| Welcome, Guest |
You have to register before you can post on our site.
|
| Forum Statistics |
» Members: 8,982
» Latest member: lucilegr4
» Forum threads: 9,058
» Forum posts: 83,244
Full Statistics
|
| Online Users |
There are currently 157 online users. » 0 Member(s) | 154 Guest(s) Applebot, Bing, Google
|
| Latest Threads |
±ôÀÊ ÀÈ¢ì¸Ä¡õ
Forum: நகைச்சுவை
Last Post: UsArgum
01-10-2026, 09:07 AM
» Replies: 28
» Views: 10,300
|
Mrs.Sirimao Bandaranayake
Forum: நகைச்சுவை
Last Post: GeraTep
11-14-2025, 10:46 AM
» Replies: 14
» Views: 3,230
|
Farty time
Forum: நகைச்சுவை
Last Post: ㄹㅈㄷㄹㅈ
08-26-2025, 03:48 PM
» Replies: 11
» Views: 5,604
|
கனவே கலைகிறதே
Forum: பொழுதுபோக்கு
Last Post: KULAKADDAN
04-30-2006, 06:37 PM
» Replies: 0
» Views: 6,290
|
Karuna Cadres were captur...
Forum: பிறமொழி ஆக்கங்கள்
Last Post: ஜெயதேவன்
04-30-2006, 06:17 PM
» Replies: 4
» Views: 8,629
|
என்ன நடந்தது யாழிற்கு?
Forum: உங்கள் கருத்துக்கள்
Last Post: ஜெயதேவன்
04-30-2006, 06:03 PM
» Replies: 42
» Views: 31,054
|
முடியுமானால் முயற்ச்சியுங...
Forum: போட்டிகள்
Last Post: Subiththiran
04-30-2006, 05:00 PM
» Replies: 15
» Views: 14,458
|
**சுடேக்கு** புதிர் விளைய...
Forum: போட்டிகள்
Last Post: kavithaa
04-30-2006, 04:30 PM
» Replies: 63
» Views: 38,473
|
புல்மோட்டையில் தாக்குதல்
Forum: செய்திகள் : தமிழீழம்
Last Post: Sriramanan
04-30-2006, 04:10 PM
» Replies: 2
» Views: 8,024
|
போதனை வேண்டாம்! பு...
Forum: செய்திகள் : தமிழீழம்
Last Post: alika
04-30-2006, 03:13 PM
» Replies: 4
» Views: 6,238
|
|
|
| Massa-arrestaties in Tamil-wijken Sri Lanka |
|
Posted by: வினித் - 01-02-2006, 10:03 AM - Forum: பிறமொழி ஆக்கங்கள்
- Replies (1)
|
 |
<b>colombo De Srilankaanse politie en het leger hebben zaterdag acht wijken in de hoofdstad Colombo afgezet en bij invallen in woningen 920 mensen opgepakt. Ruim vijftig van hen zijn na verhoor in hechtenis genomen. In de betreffende wijken wonen veel Tamils. De operatie volgt op een opleving van het geweld tussen de rebellenbeweging Tamil-Tijgers en het leger in het noorden en oosten van het land, die dreigt het land opnieuw in een burgeroorlog te storten. Bij verscheidene aanslagen vonden in december 45 militairen en zeven rebellen de dood. </b>
நன்றி:<b>Trouw krant</b>
|
|
|
| சென்னையில் "ஈழத் தமிழர் உரிமை கருத்தரங்கம் |
|
Posted by: தூயவன் - 01-02-2006, 06:39 AM - Forum: செய்திகள் : தமிழீழம்
- Replies (6)
|
 |
சென்னையில் கடந்த வியாழக்கிழமை (29.12.05) ஈழத் தமிழர் உரிமை-சமாதான வழித் தீர்வு என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடைபெற்றது.
தமிழ்நாடு அன்னையர் முன்னணி தலைவரும் மனித உரிமை செயற்பாட்டாளருமான பேராசிரியர் சரசுவதி தலைமையில் இந்தக் கருத்தரங்கம் நடைபெற்றது.
கருத்தரங்கில் பங்கேற்றோர் ஆற்றிய உரை:
<b>பேராசிரியர் சரசுவதி:</b>
ஈழத்திலே பதற்றமும் இராணுவ வன்முறைகளும் நடந்து கொண்டிருக்கிற நிலையில் நாம் இந்தக் கூட்டத்தைக் கூட்டியிருக்கிறோம். ஈழத்தில் தமிழர்களின் மனித உரிமைகள்- வாழ்வுரிமைகள் நசுக்கப்பட்டுக் கொண்டிருக்கிற நிலையில் மனித உரிமை குறித்து அக்கறை கொள்கிற நாம் அதற்காகக் குரல் கொடுக்க வேண்டியது அவசியம்.
சமாதான காலத்திலும் கூட ஈழத் தமிழர்களுக்கான மனித உரிமைகள் மறுக்கப்பட்டதுமின்றி வன்முறைகள் திணிக்கப்பபட்டன என்பது சோகமானது.
சமாதானத்தைக் கொண்டு வந்தவர்களே தமிழர்கள்தான். 2001 ஆம் ஆண்டு டிசம்பர் 24 ஆம் நாள் கிறிஸ்துமசை ஒட்டி தம்பி பிரபாகரன்தான் இந்த போர் நிறுத்தத்தை அறிவித்தார். அவர் போர் நிறுத்தத்தை அறிவித்த போது அவர் வலுவற்ற நிலையில் ஒன்றும் இருக்கவில்லை.
வரலாற்றுச் சிறப்புமிக்க ஆனையிறவுப் போரையும் கட்டுநாயக்கா விமான நிலையத்தைத் தகர்த்த கையோடும் இராணுவச் சமநிலையில் நின்று போர் நிறுத்தத்தை அறிவித்தார் தம்பி பிரபாகரன்.
நோர்வே நாட்டின் ஏற்பாட்டில் அமைதிப் பேச்சுகள் நடைபெற்றன. ஆனால் பேச்சுகளுக்கு என்ன நேர்ந்தது? அமைதிப் பேச்சுவார்த்தைகளிலே மேற்கொள்ளப்பட்ட எந்த முடிவையுமே இலங்கை அரசு நடைமுறைப்படுத்தவில்லை.
முக்கியமாக அதி உயர் பாதுகாப்பு வலயம் என்ற பெயரில் தமிழ் மக்களினது குடியிருப்புகளிலிருந்து ஒரு குறிப்பிட்ட காலத்துக்குள் இலங்கை இராணுவம் வெளியேற வேண்டும் என்பதையோஇ இதர தமிழ்க் குழுக்களினது ஆயுதங்களைக் களைய வேண்டும் என்பதையோ இலங்கை அரசாங்கம் நடைமுறைப்படுத்தவில்லை.
இந்த இரண்டும்தான் தமிழர்களினது அன்றாடா வாழ்க்கைக்குஇ இயல்பான வாழ்க்கைக்கு அடித்தளமானது. 4 ஆண்டுகால சமாதான காலம் எனப்படுகிற இந்தக் காலத்தில் இதை நிறைவேற்றாத காரணத்தால் தமிழ் மக்கள் வேறுவழியின்றி இலங்கை இராணுவ ஆக்கிரமிப்புப் பகுதிகளில் இராணுவமே வெளியேறு! எங்கள் நிலம் எங்களுக்கு வேண்டும் என்று பொங்கு தமிழ்ப் பிரகடனங்களை வெளியிட்டார்கள். எந்த ஒரு ஜனநாயக ரீதியான போராட்டத்தையும் நசுக்கியே பழகிப் போன சிங்கள அரசு இந்தப் போராட்டங்களையும் விட்டுவைக்கவில்லை.
இதையடுத்துதான் மக்களுக்கும் இராணுவத்துக்கும் இடையேயான மோதல்கள் ஏற்பட்டுள்ளன.
இலங்கை இராணுவம் தன்வசம் வைத்திருக்கும் பகுதிகளில் உள்ள பிற இயக்கங்களின் ஆயுதங்கள் பறிக்கப்படாததால் பத்திரிகையாளர்கள்இ நாடாளுமன்ற உறுப்பினர்கள்இ விடுதலைப் புலிகளின் தளபதிகள் பலரும் கொல்லப்பட்டார்கள்.
பேச்சுவார்த்தைகளில் மேற்கொள்ளப்பட்ட முடிவைகளை நடைமுறைப்படுத்துவதற்காக இடைக்கால தன்னாட்சி அதிகார சபை என்ற இடைக்கால அமைப்பை பிரபாகரன் முன்வைத்தார். இது அவர்கள் கோரிய தனிநாடும் அல்ல. ஒரு இடைக்கால ஏற்பாடுதான். இதையும் ஏற்றுக்கொள்ள அன்றைய அரச தலைவர் சந்திரிகா மறுத்தார். யு.என்.பி. ஆட்சியைக் கலைத்தார்.
தமிழகத்திலும் ஈழத்திலும் பல ஆயிரம் பேரை பலி கொண்ட சுனாமிக் கொடுமை நடந்த போது இலங்கைக்கு உதவி வழங்க பல நாடுகள் முன்வந்தன.
ஈழத்தின் 70 சதவீதப் பகுதி விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் இருக்கிறது. இந்தப் பகுதியில் சுனாமி நிவாரணங்களை மேற்கொண்ட வேண்டுமானால் விடுதலைப் புலிகளோடு இணைந்துதான் செயற்பட வேண்டும். அது யதார்த்தமானது.
இதை உணர்ந்துதான் சர்வதேச நாடுகள் இலங்கை அரசும் புலிகளும் இணைந்து செயற்படுகிற ஒரு அமைப்பை - அதை ஆழிப்பேரலை மீளமைப்புக்கான பொதுக்கட்டமைப்பு என்று சொல்கிறார்கள்.
வீடுகளையும் உயிர்களையும் இழந்து அவதிப்பட்ட தமிழர்களுக்கு நிவாரணம் தருவதற்குத்தான் இந்த அமைப்பு. இந்த அமைப்பு நம்ம ஊர் கிராம சபை அளவிற்கான அதிகாரம் கொண்டது கூட கிடையாது. இந்த அதிகார அமைப்பைக் கூட அதாவது ஒரு சிறு துரும்பைக் கூட- தமிழன் செத்தாலும் தண்ணீர்கூட தரமாட்டேன் என்கிற மாதிரியாக இந்த அமைப்பையும் சிங்களவர்கள் செயல்படுத்தவிடவில்லை.
