Welcome, Guest
You have to register before you can post on our site.

Username
  

Password
  





Search Forums

(Advanced Search)

Forum Statistics
» Members: 8,982
» Latest member: lucilegr4
» Forum threads: 9,058
» Forum posts: 83,244

Full Statistics

Online Users
There are currently 378 online users.
» 0 Member(s) | 375 Guest(s)
Applebot, Bing, Google

Latest Threads
±ôÀÊ ÀÈ¢ì¸Ä¡õ
Forum: நகைச்சுவை
Last Post: UsArgum
01-10-2026, 09:07 AM
» Replies: 28
» Views: 10,284
Mrs.Sirimao Bandaranayake
Forum: நகைச்சுவை
Last Post: GeraTep
11-14-2025, 10:46 AM
» Replies: 14
» Views: 3,227
Farty time
Forum: நகைச்சுவை
Last Post: ㄹㅈㄷㄹㅈ
08-26-2025, 03:48 PM
» Replies: 11
» Views: 5,603
கனவே கலைகிறதே
Forum: பொழுதுபோக்கு
Last Post: KULAKADDAN
04-30-2006, 06:37 PM
» Replies: 0
» Views: 6,287
Karuna Cadres were captur...
Forum: பிறமொழி ஆக்கங்கள்
Last Post: ஜெயதேவன்
04-30-2006, 06:17 PM
» Replies: 4
» Views: 8,619
என்ன நடந்தது யாழிற்கு?
Forum: உங்கள் கருத்துக்கள்
Last Post: ஜெயதேவன்
04-30-2006, 06:03 PM
» Replies: 42
» Views: 31,045
முடியுமானால் முயற்ச்சியுங...
Forum: போட்டிகள்
Last Post: Subiththiran
04-30-2006, 05:00 PM
» Replies: 15
» Views: 14,455
**சுடேக்கு** புதிர் விளைய...
Forum: போட்டிகள்
Last Post: kavithaa
04-30-2006, 04:30 PM
» Replies: 63
» Views: 38,468
புல்மோட்டையில் தாக்குதல்
Forum: செய்திகள் : தமிழீழம்
Last Post: Sriramanan
04-30-2006, 04:10 PM
» Replies: 2
» Views: 8,021
போதனை வேண்டாம்! பு...
Forum: செய்திகள் : தமிழீழம்
Last Post: alika
04-30-2006, 03:13 PM
» Replies: 4
» Views: 6,238

 
  சென்றுவரும் தொலைவுதான் விண்வெளியும்
Posted by: adsharan - 01-28-2006, 10:57 AM - Forum: விஞ்ஞானம் - தொழில்நுட்பம் - No Replies

