அது முடியாதெனில் சிறிலங்கா ஒரு குழப்பகரமான நிலமைகளை எதிர்கொள்ளவேண்டியதுதான்.

வெளிவிவகார அமைச்சர் கதிர்காமரின் கொலையினை அடுத்து ஐரோப்பிய ஒன்றியத்தினால் தமது அமைப்பின் மீது விதிக்கப்பட்ட தடை குறித்துப் பிரபாகரன் கடும் சினமடைந்திருக்கும் இந்த வேளையில், சமாதானத்திற்கு இணங்காத கொழும்பின் நிலைப்பாடானது -ஒரு உடனடியான யுத்தத்தைக் கொண்டுவராவிடினும்- மேலும் குழப்பங்களையும் உயிர்ப்பலிகளையுமே விளைவிக்கும்.

(இந்தக் கட்டுரையாளர் சிறிலங்காவின் நிலமைகளை அவதானித்து வருபவர். தமிழ்ப் புலிகள் குறித்த இரண்டு புத்தகங்களின் ஆசிரியர்)

<b>நன்றி:</b> Rajapakse will need to moderate if he seeks peace By M.R. Narayan Swamy

<b>தமிழில்:</b> திருமகள் (ரஷ்யா)</span>

<b>குறிப்பு:</b> இந்தக் கட்டுரையின் ஆங்கிலமூலம் பிறமொழி ஆக்கங்கள் பகுதியில் இணைக்கப்பட்டுள்ளது


- மேகநாதன் - 11-18-2005

திரு,தேவையான நேரத்தில் தேயையான பதிவு,வேறுபட்ட கருத்து சிந்தனையாளரின் சிந்தனையத் தந்தமைக்கு நன்றி.இவ்வாறானவற்றை நீங்களும் மற்றவர்களும் இன்னும் இன்னும் பகிர்ந்து கொள்ளுங்கள்.....புலிகளதும் ஈழத்தமிழர்களதும் தேர்தல் அக்கறையின்மையை "குறுக்கி"ப் பார்க்கும்/பார்க்கத் தூண்டும் உறவுகளுக்கு இச்செய்தி சற்றேனும் பார்வையை விசாலப்படுத்தும் என நம்புவோம்...!!!


- வியாசன் - 11-18-2005

நன்றாக சொன்னீர்கள். இங்குள்ள பலர் புலிகள் தும்மினாலும் குற்றம் தும்மாட்டாலும் குற்றம் என்கின்றனர். சரியான நேரத்தில் சரியான தகவலை இணைத்தமைக்கு நன்றிகள்
குய்யோ மாயோ என்று கத்துகிறவர்கள் இதை வாசியுங்கள். சரியென்று தெரிந்தாலும் ஒத்துக்கொள்ளவா போகின்றீர்கள்? :oops: :oops: :oops:


- Birundan - 11-19-2005

உண்மைதான் ரணில் வந்தால் முண்று அல்லது ஜந்து வருடத்துக்கு பேச்சு வார்த்தை என்று இழுத்து செல்வார், ராஜபக்சா இழுக்க நினைத்தாலும் ஜேவிபியும் சிங்கள உறுமயவும் விடாயினம், வரும் மாவீரர்தினத்தில் முக்கியமாசில முடிவுகள் வருமென தமிழினமே எதிர்பாக்கிறது, நடவடிக்கைகளும் அதை உறுதிசெய்கின்றன, தலைவரின் உரைக்காக உலகமே எதிபார்த்திருக்கிறது. பிரபாகரன் நினைத்தது நடக்கும், விரைவில் விடிவு கிடைக்கும்.


- Mathuran - 11-19-2005

தலைவரின் மதிநுட்பத்தினை நாம் இதுபோன்ற கட்டுரைகள் மூலம் அறிய வேண்டியதில்லை. இருந்தும் இக் கட்டுரையாளர் மிகவும் சரியாக சிந்த்து எழுதி இருக்கின்றார். தகவலை இங்கே இணைத்தமைக்கு திருவிற்கு நன்றி.


- Rasikai - 11-19-2005

தகவலை இங்கே இணைத்தமைக்கு நன்றிகள் திரு. கட்டுரையாளர் நல்ல கருத்தை தந்து இருக்கிறார். பல பேரின் குழப்பங்களுக்கு பதில் கிடைத்திருக்கும் என நினைக்கிறேன்


- தூயா - 11-19-2005

நம்புங்கள் தமிழீழம் நாளை பிறக்கும் நாட்டின் அடிமை விலங்கு தெறிக்கும்...தகவலுக்கு நன்றி


- தூயவன் - 11-19-2005

இது தான் தேசியத் தலைவர். எதிர்காலத்தை பற்றி து}ரநோக்கு என்பது அவரிடம் நிறையவே இருப்பதால் தான் எங்களின் இதயத்தில் நீங்காத இடம் உண்டு.

அதை விட்டிட்டு துரோகக் கும்பல்கள் எல்லாம் கக்கூஸ் கட்டவும், றோட்டுப்போடவும் தானே ஆதரிப்பதாகச் சொல்லி தமிழ் மக்களை விலை பேசுகின்றவை.