ஈழத்தில் மீண்டும் இன அழிப்புப் படுகொலையானது புதிய அரச தலைவராக சிங்கள பேரினவாதிகளுடன் கூட்டுச் சேர்ந்த மகிந்தா ராஜபக்ச பொறுப்பேற்ற உடனே கட்டவிழ்த்துவிடப்பட்டுள்ளது. மகிந்த ராஜபக்ச ஆட்சிக்கு வந்த ஒரு மாத காலத்தில் கொல்லப்பட்ட தமிழர்கள் எண்ணிக்கை அதிகம்.
யாழ்ப்பாணம் புங்குடுதீவில் இளம் பெண் தர்சினியை சிங்களக் கடற்படை வெறியர்கள் பாலியல் வல்லுறவுக்குள்ளாக்கிப் படுகொலை செய்து கிணற்றிலே கல்லைக் கட்டிப் போட்டுள்ளார்கள்.
மாணவர்களது இயல்பான கல்விச் சூழ்நிலையைக் கெடுக்கிற வகையில் யாழ்ப்பாண பல்கலைக் கழகத்தை சிங்கள இராணுவம் சுற்றி வளைத்தது.
ஒரு இனத்தினது ஆணிவேராக இருக்கக் கூடிய கல்வியாளர்கள்இ துணைவேந்தர்கள்இ பேராசிரியர்கள்இ மாணவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தி இராணுவம் தனது வன்முறைகளைக் கட்டவிழ்த்துவிட்டது. இந்த நிலையில் இந்தியாவுக்கு உதவி கேட்டு வருகிறார் இலங்கையின் புதிய அரச தலைவர் மகிந்த ராஜபக்ச.
நோர்வே நாட்டுக்குப் பதிலாக இந்தியாவை அனுசரணையாளர்கள் என்கிற ஏற்பாட்டாளர்கள் என்கிற நிலைக்கு உட்கார வைக்கிற இலங்கை அரசாங்கம் முயல்கிறது. ஆனால் கூட்டாட்சி முறையில் நோர்வே அரசு நடத்துகிற பேச்சுவார்த்தைகளுக்கு நாம் ஆதரவளிப்போம் என்று இந்திய அரசாங்கம் இதுவரைக்கும் தெரிவித்திருக்கிறது. இனி எப்படியும் மாறலாம்.
போரினாலும் சுனாமியாலும் பாதிக்கப்பட்டு மனிதாபிமானத் தேவைகளுக்காக தவித்து நிற்கிற ஈழத் தமிழர்கள் மீது மனித உரிமைகளைக் கட்டவிழ்த்துவிடுவது என்பது கொடூரமானது என்றார் பேராசிரியர் சரசுவதி.
<b>மக்கள் கவிஞர் இன்குலாப்:</b>
சென்னையில் ஒரே நாளில் இரு கூட்டங்கள் நடைபெறுவது தமிழர்களாகிய நமக்கு நிறைவு தரக்கூடிய ஒன்று. மகிழ்வு தரக்கூடியது என்று சொல்லமாட்டேன்.
ஏனெனில் இந்த அக்கறை மீண்டும் கனல ஆரம்பித்திருக்கிறது. சுட ஆரம்பித்திருக்கிறது. இது அவசியமானது ஒன்று என்று நான் கருதுகிறேன்.
நான் ஈழத்துக்குச் சென்று வந்திருக்கிறேன். போர் பற்றிய செய்தியைப் படித்திருக்கலாம். சித்தரிப்பைப் படங்களில் பார்த்திருக்கலாம். நானும் அப்படிப் படித்திருக்கிறேன். ஆனால் யாழ்ப்பாணத்துக்கு நாங்கள் ஒரு குழுவாக பயணம் மேற்கொண்ட போது போரின் சுவடுகளை நேரடியாகப் பார்த்தேன்.
பல கட்டடங்கள் காயப்பட்டு இருந்தன. மனிதருடைய காயங்கள் பின்னால். பல கட்டடங்களுக்குச் ஜன்னல்கள் கிடையாது. ஷெல்லடியால் தகர்ந்து போய்விட்டன. அம்மைத் தழும்பு போல அந்தக் கட்டடங்களில் அந்த குண்டு பாய்ந்த அடையாளங்கள் இருந்தன.
போகின்ற வழியெல்லாம் மிதிவெடிகள் குறித்த எச்சரிக்கைஇ புதிய நிலத்தில் நடக்காதீர்- பழகிய பாதையில் செல்லுங்கள் என்று ஒவ்வொரு திருப்பத்திலும் சிவப்புப் பலகைகளில் எழுதி வைத்திருந்தார்கள். ஒரு நீண்ட நேர பயணம் அது. கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் போய்ச் சேர்வதற்கு 10 மணிநேர பயணம் அது.
சிங்களப் பகுதிகளைத் தாண்டி தமிழீழப் பகுதிக்குள் நுழையும் போதே வண்டி தடுமாறத் தொடங்கியது. ஏனென்றால் சாலைகள் எதுவும் சரியாக இல்லை. மிக கரடுமுரடான பாதை. வாகனத்திலிருந்து நாங்கள் கீழே இறங்கும் போது திரும்புகிற பக்கம் எல்லாம் இத்தகைய அறிவிப்புகள். நடப்பதற்கே அச்சப்படக் கூடிய சூழல்.
கட்டடங்கள்இ ஜன்னல்கள்இ கதவுகள் சார்ந்தது அல்ல. பனைமரத்தைத்தான் யாழ்ப்பாணத்தின் குறியீடாகச் சொல்வார்கள். காசி ஆனந்தன் ஒரு அருமையான பாடலை எழுதியிருக்கிறார். அழகான அந்தப் பனைமரம் அடிக்கடி நினைவில் வருமே என்று. நாங்கள் பார்த்தது பனைமரங்களை அல்ல. தென்னை மரங்களை அல்ல. வெறும் குச்சிகளைத்தான் பார்த்தோம். ஒரு மரத்தில் கூட ஒரு கீற்று கூட இல்லை. இது ஒரு அடையாளம். விமானத்திலிருந்து குண்டு வீசப்பட்டதால் இயற்கை எவ்வாறு சீரழிக்கப்பட்டது என்பதற்கு நாங்கள் பார்த்த ஒரு அடையாளம். பனைமரம் அழிகிறது என்பது யாழ்ப்பாணத்து அடையாளம் அழிகிறது என்பதுதான் பொருள்.
அதற்குப் பிறகு அங்கு நடைபெற்ற மாநாட்டில் நான் உட்கார்ந்து கேட்டுக்கொண்டிருக்கிறேன். எனக்குப் பின்னால்இ அய்யா இன்குலாப் அவர்களே உங்களோடு கதைக்க வேண்டும் என்று ஒரு பெண் கூறினார். இரவு நிகழ்ச்சியைப் பார்த்துக் கொண்டிருந்த நான் திரும்பிப் பார்த்தேன். கண்ணாடி அணிந்திருந்த பெண் அழைத்தார். நான் சரி என்றேன். கலைநிகழ்ச்சிக்குப் பிறகு வெளிச்சம் வந்த போது அந்தப் பெண்ணைப் பார்த்தேன் ஒரு கண் இருக்கவில்லை. அந்தப் பெண்ணுக்கு ஒரு கை இல்லை. பலருக்கு இப்படியான நிலைதான் இருந்தது. நான் அந்தப் பெண்ணைப் பார்த்த போது ஒரு நிமிடம் தயங்கிவிட்டேன். ஆனால் அவர் சொன்னார்இ அய்யா நீங்கள் ஒன்றும் நினைக்காதீர்கள். நாங்கள் சரியான காரணத்துக்காகத்தான் இவற்றை இழந்திருக்கிறோம் என்றார். எனக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை.
இப்படி போரின் துயரங்களை நாங்கள் பார்த்தோம். நான் சொன்னது கொஞ்சம்தான். ஒவ்வொரு குடும்பமும் இதற்கு விலை கொடுத்திருக்கிறது. வியட்நாமிய இறுதி மக்கள் யுத்தம் போல் யாழ்ப்பாணத்தில் இறுதி மக்கள் யுத்தம் நடப்பதாக இங்கே பேராசிரியர் சரசுவதி கூறினார்.
வியட்நாமிய விடுதலைப் போராட்ட வரலாற்றில் ஒவ்வொரு குடும்பமும் ஒரு வீரரை அல்லது வீராங்கனையை அர்ப்பணிப்புச் செய்திருக்கிறது என்று சொல்வார்கள். யாழ்ப்பாணத்தில் அதற்கும் கூடுதலாகவே நடைபெற்றிருக்கிறது. இது பேராசிரியர் சரசுவதி அவர்கள் குறிப்பிட்டதைப் போல் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த தமிழர்களுக்கு மட்டும் அல்ல. அந்தப் போரில் அதே வயதிலான சிங்கள இளைஞர்களும் பலியாகி இருக்கிறார்கள். யுத்தத்துக்கு வந்துவிட்டால் குறைந்தபட்ச விலை உயிர்தான். இரண்டு தரப்பும் விலை கொடுத்திருக்கிறது. ஆனால் இதற்கான காரணம் என்ன என்பதுதான் முக்கியமானது.
ஒரு இனத்தை இன்னொரு இனம் அடையாளத்தால் மறுப்பது. அந்த இனத்தின் மீது வல்லாதிக்கம் செலுத்த முயல்வது. இது ரொம்ப காலமாக நீடித்துக் கொண்டிருக்கிறது. இலங்கைக்கு விடுதலை வந்ததாக சொல்லப்படுகிற காலத்தில் இது தீரும் என்றால் மாறாக அதிகரித்து இருக்கிறது. என்று இலங்கைக்குச் சிங்களம் மட்டும்தான் தேசிய மொழி என்று அறிவிக்கப்பட்டதோ அன்று இது தொடங்கிவிட்டது. ஏனெனில் இலங்கை என்பது இரண்டு பெரும்பான்மையான தேசிய இனங்களைக் கொண்ட நிலப்பகுதி என்பதுதான் உண்மை. முஸ்லிம்கள் பிரச்சனை வராது. முஸ்லிம்கள் தமிழைத் தாய்மொழியாகக் கொண்டவர்கள். தங்களைத் தேசிய இனமாக ஏற்கக் கோருவது தொடர்பாக நிறைய விவாதங்கள் உண்டு. அவர்கள் தமிழைத் தாய்மொழியாகக் கொண்டவர்கள் என்பதுதான் அடிப்படை உண்மை.