விண்வெளிக்கு எல்லோரும் சுற்றுலாவாகச் சென்றுவர முடியுமா? காலம் தான் முடிவு செய்ய வேண்டும். ஆனால், அதற்கும் ஆயத்தமாகிக் கொண்டிருக்கிறது அமெரிக்கா.
விண்வெளிச் சுற்றுலாவுக்கான உத்தேச விதிகளை (120 பக்கங்களுக்கும் அதிகம்) அண்மையில் அமெரிக்கா அறிவித்துள்ளது.
இவ்விதிகளில் பயணிகளின் உடல் - மருத்துவத் தகுதிகள் விண்வெளிப் பயணத்துக்கு முந்தைய பயிற்சி உள்ளிட்ட விடயங்கள் இடம்பெற்றிருக்கின்றன.
தகுதி, சுற்றுலா பயணிகளின் பயிற்சிக்கான தேவைகள், கட்டாயப் பயிற்சி, விண்வெளிப் பயணப் பங்கேற்பாளர்கள் (பயணிகள்) வழங்க வேண்டிய ஒப்புதல் பற்றிய விபரங்களையும் இவை தெரிவிக்கின்றன.
எனினும், `விண்வெளி வாகனங்கள்' பற்றிய விபரங்கள் எதுவும் குறிப்பிடப்படவில்லை.
அதிக அளவு அரசின் தலையீடு இல்லாமல் `விண்வெளித் தொழில்' செழித்து வளர உதவும் வகையில் இது தொடர்பான சட்டத்தில் ஓராண்டுக்கு முன் அதிபர் புஷ் கையெழுத்திட்டார்.
வணிக ரீதியாக மனிதர்கள் விண்வெளிக்குச் சென்று வருவதை முறைப்படுத்துவதற்காக `விண்வெளிப் பயண நிறுவனம்' (எப்.ஏ.ஏ.) ஒன்றும் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
விண்வெளிப் பயண விமானிகளின் தகுதிகள், விண்வெளிப் பயணப் பங்கேற்பாளர்களின் ஒப்புதல் தொடர்பான முதல் தொகுதி விதிகள் எதிர்வரும் ஜூன் மாதத்தில் நடைமுறைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தப் பயணத்திலுள்ள ஆபத்துகள் பற்றி பங்கேற்பாளர்களுக்குத் தெரிவிக்கப்பட வேண்டும் என்று அமெரிக்க பாராளுமன்றம் குறிப்பிட்டுள்ளது.
எல்லா ஆபத்துகள் பற்றியும் எங்களுக்குத் தெரியும் என பங்கேற்பாளர்கள் எழுத்துமூல ஒப்புதல் தந்திருக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தேவை என்று கருதும்பட்சத்தில், பங்கேற்பாளர்களுக்கு உடல் தகுதித் தேர்வும் அவசியமாகிறது.
தீ, புகை, அறையில் காற்றழுத்தக் குறைவு உட்பட அவசர காலங்களில் எவ்வாறு செயல்படுவது? `வாகன'த்திலிருந்து பாதுகாப்பாக எவ்வாறு வெளியே வருவது? என்பது பற்றியும் பங்கேற்பாளர்களுக்குப் பயிற்றுவிக்கப்பட வேண்டும்.
மேலும், சுற்றுலா வாகனத்தைச் செலுத்தப் போகும் பைலட்டுகளும் எப்.ஏ.ஏ. பைலட் சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும். பிற வகை பைலட் சான்றிதழ்கள் போதுமானவையல்ல என்றெல்லாம் தெரிவிக்கிறது இந்த உத்தேச விதிகள்.
இந்த 123 பக்க உத்தேச விதிகள் யாவும் மக்கள் கருத்தறிவதற்காக அமெரிக்க அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளன. இரு மாதங்கள் (பெப். 27) வரை மக்கள் கருத்துக் கூறலாம். இறுதி செய்யப்பட்ட விதிகள் ஜூன் 23 இல் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
2001 இல் உலகின் முதல் விண்வெளிச் சுற்றுலாப் பயணியாக கலிபோர்னியாவைச் சேர்ந்த வணிகரான டென்னிஸ் டிட்டோ என்பவர் ரஷ்யாவின் சோயுஸ் விண்கலத்திலேறி சர்வதேச விண்வெளி நிலையம் (ஐ.எஸ்.எஸ்.) சென்று வந்தார்.
அடுத்து ஓராண்டுக்குப் பின் தென் ஆபிரிக்காவைச் சேர்ந்த இணையத்தள விற்பன்னரான மார்க் ஷட்டில்வொர்த் என்பவரும் இதேபோல விண்வெளிக்குச் சென்றுவந்தார்.
2004 இல் பர்ட் ரூட்டன் தன்னுடைய `ஸ்பேஸ் ஒன்ஷிப்' பில் 5 நாட்களில் இரு முறை விண்வெளியைத் தொட்டு வந்தார். அதற்குச் சில மாதங்கள் முன் ஸ்பேஸ்ஒன்ஷிப்-ஐ விண்வெளிக்குச் செலுத்திச் சென்றுவந்ததன் மூலம் விண்வெளிக்கு வாகனத்தைச் செலுத்திய முதல் வெகு மக்களில் ஒருவரானார் மைக் மெல்வில்.
இரு மாதங்களுக்கு முன் மூன்றாவது விண்வெளிச் சுற்றுலா பயணியாக அமெரிக்காவைச் சேர்ந்த தொழிலதிபரான கிரேக் வோல்சன் சோயுஸ் கலத்திலேறி சர்வதேச விண்வெளி நிலையம் சென்று வந்திருக்கிறார்.
இன்னும் சில பத்தாண்டுகளில் அல்லது சில ஆண்டுகளில் காசி- இராமேஸ்வரம் போல அல்லது டில்லி, மும்பை, லண்டன், நியூயோர்க் சென்று வருவதைப் போல விண்வெளிக்கு - வேறு கோள்களுக்கு, நிலவுக்கு, குறைந்தபட்சம் சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு நாமும் சென்று வரலாம்!
http://www.thinakural.com/New%20web%20site...8/Article-2.htm

