![]() |
|
கணினி ஓவியம் (digital imaging) - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: இளைப்பாறுங் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=8) +--- Forum: பொழுதுபோக்கு (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=37) +--- Thread: கணினி ஓவியம் (digital imaging) (/showthread.php?tid=1158) Pages:
1
2
|
கணினி ஓவியம் (digital imaging) - இளைஞன் - 01-27-2006 இங்கே கீழே இணைக்கப்பட்டுள்ள படங்க கணினி மூலம் உருவாக்கப்பட்டவை. நிழற்படங்கள் சிலவற்றை பயன்படுத்தி இவற்றை உருவாக்கியிருக்கிறேன். ஒவ்வொரு digital images செய்வதற்கும் பயன்படுத்தப்பட்ட படங்களின் எண்ணிக்கை எவ்வளவாக இருக்கும் என்பதை ஊகித்து சொல்லுங்கள் பார்ப்போம். இந்த படங்களில் என்ன விடயங்கள் வெளிப்படுகின்றன? படத்தைப் பார்க்கும் போது என்ன தோன்றுகிறது - உங்கள் கருத்துக்களை சொல்லுங்கள். <b>படம் 1:</b> <img src='http://www.yarl.com/forum/files/palmen_screen_167.jpg' border='0' alt='user posted image'> <b>படம் 2:</b> <img src='http://www.yarl.com/forum/files/strand_screen_311.jpg' border='0' alt='user posted image'> <b>படம் 3:</b> <img src='http://www.yarl.com/forum/files/luft_screen_587.jpg' border='0' alt='user posted image'> மேற்கண்ட படங்களுக்கும், என்னால் உருவாக்கப்பட்ட இன்னும் சில படங்களுக்குமான ஈழத்துக் காட்சிப்படங்களை தந்துதவிய மகிழன் அண்ணாவுக்கு (அருச்சுனா இணையத்தளம்) இந்த சந்தர்ப்பத்தில் எனது நன்றிகள். அதேபோல் படங்கள் தேடுவதில் உதவிபுரிந்த குளைக்காட்டானுக்கும், அருவிக்கும் மனமார்ந்த நன்றி. <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
- ஊமை - 01-27-2006 அற்புதம் இளைஞன் - KULAKADDAN - 01-27-2006 இளைஞன் நன்றாக இருக்கிறது. படங்களை எண்ணி ஆறுதலாக சொல்லுகிறேன். <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->கருத்து: புலம் பெயர் இளைஞனின் புலம் பெயர் வாழ்சூழலையும், தாயகம் சார் வாழ் சூழலையும் ஒப்பு நோக்கல் என்று சொல்லலாமா?? என்னவோ நீங்களே சொல்லிடுங்க பிறகு. - அருவி - 01-28-2006 படங்கள் அட்டகாசமாய் இருக்கு இளைஞன். - Thala - 01-28-2006 படங்கள் 3ம் அருமையாக இருக்கு... முதல்ப்படத்தில 5 படம் வெளிப்படையாத்தெரியுது...! ஆனால் பின்னணி நிறப்படங்கள் எல்லாம் சேர்த்திருந்தால் படங்கள் கூடுதலாக இருக்கும்...! உண்மையில் எத்தினை படங்கள் இளைஞன்..??? <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <b>ஏழு படங்களா..???</b>
- அருவி - 01-28-2006 இளைஞன் கார் நிக்கிற மாதிரி தெரிதே. அது ஓடுதா நிக்குதா. இல்லப்பா கார் சில்லு சுத்துற மாதிரி தெரியல அதுதான் கேட்டன் :wink: :roll: நிக்கிற கார் இப்படி புகை கக்குதா :roll: பிறகு சொல்லக்கூடாது அது ஸ்ராட் பண்ணி நிக்குது எண்டு :twisted: - Thala - 01-28-2006 அருவி Wrote:இளைஞன் கார் நிக்கிற மாதிரி தெரிதே. அது ஓடுதா நிக்குதா. இல்லப்பா கார் சில்லு சுத்துற மாதிரி தெரியல அதுதான் கேட்டன் :wink: :roll: அந்தப் பொம்பிளைப் பிள்ளை