ஊர்ப்புதினம்

சீனாவுக்கு எதிரான எந்தவொரு செயற்பாடுகளுக்கும் இலங்கையை பயன்படுத்துவதற்கு இடமளிக்க​மாட்டேன் - ஜனாதிபதி

3 months 1 week ago

Published By: VISHNU   17 JAN, 2025 | 04:42 AM

image

(இராஜதுரை ஹஷான்)

சுயாதீன தாய்வான் எண்ணக்கருவை தாம் முழுமையாக எதிர்ப்பதாகவும், தேசிய மீள் ஒருங்கிணைப்பை அடைந்துக் கொள்வதற்காக சீன அரசினால் முன்னெடுக்கப்படும் சகல முயற்சிகளையும் ஆதரிப்பதாகவும்,சீனாவுக்கான தனது முதலாவது உத்தியோகபூர்வ அரசமுறை விஜயத்தின் போது சீன மக்கள் குடியரசிடம் உறுதியளித்துள்ள ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, சீனாவுக்கு எதிரான எந்தவொரு செயற்பாடுகளுக்கும் இலங்கையை பயன்படுத்துவதற்கு இடமளிக்க போவதில்லை எனவும் தெரிவித்துள்ளார்.

அதேவேளை இலங்கை சீன நிதி நிறுவனங்களுடன் இணைந்து ஒப்புக் கொண்டவாறு, கடன் மறுசீரமைப்பு திட்டத்தை விரைவில் செயற்படுத்துவதற்கு தாம் தயாராகவிருப்பதாக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவிடம் சீன அரசாங்கம் உத்தரவாதமளித்துள்ளது.

சீன மக்கள் குடியரசின் தலைவர் ஜனாதிபதி ஷீ ஜின்பிங்கின் அழைப்புக்கமைய ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க கடந்த செவ்வாய்க்கிழமை  சீனாவுக்கு நான்கு நாட்கள் உத்தியோகபூர்வ அரசமுறை விஜயத்தை மேற்கொண்டுள்ளார்.

இவ்விஜயத்தின் போது ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவுக்கும், சீன ஜனாதிபதி ஷீ ஜின்பிங், அரச சபை பிரதமர் லீ சியாங், மற்றும் தேசிய மக்கள் காங்கிரசின் நிலைக்குழுத் தலைவர் ஜாஓ லெர்ஜி ஆகியோருக்கிடையிலான இருதரப்பு சந்திப்பு இடம்பெற்றது. இதனையடுத்து இரு நாடுகளினதும் உயர்மட்ட பிரநிதிகளுக்கிடையில் கலந்துரையாடப்பட்ட விடயங்களை உள்ளடக்கி வெளியிடப்பட்டுள்ள இலங்கை – சீன கூட்டறிக்கையிலேயே மேற்கண்டவாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

அவ்வறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ள முக்கிய விடயங்கள் வருமாறு,

சுமுகமான மற்றும் நட்பு சூழ்நிலையில் இரு தரப்பினருக்கிடையில் பாரம்பரிய நட்பை மேலும் வலுப்படுத்தல், சீனாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான ஒரு மண்டலம் - ஒரு பாதை திட்டத்தை மேம்படுத்தல், பல்துறை நடைமுறை ஒத்துழைப்பை மேம்படுத்தல் மற்றும் பரஸ்பர ஆர்வமுள்ள பிராந்திய மற்றும் சர்வதேச பிரச்சினைகள் குறித்து இவ்விஜயத்தின் போது விரிவாக கலந்துரையாடப்பட்டுள்ளது.

இருதரப்பு உறவுகள் தொடர்பில் இரு நாடுகளின் தலைவர்களினதும் வலுவான மூலோபாய வழிகாட்டுதலைப் பேணுவதற்கும், இரு அரசுகள், சட்டமன்ற அமைப்புக்கள் மற்றும் அரசியல் கட்சிகளுக்கு இடையேயான இருதரப்பு பரிமாற்றங்களை மேலும் வலுப்படுத்துவதற்கும், அரசியலில் பரஸ்பர நம்பிக்கையை வலுப்படுத்துவதற்கும் ஒருவருக்கொருவர் ஆட்சி மற்றும் அபிவிருத்திக்கான அனுபவத்தை பகிர்ந்துக் கொள்வதற்கும்  அவற்றின் மூலம் கற்றுக் கொள்வதற்கும், சீன- இலங்கை உறவுகளை மேம்படுத்த அர்ப்பணிப்புடன் முயற்சிகளை மேற்கொள்வதற்கு இரு தரப்பினரும் இணங்கியுள்ளனர்.

இரு தரப்பினரும் தமது முக்கிய நலன்கள் மற்றும் கவனம் செலுத்த வேண்டிய விடயங்கள் தொடர்பிலான பிரச்சினைகளில் தமது பரஸ்பர ஆதரவை  மேலும் உறுதிப்படுத்தியுள்ளனர். ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் சபைத் தீர்மானம் 2758 இன் அதிகாரத்தை இரு தரப்பினரும் மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளதுடன், சீன அரசானது, முழு சீனாவையும் பிரதிநிதித்துவப்படுத்தும் ஒரே சட்டப்பூர்வ அரசாங்கம் என்பதையும், தாய்வான் சீனப்பிரதேசத்தில் பிரித்தெடுக்க முடியாத பிரதேசம் என்பதையும் அங்கீகரித்து ஒரே சீனா கொள்கைக்கான தனது வலுவான உறுதிப்பாட்டை இலங்கை மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது.

சுயாதீன தாய்வான் எண்ணக்கருவுக்கு இலங்கை எதிர்ப்பு

தேசிய மீள் ஒருங்கிணைப்பை அடைவதற்கான சீன அரசின் அனைத்து முயற்சிகளையும் இலங்கை உறுதியாக ஆதரிப்பதுடன் 'சுயாதீன தாய்வான்'  எண்ணக்கருவின் எவ்வித நிலையையும் எதிர்த்து நிற்கிறது. சீன தொடர்பான எந்தவொரு எதிர் மற்றும் பிரிவினைவாத செயற்பாடுகளுக்கு  இலங்கை தனது பிரதேசத்தை என்றும் பயன்படுத்த அனுமதிக்காது.

ஷிசாங் மற்றும் ஷின்ஜியாங்தொடர்பான  பிரச்சினைகளில் சீனாவை உறுதியாக ஆதரிக்கும் என்றும் இலங்கை மீண்டும் வலுயுறுத்தியது.தேசிய சுதந்திரம், இறையாண்மை மற்றும் பிராந்திய ஒருமைப்பாட்டைப் பாதுகாப்பதில் இலங்கையை  தொடர்ந்து வலுவாக ஆதரிப்பதாகவும், அதன்; தேசிய நிலைவரங்களுக்கு ஏற்ப வளர்ச்சிப் பாதையை சுயாதீனமான தெரிவுகளில் இலங்கைக்கு மதிப்பளித்து, அவற்றுக்கு ஆதரிப்பதாகவும் சீன மீண்டும் உறுதியளித்துள்ளது. சுதந்திரமானதும், அமைதியானதுமானதுமான வெளிவிவகாரக் கொள்கைக்கான அதன் உறுதிப்பாட்டை சீனத் தரப்பு மீண்டும் உறுதியளித்துள்ளது.

ஒரு மண்டலம் -ஒரு பாதை திட்டம்

இரு நாடுகளின் தலைவர்களின் வழிகாட்டுதல் மற்றும் ஊக்குவித்தலின் கீழ் சீனாவும் இலங்கையும் ஒரு மண்டலம் - ஒரு பாதை ஒத்துழைப்பில் பலனுறுதிமிக்க பெறுபேறுகளை உருவாக்கியுள்ளன. இலங்கை இதன் பொருளாதார மற்றும் சமூக அபிவிருத்தியிலும், தனது மக்களின் வாழ்வாதார மேம்பாட்டிலும்  ஒரு மண்டலம் ஒருபாதை  ஒத்துழைப்பு பங்கு வகிப்பது பாராட்டத்தக்கது. கொழும்புத் துறைமுக நகரம் மற்றும் அம்பாந்தோட்டை துறைமுக ஒருங்கிணைந்த அபிவிருத்தி உள்ளிட்ட அனைத்து திட்டங்களுக்கும் முன்னுரிமை வழங்கக்கூடிய செயற்பாட்டு நடவடிக்கைகளையும் முன்னெடுப்பதற்கும், பட்டுப்பாதைச் செயற்பாட்டுத் திட்டம் போன்ற தளங்களை முழுமையாக பயன்படுத்துவதற்கும், வாழ்வாதாரத்துக்கான நிகழ்ச்சித் திட்டங்களுக்கமைவாக ஒன்றாகத் திட்டமிடுதல், ஒன்றாகக் கட்டியெழுப்புதல் மற்றும் ஒன்றாக பயடைதல், திறந்தும் என்ற வகையில் சீன ஜனாதிபதி முன்வைத்த  எட்டு முக்கிய படிவுகளை பின்பற்றுவதற்கு இரு தரப்பினரும் இணக்கம் தெரிவித்துள்ளனர்.

