ஊர்ப்புதினம்

யாழில் ஆளும் தரப்பு ஆதரவாளர்கள் மீது வாள்வெட்டு தாக்குதல்

3 months 1 week ago

தேசிய மக்கள் சக்தி ஆதரவாளர்கள் மீது யாழ். பருத்தித்துறை பகுதியில் அடையாளம் தெரியாதோரால் வாள்வெட்டு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

தொலைபேசி மூலம் அச்சுறுத்தல் விடுத்து பத்து நிமிடத்தில் வருகைதந்த குழுவால் இவ்வாறு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரவிவிக்கப்படுகிறது.

இரண்டு பேர் படுகாயம்

சம்பவ இடத்திற்கு  நீரியல் வளத்துறை அமைச்சர் இ.சந்திரசேகர் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் க.இளங்குமரன் ஆகியோர் விரைந்துள்ளனர்.

யாழில் ஆளும் தரப்பு ஆதரவாளர்கள் மீது வாள்வெட்டு தாக்குதல் | Sword Attack On National People S Power Supporters

இதன்போது, கொட்டடிப் பகுதியில் இடம் பெற்ற வாள் வெட்டு சம்பவத்தில் இரண்டு பேர் படுகாயமடைந்த நிலையில் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

https://tamilwin.com/article/sword-attack-on-national-people-s-power-supporters-1736971729

இலங்கை - இந்திய உறவுகளை மேலும் ஆழப்படுத்துவது குறித்து இந்திய அரச பிரதிநிதிகளுடன் மிலிந்த மொரகொட கலந்துரையாடல்

3 months 1 week ago
15 JAN, 2025 | 05:43 PM
image

(நா.தனுஜா)

பாத் ஃபைன்டர் பவுன்டேஷனின் ஸ்தாபகரும், இந்தியாவுக்கான இலங்கையின் முன்னாள் உயர்ஸ்தானிகருமான மிலிந்த மொரகொட இருநாள் விஜயமொன்றை மேற்கொண்டு நேற்று  செவ்வாய்கிழமை (14) இந்தியாவுக்குச் சென்றுள்ளார்.

பாத் ஃபைன்டர் பவுன்டேஷன் இந்தியாவுடன் பேணிவரும் நெருக்கமான தொடர்புகளின் ஓரங்கமாக அமைந்திருக்கும் இவ்விரு நாள் (14 - 15) விஜயத்தின்போது, மிலிந்த மொரகொட இந்திய அரசாங்கத்தின் உயர்மட்டப்பிரதிநிதிகள், கொள்கை வகுப்பாளர்கள், சிந்தனைக்குழுக்களின் தலைவர்கள் உள்ளிட்ட பலரைச் சந்தித்து பரந்;துபட்ட கலந்துரையாடல்களை நடாத்தியுள்ளார்.

இந்திய நிதியமைச்சர் நிர்மலா சீத்தாராமன், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் டோவல் மற்றும் வெளிவிவகார செயலாளர் விக்ரம் மிஸ்ரி ஆகியோருடனான சந்திப்புக்களும் இதில் அடங்குகின்றன.

மிலிந்த மொரகொடவினால் நிறுவப்பட்ட பாத் ஃபைன்டர் பவுன்டேஷன் அமைப்பானது இந்திய அரசாங்கத்துடனும், ஏனைய சிந்தனைக்குழுக்கள், சிவில் சமூக அமைப்புக்கள் மற்றும் தனியார் துறையினருடனும் நெருங்கிய பிணைப்பைப் பேணிவருவதுடன் தொடர் கலந்துரையாடல்களையும் நடத்திவருகின்றன.

அதன்படி இவ்வமைப்பினால் கடந்த 2015 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட இந்திய - இலங்கை முன்முயற்சிகள் நிலையமானது இருநாடுகளுக்கும் இடையிலான தொடர்புகளை மேலும் வலுப்படுத்துவதையும், ஊக்குவிப்பதையும் பிரதான நோக்கமாகக் கொண்டிருக்கிறது. 

அதன்படி தற்போது இலங்கையின் அபிவிருத்திக்கு அவசியமான கூட்டிணைந்த ஒத்துழைப்பினைப் பெற்றுக்கொள்ளக்கூடியவகையில் இலங்கை, இலங்கை மற்றும் ஏனைய தொடர்புடைய நாடுகளை ஓரணிக்குக் கொண்டுவருவதற்கான முயற்சிகளில் பாத் ஃபைன்டர் அமைப்பு ஈடுபட்டுவருகிறது.

https://www.virakesari.lk/article/203897

நாட்டிற்கு வந்த சுமார் 30 கப்பல்கள் திரும்பிச் சென்ற அவலம்

3 months 1 week ago

நாட்டிற்கு வந்த சுமார் 30 கப்பல்கள் திரும்பிச் சென்ற அவலம்

கொள்கலன்களை அனுமதிப்பதில் ஏற்பட்ட தாமதம் காரணமாக நாட்டிற்கு வந்த சுமார் 25 அல்லது 30 கப்பல்கள் திரும்பிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுவதாக துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து பிரதி அமைச்சர் ஜனித் ருவான் கொடிதுவக்கு தெரிவித்துள்ளார்.

ஒருகொடவத்தை RCT முற்றத்தில் இன்று (15) கண்காணிப்பு சுற்றுப்பயணத்தில் பங்கேற்றபோது அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இறக்குமதி செய்யப்பட்ட கொள்கலன்களை அனுமதிப்பதில் ஏற்படும் தாமதங்கள் குறித்து விவாதித்து உடனடி தீர்வுகளைக் காண, ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க கடந்த ஞாயிற்றுக்கிழமை சம்பந்தப்பட்ட தரப்பினரை அழைத்து கலந்துரையாடினார்.

இதன்போது, சுங்க அதிகாரிகள் வாரத்தில் 7 நாட்களும், 24 மணி நேரமும் வேலை செய்ய  ஒப்புக்கொண்டனர்.

அந்தக் கலந்துரையாடலைத் தொடர்ந்து, அனுமதி வழங்கும் செயல்முறை தற்போது நடைபெற்று வருவதாக கொள்கலன் போக்குவரத்து வாகன உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

இருப்பினும், ஒருகொடவத்தை சுங்க முற்றத்திற்கு அருகில் வரிசைகள் இன்னும் காணப்படுகின்றன.

இறக்குமதி மற்றும் ஏற்றுமதி தீர்வு முகவர்கள் சங்கம், அனுமதி செயல்முறையை விரைவுபடுத்த, இந்த செயல்முறையுடன் தொடர்புடைய அனைத்து நிறுவனங்களும் 24 மணி நேர சேவையை வழங்க வேண்டும் என்று சுட்டிக்காட்டியுள்ளது.

https://tamil.adaderana.lk/news.php?nid=198817

வவுனியா சுகாதார வைத்திய அதிகாரி பணிமனை மின்சாரம் துண்டிப்பு; குளிரூட்டப்பட வேண்டிய தடுப்பூசிகள் காலாவதியாகுமா?