போகுது எண்டும் பாக்காமல் இப்பிடித்தண்ணி அடிச்சுக் கொண்டு போறார் போலவும் கிடக்கு... கவனம் பிள்ளை கல்லால எறியமுன்னம் ஓடித்தப்ப வேணும்... :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> - இளைஞன் - 01-28-2006 நன்றி அனைவரது கருத்துக்களுக்கும். குளைக்காட்டான், நீங்கள் சொன்ன கருப்பொருள் சரியானதே. புலம்பெயர்ந்து வாழும் ஈழத்த இளைஞன் ஒருவனின் தாயகம் மீதான மோகம் தான் கருப்பொருள். தல, எத்தனை படங்கள் என்று பின்னர் சொல்கிறேன். ஒவ்வொரு படத்திலம் என்னெ்ன படங்கள் தனிப்படங்கள் என்று சொல்லுங்கள் பார்ப்பம். <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->அருவி, சரியாகக் கவனித்திருக்கிறீர்கள். கார் சில் சுத்துவது போன்று செய்யவில்லை. அதனைக் கவனத்தில் எடுக்கத் தவறிவிட்டேன். நீங்கள் குறிப்பிட்டதை விட வேறு சில லோஜிக் பிழைகளும் இருக்கின்றன. கண்டுபிடியுங்கள் பார்ப்போம். <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> - இளைஞன் - 01-28-2006 Thala Wrote:அருவி Wrote:இளைஞன் கார் நிக்கிற மாதிரி தெரிதே. அது ஓடுதா நிக்குதா. இல்லப்பா கார் சில்லு சுத்துற மாதிரி தெரியல அதுதான் கேட்டன் :wink: :roll: ஆகா, காருக்குள் ஆளே இல்லை அதை கவனிக்கவில்லையா தல? <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> - kuruvikal - 01-28-2006 படம் 1 - இரண்டு பிரதான காலநிலைகளை வலையங்களைப் பிரதிபலிக்கிறது..! இடைவெப்ப வலைய தாவரங்களும் குளிர்காலம்.. மற்றும் மத்தியகோட்டு வெப்பவலையத்துக்குரிய தாவரங்களும் காலநிலையும்...! படம் 2 - ஒருவரின் சிந்தனையில் இருவேறு காலநிலைக்குரிய பொழுதுபோக்கு வழிமுறைகளைச் சொல்வதாக நோக்கலாம். அதாவது பனிச்சறுக்கல்..வின்ரரில்...! அவரே சமரில்..பீச் பற்றியும்...அனுபவங்களை ஒப்பீட்டு ரீதியில சிந்திப்பதாக..! அல்லது வின்ரரில் ஒரு பனிச்சறுக்கலில் ஈடுபடுவரை நோக்கி இன்னொருவர் தனது சமர் பற்றிய எண்ணங்களை மீட்பதாகவும் சொல்லலாம். படம் 3 - நமக்கு மூன்றிலும் படம் 3 மிகப் பிடிச்சிருக்கு.. அழகாக சூழல் (வளி) மாசடைதல் வழி முறைகளையும் அவற்றில் எது ஆதிக்கமானது என்பதையும் சொல்லி...அதன் விளைவுகளையும் சொல்கிறது..! அத்தோடு தொழிற்சாலை மயமாக்கத்தின் பின் முன்னான இயற்கைச் சூழல் மாற்றம் பற்றியும் சொல்வதாக ஒரு பார்வையில் சொல்ல முடியும்... இன்னொரு பார்வையில் கிராமியச் சூழலில் பசுமைக்குள் உள்ளவர் கைத்தொழில்புரட்சி நோக்கி பயணிக்கும் போது காணும் மாற்றங்கள் மற்றும் அவை தரும் விளைவுகள் பற்றி சொல்வதாகவும் நோக்கலாம்..! படம் 1 இல் - குறைந்தது 4 படங்கள் படம் 2 இல் - குறைந்தது 2 படங்கள் படம் 3 இல் - குறைந்தது 7 படங்கள்..! - Thala - 01-28-2006 இளைஞன் Wrote:அருவி, சரியாகக் கவனித்திருக்கிறீர்கள். கார் சில் சுத்துவது போன்று செய்யவில்லை. அதனைக் கவனத்தில் எடுக்கத் தவறிவிட்டேன். நீங்கள் குறிப்பிட்டதை விட வேறு சில லோஜிக் பிழைகளும் இருக்கின்றன. கண்டுபிடியுங்கள் பார்ப்போம். <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> நானும் சொல்லுறன்...! <ul>சக்கரம் சுத்தவில்லை