இலங்கையை விட அளவில் குறைவான நாடுகள் உள்ளன. சுவிசில் 4 மொழிகள் சமமாக அங்கீகரிக்கப்பட்டுள்ளன. சமத்துவம் மறுக்கப்படக் கூடிய இடத்தில் போராட்டம் தவிர்க்க முடியாதது. இலங்கையில் சமத்துவம் மறுக்கப்பட்டது.
ஈழத்தில் தனிநாட்டுக் கோரிக்கை என்பது வானத்திலிருந்து குவித்தது அல்ல.
தமிழரசுக் கட்சித் தலைவர் தந்தை செல்வா முதலில் தனிநாடு கோரவில்லை. இலங்கை அரசியலுக்கு உட்பட்ட நிலையில் உரிமை கோரிக்கையைஇ சமத்துவம்இ தனிமாநிலம் எனக் கேட்டார்.
அவை மறுக்கப்பட்ட பின்னர்தான் தனிநாடு கோரிக்கை எழுந்தது.
தந்தை செல்வா உட்பட தமிழர் தலைவர்கள் வலியுறுத்திய சமத்துவம்இ தனிமாநிலக் கோரிக்கைகள் வன்முறைசார்ந்து நடைபெறவில்லை. அவை அனைத்துமே சத்தியாக்கிரகப் போராட்டங்களாக நடைபெற்றன.
இலங்கை அரசுதான் இத்தப் போராட்டங்களை வன்முறைப் போராட்டமாக மாற்றியது. வன்முறை அற்ற ஒரு போராட்டத்தை மேற்கொண்ட தமிழர்கள் உதைக்கப்பட்டு அடிக்கப்பட்டு அவமதிக்கப்பட்டார்கள். வீதிகளில் இழுத்து வரப்பட்டார்கள்.
இதனது தவிர்க்க முடியாத விளைவு தனிநாடுக் கோரிக்கையாக மாறியது. இலங்கையில் மட்டும் அல்ல உலக அளவிலும் இப்படித்தான் மாறும்.
ரசியப் புரட்சி நடந்த உடன் ரசியாவின் பெயரை சோவியத் ஒன்றியம் என்று மாற்றினார் லெனின். தனித் தேசிய இனப் பெருமிதத்தைத் துறந்தவர் லெனின்.
இது ரசியா அல்ல அதை ஏற்கமுடியாது என்று சொன்னவர் லெனின். சொந்தத் தேசிய இனம் பற்றிய பெருமிதத்தைத் துறந்தவர் லெனின்.
சோவியத் ஒன்றியத்திலிருந்து எந்த நாடும் பிரிந்து செல்லலாம் என்றார். ஏனென்றால் ஜார் மன்னர் ஆட்சிக்காலத்தில் பல நாடுகளின் பகுதிகள் வன்மையாக பிடித்து வைக்கப்பட்டிருந்தது. ஆகையால் அதற்கு லெனினிடமிருந்து அத்தகைய குரல் வந்தது.
ஒரு அரசியல் அமைப்பில் பல்வேறு தேசிய இனங்கள் இனைந்திருக்கும்போது இனங்களின் சமத்துவத்தையும் ஜனநாயகத்தையும் உறுதி செய்வது என்பது சுயநிர்ணய உரிமைதான்.
இந்திய ஒருமைப்பாடு பற்றி பேசுகிறவர்கள் சோசலிசப் புரட்சியின் மூலம் அதைக் கற்றுக் கொள்ள வேண்டும்.
சுயநிர்ணய உரிமை என்பது வேறு பொருளில் சொல்ல வேண்டுமானால் "பிரிந்து செல்ல விரும்பினால் பிரிந்து செல்லலாம்" என்பதுதான். இதைத்தான் லெனின் அறிவித்தார்.
நான் தமிழ்த் தேசிய இனத்தின் உரிமை பற்றி பேசக் காரணம் பெரியார்இ அண்ணா எழுத்துக்கள் எல்லாவற்றையும் விட லெனினுடைய வாதங்களும் சிந்தனைகளுமே என்னைக் கூர்மைப்படுத்தியது.
அவர் பிரிந்து செல்ல மட்டுமே சுயநிர்ணய உரிமை என்றார். ஆனால் ரசியக் கம்யூனிஸ்ட் கட்சியில் மாறான நிலைப்பாடு. ஸ்டாலின் ஒரு ஜார்ஜியன். ஆனாலும் இதை ஸ்டாலின் இதை எதிர்த்தார்.
லெனின் மறைவுக்குப் பின்னர் அவரது கனவு தூள் தூளானது. அதை நாம் கண் முன்னாலேயே பார்த்தோம்.
ஒரு இனத்தினது மொழியை அங்கீகரிக்க வேண்டும். அதிகாரம் வேண்டும் என்று சொல்வது ஜனநாயகத்தின் மிகச் சிறந்த கோரிக்கைகள்.
சமத்துவத்தை நிலைநாட்டும் எல்லா முயற்சியும் ஜனநாயகம் சார்ந்ததே. இந்தியாவில் அது நடக்கவில்லை.
1922-ல் காந்தியடிகள் காங்கிரஸ் மாநாட்டில் குறிப்பிடுகிறார்.... இந்தியா விடுதலை பெறும்போது பல்வேறு தேசிய இனங்கள் தங்களது விருப்பத்தின் பேரில் சேர்ந்து இருக்கும் என்றார்.
1948 ஆம் ஆண்டு வரை இந்திய கம்யூனிஸ்ட் மற்றும் காங்கிரஸ் கட்சிகளினது கோட்பாடாக இருந்து.
சுயநிர்ணய உரிமை என்பது கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கையில் இருந்தது. ஆனால் திடீரென்று அகில இந்தியப் பார்வை வந்தது. அண்மைக்காலமாக வரலாற்றுப் படிப்பினைகளை அவர்கள் ஏற்றுக்கொண்டுள்ளார்கள்.
இலங்கையிலே புத்த மதம் என்பது சிங்கள மதம். அது தமிழர்களை ஒன்று சேர்க்கப் பயன்படவில்லை.
மத அடிப்படையில் பாகிஸ்தான் பிரிந்தது. ஆனால் அந்த பாகிஸ்தானிலிருந்துதான் வங்கதேசம் பிரிந்தது.
மதம்இ இனங்களை ஒன்றிணைக்கக் கூடிய சக்தி இல்லை. அப்படி இருந்தால் ஒரே இஸ்லாமிய நாடு என்று வந்திருக்க வேண்டும். மத்திய ஆசியாவிலேயே பல இஸ்லாமிய நாடுகள் தனியே உள்ளன.
இந்தியாஇ இலங்கை போன்ற நாடுகளைக் கணக்கில் எடுத்தால் சில தேசிய இனங்கள் வரலாற்று ரீதியாக தொன்மை தனித்தன்மை கொண்டிருக்கிறது. அந்த இனங்கள் விருப்பத்தின் பேரில் சேர்ந்திருக்கிறது என்பது அதை அங்கீகரிப்பதன் மூலமே அந்த தனித்தன்மை மதிக்கப்பட வேண்டும். அதை மறுப்பது என்பது சரி அல்ல.
துக்ளக் சோ போன்றவர்கள் இலங்கையில் தமிழர்கள் குடியேறியவர்கள் என்று சொல்லி வருகிறார்கள்.
ஈழத் தமிழர்கள் அந்த மண்ணை தாயகமாகக் கொண்டவர்கள். ஈழத்துப் பூதனார் என்ற பாடல் சங்க இலக்கியத்திலேயே இடம்பெற்றுள்ளது. ஈழம் என்பது நெடுங்காலமாகச் சொல்லப்பட்டு வருகிற சொல்.
அங்கே போய்க் குடியேறியவர்கள் யார் எனில் கொழும்பில் வணிகத்துக்காகப் போன மரைக்காயர்இ செட்டியார்கள்தான்.
அடுத்துஇ கண்டி போன்ற மத்திய இலங்கைப் பகுதிகளில் 200 ஆண்டுகளுக்கு முன்பாக கூலிகளாகத் தமிழகத்திலிருந்து கொண்டு செல்லப்பட்டவர்கள்.
தமிழ்நாட்டில் கங்காணிகளால் ஏமாற்றிக் கொண்டு செல்லப்பட்டவர்கள் அவர்கள்.
அன்று கண்டி என்பது மலைப்பிரதேசமாக மட்டுமே இருந்தது. கோப்பித் தோட்டம் போடலாம் என்று ஆங்கிலேயர்களால் இறக்கப்பட்டவர்கள். தமிழ்நாட்டின் சாதிய ஒடுக்குமுறைஇ நிலப்பிரபுத்துவக் கொடுமைகளுக்குள்ளானவர்கள் இலங்கைக்கு போனால் செல்வாக்காக வாழலாம் என்ற ஏமாற்றுக் கருத்துகளால் அழைத்துச் செல்லப்பட்டவர்கள்.
குடும்ப குடும்பமாக அங்கே போய்ச் சேர்ந்தார்கள். ஆனால் அவர்கள் எதிர்கொண்டதெல்லாம் காட்டு விலங்குளும் பூச்சிகளும் தொற்று நோய்களும்தான்.
அதற்கு ஈடுகொடுத்து காடுகளை அழித்து கோப்பித் தோட்டங்களை உருவாக்கினார்கள். போர்த்துகீசியர்களுக்குப் போட்டியாக ஆங்கிலேய அரசாங்கம் தமிழர்களை வைத்து கோப்பித் தோட்டங்களை உருவாக்கியது.
ஏனெனில் எந்த வம்பும் செய்யாதவன் தமிழன். அது உண்மை. 4 சீனர்கள் சேர்ந்தால் தொழிற்சங்கம் அமைப்பார்கள்.
அந்தக் காலகட்டத்தில் கறுப்பின அடிமை முறை ஒழிக்கப்பட்டு ஒப்பந்தக் கூலி முறை உருவான காலம்.
அதற்குப் பயன்பட்டவர்கள் ஒடுக்கப்பட்ட தமிழர்களே.