3 months 1 week ago

Published By: VISHNU   15 JAN, 2025 | 06:06 PM

image

வவுனியா சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையின் மின்சாரம் 15ஆம் திகதி புதன்கிழமை துண்டிக்கப்பட்டுள்ளதுடன் அங்கு பாதுகாப்பாக குளிரூட்டியில் வைக்கப்பட்டிருந்த தடுப்பூசிகள் பயன்படுத்தப்பட முடியாத நிலைக்குச் செல்லுமா என்கின்ற சந்தேகம் எழுந்துள்ளது.

வவுனியா சுகாதார வைத்திய  அதிகாரி பணிமனையின் மின்சார கட்டணம் செலுத்தப்படாத நிலையில் காலை மின்சார சபை ஊழியர்களால் குறித்த அலுவலகத்துக்கான மின் துண்டிக்கப்பட்டது.

இதன் காரணமாக அங்கு மின்சாரம் தடைப்பட்டதோடு மின் பிறப்பாக்கி மூலம் மின்சாரத்தை வழங்குவதற்கு ஏதுவான சூழல் காணப்படாமையினால் மின் பிறப்பாக்கி மூலமாகவும் மின்சாரம் வழங்கப்படவில்லை. இந்நிலையில் அங்கு கர்ப்பிணித் தாய்மார் மற்றும் சிறுவர்களுக்கான தடுப்பூசிகள் வழங்கப்பட்டு வருகின்ற நிலையில் குறித்த ஊசிகள் சில குளிரூட்டிகளில் வைக்க வேண்டிய நிலைமை காணப்பட்ட போதிலும் மின் துண்டிக்கப்பட்டமையினால் அவை பழுதடைந்து விடுமா என்கின்ற சந்தேகம் எழுந்துள்ளது.

எனவே இது தொடர்பில் உடனடி நடவடிக்கை எடுத்து குறித்த தடுப்பூசிகளைப் பாதுகாக்க வேண்டும் என கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளதுடன் குறித்த மின் கட்டணம் நீண்ட காலமாக செலுத்தப்படாமைக்கான காரணம் என்ன என்பது தொடர்பிலும் உரிய அதிகாரிகள் விசாரணை நடத்த வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

https://www.virakesari.lk/article/203904

முச்சக்கரவண்டி மேலதிக உதிரிபாகங்கள் அகற்றப்படாது - பொலிஸ்

3 months 1 week ago

முச்சக்கரவண்டி மேலதிக உதிரிபாகங்கள் அகற்றப்படாது - பொலிஸ்

சட்டத்திற்கு இணங்க முச்சக்கர வண்டிகளில் பொருத்தப்பட்டுள்ள மேலதிக உதிரிபாகங்களை அகற்றுவதில்லை என பொலிஸ் தீர்மானித்துள்ளது.

அதன்படி, முச்சக்கர வண்டிகளில் மேலதிக உதிரிபாகங்களை பொருத்துவதில் உள்ள சட்ட கட்டமைப்பு மற்றும் வரம்புகளுக்கு ஏற்ப சட்டத்திற்கு இணங்க பொருத்தப்பட்ட முச்சக்கர வண்டிகளின் உதிரிபாகங்கள் அகற்றப்படாமல் இருப்பதை உறுதி செய்ய பொலிஸ் இனிமேல் நடவடிக்கை எடுக்கும்  என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அகில இலங்கை முச்சக்கர வண்டி உதிரிபாக உற்பத்தியாளர்கள் மற்றும் விற்பனையாளர்கள் சங்க உறுப்பினர்களுக்கும் பொலிஸ் மா அதிபருக்கும் இடையில் இன்று (15) நடைபெற்ற கலந்துரையாடலின் போது இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

மேலும், சட்டத்திற்கு இணங்காத ஆபத்தான முறையில் பொருத்தப்பட்ட உதிரிபாகங்களை அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

முச்சக்கர வண்டி உதிரிபாக உற்பத்தியாளர்கள் மற்றும் விற்பனையாளர்களின் தொழிலை இல்லாதொழிக்க  இலங்கை பொலிஸ் ஒருபோதும் எந்த நடவடிக்கையும் எடுக்காது என்று பொலிஸ் மேலும் தெரிவித்துள்ளது.

மேலும், வீதியை பயன்படுத்துபவர்கள், முச்சக்கர வண்டி சாரதிகள் மற்றும் வீதியில் பயணிக்கும் பாதசாரிகளின் பாதுகாப்பிற்காக இந்தக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்பட்டது.

இந்தக் கலந்துரையாடல் பொலிஸ் தலைமையகத்தில் நடைபெற்றது.

https://tamil.adaderana.lk/news.php?nid=198811

சீன - இலங்கை ஜனாதிபதிகள் இடையே பல புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கைச்சாத்து

3 months 1 week ago

Published By: VISHNU    15 JAN, 2025 | 06:41 PM

image

சீனாவுக்கு விஜயம் மேற்கொண்ட ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவுக்கு, சீன ஜனாதிபதி சீ ஜின்பிங் அமோக வரவேற்பளித்தார், மரியாதை வேட்டுக்களுடன் மிகுந்த கௌரவமான முறையில் வரவேற்பு நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்ததோடு இரு நாட்டுத் தலைவர்களுக்கும் இடையிலான உத்தியோகபூர்வ சந்திப்பைத் தொடர்ந்து இரு நாடுகளுக்கும் இடையில் பொருளாதார, சமூக மற்றும் கைத்தொழில்துறை சார்ந்த  பல புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்பட்டன.

அபிவிருத்தியின் புதிய யுகத்திற்காக இலங்கையுடன் இணைந்து பணியாற்றத் தயாராக இருப்பதாக சீன ஜனாதிபதி  இதன் போது வலியுறுத்தினார்.

மேலும், சீனாவிற்கு  நான்கு நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவிற்கும் சீன ஜனாதிபதி சீ ஜின்பிங்விற்கும் (Xi Jinping) இடையிலான உத்தியோகபூர்வ சந்திப்பு 15ஆம் திகதி புதன்கிழமை பிற்பகல்  சீன மக்கள் மண்டபத்தில் நடைபெற்றது.

அதனைத் தொடர்ந்து  இருதரப்பு அரச தலைவர்களுக்கும் இடையில் சுமூகமான  கலந்துரையாடல் நடைபெற்றதோடு அடுத்து இரு தரப்பு கலந்துரையாடல்கள் ஆரம்பிக்கப்பட்டன. 

அத்தோடு நெருங்கிய நட்பு நாடுகள் என்ற வகையில் சீனாவிற்கும் இலங்கைக்கும் இடையிலான நீண்டகால உறவை நினைவுகூர்ந்த சீன  ஜனாதிபதி சீ ஜிங்பிங் , எதிர்காலத்தில் இலங்கையுடன் தொடர்ந்து ஒத்துழைக்கத் தயாராக இருப்பதாகவும் தெரிவித்தார்.

இரு நாட்டுத் தலைவர்களுக்கும் இடையிலான உத்தியோகபூர்வ சந்திப்பைத் தொடர்ந்து இரு நாடுகளுக்கும் இடையில் பொருளாதார, சமூக மற்றும் கைத்தொழில்துறை சார்ந்த  பல புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்பட்டன.