சரி.........! அதோடு கார் சக்கரம் போன அடையாளம் புல்மீது இல்லை... கார் ஒரு பக்கம் சரிந்ததுபோல ஒரு நிலை எடுத்து இருக்கு (வில்லுத்தகடு உடைஞ்சிட்டுதோ தெரியல ) :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> மேகம் கறுத்திருக்கும் போது தெளிவான பளீர் எண்ற பச்சை நிறத்திலான புல் வெளி... அனேகமாய் கரும் பச்சையாக இருக்க வேண்டும்... சுத்தாமலே தண்ணீரை வாரியடிக்கும் சக்கரம்... ( எதோ றோபோ கார் போல கிடக்கு)... <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> அப்படிக் சீரூந்து தண்ணீருக்குள்ளால் ஓடினால் கலங்காத தண்ணீர்...<ul> தண்ணீரின் பிரதிபலிப்பு தலைப்புக்கு சம்பந்தமாய் இருப்பதால் அது சரியானதே.... <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- தூயவன் - 01-28-2006 இப்படங்கள் இயற்கைத் தன்மையை எதிர்பார்த்து வரையப்பட்டிருக்கவில்லை என நினைக்கின்றேன். அப்படியாயின் பருவகாலங்களின் இணைப்புக்கள் முரண்பட்டவையாக காட்டப்பட்டிருக்காது. எனவே இது தவறுகளாக கொள்ள வேண்டியதில்லை. வாழ்த்துக்கள் இளைஞன். சிறப்பான இணைப்பிற்கு. - வர்ணன் - 01-28-2006 முதலாவது படத்தில் 7 இமேஜ் எண்டு நினைக்கிறன்! பின்னணி- ஐரோப்பிய-ஹைவே போல இருப்பது 1 கார்-கண்ணாடி-2 அதில் தெரியும் காரின் விம்பம்-3 அதுக்கு மேல சாம்பல் கலர் ஸ்பிரே-4 அதுக்கு மேல உள்ள பள்ளம் திட்டு போல் உள்ளது-5 பனைமரங்கள்-6 அதனோடு சேர்ந்த மண்தரை-7 2 வது படத்தில 5 இமேஜ் - ---------------------------- பனியில அவர் சறுக்கி வாறது 1 -மனிதமுகம்-2!!! அவர் அணிந்து இருக்கும் மூக்கு கண்ணாடி-3 !! அதில் தெரியும் காட்சி-4!!! அதுக்கு மேல பெயின்ரிங் ல போய்- வெள்ளை நிறத்தால ஸ்பிரே பண்ணி இருக்கு-5!!! 3 வது படத்தில 7--இமேஜ் ---------------------------- தொழிற்சாலைகள்-1 பின்னால தெரியுற மேகம்- 2 கார் விடுற புகைல இருந்து - தொழிற்சாலை விடுற புகையையும் அதே மாதிரி செய்திருக்கிங்க- போதா குறைக்கு புகை விடுற குழாய்க்கு மேலயும்- புகை கலர் அடிச்சு இருக்கிங்க- :wink: அது- 3!! கார்- 4!! ஈழத்து பட நிழல் - 5!! அதுக்கு மேல வெள்ளை ஸ்பிரே பண்ணி இருக்கிங்க அது-6!! 7-புல்தரை!! ஒரு கணிப்புதான் செய்தன் - விடையை சீக்கிரமா சொல்லிடுங்க இளைஞன்! 8) - Rasikai - 01-28-2006 இளைஞன் படங்கள் நன்றாக இருக்கிறது. - arun - 01-28-2006 படங்கள் அனைத்தும் அருமையாக இருக்கின்றது என்ன software பாவித்து இதை வரைந்தீர்கள் என்று சொன்னால் நாங்களும் செய்துபார்க்கலாம் :roll: :roll: :roll: :roll: :roll: :roll: :roll: :roll: :roll: :roll: :roll: - இளைஞன் - 01-29-2006 நன்றி அனைவருக்கும். பிறிதொரு பொழுதில் உங்கள் கருத்துக்களுக்கு விளக்கமாக பதில் எழுதுகிறேன். அருண் adobe photoshop மென்பொருள் பயன்படுத்திய இந்த படங்கள் (வெட்டு, ஒட்டு, சுத்தம்) செய்யப்பட்டன. - ப்ரியசகி - 01-29-2006 ஆகா..இளைஞன்..படங்களை ரொம்ப அழகாக இணைத்துள்ளீர்கள்..அதிலும் கடைசி படம் நன்றாக இருக்கின்றது.. <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> வாழ்த்துக்கள்