கடன் மறுசீரமைப்பு

கடன் பிரச்சினைகளை திறம்பட கையாள்வதற்கு இலங்கைக்கு சீனா ஆதரவாக விளங்கியது. கடன்களை மறுசீரமைப்பதற்கு வழங்கிய முக்கிய உதவி உட்பட நிதிசார் நெருக்கடி மிகுந்த காலப்பகுதியில் சீனாவிடமிருந்து இலங்கை பெற்ற பெறுமதிமிக்க ஆதரவுக்கு இலங்கை தனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துள்ளது. இலங்கை சீன நிதி நிறுவனங்களுடன் இணைந்து ஒப்புக் கொண்டவாறு, கடன் மறுசீரமைப்பு திட்டத்தை விரைவில் செயற்படுத்துவதற்கு தனது விருப்பத்தை வெளிப்படுத்தியுள்ளது. சர்வதேச நாணய நிதியத்தில் சீனா தொடர்ந்து  நேர்மறையான பங்கை பகிப்பதுடன், இலங்கையின் நிதிச் சிக்கல்களைத் தணிக்கவும், கடன் ஸ்திரத்தன்மையை  பேணவும் உதவும் வகையில், ஏனைய கடன் வழங்குநர்களுடன் நட்புரீதியான தொடர்பைப் பேணுகிறது. இலங்கை மத்திய வங்கியும், சீன மக்கள் வங்கியும், தங்கள் நாணய மாற்று ஒப்பந்தத்தை புதுப்பித்துள்ளதுடன், நிதிசார் ஒத்துiபை;பைத் தொடர்ந்து மேற்கொள்ளவுள்ளன.

சுதந்திர வர்த்தக ஒப்பந்தம்

பொருளாதாரம் மற்றும் வர்த்தகத்தில் இருதரப்ப ஒத்துழைப்பின் முன்னேற்றத் குறித்து இரு தரப்பினும் அதிருப்தியடைந்துள்ளனர். தேயிலை, இரத்தினக்கல் மற்றும் பிற தொழில்களில் ஈடுபட்டுள்ள இலங்கை நிறுவனங்களுக்கு சீன இறக்குமதியாளர்கள் மற்றும் ஏற்றுமதியாளர்கள் சங்கங்களுடன் உறவுகளை ஏற்படுத்துவதில் தொடர்ந்து ஆதரவளிக்க இணங்கப்பட்டுள்ளது.

சீன - இலங்கை சமத்துவம், பரஸ்பர நன்மை மற்றும் இருதரப்பினதும் வெற்றியை நோக்காகக் கொண்ட கொள்கைகளுக்கு இணங்க சகலதும் அடங்கிய தொகுப்பொன்றில் விரிவாக சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்தை முன்கூட்டியதாக முடிவுக்கு கொண்டு வருவதற்கு இரு தரப்பினரும் ஒப்புக் கொண்டுள்ளனர்.

விவசாயத்துறை மேம்பாடு

விவசாயம் தொடர்பான பரந்த அளவிலான ஒத்துழைப்பு மற்றும் ஆழமான பரிமாற்றங்கள் குறித்து நேர்மறையான மதிப்பீடுகளை இரு தரப்பினரும் பகிர்ந்துக் கொண்டனர். இலங்கையின் நிலையானதும், வளங்குன்றாததுமான விவசாய வளர்ச்சிக்கான திறனை மேம்படுத்த உதவும் வகையில் வெப்பமண்டல பயிர்களுக்கான உயிரியற் தொழில்நுட்பங்கள், தாவரப் பெருக்கம், பயிர்ச்செய்கை மற்றும் மீன்வளர்ப்பு உள்ளிட்ட துறைகளில் இலங்கையுடன் பயிற்சி மற்றும் செயற்விளக்க நடவடிக்கைகளில் ஈடுபட தயாராகவிருப்பதாக சீன தெரிவித்துள்ளது.

நீல (கடல்சார்) கூட்டாண்மைக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம்

சமத்துவம், பரஸ்பர நம்பிக்கை,வெளிப்படைத்தன்மை, மற்றும் பரஸ்பர நன்மை ஆகியவற்றின் அடிப்படையில் கடல்சார் ஒத்துழைப்பைத் தொடரவும், கடல்சார் விவகாரங்களில் தொடர்ந்து இருதரப்பினரும் ஆலோசனை நடத்தவும் இணங்கியுள்ளனர்.கடல்சார் மற்றும் சுற்றுச்சூழலை பாதுகாத்தல், மற்றும் மறுசீரமைத்தல், கடல்சார் கள விழிப்புணர்வு கடல்சார் மீட்பு மற்றும் பேரிடர் நிவாரணம், கடல்சார் பணியாளர்களுக்கான பயிற்சி மற்றும் திறன் மேம்பாடு போன்ற துறைகளில் ஒத்துழைப்பை மேலும் விரிவுப்படுத்தவும் இரு தரப்பினரும் தயாராகவுள்ளனர். நீல (கடல்சார்) கூட்டாண்மைக்கான கடல்சார் ஒத்துழைப்பு குறித்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கைச்சாத்திட இரு தரப்பினரும் இணக்கம் தெரிவித்துள்ளனர்.

கல்வித்துறை மேம்பாட்டுக்கு இணக்கம்

கல்வித்துறையில் ஒத்துழைப்பு மேம்படுத்த இரு தரப்பினரும் தயாராகவுள்ளனர். புரிதல் மற்றும் நட்பை மேம்படுத்துவதற்கு கல்வித்துறையில் மாற்றம் ஏற்பட வேண்டும்.இலங்கை மாணவர்கள் சீனாவில் உயர்கல்வியை தொடர்வதை சீன வரவேற்று ஊக்குவிப்பதுடன், அவர்களுக்கு அரசாங்க புலமைப்பரிசல்கள் வழங்குவதற்கு தயாராகவுள்ளது.இரு நாடுகளின் பல்கலைக்கழகங்கள் மற்றும் ஆராய்ச்சி நிறுவனங்களில் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப பரிமாற்றங்கள், ஒத்துழைப்பு மற்றும் கல்வித் துறையை மேம்படுத்தவும் இணக்கம் தெரிவிக்கப்பட்டது.

ஆசிய முன்முயற்சி மற்றும் ஆசியாவில் கலாச்சார பாரம்பரியத்துக்கான கூட்டணி

ஜனாதிபதி ஷி ஜின்பிங்கின் கலாச்சார பாரம்பரிய பாதுகாப்புக்கான கூட்டணி போன்றவற்றில் பங்கேற்பதற்கான இலங்கையின் நேர்மறையான பதிலை சீனத் தரப்பு பாராட்டியுள்ளது. இக்கூட்டணியின் கீழ் இலங்கையுடன் இருதரப்பு கலாச்சார பாரம்பரிய ஒத்துழைப்பை சீனா மென்மேலும் ஊக்குவிக்கும்.

தொலைத்தொடர்பு மோசடிகள் மற்றும் இணையத்தள குற்றங்களை கட்டுப்படுத்தல்

நீதித்துறை, சட்ட அமுலாக்கம் மற்றும் பாதுகாப்பு ஒத்துழைப்பு ஆகியவை இருதரப்பு ஒத்துழைப்பின் முக்கிய அம்சங்கள் என்பதை இலங்கை- சீன தரப்பு ஏற்றுக் கொண்டுள்ளதுடன்,தொலைத் தொடர்பு மோசடிகள் மற்றும் இணையத்தள சூதாட்டம் போன்ற குற்றங்களை கூட்டாகக் கட்டுப்படுத்துவதற்கு இணக்கம் தெரிவிக்கப்பட்டது.

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் இந்த அரசமுறை விஜயத்தில் விவசாயம், சுற்றுலா, வாழ்வாதார உதவி, ஊடகம் மற்றும் ஏனைய துறைகளில் இரு தரப்பு ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டன.

https://www.virakesari.lk/article/204013

சவூதி அன்பளிப்பாக வழங்கிய பேரீச்சம் பழத்துக்கு அதிக வரி செலுத்தியது ஏன்?

3 months 1 week ago
சவூதி அன்பளிப்பாக வழங்கிய பேரீத்தம் பழத்துக்கு அதிக வரி செலுத்தியது ஏன்?

சவூதி அன்பளிப்பாக வழங்கிய பேரீத்தம் பழத்துக்கு அதிக வரி செலுத்தியது ஏன்?

றிப்தி அலி

புனித ரமழான் மாதத்தில் இலங்கை முஸ்லிம்களுக்கு பகிர்ந்தளிப்பதற்காக சவூதி அரேபியாவினால் அன்பளிப்புச் செய்யப்பட்ட 50 மெட்ரிக் தொன் பேரீச்சம்  பழங்களுக்கு செலுத்த வேண்டிய வரித் தொகையினை விட அதிக வரிப்பணம் செலுத்தப்பட்டுள்ளமை தொடர்பில் கவனம் செலுத்துமாறும் மேலதிகமாக செலுத்தப்பட்டுள்ள கட்டணத்தினை மீளப் பெறுவதற்கான நடவடிக்கைகளை உடனடியாக முன்னெடுக்குமாறும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

ஆளும் கட்சியின் முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் சார்பில் மாத்தறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரான அர்க்கம் இல்யாஸ், புத்தசாசன, சமய விவகார மற்றும் கலாசார அமைச்சர் ஹினிதும சுனில் செனவியிடம் இந்த கோரிக்கையினை முன்வைத்துள்ளார்.

"ரமழானுக்காக அன்பளிப்புச் செய்யப்படும் பேரீச்சம் பழங்களை விடுவித்தல், வரி செலுத்தல் மற்றும் விநியோகித்தல் ஆகியவற்றினை ஒழுங்குபடுத்தல்" எனும் தலைப்பில் நேற்று (15) புதன்கிழமை புத்தசாசன, சமய விவகார மற்றும் கலாசார அமைச்சர் ஹினிதும சுனில் செனவியிற்கு பாராளுமன்ற உறுப்பினரான அர்க்கம் இல்யாஸ் கடிதம் அனுப்பியுள்ளார்.

அக்கடிதத்தில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

நோன்பு காலத்திற்கான பேரீச்சம் பழங்களை இறக்குமதி செய்தல் மற்றும் விநியோகித்தல் ஆகியவற்றுக்காக 2025ஆம் ஆண்டின் 01ஆம் இலக்க குறைநிரப்பு மதிப்பீட்டின் ஊடாக முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்திற்கு 4 கோடி 63 இலட்சத்து 75 ஆயிரத்து 800 ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது.