அவர்களே இலங்கைக்கும் பர்மாவுக்கும் பீஜிக்கும் தென்னாப்பிரிக்காவுக்கும் மலேசியாவுக்கும் கொண்டு செல்லப்பட்டனர்.
கோப்பித் தோட்டங்களில் அமோக லாபம் கிடைக்கவே கண்டி-கொழும்புக்கு பாதை உருவாக்கப்பட்டது.
கோப்பித் தொழிலில் நட்டம் ஏற்பட்ட காலத்தில்தான் தேயிலைத் தோட்டங்கள் வர ஆரம்பித்தன. தென்கிழக்கு ஆசிய பகுதியில் பெரிய தொழிற்சங்கமாக மலையகத் தொழிற்சங்கங்கள் உள்ளன.
இலங்கை விடுதலை வந்த பிறகு சிங்களப் பேரின முதலாளிகள் மற்றும் தமிழ் முதலாளிகளுக்கும் கூட தமிழர்களின் உதவி மறந்து போய்விட்டது.
அந்த மக்கள் தங்கள் அள்வில் இடதுசாரிச் சிந்தனையாளர்களாக இருந்தனர்.
தமிழ் உணர்வு கொண்டவர்களாக இருந்தனர்.
இது சிங்களவர்களை அச்சுறுத்தியது.
உலக நாடுகளில் நீங்கள் ஒருநாட்டில் 2 அல்லது 5 ஆண்டுகாலம் இருந்தால் குடியுரிமை உண்டு. ஆனால் இலங்கையில் 150 ஆண்டுகளுக்குப் பிறகும் சிறிமா-சாஸ்திரியின் கேடுகெட்ட ஒப்பந்தத்தால் தமிழர்கள் நாடற்றவர்களாக ஆக்கப்பட்டு 7 இலட்சம் தமிழர்கள் திருப்பி அனுப்பப்பட்டனர்.
ஒவ்வொரு மக்களுக்கும் குடும்பமும் அந்த மண்ணிலே சிந்திய கண்ணீரும் இரத்தமும் எதுவுமே மதிக்கப்படவில்லை. ஒரே நாளில் ஒரே ஒப்பந்தம் மூலம் 7 இலட்சம் பேர் அகதிகளாக்கப்பட்டனர்.
இதைச் சொல்வது ஏனென்றால் இலங்கையிலே கவனிக்கப்படாத விடயமாக மலையகத் தோட்டத் தொழிலாளர்கள் இருந்து வருகிறார்கள்.
பேராசிரியர் சரசுவதி சொன்னது போல்இ போரில் பின் தங்கிய நிலையில் பிரபாகரன் போர் நிறுத்தம் செய்யவில்லை. தனிநாடு கோரிக்கையைக் கைவிடவில்லை.
வலுவாக இருந்து கொண்டே உலக யதார்த்தத்தையும் ஈழ யதார்த்தத்தையும் உள்வாங்கிக் கொண்டு பிரிந்து செல்லும் உரிமை கொண்ட சுயநிர்ணய உரிமையின் அடிப்படையில் இணைந்து ஒரு கூட்டமைப்பாக செயல்பட பிரபாகரன் முன்வந்தார்.
சிங்கள- தமிழ் அரசுகள் இணைந்து ஒரு கூட்டமைப்பாக இருக்கலாம் என்றார்கள்.
இது தனிப்பட்ட முடிவாகவும் அல்லாமல் பல்வேறு இயக்கங்களின் கூட்டு முடிவாக அறிவிக்கப்பட்டது.
இது பேச்சுவார்த்தையிலும் வந்தது. அந்தக் காலகட்டத்தில் யாழ்ப்பாணத்து மக்கள் சமாதானத்தை அனுமதித்தார்கள். அவர்கள் முகத்தில் அமைதியும் புன்னகையும் இருந்தது.
மீண்டும் சிரிக்கக் கற்றுவிட்டார்கள். தெளிவாகச் சொன்னார்கள். நாங்கள் மண்டியிட்டு சமாதானத்தை ஏற்றுக்கொள்ளமாட்டோம் என்பதில் தெளிவாக இருந்தார்கள்.
நோர்வே அமெரிக்காவின் மென்மை முகம். இஸ்ரேல் என்பது கோரமுகம் என்று தெளிவாகச் சொன்னார் பிரபாகரன்.
இப்போது நோர்வேயின் மென்மை முகத்துக்கு பதில் இந்திய முகத்தை நிறுவ முயற்சிகள் நடக்கின்றன.
இந்தியாவுக்குத் தொடக்கத்தில் இருந்தே தமிழ் மக்களின் பிரச்சனை குறித்த அக்கறை இல்லை. தனது எல்லை விஸ்தரிப்பு என்ற கோட்பாட்டுடனேயே அரசியல் நலன்சார்ந்தே இந்த விடயத்தை அணுகியது.
இலங்கை இந்தியாவுடன் இணைந்த தனிமாநிலமாக இருக்கலாம் என்று இந்திய விடுதலைக் காலத்திலேயும் சொன்னார்கள். இப்போதும் சுப்பிரமணிய சுவாமி சொல்கிறார்.
இந்திய அரசியல் சாசனும் இந்த விஸ்தீரனப்படுத்துகிறப் போக்கை அனுமதிக்கிறது.
இந்தியாவின் வெளியுறவுக் கொள்கை இந்தியாதான் தீர்மானிக்க வேண்டும் என்றார் பேராசிரியர் சரசுவதி. நான் அதில் உடன்பட்டு கூட மற்றொன்றையும் சேர்த்துக் கொள்ள விரும்புகிறேன்.
பிற நாட்டினது தன்னதிகாரத்தையும் இறையாண்மையும் சுயேட்சைத் தன்மையையும் ஏற்றுக் கொண்ட வெளியுறவுக் கொள்கை அவசியமானது.
இலங்கை அரசு கோரக் கூடிய ஒற்றையாட்சி இந்தப் பிரச்சனைக்கான தீர்வுக்குப் போதுமானது அல்ல.
இதை அந்த அரசு வலியுறுத்தினால் போர் தவிர்க்க முடியாதது.
யாருமே போரை விரும்பவில்லை.
ஏகாதிபத்திய சக்திகள் திணித்த இந்தப் போருக்கு முதலில் தமிழர்கள் முகம் கொடுத்தார்கள். இனி சிங்கள மக்கள் முகம் கொடுப்பார்கள்.
ஈழப் பிரச்சனை பற்றி பேசுகிற நாம் தமிழ்நாட்டிலும் சுயாட்சி- தன்னாட்சி- பிரிந்து செல்கிற உரிமை தொடர்பாக மக்களிடத்திலே விளக்கம் கொடுக்க வேண்டியது அவசியம் என்றார் இன்குலாப்.
இந்தக் கூட்டத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு செயலாளர் சி. மகேந்திரன்இ பத்திரிகையாளர் கே.வி. ரமணிஇ மனித உரிமைச் செயற்பாட்டாளர் ரி.எஸ்.எஸ்.மணி ஆகியோரும் உரையாற்றினார்கள்.
தகவல்: புதினம்
|
|
|
| அரசு யுத்தச்சூழலை வலிந்து உருவாக்குகிறது - சு.ப.தமிழ்ச்செல்வ |
|
Posted by: தூயவன் - 01-02-2006, 06:34 AM - Forum: செய்திகள் : தமிழீழம்
- No Replies
|
 |
நேற்று இடம்பெற்ற இளையோர் அறிவியற்கழகம் திறந்து வைப்பு நிகழ்வில் கலந்து கொண்டு சிறப்புரையினை ஆற்றுகையிலேயே தமிழீழ அரசியல்துறைப்பொறுப்பாளர் சு.ப.தமிழ்ச்செல்வன் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
தொடர்ந்து அவரது உரையில் மனித இனத்தினுடைய அசைவியக்கமே அறிவியல் தொழில்நுட்ப உச்ச வளர்ச்சியில் உள்வாங்கலுக்குள் அடங்கியுள்ளது. அந்தவகையில் நாங்கள் இன்றொரு தேசத்தை நிர்மாணிப்பதற்காகவும் தேசத்தை மீட்பதற்காகவும் போராடிக்கொண்டிருந்தாலும் எங்களுடைய தேசமும் நாளைக்கு விடுதலை அடையும் பொழுது உலகத்தின் ஒட்டத்தோடும்; அதி உச்ச வளர்ச்சியோடும் நாங்களும் இணைந்து கொள்வதன் ஊடாகத்தான் உலகப்பந்திலே எங்களுடைய தேசமும் நிலைக்க கூடிய வாய்ப்பு ஏற்படும் அந்தவகையில் எங்களுடைய தலைவர் எவ்வளவு து}ரத்தில் எதிரியை விரட்டி எங்களுடைய தமிழீழ தேசத்தை மீட்க அவருடைய கவனத்தையும் அக்கறையையும் அவருடைய ஈடுபாட்டையும் செலுத்துகின்றாரோ அதேபோன்று இளைய தலைமுறையையும் புதிய உலக மாற்றத்தோடும் உலகத்தின் வளர்ச்சிப் போக்கோடும் இணைத்து கொண்டு போகின்ற ஒரு போராட்டத்தையும் சம காலத்தில் அவர் கையிலேடுத்து செயற்படுத்தி வருகின்றார் அதனுடைய ஒரு செயற்பாடாகத்தான் எங்களுடைய இந்த அறிவியற்கழகத்தின் தோற்றம் இங்கே கருக்கொண்டிருக்கிறது.