Print this item

  உங்களை சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி
Posted by: putthan - 01-28-2006, 09:53 AM - Forum: அறிமுகம் - Replies (50)

வணக்கம் உங்களை சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி

Print this item

  கொக்கட்டிச்சோலை படுகொலையின் 19வது ஆண்டு நினைவு தினம்
Posted by: மேகநாதன் - 01-28-2006, 05:15 AM - Forum: துயர்பகிர்வு / நினைவுகூரல் - Replies (1)

[size=18]<b>கொக்கட்டிச்சோலை படுகொலையின் 19வது ஆண்டு நினைவு தினம் இன்று </b>

கொக்கட்டிச்சோலை பிரதேசத்தில் அமைந்திருந்த இறால் பண்ணையில் கடந்த 1987ம் ஆண்டு சிறிலங்கா இராணுவத்தால் மேற்;கொள்ளப்பட்ட படுகொலையில் உயிர் நீத்த 86 பொதுமக்களின் 19ஆவது ஆண்டு நினைவு நிகழ்வு

<b><i>தகவல் மூலம்- ஈழநாதம்-மட்டக்களப்பு பதிப்பு</i></b>

Print this item

  கபிலனுக்கு எமது வீர வணக்கங்கள்
Posted by: iruvizhi - 01-28-2006, 02:35 AM - Forum: துயர்பகிர்வு / நினைவுகூரல் - Replies (18)

<img src='http://img55.imageshack.us/img55/3932/ba270105021gt.jpg' border='0' alt='user posted image'>
படம்: தமிழ்நெற்

அரசியல் போராளி கபிலன் அவர்களுக்கு எமது வீர வணக்கங்கள்

<b>தாகம் ஒன்றே ஈழமென்று
பாசத்தோடு ஈழம் காத்த பைந்தமிழனே!
எம் தேசம் பெற்றெடுத்த கபிலனே!

ஈழமெங்கணும் உந்தனின்
இறுதி ஊர்வலம்.
தமிழன் மனங்களெங்கணும்
உன் பிரிவினால் ரணம்.

நாயின் வாலை நிமித்த முடியுமோ?
சிங்களக் கூலிகளை உலகத்தால் திருத்த முடியுமோ?
பலவேடம் போடுறார் மகிந்த ராசபக்செ.
பாவம் தமிழன் உயிர்தான் பாடையில் போகுதிங்கே.
சமாதானமென்று சொல்லி வாய் மூட முன்னே
சதியாட்டம் தொடர்கிறது மீண்டுமிங்கே.

தேசியத்தலைவரின் கருணையினால்
சிங்களச்சிப்பாய் விடுதல்லை.
காள்புணர்வு கொண்ட சிங்களக்கூலிகளால்
ஈழத்தின் காவலன் கபிலனினுக்கு உயிக்கொலை.

ஊமையாய் இருக்கவோ நாங்கள்?
உண்மையை உலகிற்கு முழங்குவோம் வாருங்கள்.