இதில் சவூதி அரேபியாவினால் அன்பளிப்பாக வழங்கப்பட்ட 50 மெட்ரிக் தொன் பேரீச்சம் பழங்களுக்கான வரி மற்றும் தாமதக் கட்டணமாக 3 கோடி 28 இலட்சத்து 61 ஆயிரத்து 109 ரூபா முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தினால் சுங்கத் திணைக்களத்திற்கு செலுத்தப்பட்டுள்ளது.

இலங்கையிலுள்ள முஸ்லிம்களுக்கு ரமழான் மாத்திற்கென 500 மெட்ரிக் தொன் பேரீச்சம் பழங்கள் தேவைப்படுகின்றன. இதில் 10 சதவீதமான 50 மெட்ரிக் தொன்னைப் விடுவிப்பதற்காக ஒரு கிலோ பேரீச்சம் பழத்திற்கு 657 ரூபாவும் 22 சதமும் செலவிடப்பட்டுள்ளது. இதில் இவற்றை ஏற்றி இறக்கும் செலவுகள் உள்ளடக்கப்படவில்லை. 

மேலும் பேரீச்சம் பழத்திற்கான 08041020 எனும் எச்எஸ் குறியீட்டுக்கு பதிலாக உலர்ந்த விவசாயப் பொருட்களுக்காக பயன்படுத்தப்படும் 08042020 எனும் எச்எஸ் குறியீட்டினை பயன்படுத்தியமையினாலேயே மேலதிக கட்டணம் செலுத்தப்பட்டுள்ளது.

இதனிடையே வெளிநாட்டு அரசாங்கங்கள், நிறுவனங்கள், வணிக நிறுவனங்கள், தொண்டர் அமைப்புகள் மற்றும் நலம்விரும்பிகளிடமிருந்து எந்தவித அந்நியச் செலாவணியும் தொடர்புபடாமல் பரிசாக அல்லது நன்கொடையாக அனுப்பப்படும் பேரீச்சம் பழங்களுக்கு 199 ரூபா வரிச் சலுகை வழங்குவதற்கான அனுமதியினை கடந்த டிசம்பர் 31ஆம் திகதி அமைச்சரவை வழங்கியுள்ள போதிலும் இவ்வாறு அதிக தொகைப் பணம் செலுத்தப்பட்டுள்ளதாக ஊடகங்களும் செய்தி வெளியிட்டுள்ளன.

அதேவேளை, முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தினால் நன்கொடையாக கிடைக்கப் பெறும் பேரீச்சம் பழங்களை விடுவிப்பதற்கும் விநியோகிப்பதற்கும் தேவையான Standard Operating Procedures (SOP) இல்லை என்ற விடயம் ஆரம்ப கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக குறித்த கடிதத்தில் பாராளுமன்ற உறுப்பினர் அர்க்கம் சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும், மாவட்ட ரீதியாக உள்ள பள்ளிவாசல்களில் பதிவுசெய்யப்பட்டுள்ள குடும்பங்களின் புதுப்பிக்கப்பட்ட தரவுகளுமில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார். இந்த விடயம் தொடர்பில் பொதுமக்களை தெளிவூட்டல் மற்றும் இராஜதந்திர தொடர்பு, மேலதிக கட்டணத்தினை மீளப் பெறல், சுங்க விடுவிப்பினை துரிதப்படுத்தல், விநியோகத்தில் பின்தங்கிய குடும்பங்களை முன்னிலைப்படுத்தல் உள்ளிட்ட எட்டு பரிந்துரைகளை பாராளுமன்ற உறுப்பினர் அர்கம் குறித்த கடிதத்தில் உள்ளடக்கியுள்ளார்.

பாராளுமன்ற உறுப்பினர் அர்க்கம் அனுப்பியுள்ள இக்கடித்தின் பிரதிகள் வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் விஜித ஹேரத், ஆளும் கட்சியிலுள்ள முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் பணிப்பாளர் ஆகியோருக்கும் அனுப்பிவைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, இந்த விவகாரம் தொடர்பில் தேசிய மக்கள் சக்தியின் முஸ்லிம் எம்.பிக்கள் அனைவரும் ஒன்றிணைந்து அமைச்சருடன் கலந்துரையாடல்களை முன்னெடுத்து வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

https://ynei.vidiyal.lk/post/--3209

வடக்கில் ‘Beyond Borders’

3 months 1 week ago
Beyond-Borders-2-e1736922086214-1024x651
 
வடக்கில் ‘Beyond Borders’
 
 
 
 
 

 

கடந்த வாரம் பிரித்தானியாவைச் சேர்ந்த ‘எல்லைகளுக்கு அப்பால்’ (Beyond Borders) ஆவணப்படத் தயாரிப்பாளர்கள் வடமாகாணம் சென்றிருந்தார்கள். அங்கு அவர்கள் கிளிநொச்சியில் முன்னாள் போராளியும் ஊடகவியலாளருமான கோகிலவாணி, யாழ்ப்பாணத்தில் தொழில் முனைவர் ஜஸ்டின் குமார் மற்றும் The Jaffna Club நிறுவனரும் பத்தி எழுத்தாளருமான ஜெகன் அருளையா அவர்களையும் சந்தித்து வடக்கு வாழ் மக்களின் வாழ்வியல் தொடர்பான ஆவணப்படமொன்றிற்கான படப்பிடிப்பில் ஈடுபட்டார்கள்.

லண்டனைச் சேர்ந்த நண்பர்கள் லூயி கோல் (Louis Cole) மற்றும் ஜே.பி. என அழைக்கப்படும் ஹுவான் -பீற்றர் ஷுள்ஸ் (Juan-Peter (JP) Schulze) ஆகிய இருவரும் இரண்டு ஆசனங்களைக் கொண்ட இரட்டை இயந்திர விமானத்தில் உலகம் முழுவதையும் சுற்றிப்பார்த்து பல்வேறு வகையான மக்களின் கலாச்சாரங்கள் பற்றி ஆவணப்படங்களைத் தயாரித்து Beyond Borders என்ற பெயரில் வெளியிட்டு வருகிறார்கள். கடந்த வாரம் இவர்கள் வட மாகாணத்திற்கு சென்றிருந்தபோது நிகழ்ந்த மேற்படி சந்திப்பு பற்றி யாழ்ப்பாணத்தில் வாழ்ந்துவரும் நண்பர் ஜெகன் அருளையா அவர்கள் தன் முகநூலில் இவர்களது வருகை பற்றிப் பதிவிட்டிருந்தார்.

 

ஜெகன் அருளையா தனது இரண்டாவது வயதில் பெற்றோருடன் பிரித்தானியாவிற்குப் புலம் பெயர்ந்து வாழ்ந்த பின்னர் கடந்த 10 வருடங்களாக யாழ்ப்பாணத்தில் வாழ்ந்து வருகிறார். வட மாகாணத்தில் காணப்படும் வளங்கள், புலம்பெயர் மக்களின் முதலீடுகள் மற்றும் அங்குள்ள போதாமைகள் பற்றி அவ்வப்போது லங்கா பிஸினெஸ் ஒன்லைன் ஆங்கில இணையப் பத்திரிகையில் பத்திகள் எழுதி வருகிறார். அவரது கட்டுரைகளை தமிழில் மொழிபெயர்த்து ‘வளரும் வடக்கு’ என்ற தொடராக’மறுமொழியில்‘ பதிவிட்டு வருகிறோம். ஜஸ்டின் குமார் ஒரு அமெரிக்க குடிமகனாகவிருந்தும் யாழ்ப்பாணத்தில் விவசாயப் பண்ணைகளை உருவாக்கி மரக்கறி, பழவகைகளைப் பதனிட்டு வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்கிறார். இவரது பண்ணை பற்றியும் ஜெகன் அருளையா கட்டுரைகளை எழுதியிருக்கிறார்.

Beyond Borders தயாரிப்பாளர்களில் லூயி கோல் ஒரு யூ-ரியூப் காணொளிகளைத் தயாரிப்பதில் ஆரம்பித்து இப்போது உலகம் முழுவதும் சென்று எல்லைகளுக்கப்பால் கண் காணாத மக்களையும் அவர்களது கலாச்சாரங்களையும் ஆவணப்படுத்தி வருகிறார். இவரது நண்பரான ஜே.பி. ஒரு விமான ஓட்டி. 2015 இல் தென்னாபிரிக்காவில் ஆரம்பித்த இவர்களது சுற்றுப்பயணம் 90 நாட்களில் பல்வேறு நாடுகளையும் தரிசித்து மீண்டும் ஆரம்பித்த இடத்திற்கே வந்திருந்தது. மீண்டும் 2017 இல் இதே போன்றொரு சுற்றுப்பயணம் நடைபெற்றிருந்தது. இதுவரை உலகின் 6 கண்டங்களில் 22 நாடுகளுக்குச் சென்று வந்திருக்கிறார்கள். இவர்களது படைப்புகளின் வெற்றியைத் தொடர்ந்து தற்போது இக்குழு முழுநீள ஆவணப்படத் தயாரிப்பு நிறுவனமாக வளர்ந்திருக்கிறது.

 

பொங்கலுக்கு முதல் வாரம் வன்னி வந்தடைந்த இக்குழு முன்னாள் போராளி கோகிலவாணியைச் சந்தித்து போருக்குப் பின்னான, குறிப்பாகப் பெண்களின் வாழ்வியலைப் படமாக்கினார்கள். பின்னர் யாழ்ப்பாணம் சென்று உடுவிலில் ஜஸ்டின் குமார் அவர்களது பண்ணையில் மாம்பழம் பதனிடும் ஆலையைப் பார்வையிட்டதுடன் அங்கு பணிபுரியும் உள்ளூர் பணியாளர்களுடன் உரையாடல்களையும் மேற்கொண்டனர்.