எனக்கு முன்பு குறிப்பிட்ட பொறுப்பாளரின் கூற்றின் அடிப்படையில் தமிழீழ தேசம் முழுவதும் பரவி எங்களுடைய இளைய தலைமுறையை ஆரோக்கியமான அறிவியல் தொழில் நுட்பத்தில் உச்ச வளர்ச்சியை அடைந்த தலைமுறையை உருவாக்க வேண்டும் என்பது எமது தலைவரின் அவாஅந்தவகையில் இந்த அறிவியற்கழகம் மிகப்பாரிய வளர்ச்சியை நோக்கி வளர்ந்து செல்ல வேண்டும் இது எல்லாப்பிரதேசத்திற்குள்ளும் இந்த வேலைத்திட்டத்தை பரப்ப வேண்டும் என்ற பல இடங்களிலே பல நிறுவனங்கள் வேறும் பலரினுடைய முயற்சி காரணமாக ஒரளவு செயற்பட்டுக் கொண்டிருந்தாலும் ஒழுங்குபடுத்தப்பட்ட அளவில் சரியான திட்டமிடலின் அடிப்படையில் மேற்கொள்ளத ஒரு குறைபாடு இருக்கிறது அதை நாங்கள் இந்த ஆண்டில் எங்களுடைய தலைவரின் அறிவுறுத்தலுக்கு ஏற்ப அதற்கும் ஒரு பிரிவை அமைத்து அதை ஒழுங்குபடுத்துவதற்கான ஒரு வேலைத்திட்த்தை செய்து வருகின்றோம். அந்த வகையில் இந்த அறிவியற்கழகத்தின் வழிகாட்டுதல் இந்த அறிவியற்கழகத்தின் அடுத்த கட்ட நகர்வுகள் இங்கொரு பெரிய பரந்த அளவிலான ஒரு மாற்றத்தை கொண்டு வரும் என நாங்கள் நம்புகின்றோம்.
ஏற்கனவே குறிப்பிட்டது போல எங்களுடைய இனத்தை பெறுத்தவரையில் இன்றைக்கு உலகெங்கும் பரந்து விரிந்து வாழ்ந்து வருகின்றோம்.யூத இனம் ஒருகாலத்தில் உலகெங்கும் பரந்து அகதிகளாக நாடற்றவர்களாக இருந்தார்களோ அதே போன்று எங்களுடைய தமிழ் மக்களும் தமிழீனமும் இன்றைக்கு உலகப் பந்திலே ஒருநாடுஎன்ற அங்கிகாரமில்லாமல் உலகமெங்கும் பரந்து வாழ்கிறார்கள். ஆனால் எங்களுடைய தலைவரின் காலத்தில் எங்களுடைய தமிழினம் தனது தேசத்தை நீர்மாணிப்தற்கான கணிசமான முன்னேற்றத்தைஅதைநோக்கிய பயணத்திலே கனிசமான து}ரத்தை கடந்திருக்கிறோம்.
இன்னுமொரு கடைசிகட்டத்திலிருக்கிறோம் என்றுதான் நான் குறிப்பிடலாம் ஆகவே அந்த இறுதிக்கட்டத்தை நோக்கி அடுத்த பிறந்த இந்த ஆண்டு நகரப்போகிறது தமிழினத்தின் தலைவிதியை தமிழினத்தின் இருப்பை தமிழினத்தின் எதிர்காலத்தினை தீர்மானிக்கும் ஆண்டாக இந்தாண்டு நிச்சயமாக இருக்கப்போகிறது ஏனெனில் எங்களுடைய தேசியத்தலைவருடைய மாவீரர் தின கொள்கைப் பிரகடனஉரையில் தெளிவாக எமக்கு சுட்டிக்காட்டியிருக்கிறார் இதுவரை கால அரசியல் வரலாற்றைக்கூறி எங்களுடைய தலைவர் தெளிவாக வெளிப்படுத்தியிருக்கிறார் இந்த அடிப்படையில்தான் இந்த ஆண்டு நகரப்போகிறது பாரிய நெருக்கடியை சந்திக்கலாம் இன்றைக்கு சிங்கள தேசம் ஒருவலிந்து ஒரு போர்ச்சூழலை உருவாக்குவதற்கு முயன்று கொண்டிருக்கிறது தமிழீழம் எங்கும் ஒரு பயங்கரமான சூழல் உருவாகிக் கொண்டிருக்கிறது.
ஒரு யுத்தத்தை தொடங்குவதற்கான சகலவிதமான துண்டுதல்களையும் செய்து கொண்டிருக்கிறார்கள். எங்களுடைய மக்கள் அவ்வளவு துன்பபட்டுக் கொண்டிருக்கிறார்கள். உண்மையிலேயே ஒரு யுத்த சூழலையே புதிதாக பதவியேற்ற அரசாங்கம் வலிந்து ஏற்படுத்தி கொண்டிருக்கிறது. இந்த ஆண்டு நெருக்கடிக்கு உட்பட்ட ஆண்டாகவே இருக்கிறது. இந்த நெருக்கடியில் இருந்து ஒரு விடிவை பெற்றுத்தருவதற்கு எமது தலைவர் தயாராகிக் கொண்டு இருக்கிறார். எங்களுடைய மக்களை அதற்கு தயார்படுத்திக் கொண்டு இருக்கிறோம். பாரிய யுத்த சூழலுக்குள் இருந்தாலும் எங்களுடைய இளைய தலைமுறையை எந்த விதத்திலும் ஒரு பாதிப்புக்கு உட்படாமலும் அவர்களை உடல் உள hPதியாக ஆரோக்கியத்துடனும் அறிவியல் தொழில்நுட்ப கல்வியியல் மேம்பாட்டையும் அவர்கள் மத்தியில் கட்டியெழுப்ப வேண்டும். போர்ச்சூழலுக்கு எவ்வாறு முகம் கொடுக்கிறோமோ அதே போல எங்களுடைய பிள்ளைகளின் எதிர் காலத்தையும் கட்டி எழுப்ப வேண்டும் என்ற நோக்கத்தோடு இப்படியான வேலைத்திட்டத்தை மேற்க் கொண்டுள்ளோம்.
எமது இனப் போராட்டம் உலகத்திலே உன்னிப்பாக பார்க்கப்படும் போராட்டம் ஆகும். உலகத்திலே சிறிய இனமாக இருந்தாலும் நாங்கள் செய்கின்ற சாதனைகள், செயற்பாடுகள் உலகத்தை அதிசயிக்க வைப்பதாகத்தான் இருக்கும். என்றும் குறிப்பிட்டார்.
தகவல்:சங்கதி
|
|
|
| - புலத்தில் இருந்து ஓர் புலம்பல் IV - Sydney முருகனின்...... |
|
Posted by: தூயா - 01-02-2006, 04:58 AM - Forum: கதைகள்/நாடகங்கள்
- Replies (96)
|
 |
வணக்கம்,
நலமாக இருக்கிறீர்களா? வாழ்க்கை எப்படி போகின்றது? "அட என்னத்த இங்க வந்து கண்டோம்" என அலுத்துக்கொள்கிறீர்கள் போல?
இருங்கோ தேத்தண்ணி போட்டு கொண்டு வாறன்.
சரி இப்ப நாங்கள், என்னை போல, உங்களை போல, நம்மை போல சில மனிதர்களை பார்ப்போமா?
இஞ்ச பாருங்கோ இப்பவே சொல்லி போட்டன். இது முற்றிலும் ஒரு கற்பனை கதை என்ன. இடங்களின் பெயர்கள் மட்டும் நிஜ வாழ்வில் உள்ள இடங்கள். சம்பவங்களும், கதாபாத்திரங்களும் கற்பனை. பிறகு அங்க அவுஸ்திரேலியாவில இருக்கிறவ கோவ பட கூடாது. சரியோ??
சரி இனி உங்களுக்காக புலத்தில் இருந்து ஓர் புலம்பல்...
<img src='http://img362.imageshack.us/img362/8782/images6dl.jpg' border='0' alt='user posted image'>
[size=20]புலத்தில் இருந்து ஓர் புலம்பல்
ஈழத்தில் வடமராட்சியில் காலம் காலமாக வாழ்ந்த ஓர் குடும்பம், நாட்டு நிலமையால் அவுஸ்திரேலியா நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தில் சீவியம் நடத்தி கொண்டு இருக்கிறது.
குடும்ப உறுப்பினர்கள் தாய் புவனேஸ்வரி, மகன் ராஜன், ராஜனின் மனைவி ராதிகா.
2006 புத்தாண்டு பிறந்துவிட்டது. ராஜன் குடும்பம் வொலொங்கொங் என்னும் இடத்தில் அமைந்த்திருக்கும் "சிவா+விஸ்ணு" ஆலயத்திற்கு செல்ல ஆயுத்தமாகின்றனர்.
ராஜன்: ராதி...ராதி..என்னப்ப நீர் இன்னும் இந்த மேக்கப்பை பூசிமுடிக்கலையே?
ராதிகா: ( கண்ணாடியின் முன் அமர்ந்து கொண்டே), "இஞ்ச பாருங்கோ ராஜன் நான் சமைச்சு போட்டு அவசரம் அவசரமாய் வெளிக்கிடுறன். எனக்கு கோவத்தை கிளப்பாதிங்கோ சொல்லி போட்டன்"
ராஜன்: ம்ம்ம் காலமடா காலையில எழும்பி சமைச்சது நான். கடைசியில சலட் ஒன்றை போட்டுவிட்டு பெரிதா சொல்லிக்க வேண்டியது. அப்பவே என்ட அம்மா சொன்னவ "டேய் ராஜன் உனக்கு நான் பார்த்திருக்கிற அமலாவை கட்டடா" என்று..
அறையில் இருந்து புயலென வெளியேறிய ராதிகா, தனது புடவையை சரி செய்தவாறு, "என்னப்பா சொன்னனிங்கள்?
ராஜன்: ஒண்டும்மில்லையே!!
ராதிகா: அது தானே பார்த்தேன். பாருங்கோ அப்ப ஊரில நீங்கள் சுமாரா இருந்தியள், அதுவும் சின்னனில. நான் உங்கள ஓ/எல் படிக்கிற நேரத்தில எல்லோ இந்த கண்றாவி காதலை பண்ணி தொலைச்சனான். எனக்கு அப்ப 7 1/2 சனி போல. உங்கள என்னை விட்ட எவள் திரும்பி பார்ப்பால்?
ராஜன்: சரி சரி பழைய கதை எல்லாம் இப்ப எதுக்கு? அம்மா எங்க?
ராதிகா: மேல் விட்டு சறோ அன்றியோட அலட்டி கொண்டு இருப்பா. நான் காலமை எழும்பினதில இருந்து வேலை செய்து போட்டு வெளிக்கிடுறன். என்னை குறை சொல்லுங்கோ. உங்கட அம்மா காலையில "செல்வி" கதை கதைக்க போனவ தான். என்னையே குற்றம் சொல்லுங்கோ..
ராதிகா மறுபடி அறைக்குள் இருக்கும் கண்ணாடி முன் ஐக்குயமாகிவிட, மேல் வீட்டு சறோ வீடிலிருந்து திரும்புகிறார் புவனேஸ்வரி.