எங்கள் கபிலனின் இலட்சியங்கள் எய்துமட்டும்
விழித்திரு ஞாலம். விடிந்திட ஈழம்
எனமுழங்குவோம் வாரீர் விடியலை
நோக்கும் வீர மறவர்களே!!</b>

Print this item

  அப்பம் தயாரிக்கும் முறை தேவைபடுகிறது
Posted by: தூயா - 01-28-2006, 12:43 AM - Forum: சமையல் - Replies (37)

அப்பம் தயாரிக்கும் முறை தேவைபடுகிறது. நீங்கள் செய்யும் முறையை தந்து உதவ முடியுமா? ? <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->

Print this item

  ரவா தோசை
Posted by: தூயா - 01-28-2006, 12:31 AM - Forum: சமையல் - Replies (2)

[size=14]ரவா தோசை

தேவையான பொருற்கள்:

ரவை - 1/2 கப்
அரிசி மா - 1 கப்
கோதுமை மா - 1 கப்
பச்சை மிளகாய் - 4
இஞ்சி அரைத்தது - 1/2 மேசை கரண்டி
துருவிய தேங்காய் - 1/4 கப்
சிறிதாக நறுக்கிய வெங்காயம் - 1
உப்பு தேவைக்கு ஏற்ற போடுங்க,போடம விடுங்க..அது உங்கட இஸ்டம் <!--emo&Wink--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/wink.gif' border='0' valign='absmiddle' alt='wink.gif'><!--endemo-->

செய்முறை:

1. மேலே குறீய மாவகைகள் அனைத்தையும் ஒன்றாக போட்டு நீரில் குழைத்து 8 மணித்தியாலங்கள் வைக்கவும்.

(நாங்க தனிய இருக்கிறம், வேலை இதில என்னத்த 8 மணித்தியாலம் என்று புலம்பும் சகோதரங்களே - புளிப்பு தன்மை உடைய பட்டர் மில்க் போட்டு குழைத்தால் 2 மணித்தியாலங்கள் வைத்தால் போதும்)

2. மீதி உள்ள பொருட்களை இப்ப நன்றாக மா கலவையுடன் கலவுங்கள்.

3. இப்ப தோசை மா தயார்...தோசை சுட தெரியும் தானே <!--emo&Wink--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/wink.gif' border='0' valign='absmiddle' alt='wink.gif'><!--endemo-->

-நல்லா சாப்பிட்டுட்டு யாழில வந்து கருத்தாடுங்கள்-

Print this item

  பேச்சை சாத்தியமாக்கப் போகும் தமிழீழத்தின் சுமூகநிலை
Posted by: yarlmohan - 01-28-2006, 12:25 AM - Forum: தமிழீழம் - No Replies

<img src='http://www.yarl.com/forum/files/20060128aE004100011.gif' border='0' alt='user posted image'>

நன்றி: வீரகேசரி

Print this item

  மலரின் மகிமை
Posted by: Rasikai - 01-28-2006, 12:06 AM - Forum: மருத்துவம் - Replies (7)

<b>மலரின் மகிமை

சில மலர்களின் மருத்துவ குணங்கள் பற்றி அறிந்த நமக்கு,
தற்செயலாக ஒரு மருத்துவ இதழ் மூலம் நிறைய மலர்களின் மகத்துவம் தெரிய வந்தது.

முருங்கைப்பூ: பித்தம் நீக்கும். வாந்தி குணமாகும். கண்கள் குளிர்ச்சி அடையும். காம உணர்வு அதிகமாக்கும்.

செந்தாழம்பூ: தலைவலி தீரும். கபம், ஜலதோசம், வாத நோய் ஆகியவை அகலும். உடலுக்கு அழகு அளிக்கும்.

செவ்வகந்திப்பூ: உடற்சுடு, மூக்கிலிருந்து இரத்தம் வடிதல் போன்ற நோய்களை குணமாக்கும்.

அகத்திப்பூ: பீடி,சிகரெட், சுருட்டு, உக்கா போன்றவற்றை பிடிப்பதால் ஏற்படுகின்ற விச சூட்டையும், பித்தத்தையும், வெயிலினால் உண்டாகும் சூட்டையும் நீக்கும்.