இந்த சந்திப்பில் வெளிவிவகார, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சர் விஜித ஹேரத் மற்றும் போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க மற்றும் அரச தகவல் பணிப்பாளர் நாயகம் எச்.எஸ்.கே. ஜே. பண்டார  ஆகியோரும்  பங்கேற்றனர்.

https://www.virakesari.lk/article/203909

நீதிமன்றில் கோரிக்கை வைத்த அர்ச்சுனா

3 months 1 week ago

நீதிமன்றில் கோரிக்கை வைத்த அர்ச்சுனா

யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா, தனது சட்டத்தரணிகள் ஊடாக, இன்று (15) மேன்முறையீட்டு நீதிமன்றத்திடம், தன்னை பாராளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்ய உத்தரவிடக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவுக்கு வரையறுக்கப்பட்ட ஆட்சேபனைகளை தாக்கல் செய்ய அனுமதி கோரினார்.

இந்த மனுவை அபிநவ நிவஹல் பெரமுனவின் தலைவர் ஒஷல ஹெரத் தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனு இன்று மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதி எம். கொபல்லவ முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

இதன்போது, பிரதிவாதியான பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா சார்பில் ஆஜரான சட்டத்தரணி சேனானி தயாரத்ன, நீதிமன்றத்தின் முன் சமர்ப்பணங்களை முன்வைத்து, இந்த வழக்கு தொடர்பாக ஆட்சேபனைகளை தாக்கல் செய்ய தனது கட்சிக்காரருக்கு கால அவகாசம் வழங்குமாறு கோரினார்.

இருப்பினும், அமர்வு முறையாக அமைக்கப்படாததால், மறுநாள் இந்தக் கோரிக்கையை முன்வைக்குமாறு நீதிபதி சட்டத்தரணியிடம் தெரிவித்தார்.

இதையடுத்து, சம்பந்தப்பட்ட மனுவை வரும் 31-ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ள உத்தரவிடப்பட்டது.

பாராளுமன்ற உறுப்பினர்  இராமநாதன் அர்ச்சுனா அரச வைத்தியராக பணியாற்றிக்கொண்டே கடந்த பொதுத் தேர்தலில் போட்டியிட்டதன் மூலம் பாராளுமன்றத் தேர்தல் சட்டத்தை மீறியுள்ளதாகவும், அதன்படி, அவர் பாராளுமன்ற உறுப்பினராகப் பதவி வகிக்கத் தகுதியற்றவர் என்றும் மனுதாரர் குறிப்பிட்டுள்ளார்.

அதன்படி, குறித்த பாராளுமன்ற உறுப்பினர் பதவியை வலுவிழக்கச் செய்யும் உத்தரவைப் பிறப்பிக்க வேண்டும் என்றும் மனுவில் மேலும் கோரப்பட்டுள்ளது.

https://tamil.adaderana.lk/news.php?nid=198808

இரணைமடு குளத்தின் வான் கதவுகள் திறப்பு

3 months 1 week ago

இரணைமடு குளத்தின் வான் கதவுகள் திறப்பு

கிளிநொச்சியின் மாங்குளம் கனகராயன்குளம் ஆகிய பிரதேசங்களில் பெய்து வருகிற கனமழை காரணமாக அதிகளவான நீர் இரணைமடு குளத்துக்கு வந்து கொண்டிருக்கிறமையால் குளத்தின் அனைத்து வான் கதவுகளும்  திறக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக மேலதிக நீர் வெளியிடப்படுகின்றமையால் குளத்தின் கீழ்பகுதியில் வாழுகின்ற மக்கள் மிகவும் அவதானமாக இருக்குமாறு கிளிநொச்சி மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவு தெரிவித்துள்ளது. 

-கிளிநொச்சி நிருபர் சப்தன்-

https://tamil.adaderana.lk/news.php?nid=198798

 

பழைய பல்லவியை பாடாமல் தமிழ் அரசியல் கைதிகளை உடனேயே விடுவியுங்கள்-மனோ!

3 months 1 week ago
பழைய பல்லவியை  பாடாமல் தமிழ் அரசியல் கைதிகளை உடனேயே விடுவியுங்கள்-மனோ! பழைய பல்லவியை  பாடாமல் தமிழ் அரசியல் கைதிகளை உடனேயே விடுவியுங்கள்-மனோ!

“அரசியல் கைதிகள் இல்லை” என்ற பழைய பல்லவியை  பாடாமல் தமிழ் அரசியல் கைதிகளை உடனேயே விடுவியுங்கள் என தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மனோ கணேசன் நாடாளுமன்ற உறுப்பினர் அரசாங்கத்துக்கு தெரிவித்துள்ளார்.

நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாடு அமைச்சர் ஹர்ஷன நாணயக்காரவின் கருத்து தொடர்பில் அவர் மேலும் கூறியதாவது,

“சிறையில் அரசியல் கைதிகள் இல்லை” என்ற கருத்தைத்தான் எப்போதும் எல்லா  சிங்கள பெரும்பான்மை அரசாங்கங்களிலும், எல்லா அமைச்சர்களும்  சொன்னார்கள். அரசாங்க தரப்பு அப்படிதான் சொல்வார்கள்.  அவர்களுக்கு “பயங்கரவாதி”. மக்களுக்கு “போராளி”. பாலஸ்தீனம் முதல் இலங்கை வரை, உலகம் முழுக்க போராட்டங்கள் நிகழ்ந்த நாடுகளில் இப்படி தான்.

இந்நாட்டில், 1971ல் தமிழ் இளைஞர் ஆயுதம் தூக்க முன்னமே ஆயுதம் தூக்கி பின்னர், 1989லும் ஆயுதம் தூக்கி ஜேவிபி போராட்டம் செய்த போது, கைதாகி சிறையில் இருந்த ஜேவிபி போராளிகளை, அன்றைய அரசாங்கம்,  “பயங்கரவாதிகள்” என்றது. ஆனால் ஜேவிபியினர், “இல்லை, அவர்கள் அரசியல் போராளிகள்” என்றார்கள்.

2015-2019 கால நமது நல்லாட்சியிலும் இடைக்கிடை ஓரிரு அமைச்சர்கள் இப்படி சொன்னார்கள்.  ஆனால் அன்றைய தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சராக இருந்து, அவர்களை கண்டித்து, அமைச்சரவைக்குள் அவர்களை புறந்தள்ளி, ஏனைய முற்போக்கு அமைச்சர்களுடனும், வெளியே தமிழ் தேசிய கட்சிகளுடனும் இணைந்து, கணிசமான தமிழ் அரசியல் கைதிகளை நாம் சத்தமில்லாமல் விடுவித்தோம். தமிழ் அரசியல்  கைதிகளை  அதிகமாக விடுவித்தது எமது நல்லாட்சி அரசாங்கம்தான். இதில் மாற்று பேச்சுக்கு இடமில்லை. இதனால்தான் இன்று வரை இருக்கும் தமிழ் அரசியல் கைதிகளின் எண்ணிக்கை கணிசமாக குறைந்தது.

