Yarl Forum
அப்பம் தயாரிக்கும் முறை தேவைபடுகிறது - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: இளைப்பாறுங் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=8)
+--- Forum: சமையல் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=40)
+--- Thread: அப்பம் தயாரிக்கும் முறை தேவைபடுகிறது (/showthread.php?tid=1153)

Pages: 1 2


அப்பம் தயாரிக்கும் முறை தேவைபடுகிறது - தூயா - 01-28-2006

அப்பம் தயாரிக்கும் முறை தேவைபடுகிறது. நீங்கள் செய்யும் முறையை தந்து உதவ முடியுமா? ? <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->


- Thala - 01-28-2006

சட்டியை அடுப்பில் வைத்து நெருப்பை மூட்டி, மாவை ஊத்தினால் அவிந்து வர சரியாக வரும்....!

பாத்துங்கோ மாவைச்சட்டீக்க ஊத்துங்கோ..! <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->


- அருவி - 01-28-2006

இப்பதான் உடனடி அப்பமா இருக்கே தூயா அந்த பைக்கட்டிலேயே போட்டிருக்காங்க செய்முறை. அத பார்த்து அப்படியே செய்யவேண்டியதுதான்.:wink:<!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->


- SUNDHAL - 01-28-2006

ஆப்பம்

……ரெண்டு கப் பச்சாpசி, ஒரு கைப்பிடி உளுந்து, ஒரு டீஸ்பூன் வெந்தயம் _ன்றையும் ஒன்றhக ஒரு மணி நேரம் ஊற வைக் கவும். பிறகு கழுவி விட்டு, ஒரு _டி தேங்காய் துருவலையும் சேர்த்து எல்லாவற்றையும் ஒன்றhக அரைக்கவும். உப்பு சேர்த்துக் கரைத்து, எட்டு மணி நேரம் புளிக்க விடவும். பிறகு கால் டீஸ்பூன் ஆப்ப சோடா சேர்த்துக் கலந்து ஆப்ப சட்டியில் ஆப்பங்களாக ஊற்றவும். விருப்பப் பட்டால், தேங்காயைத் துருவிப் பால் எடுத்து, தண்ணீர் சேர்க்காமல் வைத்துக் கொண்டு, ஆப்பம் வெந்து கொண்டிருக்கும் போது சிறிய கரண்டி தேங்காய் பாலை நடுவில் விட்டு வேக வைத்து எடுக்கவு <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->





ம்ம்ம்ம் என்க்கு 2 முட்டை அப்பம் அணுப்பணும் சரியா?


- aathipan - 01-28-2006

சிங்களவங்கள் தான் இங்கை அப்பம் சுடுரதில கெட்டிக்காரங்கள். ஒரே நேரத்தில 15 அப்பம் சுடுவாங்கள். அவங்களை கேட்டா சொல்லித்தருவாங்கள். முடிஞ்சா நான் கேட்டு எழுதுறன்.


- தூயா - 01-28-2006

அப்ப சோடாவை கடைசியாகவா கலப்பார்கள்???

ஆதீபன் உங்களுடைய செய்முறைக்காக காத்து கொண்டிருக்கிறேன்.


- MUGATHTHAR - 01-28-2006

தூயா Wrote:அப்ப சோடாவை கடைசியாகவா கலப்பார்கள்???.

பரவாயில்லை முதலில் கலக்க மறந்திட்டீயள் எண்டால் அப்பத்தை சாப்பிட்ட பிறகு ஒரு கிளாசிலை அப்ப சோடாவை கலக்கி குடிச்சுவிடுங்கோ பிரச்சனையில்லை...............


- வர்ணன் - 01-28-2006

தூயா Wrote:அப்ப சோடாவை கடைசியாகவா கலப்பார்கள்???

ஆதீபன் உங்களுடைய செய்முறைக்காக காத்து கொண்டிருக்கிறேன்.

அப்ப சோடாவை கடைசில கலந்தால்- அப்பம் வருதோ இல்லையோ- அல்சர் வராதா? :roll:


- தூயா - 01-28-2006

களத்தில நிறைய பேர் என்னக்கு அல்சர் வர வைக்க பார்க்கினம்..நான் அண்ணாச்சிட்ட போய் சொல்ல போறன்..