வாகைப்பூ: கசப்பு சுவையுடைய இப்பூவினால் உண்டாகும் சுட்டையும் நீக்கும்.

இலுப்பைப்பூ:நல்ல சுவையுடைய இப்பூவினால் பாம்பு விஷம், வாத நோய் குணமாகும்.புளியம்பூ : மலையை சார்ந்த காட்டில் முளைக்கும் இப்பூவினால் பித்த நோய், சுவையின்மை வாந்தி ஆகியவை தீரும்.

மாதுளம்பூ. அனல் பித்தம், ஏப்பம், வாந்தி, இரத்த மூலம் ஆகிய நோய் நீங்கும்.இரத்தம் மிகுதியாகும்.உடலுக்கு ஊட்டம் அளிக்கும்.

வேப்பம்பூ: நாட்பட்ட பூவினால் ஏப்பம்,சுவையின்மை, மலப்புழுக்கள்,நாக்கு நோய்கள் ஜன்னி ஆகிய நோய்கள் தீரும்.

பனம்பூ: பல் நோய், சிறுகட்டு, வாத குன்மம்,நாட்பட்ட சுரம் ஆகியவை தீரும்.

முள்முருக்கம்பூ: சூதக கட்டு [மாத விலக்கு தடை ] நீங்கும்.

வாழைப்பூ. சீதபேதி, இரத்தமூலம், பால்வினை நோய், வெள்ளைப்பாடு, இருமல், உடற்சூடு, கைகால் எரிச்சல் ஆகியவை குணமாகும்.விந்து விருத்தியாகும்.

தென்னம்பூ: பால்வினை நோய்,வெள்ளை ஒழுக்கு, உடலில் உள் கொதிப்பு,இரத்த போக்கு, விஷக்கடி நோய்கள் நீங்கும் குருக்கத்திப்பு. கசப்பும்,இனிப்பும் சுவையுள்ள இப்பூவினால்,தலைநோய்,தாகம்,கபம்,புண், பித்தம்,பல்வகை விஷக்கடி ஆகியவை குணமாக்கும்.அழகுக்காவும், ஆராதனைக்காவும் மட்டுமே பூக்கள் என்று பலர் நினைக்கிறார்கள். பச்சிலைப் போல பூக்களும் நோய் நீக்கும் மருந்துகளாக ஆயுர்வேதத்திலும் யுனானி வைத்தியதிலும் சிறப்பான இடத்தைப் பெற்றிருக்கிறது.

பொதுவாக நம் பெண்கள் கூந்தலில் நிறைய மலர்களை சூடிக்கொள்வதைக் காணலாம். இது பெண்களுக்கு அழகை தந்தாலும், அதிலும் ஒரு மகத்துவம் அடங்கியுள்ளது. இன்று விஞ்ஞானம் கண்டதை,அன்று மெய்யானம் நடைமுறைப்படுத்தியது.

இன்று பெண்கள் தலைக் குளித்தால் கூந்தலை மின்காந்த சுட்டிலில் உலர வைக்கிறார்கள். இந்த மின்காந்தம் கூந்தலை உதிரிவைப்பதுடன், மூளையையும் நாளடையில் பதிப்புர செய்கிறது.[மூளையின் அணுக்களை மெல்ல,மெல்லச் சாகடிக்கிறது]

மலருக்கு இயற்கையான ஒரு தன்மையுண்டு. பஞ்சினைப் போல் ஈரத்தை உறிஞ்சும் தன்மையுண்டு. கூந்தலில் நிறைய மலர்களை சூடும்போது, கூந்தலிளுள்ள ஈரத்தினை ஈர்த்துவிடுகிறது.அதோடு கூந்தலுக்கு அழகையும் தருகிறது.