புவனேஸ்வரி: தம்பி ராஜன், என்னப்பு வெளிக்கிடுவமே?
ராஜன்: உங்கட மருமகள் மேக்-அப் போட்டு முடியவில்லை அம்மா.
புவனேஸ்வரி: அதை சொல்லு, நான் இந்த விடிய காலமையில எழும்பி வேலை எல்லாம் செய்து போட்டு, ஒரு புடவையை சுத்தி பொட்டு நிற்குறன். உன்ட மனிசிக்கு என்ன?
ராஜன் மனதிற்குள் : (கேளுங்கோவன் கதையை காலையில எழுந்து வேலை எல்லாம் செய்தது நான். இவை ரென்Dஉ போரின்ட கதையும்.கடவுளே)
ராஜன் தாயின் பார்வையை தவிர்க்க எண்ணி, தொலைக்காட்சி பெட்டியை தட்டிவிடுகிறான். தொலைக்காட்சியில காலநிலை போய் கொண்டிருக்கிறது.
ராஜன்: அடக்கடவுளே இண்டைக்கு பார்த்து நாங்கள் கோயிலுக்கு வெளிக்கிடுறம், வெயில் சரியா இருக்கும் போல, 45 போகும் என்று சொல்லுறாங்கள்.
புவனேஸ்வரி: இதை விடு தம்பி. உன்ட மனிசி அவான்ட அப்பா , அம்மாவோட டெலிபோனில எப்ப பார்த்தாலும் கதைக்கிறா. பிறகு நான் தான் என்னமோ டெலிபோன் பில்லை கூட்டுற போல உனக்கு கதை சொல்லுறது என்ன..
ராஜன்: அம்மா அப்படி ஒன்றுமே ராதிகா சொன்னதில்லை
புவனேஸ்வரி: அது சரி கட்டினவள் தானே இப்ப கண்ணுக்கு முன்னால தெரியிறாள். பெத்தவளை பற்றி என்ன கவலை. நான் உன்னை கொப்பர் போன பிறகு எவ்வளவு கஸ்டபட்டு வளர்த்தனான் தெரியுமோ??
ராஜன்: அம்மா ஆரம்பிக்காதிங்க.
ஒருவாறு தனது அலங்காரத்தை முடித்து அறையை விட்டு வெளியே வந்த ராதிகா
"அப்பா மாமி செல்வி பார்க்கிற நேரத்தில உங்களுக்கு என்ன தொலைக்காட்சி பார்ப்பு. மாமி கதை எப்பிடி மாமி போகுது. செல்வியை பார்த்தா பாவமா கிடக்குது என்ன"
ராஜன்: (மனதிற்குள்) அடிபாவிகளா, என்னை பார்த்தா பாவமா தெரியலையா?)
புவனேஸ்வரி: ஓமடி பிள்ளை. காரில போகக்கில்லை கதையை சொல்லுறன். நீ இந்த பச்சை புடவைக்கு எண்ட பச்சை முத்து மாலையை போடேன் பிள்ளை. வடிவ இருக்கும் எல்லோ?!!
ராதிகா: மாமி உங்கள பழைய காலம் எண்டு இவர் ஏன் சொல்லுறவரோ தெரியாது. உங்களுக்கு நல்ல டேஸ்ட் மாமி.
ராஜன் மனதிற்குள்)"அடிப்பாவி நேற்றும் இரவு "அப்பா உங்கட அம்மா சரியான கர்நாடகம்" என்று சொல்லி போட்டு..
புவனேஸ்வரி: தம்பி இருட என்ட மருமகளுக்கு இந்த மாலையை போட்டு கூட்டி கொண்டு வாறன்.
ராஜன்: ஓம் ஓம், மெதுவா வாங்கோ. கோவில் இண்டைக்கு இரவு வரைக்கும் திறந்து இருக்குமாம். (ஒருத்தரை ஒருத்தர் குறை சொல்லி போட்டு, இப்ப மாலை எல்லோ போடினமாம். என்ட நல்லூர் கந்தனே)
தலையில் கை வைத்து ராஜன் புலம்ப, புலத்தில் இருந்து ஓர் புலம்பலுக்கு சின்னதா ஒரு இடைவெளி...
புலம்பல் தொடரும்..........
|
|
|
| நீ அங்கே நான் இங்கே |
|
Posted by: Snegethy - 01-02-2006, 03:48 AM - Forum: கதைகள்/நாடகங்கள்
- Replies (13)
|
 |
<b>நீ அங்கே நான் இங்கே </b>
-சினேகிதி-
அம்மா அப்பான்ர கடிதம் வந்திருக்கு இந்தாங்கோ.
கொண்டா கொண்டா என்னடா இன்னும் இந்த மாசம் கடிதம் வரேல்ல எண்டு பார்த்தன்.சுஜி கவி இங்க பாருங்கோ அப்பா கவிக்கு பிறந்தநாள் வாழ்த்து அனுப்பியிருக்கிறார்.
அம்மா முதல் என்னட்டதான் தரோணும்.
இன்னொரு சந்தோசமான செய்தி என்னெண்டால் அப்பா வாற மாசம் ஸ்பெயின்ல இருந்து இங்க வாறாராம்ம்ம்ம்.
ஐ ஜாலி.
சின்னவா கவி அப்பாட்ட என்னத்துக்கெல்லாம் சொல்லிவிடலாம் என்று அம்மாட்ட நச்சரிக்க மூத்தவ சுஜி 10ம் வகுப்புக்குப் பரீட்சைக்குப் படிக்கப் போட்டா.அப்பா வரப்போறார் என்று தெருவால போற வாற எல்லாருக்கும் சொல்றதுதான் கவின்ர வேலை.
அப்பா வந்தவுடனே அம்மா ஓடிப்போய் அப்பாவைக் கட்டிப்புடிச்சிட்டா.சுஜி அப்பாக்கு தேசிக்காய் தண்ணி கொண்டு வந்து கொடுக்கத்தான் அப்பா சுஜியை பார்த்திட்டுச் சொன்னார் இவளென்ன என்னவிட வளத்தி போல…ஆமா எங்க கவி ஆளைக் காணவே இல்லை.கவி வெக்கப் பட்டுக்கொண்டு வந்து நிண்டா முன்னால. கவியைத் தூக்கி மடில இருத்தி இதென்ன 9 வயசாச்சு தாத்தா போல நுள்ளான் என்று சொல்ல அம்மம்மா சித்தியவை எல்லாம் சிரிக்க கவிக்கு கோவம் … நுள்ளான் கடிச்சா எப்பிடி வலிக்கும் தெரியும்தானே. கவிக்கு வாய் எண்டு அம்மா எழுதினவாதான் ஆனா இனி நான் வந்திட்டன் தானே எல்லாம் றிப்பியர் பண்றன்… கவி கொடுப்புக்க சிரிச்சுப்போட்டு நான் என்ன றேடியோவே றிப்பியர பண்ண…
அப்பா வந்து நிண்ட 3 மாதமும் கவிக்கு ஒரே கொண்டாட்டம் தான.றஞ்சன் சித்தப்பா பூங்கா,கிட்டு பூங்கா ,தனங்கிழப்பு பெரியப்பா வீடு நவக்கிரில அப்பம்மாவேன்ர தோட்டம் இன்னும் நிறைய இடங்கள் ஒரே சுற்றுலாதான்.வீட்டுக்கு paint அடிச்சு சுஜிக்கு பூப்புனித நீராட்டு விழாவும் செய்து போட்டு அப்பா தான் திரும்பப் போற அலுவல்களைப் பார்க்கத் தொடங்கிட்டார்.கவிக்கு அப்பாவோட ஊர் சுத்தினதே பெரிய சந்தோசம் அப்பா போறதைப் பற்றி கவலையில்லை.சுஜியும் ழுஃடு பரீட்சை வருதெண்டு பள்ளிக்கூடம் ரியூசனுமாய் திரிய அம்மாக்குத்தான் ஒரே கவலை.தான் ஸ்பெயினுக்குப் போய் எல்லாரையும் கெரியா கூப்பிடறன் என்டு சொல்லிட்டுப் போன கவின்ர அப்பா ஒரு மாதிரி ஐந்து வருசத்தால அமெரிக்காவுக்கு வந்து குடும்பத்தை ஸ்பொன்ஸர் பண்ணினார்.
நியுயெர்சிக்கு கவியாக்கள் வந்து சேர்ந்தண்டு அப்பா சமைச்ச பசுமதி அரிசிச் சோறும் முருங்கைக்காய் கறியும் தான் சாப்பாடு.
அம்மா அம்மா….
என்ன கவி?
அம்மா நான் நினைச்சன் வெளிநாட்டில ஆக்கள் சோறு சாப்பிட மாட்டினம் எண்டு.
கவி பேசாம சாப்பிட்டால்தான் அப்பா வாங்கி வைச்சிருக்கிற சொக்லட் எல்லாம் தருவன்.
ஓ பதினாலு வயசிலயும் சின்ன பிள்ளையள் மாதிரி சொக்லட் வாங்கி திண்டுதான் பல்லு இந்த நிறத்தில இருக்கு.
எல்லாரும் கெரியாச் சாப்பிட்டுட்டு போய்ப்படுங்கோ நாளைக்குக் காலம கோயிலுக்குப் போவம்.
அப்பா..
என்ன சுஜி?
நாங்கள் எப்ப Statue of liberty பார்க்கப் போப்போறம்?
நாளக்கு எட்வட் வரப் போலாம்.
நியுயெர்சிக்கு வந்து ஒரு கிழமையிருக்கும் பின்னேரம் ஆறு மணிக்கு போன் அடிக்குது.
Hello...
Hello நான்தான் ....
இப்ப ஏன் இங்க எடுத்தனீ?
வீட்டில எங்கட விசயம் இவற்ற அண்ணாவைக்குத் தெரிஞ்சிட்டுது.என்ன வீட்ட விட்டுப் போகச் சொல்லிட்டனம்.எனக்கு கொஞ்சம் காசு வேணும்.
வையடி போனை.நீயெல்லாம் ஒரு பொம்பிளை சீ.
சுஜிஜிஜிஜி…..நீ முதல்ல போனை வை.
ஒட்டுக்கேக்கிற நாய்ப் பழக்கம்.