ஆனால், அன்று ஆயுத போராட்டம் செய்த ஜேவிபியே, இன்று இப்படி கூறுகிறது. “அரசியல் கைதிகள் இல்லை” என்று கூறி, அவர்களுக்கு பயங்கரவாதிகள் பட்டம் சூட்ட முனைகிறது. 1971ல், தமிழ் இளைஞர் ஆயுதம் தூக்க முன்னமே, ஆயுதம் தூக்கிய தமது அங்கத்தவர்களை அரசியல் போராளிகளாக அடையாளம் காணும் ஜேவிபி, கைதாகி சிறையில் உள்ள தமிழ் இளைஞர்களை, அரசியல் கைதிகள் இல்லை என்று கூறுகிறது. இந்த இரட்டை வேடம், இவர்களுக்கு இன்று வாக்களித்த செந்தமிழர்களுக்கு தான் வெளிச்சம்.

மேலும் “சிறையில் அரசியல் கைதிகள் இல்லை” என்று அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார கூறுகிறார். இவர் முன்னாள் அமைச்சர் வாசுதேவ நாணயக்காராவின் தம்பி மகன். இன்றைய ஜேவிபி அரசில் நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர். அன்று அரசுக்கு எதிராக ஆயுதம் தூக்கி போராடிய தமது கட்சி அங்கத்தவர்களை “அரசியல் போராளிகள்” என்று கூறிய ஜேவிபி, இன்று தமிழ் அரசியல் போராளி கைதிகளை “அரசியல் கைதிகள்” என அங்கீகரிக்க மறுக்கிறது என்றும் அவர் குறிப்பிட்டார்.

https://athavannews.com/2025/1416354

வெலே சுதா, அவரது மனைவி மற்றும் மற்றொரு பெண்ணுக்கு எட்டு ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனை!

3 months 1 week ago
வெலே சுதா, அவரது மனைவி மற்றும் மற்றொரு பெண்ணுக்கு எட்டு ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனை! வெலே சுதா, அவரது மனைவி மற்றும் மற்றொரு பெண்ணுக்கு எட்டு ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனை!

போதைப்பொருள் கடத்தல்காரர் எனக் கூறப்படும் கம்பொல விதானலாகே சமந்த குமார எனப்படும் வெலே சுதா, அவரது மனைவி மற்றும் மற்றொரு பெண்ணுக்கு கொழும்பு உயர் நீதிமன்றம் எட்டு ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது

ஹெரோயின் போதைப்பொருள் கடத்தல் மூலம் 17 கோடிக்கும் அதிகமான சொத்துக்கள் மற்றும் பணம் சட்டவிரோதமாக ஈட்டப்பட்ட சம்பவம் தொடர்பில், வெலே சுதா உள்ளிட்ட மூவருக்கு எதிராகவே இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

அதன்படி, நீண்ட சாட்சிய விசாரணைக்கு பிறகு விசாரணையை முடித்து வைத்த உயர்நீதிமன்ற நீதிபதி தீர்ப்பை இன்று அறிவித்துள்ளார்.

https://athavannews.com/2025/1416332

யாழ். வல்வெட்டித்துறையில் நடைபெற்ற மாபெரும் பட்டத்திருவிழா!

3 months 1 week ago

Published By: DIGITAL DESK 3   15 JAN, 2025 | 10:39 AM

image

தைப்பொங்கல் தினத்தினை முன்னிட்டு, "வல்வை பட்டத் திருவிழா - 2025" வல்வை உதயசூரியன் உல்லாசக் கடற்கரையில் நேற்று செவ்வாய்க்கிழமை (14) நடைபெற்றது.

வல்வை விக்னேஸ்வரா சனசமூக நிலையத்தின் ஏற்பாட்டில் விமலதாஸ் கவிச்செல்வன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் பிரதம விருந்தினராக வடமாகாண ஆளுநர் நாகலிங்கம் வேதநாயகனும், சிறப்பு விருந்தினராக  வடமராட்சி வடக்கு பிரதேச செயலர் சிவபாதசுந்தரம் சத்தியசீலனும் கௌரவ விருந்தினராக வல்வெட்டித்துறை நகராட்சி மன்ற செயலாளர் சத்தியநாதன் கிசோக்குமாரும் கலந்து கொண்டிருந்தனர்.

குறித்த பட்ட போட்டியில் சுமார் 130 பட்டங்களை அதனை வடிவமைத்தவர்கள் விண்ணில் பறக்க விட்டிருந்தனர். அவற்றில் "உயிர்த்தெழும் ராகன்" பட்டம் முதலாமிடத்தையும், "மின் பிறப்பாக்கி பட்டம்" இரண்டாம் இடத்தினையும் , "ஹெலிகாப்டர் மூலம் தூக்கி செல்லும் திரையரங்கு" பட்டம் மூன்றாம் இடத்தினையும் பெற்றுக்கொண்டது.

அத்துடன் இந்த நிகழ்வில் கல்விச் சாதனையாளர்களையும் ஆளுநர் கௌரவித்தார்.

இங்கு பிரதம விருந்தினர் உரையாற்றிய ஆளுநர், யாழ். மாவட்டச் செயலராக 2018ஆம் ஆண்டு இருந்தபோது இந்த நிகழ்வில் பிரதம விருந்தினராகக் கலந்துகொண்டதை நினைவுகூர்ந்ததுடன் இந்த நிகழ்வு தொடர்ச்சியாக சிறப்பாக இடம்பெறுவதாகவும் குறிப்பிட்டார்.

எமது மண்ணின் பெருமைகளை பறைசாற்றும் வகையில் இந்தப் போட்டிகள் அமைந்துள்ளதாகத் தெரிவித்த ஆளுநர், இது பாராட்டப்படவேண்டிய விடயம் எனவும் குறிப்பிட்டார். 

ஒவ்வொருவரதும் தனித்துவமான திறமைகளை வெளிக்கொணர்வதற்கான சந்தர்ப்பமாக இந்தப் பட்டப்போட்டி அமைந்துள்ளதுடன், ஒவ்வொரு ஆண்டும் புதிது புதிதாக சிந்தித்து பட்டங்களை உருவாக்குவது சிறப்பானது என்றும் ஆளுநர் சுட்டிக்காட்டினார். 

WipeOut39_14_2025_093937.253000.jpg

__________________________2_.jpg

________________________________________

_____________________2_.jpg

2__4_.jpg

WipeOut42_14_2025_094229.493000.jpg

2__2_.jpg

WipeOut43_14_2025_094315.330000.jpg

IMG-20250114-WA0208.jpg

IMG-20250114-WA0203.jpg

IMG-20250114-WA0204.jpg

https://www.virakesari.lk/article/203835

13 இல் கைவைக்க நாங்கள் முனையவில்லை - தமிழகத்தில் வைத்து அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவிப்பு

3 months 1 week ago

Published By: DIGITAL DESK 2   14 JAN, 2025 | 07:36 PM

image

(நமது நிருபர்)

13ஆவது திருத்தச்சட்டத்தினை தமிழ் மக்கள் தமக்கு கிடைத்த உரிமையாக கருதுகின்ற நிலையில் அதில் கைவைப்பதற்கு நாங்கள் முனையவில்லை என்று கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்தார்.