காலை உணவிற்காக ஜெகன் அருளையா அவர்களை பலாலி வீதியிலுள்ள அம்மாச்சி உணவகத்திற்கு அழைத்துச் சென்றிருந்தார். இலங்கை விவசாயத் திணைக்களத்தின் வெற்றிகரமான கருத்துருவாக்கத்தில் உருவான அம்மாச்சி-யாழ்ப்பாணம் பெண் தலைமைத்துவக் குடும்பங்களுக்கு வாழ்வாதாரம் அளிக்கும் அதே வேளை குறைந்த விலையில் நிறைந்த சுவையுடனான உணவை வழங்கும் ஒரு உணவகம் (food court) ஆகும்.

லூயி கோலின் இதர காணொளிகளை இத்தொடுப்பில் பார்க்கலாம். Image Courtesy: Jekhan Aruliah

Beyond-Borders-1-576x1024.jpeg Beyond-Borders-2-1024x576.jpeg Beyond-Borders-3-576x1024.jpeg Beyond-Borders-4-1024x576.jpeg

 

https://marumoli.com/வடக்கில்-beyond-borders/Beyond-Borders-5-1024x576.jpeg

இலங்கையில் இந்தி: முதலாவது திறந்த கற்கை நெறி ஆரம்பம்

3 months 1 week ago
Screen-Shot-2025-01-12-at-12.57.05-AM.pn
இலங்கையில் இந்தி: முதலாவது திறந்த கற்கை நெறி ஆரம்பம்
 
 

இலங்கையில் இந்தி மொழியைப் பரப்புவதற்கான உத்தியோகபூர்வமான முயற்சி நேற்று எடுக்கப்பட்டிருக்கிறது. திறந்த மற்றும் தூரக் கற்கை மூலம் மாணவர்கள் இந்தி மொழியில் சான்றிதழ் பட்டத்தைப் பெறும் வசதியை சுவாமி விவேகானந்தா கலாச்சார மையம் மேற்கொண்டிருக்கிறது. உலக இந்தி தினத்தின் 50 ஆவது வருட நிறைவையொட்டி ஆரம்பித்து வைக்கப்பட்ட பாரத் – சிறீலங்கா சம்மேளனத்தின் ஒரு அங்கமாக இச்சான்றிதழ் வழங்கல் அறிமுகப்படுத்தப்பட்டிருக்கிறது.

இலங்கையின் திறந்த பல்கலைக்கழகத்துடன் இணைந்து சுவாமி விவேகானந்தா கலாச்சார மையம் நாடு தழுவிய ரீதியில் இக்கற்கை நெறியை அறிமுகப்படுத்தவுள்ளது. உலகில் அதிகரித்து வரும் இந்தி மொழிப் பாவனையைக் கருத்தில் கொண்டு இலங்கையின் அனைத்து பகுதிகளிலுமுள்ள பல்கலைக்கழகங்களில் இந்தி மொழிக் கல்வி அறிமுகப்படுத்தப்படும்.

 

உத்தியோக பூர்வமாக இக்கற்கை நெறி நேற்று (ஜனவரி 11) இலங்கைக்கான இந்தியத் தூதுவர் சந்தோஷ் ஜா, இலங்கை உயர்கல்விக்கான அமைச்சர் டாக்டர் மதுரா செனிவிரத்ன, பல்கலைக்கழக மானிய ஆணையத் தலைவர் பேரா. கபில செனிவிரத்ன மற்றும் இலங்கை திறந்த பல்கலைக்கழக துணைவேந்தர் பேரா. பி.எம்.சீ. திலகரத்ன ஆகியோர் இவ்வாரம்ப விழாவில் கலந்துகொண்டிருந்தனர்.

இவ்விழாவில் பேசிய டாக்டர் மதுரா செனிவிரத்ன இலங்கைக்கும் இந்தியாவுக்குமிடையேயான தகவற் பாலமாக இந்தி மொழியே இருக்குமெனவும் இந்திய இசையும் சினிமாவும் உலகில் இந்தி மொழியைப் பிரபலமாக்கி வருகின்றன எனவும் தெரிவித்தார்.

இந்தியா, இலங்கை, நேபாளம் ஆகிய நாடுகளிலிருந்து 400 இற்கும் மேற்பட்ட அறிஞர்கள், கல்வியாளர்கள், மாணவர்கள் இக்கற்கைத் திட்டத்தில் இந்நிகழ்வில் பங்குபற்றியிருந்தார்கள். 25 சிறப்புப் பேச்சாளர்கள் பங்குபற்றிய மூன்று முழுநேர அமர்வுகள், இந்தி மொழியின் கலாச்சாரச் சிறப்பைக் கொண்டாடும் வகையிலான கவிதை வாசிப்பு, இருநாடுகளுக்குமிடையிலான பாரம்பரியப் பொதுமையை வெளிப்படுத்தும் கலாச்சார நிகழ்வுகள் மற்றும் தற்காலக் கல்வியில் இந்தி மொழியின் பங்கு பற்றிய திறந்த உரையாடல் ஆகிய நிகழ்வுகள் இங்கு இடம்பெற்றிருந்தன.

நிகழ்வின் முடிவில் பொலிவூட் திரைப்படமான இங்லிஷ் விங்லிஷ் திரையிடப்பட்டது.

இலங்கையில் தற்போது 88 பாடசாலைகளிலும், 9 அரச பல்கலைக்கழகங்களிலும் கற்பிக்கப்பட்டு வருகிறது.

https://marumoli.com/இலங்கையில்-இந்தி-முதலாவ/

யாழ். நாகர் கோவில் கடற்கரையில் ஒதுங்கிய மிதவையில் 18 புத்தர் சிலைகள்!

3 months 1 week ago
யாழ். நாகர் கோவில் கடற்கரையில் ஒதுங்கிய மிதவையில் 18 புத்தர் சிலைகள்! 
16 Jan, 2025 | 04:02 PM
image
 

யாழ்ப்பாணத்தில் கரை ஒதுங்கிய மிதவையில் காணப்பட்ட 18 புத்தர் சிலைகளையும் மருதங்கேணி பொலிஸார் மீட்டு பொலிஸ் நிலையத்துக்கு கொண்டுசென்றுள்ளனர். 

வடமராட்சி கிழக்கு நாகர் கோவில் கடற்கரையில் நேற்றைய தினம் புதன்கிழமை (15) அதிகாலை மிதவை ஒன்று கரை ஒதுங்கியிருந்தது. 

இந்த மிதவையில் புத்தர் சிலைகள், தேங்காய்கள் முதலான பொருட்கள் காணப்பட்டன. 

பர்மாவில் இறந்த பிக்குகளை (தேரர்களை)  நினைவுகூரும் முகமாக ஆரம்பகாலம் முதல்  சடங்கு முறையொன்று மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 

மிதக்கும் வீடுகளை தயார் செய்து அதற்குள் நினைவுகூரும் தேரர்களின் சிற்பங்களை / படங்களை வைத்து அவர்களுக்கு படையலிட்டு கடலில் விடும் வழக்கம் இருக்கிறது. அந்த மிதக்கும் வீடு எந்த கரையை அடைகின்றதோ அங்கே அவர்களது ஆன்மா சென்றடைவதாக ஒரு ஐதீகம் பர்மிய பௌத்தர்களிடையே காணப்படுகிறது.

அந்த வகையில், நாகர் கோவில் பகுதியில் கரை ஒதுங்கிய மிதக்கும் வீடானது பிக்கு ஒருவரை நினைவுகூரும் முகமாக அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

அந்த பிக்குவை நினைவுகூரும் சடங்குகளை செய்து மிதக்கும் வீட்டினை அமைத்து கடலில் விட்டவர்களின் விபரங்களும் பர்மிய மொழியில் அந்த மிதவையில் உள்ளதாக  தெரிவிக்கப்படுகிறது. 

011__4_.jpg

011__5_.jpg

011__6_.jpg

யாழ். நாகர் கோவில் கடற்கரையில் ஒதுங்கிய மிதவையில் 18 புத்தர் சிலைகள்!  | Virakesari.lk

சிறீதரன் எம்.பி முடிந்தால் ஸ்டாலினுடன் பேசி மீனவர் பிரச்சினையை தீர்த்து வைக்கட்டும் - யாழ். மீனவர் அமைப்பு சவால்!

3 months 1 week ago

Published By: Digital Desk 3

16 Jan, 2025 | 05:01 PM
image
 

முடிந்தால் கிளிநொச்சியில் உள்ள தமிழ் பாராளுமன்ற உறுப்பினர் அவர்கள், தமிழக முதலமைச்சருடன் கதைப்பதற்கு நேரத்தினைப் பெற்று, அவருடன் கலந்துரையாடி எமது மீனவர்களின் பிரச்சினையை தீர்த்து வைக்கட்டும், அதன் பின்னர் நாங்கள் அவரது செயற்பாடுகளை வரவேற்கின்றோம் என யாழ்ப்பாண மாவட்ட மீனவர் கூட்டுறவு சங்கங்களின் சமாசங்களின் சம்மேளனத்தின் உபதலைவர் பிரான்சிஸ் ரட்ணகுமார் சவால் விடுத்துள்ளார்.

இன்றையதினம் சம்மேளனத்தின் யாழ்ப்பாண அலுவலகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு சவால் விடுத்துள்ளார். 

அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,

தற்போது எமது கடற்தொழில் அமைச்சராக உள்ள சந்திரசேகரன் அவர்களுக்கும் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் முதலமைச்சர் ஸ்டாலினுடன் கதைப்பதற்கு நல்ல ஒரு சந்தர்ப்பம் கிடைத்தும் அவர்கள் அதனை சரியாக பயன்படுத்தவில்லை.