- KULAKADDAN - 01-28-2006

தூயா இது நம்மக்கு தெரிந்த முறை

பச்சை அரிசி- 2 கப் (உங்க அளவுக்கு எடுங்க)
தேங்காய்,
உப்பு
(தேவைப்பட்டால் ரவை)

பச்சை அரிசியை ஊற வைத்து அரைத்து/இடித்து மா வை எடுங்கள். கொஞ்சம் பெரிய கண்ணுடைய அரிதட்டு பாவிப்பது நல்லது.
அதன் போது வரும் சிறிய குறுணலை புக்கை கஞ்சி காய்ச்ச பாவிக்கலாம். அது முடியா விட்டால்
ரவை ஒரு 100 கிராம் எடுத்து சிறிதளவு கொதிக்கும் நீரில் கலந்து தடிப்பான கூழ் மாதிர் காய்ச்சி கொள்ளுங்கள்.

அரித்து எடுத்த மாவையும், புக்கை கஞ்சிடையும் சேர்த்து தடிப்பாக குழைத்து 8 மணி நேரம் புளிக்க வையுங்கள்

மாவுக்கு போதுமான நீர், உப்பு , அப்ப சோடா சேர்த்து கரைத்துகொள்ளுங்கள். ( முதல் பழகும் போது -நீர் சேர்க்கும் அளவை கண்டு பிடிக்க, சிறிது நீர் சேர்த்து கலந்த பின் சூடான சட்டியில் மாவை வார்த்து பார்க்கலாம். அது சீராக இலகுவாக பரவும் நிலை வரும் வரை நீர் சேர்த்து கலக்குங்கள்.)

பால் அப்பம் தேவை என்றால்
தேங்காய் துருவி அதிகம் நீர்விடாது நல்ல தடிப்பான பாலாக பிழிந்து எடுத்து கொள்ளுங்கள்.

பதமாக கரைத்த மாவை சூடானசட்டியில் வார்த்து , நடுவில் சிறிதளவு பாலை சேர்த்து மூடி வேக வைத்து இறக்கினால் அப்பம் தயார்.

குறிப்பு
பால் விட்டு அப்பம் சாப்பிட ஒத்து வராதவர்கள் நீருக்கு பதிலாக பாலை விட்டு மாவை கரைத்து பாலற்ற அப்பம் சுடலாம்.

பாலுக்கு பதிலாக முட்டை விட்டால் முட்டை அப்பம்


போதுமா தூயா.................. <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->


- vasanthan - 01-28-2006

முக்கியமானதொன்று அப்பச்சோடவுக்குப்பதில் கள்ளு விட்டால் நல்லாயிருக்கும். :!:


- KULAKADDAN - 01-28-2006

vasanthan Wrote:முக்கியமானதொன்று அப்பச்சோடவுக்குப்பதில் கள்ளு விட்டால் நல்லாயிருக்கும். :!:

ஊரிலை சரிவரும், இங்க என்ன செய்ய, அதான் தூயா சொல்லி இருக்கிறா பட்டர்மில்க் விடலாமாம், விட்டு செய்து பாத்திட்டு ஆரும் சொல்லுங்க.


- Mathan - 01-29-2006

கள்ளு இங்கு போத்தலில் வருகின்றதே அதை வாங்கி விட வேண்டியது தானே இளைய தளபதி <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->


- தூயவன் - 01-29-2006

Mathan Wrote:கள்ளு இங்கு போத்தலில் வருகின்றதே அதை வாங்கி விட வேண்டியது தானே இளைய தளபதி <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->

லண்டனில் இப்போது விடிந்து கூட இருக்காது. அப்படியிருந்தும் கள்ளு நினைப்போடு தான் இருக்கின்றியளோ? :oops:


- Mathan - 01-29-2006

ஏதோ நாளை ஞாயிறு லீவு லேட்டா எழும்பலாம் தானே அதற்குள் யாழில் பார்க்காத தலைப்புக்களை பார்க்கலாம் என்றால் நம்ம இளைய தளபதி அப்பத்துக்கு விட கள்ளு இல்லையென்று கவலைப்பட்டார் அது தான் சொன்னன்.