சென்னையில் நடைபெற்ற அயகத்தமிழர் மாநாட்டில் பங்கேற்பதற்காகச் சென்றிருந்த அவர் தமிழகத் தொலைக்காட்சியொன்றுக்கு வழங்கிய செவ்வியின்போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

13ஆவது திருத்தச்சட்டம் தொடர்பாக நாங்கள் என்ன கருதுகின்றோம் என்பதை விடவும் தமிழ் மக்கள் என்ன நினைக்கின்றார்கள் என்பது தான் முக்கியமான விடயமாகும்.

தமிழ் மக்கள் 13ஆவது திருத்தச்சட்டத்தினை தமக்கு கிடைத்த உரிமையாக கருதுகின்றார்கள் என்பதை எம்மால் உணர்ந்து கொள்ள முடிந்துள்ளது.

அதனடிப்படையில் தான் நாம் எமது தேர்தல் விஞ்ஞாபனத்தில் அதனை உள்ளீர்த்திருந்தோம். 

அதுமட்டுமன்றி, 13ஆவது திருத்தச்சட்டம் நாட்டின் அடிப்படைச் சட்டமான அரசியலமைப்பிலும் காணப்படுகின்றது.

அந்த வகையில் எதிர்வரும் மார்ச் மாதமளவில் உள்ளுராட்சி மன்றங்களுக்கான தேர்தலை நடத்தவுள்ளதோடு அதனையடுத்து இந்த ஆண்டின் இறுதியில் அல்லது அடுத்த ஆண்டின் முற்பகுதியில் மாகாண சபைகளுக்கான தேர்தலை நடத்துவதற்கு எதிர்பார்த்துள்ளோம்.

மேலும், தமிழ் மக்கள் தங்களுடைய உரிமைகளை வென்றெடுக்கும் விடயமாக 13ஆவது திருத்தச்சட்டத்தினையும், மாகாண சபை முறைமையும் கருதுகின்றபோது அதனை அர்த்தபுஷ்டியான நிருவாகக் கட்டமைப்பாக செயற்படுத்திப் பார்ப்பதற்கு நாங்கள் தயாராகவே உள்ளோம்.

ஆகவே 13ஆவது திருத்தச்சட்ட விடயத்தில் எமது நிலைப்பாட்டை விடவும் தமிழ் மக்களின் நிலைப்பாடே முக்கியமானது. அதேநேரம், தோழர் அநுரகுமார தலைமையிலான அரசாங்கமானது அனைத்து மக்களின் ஆணையுடனேயே ஆட்சிப்பொறுப்பினைப் பெற்றுள்ளது.

இதனால், அது அனைத்து மக்களுக்கான அரசாங்கமாகச் செயற்படவுள்ளதோடு, மக்கள் நலன்களுக்கே முக்கியத்துவம் அளிக்கும் என்பதையும் தெரிவித்துக் கொள்கின்றேன் என்றார்.

https://www.virakesari.lk/article/203814

இந்திய - இலங்கை மீனவர்கள் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு : புதிய அணுகுமுறைகளுடன் பேச்சுக்கள் ஆரம்பிக்கப்படவுள்ளதாக பிரதி அமைச்சர் ரத்ன கமகே தெரிவிப்பு

3 months 1 week ago

Published By: DIGITAL DESK 2

14 JAN, 2025 | 07:58 PM
image

இந்திய இலங்கை மீனவர்கள் பிரச்சினைக்கு நிரந்தரமான தீர்வைக் காண்பதற்காக  மீண்டும் இருதரப்பு பேச்சுவார்த்தைகளை மீண்டும் ஆரம்பிக்கவுள்ளதாக கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் பிரதி அமைச்சர் ரத்ன கமகே தெரிவித்தார்.   

இலங்கை கடல் பகுதியில் சட்டவிரோத மீன்பிடித்தலை முடிவுக்குக் கொண்டுவர இந்திய அதிகாரிகளுடன் ஒரு உடன்பாட்டை எட்டுமாறு பல மீன்பிடி தொழிற்சங்கங்கள் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளமை தொடர்பில் கருத்து வெளியிடும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

தென்னிந்திய மீனவர்கள் இழுவைபடகுகளைப் பயன்படுத்தி மீன்பிடிப்பதோடு சட்டவிரோத உபகரணங்களையும் பயன்படுத்துகின்றார்கள். இதனை இலங்கை மீனவர்கள் எதிர்க்கின்றார்கள். அத்துடன் இந்த நடைமுறைகள் இந்தியப் பெருங்கடலின் கடல் வளங்களுக்கும் தீங்கு விளைவிப்பதால் இரு தரப்பினருக்குமே பாதிப்புக்கள் ஏற்படுகிறன.

இதுபோன்ற சட்டவிரோத நடவடிக்கைகளைத் தடுப்பதற்கான நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கு இந்தியத் தரப்பும் தயாராக உள்ளது. தொடர்ச்சியான பேச்சுவார்த்தைகளின் அடிப்படையில் விடயங்களை முன்னெடுப்பதற்கு நாமும் தயாராகவே உள்ளோம். ஆனால் அடுத்து வரும் காலத்தில் புதுப்பிக்கப்பட்ட அணுகுமுறையுடன், இந்திய அதிகாரிகளுடன் விரிவான இருதரப்பு பேச்சுவார்த்தைகளை அரசாங்கம் ஆரம்பிக்கவுள்ளது.

ஜனாதிபதியின் இந்திய விஜயத்தின்போது கூட இந்த விவகாரம் குறித்து இந்திய அரசாங்கத்திற்கு விளக்கமளிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், அது மட்டும் போதாது. எனவே, இந்திய அதிகாரிகளுடன் இருதரப்பு பேச்சுக்களை மீண்டும் ஆரம்பிப்பதற்கு திட்டமிட்டுள்ளோம். இந்தியப் பெருங்கடலுக்கு ஏற்படும் சேதங்கள் காரணமாக பெரும்பாலான தென்னிந்திய மீனவர்களும் சட்டவிரோதமான மீன்படி உள்ளிட்ட நடவடிக்கைகளுக்கு எதிராகவே உள்ளனர், இருப்பினும் ஒரு சில மீனவர்கள் மட்டுமே இதுபோன்ற சட்டவிரோத நடைமுறைகளில் ஈடுபடுகிறார்கள்.

ஒரு நாடாக தனியாக நடவடிக்கைகளை எடுப்பதை விட, ஒரு இராஜதந்திர அணுகுமுறை மூலம் இந்தப் பிரச்சினையைத் தீர்க்க வேண்டும். கடந்த ஆண்டு ஒக்டோபரில், ஆறாவது தடவையாக இந்திய-இலங்கை கூட்டுப் பணிக்குழு கூட்டம் கொழும்பில் நடைபெற்றது, இதில் இந்திய மீன்வள அமைச்சின் மூத்த அதிகாரிகள் தலைமையிலான இந்தியக் குழு கலந்து கொண்டது.