அண்மையில் தமிழ்நாட்டில் நடைபெற்ற மாநாடு ஒன்றில் முதலமைச்சர் ஸ்டாலினுக்கு பக்கத்தில் அமர்ந்திருந்த கிளிநொச்சி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் அங்கு இருந்த போதே இலங்கை மீனவர்களின் பிரச்சினைகளை முதலமைச்சரிடம் எடுத்துக் கூறாமல் இங்கு வந்தபின்னர், முதலமைச்சருடன் பேசுவதற்கு நேரம் ஒதுக்கி தருமாறு தான் கேட்டுள்ளதாகவும், மீனவர்களின் பிரச்சினைகளை கதைக்கப்போவதாகவும் கூறுகின்றார். இதெல்லாம் பகட்டுக்கும், எதிர்காலத்தில் மீனவர்களின் வாக்குகளை பெற்றுக்கொள்வதற்காகவும் கூறுகின்றார்.

இந்தியாவில் தேர்தல் நெருங்குகின்றது. தேர்தல் காலத்தில் உங்களுக்கு நேரம் ஒதுக்கி தர மாட்டார்கள். இயலும் என்றால் நீங்கள் நேரத்தினை பெற்று நமது மீனவர்களின் பிரச்சினை குறித்து பேசித் தீருங்கள், அதற்கு பின்னர் நாங்கள் உங்களை வரவேற்கின்றோம்.

தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுடன் கதைப்பதற்கு, கடந்த காலத்தில் கடற்தொழில் அமைச்சராக இருந்த டக்ளஸ் தேவானந்தாவிடமும் கோரிக்கை முன்வைத்தோம் இதன்போது அவர் மு.க.ஸ்டாலின் மற்றும் கனிமொழி ஆகியோரிடம் இது குறித்து தெரிவித்தார். இருப்பினும் எமக்கான நேரம் வழங்கப்படவில்லை. அப்படி எமக்கு நேரம் வழங்கப்பட்டிருந்தால் நாங்கள் எமது பிரச்சினைகளை நேரடியாகவே எடுத்துக்கூறி இருப்போம் என்றார்.

 

சிறீதரன் எம்.பி முடிந்தால் ஸ்டாலினுடன் பேசி மீனவர் பிரச்சினையை தீர்த்து வைக்கட்டும் - யாழ். மீனவர் அமைப்பு சவால்! | Virakesari.lk

வடக்கு கடற்றொழிலாளர்களை ஏமாற்ற முயலும் அரசியல்வாதிகள் : டக்ளஸ் குற்றச்சாட்டு

3 months 1 week ago

 இந்திய கடற்றொழிலாளர்களின் அத்துமீறல் தொடர்பில் தமிழ்நாட்டு முதலமைச்சருடன் பேசப்போவதாக கூறி வடபகுதி கடற்றொழிலாளர்களை சில அரசியல்வாதிகள் ஏமாற்ற முயற்சிப்பதாக முன்னாள் கடற்தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா(douglas devananda) குற்றம் சாட்டினார்.

தமிழ்நாட்டில், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்(stalin) தலைமையில் இடம்பெற்ற அயலவர்கள் நிகழ்வில் பங்கேற்ற தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள்,  இலங்கை - இந்திய கடற்றொழிலாளர்கள் தொடர்பில் முதலமைச்சரிடம் பேசாமை தொடர்பில் அவரிடம் கருத்து கேட்ட போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்,

தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலர் பங்கேற்றார்கள். குறித்த நிகழ்வில் இலங்கையிலிருந்து (sri lanka)சென்ற சில தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் செல்பி எடுத்தமை சமூக ஊடகங்களில் வெளியாகியது. இலங்கை இந்திய கடற்றொழிலாளர் விவகாரம் பல வருடங்களாக பேசுபொருளாக இருக்கின்ற நிலையில் எல்லை தாண்டிய இந்திய கடற்றொழிலாளர்களை கட்டுப்படுத்துமாறு தமிழக முதல்வரிடம் நிகழ்வில் கலந்து கொண்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் பேசியிருக்கலாம், ஆனால் அவர்கள் அவ்வாறு பேசியதாக தெரியவில்லை.

வடபகுதி கடற்றொழிலாளர்களை ஏமாற்றும் நாடகம்

குறித்த நிகழ்வில் கலந்து கொண்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் தமிழக முதல்வருடன் கடற்றொழிலாளர்கள் விவகாரம் தொடர்பில் பேசுவதற்கு தயாராக இருப்பதாகவும் அதற்கான ஒழுங்குகள் மேற்கொள்ளதாகவும் தெரிவித்திருந்தார். அவரது கருத்தானது வடபகுதி கடற்றொழிலாளர்களை ஏமாற்றும் ஒரு நாடகமாக நான் கருதுகிறேன்.

வடக்கு கடற்றொழிலாளர்களை ஏமாற்ற முயலும் அரசியல்வாதிகள் : டக்ளஸ் குற்றச்சாட்டு | Douglas Accuses Politicians Deceive Fishermen

தமிழ்நாட்டில் தமிழக முதல்வரின் அருகில் அமர்ந்திருக்கும் போது கடற்றொழிலாளர்கள் விவகாரம் தொடர்பில் பேசி இருக்கலாம். அல்லது குறித்த நிகழ்வு முடிவடைந்த பின் தமிழக ஊடகங்களுக்கு இந்த கடற்றொழிலாளர்கள் விவகாரத்தில் உண்மைத் தன்மையை தொடர்பில் தெரியப்படுத்திருக்கலாம், ஆனால் அவர்கள் அவ்வாறு செய்யவில்லை.

சந்தர்ப்பம் பார்த்து சாதித்தேன்

நான் கடற்தொழில் அமைச்சராக இருந்தபோது இந்திய கடற்றொழிலாளர்கள் எல்லை தாண்டுகின்ற பிரச்சினை தொடர்பில் இரு நட்டுகடற்றொழிலாளர்களையும் அழைத்து தமிழ்நாட்டில் பேசுவதற்காக தமிழக தலைவர்களுடன் பேசினேன். நேரில் பேசுவதற்கு நேரம் தருவதாக கூறினார்கள் துரதிஷ்டம் அதிகாரம் தற்போது என்னிடம் இல்லை. நான் தற்போது அதிகாரத்திலிருந்து குறித்த நிகழ்வுக்கு தமிழ்நாடு சென்று இருந்தால் தமிழக முதலமைச்சருடன் பேசி இரு நாட்டு கடற்றொழிலாளர்களையும் அழைப்பது தொடர்பில் முடிவு எடுத்திருப்பேன்.

வடக்கு கடற்றொழிலாளர்களை ஏமாற்ற முயலும் அரசியல்வாதிகள் : டக்ளஸ் குற்றச்சாட்டு | Douglas Accuses Politicians Deceive Fishermen

இதையே நான் கூறுகிறேன் என்றால் எனது அரசியல் வரலாற்றில் தமிழ் மக்களுக்காக பல விடயங்களை சந்தர்ப்பம் பார்த்து பலவற்றை சாதித்திருக்கிறேன். உதாரணமாக கூற வேண்டுமானால் அறிவியல் நகர் பல்கலைக்கழகத்தை இராணுவத்தின் பிடியிலிருந்து விடுவிப்பதற்கு மஹிந்த ராஜபக்ச ஜனாதிபதியாக இருந்த போது அநுராதபுரத்தில் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்ட போது அவரிடம் பேசி சம்மதத்தை பெற்றேன்.

 

ஒருவேளை அறிவியல் நகர் பல்கலைக்கழகத்தை விடுவிப்பது தொடர்பில் பேசுவதற்கு நேரம் கேட்டிருந்தால் ஒரு வேளை அது நடைபெறாமல் போயிருக்கும். இது போன்ற பல உதாரணங்களை என்னால் குறிப்பிட முடியும்

தமிழ் மக்களின் அரசியல் தீர்வு

இதை ஏன் நான் கூறுகிறேன் என்றால் தமிழ் அரசியல்வாதிகள் தமிழ் மக்களை அழிவு பாதைக்கு கொண்டு சென்றதும் அவர்களின் சுயலாப அரசியலுக்காக. போர் முடிவடைந்து 15 வருடங்கள் ஆகின்ற நிலையில் தமிழ் மக்களின் அரசியல் தீர்வு இன்னும் கிடைக்கவில்லை அதற்கான பல சந்தர்ப்பங்கள் இருந்த போதும் அதனை தமிழ் அரசியல் தலைமைகள் பயன்படுத்தவில்லை. இப்போது இந்தியா கடற்றொழிலாளர்களின் எல்லை தாண்டிய விவகாரம் வடபகுதி கடற்றொழிலாளர்கள் தொடர்ச்சியாக பாதிக்கப்பட்டு வரும் நிலையில் அதனையும் தமிழ் அரசியல்வதிகள் தமது சுயலாப அரசியலுக்காக பயன்படுத்தி வருகின்றார்கள்.

வடக்கு கடற்றொழிலாளர்களை ஏமாற்ற முயலும் அரசியல்வாதிகள் : டக்ளஸ் குற்றச்சாட்டு | Douglas Accuses Politicians Deceive Fishermen

 

நான் அமைச்சராக இருந்தபோது வாருங்கள் இந்தியா சென்று கடற்றொழிலாளர்கள் விவகாரம் தொடர்பில் பேசுவோம் என்றேன் ஒரு சிலரை தவிர ஏனையவர்கள் மறுத்து விட்டார்கள். தேர்தலின் போது நான் பல ஆசனங்களை கேட்கவில்லை சில ஆசனங்களை எனக்கு தாருங்கள் மக்களின் அரசியல் அன்றாட பிரச்சனை மற்றும் அபிவிருத்தி என்பவற்றை தீர்த்து வைக்கிறேன் என வெளிப்படையாகவே கூறி வந்தேன். ஆனால் மக்கள் ஏதோ ஒன்றை நம்பி வாக்களித்து தற்போது ஏமாற்றம் அடையும் நிலையை எதிர்நோக்கி உள்ளனர் .சில தமிழ் அரசியல்வாதிகளுக்கு இந்திய கடற்றொழிலாளர்கள் விவகாரத்தை கையில் எடுத்தால் இந்தியா தம்மை பகைத்து விடும் மக்கள் என்ன துன்பத்தை அனுபவித்தாலும் பரவாயில்லை தமது இருப்பை தக்க வைக்க வேண்டும் என்ற நினைப்புடன் பயணிக்கிறார்கள்.