[இப்போது ஆறு அடி கூந்தல் மறைந்து, 6"[ஆறு அங்குலக் கூந்தலாகிவிட்டது. அதற்க்கேற்றாற் போல் 6" மலர் சரம் தொங்குவதைக் கண்டு மகிழதான் வேண்டும்] மணப்பெண்ணுக்கும், ஆடவரை மயக்க நினைக்க பெண்ணுக்கும் மல்லிகை ஒரு வரப்பிரசாதம். மல்லிகை மணம் பட்டாலே மன்மதனும் மயங்கி விடுவானே! நமது சமயத்தின் பண்பாட்டின்அன்றாட வாழ்க்கையில்,ஆடைஅணிகளில், வாழ்க்கைமுறைகளில் நாம் இயற்க்கையோடு இயந்துத்தான் வாழ்கிறோம்,

மல்லிகை பூ: இல்லறதில் ஆர்வமுண்டாக்கும். கபம், கண் மயக்கம், உடற்சூடு, குறையும். உடலுக்கு சூட்டை அளிக்கும்.அதிகப் பால்சுரப்பால் அவதியுரும் பெண்கள் இப்பூவை மார்பில் மூன்று நாட்கள் கட்டி வந்தால் பால்சுரப்பு குறையும். பன்னீர் பூ: வாந்தி, நாக்கில் சுவையின்மை, விந்துவிரையம், தண்ணீர் தாகம், உடற்சூடு ஆகியவை தீரும்.

மந்தார்ப்பூ: உடல் கொதிப்பு நீங்கும். கண்கள் குளிச்சியடையும்.உடலும் குளிச்சியடையும்.

மகிழம்பூ: இதனை முகர வாந்தி நிற்கும்.உடலிலுள்ள அனல் நீங்கும். புணர்ச்சியின் மீது ஆசையுண்டாகும்.

புன்னைப்பூ: கரப்பான்,சொறி,சிறங்கு, பால்வினைநோய் ஆகியவை நீங்கும்.
ஆனால், பித்த மயக்கம் ஏற்படும்.

பாதிரிப்பூ: பித்த சுரம் நீங்கும்.வெள்ளை போக்கு நிற்கும்.

பச்சைக் குங்குமப்பூ: மூக்கடைப்பு ஜலதோஷம், காது நோய், கப-பித்த நோய்கள் நீங்கும்

சண்பகப்பூ: வாத பித்த நோய், எலும்பு காய்ச்சல், பால்வினை நோய், விந்துவிரையம் ஆகியவை தீரும். வாசனை மனமகிழ்ச்சியினை உண்டாக்கும்.இந்தப் பூக்களை நல்லெண்ணெய் விட்டுப் பிசைந்து நெற்றியில் பற்றுப் போட்டால் தலைவலி, நீங்கும்

கொன்றைப்பூ: சர்க்கரை நோய், குடல்வலி, மலப்புழுக்கள் யாவும் ஒழியும். காட்டாத்திப்பூ: சீதபேதி, இரத்த பேதி,பால்வினை நோய் குணமாகும். செடியின் மலர் வகை.தும்பைப்பூ; தாகம்,கண் நோய்கள், ஜன்னி பாத சுரம் யாவும் தீரும்.

கருஞ்செம்பைப்பூ: கபநோய்,மூக்கடைப்பு, தலைவலி,வாத நோய் போன்றவைகள் குணமாகும்.

செம்பருத்தி பூ: வெட்டைச் சூடு நீங்கத் தினமும் காலையில் வெறும் வயிற்றில் சுத்தம் செய்யப்பட்ட பூவைச் சாப்பிட்டு வரலாம். உடலின்

உஷ்ணத்தைத் தக்கும். இதயத்தைபலப்படுத்தும். களாப்பூ: கண்களைத் தாக்கும் கரும்படலம், வெண்படலம்,ரத்தப் படலம்,சதைபடலம் போன்ற கண் நோய்களை அகற்றும்.

அலரிப்பூ: பித்தம்,உடற்சூடு,சொறிசிரங்கு, புண் இரத்தம், தலையில் நமைச்சல் ஆகியவை நீங்கும்.