இந்தப் பேச்சுவார்த்தைகளின் போது, இப்பிரச்சினையைத் தீர்ப்பதற்கான கூட்டு நடவடிக்கைகளில் ஒத்துழைப்பை வலுப்படுத்துவதற்கு இரு தரப்பினரும் ஒப்புக்கொண்டனர் இருப்பினும், அது இறுதித் தீர்மானம் இல்லாமல் முடிந்தது. 2024 ஆம் ஆண்டின் தொடக்கத்தில், இந்திய அடிமட்ட இழுவைப் படகுகளால் உள்ளுர் மீன்பிடி உபகரணங்களுக்கு ஏற்பட்ட சேதம் 700 மில்லியன் ரூபாவாகக் காணப்படுகின்றது என்றார்.

https://www.virakesari.lk/article/203807

இஸ்ரேலிய வீரர்களுக்கான விசாக்களை நிராகரியுங்கள்; ஜனாதிபதி அநுரவுக்கு தேசிய ஷுரா சபை கடிதம்

3 months 1 week ago

Published By: DIGITAL DESK 2   14 JAN, 2025 | 02:33 PM

image
 

(நமது நிருபர்)

இலங்கைக்கு வந்த இஸ்ரேலியர்களுக்கு எதிராக ஏற்கனவே கூறப்பட்ட சட்டவிரோத நடவடிக்கைகள் தொடர்பாக விசாரணைகளை மேற்கொள்ள வேண்டுமெனக் கோரியுள்ள தேசிய ஷுரா சபையானது, இஸ்ரேலிய வீரர்களுக்கான விசா வழங்குதலை இலங்கை நிராகரிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளது.

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவுக்கு  இலங்கையில் இஸ்ரேலிய பிரஜைகள் தொடர்பான அவதானங்களும் சமூக நல்லிணக்கத்திலும் தேசிய பாதுகாப்பிலும் ஏற்படலாமென எதிர்பார்க்கப்படும் பாதிப்பும் என்ற தலைப்பில் தேசிய ஷுரா சபையின் பொதுச்செயலாளர் ரஷீத் எம். இம்தியாஸ் அனுப்பி வைத்துள்ள கடிதத்திலேயே மேற்கண்டவாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

https://www.virakesari.lk/article/203801

தூய்மை இலங்கை திட்டம்-முன்மொழிவுகளை சமர்பிக்குமாறு அறிவிப்பு!

3 months 1 week ago
தூய்மை இலங்கை திட்டம்-முன்மொழிவுகளை சமர்பிக்குமாறு அறிவிப்பு! தூய்மை இலங்கை திட்டம்-முன்மொழிவுகளை சமர்பிக்குமாறு அறிவிப்பு!

தூய்மை இலங்கை திட்டம் தொடர்பாக செயல்படுத்தப்பட வேண்டிய புதிய நடவடிக்கைகள் குறித்து அனைத்து அமைச்சகங்களிடமிருந்தும் முன்மொழிவுகளை ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க கோரியுள்ளார்.

இது தொடர்பாக, ஒவ்வொரு அமைச்சகத்திலும் வெவ்வேறு குழுக்கள் நியமிக்கப்படவுள்ளதுடன் தற்போது அமைச்சகங்களால் செயல்படுத்தப்படும் திட்டங்களுக்குப் பதிலாக புதிய திட்டங்கள் இந்த திட்டத்தின் கீழ் சமர்ப்பிக்கப்பட வேண்டும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது

ஜனாதிபதி அலுவலக அதிகாரிகள், தூய்மை இலங்கை திட்டம் மற்றும் ஒவ்வொரு அமைச்சகமும் கவனம் செலுத்த வேண்டிய பகுதிகள் குறித்து அமைச்சுகளில் உள்ள பணியாளர் மட்ட அதிகாரிகளுக்குச் சென்று விளக்கமளிப்பார்கள் என்று ஜனாதிபதி அலுவலக வட்டாரங்கள் தெரிவித்துள்ள

புதிய திட்டங்கள் அடங்கிய அறிக்கைகளை அனைத்து அமைச்சகங்களும் தயாரிக்க வேண்டும் என்றும், இந்த விவகாரம் தொடர்பாக ஜனாதிபதி ஒவ்வொரு அமைச்சகத்தையும் தனித்தனியாக வரவழைக்க உள்ளதாகவும் அந்த வட்டாரங்கள் மேலும் குறிப்பிட்டுள்ளன.

https://athavannews.com/2025/1416262

இராணுவ மரியாதையுடன் சீனாவில் வரவேற்கப்பட்ட ஜனாதிபதி அநுர

3 months 1 week ago
புதிய இணைப்பு

சீன ஜனாதிபதி சீ ஜின்பிங்கின் (Xi Jinping) அழைப்பின் பேரில் சீனாவிற்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்ட ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க, இன்று (14 ) சீன நேரப்படி காலை 10.25 மணியளவில் சீனாவின் பீஜிங் சர்வதேச விமான நிலையத்தை சென்றடைந்துள்ளார்.

அங்கு, சீன பிரதி வெளியுறவு அமைச்சர் சென் சியாடொன் வரவேற்றதோடு சீன இராணுவத்தின் முழு இராணுவ மரியாதையுடன் ஜனாதிபதிக்கு வரவேற்பளிக்கப்பட்டது.

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க பயணித்த பாதையின் இருமருங்கும் இரு நாடுகளின் தேசியக் கொடிகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தன.

இந்த உத்தியோகபூர்வ விஜயத்தின் போது, தொழில்நுட்பம் மற்றும் விவசாய மேம்பாடு, வறுமை ஒழிப்பு ஆகியவற்றை நோக்கமாகக் கொண்ட பல களப் பயணங்களிலும் பல உயர் மட்ட வணிகக் கூட்டங்களிலும் ஜனாதிபதி பங்கேற்க உள்ளார். 

இராணுவ மரியாதையுடன் சீனாவில் வரவேற்கப்பட்ட ஜனாதிபதி அநுர | President Anura Kumara Visits China

முதலாம் இணைப்பு

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க (Anura Kumara Dissanayake) இன்று அதிகாலை சீனாவுக்கான உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு, நாட்டில் இருந்து புறப்பட்டுச் சென்றுள்ளார்.

கட்டுநாயக்க விமான நிலையத்தின் சாதாரண பயணிகள் முனையம் வழியாக ஜனாதிபதி மற்றும் தூதுக்குழுவினர் புறப்பட்டுச் சென்றுள்ளனர்.

ஜனாதிபதியுடன் தூதுக்குழு

இந்தப் பயணத்தில் ஜனாதிபதியுடன் அமைச்சர்களான விஜித ஹேரத், பிமல் ரத்நாயக்க உள்ளிட்ட தூதுக்குழுவொன்றும் புறப்பட்டுச் சென்றுள்ளது.