ஓ நீங்க அம்மாக்குத் துரோகம் செய்ததை விட நான் ஒட்டுக்கேட்டது பெரிய விசயமில்லை.முதல்ல அவளை போனை வைக்கச் சொல்லுங்கோ.நல்லகாலம் அம்மாவும் தங்கச்சியும் மாமாவோட கோயிலுக்குப் போனது.அம்மாக்கு மட்டும் இது தெரிஞ்சா செத்திடுவா.சீ நான் உங்களை எவ்வளவு நல்லவர் என்று நினைச்சனான்.உங்களுக்குப் பிறந்ததை நினைக்க கேவலமா இருக்கு.
எனக்கு அங்க யுனிவசிற்றி கிடைச்சது அதையும் விட்டிட்டு இந்தக் கேவலத்தைப் பார்க்கிறதுக்குத்தான் எங்களை இஞ்ச கூப்பிட்டனீங்களே?இவ்வளவு நாளும் இருந்த மாதிர நாங்கள் அங்க சந்தோசமா இருந்திருப்ம்.நீங்களும் இஞ்ச இவளோட சந்தோசமா இருந்திருக்கலாம.
சுஜி தயவுசெய்து நான் சொல்றதைக் கேளம்மா.
போதும் நீங்க ஒண்டும் சொல்லத்தேவையில்லை.நான் ஒண்டும் சின்னப் பிள்ளையில்லை.
எனக்குப் போன வருசம் அக்சிடன்ற் நடந்தது என்று எழுதினான் தானே அப்ப மாலினிதான் என்னை வடிவாப் பாத்தவா.அவ இங்க இருக்கிற பிறைவற் கிளினிக்ல நர்ஸ்.அந்த நேரம் தான் இது நடந்தது ஆனால் நான் இப்ப அவாவோட கதைக்கிறேல்ல.
நல்லா கதை சொல்றீங்களப்பா.நீங்கள் சொன்னதெல்லாம் உண்மையென்டால் நாங்கள் நாளைக்கே எல்லாரும் கனடாவுக்குப் போறம்.போய் அத்தையோட இருக்கிறம்.இவள் உங்களுக்கு இனிம போனே பண்ணக்கூடாது.
அடுத்த கிழமையே அத்தையைப் பார்க்கப் போவம் என்று சொல்லி குடும்பத்தோட கனடாவுக்கு வந்த சுஜி அப்பாவுக்கு மரியாதை குடுக்கிறேல்ல.முந்தியைப் போல இல்லாம அப்பாவோட என்னத்துக்கெடுத்தாலும் வாய் காட்டிறது.
அம்மா நினைக்கிறது சுஜிக்கு நண்பர்களை விட்டிட்டு வந்திட்டம் என்ற கவலை அதான் அப்பாவோட சண்டை பிடிக்கிறாள் எண்டு.
சுஜிக்கு மாலினின்ர நினைவு வந்தா அப்பாட்ட போய் அவளுக்கும் பிள்ளைகள் இருக்குதோ?காசு அனுப்பிறனீங்களோ?அவளுக்குப் போன் பண்றனீங்களோ எண்டெல்லாம் கேக்கோணும் போல இருக்கும் பிறகு ஒருவேளை அப்பாவே மறந்து போயிருக்க நானே ஏன் ஞாபகப் படுத்துவான் என்று கேக்கிற எண்ணத்தையே விட்டிடுவாள்.
|
|
|
| திரை இசை பாடல்கள்? |
|
Posted by: தூயா - 01-02-2006, 03:23 AM - Forum: பொழுதுபோக்கு
- Replies (17)
|
 |
வணக்கம், 90இன் ஆரம்ப காலங்களில் வந்த இந்திய திரை இசை பாடல்களை (mp3) இணையத்தில் எங்காவது பர்த்து இருக்கிறீர்களா??தெரிந்தால் அறிய தரமுடியுமா?
|
|
|
| படித்ததில் பிடித்த சில கதைகள் |
|
Posted by: நர்மதா - 01-02-2006, 02:24 AM - Forum: கதைகள்/நாடகங்கள்
- Replies (10)
|
 |
வாய்
அந்த இளைஞனை நெடுநேரமாய் கூர்ந்து பார்த்தேன்....
எங்கேயோ பார்த்த முகம்... நன்கு தெரிந்த ஒரு முகத்தின் அச்சு மின்னி மின்னி மறைந்தது... யாராக இருக்கலாம் ... கேட்க வேண்டும்போல மயிர்க் கூச்செறிந்தது...
திகைத்து நின்றேன்...
கழுத்தில் சுருட்டிவிட்ட நேர்த்தியான இளம் கம்பளிச் சட்டை, உடம்போடு அளவாகப் பிறந்ததுபோல நேர்த்தியான லோங்ஸ்... அவனுடைய சப்பாத்தின் கூரிய முனையின் பளபளப்பில் என் முகம் தெரிந்தது...
அருகில் சென்றேன்... மேலும் ஒரு அடுக்கு கூர்மையாகப் பார்த்தேன்... களிம்பு போட்டு சுருள விட்ட கேசம்...அரும்பாத புதிய மீசை.. உயரம் போலவும், திடகாத்திரம் போலவும் ஒரு காந்தத் தோற்றம்..
கதைப்பதற்கு ஆயத்தமானேன்.. அதற்குள் யாரோ ஒருவர் கைகாட்ட ஓடிப்போய் காரில் ஏறுகிறான்...
யாராக இருக்கலாம் ....
நான் நின்று கொண்டிருந்த பந்தடி மைதானத்தை நோக்கி பார்வையை வட்டமாகச் சுற்றவிட்டேன்... அவன் அங்கு யாரையோ கூட்டிப்போக வந்திருக்க வேண்டும்..
ஒரு வாரம் ஓடியது...
மீண்டும் அதேபோல ஒரு புதன்கிழமை மாலை அந்த மைதானத்தில் அவனைக் கண்டேன்..
அவன் காரை நிறுத்திவிட்டு மைதானத்தை நோக்கி வேகமாக வருகிறான். யாரோ இரண்டு சிறுவர்களை அழைத்துப் போகவே அவன் வருவது தெரிந்தது. அவனுக்கு அருகாமையில் ஓடிப்போனேன்...
அவன் என்னை விநோதப் பிராணிபோல பார்த்துக் கொண்டான்.
உருவம் சரி... அவனுடைய வாய் மட்டும் சுhPரென இடித்தது.... வாயின் அமைப்பு நாகம்போல சுருண்டு மேலெழுந்த சொண்டு ....
வெடிகுண்டுக்குள் அகப்பட்ட சுண்ணாம்புக் கட்டிடம் போல மனது படபடவென இடிந்து விழுந்தது.
ஆண்டவனே இவனுடைய வாயை மட்டும் ஏன் இந்த அமைப்பில் வைத்தாய்? ஒரு அழகான வாயை அவனுக்குக் கொடுத்திருக்கலாமே...
இலட்சக்கணக்கான வாய்களை அவதானித்து வந்திருக்கிறேன்.. நாசம் செய்யும் மனிதர்களுக்குப் படைக்கும் அதே வாயை ஏன் இவனுக்கும் ஏன் படைத்தாய்...
வாய்கள் பற்றிய எனது ஆராய்ச்சி தடுமாறியது... சில வேளைகளில் புறநடைகளும் இருக்கலாம்...
தம்பி .... நீர்.... அவனுடைய ஊரை விசாரித்தேன்.
ஓம் ! நீங்கள்....
,நான் கதிரேசு ! உம்முடைய அப்பாவின் நண்பன்.. நீர் சுந்தரமூர்த்தியின் மகன்தானே ? ,
, ஓம்... எப்பிடி... ,
, உம்முடைய அப்பாவின்ரை முகம் உம்மட்டையும் அப்பிடியே இருக்கு... வாய் மட்டும் கொஞ்சம் வித்தியாசம்... சிலவேளை அம்மாவின்ரை சாயலாக இருக்கலாம்.,
அவன் ஒரு கடையில் முகாமையாளராக இருக்கிறான் ... நல்ல உத்தியோகம்...
அவன் பேசியபோது ஒரு வார்த்தைகூட கடுமையாக வரவில்லை... எல்லாமே சரியாக இருந்தது... அன்பு ... அறம்... பண்பு அத்தனையும் கலந்து தமிழை அப்படி அழகாகக் கொடுத்தான். சாய் ... திருவள்ளுவரும் இப்படித்தானே நல்ல வார்த்தைகளைப் பேசச் சொல்லியிருக்கிறார்...
நேரம் முக்கியம்... 5.15 க்கு முந்தி கடையில் நிக்க வேணும். நேரம் இருந்தார் வாருங்கோ... விசிட்டிங் காட்டைத் தந்தான்... தங்கநிற மட்டையில் அவன் பெயர் ஜொலித்தது...
அவனுடைய கடை வெகு தொலைவில் இல்லை... இலகுவாகப் போய்ச் சேர்ந்துவிட்டேன். நெடுநேரமாகப் பேசினேன்... அவன் மனிதரில் மாணிக்கம், து}ய வெள்ளை ஆடையைப் போன்றவன். வாய்களை வைத்து மற்றவரை எடைபோடக் கூடாது என்று உறுதி புூண்டேன்.
இதுவரை காலமும் உலகப் புகழ்பெற்ற இராஜதந்திரிகள், சதிகாரரின் வாய்கள் எப்படியிருக்குமெனச் செய்த ஆய்வுகளை அவனுடன் பேசியதும் து}க்கி வீசினேன்..
அவனுடைய கடையில் ஒரு சோடா வாங்கிக் குடித்தேன்.. விடைபெற்றேன்... வாசல்வரை வந்து வழியனுப்பினான்...
அவன் சொண்டில் குதறி ஓடும் மிடுக்கான சிரிப்பும், கசியும் உமிழ் நீரும் விமல்ல அமுதம்தான்... உறுதியாக முடிவு செய்தேன்...
அடுத்த வாரம்தான் அது நடந்தது...