அகத்திப்பூ: எலும்புகளையும் பற்களையும் வளரச் செய்யும், சுண்ணாம்புச் சத்து அகத்திப்பூவில் அதிகம் இருக்கிறது.fணரண சக்திகும் மலச்சிக்கலை நீக்கவும் உதவும்.இம்மலரை தாரளமாகச் சமைத்துச் சாப்பிடலாம்.

அல்லிப் பூ: நீரிழிவை நீக்கும்.புண்களை ஆற்றும்.வெப்பச் சுட்டால் ஏற்படும் கண் நோய்களைத் தீரும். இதை சர்பத் செய்து சாப்பிடலாம்.

இலுப்பைப் பூ: 'ஆலை இல்லா ஊருக்கு இலுப்பைப் பூ சர்க்கரை' என்று சொல்லப்படுவது இனிப்புத் தன்மையாலேயே! இலுப்பைப் பூவைச் சர்க்கரையுடன் சேர்த்து அரைத்துக் காய்ச்சிய பாலுடன் கலந்து சாப்பிட்டு வந்தால் உடல் வலிகள் குறையும். உடல் களைப்புத் தீரும் இருமல் குறையும்.விரை வீக்கத்திற்கும் இந்த மலரை வதக்கி ஒத்திடம் கொடுக்கலாம்.

கண்டங்கத்திரிப் பூ: மூல நோய்க்கு இந்தப் பூ கைகண்ட மருந்து.வாதுமை நெய்யில்கண்டங் கத்திரிப் பூக்களைப் போட்டுக் காய்ச்சி மூலம் உள்ள இடத்தில் தடவி வர, மூல நோய் குணமாகும்.

குங்குமப் பூ: பலவிதமான நோய்களைப் போக்குவதில் குங்குமப் பூ தன்னிகரற்று திகழ்கிறது.தலைவலி கண் நோய் காதுநோய் சுரம் ஆகிய நோய்களை இந்தப் பூ குணப்படுத்தும்.கர்ப்பிணி பெண்கள் ரோஜா இதழ்களுடன் சாப்பிடலாம்.பசும் பாலிலும் காய்ச்சி பருகலாம்.குடல் புண்களுக்கு இது உதவும்.சிகப்பான குழந்தை பிறக்கும் என்பது மட்டும் உண்மையில்லை.

சம்பங்கிப் பூ: காய்ச்சிய பசும்பாலில் இந்தப் பூவைப் போட்டு சாப்பிட்டு வந்தால் உடல் திடகாத்திரம் பெறும்.

சூரிய காந்திப் பூ: இந்தப் பூவிலுள்ள விதைகளியிலிருந்து எடுக்கப்படும் எண்ணெய் பலம் அளிப்பதுடன் நோய்களுக்கு நன்மையளிக்கும்.

தாழம் பூ. இதில் தைலம் எடுக்கலாம். தலைவலி, வாதவலிக்கு இத்தையலாம் வெகுவாக பயன் அளிக்கும்.

வெள்ளை தாமரைப் பூ. ஈரலில் ஏற்படும் சூடு, ஒவ்வாத மருந்தின் துன்பம், உடலில் உண்டாகிற எரிச்சல் யாவும் தீரும்.

தாமரை பூ. இதயத்திற்க்கு பலமளிக்கும்.உடல் வெப்பத்தை நீக்கித் தாது எரிச்சலை தவிர்த்து இரத்த நாளத்தையும் சீர்செய்கிறது.

நொச்சிப் பூ. இதனை அரைத்துத் தடவி வந்தால் சிரங்குகள் குணமாகும்.

முருங்கைப் பூ. காய்ச்சியப் பாலில் இப் பூவைப் போட்டு தினம் சாப்பிட்டு வந்தால் தாதுப் பலம் ஏற்படும்.

வாழைப் பூ. இதில் சாறு எடுத்து அதனுடன் பனங்கற்கண்டு சேர்த்துப் பருகி வந்தால் பெண்களை வருத்தும் மாதவலி நீங்கும்.