இராணுவ மரியாதையுடன் சீனாவில் வரவேற்கப்பட்ட ஜனாதிபதி அநுர | President Anura Kumara Visits China

இலங்கை மற்றும் சீனாவுக்கு இடையிலான பல்வேறு ஒப்பந்தங்கள் ஜனாதிபதியின் இந்த விஜயத்தின் போது கைச்சாத்திடப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

https://tamilwin.com/article/president-anura-kumara-visits-china-1736821457

இலங்கைக்கு காத்திருக்கும் நெருக்கடி - பொருளாதார நிபுணர்கள் எச்சரிக்கை

3 months 1 week ago

நாட்டில் வங்கிக் கடன்களுக்கான வட்டி விகிதங்கள் குறைவாக இருக்கும் நேரத்தில், கட்டுப்பாடு இல்லாமல் வாகனங்கள் இறக்குமதி செய்யப்பட்டால், மீண்டும் அந்நிய செலாவணி நெருக்கடி ஏற்படக்கூடும் என்று பொருளாதார ஆய்வாளர்கள் எச்சரித்துள்ளனர்.

நாட்டின் வர்த்தக சமநிலையை நேர்மறையான மதிப்பில் பராமரிக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

பெப்ரவரி மாதம் முதல் இறக்குமதி செய்யப்படும் அனைத்து வாகனங்களுக்கான வரி சதவீதத்தை அரசாங்கம் சமீபத்தில் சிறப்பு வர்த்தமானி அறிவிப்பின் மூலம் அறிவித்தது.

 

அந்நியச் செலாவணி

இதன் மூலம் 5 ஆண்டுகளாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனங்களின் இறக்குமதிக்கு மீண்டும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

 

இலங்கைக்கு காத்திருக்கும் நெருக்கடி - பொருளாதார நிபுணர்கள் எச்சரிக்கை | Sri Anka Faces Crisis Due To Vehicle Imports

வாகன இறக்குமதிகள் முறையாக ஒழுங்குபடுத்தப்படாவிட்டால், நாட்டில் மீண்டும் அந்நியச் செலாவணி நெருக்கடி ஏற்படக்கூடும் என்று, பேராதனைப் பல்கலைக்கழகத்தின் பொருளாதாரத் துறையின் சிரேஷ் பேராசிரியர் வசந்த அதுகோரல தெரிவித்துள்ளார்.

https://tamilwin.com/article/sri-anka-faces-crisis-due-to-vehicle-imports-1736824889?itm_source=article

நாடளாவிய ரீதியில் ஆலயங்களிலும் வீடுகளிலும் சிறப்பாக இடம்பெற்ற தைப்பொங்கல் பண்டிகை

3 months 1 week ago
14 JAN, 2025 | 01:54 PM
image
 

நாடளாவிய ரீதியில் ஆலயங்களிலும் வீடுகளிலும் தைப்பொங்கல் பண்டிகையினை இன்று செவ்வாய்க்கிழமை (14)  தமிழர்கள் சிறப்பாக கொண்டாடினர்.  

உழவர் திருநாளாம் தைத்திருநாளை முன்னிட்டு  உலகளாவிய ரீதியில் தமிழர்கள்  ஆலயங்களிலும் வீடுகளிலும் பொங்கல் பொங்கப்பட்டு விசேட பூஜை வழிபாடுகள் நடைபெற்றுவருகின்றன.

அந்த வகையில் நாட்டிலும் தமிழர்கள் வாழும் பகுதிகளில் பொங்கல் பண்டிகை சிறப்பாக இடம்பெற்று வருகின்றது.

மட்டக்களப்பு

சீரற்ற காலநிலைக்கும் மத்தியில் உழவர் திருநாளாம் தைத்திருநாளை முன்னிட்டு இன்று மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள ஆலயங்களிலும் வீடுகளிலும் பொங்கல் பொங்கப்பட்டு விசேட பூஜை வழிபாடுகள் நடைபெற்றுவருகின்றன.

கிழக்கிலங்கையின் வரலாற்றுசிறப்புமிக்க மட்டக்களப்பு அமிர்தகழி ஸ்ரீமாமாங்கேஸ்வரர் ஆலயத்தில் தைத்திருநாளை முன்னிட்டு விசேட பொங்கல் வழிபாடுகள் நடைபெற்றன.

WhatsApp_Image_2025-01-14_at_09.20.47.jp

WhatsApp_Image_2025-01-14_at_09.20.44__1

WhatsApp_Image_2025-01-14_at_09.20.43.jp

WhatsApp_Image_2025-01-14_at_09.20.53__1

மன்னார்

மன்னார் மாவட்டத்தில் உள்ள இந்து மற்றும் கத்தோலிக்க தமிழ் மக்கள் தைப்பொங்கல் பண்டிகையை மிகவும் சிறப்பாக கொண்டாடியுள்ளனர்.

குறிப்பாக மன்னார் மாவட்டத்தில் உள்ள  இந்து ஆலயங்களில் விசேட தைப் பொங்கல் நிகழ்வுகள் இடம்பெற்றதுடன் பூஜை வழிபாடுகளும் இடம்பெற்றது.

மேலும் வர்த்தக நிலையங்கள், நிதி நிறுவனங்கள் உட்பட அனைத்து கத்தோலிக்க தேவாலயங்களிலும் தைப்பொங்கல் பண்டிகை கொண்டாடப்பட்ட தோடு விசேட திருப்பலியும் ஒப்புக்கொடுக்கப்பட்டது.

மன்னார் பஜார் பகுதியில் உள்ள வர்த்தக நிலையங்களுக்கு முன்பாகவும் பொங்கல் பொங்கி  மக்கள் மகிழ்சியை பகிர்ந்து கொண்டனர்.

மன்னார் மாவட்டத்தில் தொடர்ச்சியாக மழை பெய்து வரும் நிலையில் மக்கள் அமைதியான முறையில் பொங்கல் பண்டிகையை கொண்டாடினர்.

WhatsApp_Image_2025-01-14_at_9.14.09_AM.

WhatsApp_Image_2025-01-14_at_9.14.08_AM_

WhatsApp_Image_2025-01-14_at_9.14.08_AM.

கண்டி

கண்டி ஸ்ரீ செல்வ விநாயகர்  ஆலயத்தில் தைப்பொங்கல் விசேட சமய வழிபாடு கோயில் அறங்காவலர் கிருஸ்ணமூர்த்தி தலைமையில் இடம்பெற்றது.

காலையில் பொங்கல் நிகழ்வுகளுடன் விசேட சமய வழிபாடுகள் இடம்பெற்றன. பக்த அடியார்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

P1060120.JPG

P1060122.JPG

P1060131.JPG

யாழ்ப்பாணம்

நயினாதீவு நாகபூஷணி அம்மன் ஆலயம் 

தைப்பொங்கல் தினத்தினை முன்னிட்டு, நயினாதீவு நாகபூஷணி அம்மன் ஆலயத்தில் இன்று  செவ்வாய்க்கிழமை (14) சிறப்பு பொங்கல் வழிபாடு இடம்பெற்றது.