 

புதிய கடற்தொழில் அமைச்சரும் பேசவில்லை

புதிய கடற்தொழில் அமைச்சரும் தமிழ்நாட்டில இடம்பெற்ற நிகழ்வில் கலந்து கொள்வதற்காக சென்றிருந்த நிலையில் அவரும் தமிழக முதலமைச்சருடன் பேசவில்லை. முதலமைச்சருடன் பேசாதது ஒருபுறம் இருக்க அந்த நிகழ்வில் கலந்து கொண்டதன் பின்னர் வெளியில் காத்திருந்த தமிழக ஊடகங்களுக்கு முன்னால் தமிழக எல்லை தாண்டிய கடற்றொழிலாளர்களால் எமது வடபகுதி மீனவர்கள் படும் துன்பத்தை எடுத்து கூறி இருக்கலாம் அவ்வாறு கூறவில்லை.

வடக்கு கடற்றொழிலாளர்களை ஏமாற்ற முயலும் அரசியல்வாதிகள் : டக்ளஸ் குற்றச்சாட்டு | Douglas Accuses Politicians Deceive Fishermen

 

ஆகவே கடற்றொழிலாளர்களான மக்கள் சரியான தீர்மானங்களை சரியான இடங்களில் எடுக்காததன் விளைவு எதிர்காலத்தில் பல்வேறு பிரச்சனைகளுக்கு முகம் கொடுப்பதை தவிர்க்க முடியாது போகும் என அவர் மேலும் தெரிவித்தார். 

வடக்கு கடற்றொழிலாளர்களை ஏமாற்ற முயலும் அரசியல்வாதிகள் : டக்ளஸ் குற்றச்சாட்டு - ஐபிசி தமிழ்

அரசியல் பழிவாங்கல்கள் தொடர்பான காரியாலயத்தை திறந்த மொட்டுக்கட்சி

3 months 1 week ago

கொழும்பு - பத்தரமுல்லை, நெலும் மாவத்தையில் அமைந்துள்ள ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன காரியாலயத்தில் அரசியல் பழிவாங்கல்கள் தொடர்பான தகவல்களை முன்வைக்க புதிய காரியாலயம் ஒன்று திறந்து வைக்கப்பட்டுள்ளது.

நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்‌ஷவின் தலைமையில் இந்த புதிய காரியாலயம் திறந்து வைக்கப்பட்டுள்ளது.

அரசியல் பழிவாங்கல்கள் தொடர்பான காரியாலயத்தை திறந்த மொட்டுக்கட்சி | Opens Office Address Political Victimization Slpp

 

மேலும் இந்த புதிய காரியாலய திறப்பு விழாவில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர்.   

 

அரசியல் பழிவாங்கல்கள் தொடர்பான காரியாலயத்தை திறந்த மொட்டுக்கட்சி | Opens Office Address Political Victimization Slpp

அரசியல் பழிவாங்கல்கள் தொடர்பான காரியாலயத்தை திறந்த மொட்டுக்கட்சி - ஜே.வி.பி நியூஸ்

"வளமான நாடு - அழகான வாழ்க்கை" உருவாக்குவதற்காக அரசாங்கம் முன்னெடுக்கும் திட்டத்திற்கு சீனா ஆதரவளிக்கும் - சீனப் பிரதமர் லி சியாங்

3 months 1 week ago

Published By: DIGITAL DESK 3   16 JAN, 2025 | 05:26 PM

image
 

"வளமான நாடு - அழகான வாழ்க்கை" உருவாக்குவதற்காக அரசாங்கம் முன்னெடுக்கும் திட்டத்திற்கு  ஆதரவளிப்பதாக சீனா பிரதமர் லீ சியாங் தெரிவித்தார்.

பீஜிங்கில் இன்று வியாழக்கிழமை (16) பிற்பகல் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவை சந்தித்து கலந்துரையாடியபோதே சீனப் பிரதமர் இதனைத் தெரிவித்தார்.

இதன்போது, ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவை சீனப் பிரதமர் லி சியாங் சிநேகபூர்வமாக வரவேற்றார்.

மேலும், இலங்கையின் பொருளாதார அபிவிருத்திக்கு சீனா அதிகபட்ச ஆதரவை வழங்கும் என்றும் சீனப் பிரதமர் லி சியாங் உறுதியளித்தார். 

ஊழலற்ற நாட்டை உருவாக்கும் தற்போதைய அரசாங்கத்தின் வேலைத்திட்டத்துக்கு சீனப் பிரதமர் பாராட்டு தெரிவித்தார். 

இங்கு கருத்து தெரிவித்த ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க, பாஹியன் பிக்குவின் காலத்திற்கு முன்பிருந்தே சீனாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான நட்புறவு  காணப்பட்டதென கூறினார். 

அதேபோல் வறுமையை ஒழித்து இலங்கையை டிஜிட்டல் மயமாக்குவதற்கான தற்போதைய அரசாங்கத்தின் வேலைத்திட்டத்திற்கு ஆதரவு வழங்குமாறும் சீனப் பிரதமரிடம் ஜனாதிபதி கேட்டுக்கொண்டார்.

தற்போதும் இலங்கைக்கு சீன அரசாங்கம் வழங்கிவரும் உதவிகளை நினைவு கூர்ந்த ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க, அதற்காக சீன அரசாங்கத்திற்கும் மக்களுக்கும் நன்றி தெரிவித்தார்.

மேலும் இதன்போது இரு நாடுகளுக்குமிடையிலான நீண்டகால நட்புறவை மேம்படுத்தல் மற்றும் முதலீட்டை ஊக்குவித்தல் தொடர்பில் விரிவாக கலந்துரையாடப்பட்டது.

இந்த சந்திப்பில் கலாசார பரிமாற்றம், வர்த்தகம் மற்றும் அரசியல் ஒத்துழைப்பு குறித்தும் விசேட கவனம் செலுத்தப்பட்டது.

வெளிவிவகார, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சர் விஜித ஹேரத், போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் பிமல் ரத்நாயக்க, இலங்கைக்கான சீனத் தூதுவர் சீ ஜென்ஹோங், சீனாவிற்கான இலங்கைத் தூதுவர் மஜிந்த ஜயசிங்க ஆகியோரும் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.

https://www.virakesari.lk/article/203990

இலங்கையின் சுயாதீனத் தன்மை, ஆள்புல ஒருமைப்பாடு மற்றும் இறையாண்மைக்கு சீனா அர்ப்பணிப்புடன் உள்ளது - சீன தேசிய காங்கிரஸ் நிலைக்குழுவின் தலைவர்

3 months 1 week ago

Published By: DIGITAL DESK 3   16 JAN, 2025 | 05:22 PM

image

இலங்கையின் சுயாதீனத் தன்மை, ஆள்புல ஒருமைப்பாடு மற்றும் இறையாண்மைக்காக சீனா அர்ப்பணிப்புடன் உள்ளதென சீன தேசிய காங்கிரஸ் நிலைக்குழுவின் தலைவர் ஜாவோ லெஜி (Zhao Leji) தெரிவித்தார்.

நான்கு நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு சீனா சென்றுள்ள ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க மற்றும் சீன தேசிய காங்கிரஸ் நிலைக்குழுவின் தலைவர் ஜாவோ லெஜி ஆகியோருக்கு இடையில் இன்று வியாழக்கிழமை (16) காலை நடைபெற்ற சந்திப்பின்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இதன்போது, ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவிற்கு சீன தேசிய காங்கிரஸ் நிலைக்குழுவின்  தலைவர் சிநேகபூர்வமாக வரவேற்பளித்தார்.

மேலும், கருத்து தெரிவித்த ஜாவோ லெஜி, இலங்கையுடன் தொடர்ந்து ஒத்துழைத்துச் செயற்பட வேண்டும் என்பதே சீன தேசிய காங்கிரஸின் எதிர்பார்ப்பாகும் எனவும் கூறினார்.

வெளிவிவகார, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சர் விஜித ஹேரத், போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க, இலங்கைக்கான சீனத் தூதுவர் சீ ஜென்ஹோங், சீனாவிற்கான இலங்கைத் தூதுவர் மஜிந்த ஜயசிங்க ஆகியோரும்  இதன்போது கலந்து கொண்டனர்.

https://www.virakesari.lk/article/203985

மதுபானசாலைகளுக்கான அனுமதி விவகாரம் : உண்மைகளை உடன் வெளியிடுங்கள்; இல்லையேல், நீங்களும் ஊழல்வாதிகள்தான் - சுமந்திரன்

3 months 1 week ago
16 JAN, 2025 | 06:07 PM
image

மதுபானசாலைகளுக்கான அனுமதி விவகாரம் தொடர்பான உண்மைகளை உடன் வெளியிடுங்கள். இல்லையேல், நீங்களும் ஊழல்வாதிகள்தான் என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். 

யாழ்ப்பாணம் வடமராட்சி ஊடக இல்லத்தில் இன்று (16) நடைபெற்ற ஊடக சந்திப்பிலேயே இவர் இவ்வாறு தெரிவித்திருந்தார். 