அவனுடைய கடையில் ஒரே கூட்டமாக இருந்தது. ஓடோடிப் போனேன்.. அவன் அங்கே வட்டமாகச் சூழ்ந்து நின்ற தமிழ்க் காடையர்களுடன் மோதிக் கொண்டிருந்தான். தாக்குதல் உச்சகட்டமடைகிறது... இவன் சரேலென மடியில் கிடந்த கத்தியை எடுத்து ஒருவனின் வயிற்றைக் கிழிக்கிறான்... குடல் கொட்டுப்பட அந்த ஒருவன் அலறியபடி ஓடுகிறான்... யார் பெத்த பிள்ளையோ வெளிநாடு வந்து இப்படி குத்துவாங்கி ஓடுகிறது...
வீதி முழுவதும் பயங்கர ஒலம்... போலீஸ் வண்டிகள் இலையான் கூட்டம் போல மொய்க்கின்றன... அவன் பாய்ந்து ஓடுகிறான்... போலீஸ் வாகனம் அவனை மடக்கிப் பிடிக்கிறது..
ஏன்... என்ன நடந்தது ? சுற்றி நின்ற யாருக்கும் தெரியவில்லை...
தமிழ் திரைப்படங்களில் வரும் கதாநாயகர்கள் போல இவனும் நீதிக்காகப் போராடுகிறானா ? இருந்தாலும் கத்தியால் குத்தலாமா ? ஐரோப்பா வந்து இப்படி இரத்தம் சிந்துகிறார்களே... ஒரு வேளை அவன் கத்தியால் குத்தியிருக்காவிட்டால் அந்தக் கூட்டத்தின் தாக்குதலில் இருந்து தப்பியிருக்க முடியாது...
கத்தி எடுத்தாலும் ஏனோ இப்போதும் மனதில் அவனே உயர்ந்து நின்றான்...
வீடு வந்து சேர்ந்தேன்...
கதவோரமாக கடிதங்கள் தாமதமாக வந்து கொட்டுப்பட்டுக் கிடந்தன...
ஊர்க்கடிதங்கள்... காசு கேட்டுக் கடிதங்கள்... ஒவ்வொன்றாகப் படித்து கடைசியாக வேண்டா வெறுப்புடன் வங்கியில் இருந்து வந்த கடிதத்தைப் பிரித்தேன்..
மூன்று மாதச் சம்பளம் வங்கியில் முன்பணமாக கடனாகத் தருகிறார்கள். அதை எடுத்துத்தான் எத்தனையோ காரியங்கள் செய்ய வேண்டும். ஊருக்குப் புறப்பட வேண்டும். ஊர் போனால் பார்க்கப் போகும் வீடெல்லாம் பணம் கொடுக்க வேண்டிய கலாச்சாரத்தை உருவாக்கிவிட்டார்கள்... மூன்று மாதச் சம்பளம் போதாது... போதாது...
மனைவி பிள்ளைகளைப் பார்க்க வேண்டும். பணம் கேட்டு வந்த கடிதங்களில் ஏதாவது ஒன்றுக்காவது கொடுக்க வேண்டும். வங்கிக் கடிதத்தை உடைத்து வரவைப் பார்த்தேன்..
மனம் திக்கென்றது....
மூன்றுமாத சம்பளப் பணம் 40.000 மும் போய் இருபதாயிரம் மைனஸ் என்றும் எழுதியிருந்தது... திங்களுக்குள் பாக்கியைக் கட்டாவிட்டால் வங்கிக் கணக்கை நிறுத்திவிடுவதாக எழுதியிருந்தார்கள்.
எங்கே எனது பணம்... ? யார் எடுத்தார்கள் ? கடுமையாக யோசித்தேன்... நான் எனது வீசாக்கார்ட்டை யாரிடமும் கொடுக்கவில்லையே என்ன நடந்தது ? தடுமாறினேன். மூளையில் ஒரு மின்னல் வெட்டு...
ஒரு கொக்கோகோலா போத்தல் தலைக்குள் ஓடியது...
அவனுடைய கடைக்குப் போனபோது சோடா வேண்டுவதற்காக ஒருதடவை அந்தக் கிரடிட் கார்ட்டை இழுத்தது நினைவிற்கு வந்தது...
அடப்பாவி இப்படி ஏமாற்றிவிட்டானே....
அவனை அடித்தவர்களும் இப்படித்தானா ஏமாற்றப்பட்டார்கள் ?
துடித்துப் பதைத்து.. மலாரடித்து... வீதியில் இறங்கி ஓடுகிறேன்...
அவன் வாய் கண்ணுக்குள் சுழன
|
|
|
| திருமணம் : சில அனுபவங்கள் |
|
Posted by: Vaanampaadi - 01-01-2006, 09:27 PM - Forum: தத்துவம் (மெய்யியல்)
- Replies (46)
|
 |
திருமணம் : சில அனுபவங்கள்
நான் என் மனைவியிடம் ஆண்டுக் கணக்காகப் பேசுவதில்லை. அவள் பேசும்போது நான் குறுக்கிடுவதில்லை.
-ரோட்னி டேஞ்சர்ஃபீல்டு
இரண்டு மனைவியருடனும் எனக்குத் துரதிருஷ்டம்தான். முதலாமவள் விலகிவிட்டாள். இரண்டாமவளோ கூடவே இருக்கிறாள்.
-பாட்ரிக் முர்ரே
மகிழ்ச்சியான மணவாழ்வை விரும்பும் கணவன், தன் வாயை மூடவும் காசோலைப் புத்தகத்தைத் திறந்துவைக்கவும் கற்கவேண்டும்.
-கிரௌச்சோ மார்க்ஸ்
தன் எதிரியுடன் உறங்கும் யுத்தம், திருமணம் மட்டுமே.
-யாரோ
திருமணத்துக்குப் பிறகு, கணவனும் மனைவியும் ஒரு நாணயத்தின் இரு பக்கங்கள் ஆகிறார்கள். அவர்கள் ஒருவரையொருவர் சந்திப்பதில்லை. ஆனால், சேர்ந்தேவசிக்கிறார்கள்.
- ஹேமந்த் ஜோஷி
எப்படியானாலும் திருமணம் புரிந்து கொள். நல்ல மனைவி கிடைத்தால் மகிழ்வாய். அப்படியில்லாவிடில் தத்துவஞானி ஆகிவிடு வாய்.
- சாக்ரடீஸ்
என்னால் பதில் அளிக்கவே முடியாத ஒரு மாபெரும் கேள்வி. ""ஒரு பெண் விரும்புவது என்ன?''
-புரூட்
கடவுள், மனிதனிடம் நெருப்பை அளித்தார். மனிதன், தீயணைக்கும் கருவியைக் கண்டுபிடித்தான். அவர், காதலை அளித்தார். அவன், திருமணத்தைக் கண்டுபிடித்தான்.
-யாரோ
என் மனைவிக்காகச் சில சொற்கள் என்னிடம் உண்டு. எனக்காக என் மனைவியிடம் சில பத்திகள் உண்டு.
-யாரோ
நான் தீவிரவாதத்தைப் பற்றிக் கவலைப்படுவதில்லை. எனக்குத் திருமணமாகி இரண்டு ஆண்டுகள் ஆகிவிட்டன.
-சாம் கினிசன்
மின்னணு வங்கியைவிட மிக வேகமாகப் பணத்தைப் பரிமாற்ற ஒரு வழி உண்டு. அதன் பெயர், திருமணம்.
-ஜேம்ஸ் ஷோல்ட் மெக்காவ்ரன்
ஒரு வெற்றிகரமான திருமணத்தின் ரகசியம், அதிக நேரம் வீட்டில் இல்லாதிருப்பதே.
-காலின் சாப்மன்
|
|
|
| 102 குடும்பங்கள் யாழ்ப்பாணத்தைவிட்டு |
|
Posted by: iruvizhi - 01-01-2006, 09:07 PM - Forum: செய்திகள் : தமிழீழம்
- Replies (110)
|
 |
102 குடும்பங்கள் யாழ்ப்பாணத்தைவிட்டு முகமாலைஊடாக பாதுகாப்பான இடங்களை டென்றடைந்துள்ளனர். இன்னும் பல குடும்பங்கள் இராணுவ அடக்கு முறைகளிலிருந்து தம்மை பாது காத்துக் கொள்வதற்காய் பாதுகாப்பான இடங்களை சென்றடய உள்ளனர் என செய்திகள் தெரிவிக்கின்றன.
|
|
|
| மகாத்மாவுக்கு ஒரு மனிதனின் அஞ்சலி |
|
Posted by: Vaanampaadi - 01-01-2006, 08:31 PM - Forum: கவிதை/பாடல்
- No Replies
|
 |
மகாத்மாவுக்கு ஒரு மனிதனின் அஞ்சலி.
மகானே!
மீண்டும் பிறந்து வா!
குண்டுகளுக்கும்
தோட்டாகளுக்கும் பயப்படாதவன் நீ!
ஆகையால்
மீண்டும் பிறந்து வா!
தலைவனை இழந்து துயரப்படும்
குழந்தைகள் நாங்கள்!
'இன்று' எங்களுக்கு
எல்லாவற்றையும் கற்றுத்தருகிறது
அம்மை அப்பனை
முதியோர் இல்லத்தில் சேர்க்க!
சகோதரனை சொத்துக்காக
ஹர சம்ஹாரம் செய்ய!
மனைவியை மந்தையாக்க!
எதிரிகளை முதுகில் குத்த!
என எல்லாவற்றையும்
இன்றைய இன்று எங்களுக்குக் கற்றுத்தருகிறது.
விலைமகளிடம் போய்விட்டு
விலை போகாமல் வந்தவன் நீ!
இன்று விலைமகளிடம் போய்விட்டு
விலைகொடுத்து வாங்கி வருகிறோம் நாங்கள்!
காலத்தைப் பார்த்தாயா மகானே!
வா! வந்து படித்த சிலருக்கேனும்
வாழும் வகையைச் சொல்லிவிட்டுப்போ!
ஏனெனில்
இவர்களெல்லாம்
ராமாயாணத்தையும் படித்துவிட்டு
கோயிலையும் இடிக்கிறார்கள்!
குரானையும் படித்துவிட்டு
குண்டும் வைக்கிறார்கள்!
மீண்டும் வா!
இன்னொரு கோட்சே எங்காவது இருப்பான்!
அவனிடம்இம்முறை என் முறை சாக என்கிறேன்!
பயப்படாமல் வா!
உனது தோளுக்கு காவலாகவும்
கொள்கைக்கு கோட்டையாகவும்
இன்று நானும் இருக்கிறேன்.
எம்.கே.
|
|
|
|