- hari - 01-29-2006 படங்கள் அனைத்தும் அருமையாக இருக்கின்றது , வாழ்த்துக்கள்! - இளைஞன் - 01-31-2006 தல சரியாகவே கண்டுபிடித்திருக்கிறீர்கள். தண்ணீர் கலங்கினால் தண்ணீரில் தெரிகிற காட்சி தெளிவில்லாமல் போய்விடும் என்பதால் அதனை கலங்கச் செய்யவில்லை. செயற்படுத்துவதற்கு முதலான திட்டமிடலில் சிற்றுந்து தண்ணீர் மேல் இல்லாமல் புற்தரையில் தான் இருந்தது. உண்மைதான் புற்தரையில் அடையாளமே இல்லை. சில்லுச் சுழலவில்லை. அதுதவிர காரின் விம்பம் சாதுவாக தண்ணீரில் தெரிவது போல் செய்திருக்கலாம். தூயவன் யதார்த்தம் பற்றியே சொல்கிறீர்கள் என நினைக்கிறேன். நீங்கள் குறிப்பிட்டதைப் போல் யதார்த்தம் இதில் கவனத்தில் எடுத்துக்கொள்ளப்படவில்லை. இருவேறு சூழலை, உண்மையில் சாத்தியமில்லாததை ஒரு படத்துக்குள் கொண்டுவருவதே நோக்கம். படங்களுக்கான கருப்பொருள் மோகம். நான் அதனை தாயகத்தின் மீதான மோகம் என்பதாகவே பொருள்பட செய்திருந்தேன். சில படங்களில் சில மேலதிகமாக சில விடயங்களையும் சொல்ல முற்பட்டுள்ளேன். உதாரணமாக சுத்தமான காற்று, நீர், வெளிச்சம் போன்றவையை மையப்படுத்தியாதாகவே அமைத்திருந்தேன். முதலாவது படத்தில் ஏழு படங்கள் என்பது சரியானதே. 1. பனிபடர்ந்த மரங்கள் அடங்கிய காட்சி 2. நெடுஞ்சாலையும் சிற்றுந்தும் (கண்ணாடியும்) 3. ஈழத்துக் காட்சியில் வானம் 4. ஈழத்துக்காட்சியில் பனைமரங்கள் 5. ஈழத்துக்காட்சியில் தார்வீதி 6. கண்ணாடியில் விழுந்துள்ள நீர்த்துளிகள். 7. பனித்துகள்கள் (இது கிராபிக் முறையில் செய்யப்பட்டது.) இரண்டாவது படத்தில் ஏழு படங்கள் 1. சறுக்கி வருபவர் 2. பின்னே தெரியும் வீடும், மலையும் 3. கண்ணாடி அணிந்திருக்கும் முகமும், கண்ணாடியும் 4. அவரணிந்திருக்கும் தொப்பி 5. கடலும் கரையும் தென்னைமரங்களும் 6. வானம் 7. பனித்துகள்கள் (இது கிராபிக் முறையில் செய்யப்பட்டது) மூன்றாவது படத்தில் ஒன்பது படங்கள் 1. பின்னே இடதுபக்கம் தெரிகிற தொழிற்சாலைகள் 2. வலது பக்கம் தெரிகிற தொழிற்சாலைகள் 3. கருமுகில்கள் 4. நீர் 5. பெண் 6. பனை 7. வானம் 8. புற்தரை 9. தெறிக்கின்ற தண்ணீர் (இது கிராபிக் முறையில் செய்யப்பட்டது) இந்தப்படங்களே பயன்படுத்தப்பட்டன. ஒவ்வொரு படங்களும் சூழலுக்கு ஏற்றவகையில் சுத்தம் செய்யப்பட்டன. நிறங்கள், வெளிச்சம் - நிழல், அளவு போன்றன சரிசெய்யப்பட்டன. நன்றி சகி, ஹரி 3 ஆவது படத்துக்கு பயன்படுத்தப்பட்ட படங்கள்: <img src='http://www.yarl.com/forum/files/all3_622.jpg' border='0' alt='user posted image'> உருவாக்கப்பட்ட ஈழத்துக்காட்சி <img src='http://www.yarl.com/forum/files/sl_33-kcyxcopie_207.jpg' border='0' alt='user posted image'> செயற்படுத்துவதற்கு முதலான திட்டமிடல் <img src='http://www.yarl.com/forum/files/scribbles1_280.jpg' border='0' alt='user posted image'> மற்றையவை பற்றி பின்னர்... - Thala - 01-31-2006 விளக்கத்துக்கு நண்றி இளைஞன்...! நானும் செய்து பாக்கனும் போல ஒரு ஆசை சரிவந்தால் கொண்டுவந்து போடுகிறேன் இல்லாட்டால் அடக்கிவாசிக்கிறன்.. <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
|