அங்கு அவர் மேலும் கூறுகையில்,

உடுப்பிட்டி மதுபானசாலை ஏன் தொடர்ந்தும் இயங்க வேண்டும் என்பது தொடர்பில் வழக்கு சாட்சியமளிப்பு இடம்பெற்று வருகிறது. 

நாட்டில் அதிகரித்த மதுபானசாலைகள் தொடர்பில் பல பிரச்சினைகள் எழுந்துள்ளன. அதிகரித்த மதுபான பாவனையால் நேற்றும் பருத்தித்துறையில் வாள்வெட்டு, கத்திக் குத்து இடம்பெற்றுள்ளன. 

மன்னாரில் இன்று நீதிமன்றின் முன் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது. இருவர் உயிரிழந்துள்ளனர். இவ்வாறான நிலை நாட்டுக்கு நல்லதல்ல.

பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு இலஞ்சமாக கடந்த காலத்தில் பார் லைசன்ஸ் வழங்கப்பட்டுள்ளது. 

இலஞ்சத்தை ஒழிப்போம், மதுபானசாலைகளுக்கான அனுமதி விவகாரத்தை வெளிப்படுத்துவோம் என்று வந்தவர்கள் இன்று வரை அதனை வெளிப்படுத்தவில்லை. இவர்களும் இலஞ்சத்துக்கு துணை போனவர்களாகத்தான் பார்க்க முடியும். நாம் சவால் விடுகிறோம், முடிந்தால் மதுபானசாலைகளுக்கான அனுமதி தொடர்பான உண்மைகளை உடன் வெளியிடுங்கள். இல்லையேல், நீங்களும் ஊழல்வாதிகள்தான். 

இலங்கை விடயம் சம்பந்தமாக தி.மு.க கனிமொழியை சந்தித்து கலந்துரையாடினோம்.  மத்திய அரசில் தமிழ் மக்கள் தொடர்பில் கரிசனை குறைந்துள்ளது.  

இலங்கை தமிழர்கள் தீர்வு விடயத்தில் புதிய அரசியல் அமைப்பு உருவாக்கத்துக்கு மூன்று ஆண்டுகள் தேவை என்று கூறுகிறது. அவ்வாறு தேவையில்லை. ஏற்கனவே இணங்கிக்கொண்ட விடயம். எனவே இவ்வளவு காலம் தேவையில்லை. காலத்தை இழுத்தடிப்பது அதை இல்லாமல் செய்வதற்கான ஒரு திட்டம்.

தமிழ் அரசு தலைமை தொடர்பிலும் புதிய அரசியலமைப்பு தொடர்பில் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், ச.சிறிதரன், செல்வம் அடைக்கலநாதன் பேச வருகிற விடயம் மற்றும் நீதிமன்ற வழக்குகள் தொடர்பில் எதிர்வரும் 18ஆம் திகதி மத்திய குழு கூட்டத்தில் பேசி முடிவெடுப்போம் என்று சுமந்திரன் தெரிவித்தார்.

https://www.virakesari.lk/article/204001

வாழைச்சேனை காகித ஆலை மீள இயங்குகிறது

3 months 1 week ago

வாழைச்சேனை காகித ஆலை மீள இயங்குகிறது

வாழைச்சேனை காகித ஆலை மீண்டும் இயங்க ஆரம்பித்துள்ளதாக கைத்தொழில் மற்றும் தொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் சுனில் ஹந்துநெத்தி தெரிவித்தார். 

சமூக ஊடகங்களில் வெளியிட்ட அறிக்கையில், காகித ஆலையில் செயலிழந்த இயந்திரங்கள் பழுதுபார்க்கப்பட்டதன் பின்னர் நடவடிக்கைகள் மீள ஆரம்பிக்கப்பட்டதாக அமைச்சர் ஹந்துநெத்தி தெரிவித்தார். 

கடந்த ஆண்டு பெப்ரவரி மாதம், தேசிய பொருளாதார மற்றும் பௌதீகத் திட்டங்களுக்கான பாராளுமன்றத் துறை மேற்பார்வைக் குழு, வாழைச்சேனை காகித ஆலையை மூடுவதற்கான முன்மொழிவுக்குப் பதிலாக, அரச-தனியார் கூட்டு முயற்சியாக நடத்துவதற்கான சாத்தியக்கூறுகளை ஆராய்வதாக உறுதியளித்தது.

வாழைச்சேனை தொழிற்சாலையின் இயந்திரங்கள் 1956 இல் இறக்குமதி செய்யப்பட்டதால், பழுதுபார்ப்பதற்கு சுமார் 1.2 மில்லியன் அமெரிக்க டொலர்கள் தேவைப்படுவதாக அப்போது தெரிவிக்கப்பட்டது.

1.2 மில்லியன் அமெரிக்க டொலர்கள் செலவழித்து இயந்திரங்களை பழுதுபார்த்தால் ஒரு நாளைக்கு 5 டன் உற்பத்தி செய்வதன் மூலம் மாதத்திற்கு 22 மில்லியன்  ரூபாய் லாபம் ஈட்டலாம் எனவும் குழு சுட்டிக்காட்டியது.

 

https://www.tamilmirror.lk/செய்திகள்/வாழைச்சேனை-காகித-ஆலை-மீள-இயங்குகிறது/175-350398

 

தேசிய மக்கள் சக்தியின் நிர்வாக காரியாலயம் வடமராட்சி கிழக்கில் திறந்துவைப்பு!

3 months 1 week ago

தேசிய மக்கள் சக்தியின் நிர்வாக காரியாலயம் வடமராட்சி கிழக்கில் திறந்துவைப்பு!
475445385.jpg

தேசிய மக்கள் சக்தியின் நிர்வாக காரியாலயம் வடமராட்சி கிழக்கு தாளையடியில் கடற்றொழில் அமைச்சர் இ.சந்திரசேகரனால் நேற்று புதன்கிழமை(15) திறந்து வைக்கப்பட்டுள்ளது.

பிரதேச இணைப்பாளர் மாடசாமி செல்வராசா தலமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் இளங்குமரன், வடமராட்சி கிழக்கு கடற்றொழிலாளர் கூட்டுறவு  சங்கங்களின் சமாச தலைவர் த.தங்கரூபன்,  பிரதேச கடற்றொழில் சங்கங்களின் நிர்வாகிகள்,  உறுப்பினர்கள், மருதங்கேணி இலங்கை வங்கி முகாமையாளர், உட்பட கட்சியின் பிரதேச ஆதரவாளர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர். 
 

https://newuthayan.com/article/தேசிய_மக்கள்_சக்தியின்_நிர்வாக_காரியாலயம்_வடமராட்சி_கிழக்கில்_திறந்துவைப்பு!

யாழ்ப்பாணத்தில் வேலையில்லா பட்டதாரிகள் வித்தியாசமான முறையில் போராட்டம்!

3 months 1 week ago

யாழ்ப்பாணத்தில் வேலையில்லா பட்டதாரிகள் வித்தியாசமான முறையில் போராட்டம்!
1725317847.jpg

வேலையில்லா பட்டதாரிகளின் பிரச்சினையையும் கோரிக்கையையும் மக்கள்மயப்படுத்தும் நோக்கில் விழிப்புணர்வு நிகழ்ச்சித்திட்டம்  ஒன்று இன்று  யாழ். நகர்ப்பகுதியில் முன்னெடுக்கப்பட்டது. 

வடக்கு மாகாணத்திலுள்ள வேலையில்லாப்பட்டதாரிகள் ஒன்றிணைந்து மேற்கொண்ட இந்த விழிப்புணர்வு செயற்திட்டத்தில் துண்டுப்பிரசுரம் வழங்கல், மக்களின் கருத்துக்களை உள்வாங்கல், போன்ற நிகழ்வுகளை வேலையில்லாபட்டதாரிகளின் கோரிக்கைக்கு வலுச்சேர்க்கும் வகையில் முன்னெடுக்கப்பட்டது. 

ஆரம்ப நிகழ்வு உலகத்தமிழாராட்சி மாநாட்டு படுகொலை நினைவு தூபி முன்றலில் காலை 9.30 மணிக்கு ஆரம்பமாகி அதனைத்தொடர்ந்து யாழ். நகர்ப்பகுதிக்குள் பேரணி இடம்பெற்றதுடன், பட்டம் பெற்றுவிட்டு தாங்களும் சாதாரண வேலைகளைத்தான் செய்கின்றனர் என்பதை எடுத்துக்காட்டும் முகமாக வீதியை கூட்டுதல், குப்பை வண்டியை தள்ளுதல் போன்ற விழிப்புணர்வு செயற்பாடுகளும் முன்னெடுக்கப்பட்டன. 

தமது பிரச்சினைகளையும் கோரிக்கைகளையும் மக்கள் மயப்படுத்தி தமக்கான தீர்வை பெற்றுக்கொள்ள வலுச்சேர்க்கும் நோக்குடன் இச்செயற்பாட்டை முன்னெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
 

https://newuthayan.com/article/யாழ்ப்பாணத்தில்_வேலையில்லா_பட்டதாரிகள்_வித்தியாசமான_முறையில்_போராட்டம்!

 

”கஜேந்திரகுமார் போன்றவர்கள் இங்கு துள்ளக்கூடாது.” - மேர்வின் சில்வா

3 months 1 week ago

”கஜேந்திரகுமார் போன்றவர்கள் இங்கு துள்ளக்கூடாது.” - மேர்வின் சில்வா
 

” இலங்கையென்பது சிங்கள, பௌத்த நாடாகும். எனவே, கஜேந்திரகுமார் பொன்னம்பலம் போன்றவர்கள் இங்கு துள்ளக்கூடாது.” என்று எச்சரித்துள்ளார் முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

” இலங்கையென்பது சிங்கள தேசமாகும். வடக்கில் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் என ஒருவர் இருக்கின்றார். அவர் கூக்குரல் (பௌத்த சாசனத்துக்கு எதிராக) எழுப்புகின்றார். எமது நாட்டில் அவ்வாறு செய்ய முடியாது.