- KULAKADDAN - 01-29-2006

Mathan Wrote:கள்ளு இங்கு போத்தலில் வருகின்றதே அதை வாங்கி விட வேண்டியது தானே இளைய தளபதி <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->

மதன் கள்ளு விடுறது புளிக்க/நொதித்தல் தாக்கம் நிகழ. அதுக்கு கொஞ்சம் நுண்ணங்கியள் தேவை.போத்தலில வாற கள்ளிலை நுண்ணங்கிகளை எல்லம் கிருமிநீக்கம்/பாஸ்ராக்கம் செய்து அவற்றின் தொழிற்பாடு இல்லாது இருக்கும். அதை விட்டா அப்ப மா புளிக்காது <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> .

ஆமா அதுகேன் இளைய தளபதிய கூப்பிடுறீங்க, அந்தாளுக்கு அப்பம் எண்டா என்னெண்டு தெரியுமோ தெரியா :? சங்கீதா செய்து கொடுத்தா தான் உண்டு


- aathipan - 01-29-2006

500 கிராம் வெள்ளைப்பச்சை அரிசிமாவுடன் இளநீர்சேர்க்கவும் அத்துடன் அரை ரிஸ்புூன் ஈஸ்ட்(சிலர் ஈஸ்ட்டுக்கு பதிலாக பாதிகப் பியர் சேர்ப்பதும் உண்டு. ஆனால் எல்லோரும் விரும்பமாட்டார்கள்) சேர்த்து நன்றாக கையால் பிசைந்து சேர்க்கவும். ஓரளவு களிப்பதத்திலே மண் சட்டி அல்லது சில்வர் சட்டியில் வைத்து ஈரதுணியால் மூடிக்கட்டவும். 12 மணிநேரம் கழித்து தேங்காய்ப்பால்(முதல்ப்பால்) சேர்த்து கலக்கவும். அதன்பன் கல்லுச்சட்டியை(சில்வர்சட்டியைதவிர்க்கவும்) அடுப்பில் வைத்து சுட ஆரம்பிக்கலாம். சட்டியில் அப்பம் ஒட்டும் பட்சத்தில் இரண்டு மூன்றுதடவை முட்டைபொரித்து அதன்பின் பயன்படுத்தலாம்.


- ப்ரியசகி - 01-29-2006

ஆகா..அப்பம் செய்யும் முறை தாராளமா தந்திருக்காங்க.. தூயா..சோ, செய்து பாருங்கள்..சாப்பிடும் போது கொஞ்சமாக சாப்பிடுங்கள்..எரிச்சலில் சொல்லவில்லை.. தேங்காய் பாலில் செய்வதால்..நிறைய சாப்பிட அப்பச்சட்டி முதலில சுழலுலாப்போல இருக்கும்..அப்புறம் அப்பம் சுழலும்..அப்பிடியே தலையை சுத்தும். உண்மையாகவே எனக்கு சுத்தி இருக்கு..சோ, அடுத்த நாளைக்கும் வைத்து சாப்பிடுங்கள்..அதுவும் ருசியாக இருக்கும்.. <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->


- Vasampu - 01-29-2006

தோசை சுடும் போது அல்லது அப்பம் சுடும் போது அவை சட்டியில் ஒட்டாமலிருக்க உருளைக்கிழங்கை இரண்டாக வெட்டி அதன் பாதித்துண்டின் வெளிப்பக்கத்தில் முள்ளுக்கரண்டியை குத்தி கைபிடியாக வைத்துக் கொண்டு உள் பகுதியால் எண்ணெய்யை தொட்டு சட்டியில் தடவி விட்டு இப்போது சுட்டுப் பாருங்கள் சட்டியில் ஒட்டவே ஒட்டாது.


- ப்ரியசகி - 01-29-2006

ஆகா ரொம்ப நன்றி வசம்பண்ணா..எங்க வீட்டில அடிக்கடி ஒட்டி பிரச்சனை குடுக்குறது. இப்படியே செய்து பார்ப்போம்.. <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->