3__2_.jpg

3__1_.jpg

வல்லிபுர ஆழ்வார் திருக்கோயில் 

யாழ்ப்பாணம் - வடமராட்சி வல்லிபுர ஆழ்வார் திருக்கோயில் தைப்பொங்கல் விசேட பூசைகள் அதன் பிரதம குரு ஸ்ரீமான் பிரம்மஸ்ரீ சுதர்சன கணபதீஸ்வர குருக்கள்  தலமையில் இன்று இடம் பெற்றது.

IMG_20250114_085043.jpg

IMG_20250114_090258.jpg

IMG_20250114_083803.jpg

 

புத்தளம்

தைப்பொங்கள் விஷேடப் பூஜை புத்தளம் ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தில் முன்னெடுக்கப்பட்டது

புத்தளம் ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தில் தைப்பொங்கள் விஷேட பூஜைகள் ஆலய பிரதமகுரு சிவஸ்ரீ அம்பலவானன் குருக்கள் தலைமையில் இடம்பெற்றது.

VideoCapture_20250114-095113.jpg

VideoCapture_20250114-095100.jpg

வவுனியா

உழவர் திருநாளான தைப்பொங்கல் தினத்தை முன்னிட்டு வவுனியாவில் இந்து ஆலயங்களில் விசேட பூஜை வழிபாடுகள் இன்று செவ்வாய்க்கிழமை (14) இடம்பெற்றன.

அதற்கிணங்க, வவுனியாவின் பிரதான ஆலயங்களில் ஒன்றாகிய கந்தசாமி ஆலயத்தில் புதுப் பானையில் புத்தரிசி இட்டு பொங்கல் இடம்பெற்றதுடன், ஆலய பிரதம குரு தலைமையில் விசேட பூசையும் இடம்பெற்றது.

IMG-20250114-WA0118.jpg

IMG-20250114-WA0105.jpg

https://www.virakesari.lk/article/203792

அரசியல் கைதிகளென எவரும் தடுத்து வைக்கப்படவில்லை - நீதி அமைச்சர் ஹர்ஷண நாணயக்கார அறிவிப்பு

3 months 1 week ago
13 JAN, 2025 | 06:03 PM
image
 

(ஆர்.ராம்)

நாடாளவிய சிறைகளில் அரசியல் கைதிகளென யாரும் தடுத்து வைக்கப்படவில்லை என்று நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் சட்டத்தரணி ஹர்ஷண நாணயக்கார வீரகேசரியிடம் தெரிவித்தார்.

அத்துடன், பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களின் பட்டியலொன்று தயாரிக்கப்பட்டு வரும் நிலையில் அவர்கள் குறித்து சட்டமா அதிபரின் ஆலோசனைகளைப் பெற்று அடுத்தகட்ட நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்குத் தயாராகி வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

நீண்ட காலமாகவும், சில வருடங்களாகவும் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்யுமாறு ஆட்சியாளர்களிடம் கோரிக்கை விடுக்கும் வகையில் வடக்கு கிழக்கு மாகாணங்களில் பொதுமக்களிடத்தில் கையெழுத்துக்களைச் சேகரித்து ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவிடமும், சட்டமா அதிபரிடமும் கையளிக்கும் முகமாக போராளிகள் நலன் புரிச்சங்கத்தினர் நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

ஏற்கனவே யாழ்ப்பாணம், மன்னார், வவுனியா, திருகோணமலை உள்ளிட்ட பகுதிகளில் கையெழுத்துப் பெற்றுக்கொள்ளும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ள நிலையில் தமிழ் அரசியல் கைதிகள் தொடர்பில் எவ்விதமான நடவடிக்கைகளை அரசாங்கம் முன்னெடுப்பதற்கு எதிர்பார்த்துள்ளது என்பது தொடர்பில் வினவியபோதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

நாட்டில் உள்ள எந்தவொரு சிறைகளிலும் அரசியல் கைதிகள் என்றொருவரும் இல்லை என்பதை நான் முதலில் தெரிவித்துக்கொள்கின்றேன். ஆனால் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டவர்கள் உள்ளார்கள்.

இவர்களில் சிலருக்கு தண்டனை அளிக்கப்பட்டுள்ளது. சிலரது வழக்குகள் நீண்டகாலமாகவும், குறுகிய காலமாகவும் விசாரணைகளுக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றது.

அந்த வகையில், நாடாளவிய ரீதியில் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுத் தடுத்து வைக்கப்பட்டவர்களின் பட்டியலை விரைவாக தயாரிக்கும் நடவடிக்கை என்னால் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

அந்தப் பட்டியல் தயாரிக்கப்பட்டதன் பின்னர் அடுத்தகட்ட நடவடிக்கைகளைச் சட்டமா அதிபர் திணைக்களத்தின் ஆலோசனைகளைப் பெற்று முன்னெடுப்பதற்குத் தயாராகி வருகின்றேன்.

அரசாங்கத்தினைப் பொறுத்தவரையில், பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்கள் தொடர்பாக இன,மத, மொழி பேதங்களுக்கு அப்பால் நியாயமாக நடவடிக்கைகளை முன்னெடுப்பதையே இலக்காக கொண்டிருக்கின்றது.

அதேநேரம், குறித்த சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு தண்டனை பெற்றுள்ளவர்கள் குறித்து எம்மால் எந்தவிதமான நடவடிக்கைகளையும் செய்ய முடியாது. ஏனென்றால் நீதிமன்றம் தீர்ப்பளித்து விட்டது. எனினும் அவர்களின் விபரங்களையும் பெற்றுக்கொண்டு அடுத்த கட்ட நடவடிக்கைகள் தொடர்பில் ஜனாதிபதியுடன் கலந்துரையாடுவதற்கு எதிர்பார்த்துள்ளேன் என்றார்.

https://www.virakesari.lk/article/203742

வவுனியாவில் தைப் பொங்கலை முன்னிட்டு விசேட வழிபாடுகள்!

3 months 1 week ago
வவுனியாவில் தைப் பொங்கலை முன்னிட்டு விசேட வழிபாடுகள்! வவுனியாவில் தைப் பொங்கலை முன்னிட்டு விசேட வழிபாடுகள்!

உழவர் திருநாளான தைப் பொங்கல் தினத்தை முன்னிட்டு வவுனியாவில் இந்து ஆலயங்களில் விசேட பூஜை வழிபாடுகள் இன்று இடம்பெற்றுள்ளன

அதன்படி வவுனியாவின் பிரதான ஆலயங்களில் ஒன்றாகிய கந்தசாமி ஆலயத்தில் புதுப் பானையில் புத்தரிசி இட்டு பொங்கல் இடம்பெற்றதுடன், ஆலய பிரதம குரு தலைமையில் விசேட பூசையும் இடம்பெற்றுள்ளன.

https://athavannews.com/2025/1416292

 
Checked
Fri, 04/25/2025 - 18:23
ஊர்ப் புதினம் Latest Topics
Subscribe to ஊர்ப்புதினம் feed
texte-feed
sqdgvsqfqsg vdgvdgvv qdsbrzbvzrbvzr