பண்டுகாபய மன்னர் முதல் சிங்கள மன்னர்களே இலங்கையை ஆண்டுள்ளனர். எனவே, இது சிங்கள, பௌத்த தேசமாகும். எனினும், பௌத்த தர்மத்துக்கமைய நாம் அனைத்து சமயங்களையும், இனங்களையும் மதிக்கின்றோம்.

அந்தவகையில் எம்முடன் கைகோர்த்து பயணிக்க வேண்டும். அவ்வாறு இல்லாமல் எமது கரங்களை உடைத்துக்கொண்டு செல்ல முற்பட்டால் வாழ்வதற்கு தனியான உலகை தேடிக்கொள்ள நேரிடும். அதற்காகவே மேர்வின் சில்வா போன்றவர்கள் இருக்கின்றார்கள்.

வடக்கு, கிழக்கு, தெற்கு என்றில்லை இது ஒரு நாடு. சிங்கள தேசமாகும். பௌத்த சாசனம் பாதுகாக்கப்படும்வரை, புத்த தர்வமத்துக்கமைய வாழும்வரை இயற்கை இந்நாட்டை பாதுகாக்கும். இதற்கு எதிராக ஆட்சியாளர்கள் செயற்பட்டால் இயற்கை நிச்சயம் தண்டிக்கும்.” – என்றார்.
 

 

http://www.samakalam.com/கஜேந்திரகுமார்-போன்றவர/

யாழில் அதீத போதையுடன் இரு மாணவர்கள் கைது

3 months 1 week ago

Published By: DIGITAL DESK 2

16 JAN, 2025 | 11:27 AM
image
 

யாழ்ப்பாணம் புறநகர் பகுதியில் உள்ள பிரபல பாடசாலை ஒன்றின் இரு மாணவர்கள் அதீத போதையுடன் பொலிஸாரினால் நேற்று புதன்கிழமை (15) கைது செய்யப்பட்டுள்ளனர். 

மாணவர்கள் இருவரும் போதை மாத்திரைகளை உட்கொண்டுள்ளதாக பொலிஸ் விசாரணைகளில் தெரிய வந்ததை அடுத்து , மாணவர்களுக்கு அவற்றை விநியோகித்த நபர்களை கைது செய்வதற்கு பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். 

அதேவேளை கைது செய்யப்பட்ட இரு மாணவர்களையும் , மருத்துவ பரிசோதனைக்கு பின்னர் சிறுவர் நீதிமன்றில் முற்படுத்தவும் பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர். 

வட்ஸ் அப் செயலி ஊடாக மாணவர்களை உள்ளடக்கிய குழுக்கள் ஊடாக போதை மாத்திரை விநியோகங்கள் நடைபெற்று வருவதாக யாழில் பரவலான குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ள நிலையில், பொலிஸார் அது தொடர்பிலும் விசாரணைகளை முன்னெடுக்க வேண்டும் என பல தரப்பினரும் கடந்த காலங்களில் கோரிக்கை விடுத்து வந்தமை குறிப்பிடத்தக்கது. 

https://www.virakesari.lk/article/203940

யாழில் செப்பு கம்பிகளுக்காக அறுக்கப்படும் தொலைபேசி இணைப்புக்கள்

3 months 1 week ago

Published By: DIGITAL DESK 2   16 JAN, 2025 | 11:26 AM

image
 

யாழ்ப்பாணம் , நெல்லியடி பகுதிகளில் , செப்பு கம்பிகளை திருடுவதற்காக தொலைபேசி இணைப்பு வயர்களை இனம் தெரியாத நபர்கள் அறுத்து செல்வதாக நெல்லியடி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. 

நெல்லியடி பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதிகளில் கடந்த சில தினங்களாக தொலைபேசி இணைப்பு வயர்கள் அறுக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் 08 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 

அறுக்கப்பட்ட வயர்களின் பெறுமதி சுமார் 12 இலட்ச ரூபாய்க்கும் அதிகம் எனவும் தெரிவிக்கப்படுகிறது. 

0__2_.jpg

0__1_.jpg

https://www.virakesari.lk/article/203939

இந்திய மீனவர்கள் 6 பேர் விடுதலை

3 months 1 week ago

Published By: DIGITAL DESK 3   16 JAN, 2025 | 09:55 AM

image
 

கைது செய்யப்பட்ட இந்திய  மீனவர்கள் 6 பேரை விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

கடந்த டிசம்பர் மாதம் 8 ஆம் திகதி நெடுந்தீவு கடற்பரப்பில் எல்லை தாண்டி மீன்பிடித்த இந்திய மீனவர்கள் 8 பேர் கைது செய்யப்பட்டு, 2 விசைப்படகுகளும் கைப்பற்றப்பட்டன.

இதைத் தொடர்ந்து யாழ்ப்பாணம் சிறையில் அடைக்கப்பட்ட இந்திய மீனவர்கள் ஊர்காவல்துறை நீதிமன்றில் நேற்று புதன்கிழமை (15)  மீண்டும் ஆஜர்படுத்தப்பட்டனர். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி நளினி சுபாஸ்கரன், நிபந்தனை அடிப்படையில் 6 மீனவர்களை விடுதலை செய்து உத்தரவிட்டார்.

அதேவேளை, விசைப்படகை ஓட்டிய 2 மீனவர்களுக்கு 6 மாத கால சிறை தண்டனையும், 40 இலட்சம் ரூபாயை அபராதமாக தனித்தனியாக செலுத்தவும் நீதிபதி உத்தரவிட்டார். இதையடுத்து 2 பேரும் யாழ்ப்பாணம் சிறையில் மீண்டும் அடைக்கப்பட்டனர்.

https://www.virakesari.lk/article/203930

யாழ். வடமராட்சியில் இருவரிடம் தொலைபேசி ஊடாக பணம் கொள்ளை!

3 months 1 week ago

Published By: DIGITAL DESK 2  16 JAN, 2025 | 10:12 AM

image

யாழ்ப்பாணம் - வடமராட்சி கிழக்கு உடுத்துறையை சேர்ந்த பெண் ஒருவரிடம் கடந்த 07 ஆம் திகதி இரண்டு இலட்சம் ரூபா கொள்ளையிடப்பட்டுள்ளது.

0740313003 என்னும் இலக்கத்தில் இருந்து தொடர்பு கொண்டு தனியார் தொலைபேசி வலையமைப்பு நிறுவனத்தின் (Dialog) சீட்டிழுப்பு மூலம் பணப்பரிசு கிடைத்திருப்பதாக கூறி அவரின் வங்கி கணக்கு இலக்கம், தேசிய அடையாள அட்டை இலக்கம் மற்றும் வங்கி கணக்கில் உள்ள தொலைபேசி இலக்கம் என்பவற்றை பெற்று  கடவுச்சொற்களையும் அவரின் அறியாமையை பயன்படுத்தி பெற்று அதன் மூலம் இலங்கை வங்கி கணக்கின் Smart pay செயலியில் உள்நுழைந்து ரூபா 200 000/= பணத்தை கொள்ளையடித்துள்ளனர்.

இதே முறையில் 0774650187 என்னும் தொலைபேசி இலக்கம் மூலம் தொடர்பு கொண்டு குறித்த பிரதேசத்தின் வேம்படியை சேர்ந்த முதியவர் ஒருவரிடமும் செவ்வாய்க்கிழமை (14) 29 இலட்சத்து 22 ஆயிரம் ரூபா பணத்தை கொள்ளையடித்துள்ளனர்.

குறித்த திருட்டு சம்பவம் தொடர்பாக பாதிக்கப்பட்ட இருவரும் வங்கியில் முறையிட்ட போதும், மக்கள் வங்கியின் கணக்கு ஒன்றிற்கு பணம் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாகவும் குறித்த வங்கி கணக்கின் விபரம் தமது செயலியில் காட்டப்படவில்லை என்றும் கூறியுள்ளனர்.

குறித்த பெண் மருதங்கேணி பொலிஸ் நிலையத்திலும் முதியவர் காங்கேசன்துறை பொலிஸ் நிலையத்திலும் முறைப்பாடு பதிவு செய்துள்ளதாகவும் தெரிவித்தனர்.

https://www.virakesari.lk/article/203931

மன்னார் நீதிமன்றுக்கு அருகில் துப்பாக்கிச் சூடு; இருவர் பலி, இருவர் காயம்

3 months 1 week ago
16 JAN, 2025 | 10:34 AM
image

மன்னார் நீதவான் நீதிமன்றத்திற்கு அருகில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் இருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் இருவர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் இன்று வியாழக்கிழமை (16) காலை இடம்பெற்றுள்ளது.

மன்னார் நீதிவான் நீதிமன்றத்திற்கு அருகில் மோட்டார் சைக்கிளில் சென்ற இனந்தெரியாத இருவரால் இந்த துப்பாக்கிச் சூடு மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

வழக்கு விசாரணை ஒன்று தொடர்பில் நீதிமன்றத்திற்கு வருகை தந்திருந்தவர்களே துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகியுள்ளதாக  பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

இதனால் அப்பகுதியில் பெரும் பதற்ற நிலை ஏற்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

jk.jpg

trfg.jpg

gfh.jpg

7yui.jpg

https://www.virakesari.lk/article/203933

Checked
Fri, 04/25/2025 - 21:23
ஊர்ப் புதினம் Latest Topics
Subscribe to ஊர்ப்புதினம் feed
texte-feed
sqdgvsqfqsg vdgvdgvv qdsbrzbvzrbvzr