வேப்பம் பூ. இது சிறந்த கிருமி நாசின் வயிற்றுப் பூச்சிக்களை ஒழிக்கும். அடிக்கடி வரும் ஏப்பத்தை நிறுத்தும்.
வயிறு சுத்தமாகவும்,

பித்தம் போக்கவும் தொண்டைப் புண் ஆறவும் காது இரணம் நீங்கவும் இப் பூ கைக்கண்ட மருந்து.

வெங்காயப் பூ. இதைச் சமைத்துச் சாப்பிட்டால் வயிற்று வலி நீங்கும்.

தூதுளம் பூ. உடல் மிக்க பலம் பெறும். வித்து பெருகும். உடல் அழகு பெறும்.

சிங்கை கிருஷ்ணன்
நன்றி எழில்நிலா</b>

Print this item

  இராணுவத்தால் கொல்லப்பட்ட மற்றும் காணாமல் போனோர் விபரங்கள்
Posted by: yarlmohan - 01-27-2006, 11:52 PM - Forum: செய்திகள் : தமிழீழம் - Replies (2)

சமீபத்தில் இராணுவத்தால் கொல்லப்பட்ட மற்றும் காணாமல் போனோர் விபரங்கள் இணைக்கப்பட்டுள்ளது

http://www.yarl.com/arikkai/uploads/270106...mal_ponor_1.pdf
http://www.yarl.com/arikkai/uploads/270106...mal_ponor_2.pdf
http://www.yarl.com/arikkai/uploads/270106...mal_ponor_3.pdf
http://www.yarl.com/arikkai/uploads/270106...da_makkal_1.pdf
http://www.yarl.com/arikkai/uploads/270106...da_makkal_2.pdf
http://www.yarl.com/arikkai/uploads/270106...da_makkal_3.pdf
http://www.yarl.com/arikkai/uploads/270106...da_makkal_4.pdf

Print this item

  கணினி ஓவியம் (digital imaging)
Posted by: இளைஞன் - 01-27-2006, 11:35 PM - Forum: பொழுதுபோக்கு - Replies (34)

இங்கே கீழே இணைக்கப்பட்டுள்ள படங்க கணினி மூலம்
உருவாக்கப்பட்டவை. நிழற்படங்கள் சிலவற்றை பயன்படுத்தி
இவற்றை உருவாக்கியிருக்கிறேன். ஒவ்வொரு digital images
செய்வதற்கும் பயன்படுத்தப்பட்ட படங்களின் எண்ணிக்கை
எவ்வளவாக இருக்கும் என்பதை ஊகித்து சொல்லுங்கள்
பார்ப்போம். இந்த படங்களில் என்ன விடயங்கள்
வெளிப்படுகின்றன? படத்தைப் பார்க்கும் போது என்ன தோன்றுகிறது - உங்கள் கருத்துக்களை சொல்லுங்கள்.

<b>படம் 1:</b>
<img src='http://www.yarl.com/forum/files/palmen_screen_167.jpg' border='0' alt='user posted image'>

<b>படம் 2:</b>
<img src='http://www.yarl.com/forum/files/strand_screen_311.jpg' border='0' alt='user posted image'>

<b>படம் 3:</b>
<img src='http://www.yarl.com/forum/files/luft_screen_587.jpg' border='0' alt='user posted image'>



மேற்கண்ட படங்களுக்கும், என்னால் உருவாக்கப்பட்ட இன்னும் சில படங்களுக்குமான ஈழத்துக் காட்சிப்படங்களை தந்துதவிய மகிழன் அண்ணாவுக்கு (அருச்சுனா இணையத்தளம்) இந்த சந்தர்ப்பத்தில் எனது நன்றிகள். அதேபோல் படங்கள் தேடுவதில் உதவிபுரிந்த குளைக்காட்டானுக்கும், அருவிக்கும் மனமார்ந்த நன்றி. <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->

Print this item