Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
கொக்கட்டிச்சோலை படுகொலையின் 19வது ஆண்டு நினைவு தினம்
#1
[size=18]<b>கொக்கட்டிச்சோலை படுகொலையின் 19வது ஆண்டு நினைவு தினம் இன்று </b>

கொக்கட்டிச்சோலை பிரதேசத்தில் அமைந்திருந்த இறால் பண்ணையில் கடந்த 1987ம் ஆண்டு சிறிலங்கா இராணுவத்தால் மேற்;கொள்ளப்பட்ட படுகொலையில் உயிர் நீத்த 86 பொதுமக்களின் 19ஆவது ஆண்டு நினைவு நிகழ்வு

<b><i>தகவல் மூலம்- ஈழநாதம்-மட்டக்களப்பு பதிப்பு</i></b>
"
"
Reply
#2
<b>கொக்கட்டிச்சோலைப் படுகொலையின் 19வது ஆண்டு நினைவு கூரப்பட்டது </b>

மட்டக்களப்பு மாவட்டத்தில் கொக்கட்டிச்சோலை இறால் பண்ணையில் சிறிலங்கா படையினரால் மிகவும் கொடூரமான முறையில் படுகொலை செய்யப்பட்ட அப்பாவித் தமிழ் மக்களின் 19வது ஆண்டு நினைவு நிகழ்வு நேற்று மாலை 5.00 மணியளவில் மகிழடித்தீவு பொது மைதானத்தில் அமைந்திருக்கும் நினைவுத் தூபிக்கு அருகாமையில் இடம்பெற்றது.

கொக்கட்டிச்சோலை இ.கி.மி வித்தியாலய அதிபர் பொன்.நேசதுரை தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் பொதுச் சுடரினை மாவட்ட மகளிர் அரசியல்துறைப் பொறுப்பாளர் தமிழ்நிலவு ஏற்றி வைக்க, தேசியக் கொடியினை மாவட்ட துணை அரசியல்துறைப் பொறுப்பாளர் சீராளன் ஏற்றி வைத்தார்.

பின்னர் மலர் மாலையினை மாவடிமுன்மாரிக் கோட்ட அரசியல் பொறுப்பாளர் தீபன் அணிவித்தார். தொடர்ந்து நினைவுச் சுடர்களை படுகொலையில் உயிர் நீர்த்தவர்களின் உறவினர்கள் ஏற்றி வைத்தனர்.

இந்நிகழ்வில் நினைவுரைகளை முதலைக்குடா ஊரக மேம்பாட்டு பேரவைத் தலைவர் செ.கணேசமூர்த்தி, முனைக்காடு ஊரக மேம்பாட்டு பேரவைத் தலைவர் மா.சத்தியநாயகம், கொக்கட்டிச்சோலை ஊரக மேம்பாட்டு பேரவைத் தலைவர் என்.பன்னீர்ச்செல்வம், (வைத்தியர்) மற்றும் மாவட்ட அரசியல்துறைப் பொறுப்பாளர் பா.தயாமோகன் ஆகியோர் நிகழ்த்தினர். இறுதியாக நன்றியுரையினை கிராம உத்தியோகஸ்த்தர் இ.சாந்தலிங்கம் நிகழ்த்தினார்.

இதில் ஊரக மேம்பாட்டு பேரவை இணைப்பாளர் க.அரிகரன், மாவீரர் குடும்ப நலக் காப்பகப் பொறுப்பாளர் ஐங்கரன், திட்டமிடல் மேம்பாட்டு செயலகப் பொறுப்பாளர் பி.மனோஜ், புளியந்தீவுக் கோட்ட அரசியல்துறைப் பொறுப்பாளர் அன்புமாறன், மற்றும் பாடசாலை ஆசிரியர்கள், மாணவர்கள், அரச உத்தியோகஸ்த்தர்கள் பொது மக்கள் எனப் பலர் கலந்து கொண்டனர்.

<i><b>தகவல் மூலம்- ஈழநாதம்-மட்டக்களப்பு பதிப்பு</b></i>
"
"
Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)